All Activity
- Today
-
வந்து கொண்டிருக்கும் செய்தி - ஈரான் அமெரிக்கா தற்காலிக போர் தவிர்ப்பிற்கு இணக்கம்
இதையும் தம்பருக்கு ஒருக்கா அனுப்பிவிடுங்கோ ...தம்பருக்கு தமிழில் விளங்கியாவது ரோசம் வருகுதா என்று பார்ப்பம் ...அடியானும் இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய பங்காளியாம்
-
திடீரென யாருக்கும் தெரியாமல் மறைந்து போய்விட வேண்டும் - ஜி உமாஜி
"திடீரென்று யாருக்கும் தெரியாமல் எந்த அடையாளமுமே இல்லாமல் மறைந்து போய்விட வேண்டும்" - நண்பன் ஒருவன் அவ்வப்போது சாதாரணமாகக் கூறும் வார்த்தைகள்! அவனையறிந்த, அவன்வாழ்வின் அத்தனையும் தெரிந்த என்னிடம் எந்த வார்த்தையும் இருப்பதில்லை! தனது அம்மா, அப்பா வெளியே சென்று திரும்பி வந்து கதவைத் திறக்கும்போது தூக்கில் தொங்கிய நிலையில் தன்னைக் காணவேண்டும் என உறுதியாக ஒருமுறை சொன்னான். அவனுக்கு அறிவுரை சொல்ல எல்லாம் எந்த அவசியமுமில்லை. சற்று நேரம் அமைதியாகச் சென்றது. "ஒரு பழிவாங்கல் அல்லது வாழ்நாள் அதிர்ச்சியைக் கொடுக்கவேண்டும் என நினைக்கிறாயா?" "இல்லை வாழ்நாள் துயரத்தை" என்றான். வாய்ப்பில்லை எனத் தோன்றியது. ஆனால் சொல்லவில்லை. பிறகு அவன் சொன்னான் "இல்லை. நான் அதை செய்ய மாட்டேன். எனக்காக அவர்கள் துயருறுவதை என் உடலைப் பார்த்து அழும் காட்சியைக் கற்பனை செய்தேன். அப்படி ஒரு துயரை அது என்னால் கொடுக்க முடியாது." "நல்லது. நானும் ஒரு காட்சியைக் கற்பனை செய்தேன். அது உன் முடிவை இன்னும் உறுதியாக்கும். அதைக் கற்பனை என்றுகூடச் சொல்ல முடியாது. அதுதான் உண்மை. எல்லா இடங்களிலும். எல்லாருக்குமே!" "என்ன அது?" "உன் உடல் அங்கே இல்லை. அடக்கமாகி விட்டிருக்கலாம். அது இங்கே முக்கியமில்லை. அழுது அழுது ஓய்ந்து களைத்துப் பின் தெளிந்து கண்களைத் துடைத்துக்கொண்டே உன் அம்மா பக்கத்திலிருந்த பெண்மணியிடம் மெதுவாகக் கேட்கிறார், "இண்டைக்கு ஆராம் சாப்பாடு?" சிரித்தோம். அவ்வளவுதான்! அப்படித்தான் நாங்கள் பேசிக்கொள்ளும் வழக்கம். பிறகு ஒருமுறை அவன் மிகத் தீவிரமான முடிவில் இருந்தபோது நான் தடுத்துவிட்டிருந்தேன். அவ்வப்போது சொல்வான், உன்னால்தான் நான் உயிருடன் இருக்கிறேன் என. நான் ஊரை விட்டு வந்த பின்பும் அவ்வப்போது பேசும்போதும் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருந்தான். பின்னொரு நாள் அவன் எந்த அறிவித்தலுமின்றிக் காணாமல் போய்விட்டான். எந்தத் தடயமுமின்றி மறைந்து விட்டான். வருடங்கள் கழித்து அவன் வீட்டுக்குச் சென்றிருந்தேன். மெலிதான கேற் திறக்கும் சத்தத்துக்கே வராந்தாவுக்கு வந்துவிட்டிருந்த அவன் அம்மா முகத்தில் ஆச்சரியம் மகிழ்ச்சிக்கு முதல் ஒரு சிறு ஏமாற்றம் தோன்றி மறைந்தது. வயதான இளைஞனாகவே பார்த்த அவன் அப்பா இயல்புக்குமீறி மிக அதிகமாகவே தளர்ந்து போயிருந்தார். எந்த உணர்ச்சிகளையும் காட்டாது மிக நிதானமாகப் பேசுவது மட்டும் மாறவில்லை. கண்கள் மட்டும் சிறு