Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. பையன் சார், நீங்கள் நலமா? எனக்கு ஒரே வேலை. தை மாதம் தொடங்கி சித்திரை மாதம் வரை இங்கு அமெரிக்காவில் வரி கட்டும் காலம். என்னுடைய வேலையும் அது சம்பந்தப்பட்டதே. அரசாங்கம் இந்த வருடம் கடைசி நேரத்தில் சில மாற்றங்களை செய்துள்ளார்கள். சித்திரைக்கு பின் தான் நித்திரையே கொள்ளலாம் போல உள்ளது..................🤣.
  3. 1) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), நெதர்லாந்து எதிர் பாகிஸ்தான் PAK 2) முதல் சுற்று குழு C:சனி 07 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் WI 3) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 1:30 PM, வாங்கெடே, இந்தியா எதிர் ஐக்கிய அமெரிக்கா IND 4) முதல் சுற்று குழு D:ஞாயிறு 08 பெப்: 5:30 AM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து AFG 5) முதல் சுற்று குழு C:ஞாயிறு 08 பெப்: 9:30 AM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் நேபாளம் NEP 6) முதல் சுற்று குழு B:ஞாயிறு 08 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் அயர்லாந்து SL 7) முதல் சுற்று குழு C:திங்கள் 09 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இத்தாலி ITA 8) முதல் சுற்று குழு B:திங்கள் 09 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), ஓமான் எதிர் ஸிம்பாப்வே ZIM 9) முதல் சுற்று குழு D:திங்கள் 09 பெப்: 1:30 PM, அஹமதாபாத், கனடா எதிர் தென்னாபிரிக்கா SA 10) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 5:30 AM, டெல்லி, நமீபியா எதிர் நெதர்லாந்து NED 11) முதல் சுற்று குழு D:செவ்வாய் 10 பெப்: 9:30 AM, சென்னை, நியூஸிலாந்து எதிர் ஐக்கிய அமீரகம் NZ 12) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 1:30 PM, கொழும்பு (SSC), பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அமெரிக்கா PAK 13) முதல் சுற்று குழு D:புதன் 11 பெப்: 5:30 AM, அஹமதாபாத், ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா SA 14) முதல் சுற்று குழு B:புதன் 11 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் அயர்லாந்து AUS 15) முதல் சுற்று குழு C:புதன் 11 பெப்: 1:30 PM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் WI 16) முதல் சுற்று குழு B:வியாழன் 12 பெப்: 5:30 AM, பல்லேகல, சிறிலங்கா எதிர் ஓமான் SL 17) முதல் சுற்று குழு C:வியாழன் 12 பெப்: 9:30 AM, வாங்கெடே, இத்தாலி எதிர் நேபாளம் ITA 18) முதல் சுற்று குழு A:வியாழன் 12 பெப்: 1:30 PM, டெல்லி, இந்தியா எதிர் நமீபியா IND 19) முதல் சுற்று குழு B:வெள்ளி 13 பெப்: 5:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் ஸிம்பாப்வே AUS 20) முதல் சுற்று குழு D:வெள்ளி 13 பெப்: 9:30 AM, டெல்லி, கனடா எதிர் ஐக்கிய அமீரகம் UAE 21) முதல் சுற்று குழு A:வெள்ளி 13 பெப்: 1:30 PM, சென்னை, நெதர்லாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா USA 22) முதல் சுற்று குழு B:சனி 14 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), அயர்லாந்து எதிர் ஓமான் IRE 23) முதல் சுற்று குழு C:சனி 14 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இங்கிலாந்து ENG 24) முதல் சுற்று குழு D:சனி 14 பெப்: 1:30 PM, அஹமதாபாத், நியூஸிலாந்து எதிர் தென்னாபிரிக்கா SA 25) முதல் சுற்று குழு C:ஞாயிறு 15 பெப்: 5:30 AM, வாங்கெடே, நேபாளம் vd மேற்கிந்தியத் தீவுகள் WI 26) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 9:30 AM, சென்னை, நமீபியா எதிர் ஐக்கிய அமெரிக்கா USA 27) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), இந்தியா எதிர் பாகிஸ்தான் IND 28) முதல் சுற்று குழு D:திங்கள் 16 பெப்: 5:30 AM, டெல்லி, ஆப்கானிஸ்தான் எதிர் ஐக்கிய அமீரகம் AFG 29) முதல் சுற்று குழு C:திங்கள் 16 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், இங்கிலாந்து எதிர் இத்தாலி ENG 30) முதல் சுற்று குழு B:திங்கள் 16 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் சிறிலங்கா SL 31) முதல் சுற்று குழு D:செவ்வாய் 17 பெப்: 5:30 AM, சென்னை, கனடா எதிர் நியூஸிலாந்து NZ 32) முதல் சுற்று குழு B:செவ்வாய் 17 பெப்: 9:30 AM, பல்லேகல, அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே IRE 33) முதல் சுற்று குழு C:செவ்வாய் 17 பெப்: 1:30 PM, வாங்கெடே, ஸ்கொட்லாந்து எதிர் நேபாளம் SCOT 34) முதல் சுற்று குழு D:புதன் 18 பெப்: 5:30 AM, டெல்லி, தென்னாபிரிக்கா எதிர் ஐக்கிய அமீரகம் SA 35) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), நமீபியா எதிர் பாகிஸ்தான் PAK 36) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 1:30 PM, அஹமதாபாத், இந்தியா எதிர் நெதர்லாந்து IND 37) முதல் சுற்று குழு C:வியாழன் 19 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், இத்தாலி எதிர் மேற்கிந்தியத் தீவுகள் WI 38) முதல் சுற்று குழு B:வியாழன் 19 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் ஸிம்பாப்வே SL 39) முதல் சுற்று குழு D:வியாழன் 19 பெப்: 1:30 PM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் கனடா AFG 40) முதல் சுற்று குழு B:வெள்ளி 20 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS முதல் சுற்று குழு A: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND IND PAK PAK USA NED NAM 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு A: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக IND குழு A: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக PAK 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! NAM முதல் சுற்று குழு B: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS AUS SL SL IRE ZIM OMA 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு B: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக SL குழு B: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக AUS 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! OMA முதல் சுற்று குழு C : 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG ENG WI WI SCOT NEP ITA 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு C: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக WI குழு C: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக ENG 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! SCOT முதல் சுற்று குழு D : 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ SA SA AFG AFG CAN UAE 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு D: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக SA குழு D: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக AFG 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! CAN சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை. 53) சுப்பர் 8: குழு 2:சனி 21 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y3 AFG 54) சுப்பர் 8: குழு 2:ஞாயிறு 22 பெப்: 9:30 AM, பல்லேகல, Y1 எதிர் Y4 SL 55) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 22 பெப்: 1:30 PM, அஹமதாபாத், X1 எதிர் X4 IND 56) சுப்பர் 8: குழு 1:திங்கள் 23 பெப்: 1:30 PM, வாங்கெடே, X2 எதிர் X3 AUS 57) சுப்பர் 8: குழு 2:செவ்வாய் 24 பெப்: 1:30 PM, பல்லேகல, Y1 எதிர் Y3 PAK 58) சுப்பர் 8: குழு 2:புதன் 25 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y4 AFG 59) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 9:30 AM, அஹமதாபாத், X3 எதிர் X4 SA 60) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 1:30 PM, சென்னை, X1 எதிர் X2 IND 61) சுப்பர் 8: குழு 2:வெள்ளி 27 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y1 எதிர் Y2 AFG 62) சுப்பர் 8: குழு 2:சனி 28 பெப்: 1:30 PM, பல்லேகல, Y3 எதிர் Y4 SL 63) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 9:30 AM, டெல்லி, X2 எதிர் X4 AUS 64) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ், X1 எதிர் X3 IND சுப்பர் 8 குழு 1: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) X1 IND X2 AUS X3 X4 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 1: முதலிடம் - ? (3 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக IND சுப்பர் 8: குழு 1: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக AUS 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! WI சுப்பர் 8 குழு 2: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) Y1 Y2 AFG Y3 Y4 SL 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 2: முதலிடம் - ? (3 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக AFG சுப்பர் 8: குழு 2: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக SL 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! ENG அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: புதன் 04 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ்/கொழும்பு (RPS), IND 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் 05 மார்ச்: 1:30 PM, வாங்கெடே, AUS இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு 08 மார்ச்: 1:30 PM, அஹமதாபாத்/கொழும்பு (RPS) அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி IND உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) IND 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) NAM 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Suryakumar Yadav 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Kuldeep Yadav 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Travis Head 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS 82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Kuldeep Tadav 83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Suryakumar Yadav 85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND மிக்க நன்றி @கிருபன் . தாமதத்திற்கு மன்னிக்கவும். ஆப்கான் மக்கள் பட்ட/படும் கஷ்டத்திற்காக அந்த அணிக்கு நிறைய வெற்றிகள் வர வேண்டும் என்று பிரார்த்திக் கொண்டே என்னுடைய தெரிவுகளைப் போட்டிருக்கின்றேன்.................................👍.
