All Activity
- Past hour
-
லண்டனில் யூத அமைப்பிற்கு சொந்தமான 4 அம்பியூலன்ஸ்கள் தீக்கிரை!
லண்டனில் யூத அமைப்பிற்கு சொந்தமான 4 அம்பியூலன்ஸ்கள் தீக்கிரை! வடக்கு லண்டனில் உள்ள ஒரு யூத சமூக அமைப்பிற்குச் சொந்தமான நான்கு அம்பியூலன்ஸ் வாகனங்கள் இரவோடு இரவாகத் தீக்கிரையாக்கப்பட்டமை மிகவும் அதிர்ச்சியளிக்கும் யூத எதிர்ப்புத் தீவைப்புத் தாக்குதல் என்று பிரதமர் இங்கிலாந்து கெய்ர் ஸ்டார்மர் குறிப்பிட்டார். தீ விபத்தினை அடுத்து சம்பவ இடத்திற்கு ஆறு தீயணைப்பு வாகனங்களையும் 40 தீயணைப்பு வீரர்களையும் அனுப்பிய லண்டன் தீயணைப்புப் படை, வாகனங்களில் இருந்த பல சிலிண்டர்கள் வெடித்ததால் அருகிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் ஜன்னல்கள் நொறுங்கியதாகக் கூறியது. எனினும், இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அது சுட்டிக்காட்டியது. கோல்டர்ஸ் கிரீனில் உள்ள ஒரு யூத ஜெப ஆலயத்திற்கு அருகே நடந்த தாக்குதலுக்கு ஈரானுடன் இணைந்த பன்னாட்டுப் போராளிகள் குழு ஒன்று பொறுப்பேற்றுள்ளதாக பயங்கரவாத அமைப்புகள் மற்றும் தீவிரவாத செயல்பாடுகளை கண்காணிக்கும் நிறுவனமான ‘The SITE Intelligence’ இணையதளம் தெரிவித்துள்ளது. பெல்ஜியம், கிரீஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் நடந்த இதேபோன்ற தீவிபத்துகளுக்குப் பின்னணியில் இந்தக் குழு இருந்ததாகவும் அது கூறியது. https://athavannews.com/2026/1469640
-
ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்தார் ட்ரம்ப்
ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்தார் ட்ரம்ப். சாதகமாகவும் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீதான இராணுவத் தாக்குதல்களை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். ஈரானின் மின் விநியோகக் கட்டமைப்பை அமெரிக்கா இலக்கு வைத்தால், இஸ்ரேலின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் வளைகுடா பிராந்தியத்திலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்களுக்கு மின்சாரம் வழங்கும் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த அச்சுறுத்தலைத் தொடர்ந்தே ட்ரம்பின் இந்தத் தீர்மானம் வெளியாகியுள்ளது. ஈரான் உடனான பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் முழுவதும் தொடரும் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி ட்ரம்ப், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்: “ஈரானிய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீதான அனைத்து இராணுவத் தாக்குதல்களையும் ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு நான் பாதுகாப்புத் துறைக்கு (Department of War) உத்தரவிட்டுள்ளேன். தற்போது நடைபெற்று வரும் சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்களின் வெற்றியைப் பொறுத்தே இந்த இடைநிறுத்தம் நீடிக்கும்.” https://athavannews.com/2026/1469731
-
தம்பரும் , இரானும் யுத்த நிறுத்தத்திற்கு தயார்
இதுதான் நடந்திருக்குமோ?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
2,3 நாட்களில் மிகுதி போட்டிகள் விபரங்கள் வெளியாகும். இம்முறை 74 போட்டிகள்தான் நடைபெறும். ABP LiveIPL 2026 Full Schedule Release: BCCI Confirms 74-Game For...The BCCI sticks to the tried-and-tested 74-match format for IPL 2026 as the full schedule prepares for a massive reveal this week.
-
பாண் உட்பட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு
கேக்கின் விலை கூடி உள்ளதா ? புஹா ஹா ஹா
-
தம்பரும் , இரானும் யுத்த நிறுத்தத்திற்கு தயார்
தம்பர்🤡 சொன்னது போல் அப்படி ஒரு பேச்சும் இல்லை வார்த்தையும் இல்லை என ஈரான் சொல்லி உள்ளதாம் 😂
-
“ஈரானுக்கு ரஷ்யா இப்போதும் விசுவாசமான நண்பன், நம்பகமான கூட்டாளி!” - புதின்
ஓ…இப்ப நீங்களும் யாழ்கள அரசியல் ஆய்வாளர் ஆகி விட்டீர்கள். வாழ்த்துக்கள் 😂
-
தம்பரும் , இரானும் யுத்த நிறுத்தத்திற்கு தயார்
ஆனால் ஈரானிடம் இருந்தோ, இஸ்ரேலிடம் இருந்தோ எந்த தகவலும் வரவில்லை. ஈரானின் கோரிக்கைகள் நிறுவேறுமா? ஆகினால் அமெரிக்காவின் சகாப்தம் முடிந்ததாகவே அர்த்தம். ஈரான் போரை முடிக்க பல நிபந்தனைகளை போட்டுள்ளது. அவற்றினை செயல்படுத்தாமல் தம்பர் தான் நினைத்தது போல் போரை நிறுத்த முடியும் என நான் நினைக்கவில்லை.
