All Activity
- Past hour
-
ஆமென்! - மத்திய கிழக்கு போர்க் குறிப்பு
மருத்துவத்திற்குத் தேவையான கதிரியக்கப் பொருட்களைத் (radioisotopes) தயாரிக்க 60% செறிவாக்கிய யுரேனியம் தேவை என்று ஈரான் சொல்லியிருக்கிறதா? அல்லது தான் அப்படிப் பயன்படுத்துவதாக ஆதாரம் காட்டியிருக்கிறதா? இல்லை. ஏனெனில், NPT விதிகளுக்கேற்ப மருத்துவத் தேவைகளுக்குரிய யுரேனியம் செறிவாக்கல் 20% இற்கும் குறைவாகத் தான் இருக்க வேண்டும். உலகம் முழுவதும் NPT இல் கையெழுத்திட்ட நாடுகள் ~3% செறிவாக்கலைத் தான் இதற்கெனப் பயன்படுத்துகிறார்கள். இது நீங்கள் ஈரானுக்கு எடுத்துக் கொடுக்கும் ஒரு நொண்டிச் சாட்டு என நினைக்கிறேன்😂. ஆனால், விஞ்ஞான ரீதியான சாட்டு அல்ல. அணுசக்தி நீர் மூழ்கிக்குள் பொருத்தப் படும் அணுசக்திப் பிறப்பாக்கி சிறியது என்பதால், 60% செறிவாக்கிய யுரேனியம் தேவைப் படும். ஈரானிடம் எத்தனை அணுசக்தி நீர்மூழ்கிகள் அல்லது கப்பல்கள் இருக்கின்றன? ஒரு தடவை தேடிப் பார்த்து விட்டுச் சொல்லுங்கள்!
-
ஆமென்! - மத்திய கிழக்கு போர்க் குறிப்பு
மருத்துவ, அணுசக்தியில் இயங்கும் இயந்திரம் போன்ற பயன்பாட்டிற்கும் 60% செறிவாக்கல் உதவுகிறது.
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
யாரோ இருவரின் சண்டைக்குள் எங்களை இழுத்துவிடாமல் இருப்பது நல்லது!
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
எங்களில் ஒராள் இப்படி முன்னுக்கு வந்து விடக்கூடாதே!🤣
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இறுதிப்போட்டியில் நியுசிலாந்தினை ஒருவரும் தெரிவு செய்யாத நிலையில், இந்தியா தவிர வேறு அணியினை தெரிவு செய்தவர்களை நியுசிலாந்து வகுப்பிற்கு அனுப்பிவிடலாமே!, இந்தியா வென்றால் இந்தியாவினை தெரிவு செய்தவர்களுக்கு புள்ளி, இந்தியா தோற்றால் மற்ற அணியினை தெரிவு செய்தவர்களுக்கு புள்ளி🤣. இதனை அமுல்படுத்த வாக்கெடுப்பு நடாத்தலாம். எனது வாக்கு ஆம்!🤣 இந்தியா வெற்றி வாய்ப்பு 70% உள்ளதாக கூறுகிறார்கள்.
- Today
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
சர்வதேச கடல் சட்டங்கள், நாடுகள் இடையான அணுகுமுறை பற்றி அறியாமல் பலர் இந்தியாவை காட்டி கொடுத்துட்டான் பாவி ரேஞ்சில் எழுத, வீடியோ போட்ட படி உள்ளார்கள். ஆனால் IRIS Lavan என்ற இன்னொரு ஈரானிய கப்பல் இலங்கையில் 2ம் கப்பல் சரணடைந்தது போல் இந்தியாவிடம் சரண் அடைந்து கொச்சியில் நிற்கிறது.
- We Tamils stand with Jews.png
- Tamil Eelam stands with US and Israel.png
- Tamil Eelam (flag) supports Israel (flag) | flag of LTTE is different from the Tamil Eelam flag
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
அண்ணை வர வர நீங்களும் தமிழ் ஆய்வாளர்கள் போல் எழுத ஆரம்பித்து விட்டீர்கள். வாழ்த்துக்கள். இந்தியா போ என்று சொன்னதாய் எந்த தகவலும் இல்லை. விசாகபட்டினத்தில் இருந்து கொச்சிக்கு மாறும் போதே அடி விழுந்ததாக சிலர் சொல்கிறனர். இப்போ இரெண்டாம் கப்பல் இலங்கையிடம் சரண் அடைந்தது போல் இந்த கப்பலும் இந்தியாவிடம் சரண் அடைந்திருந்தால், இந்தியா சர்வதேச சட்டத்துக்கு அமைய கப்பலையும், மாலுமிகளையும் intern பண்ணி இருக்கும். போர்காலத்தில் நடுநிலை நாடுகள் கப்பல்கள் விடயத்தில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என சட்டம் நன்றாக விபரிக்கிறது. இந்தியாவுக்கும் எண்ணை கப்பல் போகலாம் என ஈரான் கூறியுள்ளதாம்.
