All Activity
- Past hour
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு - மூன்றில் திமுக சின்னத்தில் போட்டி! சென்னை: எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ல் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கியது திமுக. திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவை சேர்ந்த டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கவனித்து வந்தனர். தற்போது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை சுமுகமாக முடித்து வருகிறது திமுக. அந்த வகையில் மதிமுகவுக்கு எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் இன்று (மார்ச் 11) தொகுதி உடன்பாடு குறித்து கலந்து பேசினர். அதில் எதிர்வரும் தேர்தலில் மதிமுக 4 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதாக முடிவானது. இதில் மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்படும் தனி சின்னத்திலும் அக்கட்சி வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28, முஸ்லீம் லீக், மமக-க்கு தலா 2 இடங்கள் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு - மூன்றில் திமுக சின்னத்தில் போட்டி!
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
ஆம் , இது உண்மைதான். இரண்டாம் உலகப் போரிற்குப் பின்னரான காலத்தில் பல காலணித்துவ நாடுகள் விடுதலை பெற, அதுவரை ஆட்சிசெய்தவர்கள் வெளியேறிவிட்டார்கள். ஆகவே இச்செயற்பாடுகள் தற்போது நடைமுறையில் இல்லை. ஆனால் ஈரான் போன்ற இஸ்லாமிய மத அடிப்படைவாத நாடுகளில் மதத்தை அடிப்படையாக வைத்து மக்களை அடக்கியாளும் நடைமுறை இன்னமும் நடந்தே வருகிறது.
-
அமெரிக்கா சாதிக்கிறதா, சறுக்குகிறதா? - ஈரான் போர் நிலவரப் பார்வை
அமெரிக்கா சாதிக்கிறதா, சறுக்குகிறதா? - ஈரான் போர் நிலவரப் பார்வை இராக் போர் சென்ற திசையும், ‘மறக்காத’ பாடமும்! பாரதி ஆனந்த் Updated on: 11 Mar 2026, 8:48 pm 4 min read “பலவான்கள் தாங்கள் நினைப்பதை செய்கிறார்கள்; அதனால் நேரும் விளைவுகளை நலிந்தோர் கடமைப்பட்டதுபோல் அனுபவிக்கின்றனர்!” - இந்த மேற்கோளை சுட்டிக் காட்டி தற்போதைய ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலை விளக்க முற்படுகிறார், மத்திய கிழக்கு அரசியல் மற்றும் சர்வதேச பாதுகாப்பு நிபுணரான ஃபரா என்.ஜான். அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் இவர் மூத்த விரிவுரையாளராக இருக்கிறார். அவரது பார்வையிலிருந்து... “பலவான்கள் தாங்கள் நினைப்பதை செய்கிறார்கள்; அதனால் நேரும் விளைவுகளை நலிந்தோர் அனுபவிக்கின்றனர்.” - இதுதான் போரின் சாராம்சம். வரலாற்றில் அன்றும் இன்றும் போர்கள் நடக்கும்போது பலமான ராஜ்ஜியங்கள் / அரசாங்கங்கள் எதிரியை தோற்கடிக்க இயலாமல் இருந்ததில்லை. ஆனால் அழிவும், அரசு நிர்வாகமும் வெவ்வேறாக இருக்கின்றன. அதைக் குழுப்பிக் கொண்டுதான் பெரும் சாம்ராஜ்ஜியங்கள் சோர்ந்து போகின்றன. அமெரிக்க ராணுவத்தால் ஈரான் அரசை அப்புறப்படுத்த முடியும். ஆனால், அதனால் உருவாக்கப்படும் அதிகார வெற்றிடத்தை எது நிரப்பும், எப்போது நிரப்பப்படும் என்பதே கேள்வி. 2003-ல் இராக்கில் அமெரிக்க ராணுவம் தான் நினைத்ததை எல்லாம் செய்தது. சதாம் ஹுசைன் கைது செய்யப்பட்டு, வழக்கு நடத்தப்பட்டு தூக்கிலடப்பட்டார். அங்கிருந்த ஆட்சி தூக்கியெறியப்பட்டது. எல்லாமே வெறும் 21 நாட்களில் முடிந்தது. ஆனால், இராக் - அமெரிக்கா போர் முடிந்த 20 ஆண்டுகளுக்குப் பின்னர் இராக்கில் இன்றும் சர்வாதிகார அரசுதான் இருக்கிறது. அந்த அரசு இப்போது ஈரானுடன் தொடர்பில் இருப்பதாகவே உள்ளது. ஈரானிய ஆதரவு ஆயுதக் குழுக்கள், இராக் மண்ணில் வெளிப்படையாகவே இயங்குகின்றன. சதாம் ஹுசைன் புதிய இராக்கை தன் இஷ்டத்துக்கு உருவாக்க, கிட்டத்தட்ட 2 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள், 4,400+ அமெரிக்க ராணுவ வீரர்களை அமெரிக்கா இழந்தது. ஆனால், இராக் இன்றும் ஈரானின் கட்டுப்பாட்டு வளையத்துக்குள்தான் இருக்கிறது” என்று ‘தி கான்வர்சேஷன்’ தளத்தில் கருத்துப் பகிர்ந்திருக்கிறார் ஃபரா. இந்தப் பின்னணியில் ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல் எதை நோக்கிச் செல்லக்கூடும், சம்பந்தப்பட்ட நாடுகளில் இருந்து வரும் குரல் என்னவாக இருக்கிறது, சர்வதேச நிபுணர்களின் பார்வை என்ன, உலக நாடுகளின் நிலைப்பாடு என்ன? - இந்தக் கேள்விகளுக்கான விரைவுப் பார்வை இது. மத்திய கிழக்கு பதற்றம் தொடங்கி இன்று (மார்ச் 11) பன்னிரெண்டாவது நாள். இந்த 12 நாட்களிலேயே அமெரிக்க பங்குச் சந்தைகள் வரலாறு காணாத சரிவு, ஐரோப்பியா முதல் ஆசிய நாடுகள் வரை எரிபொருள் தட்டுப்பாடு என்று அதிர்வலைகள் கடுமையாக எதிரொலிக்கின்றன. இந்தச் சூழலில் ஈரான் ராணுவத்தின் மூத்த கமாண்டர்களுள் ஒருவர் அண்மையில் அரசு தொலைக்காட்சியில் ஒரு பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், “அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து வெறும் 48 மணி நேரத்தில் ஈரானை நொறுக்கிவிடலாம் என ஒரு குறுகிய காலப் போரை நடத்தும் திட்டத்தோடு இறங்கினர். இன்று ட்ரம்ப்பும், நெதன்யாகுவும் திணறிப் போயுள்ளனர். அவர்கள் திட்டமிட்ட குறுகிய போர் இப்போது நீண்ட கால போராக மாறியுள்ளது. இதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஈரான் போரை இனியும் சமாளிக்க அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் ஆயுதங்கள், வீரர்கள், இதைத் தாக்குப் பிடிக்கக் கூடிய முன் கணிப்புகளைக் கொண்ட போர் உத்தி திட்டங்கள் வேண்டும். ஆனால், அவை அவர்களிடம் இல்லை. உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் தங்கள் போர்க் கப்பல்களை இங்கு கொண்டு வந்தாக வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர். ட்ரம்ப் வசமாக மாட்டிக் கொண்டுள்ளார். அவரது படை வீரர்கள் சோர்வடைந்துள்ளனர். ஏற்கெனவே வெனிசுலா மிஷனில் ஈடுபட்டிருந்தவர்கள், ‘2 நாட்கள் தானே சொன்னீர்கள், விடுப்பில் அனுப்புங்கள்’ என்று நிர்பந்திக்கின்றனர். இதற்கிடையில், இப்போதே சர்வதேச பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பு நீள்வதற்கு மற்ற உலக நாடுகள் அனுமதிக்காது. அதுவே போருக்காக அலையும் ட்ரம்ப்புக்கு முட்டுக்கட்டையாக உருவாகும். கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்று 80 டாலரை தொடும் என்று