All Activity
- Past hour
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இறுதிப் போட்டிக்கான, ஆடுதளமும் ஓட்டம் அடிக்கக் கூடிய தளமாம். சிவப்பும் கறுப்பும் கலந்து செய்த தளம். 200க்கு மேல அடிக்க வேணும் போல. அங்கால பிஃன் அலனும் இங்கால சஞ்சு சாம்சனும். யார் சாதிக்கப் போகினம்.
-
'இந்தியா ரஷ்யாவிடம் 30 நாள் கச்சா எண்ணெய் வாங்கலாம்' - அமெரிக்கா கூறியது என்ன?
ரம்பை நெத்தன்யாகு வழி நடத்துகிறார். மோடியை ரம் வழி நடத்துகிறார்.
-
இந்திய கடற்படையின் பயிற்சி பாய்மரக் கப்பல் ஐ.என்.எஸ். தரங்கினி இலங்கை வருகை
இதன் பலாபலன் தானே இந்திய கப்பல் பற்றி எரிகிறது. முதுகில் குத்துவது எப்படி என்று இந்தியாவுக்கு சொல்லியா கொடுக்க வேண்டும்.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
பெரியாரிஸ்டுக்கும் ஏத்திவிட அடுத்தவர் முனைந்திருப்பர் இல்லையா? அப்படி தெரியவில்லை. இங்கே அந்தப் பெண்ணை திரும்ப திரும்ப ஏற்றிவிடுகிறார்கள் என்பதை சொல்ல வந்தேன்.
-
யாழ் மத்திய கல்லூரி – யாழ் பரியோவான் கல்லூரி மோதும் வடக்கின் போர் விரைவில் !
இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியில் விளையாடும் குறிப்பிட்ட இந்த பாடசாலை வீரர்கள் இந்த போட்டியில் பங்குபற்றவில்லையோ?
- Today
-
ஈரானிய கடற்படை பணியாளர்களை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்த இலங்கை கடற்படை
உங்கள் படையால் அதை தடுத்து நிறுத்த முடியாதோ? உலக நாடுகளுக்கு பயங்கரவாதத்தை எப்படி வெற்றிகொள்வது என்று பாடம் நடத்திய படையல்லவா உங்கள் படை. எல்லா நாடுகளிடமும் உதவி வேண்டி சொந்த மக்களின் சுதந்திர போராட்டத்தை நசுக்கினீர்கள், இப்போ நீங்கள் நசுங்குங்கோ! உங்கள் வாயே உங்களுக்கு எதிரி.
-
எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு திட்டமிட்டது – அசேல சம்பத் குற்றச்சாட்டு
எப்படி இவர் இவ்வளவு உறுதியாக சொல்கிறார்? தங்களது கடந்தகால அனுபவம் இப்போ இப்படி மாற்றி பேசுகிறது! அன்று அவர்களை கைது செய்து நிரூபித்திருக்கலாமே, அதிகாரம் உங்கள் கையிற் தானே இருந்தது. ஏன் செய்யவில்லை? "வேண்டாப்பெண்டாட்டி கைபட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம் இவர்களுக்கு."
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
இதை எல்லாம் நீதி விசாரணையில் எல்ஸ்சிபிட் ஆக சேர்த்திருக்க வேண்டும். விஜி அண்ணியிடம் கேள்வி கேட்க. அதேபோல் 50,000 ரூபா கொடுத்து சீமானின் மனைவி போல் விஜி பேசி ஆடியோ அனுப்ப சொல்லி சீமான் கேட்டபோது, அவருக்கு கயல் அண்ணியுடன் திருமணம் ஆகி விட்டது. கயல் அண்ணியுடன் வாழ்ந்து கொண்டு விஜி அண்ணிக்கு ஏன் பணம் கொடுத்தார், இப்படி ஆடியோ கேட்டார் என்பதும் சீமானிடம் கேட்க படவேண்டிய கேள்வி. ஆனால் விஜி அண்ணிக்கு விலைமாது, விசரி என பட்டம் கட்டி, மெட்டிராஸ் ஹைகோர்ட் விசாரிக்க சொன்ன வழக்கை, சுப்ரீம் கோர்ட்டுக்கு போய், பிஜேபி வக்கீலை வைத்து சீமான் அடித்து நூத்து விட்டதால் சீமானின் மீதான விசாரணை அப்படியே புதைக்கப்பட்டு விட்டது.