  4. அவரை சரியா எழுதித்தர சொல்லுங்கள் கிருபன் . ...... இவர் அப்படி இப்படி எழுதி உங்களையும் குழப்பி அநியாயத்துக்கு 5 க்குள் வரப்போகிறார் . .......!
  5. Today
  6. இது வரைக்கும் கணக்கு போட்டு எழுதி என்னத்த கிழிச்சிட்டம்😂. அதனால இந்த முறை டக்கிடிக்கிடோஸ் முறையை பயன்படுத்தினேன்😂. ஓ எல், ஏ எல் நேரம் எல்லாம் எம் சி கியூவில் கைகொடுத்தது😂. பாவம் எ.பொ.த என் பதிலை கண்டு முடிய பிச்சிக்காத குறை😂. நடக்கும் என்பார் நடக்காது… நடக்காதென்பார் நடந்து விடும்.…😂
  7. அவர்களின் குணம், மமதை. தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற அகங்காரம். ஆனால், எல்லா தகிடுதித்தமும் செய்வாங்கள்.
  8. என்ன சொல்லுறீங்க. என்னத்தச் சொல்லுறீங்க. அப்பிடியும் நடக்குமா.😁🤣😂
  9. @goshan_che பதில்கள் இடையில் அப்படி இப்படி உள்ளன 😆 ஆனால் அப்படியே தரவேற்றியுள்ளேன். வெற்றிபெற வாழ்த்துக்கள்
  10. 2026ல் 1500 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் பலகைகள்; பெற்றோரிடம் பணம் சேகரிக்க வேண்டாம் - பிரதமர் ஹரிணி அமரசூரிய 05 Feb, 2026 | 02:53 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) 2026 ஆம் ஆ ண்டு முதற்கட்டமாக 1500 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் பலகைகள் வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் பலகைகளுக்காக பெற்றோரிடம் பணம் சேகரிக்க வேண்டாம் என்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே பணம் சேகரிக்கும் நடவடிக்கைகளை நிறுத்துங்கள் என்று பகிரங்கமாக குறிப்பிட்டுக் கொள்கிறேன்.சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போலிச் செய்திகள் மற்றும் வதந்திகளுக்கு முன்னுரிமை வழங்கி கேள்விகளை கேட்க வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவரிடம் தயவுடன் கேட்டுக் கொள்கிறேன் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) நடைபெற்ற அமர்வின் போது எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, இலவச கல்வி குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அக்கறை கொண்டுள்ளதையிட்டு பெரும் மகிழ்ச்சியடைகிறேன். எதிர்க்கட்சித் தலைவர் கடந்த காலங்களில் இவ்வாறான கொள்கையை கொண்டிருக்கவில்லை. தற்போது மாற்றமடைந்துள்ளதையிட்டு அவருக்கு நன்றித் தெரிவித்துக் கொள்கிறேன். சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போலிச் செய்திகள் மற்றும் வதந்திகளுக்கு முன்னுரிமை வழங்கி கேள்விகளை கேட்க வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவரிடம் தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்.ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பீடத்தை மூடுவதற்கும், கம்பஹா விக்கிரமராராச்சி பல்கலைக்கழகத்தை மூடுவதற்கும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. முறையான வழிமுறைகள் மற்றும் வளங்கள் இல்லாமலேயே கம்பஹா விக்கிரமராராச்சி பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. இதனால் அங்கு கல்வி பயிலும் மாணவர்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.இது குறித்து ஆராய்வதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த ஆண்டு முதற்கட்டமாக 1500 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் பலகைகள் வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் பலகைகளுக்காக பெற்றோரிடம் பணம் சேகரிக்க வேண்டாம் என்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே பணம் சேகரிக்கும் நடவடிக்கைகளை நிறுத்துங்கள் என்று பகிரங்கமாக குறிப்பிட்டுக் கொள்கிறேன். https://www.virakesari.lk/article/237890
  11. க .பொ.த சாதாரண தரப் பரீட்சையை பெப்ரவரி 17 முதல் 26 வரை நடத்துவதற்குக் தயார் - கல்வி அமைச்சர் 05 Feb, 2026 | 05:35 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) 2025 ஆண்டுக்கான க .பொ.த சாதாரண தரப் பரீட்சையைப் பெப்ரவரி 17 முதல் 26 வரை நடத்துவதற்குத் தயாராக உள்ளோம். இக்காலப்பகுதி ரமழான் பெருநாள் காலப்பகுதியாக இருப்பினும், அது பரீட்சையை நடத்துவதற்குத் தடையாக இருக்காது எனச் சம்பந்தப்பட்ட தரப்பினர் அறிவித்துள்ளனர் என கல்வி மற்றும் பிரதமர் அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (5) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, பாடசாலை மாணவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற அரசாங்கத்தின் கொள்கை ரீதியான முடிவுகளின்படி பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பாடப்புத்தகங்கள், சீருடைகள் மற்றும் 'சுரக்ஷா' காப்புறுதி என்பவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலதிகமாக,6-13 தரங்களில் பயிலும் மாணவிகளுக்குத் தேவையான சானிட்டரி நாப்கின் கொள்வனவு செய்ய வவுச்சர்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 'அஸ்வெசும' நன்மைகளைப் பெறாத மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இதனை மேலும் விரிவுபடுத்துவதற்காகத் தேவையான தரவுகளைத் திரட்டி வருகின்றது. 2025 ஆண்டுக்கான .பொ.த சாதாரண தரப் பரீட்சையைப் பெப்ரவரி 17 முதல் 26 வரை நடத்துவதற்குத் தயாராக உள்ளோம். இக்காலப்பகுதி ரமழான் பெருநாள் காலப்பகுதியாக இருப்பினும், அது பரீட்சையை நடத்துவதற்குத் தடையாக இருக்காது எனச் சம்பந்தப்பட்ட தரப்பினர் அறிவித்துள்ளனர். புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னதாகவும் , க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை டிசம்பர் மாதத்திலும் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டிலிருந்து உரிய கால அட்டவணைப்படி பரீட்சைகளை நடத்த முயற்சித்து வருகிறோம் என்றார். https://www.virakesari.lk/article/237927