சலனத்துடன் அலைபாய்ந்து கொண்டிருந்ததுபோல் தோன்றியது. அப்படி அவரைப் பார்த்ததேயில்லை. வெளியில் கேட்கும் சிறு சத்தத்துக்கும் பார்வை சடுதியாக வெளிக்கதவு சென்று மீண்டது. அவர் அமைதியைக் குலைத்தது, அலைக்கழிக்கிறது எனத் தெரிந்தது. ஏதோ எதிர்பார்ப்பையும் உடனடி ஏமாற்றத்தையும் கொடுத்துக் கொண்டிருந்தது. விடைபெற்று வந்து அதீத கவனத்துடன் மிக மெதுவாக எந்தச் சிறு சத்தமும் எழுந்துவிடாதபடி கேற்றை மூடினேன். முன்பு அவனை நான் தடுத்திருக்க வேண்டாமெனத் தோன்றியது. https://www.facebook.com/share/p/1AwbB2b8CC/
-
வந்து கொண்டிருக்கும் செய்தி - ஈரான் அமெரிக்கா தற்காலிக போர் தவிர்ப்பிற்கு இணக்கம்
இங்கே… கோஷானின் சதி கோட்பாடான… தம்பர் ஒரு ரஸ்ய ஏஜெண்ட், அவர் அமெரிகாவின் ஒற்றை வல்லரசு நிலையை உடைக்க வென அம்ந்ரிக்காவுக்குள் ரஸ்யா அனுப்பிய Trojan horse … என்பதை பொருத்தி பாருங்கள்…. இதுதான் இந்த போர் ஆரம்பிக்க பட்டதன் உண்மையான காரணமாய் இருக்கலாம்.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால் வாரங்களும் மாதம் ஆகும் பாதை மாறி ஓடினால் -வாலி- 😂😂😂 பொதுவாக நல்ல விடயங்கள் அதிக நாள் ஆனாலும், சிறியது போலவும்… கடுப்பானவை சில நேரமே ஆனாலும் யுகம் போலவும் இருக்கும் என்பார்கள்😂😂😂
-
வந்து கொண்டிருக்கும் செய்தி - ஈரான் அமெரிக்கா தற்காலிக போர் தவிர்ப்பிற்கு இணக்கம்
இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் பல மர்மங்கள் இருக்கின்றன. ஏனென்றால், அமெரிக்க முன்னர் முன்வைத்த 15 அம்சக் கோரிக்கைகளை முற்றாக நிராகரித்த ஈரான் தன் பங்கிற்கு 10 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்திருந்தது. இவற்றுள் ஈரானில் இருக்கும் 416 கிலோகிராம் 60 வீதம் செறிவூட்டப்பட்ட யுரேணியத்தைப் பற்றி எதுவுமே சொல்லப்பட்டிருக்கவில்லை. அதேவேளை ஈரான் மீதான தாக்குதல் இனிமேல் இடம்பெறக்கூடாது, ஈரான் மீதான சர்வதேசத் தடைகள் முற்றாக விலக்கிக்கொள்ளப்பட வேண்டும், ஈரானின் ஆதரவு நாடுகளையோ அமைப்புக்களையோ தாக்கக் கூடாது, ஹோர்மூஸ் நீரிணை மீதான ஈரானின் செல்வாக்குத் தொடர்ந்தும் இருக்கும், ஒவ்வொரு கப்பலுக்கும் தலா இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களை அறவிடுவோம், அதனை இன்னொரு நாட்டுடன் பகிர்ந்துகொள்ள முடியும் மீதியை ஈரானின் மீள்கட்டுமாணத்திற்காகப் பயன்படுத்துவோம் என்றெல்லாம் ஈரான் கோரியிருந்தது. ஈரான் முன்வைத்த கோரிக்கைகளை பார்ப்பவர்களுக்கு அமெரிக்காவோ இஸ்ரேலோ நிச்சயமாக இதற்கு உடன்படப்போவதில்லை என்று தெரிந்திருக்கும். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக அமெரிக்கா இக்கோரிக்கைகளை "நல்ல யோசனைகள், இதனை அடிப்படையாக வைத்து, தொடர்ந்து பேசலாம்" என்று ஏற்றுக்கொண்டு இருவார யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது. ஆனால், இந்த யுத்தநிறுத்தம் தனக்குக் கிடைத்த மகத்தான வெற்றி என்றும், ஈரானின் பலம் சர்வதேசத்தில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்றும், தனது அணுவாயுதச் செறிவூட்டல் நடவடிக்கைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டிருக்கிறது என்றும், ஹோர்மூஸ் நீரிணை மீதான ஈரானின் ஆதிக்கத்தை அமெரிக்கா ஏற்றுக்கொண்டிருக்கிறது என்றும் ஈரான் கூறத் தொடங்கியிருக்கிறது. இது போதாதென்று இஸ்ரேல் மீதும் இன்னும் சில வளைகுடா நாடுகள் மீதும் ஏவுகணைத் தாக்குதல்கள் யுத்த நிறுத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்ட பின்னரும் நடந்திருக்கின்றன. ஈரானின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு யுத்த நிறுத்தத்திற்குச் செல்வதென்றால், இந்த யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கங்கள் எதுவுமே இதுவரை அடையப்படவில்லையே? அணுவாயுதக் களைவு, அடிப்படைவாத பயங்கரவாத அமைப்புக்களுக்கான உதவிகளை நிறுத்துதல் முதற்கொண்டு எதுவுமே நடைபெறவில்லையே? முன்னரே திறந்திருந்த ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டு மீளவும் திறக்கப்பட்டிருக்கிறது. என்னவோ செய்துவிட்டுப் போகட்டும். தம்பருக்கு மரை கழன்றுவிட்டது என்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவே எனக்குப் படுகிறது.
-
அமெரிக்காவும் ஈரானும் சமாதானத் திட்டத்தைப் பெற்றுள்ளன.
சமாதானத்தக்காக பாகிஸ்தான் மட்டுமல்ல எகிப்து துருக்கியும் சேரந்தே உழைத்ததாக சொல்கிறார்கள்.
-
ஈரானின் இராணுவத்தளபதி சுலைமானியின் உறவினர்கள் அமெரிக்காவில் கைது
நீங்கள் நான் சொன்ன கருத்தை விளங்கி கொள்ளவே இல்லை. மீண்டும் ஒரு தடவை சொல்கிறேன். கனடாவில் பல ஆயிரம் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப், நிக்காப் கூட அணிவது சர்வ சாதாரணம். கொமெய்னியினால் உருவாக்கப்பட்ட ஈரான் அரசு, ஈரானில் இதை கடுமையான சட்டம் மூலம் அமல் படுத்துகிறது. கமெய்னியின் பூட்டி ஈரானில் இருக்கும் போது இந்த சட்டப்படிதான் உடை உடுத்த வேண்டும். அதே உடையை அவர் கனடாவிலும் உடுத்தலாம். ஆனல் அவர் மேற்கத்திய பாணியில் உடை அணிகிறார். அவரின் தாயார் அதை போட்டோஷொப் பண்ணி பேஸ்புக்கில் போடுகிறார். இதைதான் நான் ஈரானிய அதிகாரவர்க்கத்தின் ஹிப்போகிரசி என்கிறேன். சகோதரி மாஷா அமினியை அடித்து கொண்டவ அதிகார வர்க்கம், அவர்களின் பூட்டிகளுக்கு மட்டும் ஆடை சுதந்திரத்தை வெளி நாட்டுக்கு அனுப்பி கொடுக்கிறது. இதுதான் என் கருத்து. இதில் நீங்கள் ஏன் diplomatic protocol, politically exposed person போன்றவற்றை இழுத்தீர்கள் என புரியவில்லை. இப்படி ஒரு diplomatic protocol இல்லை, இந்த பெண் ஒரு politically exposed person உம்மில்லை என்கிரேன் நான். ஆனால்… அப்படியே உங்கள் வாதப்படி பார்த்தாலும் இவை இரெண்டும் இருந்தால் - அது இந்த பெண் கனடாவில் இஸ்லாமிய உடை அணிவதைதான் உறுதி செய்யும். மாறாக அவர் மேற்கத்திய உடை அணிய வேண்டும் என வற்புறுத்தாது. புரிகிறதா?