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
🤣............... பிரளயக் கிருமி, விவிலியக் கிருமி போன்ற சொற்பதங்களை இனி வாழ்நாளில் மறக்க முடியாது............... கடஞ்சா சொந்தமாக எழுதுவது மட்டும் இல்லாமல், சொந்தமாக சொற்களையே உருவாக்குகின்றாரே, அதற்காகவாவது அவருடன் யாராவது இடையிடையேயாவது உரையாட வேண்டும் என்று நினைத்தேன்................. அதிபர் ட்ரம்பின் நடவடிக்கைகளுக்கு பா.ரவீந்திரனின் கட்டுரைகளின் தலைப்புகள் என்னவாக இருக்கும், கடஞ்சா என்ன கதைகள் சொல்வார் என்று ஒரு புதிய எதிர்பார்ப்பு இப்பொழுது என்னிடம் வந்திருக்கின்றது..................🤣............. இருவரின் எழுத்துநடைகளில் தான் வித்தியாசம், மற்றபடி பொருள் ஒன்றே தான்....................
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
ஒரு விசயம் தெரியாட்டில் சும்மா இருக்க வேணும் அண்ணை. இவை மூட நம்பிக்கை திருமணம் அல்ல. Customary marriage இவற்றுக்கு ரிஜிஸ்தர் மரேஜுக்கு உரிய அதே அந்தஸ்து உள்ளது. ஆதாரம் வேணும் எண்டால் சொல்லவும். தரலாம். சீமான் செய்த அநீதியை கண்டபின்னும் இதை ஏற்காமல் இருக்க முடியுமா? பெரியாரிஸ்டுக்கும் ஏத்திவிட அடுத்தவர் முனைந்திருப்பர் இல்லையா? இது நீதி விசாரணையில் விஜி அண்ணியிடம் கேட்டிருக்க வேண்டிய கேள்வி. அதே போல் ஏலவே நிச்சயமான பெண்ணுடன் ஏன் மாலை மாற்றி, கணவன்-மனைவி போல் வாழ்ந்தார் என உங்கள் அண்ணனிடம் கேட்டிருக்க வேண்டும். ஆனால் நீதி விசாரணையைதான் அண்ணன் அடித்து நூத்து விட்டாரே.
-
சிரிக்க மட்டும் வாங்க
- ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
உங்களுக்கு "சீரியசாக" பதில் எழுதிய ரசோவை எதனால் அடிக்கலாம் என்று யோசிக்கிறேன்😂! எல்லைக்குள் நின்று ஈரான் போராடக் காரணம், ஈரானிய ஆட்சியாளர்களின் காசுக்கும், மதவாத ஆதரவிற்கும் நன்றியாக வெளியே buffer ஆக நிற்கும் ஹிஸ்புல்லாக்களும் ஹூத்திகளும் இருப்பது தான்! இப்படி "70 கன்னியர்களுக்காக சாகத் துணிந்த" பயங்கரவாதிகளுக்கு ஈரான் ஆதரவு தராமல் இருந்திருந்தால், தற்போதைய நிலையில் ஈரானுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் மேற்கிலேயே நடந்திருக்கும். பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக நிகழ்ந்தது போல!- யாழ் இணயத்தின் லோகோ(LOGO) சின்னம்
அது ஏனைய வலைத்தளங்களுக்கு மட்டுமே... யாழ் ஒரு கருத்துக்களம் (forum) ... செய்தி வலைத்தளங்களிலிருந்து இது வேறுபட்டது. மேலும் இணையவன் கூறுவதும் சரியே- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
குர்துக்கள் படையெடுப்பை தொடங்கிவிட்டனர். முஸ்லீம் பயங்கரவாதம் தணிக்கப்படும்... 🥹 வாழ்த்துக்கள் .....- ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பை நிறுத்து! கொழும்பில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம்
- ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
இதில் எது இழிவு? அவர்கள் செய்வதை , அதன் யதார்த்தத்தை கருத்தில் எடுத்து. சொல்கிறேன். ( மேட்ற்கு, யுஸ், இஸ்ரேல் விவிலியாக் கிருமிகளின் நோக்கம் அந்த சமூகத்தைஅழித்து, கோறையாகி. நொண்டியாக்கி. உள்நாட்டு கலவரம், குழப்பம், யுதவிளிம்பில் வைத்து. வளங்களை சூறையாடி , தமது கட்டுபட்டில், சரணடையும் நிதி அமைப்பு, எந்த சொந்த பாதுகாப்பும் அற்ற அம்மணமாநிலையை உருவாக்கி, பொம்மை கோறை நிர்வாகத்தை கொண்டுவர்வதும் , இஸ்ரேல் எப்போதும் தக்க கூடிய நிலையிலும், இரான் ஒருபோதுமே திருப்பி அடிக்க முடியாத நிலையிலும் ,வைத்த காட்டுவது தாம் செய்தது மனிதகுல நன்மைக்கும், தாம் International do-gooders, உள்ளிருந்து அரிக்கும் கிருமிகள். ) இதை இப்போது வெளிப்படையாகவே அமெரிக்கா சொல்கிறது - death, destruction ... குர்திஸ் கிளர்ச்சி ... டிரம்ப் 'பொம்மையை நான் தான் தெரிய வேண்டும, நியமிக்க வேண்டும்' இரான் அதன் எல்லைகள் மட்டும் நின்று அதை பாதுக்காக்கிறது - கிருமி வேலை, நோக்கம் அல்ல.- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