  12. தனியார் பேருந்துத் துறையின் 30 ஆண்டு சட்டச் சிக்கலுக்கு தீர்வு – அமைச்சர் பிமல் ரத்நாயக்க 05 Feb, 2026 | 02:52 PM நாட்டின் தனியார் பேருந்துத் தொழில்துறையினர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்கொண்டு வந்த மிகப்பாரிய சட்டச் சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய, 2026 ஜனவரி 17ஆம் திகதியிடப்பட்ட 2471/68 இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பயணிகள் சேவை அனுமதிப்பத்திர ஒழுங்குவிதிகள் இதற்கான அவசியமான சட்ட ஏற்பாடுகளை வழங்குகின்றன. இந்த புதிய விதிமுறைகளின் கீழ் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை இரு தரப்பினரும் பூர்த்தி செய்யும் பட்சத்தில் பேருந்து உரிமையாளர்கள் தமது போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களை மற்றுமொருவருக்கு சட்டபூர்வமாக கைமாற்ற முடியும் என அவர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். போக்குவரத்து அமைச்சின் காரியாலயத்தில் நேற்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் விளக்குகையில் 1991ஆம் ஆண்டின் 38ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களை வைத்திருப்பவர்கள் அவற்றை சட்டபூர்வமாக வேறொருவருக்கு மாற்ற முடியாது. கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நிலவி வந்த சட்டதிட்டங்களின்படி ஒருவருக்கு வழங்கப்பட்ட பேருந்து அனுமதிப்பத்திரத்தை சட்டபூர்வமாக வேறொருவருக்குப் பெயரிடவோ அல்லது விற்பனை செய்யவோ முடியாது இருந்தது. இதனால் பேருந்து உரிமையாளர்கள் இத்தொழிலிலிருந்து விலகும்போதும் பேருந்தை விற்பனை செய்யும்போதும் அந்த அனுமதிப்பத்திரத்தை மாற்ற முடியாமல் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர். இதன் விளைவாக திரைமறைவில் பல்வேறு சட்டவிரோத முறைகள் ஊடாக அனுமதிப்பத்திரங்கள் கைமாற்றப்பட்டு வந்தன. உண்மையான உரிமையாளர் ஒருவராகவும் தொழிலை நடத்துபவர் வேறொருவராகவும் இருந்தமையால் இத்துறையில் ஒழுக்கத்தைப் பேணுவதில் பாரிய சவால்கள் காணப்பட்டன. பேருந்து உரிமையாளர் சங்கங்களுடன் நாம் நடத்திய தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் அவர்களது பிரதான கோரிக்கையான அனுமதிப்பத்திர மாற்றத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய 2026 ஜூன் மாதம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு தற்போது 2471/68 இலக்க அதிவிசேட வர்த்தமானி ஊடாக அதற்கான சட்ட ரீதியான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இனிவரும் காலங்களில் உரிய நிபந்தனைகளின் கீழ் எவரும் தமது அனுமதிப்பத்திரத்தை சட்டபூர்வமாக மற்றுமொருவருக்குப் பெயரிட முடியும். இனிவரும் காலங்களில் இத்துறைக்குள் நுழைவதற்கு அரசியல் செல்வாக்குகளோ தனிப்பட்ட அறிமுகங்களோ அல்லது கடிதங்களோ அவசியமில்லை. எவரும் பகிரங்க கேள்விப்பத்திர நடைமுறைகளைப் பின்பற்றி இத்தொழிலுக்கு வர முடியும். ஊழல் மற்றும் மோசடிகளற்ற ஒரு போக்குவரத்து சேவையை உருவாக்குவதே எமது இலக்காகும். குறிப்பாக நவீன தொழில்நுட்ப அறிவைக் கொண்ட இளைஞர்கள் மற்றும் புதிய முதலீட்டாளர்கள் இத்துறைக்கு வர வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம். இந்த புதிய சட்ட நடைமுறையானது இலங்கையின் பயணிகள் போக்குவரத்துத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என நான் நம்புகின்றேன். என அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/237889
  13. கதையை கிளுகிளுப்புக் கதை என்று படிக்காமல் இருந்தால் சரி 🆗
  14. ‘Rebuilding Sri Lanka’ நிதியத்துக்கு First Capital Holdings PLCஇனால் நிதி நன்கொடை 05 Feb, 2026 | 12:27 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான, அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்துக்கு First Capital Holdings PLCஇனால் 15 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை First Capital Holdings PLCஇன் முகாமைத்துவப் பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி தில்ஷான் வீரசேகர, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார். First Capital Holdings PLC பணிப்பாளர்கள் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தி ரந்தினித் மதநாயக்க மற்றும் திலுனி தனுஷிகா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/237875