-
தமிழர்களும் சிங்களவர்களும் இன ரீதியில் பொதுவான மூலத்தைக் கொண்டவர்களே - வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு
பால முருகன்ல இண்டைக்கு அன்னதானம் இல்லை போல😂. பூமர் இங்க வந்து துள்ளுறார்.
- Today
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 28 அகவை - சுய ஆக்கங்கள்முன்னர் கும்பலாக இருந்த பலரையும் காணவில்லை. இன்னும் ஏழு இலக்கங்களே இருந்ததனால் நான் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் நகராமல் அங்கேயே நிற்க, ஆண்டனி மட்டும் அப்பப்ப காணாமல் போய் வந்துகொண்டிருந்தான். இப்ப எம்மோடு வருவதாகக் கூறிய அந்த மூன்றாவது நபரைக் காணாதது எனக்கு நிம்மதியாக இருக்க, அந்த ஆள் வீட்டை போட்டாராக்கும் என்று எண்ணிக்கொள்கிறேன். 48 ம் இலக்கத் தாயும் மகளும் கூட இப்ப எனக்கு அண்மையில் வந்து நின்றுகொண்டிருக்க, அவர்களுக்கு அந்தப் பெடியுடன் போவது பற்றிக் கூறவில்லையே என்ற குற்ற உணர்வும் எழுகிறது. 36 ம் இலக்கம் கூப்பிட நான் திரும்பிப் பார்க்கிறேன் ஆண்டனியைக் காணவில்லை. எனக்கு மனம் திக் திக் என்று அடித்தாலும் யாரிடமும் சொல்ல முடியாமல் நிற்கிறேன். 37 கூப்பிட்டு முடிந்து ஐந்து நிமிடம் ஆன பின் 38 என்று கூப்பிட, பதட்டத்துடன் திரும்பிப் பார்க்க ஆண்டனி வருவது தெரிகிறது. நான் பலமாக “ஆண்டனி விரைவாக வா, எமது இலக்கம் கூப்பிடுகிறார்கள்” என்றபடி வாயில் காப்பாளரைத் தாண்டி உள்ளே செல்ல அவனும் என்பின்னால் வருகிறான். இருவரும் சென்று கதிரைகளில் அமர, கவுண்டரில் உள்ள பெண் இலக்கச் சீட்டைக் கேட்கிறாள். ஆண்டனி கொடுத்தபடியே நாம் ஒன்றாக வந்திருக்கிறோம். ஆனால் வேறுவேறு விமான டிக்கற் என்றதும் அந்தப் பெண் ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு “யாரின் டிக்கற்றை முதலில் செய்ய என்று கேட்க, எதையாவது செய் என்கிறார் ஆண்டனி. ஆண்டனியின் டிக்கற்றையே முதலில் செய்யுங்கள் என்கிறேன் நான். ஆண்டனிக்கு 18 ம் திகதி கொடுத்துவிட்டு என் விபரத்தைககேட்க எடுத்துக் கொடுத்தபின்னும் ஆண்டனி போகாமல் இருக்க, மிக்க நன்றி ஆண்டனி, நீ கிளம்பு என்றதும் “சீ யு நிவேதா” என்றுவிட்டு அவன் கிளம்ப, என் பெயரை நினைவில் வைத்திருக்கிறான் என்று ஆச்சரியம் எழுகிறது. எனக்கு 18 ம் திகதி போக ஓகே யா என்று பயண முகவர் கேட்க, நான் பதட்டப்படுமாப்போல் அய்யய்யோ என் மகளுக்கு 18 ம் திகதி நிச்சயதார்த்தம் இருக்கு. ஏற்கனவே பிந்திவிட்டது. தயவுசெய்து எத்தனை விரைவாக எனக்கு டிக்கட் போட்டுத் தர முடியுமோ தா என்கிறேன், இரண்டு நாட்களின் பின் எனக்கு விமானச் சீட்டுக் கிடைக்க நன்றி என்று கூறி அவள் தந்த விமானச் சீட்டைப் பெற்றுக்கொண்டு வெளியே வர அந்தத் தாயும் மகளும் வெளியே நிற்க, உங்களுக்கு முதலே கூறாமல் விட்டதற்கு