-
ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பை நிறுத்து! கொழும்பில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம்
சொந்த நாட்டில், ஒரே மொழி பேசும், ஓர் இனமக்கள் வகைதொகையின்றி கொல்லப்படும்போது முட்டுக்கொடுத்தவர்கள், பால்சோறு உண்டு மகிழ்ந்தவர்கள், அதற்கு எதிராக குரல் கொடுக்க மறுத்தவர்கள், அதை நிஞாயப்படுத்தியவர்கள், எங்கோ இருக்கும் ஈரானுக்காக போராடுகிறார்கள் இது விந்தையே. சமாதானத்திற்காக போராடுபவர்கள், அநிஞாயத்திற்கு எதிராக குரல் எழுப்புபவர்கள் எங்கே அநிஞாயம் நடந்தாலும் பேதமின்றி இனம், இடம், மதம், மொழி, அந்தஸ்து, சந்தர்ப்பம், சொந்த ஆதாயம், விருப்பு வெறுப்பு எல்லாம் பார்த்து குரல் கொடுப்பதில்லை. அப்படியான குரல்களுக்கு வரவேற்புமில்லை. இது வெறும் கூக்குரல். சந்தர்ப்பவாத அரசியல் வியாதி. அன்று தமது பக்கத்தை நிஞாயப்படுத்த நட்பு நாடென்றார், இன்று அனுராவை பயமுறுத்தி பின்வாங்கச்செய்ய இப்படிச்சொல்கிறார். அன்று இவர்களுக்கு உதவிக்கரம் கொடுத்தவர்களை இன்று கைவிடச்சொல்கிறார். பக்கா சுயநலவாதி. இவரை தொடர்ந்து பல அரசியல் வியாதிககளின் சுயநல எச்சரிக்கைகள் கிளம்பும்!
- Yesterday
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
தரலாம். நீங்கள் பிழை என நிறுவி விட்டேன் என்றால் என்ன செய்வீர்கள்.
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
வேலையிடத்து பெண் ஒருவர் தனது நாய் குட்டி போட்ட இரு குட்டிகளுக்கு பெயர் வைக்க சொல்லி ஒரே அலுப்பு. எனக்கு நாய் எண்டால் கண்ணில காட்டேலாது. பிரளயகிருமி, விபிலிய கிருமி எனும் பெயர்களை பரிந்துரைக்கவுள்ளேன். பிகு சொற்களை ஆக்கவில்லை. எகிப்தில் எழுதிய சிகை கொற்றன் காலத்து சொற்கள் இவை. கால இயந்திரத்தில் அங்கே இருந்து இங்கே வந்து எழுதுவதால் சில சமயம் அந்த சொற்கள் வந்து விழுகிறன.
-
ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பை நிறுத்து! கொழும்பில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம்
ஈரானியர்களை கொன்று குவித்த கொடுங்கோல் தலைவன் கொல்லபட்டதை ஈரான் மீதான அமெரிக்க இஸ்ரேல் தாக்குதல்களை உலகம் முழுவதும் வசிக்கின்ற ஈரானியர்கள் கொண்டாடி மகிழ்கின்றார்கள் ஆனால்இலங்கையில் இப்படி நடைபெறுவது அவமானம்
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
நான் இந்த படத்தை பார்த்துவிட்டு இது ஏதோ பழைய படம் என்று நினைத்து விட்டேன் இப்போ தான் நண்பர்கள் சொன்னார்கள்சில நாட்களுக்கு முன்பு இருவரும் ஒரே நிறத்தில் பொருத்தமான உடை அணிந்து ஜோடியாக கலந்து கொண்ட படம் தான் அது என்று சங்கீதாவுக்கு நீதி வேண்டும் 😟
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
குர்திஷ் இனம் எங்கும் எப்போதும் நடுத்தெருவில் விடப்பட்டதகாவே வரலாறு சொல்கின்றது. நேட்டோவில் இருக்கும் துருக்கி குர்திஷ் இனத்திற்கு விடுதலை கொடுக்க இடையூறு செய்து கொண்டே இருக்கும்.ஏனெனில் துருக்கி வன்மம் கொண்ட நாடு. வன்மம் பொல்லாதது.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
ஆதாரங்களை தரவும்...காத்திருக்கின்றேன்.