  15. 'தேனில் உருவாகும் நச்சு' - குழந்தைகளுக்கு தேன் கொடுக்கலாமா? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் மோகன் பிபிசி தமிழ் 25 ஜனவரி 2026 புதுப்பிக்கப்பட்டது 30 ஜனவரி 2026 கடந்த டிசம்பர் மாதம் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த நிதின் பாலசேகர் என்கிற 4 வயது சிறுவனுக்கு வயிற்று வலிக்கு மருந்தாக தேன் கொடுக்கப்பட்ட போது மயக்கமடைந்ததால் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி டீன் சீனிவாசன் சிறுவனுக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றி விளக்கினார். "தேனில் உருவாகும் பொட்டுலினம் என்கிற பொருள் நச்சுத்தன்மையை உருவாக்கி நேரடியாக மூளையையும் நரம்பு மண்டலத்தையும் பாதிக்கும். சுவாசமும் ரத்த ஓட்டமும் உடனடியாக பாதிக்கப்படும். " என்றார். தொடர்ந்து பேசிய அவர், "சிறுவனுக்கு செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இம்யூனோகுளோபின் மருந்து கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது." என்றார். இதன் தொடர்ச்சியாக குழந்தைகளுக்கு, அதிலும் குறிப்பாக பச்சிளம் குழந்தைகளுக்கு தேன் கொடுக்கலாமா என்பது பற்றிய கேள்விகளும் எழுந்துள்ளன. குழந்தைகள் பிறந்த உடனே தேன் கொடுப்பது அல்லது தாய்ப்பாலுக்கு முன்பாக தேன் கொடுப்பது இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் வழக்கமான ஒன்றாக இருந்து வந்துள்ளதை பல்வேறு ஆய்வுகள் பதிவு செய்கின்றன. சௌதி அரேபியா போன்ற வளைகுடா நாட்டிலும் கூட குழந்தைகளுக்கு தேன் கொடுக்கும் பழக்கம் இருப்பதாக அமெரிக்க தேசிய மருத்துவ நூலக இணையதளத்தில் வெளியான ஆய்வறிக்கை கூறுகிறது. அதன்படி, 2022-ஆம் ஆண்டு சௌதி அரேபியாவை மையமாக வைத்து இணைய வழியாக தாய்மார்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 52% பேர் குழந்தைகளுக்கு தேன் கொடுக்கும் பழக்கம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் குடல் அசைவின்மையில் இருந்து சுவாசப் பிரச்னைகள் வரை ஏற்படலாம் என அந்த ஆய்வு எச்சரிக்கிறது. குமட்டல், வாந்தி, சாப்பிடுவதில் சிக்கல் ஆகியவை இந்த நோயின் பிரதான அறிகுறிகளாக இருந்தாலும் கூடுதல் அறிகுறிகளையும் இந்த ஆய்வு பட்டியலிடுகிறது. அவை முக தசை சுருக்கம் மலச் சிக்கல் முக தசை பிடிப்பு மூளை பாதிப்பு வலிப்பு உடல் வெப்பநிலை குறைவது பட மூலாதாரம்,Getty Images ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு தேன் கொடுப்பது பொட்டுலிசம் என்கிற தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் என அமெரிக்க அரசின் நோய் கட்டுப்பாட்டுக்கான மையம் (சிடிசி) தெரிவிக்கிறது. தேனை நேரடியாக மட்டுமல்லாமல் உணவு, தண்ணீர், குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரவ உணவு ஆகியவற்றில் சேர்த்தும் கூட வழங்கக்கூடாது என அந்த மையம் குறிப்பிடுகிறது. "குழந்தைகளுக்கு ஆறு மாதம் வரை தாய்ப்பால் தவிர வேறு எதுவும் கொடுக்கக்கூடாது. தண்ணீர் கூட கொடுக்கக்கூடாது. சிலர் உணவு கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வத்திலும் அல்லது தாய்ப்பால் போதவில்லையோ என்கிற கவலையிலும் பால் மற்றும் தேன் ஆகியவற்றை கொடுக்கின்றனர். இது தான் பொட்டுலிசம் பாதிப்பை ஏற்படுத்துகிறது," என்கிறார் குழந்தைகள் நல மருத்துவரான வித்யா. இதற்கான காரணத்தை விளக்கிய அவர், "பச்சிளம் குழந்தைகளிடம் நோய் எதிர்ப்பு சக்தி வளர்ந்திருக்காது. அதோடு உணவுகளை செரிமானம் செய்யும் சக்தியும் குறைவாக இருக்கும். மருத்துவமனைகளில் இவை தெளிவாக எடுத்துரைக்கப்படுவதோடு குழந்தைகளின் உணவு முறையும் கண்காணிக்கப்படுகிறது." என்றும் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,Vidhya படக்குறிப்பு,மூத்த குழந்தைகள் நல ஆலோசகர் மருத்துவர் வி வித்யா தேனில் உள்ள கிளாஸ்டிரிடியம் பொட்டுலினம் ஸ்போர்கள் மூலம் உருவாகும் பாக்டீரியாக்கள் குழந்தையின் குடலில் நச்சுக்களை உற்பத்தி செய்யும் என்றும் இது மிகவும் தீவிரமான நோய் பாதிப்பான இன்ஃபேன்ட் பொட்டுலிசத்தை (ஐபி) ஏற்படுத்தும் என்றும் பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை (என்.ஹச்.எஸ்) கூறுகிறது. இன்ஃபேன்ட் பொட்டுலிசம் என்பது உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் நோய் என்று அமெரிக்க தேசிய மருத்துவ நூலக இணையதளத்தில் வெளியாகியுள்ள ஆய்வு கூறுகிறது. இது தீவிரமான நரம்பியல் பிரச்னைகளுக்கும் வித்திடலாம் என அந்த ஆய்வு கூறுகிறது. இந்த பாதிப்பை உடனடியாக அடையாளம் காண்பது கடினம் எனக் கூறும் மருத்துவர் வித்யா, சில மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதையும் குறிப்பிட்டார், "குழந்தைகளின் குடலில் தான் தொற்று பாதிப்பு ஏற்படும். குழந்தைகள் சோர்வுற்று இருப்பது, தாய்ப்பால் குடிக்காமல் இருப்பது, வயிறு வீக்கமாக தெரிவது ஆகியவை இதன் ஆரம்பகட்ட அறிகுறிகள்," என்றார். குழந்தைகளின் குடல் மற்றும் செரிமான அமைப்பு முறையாக வளர 12 மாதங்கள் ஆகும். அதனால் தான் உலக சுகாதார நிறுவனம் ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தேன் கொடுக்கக்கூடாது என பரிந்துரைத்திருப்பதாக அவர் கூறினார். "பொட்டுலிசம் என்கிற பாதிப்பு அனைத்து வயதினருக்கும் வரும். ஆனால் குழந்தைகளிடம் அதன் தீவிரத்தன்மை அதிகமாக இருக்கும். ஆரோக்கியமற்ற தேன் சாப்பிட்டால் அனைவருக்கும் இந்த பாதிப்பு ஏற்படும், ஆனால் குழந்தைகள் ஆரோக்கியமான தேன் சாப்பிட்டாலும் பாதிப்பிற்கு உள்ளாவார்கள். " என்றார் மருத்துவர் வித்யா. "ஒரு வயதிற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தேன் கொடுப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. தேன் ஒரு ஆரோக்கியமான சர்க்கரை. பெற்றோர்கள் தெரிவித்தால் தான் எங்களுக்கு தேன் கொடுக்கப்பட்டதே தெரியவரும் என்றாலும் இது மிகவும் அரிதாகவே நிகழும்," என்று அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cre203ey0yyo