மன்னித்துக்கொள்ளுங்கள் என்றுகூறிவிட்டு வெளியே வருகிறேன். நேரம் மாலை நான்கு மணி. முன்னால் பல ஓட்டோக்கள் நிற்க, நான் பிக்மீ ஓட்டோவுக்குப் பதிந்துவிட்டு நிற்க, ஓட்டோக்காரர் ஒருவர் எங்கு போகவேண்டும் என்கிறார். நான் ஏற்கனவே பிக்மீக்காக காத்திருக்கறேன் என்றதும் ஓகே என்றுவிட்டு அப்பால் நகர என் ஓட்டோ வருகிறதா என்று பார்க்கிறேன். முன்னர் நான்கு நிமிடம் என்று காட்டிய ஓட்டோ இப்ப 16 நிமிடம் என்று காட்ட மப்பைப் பார்க்கிறேன் அவர் வேறு பக்கமாகச் சென்றுகொண்டிருக்க, உடனேயே அதை இரத்துச் செய்துவிட்டு என்னிடம் வந்து கேட்டவரை வெள்ளவத்தைக்குப் போகவேண்டும் வருக்கிறாயா என்று கேட்டு ஏறி அமர்கிறேன். அப்போதுதான் நான் நின்ற கோட்டலின் பெயரோ முகவரியோ தெரியாது என்பது நினைவுக்கு வர, அந்த சசிக்கு போன் செய்ய அவர் கதைக்கிறார். அவரிடம் முகவரியை எனது போனுக்கு அனுப்பச் சொல்லிவிட்டு அக்கம் பக்கம் பார்த்தபடி வர எந்த வீதிக்குப் போகவேண்டும் என்கிறார் ஓட்டுனர். எனது போனில் பார்த்து இடத்தைக் கூறிவிட்டு எனது போனிலும் இடத்தைப் போட்டுச் சரியாகச் செல்கிறாரா என்று பார்க்கிறேன். எனது கொட்டேலுக்கு இன்னும் மூன்று நிமிடம் இருக்கும் நிலையில் சுமங்கலி ரெஸ்ட் என்னும் ஒன்று கண்னில் பட, ஓட்டுநாரை அங்கே போகும்படி கூற அவர் எதிரில் கொண்டுசென்று நிறுத்துகிறார். அங்கு தமிழ்ப் பெண்மணி ஒருவர் இருக்க, தங்குவதற்கு அறைகள் இருக்கா எனகிறேன். ஏசி அறைகள் இன்று இல்லை. மற்ற அறைகள் தான் இருக்கு. எத்தனை பேர் என்கிறா. நான் மட்டும் தான் என்று கூற தனி ஒருவருக்கு ஐந்தாயிரம் என்று கூற, பணத்தைக் கட்டி ரிசீற்ரைப் பெற்றதும் நான் இருக்கும் இடம் சென்று எனது பொதிகளை எடுத்து வருகிறேன் என்று கூறிவிட்டு ஓட்டோவில் ஏறுகிறேன். சசி வாசலிலே நிற்கிறார். ஒரு நாளுக்குரிய பணத்தை அவரிடம் கொடுத்துவிட்டு என் பொருட்களுடன் சுமங்கலிக்குச் செல்கிறேன். அங்கு செல்லும்போது மாலை ஐந்துமணி. அறை நன்கு சுத்தமாக இருக்கிறது. மின்விசிறியைச் சுழல விட்டுவிட்டு தேனீருக்கு ஓடர் செய்ய அரைமணிநேரம் செல்லும் என்கிறார். சரி சிறிது நேரம் படுப்போம் என்று கண்ணயர மணி ஒலிக்கிறது. எழுந்து சென்று கதவைத் திறக்க தேனீர்க் கோப்பையுடன் நிற்பவரிடம் தேனீரை வாங்கி வைத்துவிட்டு 100 ரூபாய்களைக் கொடுக்க அவர் செல்கிறார். அந்தக் களைப்புக்கு தேநீர் சுவையாக இருக்க சுடச் சுட அதைக் குடித்துவிட்டு போனில் சின்னத்திரை நாடகங்கள் பார்த்துக்கொண்டிருக்க நேரம் போனதே தெரியவில்லை. வெளியே போய் உண்டுவிட்டு வருவோம் என எண்ணி ஜன்னல் சீலையை விலக்கினால் ஒரே இருட்டு. பெரிதாகப் பசி இல்லை. நாளை காலை சாப்பிட்டுக்கொள்வோம் என எண்ணியபடி கட்டிலில் சரிய கணவர் போன் செய்கிறார். அவர் கதைத்து முடிய பிள்ளைகள் சித்தி மச்சாள் என