-
ஈரானின் இராணுவத்தளபதி சுலைமானியின் உறவினர்கள் அமெரிக்காவில் கைது
இரட்டைக் கோபுர தாக்குதலின் போது விமானப் பறப்புகள் எல்லாமே தடைசெய்யப்பட்டிருந்த நேரத்தில் போஸ்டன் நகரில் இருந்த சவுதிகள் (பின்லாடனின் சகோதரங்களாக இருக்கலாம்) விசேட ஒழுங்கில் சவுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
-
ஈரானின் இராணுவத்தளபதி சுலைமானியின் உறவினர்கள் அமெரிக்காவில் கைது
அதிகாரத்துக்கு எவ்வளவு கிட்ட உள்ளவர் என்பதை உங்களால் சொல்ல முடியுமா? சாத்திய கூறுகள் அவர் உச்ச அதிகாரத்துக்கு மிக அண்மையில் இருப்பது, நேரடியாக இல்லாவிட்டாலும். வெளிநாடு செல்லும் வேறு இரானியர்களை, உடை விடயத்தில் இரான் சட்டத்தை இரான் அமுல் செய்கிறதா? அப்படி அமுல் செய்தாலும், குறிப்பிட்டவர் அதிகாரத்துக்கு கிட்ட இருப்பதால் ராஜதந்திர மரபுகளை ஆக குறைந்தது இரானின் பார்வையில் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது, அவர் செல்லும் நாடு அதை வழக்கொழிந்து போனதாக கருதினாலும். ஏனெனில், குறிப்பிட்டவர் அவ்வாறு இரான் சட்டப்படி உடை அணிவதே, மற்ற அரசின் மீது ஈரானின் கலாசார அதிகார பிரயோகமாக உருவகிக்கபடக் கூடிய இடம் இப்போதும் உள்ளதால்.
-
காலக்கெடு இன்றுடன் நிறைவு ; உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஒரே இரவில் ஈரானை அழித்துவிடுவேன் - ட்ரம்ப் மிரட்டல்
மேல உள்ள 8 கோரிக்களையும் மீண்டும் வாசியுங்கள், யார் தோற்றது என தெரியும், ஈரானின் அழுத்தில்தான் லெபனானும் சேர்த்துகொள்ளப்பட்டது, அப்ப யாருடை கை ஓங்கியுள்ளது😂 நாறிப்போன கிளியால் இனி ஒன்றும் செய்ய முடியாது, விரைவில் அடக்கமாவது செய்துவிடுங்கள்
-
காலக்கெடு இன்றுடன் நிறைவு ; உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஒரே இரவில் ஈரானை அழித்துவிடுவேன் - ட்ரம்ப் மிரட்டல்
முல்லாகள் மண்டியிட்டனர்... துஸ்ட சக்திகளை வென்றது இஸ்ரேல்... மீண்டும் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டது. 🤣🤣🤣திறக்க மாட்டம் கீட்டம் என்டானுகள் முல்லாகள்... இப்பிடி ஒரு மிரட்டலுக்கே அடி பணிஞ்சிட்டாங்கள் //U.S, Iran accept 2-week ceasefire plan as Tehran agrees to reopen Strait of Hormuz// https://www.cbc.ca/news/world/livestory/u-s-israel-iran-war-trump-deadline-9.7154523
-
வந்து கொண்டிருக்கும் செய்தி - ஈரான் அமெரிக்கா தற்காலிக போர் தவிர்ப்பிற்கு இணக்கம்
நல்லா வயித்தில குத்தி, கிணத்தில விழட்டும்😂. ஈராக்கில் உள்ள அமெரிக்க தளம், சவுதி எங்கும் தாக்கும் ஈரான்! இஸ்ரேல் திருப்பி தாக்குகிறதாம். விசர் தம்பருக்கு நல்லா தீத்தி போட்டாங்கள் போல கிடக்கு 😂
-
வந்து கொண்டிருக்கும் செய்தி - ஈரான் அமெரிக்கா தற்காலிக போர் தவிர்ப்பிற்கு இணக்கம்
இந்தியப் பொதுமக்கள் கொதிநிலையில் உள்ளார்கள். மத்தியஸ்தத்துக்கு வேறு நாடுகள் இல்லாமல் பாகிஸ்தானையா தேர்ந்தெடுத்தார்கள் என்று போட்டு வாங்குகிறார்கள். வெற்றிகரமாக ஒப்பந்தங்கள் ஏற்பட்டால் பாகிஸ்தான் புகழின் உச்சிக்கே போய்விடும்.
