Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. இதை வைத்து ஒரு கதை இருக்கிறது…எழுதலாமா என யோசித்து கொண்டிருக்கிறேன்.
  3. இணைந்து பயணிப்பது என்பதன் வரைவிலக்கணம்தான் என்ன? வெட்கம் கெட்டு ஒரு ராஜ்ஜசபா சீட்டுக்கு கமல் மையத்தை திமுக கூட்டணியில் அடக்கம் செய்தால் - அவரை திமுக கைகூலி என்றுதானே அழைத்தோம்? அதை நானும் ஏற்றேன். அதேபோல் பிஜேபி பரிந்துரையில் ராஜ்ஜசபா எம்பி ஆனவர் இளையராஜா. அவர் திமுக கைக்கூலி. இவர் பிஜேபி கைக்கூலி. அவர் நல்லா நடிப்பார். இவர் நல்ல பாட்டு போடுவார். ஆனால் இருவரும் “வெள்ளந்தி” என்ற பட்டத்துக்கு சற்றும் பொருத்தமில்லாத மனிதர்கள். எனக்கு அவரின் நடிப்பும், இவரின் இசையும் மிக, மிக, மிக பிடிக்கும். ஆனால் அதனால் மட்டும் அவர்களுக்கு வெள்ளேந்தி, அல்லது “இணைந்து பயணிப்பவர்” என்ற வெள்ளை அடிப்புகளை நான் செய்வதில்லை. எனக்கு பிடித்த படைப்பாளி என்பதால் மட்டும் ஒருவர் ஏனைய விதங்களில் சொக்கதங்கம் என்றில்லை. உங்களிடத்திலும், இந்த திரியில் ஏனைய சில கருத்தாளரிடமும் நான் காண்பது கட் அவுட்டுக்கு பால் வார்க்கும் ரசிக குஞ்சு மனோநிலையின் அடுத்த கட்டத்தையே. அதேபோல் வட்டிக்கு கடன் எடுத்து சினிமாவில் முதலிட்டு படம் பப்படமானல் ராஜா கூலியை வாங்கி கொண்டு எஸ் ஆகி விடுவார். நடுத்தெருவில் நிற்பது தயாரிப்பாளர்தான். போட்டு கொண்ட ஒப்பந்தபடி யாருக்கு உரிமை உண்டோ அவர் எடுத்து கொள்ளலாம். இது படத்துக்கு படம் வேறுபடும். அத்தனையும் எனக்கே என்பது பேராசை மட்டும் அல்ல, உரிமை-திருட்டு. சினிமா நட்சத்திர பிம்பம் கண்ணை மறைத்தான் இப்படியானவை தெரியாது.
  4. Today
  5. இவையெல்லாம் இயற்கை அனர்த்தங்கள் அல்ல. சாதாரண இயற்கை நிகழ்வுகள் மட்டுமே. இன்றைய குடிசை கைத்தொழில் செய்திகளின் பிரமாண்டங்களுக்காக செய்திகளை வெளியிடுவார்கள். சென்ற 50 ஆண்டுகால காலநிலைகளை அவதானித்தால் இன்றைய சில கால நிலைகள் சர்வதாசாரணமாகவே தெரிகின்றது. எதற்கெடுத்தாலும் ஒரு சிறிய விடயத்தையும் பெரிதாக்குவது இன்றைய நடைமுறையாகி விட்டது என்பது கவலைக்குரிய விடயம்.
  6. வெளிநாடு போவதற்கு 77 களில் கொம்பனித்தெருவில் நின்ற நேரம் பிற்பகலில் தொடரூந்து ஏறி வெள்ளவத்தை தெகிவளை போய் திரும்ப வருவோம். கொஞ்ச நாளில் வெளிநாடு போகாவிட்டாலும் பரவாயில்லை பிற்பகலில் இந்த தொடரூந்து பயணம் மட்டும் கைவிட முடியவில்லை. அப்படி என்ன தான் பார்த்திருப்பேன். ஊரில் இருந்து வந்த புதிதில் கற்பாறைகளுக்குள் தாழம் பற்றைக்குள் நடக்கும் திருவிளையாடல்கள் வெளிநாட்டை விட சொர்க்கமாக தெரிந்தது. கடைசிவரை சலிக்கவே இல்லை.