நினைத்தனர். ஆனால் அது 160 டாலர் வரை செல்லக்கூடும். இனியும் ட்ரம்ப்பால் அவரது போர் வெறியை நீட்டிக்க முடியாது” என்று கூறியுள்ளார் ஈரான் ராணுவ மூத்த கமாண்டர். அவருடைய இந்தக் கருத்துகள், ஈரானிடம் அமெரிக்கா, இஸ்ரேல் வீழ்ந்துவிட்டது என்பதுபோல இருக்கிறது அல்லவா? ஏற்கெனவே, இன்னும் 6 மாதங்கள் வரை இந்தப் போரை நீட்டிக்க தங்களிடம் பலம் இருப்பதாக ஈரான் கூறியிருந்ததும் இங்கே நினைவுகூரத்தக்கது. ஆனால், ஈரானில் கடுமையான தாக்குதலை மேற்கொண்டு, அந்நாட்டை ஸ்தம்பிக்கச் செய்துள்ளதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் தெரிவித்து வருகின்றன. “ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் விநியோகத்தை தடுக்கும் பணியில் ஈடுபட்டால், ஈரான் மீது இன்னும் கடுமையாக தாக்குதல் நடத்தப்படும்” என்று ட்ரம்ப் எச்சரித்தது போலவே ஈரானின் எண்ணெய்க் கிணறுகள் மீது இஸ்ரேல் விமானப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் அவை பற்றி எரிகின்றன. இதன் காரணமாக தெஹ்ரானிலும், தெஹ்ரானைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வானில் கருமேகங்கள் சூழ்ந்துள்ளன. ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது குண்டுகள் வீச்சு இது ஒருபுறம் இருக்க, இந்தப் போரை முன்னெடுத்ததால் உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புக்கு டேமேஜ் கன்ட்ரோல் நடவடிக்கைகளையும் ட்ரம்ப் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளார். ரஷ்ய எண்ணெய்யை வாங்கிக் கொள்ள இந்தியாவுக்கு தற்காலிக அனுமதி உள்ளிட்ட பல்வேறு கரிசனங்களை இதில் சேர்த்துக் கொள்ளலாம். இதற்கிடையில், ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு ரஷ்யாவும், வட கொரியாவும் வாழ்த்து தெரிவித்துள்ளது. போரில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது ஆகியனவையும் போரின் போக்கில் கவனிக்கத்தக்கது. ஈரானுடன் எப்போதுமே நட்பில் இருந்துவரும் சீனாவும், வெளிப்படையாக சொல்லிக் கொள்ளாமல் களத்தில் பல உதவிகளை செய்து கொடுத்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்தச் சிக்கல்களுக்கு இடையே அமெரிக்கா, இஸ்ரேலுடன் நல்லுறவில் இருக்கும் இந்தியா தங்களுக்காக மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்று ஈரான் விரும்புவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், ஈரான் போரின் பக்கவாட்டு சேதாரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் வளைகுடா ஒதுழைப்பு நாடுகளோ புதின் உதவியை நாடுவதாகவும் தகவல்கள் வருகின்றன. ட்ரம்ப்பும், நெதன்யாகுவும் ஆரம்பித்த இந்தப் போர் இப்போது உலகமும் முழுவதையும் இழுத்துவிடும் சூழலுக்கு வந்து நிற்கிறது. காசா போர், லெபனான், ஏமன் மீதான தாக்குதல் என அடுத்தடுத்து போரில் சிக்கியுள்ள இஸ்ரேல், இப்போது ஈரான் ஏவுகணைகளை சமாளிப்பதிலும், ஈரானை தாக்குவதிலும் மொத்த நேரத்தையும், உழைப்பையும், வளத்தையும் செலுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், “ஈரானிய மக்கள் அடக்குமுறை ஆட்சியில் இருந்து விடுபடுவதற்கு உதவுவதே இஸ்ரேலின் நோக்கம். இறுதியில் இது அவர்களிடமே இருக்கிறது. இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம் நாம் அவர்களின் சக்தியை பலவீனப்படுத்தி வருகிறோம் என்பதில் சந்தேகமில்லை” என்று நெதன்யாகு கூறியிருக்கிறார். இந்தப் பேச்சில் ஒருவித அயர்ச்சி தெரிவதாக சர்வதேச நிபுணர்கள் கணிக்கின்றனர். எங்கே சறுக்கியது அமெரிக்கா? ஈரான் உச்ச தலைவரை கொன்றுவிட்டால், அங்கே இன்னொரு புதிய விஷயத்துக்கான இடம் உருவாகும் என்று அமெரிக்கா தவறாக கணித்துவிட்டது என்று கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள். அமெரிக்காவின் அந்தக் கணிப்பு தவறானது. இருக்கும் தலைமையை வீழ்த்தினால் அமெரிக்க விரும்பிய மாற்று களம் உருவாவதைவிட, ஈரானில் ஏற்கெனவே எந்தக் குழு / அமைப்பு / கட்சி வலுவாக இருக்கிறதோ, எதனிடம் ஆயுதக் குவியல் உள்ளதோ அதுவே அதிகாரத்துக்கு வரும். அப்படியாக இராக்கில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஈரான் நிரப்பிக் கொண்டது. இப்போது ஈரானில் ஏற்பட்டுள்ளதை யார் நிரப்புவார்கள் என்பதே கேள்வி. இப்போதைக்கு அங்கு, பலம் பொருந்திய இஸ்லாமிய புரட்சிகர படைகள் அமைப்பு ரீதியாக வலுவாக, ஆயுத பலம் கொண்டதாக இருப்பதோடு, ஈரான் பொருளாதாஅரத்தின் 30 முதல் 40 சதவீதத்தின் மீது தனது அதிகாரித்தையும் கொண்டுள்ளது. அதனால்தான் புதிய உச்ச தலைவர் நியமனமும் சாத்தியமானது. ஒருவேளை உச்ச தலைவரே அப்புறப்படுத்தப்பட்டாலும் ஐஆர்ஜிசி அதிகாரத்தில் இருக்கும். இப்போது உச்ச தலைவராகியுள்ள மோஜ்தபா காமேனியும் இந்தப் படையுடன் நெருங்கிய நட்புறவு கொண்டவரே. எனவே, அயதுல்லா காமேனி உருவாக்கிய இந்தப் படையின் பேராதரவோடு மோஜ்தபா பதவிக்கு வந்துள்ளார். இன்றைய சூழலில் ஈரானில் ஏதும் ஆட்சி மாற்றம் நடக்கவில்லை. ஒருவகையில் மணி மகுடம் தலைமாறியுள்ளது. பதில் கிடைக்குமா? இராக் போரின்போது அங்கு ஆட்சியில் இருந்த பாத் கட்சியின் அரசை கலைப்பதாகவும், இராக் ராணுவத்தை கலைப்பதாகவும் அமெரிக்கா அறிவித்தது. ஆனால் ராணுவத்தில் இருந்த 4 லட்சம் வீரர்கள் ஆயுதங்களோடு சென்றது மட்டுமே மிச்சம். அதற்கு அமெரிக்கா கொடுத்த விலை அதிகம். டொனால்டு ட்ரம்ப் இப்போது ஈரானில் அணு ஆயுதங்களை அழிப்பதுதான் அமெரிக்காவின் நோக்கம் என்றால் 2025 செப்டம்பரில் நடந்த தாக்குதலுக்குப் பின்னர் இன்னமும் ஈரானில் குவியல் குவியாக ஆயுதங்கள் எங்கிருந்து வருகின்றன? அமெரிக்காவுக்கு இது நடக்க வேண்டும், அது மாற வேண்டும் என்ற விருப்பம்தான் இருக்கிறதே தவிர, திட்டம் என்று எதுவும் இல்லை. ஒருவேளை பிராந்திய அமைதிக்காக ஈரான் மீது தாக்குதல் என்று அமெரிக்கா சப்பைக் கட்டு கட்டினால், ஒவ்வொரு முறையும் இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படும் போதும், அது பரவலான பிராந்திய பாதிப்பை ஏற்படுத்துவது ஏன்? அழிவைத் தாண்டி வேறேதும் திட்டமில்லாத அமெரிக்கா இவற்றுக்கு எல்லாம் பதில் சொல்லுமா? அமெரிக்கா சாதிக்கிறதா, சறுக்குகிறதா? - ஈரான் போர் நிலவரப் பார்வை
-
ஏராளன் started following அமெரிக்கா சாதிக்கிறதா, சறுக்குகிறதா? - ஈரான் போர் நிலவரப் பார்வை
-
யாழில் நயினாதீவு பகுதியில் ஐயர்களுக்கிடையில் நடந்த சண்டை ஒரு ஐயர் வாள் வெட்டில் பலி..!