பத்து மணிவரை போன் கதைத்து ஓய தூக்கம் கண்களைச் சுழற்ற, இனி யாருடனும் கதைக்காமல் படுப்போம் என எண்ணி எழுந்து மின்விசிறியை நிறுத்திவிட்டு கட்டிலுக்கு வர என் கால் பக்கமாக இரண்டு இடங்களில் சிவப்பாகத் தெரிகிறது. இவர்கள் கட்டில் விரிப்பைத் துவைக்காமல் போட்டுள்ளார்களோ என்னும் ஐயம் எழுகிறது. குனிந்து பார்க்க இரத்தத் திட்டுக்கள் புதிதாகத் தெரிகின்றன, என் கால்களைத் தடவிப் பார்க்க எதுவும் தெரியவில்லை. நுளம்பும் வரவில்லையே. போன் கதைக்கும் போது நுளம்பு கடித்து நான் கவனிக்காமல் சொறிந்திருப்பேனோ என்னும் எண்ணம் ஓட, சரி தூங்குவோம் என்று எண்ணியபடி படுக்கிறேன். கண்ணயரும் நேரம் முதுகுப் பக்கம் ஏதோ ஊர்வதுபோல் இருக்க இடதுபக்கமாகத் திரும்பிக்கொள்கிறேன். மீண்டும் கண்ணயர்ந்தபின் ஒரு மணிநேரம் தூங்கியிருப்பேன் மணிக்கட்டில் ஏதோ கடிக்க திடுக்கிட்டு எழுந்து போனின் வெளிச்சத்தில் பார்க்க சிறிய பூச்சி ஒன்று குடு குடு என்று ஓட விரலால் அழுத்தினால் இரத்தம் தான் தெரிகிறது. அதைப் பார்த்தால் மூட்டைப்பூச்சி போல் இருக்காததால் என்னவாக இருக்கும் என்று யோசனை ஓடுகிறது. சரி மற்றப்பக்கம் திரும்பிப் படுத்துப் பார்ப்பம் என்று எண்ணிப் படுத்தால் இரண்டு மூன்று இடங்களில் கடிக்க இரண்டை நசுக்கியும் விட்டேன். மெத்தை விரிப்பைத் தூக்கிப் பாக்க மெத்தை புதிதாக இருக்கிறது. இனியும் இங்கு படுக்க முடியாது என எண்ணி கோட்டலுக்கு போன் செய்ய மானேஜர் வருகிறார். எங்கள் கோட்டலில் மூட்டைகள் இல்லையே என்கிறார். நான் கால்பகுதி விரிப்பு மற்றும் நான் நசித்த மூட்டைகளைக் காட்டுகிறேன். சரி உங்களுக்குக் கீழே உள்ள AC அறை தருகிறோம் என்று கூறி அழைத்துச் செல்கின்றார். கீழே சென்றவுடன் AC மற்றும் மின்விசிறியைப் போட்டுவிட்டுச் செல்ல எனக்கோ குளிர் தாங்க முடியாமல் இருக்கு. AC ஐ நிறுத்திவிட்டு மின் விசிறியையும் நன்றாகக் குறைத்துவிட்டுப் படுக்க தூக்கம் நன்றாக வர மீண்டும் தூங்கவாரம்பிக்கிறேன். ஒரு அரைமணி நேரம் தூங்கியிருக்கமாட்டேன் மீண்டும் கடி. மகளுக்கு போன் செய்து விபரத்தைக் கூற நீங்கள் முதன் முதலில் இருந்த ஹோட்டலில் இருந்து உங்கள் ஆடைகளோடு வந்திருக்குமோ? ஏனென்றால் அந்த ஹோட்டலின் றிவியூ பார்த்தேன் நல்லாத்தான் எழுதியிருக்கு. எதுக்கும் நீங்கள் அணிந்திருந்த ஆடைகளை உதறிப் பாருங்கள் என்கிறா. நான் ஆடைகளை உதறிப் பார்த்துவிட்டு மெத்தையின் விரிப்பைத் தூக்கி ஏதும் தெரிகிறதா என்று பார்க்க அதுவும் புத்தம் புதிதாக இருக்கிறது. இரண்டு அறைகளிலும் புதிதாக மெத்தை போட்டுள்ளார்கள் என்றால் ஏதோ இருக்கு என்று எண்ணி விட்டு மீண்டும் படுக்க, ஐந்து நிமிடங்களுக்குள்ளாக மீண்டும் கடிக்க ஏற்கனவே முன்னேற்பாடாக ஒன் செய்து வைத்திருந்த போனை எடுத்துப் பிடிக்க இரண்டு