1999´ல் சங்கீதா - விஜய் கல்யாணம் நடந்திச்சி. 2000 ஆண்டு அப்பிடி இந்த போட்டோ எனக்கு வெளிநாட்டில இருக்கிற நண்பர் மூலமா கிடச்சிது. ஶ்ரீலங்கால இருக்கும் போது இருந்து-நான் வெளிநாடு வந்தா பிறகும் இத எடுத்துட்டு தான் வந்தேன். இப்ப வரை என்கிட்ட தான் இருக்கு. இப்ப தான் இந்த internet la download எல்லாம் பண்ணலாம். அப்போ அப்பிடி இல்ல கமரால படம் படிச்சி film roll, negative எண்டு ஒரு process இருக்கு. எல்லாரும் news paper cutting தான் அப்போ வச்சிருந்தாங்கள் என்கிட்ட போட்டோவாவே இருந்திச்சி. Future la internet வரும் இதெல்லாம் ஈஸியா கிடைக்கும்னு எல்லாம் தெரியாது அதானால கவனமாக வச்சிருந்தன். கடைசியா என்னாச்சின்னு பாத்திங்கன்னா நீ போட்டோவ தானே வச்சிருக்க நான் திரிஷாவையே வச்சிருக்கன் எண்டு சொல்லிட்டு போயிட்டான். Jermain Jma- ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பை நிறுத்து! கொழும்பில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம்
ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பை நிறுத்து! கொழும்பில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் Published By: Vishnu 06 Mar, 2026 | 08:18 PM சர்வதேச ரீதியில் ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அழுத்தங்கள் மற்றும் போர் அச்சுறுத்தல்களைக் கண்டித்து, கொழும்பு தேவட்டகா பள்ளிவாசலுக்கு முன்பாக இன்று பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 'பாலஸ்தீனத்தின் நண்பர்கள்' (Friends of Free Palestine) அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், இலங்கைக்கான ஈரானிய தூதுவர் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பை நிறுத்து! கொழும்பில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம்- ஈரானிய கடற்படை பணியாளர்களை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்த இலங்கை கடற்படை
ஈரானிய கப்பலை நாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டீர்கள். டிரம்ப் கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினால் என்ன செய்வது? சீலரத்ன தேரர் கேள்வி. Ceylon Focus News- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
“கடைசி வீரர் உள்ளவரை போராடுவதை தவிர வேறு வழியில்லை” - ஈரான் வெளியுறவு துணை அமைச்சர் புதுடெல்லி: ஈரான் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாகி வருகிறது. எங்களிடம் இருக்கும் கடைசி குண்டு தீரும் வரை, கடைசி வீரர் உள்ள வரை எதிர்த்துப் போராடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்று இந்தியா வந்துள்ள ஈரான் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் சயீத் கத்தீப்சாதே தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிராக இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து வான் தாக்குதலை நடத்தி வரும் நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சயீத் கத்தீப்சாதே, “ஈரானும் இந்தியாவும் ஒரே நாகரிக வேர்களைக் கொண்டவை. நாம் இந்தோ-பாரசீக கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த கலாச்சார-நாகரிக பாரம்பரியத்துடன் இணங்கும் வகையில், ஈரான்-இந்தியா உறவுகளுக்கு நாங்கள் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறோம். தற்போது ஈரானின் முக்கிய முன்னுரிமை தாக்குதல் நடத்தும் எதிரிகளுக்கு எதிராக தீவிர எதிர்ப்பை வெளிப்படுத்துவது. அமெரிக்காவும் இஸ்ரேலும் எங்களை தாக்கி, ஆக்கிரமிப்பு நடத்தி வருகின்றன. அவர்கள் ஈரானுக்கு அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்த முயல்கின்றனர். நாம் இப்போது பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், எனது நாட்டின் குடிமக்கள் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் குண்டுகளை வீசி தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றன. ஈரான் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாகி வருகிறது. எங்களிடம் கடைசி குண்டு இருக்கும் வரைவும், கடைசி வீரர் இருக்கும் வரை எதிர்த்துப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. இது எங்களின் வீரம் மற்றும் தேசிய உணர்வுக்கான போராட்டமாகும். ஈரானுக்கு எதிராக நடக்கும் இந்த கொடூரங்களை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார். ஈரானில் தற்போது நடைபெற்று வரும் போர் குறித்து இந்திய தரப்புடன் பேசினீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த சயீத் கத்தீப்சாதே, “ஆம். இந்திய வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்துப் பேசினேன். மற்றவர்களுடனும் சிறிய உரையாடலை மேற்கொண்டேன். இந்த விவகாரத்தில் முக்கியமானது என்னவென்றால், அனைவரும் சர்வதேச சட்டத்தை மதிக்கும் அதே வேளையில், சர்வதேச சட்டத்தின் குறிப்பிட்ட அம்சங்களை மட்டும் தேர்வு செய்து பயன்படுத்துவது என்பது கூடாது. துரதிர்ஷ்டவசமாக, சர்வதேச சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகள் தாக்கப்பட்டுள்ளன. இந்த கொடூரங்களுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். அமெரிக்கர்கள் மற்றொரு நாட்டின் தலைவரை கொலை செய்துள்ளனர். இது ஒரு புதிய வழக்கமாக மாறினால், உலகில் எந்த நாடும் மற்ற நாடுகளுடன் இயல்பான தூதரக உறவுகளை பேண முடியாது.” என தெரிவித்தார். அமெரிக்க தாக்குதலில் ஈரான் போர் கப்பல் மூழ்கிய சம்பவம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த சயீத் கத்தீப்சாதே, “இது மிகவும் துயரமான, வருத்தமான சம்பவம். அந்த கப்பல் எங்கள் இந்திய நண்பர்களின் அழைப்பின் பேரில் ஒரு சர்வதேச பயிற்சியில் கலந்து கொள்ள வந்தது. அது ஒரு விழாக்கால நிகழ்வாக இருந்தது. கப்பலில் ஆயுதங்களும் இல்லை, சரக்குகளும் இல்லை. இந்த சம்பவம் மிகவும் வருத்தமானது. அந்த பயிற்சியில் கலந்து கொண்ட பல இளம் ஈரான் கடற்படையினர் உயிரிழந்தனர். இதை செய்தவர்களுக்கு நாங்கள் நிச்சயம் தண்டனை அளிப்போம்.” என கூறினார். மேலும் அவர், “எங்கள் நாடு தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. ஈரான் அச்சுறுத்தலாக இருந்தது என்ற முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் இது நடக்கிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக ஏன் தாக்குதலை தொடங்கினார்கள் என்பது ஒரு முக்கியமான கேள்வி. இந்த கேள்வியை அமெரிக்க நிர்வாகத்திடம் கேட்டால், அவர்கள் எந்த மக்களிடம் பேசுகிறார்கள் என்பதற்கேற்ப வேறு வேறு பதில்களை வழங்குவார்கள். இது அதிகார அரசியல். அதோடு, ‘அகண்ட இஸ்ரேல்’ என்ற மாயக் கற்பனை காரணமாகவே இது தொடங்கப்பட்டது. எங்களுக்கு இது எதிர்ப்புக்கான