  16. வணக்கம் வாத்தியார் . .........! பெண் : மேகம் கருக்குது குழு : தக்குசிக்கு தக்குஜின் பெண் : மின்னல் சிாிக்குது குழு : தக்குசிக்கு தக்குஜின் பெண் : சாரல் அடிக்குது குழு : தக்குசிக்கு தக்குஜின் பெண் : இதயம் பறக்குது குழு : தக்குசிக்கு தக்குஜின் பெண் : மேகம் கருக்குது மின்னல் சிாிக்குது சாரல் அடிக்கிறதே என் மேனியில் ஆடிய மிச்ச துளிகள் நதியாய் போகிறதே பெண் : நான் சொல்லும் வேளையில் மழை நின்று போகட்டும் வானவில் கொடியிலே என் ஆடை காயட்டும் பெண் : மழையே துளி போடு என் மாா்பே உன் வீடு பெண் : நிலாவே வா வா வா நில்லாமல் வா வா வா என்னோடு குளிப்பது சுகம் அல்லவா உன் கரையை சலவை செய்து விடவா பெண் : புறாவே வா வா வா பூவோடு வா வா வா உன்னோட குளிருக்கு இடம் தர வா என் கூந்தலில் கூடு செய்து தர வா பெண் : காற்றை போல் எனக்கு கூட சிறகொன்றும் கிடையாது தடைமீறி செல்லும் போது சிறை செய்ய முடியாது பெண் : இளமையின் சின்னம் இளம்பட்டு வண்ணம் இன்னும் இன்னும் வளா்த்துக்கொள்வேன் இருபத்தி ஒன்னு வயதுக்கு மேலே காலத்தை நிறுத்தி வைப்பேன் ஹோய் பெண் : நான் சொல்லும் வேளையில் மழை நின்று போகட்டும் வானவில் கொடியிலே என் ஆடை காயட்டும் பெண் : கனாவே வா வா வா கண்ணோடு வா வா வா விண்வெளியை அளந்திட சிறகு கொடு விண்மீனில் எனக்கு படுக்கை போடு பெண் : மைனாவே வா வா வா மையோடு வா வா வா என் கண்கள் அழகின் ஒளி பரப்பு என் அழகை பறந்து பறந்து பரப்பு பெண் : பூமிக்கு ஒற்றை நிலவு போதாது போதாது அதனால் தான் இரண்டாம் நிலவாய் நான் வந்தேன் இப்போது பெண் : பூக்களில் தூங்கும் பனிதுளி அள்ளி காலையில் குளித்துக்கொள்வேன் விடிகிற போது விடிகிறபோது வெளிச்சத்தை உடுத்திக்கொள்வேன் ஹோய் ........! --- மேகம் கருக்குது ---
  17. பொன்னை விரும்பும் பூமியிலே .........! 😍
  18. மின்னஞ்சல் போலியானது - எப்ஸ்டீன் விவகாரம் தொடர்பில் பில்கேட்ஸ் விளக்கம் Published By: Digital Desk 3 05 Feb, 2026 | 05:48 PM எப்ஸ்டீன் குறிப்பிட்டது போன்ற மின்னஞ்சலை நான் ஒருபோதும் அனுப்பவில்லை. அந்த மின்னஞ்சல் போலியானது என எப்ஸ்டீன் விவகாரம் தொடர்பில் பில்கேட்ஸ் விளக்கமளித்துள்ளார். அமெரிக்காவில் பெரிய அளவில் பேசப்படும் பொருளாக ஜெப்ரி எப்ஸ்டீன் வழக்கு உள்ளது. ஜெப்ரி எப்ஸ்டீன் என்பவர் வங்கிகளில் இருந்து பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் நிறுவனங்களுக்கு பணம் வாங்கி வழங்கும் பணியை மேற்கொண்டார். இதனால் அவருக்கு அரசியல்வாதிகள், தொழிலதிபர்களுடன் நல்ல உறவு இருந்தது. இந்நிலையில் ஜெப்ரி எப்ஸ்டீன் மீது பாலியல் புகார்கள் எழுந்தன. அவர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து பல பிரபலங்களுக்கு தாரை வார்த்ததாக கூறப்படுகிறது. இவர் தொடர்புடைய கோப்புகளில் பல முக்கிய புள்ளிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த சர்ச்சைக்குரிய கோப்புகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்க நீதித்துறை அண்மையில் இலட்சக்கணக்கான பக்கங்களைக் கொண்ட புதிய ஆவணங்களை வெளியிட்டது. அதில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தொழிலதிபர்கள் எலான் மஸ்க், பில் கேட்ஸ், பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரு, நியூயார்க் மேயர் மம்தானியின் தாயும் பிரபல எழுத்தாளருமான மீரா நாயர் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் குறித்து கோப்புகளில் அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றிருந்தன. 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் திகதியிட்ட மின்னஞ்சலில், “ரஷ்ய பெண்ணுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டதால் பில் கேட்ஸ் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டார். அந்த நோயை குணப்படுத்தும் மருந்தை அப்போதைய மனைவி மெலிண்டாவுக்கு தெரியாமல் அனுப்புமாறு பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். மெலிண்டாவுக்கும் பால்வினை நோய்த் தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தில், அவருக்கு தெரியாமலேயே உணவில் மருந்தை கலக்க என்னிடம் உதவி கோரினார்” என்று எப்ஸ்டீன் குறிப்பிட்டிருந்தார். பில் கேட்ஸ் குறித்த இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது தொடர்பாக பில் கேட்ஸ் அளித்த விளக்கத்தில் தெரிவித்திருத்திப்பதாவது, “எப்ஸ்டீன் குறிப்பிட்டது போன்ற மின்னஞ்சலை நான் ஒருபோதும் அனுப்பவில்லை. அந்த மின்னஞ்சல் போலியானது. அவருடைய உள்நோக்கம் என்னவாக இருந்தது என்பது எனக்குத் தெரியவில்லை. ஏதேனும் ஒரு வகையில் என் மீது தாக்குதல் நடத்த முயற்சித்திருக்கிறார். 2011 ஆம் ஆண்டு முதல்முறையாக எப்ஸ்டீனைச் சந்தித்தேன். அதன்பின்னர் மூன்று ஆண்டுகளில் பலமுறை அவருடன் இரவு விருந்தில் கலந்துகொண்டேன். ஆனால், அவருடைய கரீபியன் தீவுக்கு ஒருபோதும் சென்றதில்லை; பெண்களுடன் எந்த உறவும் வைத்துக் கொள்ளவில்லை. எப்ஸ்டீனுடன் நான் செலவிட்ட ஒவ்வொரு நிமிடத்திற்கும் வருந்துகிறேன். மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/237932