குஞ்சுகள் ஓடுகின்றன. விரல்களால் அழுத்திவிட இரத்தத்துடன் சமாதியாகின்றன. அதை உடனே போனில் வீடியோவும் படமும் எடுத்துவிட்டு ஆடைமாற்றிவிட்டு போனில் நாம் வழமையாகத் தங்கும் யூரோ லங்கா கோட்டலுக்குப் போன் செய்து இன்றாவது அறைகள் இருக்கின்றனவா என்று கேட்க அவரும் எத்தனைபேர் என்கிறார். நான் மட்டும்தான் என்றுகூற, எத்தனை மணிக்கு வருவீர்கள் என்கிறார். இப்பவே கிளம்புகிறேன். எப்படியும் அரை மணிநேரத்தில் வந்துவிடுறேன் என்று கூறிவிட்டு நேரத்தைப் பார்த்தால் இரவு 11.45 என்று நேரம் காட்டுகிறது. அதன்பின் சுமங்கலி வரவேற்புக்குப் போன் செய்ய உடனே வருகிறோம் என்று இருவர் வருகின்றனர். நான் போகப்போகிறேன் என்று முடிவு எடுத்தபின் மின் விசிறியையும் நிறுத்திவிட்டிருந்தேன். அவர்கள் வந்து பார்த்துவிட்டு என்ன நீங்கள் எல்லாவற்றையும் நிறுத்திவிட்டிருக்கிறீர்கள். அதுதான் உங்களுக்குக் கடிக்கிது என்கின்றனர். அப்ப உங்கள் அறைகளில் மூட்டை இருக்கிறதுதானா என்று கேட்க பதட்டத்துடன் இல்லை என்கிறனர். நீங்கள் AC போட்டுவிட்டு மின்விசிறியையும் போட்டுவிட்டுப் படுத்தால் எதுவும் வராது என்கிறார் மனேஜர். போட்டோ எடுத்தீர்களா என்றதற்கு ஓம் என்கிறேன். நான் போர்வை ஒன்று கொண்டுவந்து தருகிறேன். வடிவாப் போர்த்துக்கொண்டு படுங்கோ ஒண்டும் கடிக்காது என்றவுடன் எனக்கு கோபம் தலைக்கேற “நான் எப்படிப் படுக்கவேணும் என்று நீங்கள் முடிவெடுக்கத் தேவை இல்லை. நான் ஏற்கனவே வேறு இடம் பார்த்துவிட்டேன். என் பணத்தைத் திரும்பத் தாருங்கள் என்று கேட்க, கீழே வாங்கோ என்றபடி என் இரு பயணப்பொதிகளையும் எடுத்துக்கொண்டு செல்ல நான் சிறியதை எடுத்துக்கொண்டு செல்கிறேன். கீழே சென்றதும் பணத்தை எடுத்துத் தந்தபடி இதுவரை எமக்கு எந்தவித குற்றச்சாட்டும் யாரிடமிருந்தும் வரவில்லை என்று அவர் கூற, நான் எடுத்த படத்தைக் காட்ட பின்னர் அவர் எதுவும் கூறவில்லை. நான் பிக்மீக்கு பதிந்துவிட்டு ஓட்டுநரின் பெயரையும் ஓட்டோ இலக்கத்தையும் மகளுக்கு வற்சப் செய்கிறேன். உடனேயே ஓட்டோ வந்துவிட அதில் ஏறி அமர்ந்தபடி மகளுடன் போனில் கதைத்தபடியே போய் ஹோட்டலின் முன்னால் இறங்குகிறேன். ஒரு இரவுக்கு 7500 ரூபாய்கள். பணத்தைச் செலுத்திவிட்டு பற்றுச் சீட்டைக் கேட்கிறேன். நாளை தருவதாகக் கூற, பணம் இன்றுதானே தந்தேன். இப்பவே பற்றுச்சீட்டைத் தாருங்கள் என்கிறேன் சிரித்தபடி. நாங்கள் தராமல் விடப்போகிறோமா அக்கா என்கிறார் மற்றவர். நான் ஒருதடவை பற்றுச்சீட்டு வாங்காது மீண்டும் பணம் கட்டிய அனுபவத்தில் தான் கேட்கிறேன் என்றதும் பற்றுச்சீட்டைத் தருகிறார். வாங்கிக்கொண்டு போக அறைக்கு எல்லாப் பொதிகளும் வந்துசேர மணி இரவு 12.30. எனக்கே என்னை நினைத்து ஆச்சரியமாக இருக்க, என்னை நானே மெச்சியபடி படுக்கையில் சாய்கிறேன்.