பாருங்கவன் இந்த வாள்வெட்டுக் கலாசாரம் அய்யர்மாரையும் ஸ்பொயில் பண்ணியிருக்கு!
-
இராக், லிபியா, ஆப்கன் உள்பட அமெரிக்க ராணுவம் தலையிட்ட 5 நாடுகளில் என்ன நடந்தது?
தமிழினத்தின் பாரம்பரிய பண்பாடுகளில் ஒன்று, ஒருவர் இறந்துவிட்டால் பறை அடிப்போரை அழைத்து பறை அடித்து ஊரவர்களுக்கு அறிவிப்பார்கள். அந்தத் தமிழர்களின் பண்பாட்டை இன்று அமெரிக்க மக்களும் பின்பற்ற விரும்பி தங்கள் இறப்பை உலகத்துக்கு அறிவிக்கப் “பறையை” முன்னதாகவே அழைத்து வந்துவிட்டார்கள் போன்று தோன்றுகிறது.😳
-
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
“காங்கிரஸுக்கு திமுக அடிமை...” - திருச்சியில் மோடி மேடையில் பழனிசாமி பேச்சு திருச்சி: “ஆட்சியில் பங்கு, கூடுதல் இடம் ஆகியவற்றைக் கேட்டு தினம்தோறும் அறிக்கை வெளியிட்டு, பல்வேறு விமர்சனங்களை செய்து வந்த காங்கிரஸ் கட்சியிடம், கெஞ்சி, அதற்கு அடிமையாகி, அதனுடன் கூட்டணி வைத்திருக்கிறது திமுக” என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் திருச்சி பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘‘இதே திருச்சியில் இரண்டு நாட்களுக்கு முன்பு திமுகவின் மாநில மாநாடு நடைபெற்றது. அதில் இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின், நமது தேசிய ஜனநாயகக் கூட்டணியை விமர்சனம் செய்தார். அதிமுக, தேசிய ஜனநாயகக் கூட்டணியோடு இணைந்து தமிழகத்தில் அற்புதமான கூட்டணியை அமைத்திருக்கிறது. இது வலிமையான கூட்டணி, வெற்றிக் கூட்டணி. பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையில், பல்வேறு வார்த்தைப் போர்களுக்கு இடையில்தான் திமுக - காங்கிரஸ் கூட்டணி இப்போது அமைந்திருக்கிறது. கிட்டத்தட்ட 20 நாட்கள் திமுக, காங்கிரஸ் இடையே வார்த்தைப் போர் நடந்தது. ஆட்சியில் பங்கு, கூடுதல் இடம் கேட்டு காங்கிரஸ் தினம்தோறும் அறிக்கை வெளியிட்டு, பல்வேறு விமர்சனங்களை செய்து வந்தது. அத்தனையும் தாண்டி கெஞ்சி காங்கிரஸுக்கு அடிமையாகி அக்கட்சியோடு கூட்டணி வைத்திருக்கிறது திமுக. ஆனால், அதிமுக - தேசிய ஜனநாயகக் கூட்டணி ஓர் அற்புதமான கூட்டணி. பரஸ்பர உணர்வோடு நாங்கள் இணைந்திருக்கிறோம். வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் கூட்டணியின் தலைவர்களும் நிர்வாகிகளும் தொண்டர்களும் எறும்பைப் போல, தேனிக்களைப் போல சுறுசுறுப்பாக செயல்பட்டு மீண்டும் தமிழகத்தில் ஓர் அற்புதமான ஆட்சியை அமைப்போம். மு.க.ஸ்டாலின் இனி எத்தனை இடங்களில் கூட்டம் போட்டாலும் நாட்டு மக்கள் அவரை நம்பப் போவதில்லை. கடந்த 2021-ல் 525 அறிவிப்புகளை வெளியிட்டது திமுக. இதில் 4-ல் ஒரு பங்கு அறிவிப்புகள் கூட இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அத்தனையும் பொய். கவர்ச்சிகரமாகப் பேசி, கவர்ச்சிகரமாக அறிக்கைவிட்டு ஆனால், சொன்ன அறிவிப்புகளை இதுவரை நடைமுறைப்படுத்தாத அரசாங்கம்தான் திமுக அரசாங்கம், திமுக கட்சி. மக்கள் உங்களை அடையாளம் கண்டுகொண்டுவிட்டார்கள். தேர்தல் வந்தால் திமுகவிடம் இருந்து அறிக்கைகள் வரும். தேர்தல் முடிந்தால் அதோடு விட்டுவிடுவார்கள். அதுதான் திமுகவின் கொள்கை. ஆனால், எம்ஜிஆர் காலத்திலும், ஜெயலலிதா காலத்திலும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய கட்சி அதிமுக, நிறைவேற்றிய கூட்டணி எங்கள் கூட்டணி. ஏமாற்றி ஆட்சிக்கு வந்து மக்களை வாட்டி வதைக்கிற அரசாக திமுக அரசு உள்ளது. தமிழ்நாட்டுக்கும் என்டிஏவுக்கும்தான் போட்டி என ஸ்டாலின் கூறி வருகிறார். பாவம், அவருக்கு மறதி. நடக்கப் போவது தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல். தமிழ்நாட்டில் யார் ஆட்சிக்கு வர வேண்டும், யார் வரக் கூடாது என்று மக்கள் முடிவு செய்யக் கூடிய தேர்தல் இந்த தேர்தல். மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். அதனால்தான், எங்களைப் பற்றி உங்களால் விமர்சனம் செய்ய முடியவில்லை. 