-
ஈரானின் இராணுவத்தளபதி சுலைமானியின் உறவினர்கள் அமெரிக்காவில் கைது
Politically exposed person என்பதால் மட்டும் ஒரு இஸ்லாமிய ஈரானிய பெண், மேற்கத்திய ஆடை அணிய வேண்டுமா? https://iran-times.com/khomeini-kin-needs-hejab-help/?amp=1 https://iranwire.com/en/blogs/61983/
-
ஈரானின் இராணுவத்தளபதி சுலைமானியின் உறவினர்கள் அமெரிக்காவில் கைது
politically exposed person என்பது என்ன என்று தெரியாத கதை. மண்ணுக்குள் தலையை புதைத்த உருட்டும் கொக்கின் முடிவு. தயார் தான் செய்தார் என்பதற்கு என்ன ஆதாரம். சும்மா கதைப்பது.
-
வந்து கொண்டிருக்கும் செய்தி - ஈரான் அமெரிக்கா தற்காலிக போர் தவிர்ப்பிற்கு இணக்கம்
கடைசிவரை இஸ்ரேலுக்கு எதுவும் சொல்லவில்லை. இறுதி தருணத்திலேயே சொல்லப்பட்டதாம். அமீரகத்தை நோக்கி வந்த மிசைல்களை அமீரகம் முறியடிக்க முயல்கிறதாம்.
-
ஈரானின் இராணுவத்தளபதி சுலைமானியின் உறவினர்கள் அமெரிக்காவில் கைது
இதில் சிந்திக்க ஏதும் இல்லை. கொமேனியின் பூட்டி, கனடாவில் தன் பட்டமேற்பில் இஸ்லாமிய உடை அணியவில்லை. அவரின் தாயார் அப்படி அணிந்தது போல் போட்டோ ஷொப் பண்ணினார். இது தரவு. இதை வைத்து - கொமேனியின் வெளிநாட்டில் இருக்கும் பூட்டிக்கு கட்டுப்பாடு இல்லை, ஆனால் ஈரானில் அது தவறாக விளங்கி கொள்ளப்படும் என்பதால் அதை மூடி மறைக்கும் இரெட்டை நிலையில் ஈரானிய அதிகாரவர்க்கம் உள்ளது என நான் சொன்னேன். நீங்கள் அது ஒரு diplomatic protocol என உருட்டினீர்கள். எப்போதோ செத்து போன, அதிகாரத்தில் இல்லாத கொமேனியின் பூட்டி, தனிப்பட்டு ஸ்ட்டுடன் விசாவில் கனடா வரும் போது, அப்படி எந்த பிரொடோகோலும் அவரை கட்டுப்படுத்தாது… இல்லை எனில் ஆதாரம் தாருங்கள் என்கிறேன். முடிந்தால் ஆதாரம் தாருஙகள்.
-
அமெரிக்காவும் ஈரானும் சமாதானத் திட்டத்தைப் பெற்றுள்ளன.
GCC (கல்ஃப் ஒத்துழைப்பு கவுன்சில்) நாடுகளின் தலைமைத்துவத்திலிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியாகவில்லை. அவர்கள் வெளியிட்ட சமீபத்திய கருத்துகள், நடந்த தாக்குதல்களை கண்டிக்கும் வகையிலேயே உள்ளன. ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட போர்நிறுத்த அறிவிப்பு, GCC நாடுகளின் சார்பாகவும் பேசுகிறேன் என்று கூறுகிறது. இந்த நீண்டகால பிரச்சினை தீர்வுக்கு நெருக்கமாக இருப்பது “ஒரு மரியாதை” என அவர் குறிப்பிட்டுள்ளார். GCC நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது: • போர்நிறுத்த செயல்முறையின் முழு கட்டத்திலும் அவர்கள் செயல்பாட்டில் பங்கேற்க வேண்டும் • பிராந்தியத்தில் நிலையான தீர்வு தூதரக வழியில் மட்டுமே கிடைக்க வேண்டும் டிரம்பின் அறிக்கையில், ஈரான் 15 நாட்கள் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது, மேலும் அந்த காலத்தில் ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக, உடனடியாக, பாதுகாப்பாக திறக்க சம்மதித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இது GCC நாடுகளுக்கு மிக முக்கியமான அம்சம். ஆனால், ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்ட அறிக்கை, ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு ஈரானிடமே இருக்கும் என்று வலியுறுத்துகிறது. இதுவே GCC மற்றும் ஈரான் இடையிலான முக்கியமான முரண்பாடாக மாறக்கூடும். GCC நாடுகள் தெளிவாக கூறியுள்ளன: • ஹோர்முஸ் நீரிணை அவர்கள் பொருளாதாரத்தின் உயிர்நாடி • அதன் நிலைமையில் எந்த மாற்றத்தையும் அவர்கள் ஏற்கமாட்டார்கள் As of now, we have not heard of an official statement yet from the leadership across the GCC countries. The latest statements we have are condemnations of the latest