-
தம்பரும் , இரானும் யுத்த நிறுத்தத்திற்கு தயார்
அமெரிக்க - இஸ்ரேலின் இந்த வலிந்த தாக்குதல் மூலம், ஈரான்முன்னரை விட வலிமை பெற்றுள்ளது. இத்த தாக்குதல் மூலம் அதிக நட்டம் அடந்தவர்கள் அரபுஷேக்குகளே ஆகும்.
-
தம்பரும் , இரானும் யுத்த நிறுத்தத்திற்கு தயார்
அடி பணிந்துவிட்டார் ரா 😁
-
தமிழர்களும் சிங்களவர்களும் இன ரீதியில் பொதுவான மூலத்தைக் கொண்டவர்களே - வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு
மணியோசை ஒலிக்குமுன் ஆனை வரும் என அறிவாளன் கணக்கிடுவான்; ஆனால் நம் நாட்டின் மேடையில் மணி உடைந்த பின்னும் "ஆனை வருதா? நரி வருதா?" என அரசர் குழம்பி நிற்பது சிரிப்பை வரவைக்கும். காற்று வீசும் முன்பே மேகம் கருமை தரும்; ஆனால் இங்கோர் சிலர் புயல் வீசி வீடு பறந்த பின்னும் "மழை பெய்யுமோ?" என அருளுரை வழங்குவர். ஆனை வருவதைக் கேட்டு கிராமம் தயார் ஆகும்; ஆனால் அரசியல் மேடையில் ஆனை வந்த பிறகும் "இது ஆனை அல்ல, பெரிய எலி!" என பேச்சால் மட்டும் போராடுவோர் உண்டு. ஓருவரை பின் தொடர விளங்க வேண்டுமல்வா😀
-
“ஈரானுக்கு ரஷ்யா இப்போதும் விசுவாசமான நண்பன், நம்பகமான கூட்டாளி!” - புதின்
அப்பவே யோசிச்சனான் நீங்க சாமியிடம் கேட்டுதான் பதில் போடுவீர்களென😂
-
தம்பரும் , இரானும் யுத்த நிறுத்தத்திற்கு தயார்
ஐக்கிய நாடும், ஈரான் நாடும், கடந்த இரண்டு நாட்களாக மத்திய கிழக்கில் எங்களின் பகைமைகளுக்கு முழுமையான மற்றும் மொத்தமான தீர்வு குறித்து மிகவும் நல்ல மற்றும் பயனுள்ள உரையாடல்களை நடத்தி வருவதாகத் தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஆழமான, விரிவான, ஆக்கபூர்வமான உரையாடல்களின் போக்கையும் நெருக்கடியையும் அடிப்படையாகக் கொண்டு, இவை வாரம் முழுவதும் தொடரும். நடைபெற்று வரும் சந்திப்புகள் மற்றும் விவாதங்களின் வெற்றிக்கு உட்பட்டு, ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளுக்கு எதிரான அனைத்து இராணுவத் தாக்குதல்களையும் ஐந்து நாள் காலத்திற்கு ஒத்திவைக்குமாறு போர் துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இந்த விஷயத்திற்கு நீங்கள் அளித்த கவனத்திற்கு நன்றி! ஜனாதிபதி டொனால்ட் ஜே. ட்ரம்ப் -பிபிசி.com
-
தமிழகத்தில் தத்தளிக்கும் த.வெ.க... அப்போ விஜய்யின் கதி?
தாளம் என்பது எல்லா துறைகளிலும் ஊடுருவி நிற்கும் ஒரு பொதுவான ஒத்திசைவு. அதைப் பற்றி பேசுறவர்கள் சொல்வது போல, உண்மையான புரிதல் காகிதத்தில் எழுதுற ஆய்வில் மட்டும் கிடைக்காது; நேரடியாக களத்தில் நின்று அனுபவித்தால்தான் அதன் நுணுக்கம் தெரியும். அதேபோல, விஜியின் ‘அரிசி’ பற்றிய விளக்கமும் வெறும் கருத்து அல்லது கற்பனை அடிப்படையில் சொல்ல முடியாத ஒன்று. கள ஆய்வாளர்கள் செய்வது போல நேரடியாக அந்த சூழலில் நின்று, அது எப்படி உருவாகிறது, எப்படி செயல்படுகிறது, எந்த சூழலில் என்ன அர்த்தம் கொடுக்கிறது என்பதைப் பார்த்தால்தான் அதன் உண்மையான சாரத்தை விளக்க முடியும். சுருக்கமாக சொன்னால், தாளம் எல்லாவற்றிலும் இருப்பது போல, விஜியின் ‘அரிசி’யையும் நேரடி அனுபவத்தோடு பார்த்தால்தான் அதன் முழு பொருளையும் வெளிப்படுத்த முடியும்.😁