2011 முதல் 2021 வரை 10 ஆண்டு காலம் அதிமுக அற்புதமான ஆட்சியைக் கொடுத்தது. அது பொற்கால ஆட்சி என்று மக்கள் பாராட்டினார்கள். விவசாயிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பினருக்குமான அரசாக அதிமுக அரசு திகழ்ந்தது. தங்கள் கூட்டணியில் உள்ள அனைவருக்கும் ஒரே கொள்கை என்று ஸ்டாலின் அடிக்கடி பேசுகிறார். திமுக கொள்கையும் காங்கிரஸ் கொள்கையும் ஒன்றா? திமுக கொள்கைகளும் கம்யூனிஸ்ட்களின் கொள்கைகளும் ஒன்றா? திமுக கொள்கையும் விசிகவின் கொள்கையும் ஒன்றா? ஒரே கொள்கை என்றால் ஒரே கட்சியாகிவிடலாம். தனித்தனி கட்சி தேவையில்லை. பல்வேறு கொள்கைகள் உள்ள கட்சிகள் சேர்ந்துதான் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. ஆனால், ஒருமித்த கொள்கை கொண்ட கட்சிகள் எல்லாம் இணைந்துள்ள கூட்டணிதான் திமுக கூட்டணி என ஏமாற்றுகிற கட்சி திமுக. வாக்குகள் சிதறக் கூடாது என்பதற்காக கூட்டணி அமைப்பது இயல்பு. திமுகவை அகற்ற வேண்டும், தமிழ்நாடு ஏற்றம் பெற வேண்டும், வளம் பெற வேண்டும், கொள்ளையடிக்கிற கூட்டத்தை அடித்து விரட்ட வேண்டும் என்ற அடிப்படையில் பிரமாதமான கூட்டணியாக எங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி உள்ளது’’ என்று எடப்பாடி பழனிசாமி பேசினார். “காங்கிரஸுக்கு திமுக அடிமை...” - திருச்சியில் மோடி மேடையில் பழனிசாமி பேச்சு
-
யாழில் நயினாதீவு பகுதியில் ஐயர்களுக்கிடையில் நடந்த சண்டை ஒரு ஐயர் வாள் வெட்டில் பலி..!
யாழில் நயினாதீவு பகுதியில் ஐயர்களுக்கிடையில் நடந்த சண்டை ஒரு ஐயர் வாள் வெட்டில் பலி..! யாழ்ப்பாணம் நயினாதீவில் இரு இந்துக் குருக்கள் மாருக்கிடையிலான சண்டை வாள் வெட்டில் முடிந்த நிலையில் ஒரு குருக்கள் உயிரிழந்தார். குறித்த சம்பவம் இன்று (9) மாலை நயினாதீவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நயினாதிவு வீரகத்தி வினாயகர் ஆலய பூசகருக்கும் நாவலப்பிட்டியிலிருந்து தொழில் நிமிர்த்தம் தொழில் நிமித்தம் யினாதீவுக்கு சென்றிருந்த குருக்களுக்குமிடையில் ஏற்பட்ட தொழில் தகராறே வாள்வெட்டுவரை சென்று கொலையில் முடிந்துள்ளது. நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலய பூசகருகரது வாள் வெட்டிலேயே நாவலப்பிட்டியிலிருந்து சென்ற பூசாரி பலியாகியுள்ளார். உயிரிழந்தவர் நாவலப்பிட்டியாச் சேர்ந்த 40 வயதான கிருஷ்ணகுமார் எனும் குருக்களே என தெரிவிக்கப்டுகிறது வழமையாக அவர் அங்கு தொழில் நிமிர்த்தம் சென்று வருபவர் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://yarlvasal.lk/?p=92893
-
எதிர்பாராத காட்சிப்படுத்தல்களுடன் குறுங்காணொளிகள்
தீடீரென பள்ளத்தில் விழுந்த கார்கள்! இந்தியாவில் 5 குட்டி போட்ட ஆபிரிக்க சிவிங்கிப்புலி.
-
'110 குழந்தைகள் பலி'- இரானில் பள்ளிக்கு அருகில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது யார்?
அமெரிக்காவின் ஏவுகடையால் ஈரான் பள்ளிக்கூடம் தாக்கப்பட்டதா?
-
சமூகப் பார்வை (பயம்)??¿
விசுகரின் எழுத்தில் சில குழப்பங்கள் இருக்கின்றன. மாதாந்த இரத்தப் போக்கை சில ஹோர்மோன் மாத்திரைகள் எடுத்துக் கொள்வதன் மூலம் பிற்போடலாம் (period delaying pills). இந்தக் குளிசையை நிறுத்தியவுடன் 3 நாட்களில் மாதாந்த இரத்தப் போக்கு ஆரம்பிக்கும். ஆனால், இந்த நோக்கத்திற்காக மட்டும் பயன்படுத்தப் படும் மாத்திரை கருத்தடை மாத்திரை அல்ல. இதை எடுத்துக் கொண்டு உடலுறவு கொண்டால், கருத் தரிக்கும். பக்க விளைவுகள் சில உண்டு: உடலில் நீர் சேர்தல் (இதனால் வயிறு ஊதியது போல உணர்தல்), தலை வலி, நிறுத்தியவுடன் அதிக இரத்தப் போக்கோடு மாதாந்த இரத்தப் போக்கு உருவாதல் என்பன பரவலான பக்க விளைவுகள். ஆபத்துக்கள்: இரத்தம் இலகுவாக உறையக் கூடிய கண்டறியப் படாத நோய் நிலை (blood clotting disorders) சிலரில் இருக்கலாம். அத்தகைய நோய் நிலை இருப்போரில் இரத்தக் கட்டிகள், மூளை இரத்த அடைப்பு என்பன ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இதனால் தான் மருத்துவர் சில பரிசோதனைகளைச் செய்த பின்னர் மட்டுமே இந்த மருந்தைப் பரிந்துரைப்பர். மருத்துவ ஆலோசனை இல்லாமல் இவற்றை எடுத்துக் கொள்ளக் கூடாது.