attacks. But US President Donald Trump’s ceasefire statement claims to speak on behalf of the Gulf countries as well, declaring that it is an honour to have this long-term problem closer to a resolution. So he is claiming to speak on behalf of the GCC countries, which has been pushing a lot for a diplomatic resolution to this process. The Gulf states have been consistent that they should be part of the whole process towards a ceasefire. Trump’s statement is saying that throughout the 15 days of the ceasefire that Iran has agreed to a complete, immediate and safe opening of the Strait of Hormuz – that is essential for the GCC countries. But the statement from Iran’s Supreme National Security Council is also insisting that Iran keeps control of over the Strait of Hormuz, so that perhaps is going to be one of the contentious points between the GCC and Iran. The GCC countries have been clear that the Strait of Hormuz is the lifeline of their economy, and that they will not accept any change in its status. Al JazeeraIran accepts ceasefire after Trump says it will pause bom...Pakistan's PM has asked Trump to extend the deadline for two weeks and for Iran to open the Strait of Hormuz.
-
காலக்கெடு இன்றுடன் நிறைவு ; உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஒரே இரவில் ஈரானை அழித்துவிடுவேன் - ட்ரம்ப் மிரட்டல்
பகுப்பாய்வாளர் கூறியதாவது: நாளின் தொடக்கத்தில், அதிபர் டிரம்ப் சமூக ஊடகத்தில் “இன்று இரவு முழு நாகரிகமும் அழியும்” என்ற அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டார். ஆனால் அதே நாளில் பின்னர், அவர் இரண்டு வார போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதாகவும், அந்த காலத்தில் அமெரிக்கா–ஈரான் இடையிலான மீதமுள்ள கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க முடியும் என்றும் அறிவித்தார். ஒரே நாளில் இவ்வளவு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. வெள்ளை மாளிகை அந்த மாலைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை நிறுத்திவிட்டதாக தெரிவித்துள்ளது; ஆனால் டிரம்ப் சமூக ஊடகத்தில் மேலும் பதிவுகள் வெளியிட வாய்ப்பு உள்ளது. இது மிக முக்கியமான முன்னேற்றம், ஏனெனில் இதே நேரத்தில், ஈரான் அமெரிக்காவின் பேச்சுவார்த்தை நிபந்தனைகளை ஏற்காவிட்டால், அதை அழித்துவிடுவேன் என்று டிரம்ப் முன்பு கூறியிருந்தார். ஆனால் தற்போது, டிரம்பின் சமூக ஊடகப் பதிவின் படி, அமெரிக்கா ஈரான் முன்வைத்த 10 அம்சத் திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளது; இந்தத் திட்டம் பாகிஸ்தான் நடுநிலைப் பேச்சுவார்த்தையின் மூலம் அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டது. இந்த 10 அம்சங்களும் தற்காலிக ceasefire அல்ல; ஈரான் தற்காலிக ஒப்பந்தத்தை விரும்பவில்லை. அது நீண்டகால, நிலையான அமைதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையை மட்டுமே ஏற்கும் நிலைப்பாட்டில் இருந்தது. Let’s start with President Trump’s first message – on social media – of the day in which he said the “whole civilisation will die tonight and never to be brought back again”. Now, we’ve got the president putting out on his social media that a two-week ceasefire has been agreed to. Not just a ceasefire but a period in which the remaining differences between the US