போராட்டமாகும். வரலாற்றுக்காகவும், இந்த பிராந்தியத்துக்காகவும், உலகுக்காகவும், சர்வதேச சட்டத்தின் கொள்கைகளுக்காகவும், நெறிமுறைகளுக்காகவும் நடக்கும் போராட்டம் இது. நாங்கள் தொடர்ந்து எதிர்த்துப் போராடுவோம். இது வரலாற்றில் பதிவாகும். கட்டுப்பாடற்ற, பொறுப்பற்ற செயல்கள் ஈரானுக்கு எதிராக நடைபெறுவதால் ஈரான் மக்கள் தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தாக்குதல் நிறுத்தப்படும் தருணத்தில் இந்தப் பிராந்தியத்தில் புதிய மாற்றம் உருவாகும் என்று நான் நம்புகிறேன். அமெரிக்கா ஈரான் என்ற நாட்டின் இருப்பை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளது. ‘அகண்ட இஸ்ரேலை உருவாக்குவோம்’ என்று இஸ்ரேலியர்கள் பல பத்தாண்டுகளாக வாக்குறுதியாக அளித்து வருகின்றனர். எனவே பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்காவின் இருப்பை முடிவுக்கு கொண்டுவருவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.” என தெரிவித்துள்ளார். “கடைசி வீரர் உள்ளவரை போராடுவதை தவிர வேறு வழியில்லை” - ஈரான் வெளியுறவு துணை அமைச்சர்- ஈரானிய கடற்படை பணியாளர்களை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்த இலங்கை கடற்படை
வல்லரசுகளின் போர் 'வெற்றி & தோல்வி' பற்றிய செய்திகள் வரலாற்றில் பதியப்படும் போது நான்கு பக்கமும் கடலாலும், கடனாலும் சூழப்பட்ட 'இலங்கை' என்ற ஒரு குட்டி தேசத்தின் மிகப்பெரிய இதயம் பற்றியும் எழுதப்படும். ❤️ முதலில் வந்த கப்பல்(தாக்கி அழிக்கப்பட்ட) பற்றி உளவுத் தகவல் கொடுத்ததில் இலங்கைக்குத் துளி கூட சம்பந்தம் இல்லை என்றால் "தோழரின்' ஆட்சியில் இலங்கை என்ற குட்டி நாடு இதயத்தில் ஈரத்துடன் நடந்து கொண்டது" என்று வரலாறு எழுதிச் செல்லும். Lingathasan Ramalingam Sornalingam- சட்டவிரோத மீன்பிடியை தடுக்க கடற்படையினர் நடவடிக்கை - 19 பேர் கைது
சட்டவிரோத மீன்பிடியை தடுக்க கடற்படையினர் நடவடிக்கை - 19 பேர் கைது 06 Mar, 2026 | 05:55 PM சட்டவிரோத மீன்பிடி செயற்பாடுகளை தடுப்பதற்காக உள்ளூர் கடல் பகுதிகளில் கடந்த பெப்ரவரி 16 முதல் 28 வரை கடற்படையினர் எடுத்த நடவடிக்கைகளில் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் உரிமம் இல்லாமல் சுழியோடி மற்றும் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள், 2 டிங்கிகள், 3 படகுகள் மற்றும் 7 பாரம்பரிய படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கிழக்கு மற்றும் வட மத்திய கடற்படை கட்டளைகளால் திருகோணமலை கதிரவேளி, கோட்பே, கோகிலாய், மூதூர், நோர்வே தீவு மற்றும் மன்னார் தால்பாடு மற்றும் இரணைதீவு ஆகியவற்றின் தெற்கு கடற்கரை மற்றும் கடல் பகுதிகளில் கடற்படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டபோதே குறித்த 19 பேரும் பிடிபட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேக நபர்கள் 19 பேரும், புல்முடை பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை, வாழைச்சேனை, கோட்பே, மூதூர், கிண்ணியா மற்றும் மன்னார் மீன்வள ஆய்வு அலுவலகங்கள் மற்றும் முலன்காவில் பொலிஸ் நிலையம் ஆகியவற்றிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. சட்டவிரோத மீன்பிடியை தடுக்க கடற்படையினர் நடவடிக்கை - 19 பேர் கைது- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கடைசிப் பட்டியலும் வந்திட்டுது. 14 பேர். அந்தப் பதின்னாலு பேர். ஆடுறா ராமா ஆடுடா!! - ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
Important Information
By using this site, you agree to our Terms of Use.