-
இலங்கையில் எரிவாயு விலை அதிகரிப்பு
இன்று நள்ளிரவு முதல் லாஃப்ஸ் எரிவாயு விலை உயர்வு Published By: Vishnu 11 Mar, 2026 | 09:07 PM லாஃப்ஸ் Gas நிறுவனம் சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இந்த புதிய விலை புதன்கிழமை (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு கொள்கலன் விலை ரூ.300 அதிகரிக்கப்பட்டு ரூ.4,630 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பு இது ரூ.4,330 ஆக இருந்தது. மேலும், 5 கிலோகிராம் எரிவாயு கொள்கலன் விலை ரூ.120 உயர்த்தப்பட்டு ரூ.1,862 ஆக விற்பனை செய்யப்படவுள்ளது. இதன் முந்தைய விலை ரூ.1,742 ஆக இருந்தது. https://www.virakesari.lk/article/240750
- Today
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்ட சுரேஷ் சலே
சுரேஷ் சலேவுக்கு எதிராக 3 குற்றச்சாட்டுக்கள்! Mar 11, 2026 - 09:48 PM உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு எதிராக 3 பிரதான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று (11) நீதிமன்றத்தில் தெரிவித்தது. கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குற்றப் புலனாய்வு திணைக்களம் இந்த விபரங்களை வெளியிட்டது. குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சமர்ப்பித்த 25 பக்கங்கள் கொண்ட மேலதிக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 2018 நவம்பர் 29 அன்று வவுணதீவில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டமை மற்றும் 2019 ஏப்ரல் 26 அன்று சாய்ந்தமருது வீட்டில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகளைத் திட்டமிட்டு திசைதிருப்பியமை. இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர் ஒருவரைப் பயன்படுத்தி, நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயத்தை முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்குச் சுரேஷ் சலே அடையாளம் காட்டிக் கொடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பாணந்துறைப் பகுதியில் உள்ள மற்றுமொரு புலனாய்வாளர் இவ்வாறான தாக்குதல் ஒன்று நடைபெறவுள்ளதாக முன்னரே எச்சரித்தும், புலனாய்வுப் பிரிவு அது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. தாக்குதலுக்குப் பின்னர், அந்த புலனாய்வாளர் விடுதலையான போது, சுரேஷ் சலே அவரை ஒரு ஹோட்டலுக்கு அழைத்து நன்றி தெரிவித்துள்ளமை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சாய்ந்தமருது குண்டுவெடிப்பின் போது உயிரிழந்ததாகக் கூறப்படும் சாரா ஜஸ்மின் என்பவரின் உடல் பாகங்கள் இரண்டு தடவைகள் மேற்கொள்ளப்பட்ட DNA பரிசோதனைகளிலும் உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும், மூன்றாவது முறையும் DNA பரிசோதனை செய்யுமாறு சுரேஷ் சலே விசாரணை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்தது. முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் இது குறித்து வாக்குமூலம் அளித்துள்ளனர். சுரேஷ் சலே சார்பாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்த போது சுரேஷ் சலே இலங்கையில் இருக்கவில்லை எனவும் அவர் மலேசியாவில் இருந்தார் எனவும் குறிப்பிட்டார். ஏற்கனவே 25-க்கும் மேற்பட்ட விசாரணைகள் முடிவடைந்த நிலையில், தற்போது இந்த புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவது பக்கச்சார்பானது என தெரிவித்தார். சுரேஷ் சலே மிகவும் கொடூரமான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரது மகனைப் பார்க்கக் கூட பொலிஸ் சான்றிதழ் கேட்கப்படுகிறது. சட்டத்தரணிகளுடன் அவர் பேசும் விபரங்கள் இரகசியமாகப் பதிவு செய்யப்படுகின்றன. இது அடிப்படை உரிமை மீறலாகும் என சுட்டிக்காட்டினார். இந்த விசாரணை அதிகாரிகள் என்ன பேசுகிறார்கள்? அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளராக இருந்த எனது கட்சிக்காரர், எவ்வாறு பாதுகாப்புச் சபையைக் கூட்டி, பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட விசாரணை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க முடியும்? அரச புலனாய்வுச் சேவையும் பொலிஸ் மா அதிபரின் கீழேயே இயங்குகின்றது. நீங்கள் குறிப்பிடும் அந்த பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் அக்காலத்தில் சீருடை அணிந்துதானே கடமையாற்றினார்கள்? இது வெட்கக்கேடானது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்த போது இந்த மூன்றாவது சந்தேகநபர் இலங்கையில் இருக்கவே இல்லை. அவர் மலேசியாவில் இருந்தார். அவர் 2018 ஜனவரி மாதமே இலங்கையை விட்டு வெளியேறிவிட்டார். அதுமட்டுமன்றி, இதுவரை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து 25-க்கும் மேற்பட்ட விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் இந்தியாவிலிருந்து முன்னெச்சரிக்கை தகவல் கிடைத்ததாகவும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி முன்னாள் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இப்போது யாரோ ஒருவர் புலனாய்வுப் பிரிவுக்கு முன்கூட்டியே தகவல் வழங்கியதாகக் கூறுகிறார்கள். யார் தகவல் கொடுத்திருந்தாலும், அந்தத் தகவல் கிடைத்தும் தாக்குதலைத் தடுக்கத் தவறிய அன்றைய CID அதிகாரிகள் தான் இன்றும் இந்த விசாரணைகளை வழிநடத்துகிறார்கள். அவர்கள் அன்றே தாக்குதலுக்கு முன்னர் சஹ்ரானை கைது செய்திருந்தால் இந்த எந்த விசாரணைகளுமே தேவையில்லையே! இந்த ஜயகி டி அல்விஸ் அறிக்கையை வாசித்துப் பாருங்கள். இதை வாசித்தால் யார் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என்பது புரியும். இவ்வாறானவர்கள் இந்த விசாரணையை முன்னெடுக்கும் போது, இது எவ்வாறு ஒரு பக்கச்சார்பற்ற விசாரணையாக அமைய முடியும்? இந்நிலையில் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதவான் இசுரு நெத்திகுமார, சுரேஷ் சலே தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் நேரடியாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவை. இந்தச் சாட்சிகள் போதுமானதா என்பதை மேலதிக விசாரணைகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்க முடியும் என்று குறிப்பிட்டார். சுரேஷ் சலே தொடர்பான அனைத்து கோரிக்கைகளையும் எழுத்துப்பூர்வமாகச் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், வழக்கின் மேலதிக அறிக்கையை சமர்ப்பிக்க மார்ச் 25ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். சுரேஷ் சலேவுக்கு எதிராக 3 குற்றச்சாட்டுக்கள்!
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
இது உங்களிடம் நான் அவதானித்த ஒரு பிரச்சினை: Deduction என்பது சுத்தமாகக் கிடையாது. அத்தோடு ஒரு விடயத்தை ஒரு துவாரத்தினூடாக (tunnel vision) மட்டும் பார்த்து , அப்படியே நம்பி, இங்கே கொண்டு வந்து ஒட்டுவதை மட்டும் செய்வீர்கள்😂. 2015 JCOPA ஒப்பந்தப் படி மருத்துவத் தேவைகளுக்கான யுரேனியச் செறிவாக்கல் உதவிகள் (அது 60% வீதமாக இருக்க வேண்டியதில்லை என்பது வேறு விடயம்) ரஷ்யா உட்பட்ட சில ஐரோப்பிய நாடுகளால் வழங்கப் படும். எனவே, மருத்துவத் தேவைகளுக்காக ஈரான் செறிவாக்கவில்லை. ஈரானிடம் அணுசக்திக் கடற்கலம் ஒன்று கூட இல்லை, அவை தயாரிப்பு நிலையிலும் இல்லை. எனவே அதற்கும் 60% செறிவாக்கல் பயன்படவில்லை. இந்தத் தகவல்களைத் தொடர்பு படுத்தி நிலைமையைப் புரிந்து கொள்ள உங்களால் முடியவில்லையா, அல்லது புரிந்து கொண்டால் உங்கள் தரப்பான ஈரானுக்கு ஆதரவாக எழுத இயலாது என்பதால் தவிர்க்கிறீர்களா என்பது உங்களுக்கே வெளிச்சம். இந்த நிலையில், ஓட்டையினூடாகப் பார்ர்க்காமல் எல்லா விடயங்களையும் கணக்கிலெடுத்து இங்கே பகிர்வோருக்கு அட்வைஸ் மழை வேற😂!