  7. சரியாக சொன்னீர்கள். ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒவ்வொரு சிந்தனைகள்,கருத்துக்கள் இருக்கும். என்னைப்போல் எல்லோரும் இருக்கவேண்டும் என நினைத்தால் அதுவும் ஒரு வித மனநோய் தான். உழைப்பவனுக்கு தான் தெரியும் உழைப்பின் வேதனை. இங்கே எப்படி பிஜேபி வந்தது? எப்படி விஜய் வந்தார் என தெரியவில்லை?
  8. இவர் ஏன் ஆப்கானைத் தெரிவு செய்யவில்லை என்று ஒரே குழப்பமாக உள்ளது.
  9. பிரமிளுக்கு வேற வேலை இல்லை. இப்பிடியா போட்டுக் கலாய்க்கிறது. இவங்களிட்ட மாட்டுப் பட்டு அந்தாள் (சிவனார்) படும் பாடு. சிவராத்திரியில் போட்ட குத்தாட்டம் காணுமே.
  10. 🤣............... 👍.............. சனங்களுக்கு சாமியும் வேண்டும், பூசாரிகளும் வேண்டும்.....................🤣. சாமி - பையன் சார் பூசாரிகள் - வசீ, கோஷான், செம்பாட்டான் 'சாமியே எழும்பி தலை தெறிக்க ஓடினாலும், பூசாரிகள் விட மாட்டார்கள்............' என்று நேற்று இதையே குறிப்பிட்டிருந்தேன்................🤣. பிரமிளின் தாக்கம். இந்த வரியை நேற்று எழுதும் போது பிரமிளின் 'மேல் நோக்கிய பயணம்' கவிதை மனதில் வந்து அடக்க முடியாத சிரிப்பு: ......... ஜடையில் கங்கையின் இமயப் பனிமூச்சு அனலாய் அடிக்கிறது நதிநாக்கு வரண்டு அவள் நீர்கேட்டுத் தவிக்கிறாள். அர்த்த நாரிஇவள் பாரிச வாதத்தில் பின்னே இழுக்கிறாள். ஜடை இருளுள் பிறைகவிழ்ந்து விவேகப் பித்தம் கோஷப் புயலில் கலைந்து புத்தி தெளிந்து பிழைக்கும் வழிதேட இடிஒலி எழுப்பிய உடுக்கை பொத்தல் விழுந்து 'பொத் பொத்' என்றொலிக்க திரிசூலம் துருப்பிடித்து கையைக் கடிக்க மறுகையில் மானின் கால் எலும்பும் இன்னொரு கைநெருப்பு அணைந்து புகைந்து அரனார் இருமவும் பின்தொடர்வோர் கல்லடியில் படம் ஒடுங்கி பாதிசெத்த பாம்புமாலை புழுவாகிப் புரள ஊழித்தீ தீவரண்டு நெற்றிக்கண் குழிவிழுந்து திருதிரு எனவிழிக்க அறந்து பறக்கும் பூணூலை பொடிமட்டையில் சுருட்டி பொத்திப் பிடித்தபடி அரனார் ஓடுகிறார்............ ...................
  11. அப்ப எனக்கு வயது <12 அண்ணா. எனது தகப்பானரை பொறுத்தவரை டிவி என்பது ஒரு சாத்தானின் பெட்டி. எனக்கு பதின்ம வயது முடிய சில வருடங்கள் இருக்கும் போதுதான் வீட்டில் டிவி யை அனுமதித்தார். ஆனால் சித்தி வீட்டில் போய் கிரிகெட் பார்க்க அனுமதி இருந்தது. இன்ன படம் என சொன்னால் நம்பி மினிசினிமாவுக்கு அனுப்பும் அளவுக்கு நம்பிக்கையும் இருந்தது. கெஞ்சி கூத்தாடுவது மினிசினிமா நடத்தும் அண்ணையிடம்😂. உள்ளே போனால் ஓமம் வளர்தது போல் ஒரே புகையாய் இருக்கும்😂 பின்னாளில் சவோய்யில் தொப்பியை போட்டு வரிசையில் நின்று, டிக்கெட் எடுத்து பார்த்த படங்களுக்கு யாரிடமும் அனுமதி கோரவில்லை😂
  12. அவர் நான் போட்ட பதிவுக்கு வந்து சிரித்துவிட்டுப் போனார். தான் இல்லாமல் பயபுள்ளைங்க என்ன பாடுபடுறாங்கள் என்று பாக்கிறாரோ.