-
“ஈரானுக்கு ரஷ்யா இப்போதும் விசுவாசமான நண்பன், நம்பகமான கூட்டாளி!” - புதின்
ஆம். சாமியார் சொன்னது. 😂
-
“ஈரானுக்கு ரஷ்யா இப்போதும் விசுவாசமான நண்பன், நம்பகமான கூட்டாளி!” - புதின்
உலக அரசியல்னா சதுரங்கம் மாதிரி, யாரை நம்புறது, யாரை விட்டுடுறது, யாரு பின்னால நிக்குறது, யாரு முன்னால விழுறத எல்லாமே சூழ்நிலையோட மாறுறது தான். நம்பகத்தன்மைன்னு ஒரு வார்த்தை இருக்குது, ஆனா அதுக்கு எல்லா நாடுகளும் ஒரே அர்த்தம் குடுக்காது. இன்று தோழன் போல நடக்குறவன், நாளை தன் லாபத்துக்காகவே பாதை மாற்றிக்கலாம், அதுதான் வரலாறு காட்டுற பெரிய பாடம். சில நாடுகள் தங்கள் சக்தியை சத்தமில்லாம நிரூபிக்குறது, சில நாடுகள் சத்தமா பேசுறது, சில நாடுகள் யாரோட சேர்ந்து தான் நிற்குறது, சில நாடுகள் தனியா நிக்குற தைரியம் காட்டுறது. அதுல யாரு பெரியவர், யாரு பலவீனம்னு ஒரு வரியில சொல்ல முடியாத விஷயம். அரசியல் உலகத்துல “நேற்று எதிரி, இன்று கூட்டணி” “நேற்று கூட்டணி, இன்று எதிரி”ன்னு பக்கத்துல பக்கத்துலே எழுதுற மாதிரி தான் நடக்குது. அதனால யாரை நம்பினாலும், யாரை எதிர்த்தாலும், ஒரு நாட்டுக்கு முக்கியம் தன் நிலை, தன் நலன், தன் பாதுகாப்பு. அதை யாரும் அட்சய பாத்திரமா கொடுக்க மாட்டாங்க. மொத்தத்தில் சொல்லப்போனா, உலக அரசியல்னா ஒரு பெரிய காமெடி மேடை, ஆனா அதுல நடக்குற நாடகம் சிரிப்புக்காக இல்ல; ஒவ்வொரு நாட்டுக்கும் உயிர் நிலைக்கு சம்பந்தப்பட்ட விஷயம். தம்பர் என்ன சமாதான புறவா?
-
“ஈரானுக்கு ரஷ்யா இப்போதும் விசுவாசமான நண்பன், நம்பகமான கூட்டாளி!” - புதின்
இந்தத் தாக்குதல் ரஷ்யாவினாலேயே சோடிக்கப்பட்டது என்று ரஷ்யா வெளியிட்ட படத்தை வைத்து அப்போதே செய்திகளில் கேலி செய்யப்பட்டது. முதலில் ரம்பும் இத் தாக்குதலைக் கண்டித்தார் பின்னர் அதனை வாபஸ் பெற்றுக் கொண்டார் என்று ஞாபகம். ரஷ்யாவும் மேற்கொண்டு தாக்குதல் நடந்ததற்கான ஆதாரங்கள் எதையும் வெளியிடாமல் அதனை மறந்து விட்டது. புதின் போரையே விரும்புகிறார் என்பதற்கு இது இன்னொரு சாட்சி.
-
இஸ்ரேல் அணுசக்தி மைய நகர் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: 100-க்கும் மேற்பட்டோர் காயம்!
ஓருவனை அழிக நினைத்தால் அது திருப்பி தாக்கும், அதுவும் விரைவில், நாட்டாமைக்கு கால சரியில்லை
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
லெபனானில் பாலங்களை குறிவைத்து தகர்த்து வரும் இஸ்ரேல்! - என்ன காரணம்?