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
“தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அலை வீசுகிறது” - திருச்சியில் பிரதமர் மோடி நம்பிக்கை தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக் கூட்டத்தில் பேச்சு திருச்சி: “தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அலை இப்போது வீசுகிறது. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற மக்கள் தயாராகிவிட்டனர். என்டிஏ கூட்டணி அந்த மாற்றத்தை தரும்” என்று திருச்சியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். பிரதமர் நரேந்திர மோடி இன்று கேரளம் மாநிலம் கொச்சியில் இருந்து ராணுவத்துக்குச் சொந்தமான விமானம் மூலம் மாலையில் திருச்சி விமான நிலையத்துக்கு வருகை தந்தார். ரூ.5,650 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டிய பின்னர், பஞ்சப்பூரில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் அரசியல் பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். அதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது: “ஆடி மாதத்தில் காவிரி பெருகுவதுபோல் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அலை இப்போது வீசுகிறது. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற மக்கள் தயாராகிவிட்டனர். என்டிஏ கூட்டணி அந்த மாற்றத்தை தரும். ஆட்சி அதிகாரத்தில் இருந்து திமுகவை தூக்கி எறியும் நேரம் வந்துவிட்டது. தமிழகத்தில் ஒரு குடும்பத்துக்காக மட்டுமல்ல, மாநிலத்தில் அனைத்து குடும்பங்களுக்காகவும் உழைக்கும், செயல்படும் அரசை மக்கள் விரும்புகின்றனர். அது என்டிஏ-வால் மட்டுமே தர முடியும். திருச்சியை சேர்ந்த தமிழக அமைச்சர் ஒருவர் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்துள்ளார். பணத்துக்காக வேலைகள் விற்கப்படும்போது நேர்மையான இளைஞர்களின் அரசு பணி கனவு பாழாகிறது. இந்த மோசடி பணமெல்லாம் எங்கே போகிறது? தமிழகத்தின் ஊழல் பணமெல்லாம் ஒரு குடும்பத்துக்கு சென்று சேர்கிறது. தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு: திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்து சட்டம் - ஒழுங்கு மிக மோசமான நிலையில் உள்ளது. என்டிஏ ஆட்சி அமைந்தால் பெண்கள் அச்சமின்றி வாழலாம். ஆனால், குற்றவாளிகள்தான் அஞ்சுவார்கள். மேற்காசிய போர்: மேற்காசிய போர் குறித்த வதந்திகளை நம்பி மக்கள் பீதியடைய வேண்டாம். போர் காரணமாக எரிவாயு விநியோக சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த நிலைமை எப்படியானாலும் இந்திய மக்களின் நலன் பாதுகாக்கப்படும்” என்று பிரதமர் மோடி பேசினார். “தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அலை வீசுகிறது” - திருச்சியில் பிரதமர் மோடி நம்பிக்கை
-
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 - செய்திகள்
IPL 2026 | முதற்கட்ட அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் ஆர்சிபி - சன்ரைசர்ஸ் பலப்பரீட்சை! மும்பை: ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசனின் முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த சீசனுக்கான போட்டிகள் வரும் 28-ம் தேதி முதல் மே 31 வரை நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் 84 லீக் போட்டிகள், அதை தொடர்ந்து பிளே-ஆஃப் சுற்று மற்றும் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்று விளையாடும் இந்த சீசனின் முதற்கட்ட ஆட்ட அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. எஞ்சிய ஆட்டங்களுக்கான அட்டவணை தமிழகம், கேரளம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களின் தேர்தல் அட்டவணை அறிவிப்புக்கு ஏற்ப திட்டமிடப்படும் என தகவல். வரும் 28-ம் தேதி அன்று இந்த சீசனில் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆர்சிபி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன. இந்த ஆட்டம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ஐபிஎல் 2026: முதற்கட்ட அட்டவணை… >மார்ச் 28: ஆர்சிபி vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பெங்களூரு >மார்ச் 29: மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை >மார்ச் 30: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - கவுஹாத்தி >மார்ச் 31: பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - முல்லான்பூர் >ஏப்.1: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ் - லக்னோ >ஏப்.2: கொல்கத்தா vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா >ஏப்.3: சிஎஸ்கே vs பஞ்சாப் கிங்ஸ் - சென்னை >ஏப்.4: டெல்லி vs மும்பை - டெல்லி >ஏப்.4: குஜராத் vs ராஜஸ்தான் - அகமதாபாத் >ஏப்.5: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs லக்னோ - ஹைதராபாத் >ஏப்.6: கொல்கத்தா vs பஞ்சாப் - கொல்கத்தா >ஏப்.7: ராஜஸ்தான் vs மும்பை - கவுஹாத்தி >ஏப்.8: டெல்லி vs குஜராத் - டெல்லி >ஏப்.9: கொல்கத்தா vs லக்னோ - கொல்கத்தா >ஏப்.10: ராஜஸ்தான் vs பெங்களூரு - கவுஹாத்தி >ஏப்.11: பஞ்சாப் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - முல்லான்பூர் >ஏப்.11: சிஎஸ்கே vs டெல்லி - சென்னை >ஏப்.12: லக்னோ vs குஜராத் - லக்னோ >ஏப்.12: மும்பை vs ஆர்சிபி - மும்பை IPL 2026 | முதற்கட்ட அட்டவணை வெளியீடு
-
எண்ணெய் பீப்பாய் விலை 200 டொலரை தாண்டும் - ஈரான் எச்சரிக்கை
400 மில்லியன் பீப்பாய் எண்ணெய் விடுவிப்புக்கு IEA அனுமதி Mar 11, 2026 - 07:55 PM ஹோர்முஸ் நீரிணை செயலற்ற முறையில் மூடப்பட்டதால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோகத் தடையைச் சமாளிக்க, 400 மில்லியன் பீப்பாய் எண்ணெயை விடுவிக்க சர்வதேச எரிசக்தி முகவரகம் ஒப்புதல் அளித்துள்ளதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாத்திஹ் பிரோல் அறிவித்துள்ளார். சர்வதேச எரிசக்தி முகவரகம், தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவிலான மூலோபாய எண்ணெய் இருப்புக்களை சந்தைக்கு விடுவிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, மொத்தம் 400 மில்லியன் பீப்பாய் எண்ணெய் விநியோகிக்கப்படவுள்ளது. உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டைக் குறைப்பதற்கும், எரிபொருள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது IEA அமைப்பின் வரலாற்றில் இதுவரை மேற்கொள்ளப்பட்டிராத மிகப்பெரிய எண்ணெய் விடுவிப்பாகக் கருதப்படுகிறது. ஈரானின் அண்மைக்கால எச்சரிக்கைகள் மற்றும் மத்திய கிழக்கு போர் பதற்றத்தால் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் 32 உறுப்பு நாடுகளும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. இந்த அவசரகால இருப்புகள், ஒவ்வொரு உறுப்பு நாட்டின் தேசிய சூழ்நிலைகளுக்குப் பொருத்தமான காலக்கெடுவுக்குள் சந்தைக்குக் கிடைக்கும் என IEA தெரிவித்துள்ளது. 1991, 2005, 2011 மற்றும் 2022 இல் இரண்டு முறை என இதற்கு முன்னர் ஐந்து தடவைகள் இவ்வாறான கூட்டு எண்ணெய் விடுவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது ஆறாவது தடவையாக எண்ணெய் விடுப்பு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmmm4r78x000z356pcr1vpw05