  13. @suvy அவர்கள் எப்போதும் 18+ வாசகர்களைக் குறி வைத்துத் தான் எழுதுவார் போல! யாழ் களத்தின் புஷ்பா தங்கதுரை😂!
  14. தாவூத் இப்ராகிம் விடயம் றோவுக்கும் தெரிய வந்துட்டோ😂 பிரியன் அண்ணையிடம் மாராப்பு ஏது? ராம்ராஜ் பெனியந்தான் இருக்கும்😂
  15. இதுக்குப் போய் கெஞ்சிக் கூத்தாடி மினி சினிமா போயிருக்கிறீங்கள் என்பதை அறியும் போது..எனக்கு இரத்தக் கண்ணீர் வருகிறது😂!
  16. ஏன், என்ன ஆனது பையன் சாருக்கு ( @வீரப் பையன்26 )............................ பல்லில்லாத இலங்கை அணி பற்பொடி மிச்சம் என்று வாழலாம்............ ஆனால் பையன் சார் இல்லாமல் இங்கு போட்டியே இருக்காது.............. பையன் சார், நீங்கள் வந்து இந்த இலங்கை அணியை கீரை விற்க அனுப்புங்கோ....................
  17. இலங்கை அணி பாகிஸ்தானுடனான போட்டியிலும் தோற்கவே போகிறது! இலங்கை அணிதான் முதல் முதலாக இந்த உலக கோப்பை போட்டியில் இறுதி ஓவர்களில் சுழல் பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியிருந்தனர் என கருதுகிறேன், இந்த ஆடுகளங்கள் பந்து பழசாகும் போது ஆடுகளத்தில் மேலும் மெதுவாகிறது, 16 ஆவது ஓவரில் சமீராவின் ஓவரில் அடி விழுந்தபின்பும் அடுத்த ஓவரை மதுசங்கவிற்கு கொடுத்தார்கள். 19 ஆவது ஓவர் மட்டுமே தீக்சன வீசினார், மறுவளமாக நியுசிலாந்து அனைத்து இறுதி ஓவர்களையும் சுழல் பந்து வீச்சாளர்களே வீசினார்கள். பந்து திரும்பும் நிலையில் நியுசிலாந்து சோர்ட் பைன் லெக் வைக்காமல் பந்து வீசுகிறது, அசலங்க மட்டுமே பந்தினை சூவீப் அடித்தார் (1) மற்றவர்கள் பெரிதாக முயற்சியே செய்யவில்லை, ஓப் ஸ்டம்பிற்கு வெளியே வீசப்படும் பந்திற்கு சுவீப் அடிக்கும் போது கணிப்பு தவறினால் எழும் பந்தினை பிடிப்பதற்காக ஒரு பிளை சிலிப் வைத்து பந்து வீசினார்கள் (பிளை சிலிப் சாதாரண சோர்ட் பைன் லெக் போல ரிவர்ஸ் சுவீப்பிற்கு செயல்படும், அத்துடன் சுழலுக்கு எதிராக சுவீப் செய்யும் போது பிடி கொடுக்கும் வாய்ப்பு ஏற்படுத்தும்), இலங்கை வீரர்கள் சுவீப் செய்யாமல் இறங்கி வந்து திரும்பாத பந்துகளை அடிப்பது போல அடித்து ஆட்டமிழந்தனர். இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட கிடைத்த வாய்ப்பினை நழுவ விட்டது பின்னர் ஒரு சாதகமான நிலையில் இருந்து (நியுசிலாந்து பின்னணியின் துடுப்பாட்டம் சிறப்பானதுதான்) போட்டியினை வெல்ல முடியாது இலக்கு எடுக்க அனுமதித்தது பின்னர் துடுப்பாட்டத்தில் மிக மோசமாக விளையாடியிருந்தது, பாவம் இலங்கை இரசிகர்கள். அடுத்த போட்டிக்கு அனுமதி சீட்டு முழுமையாக விற்பனையாகி விட்டதாக கூறுகிறார்கள், அடுத்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தினை இலங்கை அணி வெளிப்படுத்தி இரசிகர்களை மகிழ்விக்குமா?