லெபனானில் பாலங்களை குறிவைத்து தகர்த்து வரும் இஸ்ரேல்! - என்ன காரணம்? Published By: Nanthini 23 Mar, 2026 | 02:59 PM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) லெபனானில் உள்ள குறிப்பிட்ட சில பாலங்களை இஸ்ரேல் இலக்குவைத்து அழித்து வருவதாக சர்வதேச மட்டத்தில் பேசப்பட்டு வருகிறது. தெற்கு லெபனானை மத்திய லெபனானுடன் இணைக்கும் டைர் கடற்கரை நகரத்துக்கு அருகில் உள்ள காஸ்மியே பாலம் Qasmiyeh bridge ஞாயிற்றுக்கிழமை (22) இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பலத்த சேதமடைந்துள்ளது. அதைத் தொடர்ந்து, லிட்டானி ஆற்றின் (Litani river) குறுக்கே உள்ள பாலங்களையும் அழித்து தகர்க்குமாறு இஸ்ரேல் படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரான இஸ்ரேல் கட்ஸ் (Israel Katz) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப் படைக்கு எதிராக தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதல்களை விரிவுபடுத்துவதற்கான திட்டங்களை செயற்படுத்த இஸ்ரேல் இராணுவம் ஒப்புதல் அளித்துள்ளது. லெபனான் மீது ஒரு பெரிய அளவிலான தரைவழித் தாக்குதலை நடத்த இஸ்ரேல் தயாராகி வருவதாக அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஈரான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் இனி வரும் காலங்களில் பாரிய இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லெபனானில் முக்கிய பாலங்களை இஸ்ரேல் இராணுவம் இலக்குவைக்க என்ன காரணம்? லெபனானில் உள்ள பாலங்களை, குறிப்பாக தெற்கில் அமைக்கப்பட்டுள்ள பாலங்களை இஸ்ரேல் குறிவைத்து தகர்ப்பதற்கான பின்னணிக் காரணம் குறித்த பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. இஸ்ரேல் எல்லையிலிருந்து சுமார் 30 கி.மீ தூரத்தில், லெபனானில் உள்ள இந்தப் பாலங்கள் பொது மக்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. லெபனானின் தெற்குப் பகுதியானது ஷியா சமூகத்தினர் மற்றும் ஹிஸ்புல்லா படையினரின் கோட்டையாக கருதப்படுகிறது. அப்பகுதியை அந்நாட்டின் பிற பகுதிகளிலிருந்து பிரித்து, தனிமைப்படுத்தி, அங்கு இஸ்ரேலிய பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்கி, தெற்கை ஆக்கிரமிக்கும் திட்டத்தில் இஸ்ரேல் செயற்பட்டு வருவதாக லெபனான் அஞ்சுகிறது. இது தொடர்பாக லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவ்ன் கூறுகையில், “பாலங்கள் மீதான இஸ்ரேலின் இந்தத் தாக்குதல்கள் தரைவழி ஊடுருவலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உள்ளது. இது பொதுமக்கள் மீதான கூட்டுத் தண்டனை மற்றும் லெபனானில் உள்ள பிரதேசங்களில் இஸ்ரேலின் ஆதிக்கத்தை விரிவுபடுத்துவதற்கான திட்டங்களில் ஒரு பகுதியாக இருக்கக்கூடும்” என்கிறார். லெபனானில் நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களால் அங்கு பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு தெற்கு லெபனானில் இருந்தும் இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் அப்பகுதிக்கு திரும்பாத வகையில், மக்கள் பயன்படுத்தும் பாலங்களை தகர்த்து அழித்து, அவர்களது குடியிருப்புப் பகுதிகளை ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டம் தீட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கட்ஸ் தெரிவிக்கையில், இஸ்ரேல் எல்லைக் கிராமங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை நீக்க, அங்கிருக்கும் வீடுகளை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். அத்துடன் அவர், காசா போரில் ஹமாஸுக்கு எதிராக கையாண்ட முறையையே, அதாவது கட்டடங்களை இடித்து மக்களை வெளியேற்றி பாதுகாப்பு வலயங்களை உருவாக்கிக்கொள்ளும் முறையையே இம்முறை பின்பற்றப்போவதாகவும் கூறினார். லெபனான் சுகாதார அமைச்சின் தகவலின்படி, லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை குறைந்தது 118 குழந்தைகள், 40 சுகாதாரப் பணியாளர்கள் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஒரு பாரிய மனிதாபிமான நெருக்கடியான சூழல் குறித்த பகுதிகளில் உருவாகியுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/241728
-
-
அரபிக்கடலில் பிரித்தானியாவின் அதிநவீன அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் நிலைநிறுத்தம்!
ஒரு காகித புலி மிரட்டலுக்கு அடி பணிந்துவிட்டது🤣
-
தமிழர்களும் சிங்களவர்களும் இன ரீதியில் பொதுவான மூலத்தைக் கொண்டவர்களே - வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு
திராவிட தொப்புள் கொடி பந்தம் இல்லாமலா அனுரா அம்மான் யாழ்பாணத்தில் றோட்டால் சும்மா வாங்கிங் போனாலே ராஐ நடை வீர நடை கம்பீர நடை என்கின்றார்கள்.
-
பாண் உட்பட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு
பாண் உட்பட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு Mar 23, 2026 - 03:01 PM இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின் புதிய விலை 130 ரூபாவாகும் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. மேலும், ஏனைய அனைத்து பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளையும் இன்று நள்ளிரவு முதல் 10 ரூபாவினால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmn2zkaor0002356p2io3ha2b