  19. இலங்கை, வியட்நாம் பெண்களை "இறக்குமதி" செய்ய வேண்டும் : தென்கொரிய ஆளுநரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு! Published By: Digital Desk 3 05 Feb, 2026 | 03:34 PM தென்கொரியாவில் நிலவி வரும் சனத்தொகை வீழ்ச்சியை ஈடுகட்ட, இலங்கை மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளிலிருந்து இளம் பெண்களை "இறக்குமதி" செய்ய வேண்டும் என ஜின்டோ கவுண்டி ஆளுநர் கிம் ஹீ-சூ தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென் ஜொல்லா மாகாணத்தில் உள்ள ஹேனம் கலை மற்றும் கலாச்சார மையத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்ற ஆளுநர் கிம் ஹீ-சூ, கிராமப்புறங்களில் மக்கள் தொகை குறைந்து வருவதைக் குறித்து உரையாற்றியுள்ளார். அப்போது அவர், "சனத்தொகை நெருக்கடிக்கு நாம் முறையான தீர்வை காண வேண்டும். நிலைமை மோசமானால், கிராமப்புறங்களில் உள்ள பிரம்மச்சாரிகள் திருமணம் செய்துகொள்வதற்காக இலங்கை அல்லது வியட்நாம் போன்ற இடங்களிலிருந்து இளம் பெண்களை நாம் இறக்குமதி செய்ய வேண்டும். மக்கள் இல்லாதபோது தொழில்துறையை மீட்டெடுப்பதில் என்ன பயன் இருக்கப்போகிறது? எனக் குறிப்பிட்டுள்ளார். ஆளுநரின் இந்த உரை யூடியூப் தளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. வெளிநாட்டுப் பெண்களை ஒரு பொருளாகக் கருதி "இறக்குமதி" என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது மனித கண்ணியத்திற்கு எதிரானது எனச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பிட்ட நாடுகளின் பெயர்களைக் குறிப்பிட்டுப் பேசியது அந்த நாட்டு மக்களையும், கொரியாவில் வசிக்கும் பல்லின சமூகத்தினரையும் அவமதிக்கும் செயல் எனக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் கலந்துகொண்ட குவாங்ஜு மேயர் காங் கி-ஜங், "வெளிநாட்டுத் திருமணங்கள் மற்றும் மனிதர்களை இறக்குமதி செய்வது குறித்த கருத்துக்கள் முற்றிலும் பொருத்தமற்றவை" என மேடையிலேயே அதிருப்தி வெளியிட்டார். தென்கொரியாவின் பல கிராமப்புற பகுதிகள் சனத்தொகை குறைவால் அழிவடையும் நிலையில் (Extinction risk) உள்ளன. இந்த வேதனையின் வெளிப்பாடாகவே ஆளுநர் அவ்வாறு பேசினார் என ஒரு தரப்பினர் வாதிட்டாலும், ஒரு பொது மேடையில் பெண்களை வெறும் உழைப்பாளர்களாகவும், திருமணக் கூட்டாளிகளாகவும் மட்டுமே பார்க்கும் ஆணாதிக்க மற்றும் இனவெறிப் பார்வை இதில் வெளிப்படுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். https://www.virakesari.lk/article/237899
  20. முதலாம் தர மாணவர் அனுமதியில் வீழ்ச்சி – புள்ளிவிபரத்தில் அதிர்ச்சி தகவல் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக முதலாம் ஆண்டுக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. குறித்த விபரம் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புள்ளிவிபர அறிக்கைகளின் (2023-2025) தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் அரச பாடசாலைகளில் பயிலும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. ஆரம்பக் கட்ட அனுமதி 2023 ஆம் ஆண்டில் 3,882,688 ஆக இருந்த மொத்த மாணவர் எண்ணிக்கை, 2024 இல் 3,816,234 ஆகவும், 2025 இல் 3,747,544 ஆகவும் குறைந்துள்ளது. இது 2023 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில் சுமார் 3.48 சதவீத ஒட்டுமொத்த வீழ்ச்சியாகும். பாலின ரீதியாகப் பார்க்கும்போது, மாணவர்களின் விகிதம் 49.5% ஆகவும் மாணவிகளின் விகிதம் 50.5% ஆகவும் அனைத்து ஆண்டுகளிலும் நிலையாகக் காணப்படுகிறது. முதலாம் தர அனுமதி - ஒரு பெரும் சரிவு பாடசாலைகளின் ஆரம்பக் கட்ட அனுமதியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை தரவுகள் உறுதிப்படுத்துகின்றன. 2023 இல் 287,639 ஆக இருந்த முதலாம் தர மாணவர் சேர்க்கை, 2025 இல் 266,281 ஆகக் குறைந்துள்ளது. இது சுமார் 7.42 சதவீத பாரிய வீழ்ச்சியாகும். குறிப்பாக, மாகாணப் பாடசாலைகளில் முதலாம் தர அனுமதி 260,845 இலிருந்து 239,714 ஆகக் குறைந்துள்ளது. மாவட்ட ரீதியிலான மாணவர் அனுமதி மாற்றங்கள் அதிக மாணவர் சனத்தொகையைக் கொண்ட மாவட்டங்களில் மாணவர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதைக் காணமுடிகிறது. https://ibctamil.com/article/fall-in-first-year-student-admissions-moe-1770278171
  21. இங்கு எகிப்தில் மர்யம் என்னும் பெயர் பொதுவானது. எனக்கு இங்கு ஒரு மர்யம் இருகின்றாள்
  22. இதில் இருப்பவை ஒரு 99% உண்மையான தகவல்கள் தானே? "மனித உரிமைகளை எப்போதுமே மதிக்கவில்லை" என்பதை மட்டும் மறுக்கலாம். மறுப்பதற்குரிய செயல்களைப் புலிகள் செய்திருக்கிறார்கள். மற்றபடி டித்த எழுத்தில் காட்டிய பந்தியில் சம்பந்தர் சொல்லியிருப்பதன் சாராம்சம் இப்படி இருக்கிறது: 1. புலிகளை வெளியே இருந்து யாரும் அழிக்கவில்லை, அவர்களாகவே ஜனநாயகமில்லாத தன்மையால் அழிந்தார்கள் (implosion). 2. பலர் புலிகளை அழித்த செயலுக்கு உரிமை கோருகின்றனர். ஆனால், கதிர்காமர் புலிகளைப் பலவீனமாக்கிய முக்கிய நபர், அவர் இன்று இருந்திருந்தால் இன்றைய நிலைமை குறித்து கிலேசம் அடைந்திருப்பார். 3. எங்களைப் புலிவால்கள் (proxies) என்கிறீர்கள். நான் உட்பட பல தமிழ் தலைவர்கள் புலிகளின் கொலைப் பட்டியலில் இருந்திருக்கிறோம். பிறகெப்படி எங்களைப் புலிவால்கள் என்கிறீர்கள்? இது போல candid ஆக உண்மையைப் பேசாமல், தற்போதைய சில பா. உக்கள் போல பேசாமல் இருந்தால் மக்கள் ஆதரவு சரியாமல் இருக்கும் போல😂!