-
விளையாட்டின் மூலம் தடைகளை உடைக்கும் Siddi பெண்கள்
முன்னே வரட்டும் . .....முன்னேறி வரட்டும் . ........! 👍
-
செங்கல்பட்டு: சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 2 பேர் கைது
செங்கல்பட்டு: சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 2 பேர் கைது பட மூலாதாரம்,Getty Images 25 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் மதுராந்தகம் அருகே சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை அன்று நள்ளிரவு நேரத்தில் சிறுமி மற்றும் அவரது நண்பர்கள் சென்ற இருசக்கர வாகனத்தைப் பின்தொடர்ந்து வந்த சிலரால் இந்தச் சம்பவம் நடைபெற்றதாகக் காவல்துறையின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. காவல்துறை அளித்துள்ள தகவல்படி, மதுராந்தகம் அருகே சிறுவன் மற்றும் இரண்டு சிறுமிகள் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது அவர்களின் வாகனத்தை இரண்டு பேர் தங்களின் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்துள்ளனர். அவர்கள் வேகமாக வருவதைப் பார்த்து தனது வாகனத்தை சிறுவன் வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது நிலை தடுமாறி சிறுவனும் சிறுமிகளும் கீழே விழுந்துள்ளனர். அப்போது வாகனத்தைப் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், அவர்களைத் தாக்கி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. குற்றத்தில் ஈடுபட்ட நபர்கள் அங்கிருந்து சென்றதும் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சிறுமி சென்றுள்ளார். அங்கு தனக்கு நேர்ந்த கொடுமையை மருத்துவர்களிடம் சிறுமி தெரிவித்துள்ளார். இதையடுத்து மருத்துவமனை மூலமாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் நேரடி தொடர்புடைய காக்கா பாலாஜி என்கிற பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்' எனக் காவல்துறை தெரிவித்துள்ளது. காக்கா பாலாஜியிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில், தாமு என்கிற தாமோதர பெருமாள் என்ற நபரை புதன்கிழமையன்று கைது செய்துள்ளதாக, காவல்துறையின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,Devaneyan படக்குறிப்பு,குழந்தைகள் நல செயற்பாட்டாளர் தேவநேயன் அரசு. இதுதொடர்பாக மூன்று காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்துள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்துவதற்காக ஆவடியில் வசித்து வரும் காக்கா பாலாஜியின் வீட்டுக்கு மேல்மருவத்தூர் போலீசார் சென்றுள்ளனர். அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். முடிவில், சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் காக்கா பாலாஜியை காவல்துறை கைது செய்துள்ளது. காக்கா பாலாஜியிடம் தனிப்படை காவலர்கள் நடத்திய விசாரணையின் தொடர்ச்சியாக, புதன்கிழமையன்று தாமு என்கிற தாமோதர பெருமாளை கைது செய்துள்ளதாக, காவல்துறை தெரிவித்துள்ளது. "சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறை, குழந்தைகள் நலக் குழு எனப் பலமுனைகளில் விசாரணை நடைபெற்று வருகிறது. மற்றொரு சிறுமியும் சிறுவனும் பற்றிய விவரங்கள் காவல்துறை விசாரணை முடிவில் விடை தெரியவரும்" எனக் கூறுகிறார் குழந்தைகள் நல செயற்பாட்டாளர் தேவநேயன் அரசு. சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த விவகாரம் அரசியல் ரீதியாக பேசுபொருளாக மாறியுள்ளது. பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், உதவி செய்வதற்குக் கூட ஆள் இல்லாமல் அரசு மருத்துவமனைக்கு சிறுமி நடந்தே சென்றதாகக் கூறியுள்ளார். இதே தகவலை சில நாளேடுகளும் வெளியிட்டுள்ளன. இதுதொடர்பாக மதுராந்தம் டிஎஸ்பி தீபக் ரஜினியை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது. ஆனால், அவரிடம் இருந்து உரிய விளக்கம் பெற முடியவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c98qvlpj42mo
-
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அண்ணை, அப்ப கேள்விக் கொத்தையும் பிச்சு பிச்சு தயாரிக்க வேண்டுமோ?! எல்லாம் @கிருபன் அண்ணையின் கையில் தான்!
-
விளையாட்டின் மூலம் தடைகளை உடைக்கும் Siddi பெண்கள்
இந்தியாவில் ஆப்ரிக்க வம்சாவளியை சேர்ந்த சுமார் 20,000 பேர் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் சித்தி சமூகமாக அறியப்படுகின்றனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, இவர்களில் பெரும்பாலானோர் அடிமைகளாக இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டவர்கள். காலப்போக்கில், அவர்கள் சமூக விளிம்பில் தள்ளப்பட்டவர்களாகவே இருந்து, வறுமை மற்றும் பாகுபாடுகளை எதிர்கொண்டு வந்துள்ளனர்.ஆனால் இன்றைய சூழலில், சித்தி சமூகத்தைச் சேர்ந்த பெண் குழந்தைகள் மற்றும் இளம் பெண்கள் இந்த தடைகளை எதிர்கொள்ள ஒரு சக்திவாய்ந்த வழியை கண்டுபிடித்துள்ளனர். விளையாட்டு வழியாக, அவர்கள் தனிமைப்படுத்துதலை உடைத்து, பாகுபாட்டை எதிர்த்து, தங்களுடைய வாழ்க்கையை மாற்றி வருகின்றனர். #BBCISWOTY #Changethegame இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
-
பெண்களின் ‘ஊதியமற்ற’ உழைப்பு அளப்பரிய பங்களிப்பை வழங்குகின்றது - மணிலாவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவிப்பு