and Iran can be ironed out, leading to a long-term and lasting resolution of the disputes between the two nations. This is a lot of movement in one particular day. The White House has formally declared a lid, which means there will be no more formal statements from the White House in the course of the evening. That does not obviate the possibility of more social media coming out from President Trump. But clearly this is a deeply significant outcome given the fact that this was the time at which President Trump had vowed to obliterate Iran if they did not agree to the US proposals for negotiation. What has in fact happened, from the president’s social media posting, is that the US has agreed to Iran’s 10-point proposal, which was communicated to the US by Pakistani mediators. These 10 points are very significant, carrying with them that this is not a temporary ceasefire. Iran would not agree to a temporary ceasefire but it wanted negotiations leading to a lasting, longstanding end to hostilities between the US and Iran. https://www.aljazeera.com/news/liveblog/2026/4/7/iran-war-live-trump-warns-of-devastating-attacks-as-deal-deadline-nears
-
ஈரானின் இராணுவத்தளபதி சுலைமானியின் உறவினர்கள் அமெரிக்காவில் கைது
எகதுக்கு சட்டத்தில் திண்டாடுவது - மதி, மனம் என்ன செய்ய விரும்பியது என்பதை தெளிவாக உணர. ஹாமெனியின் , மற்றும் உறவின் மனம், எண்ணத்தை சொல்லியத்துக்கே ஆதாரம் வேண்டும். தராவிட்டாலும் ஒன்றும் இல்லை. ஏனனில் வாய்க்கு வந்ததைத்தானே சொன்னது. ராஜதந்திர மரபு தேடி அறியலாம். மரறுவளமாக அவர் இல்ஸ்லாமிய உடை அணிந்தது இருந்தால் - ஷரியா அல்லது ஈரானின் இஸ்லாம் சட்டத்தை திணிப்பதாக பத்திரிகை, மற்றும் உங்களை போன்றோர் வாய் கூசாமல் வாய்ச்சவாடல் இருக்கும். இதுவே முதலில் கட்டயாமாக இருந்தது - அந்த (நிலபுலத்தில் உள்ள) அரசுக்கு கீழ் படிதல் என்பதை குறிக்க. வந்தவரின் (அரச அதிகாரத்தில் உள்ளவர்க்கு உறவு) கலாசார அதிகாரத்தை பிரோயோகிக்க முடியாது, திணிக்கவில்லை என்பதை குறிக்க (அனால் இப்போதும் அதிகார மட்டம் கூடினால் அது தேவை, ஆக குறைந்தது சர்ச்சைகளை தவிர்க்க) தொடக்கம் தரப்பட்டு உள்ளது. விருப்பம் இருந்தால் தேடி அறியவும். தீத்த நான் வரவில்லை. எதுவென்றாலும் கொக்கு மண்ணுக்குள் தலையை புதைத்த கதை அளந்து கொண்டு ... எதற்கும் முதல் சிந்திக்க தொடங்கவும்.
-
வந்து கொண்டிருக்கும் செய்தி - ஈரான் அமெரிக்கா தற்காலிக போர் தவிர்ப்பிற்கு இணக்கம்
ஓம்… போரிலும் இந்தியாவுக்கு மூக்குடைவு… இப்போ ராஜதன்ந்திர போரிலும். ஈரானை நெட்டி தள்ளியதில் சீனாவின் பெரும் பங்கு உள்ளதாம். சத்தமில்லாமல் கொரிய தீபகற்பத்திலும் ஒரு அமைதி நகர்வு. டெல் அவிவில் கொத்து குண்டுகள் வீழ்வதாக இஸ்ரேலிய கணக்குகள் கூறுகிறன.
-
வந்து கொண்டிருக்கும் செய்தி - ஈரான் அமெரிக்கா தற்காலிக போர் தவிர்ப்பிற்கு இணக்கம்
இதுவரை காலமும் இந்தியா வகித்து வந்த கொள்கை ரீதியான உலக அரசியல் முக்கியத்துவத்தினை பாகிஸ்தானின் புதிய முயற்சிகள் மூலம் ஒரு முக்கிய நிலையினை பாகிஸ்தான் எட்டியுள்ளது, இந்த போரிற்கு நிரந்தர தீர்வினை எட்ட பாகிஸ்தான் உதவுமானால் இதுவரை காலமும் இந்தியாவினால் கட்டமைக்கப்பட்ட பயங்கரவாத பிம்பத்தினை பாகிஸ்தான் உடைத்து விடும், இதுவரை காலமும் பாகிஸ்தானை உலக அரங்கில் இராஜீக ரீதியாக தனிமைப்படுத்தலில் வெற்றிகண்ட இந்தியாவிற்கு இந்த போர் நிரந்தரமாக தீர்க்கபடின் பெரும் பின்னடைவாக அமையலாம்.