  23. கடலில் தத்தளித்த குடும்பம்: 2 மணி நேரம் நீந்தி உயிரைக் காப்பாற்றிய 13 வயது 'ஹீரோ' பட மூலாதாரம், ABC News/Briana Shepherd படக்குறிப்பு, 12 வயதான போ மற்றும் எட்டு வயதான கிரேஸ் ஆகியோருடன் ஜோன் மற்றும் ஆஸ்டின். கட்டுரை தகவல் ஃப்ளோரா ட்ரூரி 25 நிமிடங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட தனது தாயையும் இரண்டு உடன்பிறந்தவர்களையும் காப்பாற்ற, மங்கலான வெளிச்சத்தில், கொந்தளிப்பான நீரில் நீந்திச் சென்ற 13 வயது சிறுவனின் மன உறுதி பாராட்டப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை மேற்கு ஆஸ்திரேலியாவின் தெற்கில் உள்ள ஜியோகிராஃப் விரிகுடாவில் ஒரு குடும்பத்தினர் துடுப்புப் படகு சவாரி மற்றும் கயாக்கிங் செய்து கொண்டிருந்தனர், அப்போது பலத்த காற்று அவர்களின் காற்று நிரப்பப்பட்ட படகுகளை திசைதிருப்பியதாக போலீசார் தெரிவித்தனர். ஆஸ்டின் அப்பெல்பீ என்ற அந்த பதின்ம வயது சிறுவன் உதவி கேட்க கரையை நோக்கி மீண்டும் துடுப்பு அடிக்கத் தொடங்கினார். ஆனால் அவரது கயாக் படகில் தண்ணீர் புகுந்ததால் மீதமிருந்த 4 கிலோமீட்டர் (2 கடல் மைல்கள்) தூரத்தை நீந்தி கடந்தார். "இந்த குடும்பத்தினர் காட்டிய துணிச்சல், வலிமையும் அசாதாரணமானது, குறிப்பாக எச்சரிக்கையை எழுப்ப 4 கி.மீ நீந்திய அந்த சிறுவன்," என்று நேச்சுரலிஸ்ட் தன்னார்வ கடல் மீட்புக் குழு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் கமாண்டர் பால் பிரெஸ்லேண்ட், அந்த சிறுவனின் முயற்சிகளை "சூப்பர் ஹ்யூமன்" என்று விவரித்தார். "அவர் முதல் இரண்டு மணிநேரம் லைஃப் ஜாக்கெட்டுடன் நீந்தினார்," என்று அவர் ஏபிசி நியூஸிடம் கூறினார். "அந்த துணிச்சலான சிறுவன் லைஃப் ஜாக்கெட்டுடன் சென்று சேரமுடியாது என்று நினைத்தார், அதனால் அதை கைவிட்டார், அடுத்த இரண்டு மணிநேரம் லைஃப் ஜாக்கெட் இல்லாமல் நீந்தினார்." வெள்ளிக்கிழமை மாலை உள்ளூர் நேரப்படி 18:00 மணிக்கு சிறுவன் உதவிக் கோர முடிந்தது. இது கடற்கரையில் காணாமல் போன சிறுவனின் குடும்பத்தினரை தேடும் பணியைத் தூண்டியது என்று காவல்துறை திங்களன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 3 பேர் கண்டுபிடிப்பு சிறுவனின் 47 வயது தாய், அவரது மற்றொரு மகன் (12), மற்றும் எட்டு வயது மகள் ஆகியோர் 20:30 மணியளவில், கடற்கரையில் சுமார் 14 கி.மீ தொலைவில் ஒரு துடுப்புப் பலகையில் தொங்கிக் கொண்டிருந்ததை மீட்பு ஹெலிகாப்டர் மூலம் கண்டுபிடித்தனர். "ஒரு தன்னார்வ கடல் மீட்புக் கப்பல் அவர்களின் இடத்திற்கு அனுப்பப்பட்டது, மேலும் மூவரும் வெற்றிகரமாக மீட்கப்பட்டு கரைக்குத் திரும்பினர்," என்று காவல்துறை தெரிவித்துள்ளது. கடல் நிலைமைகள் எவ்வளவு விரைவாக மாறக்கூடும் என்பதற்கான முக்கியமான நினைவூட்டலாக இந்த சம்பவம் அமைந்துள்ளது என்று ஆய்வாளர் ஜேம்ஸ் பிராட்லி கூறினார். "அதிர்ஷ்டவசமாக, மூன்று பேரும் லைஃப் ஜாக்கெட்டுகளை அணிந்திருந்தனர், இது அவர்களின் உயிர்வாழ்வுக்கு பங்களித்தது," என்று அவர் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். "13 வயது சிறுவனின் செயல்களை எவ்வளவு பாராட்டினாலும் போதாது - அவனது உறுதியும் தைரியமும் இறுதியில் அவனது தாய் மற்றும் உடன்பிறந்தவர்களின் உயிரைக் காப்பாற்றின." பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அந்தக் குடும்பம் மேற்கு ஆஸ்திரேலியாவின் ஜியோகிராஃப் பே-யில் ஒரு விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்தனர். சிறுவன் கூறுவது என்ன? துணிச்சலோடு குடும்பத்தை காப்பாற்றிய சிறுவன் பிபிசியிடம் உரையாடியபோது… "நான் ஒரு ஹீரோ என்று நினைக்கவில்லை - நான் என்ன செய்யவேண்டுமே அதை செய்தேன்" என்றார். இரண்டு துடுப்புப் பலகைகளில் ஒட்டிக்கொண்டு தண்ணீரில் விட்டுச் சென்ற நான்கு மணி நேரத்திற்குப் பிறகு, ஆஸ்டின் அப்பெல்பீ இறுதியாக கரையை அடைந்தபோது, அவரது தாயார் ஜோன், சகோதரர் பியூ மற்றும் சகோதரி கிரேஸ் இன்னும் உயிருடன் இருக்கிறார்களா என்பது அவருக்குத் தெரியாது. ஆஸ்திரேலியாவின் மேற்கு கரையிலிருந்து பல மைல்கள் தூரத்தில் கடலுக்குள், அலைகள் மேலும் பெரிதாகிக் கொண்டிருந்தன, வெளிச்சம் மங்கத் தொடங்கின. அந்த நேரத்தில் தனது மகனுக்கு என்ன ஆனதோ என்ற அச்சம் தாய்க்கு ஏற்பட்டது. சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஜோன் இறுதியாக மீட்புப் படகைக் கண்ட பிறகு, தனது மகன் பாதுகாப்பாக இருப்பதை அவர் அறிந்தார். கடற்கரையில் ஒரு குடும்ப நாளாகத் தொடங்கிய இந்த நிகழ்வு, ஜோனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் 10 மணி நேரக் கடினமான சோதனையாக முடிந்தது. "ஆஸ்டின் வெற்றி பெறவில்லை என்று நான் கருதினேன்," என்று 47 வயதான ஜோன் பிபிசியிடம் கூறினார். 