  18. அகமதாபாத்திலும் சென்னையிலும் மழை வருமா. குடை கொண்டு போகச் சொல்லுங்க. மழை வருது மழை வருது குடை கொண்டுவா - மானே உன் மாராப்பிலே
  19. என்னது உங்களுக்கு முடியாதது என்று உலகில் ஏதாவது உள்ளதா? இந்த முறை நீங்கள் எழுதுறியள்… நாங்கள் வாசிக்கிறம். பிகு கருத்து எழுதும் அதே தோரணையில் உங்கள் அனுபவங்களை தொடராக, சின்ன சின்ன துணுக்குகள் போல எழுதலாம். நாம் எழுதும் குப்பைகள் போல இல்லாமல்… நீங்கள் எழுதினால்..: பலருக்கு ஊக்கியாக இருக்கும்.
  20. ஒருவரை மிரட்டுறது சட்டத்துக்கு முரணானது. கிருபனின் அரசு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டி வரலாம். எதுக்கும் வக்கீலைப் பார்த்து வையுங்க.
  21. பையன் இல்லாத யாழ்கள போட்டியும் பல்லில்லாத இலங்கை அணியும் ஒன்றுதான்.
  22. ஆனபடியால் ஆனபடியால் ஆனபடியால் மமமமமமமமமமமமழை வந்து குழப்பலாம்.
  23. சட்டபூர்வ அறிவித்தல் வீட்டை காலி பண்ண… நாளை மறுநாள் வரைக்கும்… வாதவூரனுக்கு அவகாசம் வழங்கப்படுகிறது.
  24. மேற்கிந்தியா வென்றால் இந்தியாவின் நிலைமை இன்னும் மோசமாகும்.
  25. கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” / பாகம் – 3 பாகம் – 3 / “பாட்டியின் பெட்டியில் மறைக்கப்பட்ட தேவாரம்” சிலாபத்திலிருந்து குருணாகலுக்குப் (Kurunegala) போகும் பாதையில் 5 கி.மீ தூரத்தில் பிரசித்தம் பெற்ற முன்னேஸ்வரம் (Muneswram) சிவன் கோவில் உள்ளது. இது இலங்கையிலுள்ள புராதன சிவாலயங்களுள் காலத்தால் முற்பட்ட, தொன்மைமிக்க சிவாலயங்களில் ஒன்றாக விளங்குகிறது என்பது குறிப்பிடத் தக்கது. இது அங்கு காலத்தால் முற்பட்ட காலத்திலேயே தமிழரின் இருப்பைக் காட்டுகிறது. அப்படிபட்ட பெருமைவாய்ந்த, சிலப்பம் என்ற கடலோர கிராமத்தில் இரவு மலர்ந்தது. அங்கே, அலைகள் வழக்கமாக சத்தமாக இருந்தாலும், இன்று கடல் அலைகள் அமைதியாக கரையைத் தாக்கிக் கொண்டிருந்தன. இந்த அமைதியான அலைகள் பழைய நினைவுகளைச் சுமந்து, அந்த கவலையில் தள்ளாடி துக்கத்தில் செல்வது போல் தோன்றியது - கிராமத்தின் வீடுகள் கூட அவற்றை நினைவில் வைத்திருப்பது போல் உணரும் அளவுக்கு, அவை ஆழமான நினைவுகள் போல் இருந்தன. சமந்தியின் வீட்டின், பின்னணியில், ஒரு பழைய மரப்பெட்டி இருந்தது. அது ஒரு அலமாரி அல்ல. பிணைச்சல்கள் [கீல்கள்] இல்லை, தாழ்ப்பாள் இல்லை. ஆனால் காலத்தால் பூட்டப்பட்ட ஒன்று. எல்லோராலும் அம்மாம்மா என்று அழைக்கப்படும் அவளுடைய பாட்டி, இளமையில் செல்லம்மா என்று அழைக்கப்பட்டாள். முன்னேஸ்வரம் கோயிலுக்குப் பின்னால் உள்ள ஒரு சிறிய தெருவில் அவள் பிறந்தாள், அங்கு பக்தியும் பசியும் பிரிக்க முடியாதவையாக அன்று இருந்தன. "செந்தூரி..." , அன்றிரவு சமந்தி தனது பாட்டி தன்னை அந்தப் பெயரில் தன்னை அழைப்பதைக் கேட்டாள். "இங்கே