பெண்களின் ‘ஊதியமற்ற’ உழைப்பு பொருளாதாரத்திற்கு அளப்பரிய பங்களிப்பை வழங்குகின்றது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மணிலாவில் தெரிவிப்பு Published By: Digital Desk 3 11 Mar, 2026 | 12:58 PM பெண்கள் குடும்பத்திற்காக ஆற்றுகின்ற, எனினும் பெரும்பாலும் அங்கீகரிக்கப்படாத ‘ஊதியமற்ற’ வீட்டுப் பணிகள், குடும்பத்திற்கும் தேசிய பொருளாதாரத்திற்கும் பாரிய பங்களிப்பை வழங்குகின்றன என்பதைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார். பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் அமைந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைமையகத்தில் இன்று (மார்ச் 10) நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் முதன்மை உரை நிகழ்த்திய போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். பெண்களின் பணிகளை உரிய முறையில் இனங்கண்டு அதனை அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டிய பிரதமர், பெண்களைப் பொருளாதார நடவடிக்கைகளில் முழுமையாகப் பங்கெடுக்கச் செய்யக்கூடிய பெண் நேய கொள்கைகள் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் அவசியத்தையும் இங்கு வலியுறுத்தினார். இத்துறையில் காணப்படும் தடைகளை நீக்குவதற்கு அரசாங்கங்களும் சர்வதேச அமைப்புகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார். பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளை வலுவூட்டுவதற்குத் தரமான கல்வியை வழங்குவது அவசியமானது எனவும், இலங்கை எப்போதும் கல்விக்கு முன்னுரிமை அளித்து வருவதாகவும் பிரதமர் நினைவு கூர்ந்தார். குறிப்பாக, தீர்மானம் எடுக்கும் மட்டத்திலான அரசியல் செயல்முறைகளில் பெண்கள் உள்வாங்கப்படுதல், வேலைவாய்ப்புச் சந்தையில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்தல் மற்றும் சமவாய்ப்புகளைக் கொண்ட கல்வி முறையைப் பேணுதல் ஆகியன நிலையானதும் நீதியானதுமான அபிவிருத்திக்கு அவசியமானவை என்பதைப் பிரதமர் வலியுறுத்தினார். பெண் தலைமைத்துவம் மற்றும் பெண் வலுவூட்டலுக்காகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆற்றிவரும் விசேட அர்ப்பணிப்பைப் பாராட்டி, அவருக்கு "ஷிரீன் லத்தீப் பெண் தலைமைத்துவ விருது" (Shireen Lateef Women’s Leadership Award) வழங்கி வைக்கப்பட்டது. இந்த விழா ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் உள்ளிட்ட சிரேஷ்ட நிர்வாகத்தினர், வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் அபிவிருத்திப் பங்காளிகள் எனப் பலரின் பங்கேற்புடன் நடைபெற்றது. https://www.virakesari.lk/article/240708
-
எண்ணெய் பீப்பாய் விலை 200 டொலரை தாண்டும் - ஈரான் எச்சரிக்கை
எண்ணெய் பீப்பாய் விலை 200 டொலரை தாண்டும் - ஈரான் எச்சரிக்கை Mar 11, 2026 - 07:16 PM ஈரான் தமது தாக்குதல் கொள்கையில் புதிய வியூகத்தை வகுத்துள்ளதாக தெஹ்ரானின் காதம் அல்-அன்பியா இராணுவ தலைமையகத்தின் ஊடகப்பேச்சாளர் இப்ராஹிம் சோல்பகாரி தெரிவித்துள்ளார். அதற்கமைய பரஸ்பர தாக்குதல் கொள்கை முடிவுக்கு வந்துவிட்டது என்றும், இனிமேல் தாக்குதலுக்குத் தாக்குதல் என்ற புதிய கொள்கையைப் ஈரான் பின்பற்றப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களின் நட்பு நாடுகளுக்கு ஹோர்முஸ் நீரிணை வழியாக ஒரு லீற்றர் எண்ணெயைக் கூட கொண்டு செல்ல ஈரான் அனுமதிக்காது. அவர்களை நோக்கிச் செல்லும் எந்தவொரு கப்பலும் அல்லது தாங்கியும் ஈரானின் இலக்காக அமையும். எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 200 அமெரிக்க டொலர் வரை உயர்வதற்குத் தயாராக இருங்கள். ஏனெனில் எண்ணெய் விலை பிராந்திய பாதுகாப்பிலேயே தங்கியுள்ளது. அந்தப் பாதுகாப்பை நீங்கள்தான் சீர்குலைத்துள்ளீர்கள் என அவர் எச்சரித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmmm39vdm000x356pmxdl6613
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
படங்கள் @வாத்தியார் அண்ணா. @goshan_che அண்ணை உங்கள் நண்பரிடமும் அவர்களின் வீட்டின் சூழலை காட்டும் படங்களை பகிருங்கள். தற்போது ஒரு மேசன் தம்பி முன் வந்திருக்கிறார், நேரடியாக வந்து பார்த்து தமது சம்பளம் பற்றி கதைப்பதாக கூறியுள்ளார். @வாத்தியார் அண்ணையும் தனக்கு அறிமுகமான மேசன் ஒருவரிடம் கேட்டுச் சொல்வதாக கூறினார்.
-
ஈழப்பிரியன் started following யாழ் 28 அகவை - சுய ஆக்கங்கள்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வழமை போல கூடுதலானவர்கள் பங்கு கொள்வார்கள். போட்டிக்கு ஏற்பாடுகளை செய்யுங்கள்.
-
மின் கட்டணத்தை 100% அதிகரிக்க நேரிடும்: NTNSP தலைவர் எச்சரிக்கை
மின் கட்டணத்தை 100% அதிகரிக்க நேரிடும்: NTNSP தலைவர் எச்சரிக்கை Mar 11, 2026 - 11:38 AM வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின்சார சபை தொழிற்சங்கங்கள் 40% சம்பள உயர்வை கோருவதாகவும், அந்த கோரிக்கையை நிறைவேற்றினால் மின்சாரக் கட்டணத்தை 100% அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் NTNSP தனியார் நிறுவனத்தின் தலைவர் நுசித் குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: தொழிற்சங்கங்கள் முன்வைத்த 64 கோரிக்கைகளில் 62 கோரிக்கைகளுக்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இதில் 59 கோரிக்கைகள் ஆரம்பக் கட்டத்திலேயே நிர்வாகத்தினால் வழங்கப்பட்டன. எஞ்சிய 5 கோரிக்கைகளில் 3 விடயங்கள் குறித்து அமைச்சருடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்பட்டது. தற்போது நிலுவையிலுள்ள இறுதி இரண்டு கோரிக்கைகள் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை வழங்கிய அதே போனஸ் கொடுப்பனவை வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சம்பளத்துடன் மேலதிக கொடுப்பனவாக 11,000 ரூபாவும், வாழ்க்கைச் செலவு கொடுப்பனவையும் சேர்த்து சராசரியாக 17,000 ரூபா வழங்கப்படுகின்றது. 40% சம்பள உயர்வு என்பது மாதத்திற்கு 1.8 பில்லியன் ரூபா மேலதிக செலவாகும், இது ஆண்டொன்றுக்கு 22 பில்லியன் ரூபாவாகும். 2025 டிசம்பர் 31 ஆம் திகதி நிலவரப்படி மின்சார சபையின் நட்டம் 35 பில்லியன் ரூபாவாக உள்ளது. இந்த நிலையில் சம்பளத்தை உயர்த்தினால், மக்கள் மற்றும் தொழிற்சாலைகள் மீது சுமையை ஏற்றி மின் கட்டணத்தை 100% அதிகரிக்க வேண்டியிருக்கும். 2024 ஓகஸ்ட் முதல் நிலவிய 25% சம்பள முரண்பாடு களையப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் ஏற்கனவே 25% உயர்வைப் பெற்றிருந்த நிலையில், கீழ்நிலை ஊழியர்களுக்கு 7% - 10% மாத்திரமே கிடைத்திருந்தது. இது 2025 ஜனவரி 1 முதல் சீர்செய்யப்பட்டது. தற்போது இச்சலுகையை 2024 ஜனவரி முதல் அமுல்படுத்தக் கோருகின்றனர். இது அமைச்சரவை தீர்மானம் என்பதால், இது குறித்து ஜனாதிபதியுடன் பேசுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து கோரிக்கைகளுக்கும் தீர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், எதற்காக இந்த வேலைநிறுத்தம் தொடர்கிறது என்பது புரியவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cmmlmade0000e356p07g1jutt