-
வந்து கொண்டிருக்கும் செய்தி - ஈரான் அமெரிக்கா தற்காலிக போர் தவிர்ப்பிற்கு இணக்கம்
கவனிக்க வேண்டிய விடயம் 👆 ஈரானின் சார்பில் அதன் உயர் பாதுகாப்பு கவின்சில் சார்பில் அரக்ச்சி தான் அறிக்கை விட்டுள்ளார். சுப்ரீம் லீடர் மொஹிதபாவோ அல்லது 88 முல்லாக்களின் குழுவான வல்லுனர் குழுவோ அல்ல. ஈரானில் ஒரு உள்ளக அதிகாரமாற்றம் நிகழ்ந்திருக்க கூடுமோ?
-
அமெரிக்காவும் ஈரானும் சமாதானத் திட்டத்தைப் பெற்றுள்ளன.
ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்ட அறிக்கையின் படி, ஏப்ரல் 11 அன்று இஸ்லாமாபாதில் அமெரிக்காவுடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகள், ஈரான் முன்வைத்த 10 அம்சத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும். அந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: ஹோர்முஸ் நீரிணையில் கட்டுப்படுத்தப்பட்ட கடத்தல் அனுமதி — இது ஈரான் ஆயுதப்படைகளுடன் ஒருங்கிணைந்து நடைபெறும்; இதன் மூலம் ஈரானுக்கு தனித்துவமான பொருளாதார மற்றும் புவியியல்-அரசியல் நிலை கிடைக்கும். “எதிர்ப்பு அச்சு” எனக் கருதப்படும் அனைத்து குழுக்களுக்கும் எதிரான போரை முடிவுக்கு கொண்டுவருதல். அமெரிக்க போர்படை பிராந்தியத்தில் உள்ள அனைத்து தளங்களிலிருந்தும் முழுமையாக வெளியேறுதல். ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கடத்தல் நடைமுறையை உருவாக்குதல், அதில் ஈரானின் ஆதிக்கம் ஒப்பந்தத்தின் படி உறுதி செய்யப்படும். ஈரானுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு முழுமையான இழப்பீடு வழங்குதல். அனைத்து முதன்மை மற்றும் இரண்டாம் நிலை தடைகள், மேலும் IAEA ஆளுநர்கள் குழு மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை நீக்குதல். வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் அனைத்து சொத்துகளையும் மற்றும் நிதிகளையும் விடுவித்தல். இந்த அனைத்து அம்சங்களையும் கட்டாயமாக அமல்படுத்தும் வகையில் ஒரு பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றுதல். What’s in Iran’s 10-point plan? As we’ve been reporting, the Iranian National Security Council says talks with US will begin in Islamabad on April 11, based on a 10-point plan it has formulated. According to that statement, the plan includes: “controlled passage through the Strait of Hormuz in coordination with the Iranian armed forces, which would grant Iran a unique economic and geopolitical position,” “the necessity of ending the war against all elements of the axis of resistance,” “the withdrawal of US combat forces from all bases and deployment points in the region,” “the establishment of a safe transit protocol in the Strait of Hormuz in a way that guarantees Iran’s dominance according to the agreed protocol,” “full payment of Iran’s damages according to estimates,” “the lifting of all primary and secondary sanctions and resolutions of the Board of Governors and the Security Council,” “the release of all Iranian assets and properties frozen abroad,” “and finally the ratification of all these matters in a binding Security Council resolution.” Al JazeeraIran accepts ceasefire after Trump says it will pause bom...Pakistan's PM has asked Trump to extend the deadline for two weeks and for Iran to open the Strait of Hormuz.
-
அமெரிக்காவும் ஈரானும் சமாதானத் திட்டத்தைப் பெற்றுள்ளன.
பாகிஸ்தான் அதிபரின் முயற்சிக்கு நன்றியும் வாழ்த்துக்களும். இதுவரைகாலமும் இந்திய பத்திரிகைகளின் தாக்கத்தினால் பாகிஸ்தானை ஒரு பயங்கரவாத நாடாக கருதியிருந்தேன், யாராலும் முடியாத ஒரு விடயத்தினை பாகிஸ்தான் செய்துள்ளது, அடுத்த வாரத்தில் நடைபெறவுள்ள நிலையான அமைதி பேச்சுவார்த்தை வெற்றியீட்ட வாழ்த்துக்கள். இஸ்ரேல் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள புதிய பலச்சமனிலையினை ஒரு போதும் அங்கீகரிக்காது, இனி ஒரு பனிபோர் பிராந்தியமாக மத்திய கிழக்கு மாற சாத்தியம் உள்ளது.