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
தாம் நாகரீகமானவர்கள் என கூறும் மேற்கத்தையவர்கள் தான் நாடு விட்டு பிற நாடுகளுக்கு சென்று போர் செய்கின்றார்கள். கொரோனா பரவலுடன் எல்லா நாடுகளும் மக்களும் வலுவிழந்து விட்டார்கள். போதாக்குறைக்கு உக்ரேன் போரும் வர அனைத்து மனித வாழ்க்கையும் அதள பாதாளத்திற்கு சென்று விட்டது. கொடுமைக்கு மேல் கொடுமையாக தற்போது ஈரான் மீதான போர். அதை விட கொடுமை என்னவென்றால் ஈரான் போர் நடக்க ஆரம்பிக்க ஜேர்மனியில் கையிருப்பில் இருக்கும் எரிபொருட்களின் விலையையே கூட்டி விட்டார்கள்.😋 இனிவரும் காலங்களில் என்னென்ன கொடுமைகளை சந்திக்கப்போகின்றமோ கடவுளுக்குத்தான் வெளிச்சம். போர்களும் அதற்க்குரிய காரணங்களும் மூட நம்பிக்கைகைகளை விட கொடியது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்தியணியில் மாற்றம் இருக்காது எனவே நினைக்கிறேன்.
-
ஆமென்! - மத்திய கிழக்கு போர்க் குறிப்பு
தெக்ரான் ஆராய்ச்சி கல்லூரி மருத்துவ பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதற்காக என IAEA இடம் கூறியதாக வாசித்த நினைவுள்ளது. அணுசக்தி நிர்முழ்கி எத்தனை ஈரான் வைத்துள்ளது என தெரியாது. சர்வதேச அணுசக்தி ஆணையகம் ஈரான் அணுகுண்டு தயாரிப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளது, இது வரை எந்த வித ஆதாரமும் அணுவாயுதம் செய்வதற்கானதாக கூறப்படவில்லை எனும் நிலையில் அணுவாயுதத்திற்காகவே 60% செறிவாக்கப்பட்ட யுரேனியம் ஈரான் கொண்டுள்ளது என கூறமுடியாதல்லவா அதற்காகக்கூறினேன். அது எனது நொண்டிச்சாட்டு இல்லை, அது ஈரானின் நொண்டிச்சாட்டாகும் (நானும் மறுதலிக்கவில்லை ஈரானால் அணுகுண்டு தயாரிக்க முடியும் என்பதனை). ஈரான் அணுகுண்டை தயாரிப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று IAEA கூறுகிறது. 3 கருத்துகள் மார்ச் 4, 2026 காலை 9:37 மணிக்கு மார்ச் 02, 2026 அன்று ஆஸ்திரியாவின் வியன்னாவில் ஈரானை குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் குறித்த ஆளுநர்கள் குழு கூட்டத்திற்குப் பிறகு, சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர் ஜெனரல் ரஃபேல் மரியானோ க்ரோசி ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது ஒரு அறிக்கையை வழங்குகிறார். [சாலிஹ் ஒகுரோக்லு - அனடோலு ஏஜென்சி] சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) தலைவர் ரஃபேல் க்ரோஸி, ஈரான் தற்போது அணுகுண்டை உருவாக்கி வருவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ள அதே வேளையில், தெஹ்ரானின் அணுசக்தி திட்டத்தைச் சுற்றியுள்ள தீர்க்கப்படாத பிரச்சினைகள் ஒரு தீவிரமான கவலையாகவே உள்ளன என்றும் எச்சரித்துள்ளார். செவ்வாய்க்கிழமை மாலையில் வெளியிடப்பட்ட கருத்துக்களில் பேசிய க்ரோஸி, ஈரானிடம் ஏராளமான செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பு உள்ளது என்றும், அது ஆயுத தரத்திற்கு நெருக்கமான அளவை எட்டியுள்ளது என்றும் கூறினார். இருப்பினும், ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கி வருவதற்கான ஆதாரத்தை அந்த நிறுவனம் கண்டுபிடிக்கவில்லை என்று அவர் வலியுறுத்தினார். சர்வதேச ஆய்வாளர்களுக்கு முழு அணுகலை வழங்க ஈரான் மறுப்பது நிறுவனத்திற்குள் கவலைகளை அதிகரித்துள்ளது என்று க்ரோஸி குறிப்பிட்டார். நிலுவையில் உள்ள கேள்விகளுக்கு தீர்வு காண்பதில் தெஹ்ரானின் ஒத்துழைப்பு இல்லாமல், ஈரானின் அணுசக்தி திட்டம் முற்றிலும் அமைதியானது என்பதற்கான உத்தரவாதங்களை IAEA வழங்க முடியாது என்று அவர் எச்சரித்தார். படிக்க: டிரம்ப் வர்த்தக உறவுகளை துண்டிப்பதாக அச்சுறுத்தியதை அடுத்து, அமெரிக்கா சர்வதேச சட்டத்தை மதிக்க வேண்டும் என்று ஸ்பெயின் கூறுகிறது கடந்த சனிக்கிழமை ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே பகைமை வெடித்ததைத் தொடர்ந்து அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த கருத்துக்கள் வந்துள்ளன. அணுசக்தி திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஒரு உடன்பாட்டை எட்டத் தவறியதைத் தொடர்ந்து இது தூண்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. மோதல் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பு, ஓமானின் வெளியுறவு அமைச்சர் பத்ர் அல்-புசைடி, ஈரான் கொள்கையளவில், தொடர்ச்சியான இராஜதந்திர விவாதங்களின் ஒரு பகுதியாக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தக்கவைத்துக் கொள்ள மாட்டோம் என்று ஒப்புக்கொண்டதாகக் கூறினார். அல்-புசைடியின் கூற்றுப்படி, இந்த திட்டத்தில் செறிவூட்டப்பட்ட பொருட்களைக் கைவிடுவதும், எந்த அணு எரிபொருளும் சேமித்து வைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதும், சரிபார்ப்பு வழிமுறைகள் நடைமுறையில் இருப்பதும் அடங்கும். இருப்பினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் யுரேனியத்தை வளப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தினார், ஆயுத தரத்திற்குக் குறைவான அளவுகள் உட்பட, தெஹ்ரான் செறிவூட்டல் நடவடிக்கைகளை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்ற வாஷிங்டனின் நீண்டகால கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார். https://www.middleeastmonitor.com/20260304-iaea-says-no-evidence-iran-is-building-a-nuclear-bomb/
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
https://www.youtube.com/shorts/YKidy_1tVu8
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்திய அணியில் மாற்றம் இருக்குமா. அபிஸேக்கும் வருணும் சிறப்பாகச் செய்யாத படியால், ஏதாவது மாற்றம் இருக்குமா. நியுசிலாந்து அணியில் மாற்றம் இருக்காது
-
யாழ் மத்திய கல்லூரி – யாழ் பரியோவான் கல்லூரி மோதும் வடக்கின் போர் விரைவில் !
என்ன பெயரை இப்படி எழுதி உள்ளார்கள்?
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
பா ரவீந்திரனுடன் ஒப்பிடும் போது கடஞ்சா புதிய சொற்கள் ஆக்கி தமிழுக்கு வளம் சேர்க்கிறார் என ஒப்புக் கொள்கிறேன். ரவீந்திரன் போன்ற மேற்கு எதிர்ப்பு சம்பெயின் செஞ்சட்டைக் காரர்கள், "காலனியம், நவ காலனியம், சுரண்டல், பிறாண்டல்" என்று ஒரே சொற்களை வைத்தே பக்கங்களை நிரப்பி விடுவர்! creativity இல்லாத ஆட்கள்!
-
ஆமென்! - மத்திய கிழக்கு போர்க் குறிப்பு
மருத்துவத்திற்குத் தேவையான கதிரியக்கப் பொருட்களைத் (radioisotopes) தயாரிக்க 60% செறிவாக்கிய யுரேனியம் தேவை என்று ஈரான் சொல்லியிருக்கிறதா? அல்லது தான் அப்படிப் பயன்படுத்துவதாக ஆதாரம் காட்டியிருக்கிறதா? இல்லை. ஏனெனில், NPT விதிகளுக்கேற்ப மருத்துவத் தேவைகளுக்குரிய யுரேனியம் செறிவாக்கல் 20% இற்கும் குறைவாகத் தான் இருக்க வேண்டும். உலகம் முழுவதும் NPT இல் கையெழுத்திட்ட நாடுகள் ~3% செறிவாக்கலைத் தான் இதற்கெனப் பயன்படுத்துகிறார்கள். இது நீங்கள் ஈரானுக்கு எடுத்துக் கொடுக்கும் ஒரு நொண்டிச் சாட்டு என நினைக்கிறேன்😂. ஆனால், விஞ்ஞான ரீதியான சாட்டு அல்ல. அணுசக்தி நீர் மூழ்கிக்குள் பொருத்தப் படும் அணுசக்திப் பிறப்பாக்கி சிறியது என்பதால், 60% செறிவாக்கிய யுரேனியம் தேவைப் படும். ஈரானிடம் எத்தனை அணுசக்தி நீர்மூழ்கிகள் அல்லது கப்பல்கள் இருக்கின்றன? ஒரு தடவை தேடிப் பார்த்து விட்டுச் சொல்லுங்கள்!
-
ஆமென்! - மத்திய கிழக்கு போர்க் குறிப்பு
மருத்துவ, அணுசக்தியில் இயங்கும் இயந்திரம் போன்ற பயன்பாட்டிற்கும் 60% செறிவாக்கல் உதவுகிறது.
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
யாரோ இருவரின் சண்டைக்குள் எங்களை இழுத்துவிடாமல் இருப்பது நல்லது!