'ஒரு கடினமான போர்' பின்னர் அந்தக் குடும்பம் பெர்த்தில் உள்ள வீட்டிற்கு திரும்பவிருந்தது. நீரில் இரண்டு துடுப்புப் பலகைகள் மற்றும் ஒரு கயாக் படகுடன் "கொஞ்சம் வேடிக்கையாக" இருந்ததாக ஜோன் நினைவு கூர்ந்தார்.. ''காற்று வேகமாக வீசத் தொடங்கியது. அங்கிருந்து எல்லாம் மாறிவிட்டது. நாங்கள் துடுப்புகளை இழந்தோம், மேலும் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டோம்'' மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்டலப் கடற்கரையிலிருந்து மேலும் மேலும் விலகிச் செல்வதைக் கண்ட ஜோன், தான் ஏதாவது செய்ய வேண்டும் என்பதை உணர்ந்தார் - ஆனால் அவரால் 12 வயது பியூவையும் எட்டு வயது கிரேஸையும் தனியாக விட்டுச் செல்ல முடியவில்லை. "நாங்கள் கடற்கரையிலிருந்து அவ்வளவு தொலைவில் இல்லை என்று தோன்றியதால், உதவி பெற முயற்சிப்பதற்காக ஆஸ்டினை அனுப்பினோம்," என்று அவர் கூறினார். ஆஸ்டின் கயாக்கை எடுத்துக் கொண்டார், ஆனால் அது மோசமாக சேதமடைந்து ஏற்கனவே தண்ணீரில் மூழ்கிவிட்டதை யாரும் உணரவில்லை. "அது கவிழ்ந்து போக ஆரம்பித்தது, பின்னர் நான் ஒரு துடுப்பை இழந்தேன், நான் சிக்கலில் இருப்பதை அறிந்தேன்," என்று ஆஸ்டின் நினைவு கூர்ந்தார். "நான் என் கையால் துடுப்பு போட ஆரம்பித்தேன்." கவிழ்ந்த கயாக்கைப் பிடித்துக் கொண்டு, "தண்ணீரில் ஏதோ ஒன்றைப் பார்த்தேன்" என்று கூறும் ஆஸ்டின், ஏதாவது செய்ய வேண்டும் என்பதை உணர்ந்தார். அவர் தன்னுடைய பார்வையிலிருந்து தன்னுடைய குடும்பத்தினரை இழந்திருந்தார், அவர்களும் அவரைப் பார்க்காமல் போய்விட்டனர். ஜோனும் குழந்தைகளும் கடலில் அடித்துச் செல்லப்பட்டபோது, அலைகள் அதிகமாக பெரிதாகிக் கொண்டே போனதால், போர்டுகளில் நிலைத்து நிற்பது மிகவும் கடினமானதாக மாறியது. அவர்கள் அனைவரும் உயிர்காப்பு ஜாக்கெட்டுகளை அணிந்திருந்தனர். ஆனால் அவர்களிடம் உணவும் நீரும் எதுவும் இல்லை. இதற்கிடையில், ஆஸ்டின் கரைக்கு செல்ல 4 கிமீ (2 கடல் மைல்கள்) நீந்தத் தொடங்கினார், சிறிது நேரத்திற்குப் பிறகு அது அவருக்கு உதவாததால் தனது சொந்த லைஃப் ஜாக்கெட்டைக் கைவிட்டார். அடுத்த இரண்டு மணி நேரம் முழுவதும், பிரார்த்தனை, கிறிஸ்தவ பாடல்கள் மற்றும் "மகிழ்ச்சியான எண்ணங்கள்" தான் "மிகவும் பயந்த" 13 வயது சிறுவனை தொடர்ந்து உற்சாகப்படுத்தியது. "நான் அம்மா, பியூ மற்றும் கிரேஸைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். என் நண்பர்கள் மற்றும் என் காதலியைப் பற்றியும் யோசித்துக்கொண்டிருந்தேன் - எனக்கு உண்மையிலேயே நல்ல நண்பர்கள் கூட்டம் இருக்கிறது," என்று அவர் கூறினார். "நான் தரையில் விழுந்தபோது, நான் இப்போது எப்படி நிலத்தில் இருக்கிறேன் என்று நினைத்தேன் - இது ஒரு கனவா?" குடும்பத்தை பற்றி அவருக்கு தோன்றியது "இன்னும் அங்கே உயிருடன் இருக்கலாம் - நான் அவர்களைக் காப்பாற்றச் செல்ல வேண்டும்". உள்ளூர் நேரப்படி சுமார் 18:00 மணி (GMT 10:00) ஆகிவிட்டது, கடைசியாக அவர் கரையில் இருந்த தாயின் பையை எடுத்து உதவிக்கு அழைத்தார். இந்த அழைப்பு ஒரு பெரிய தேடலைத் தூண்டியது என்று போலீசார் திங்களன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தனர். அழைப்பு விடுத்த பிறகு மயங்கிப் போன ஆஸ்டின் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் தனது தந்தையை அழைத்தார். பின்னர், சில நிமிடங்கள் கழித்து, அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அவருக்கு ஒரு அழைப்பு வந்தது. மருத்துவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அனைவரும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக்கொண்டிருந்தனர். "அது என்னால் ஒருபோதும் மறக்க முடியாத தருணம்" என்று ஆஸ்டின் கூறினார். கடலின் நடுவே, ஜோன் தனது இளைய குழந்தைகளைப் பிடித்துக் கொள்ளப் போராடிக் கொண்டிருந்தார். அவர்கள் குளிரால் நடுங்கிக் கொண்டிருந்தனர், அதற்குள் இருட்டும் முழுமையாக சூழ்ந்துவிட்டது. ஆஸ்டினுக்கு ஏதோ மோசமானது நடந்திருக்கலாம் என்ற அச்சம் தாய்க்கு ஏற்பட்டது. படகு நெருங்கி வருவதைக் கண்டதும் ஜோனால் நிம்மதியாக இருக்கக்கூட முடியவில்லை, குழந்தைகளை காப்பாற்ற தீவிரமாக போராடிக்கொண்டிருந்தார். ஆஸ்டின் பள்ளிக்குத் திரும்பி வந்திருக்கிறார் - அவர் கால்கள் மிகவும் வலித்திருந்ததால், ஊன்றுகோலில்தான் இருக்கிறார். மக்கள் தொடர்ந்து அவரை ஒரு ஹீரோ என்று கூறினாலும், அவர் தன்னை அப்படியாகக் கருதவில்லை. அது ஒரு "கடினமான போர்" என்று அவர் ஒப்புக்கொண்டார். இருப்பினும், மற்றவர்கள் ஆஸ்டினைப் புகழ்ந்து பேசுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேச்சுரலிஸ்ட் தன்னார்வ கடல் மீட்புக் குழுவின் கமாண்டர் பால் பிரெஸ்லேண்ட், அந்த இளைஞனின் முயற்சிகளை "சூப்பர் ஹ்யூமன்" என்று விவரித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9dvzdnp345o
  24. அநுர ஆட்சிக்கு முன்னரே நிலைமை மாறி விட்டது. ஒரு உதாரணம். கொத்தலாவல பாதுகாப்புத் துறைப் பல் கலைக்கு வடக்கு கிழக்கில் இருந்தும் இளையோர் கற்கச் செல்கிறார்கள். இது நடக்க முதல் இன்னொரு விடயம் செய்தார்கள். உயர்தர வகுப்பு மாணவர்களை "தலைமைத்துவப் பயிற்சி" என்று அழைத்துச் சென்று, பெரிதாக தேச பக்தி, சிங்கக் கொடி என்று தீத்தாமல், முறையான தலைமைத்துவப் பயிற்சி, நேரம் தவறாமை என்பவற்றைப் பயிற்றுவித்திருக்கிறார்கள். இலங்கை இராணுவமே நடந்தி வரும் ஒரு பயிற்சி இது, சென்று வந்த இளையோர் தங்கள் வாழ்க்கை மாறியிருக்கிறது என்கிறார்கள். இப்படி சிங்களத் தரப்பு கடந்த 16 வருடங்களில் அணுகுமுறையை மாற்றி வென்று வருகிறது. தமிழ் தரப்பு என்ன செய்கிறது? தமக்கு கருத்து ரீதியில் ஒத்து வராத ஒரிரு அரசியல் வாதிகளை அகற்றினால் தான் தமிழ் ஈழம் கிடைக்கும் என்ற முட்டாள் தனமான கனவில் குட்டிச் சுவரில் முட்டிக் கொண்டு நிற்கும் காளைமாடுகள் போல நடந்து கொள்கிறது ஒரு தரப்பு. இந்தத் தரப்பிற்கு அருகிலேயே நிற்க விருப்பமில்லாமல் சாதாரண மக்கள் தம் வாழ்வும் என ஒதுங்கி விட்டார்கள். #மோட்டுச் சிங்களவன்#ஆளப் போறான் தமிழன்😇!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.