வா." அம்மாம்மா பெட்டியைத் திறந்தாள். பொதுவாக, அதில் பழைய புடவைகள் அல்லது சில சிறிய பொருட்கள் மட்டுமே இருக்கும். ஆனால் அதில் வேறு ஒன்று தான் இருந்தது. பாட்டி தன் பேத்திக்கு கிசுகிசுத்தாள்: "இதை யாரிடமும் காட்ட வேண்டாம் என்று சொன்னார்கள்." உள்ளே இருந்து, பாட்டி ஒரு பழைய காகிதத்தை வெளியே எடுத்தாள். எழுத்துக்கள் காலாவதியாகி மஞ்சள் நிறமாகிவிட்டன. அது தேவாரங்கள் கொண்ட ஒரு தொகுதி. சமந்தியின் [செந்தூரியின்] கைகள் நடுங்கின. “அம்மம்மா… இது…?” “நம்மது.” ஒரே வார்த்தை - ஆனால் அது இனம், மதம் மற்றும் மறக்கப்பட்ட பாரம்பரியத்தை உள்ளடக்கியது. "அம்மாம்மா, நாம் ஏன்... இப்படி இருந்தோம்?" சமந்தி [செந்தூரி] முழு வாக்கியம் முடிக்கவில்லை. அம்மாம்மா மெதுவாக சிரித்தாள்: “நாம் மாறல, பிள்ள. நம்மை மாற்றினாங்க.” அவள் விளக்கத் தொடங்கினாள்: அது கதை இல்லை. ஒரு சாட்சியம். ஒரு நாள், அனைவரும் வரவழைக்கப்பட்டனர். "இது ஒரு வேண்டுகோள் அல்ல. இது ஒரு உத்தரவு," என்று அவர்கள் கூறினர். - ஒரு கையில் வாள். மறு கையில் வேதங்கள். கோவிலின் மணி அன்றிலிருந்து ஒலிக்க வில்லை. யார் மறுத்தார்களோ, அவர்களுக்கு: அபராதம் வேலை இழப்பு உடல் தண்டனை அந்த நாளில் தான் செல்லம்மா, செல்லம்மா இல்லாமல் ஆனாள். “பெயர் மாற்றினாங்க. சடங்கு மாற்றினாங்க. கோயிலுக்குப் போன கால்களை தேவாலயத்துக்கு திருப்பினாங்க.” "ஆனால் இதயங்கள்?" என்று சமந்தி [செந்தூரி] கேட்டாள். அம்மாம்மா கண்களை மூடிக்கொண்டாள்: "அதை யாராலும் முழுமையாக மாற்ற முடியாது." பின்னர் அவள் பள்ளியைப் பற்றி பேசினாள்: பள்ளி முதலில் தமிழில் இருந்தது. ஒரு நாள், ஒரு ஆசிரியர் கூறினார்: "இனி தமிழ் இல்லை. சிங்களம் மட்டுமே." அந்த தலைமுறையிலிருந்து, எல்லாம் மாறியது. மொழி மாறியது, அடையாளம் மாறியது. சமந்தி [செந்தூரி] அம்மம்மாவின் மடியிலே தேவார காகிதத்தை வைத்தாள். அந்தக் கணத்தில அவளுக்கு ஆதன் நினைவுக்கு வந்தான். “இது காதல் அல்ல. இது மீட்பு.” அவன் முன்பு சொன்ன வார்த்தைகள் இப்போது அவளுக்குப் புரிந்தது. மறுநாள் மருத்துவமனையில், அவள் ஆதனைப் பார்த்தாள். அவள் எதுவும் சொல்லவில்லை, ஆனால் அவன் புரிந்துகொண்டான். "நீ கண்டு பிடித்தாயா?" என்று அவன் கேட்டான். அவள் தலையசைத்தாள். "நீ எனக்குப் படித்துக் காட்டுவாயா?" அவன் சிரித்தான் "அன்று, இரண்டு பேர் ஒன்றாக வரவில்லை. அதற்குப் பதிலாக இரண்டு சகாப்தங்கள் ஒன்றாக வந்தன." நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] பாகம்: 04 தொடரும் துளி/DROP: 2057 [கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” / பாகம் – 3 https://www.facebook.com/groups/978753388866632/posts/33998384206476791/?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.