அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3254 topics in this forum
-
கருப்பையில் குழந்தைகளை சுமக்கும் குறிப்பாக ஆண் குழந்தைகளை சுமக்கும் பெண்கள் உடற்பூச்சு வாசனைத் திரவியங்களை (perfumes and scented creams) பாவிப்பதால் ஆண் குழந்தைகளுக்கு பிற்காலத்தில் மலட்டுத்தன்மை மற்றும் விதை சார்ந்த புற்றுநோய்கள் ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதாக எலிகளைக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. வாசனைத் திரவியங்களில் இருக்கும் சில இரசாயனங்கள் இந்த விளைவுக்கு காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுவதால் மனிதப் பெண்களும் இவற்றை கர்ப்ப காலத்தின் போது பாவிப்பதை தவிர்ப்பது நல்லது என்று சிபார்சு செய்யப்பட்டுள்ளது. செய்தி: http://kuruvikal.blogspot.com/
-
- 13 replies
- 2k views
-
-
உலகின் வருங்காலம் பிறப்பின் இறப்பு 1983 இல், டெர்ரி எர்வினும் அவர்தம் பூச்சியல் குழுவினரும் பனாமா மழைக்காட்டில் ஒற்றை மரத்தின் மீது கொடிய பூச்சிமருந்தை அடித்தார்கள். சில பூச்சிகள் ஊர்ந்து வெளியேறின. சில இறந்து நிலத்தில் விழுந்தன. எர்வின் அணியினர் அந்த மர இனத்துக்குரியதாக மட்டுமே 163 தனித்தனி வண்டினங்கள் வாழக் கண்டனர். அந்த மழைக் காட்டில் 50000 தனித்தனி மர இனங்களில் தாராளமாக 80 இலட்சத்துக்கு மேற்பட்ட புது பூச்சியினங்கள் வாழந்து வரக் கூடுமென அவர் கணக்கிட்டார். பூச்சிகள், சிலந்திகள், வேறுவகைக் கணுக்காலிகள் ஆகியவற்றின் எண்ணிக்கையில் வண்டுகளின் பங்கு 40 சதம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மழைக்க் காட்டுத் தழையிலை மேற்பரப்பில் வாழும் பூச்சியி னங்களின் எண்ணிக்கை மட்டும்…
-
- 0 replies
- 972 views
-
-
ஆண்கள் மலட்டுத்தன்மையை அறிந்துகொள்ள..... இக்குறிப்பு ஆண்களுக்கு மட்டுமே வாசகர்களுக்கு இது ஆண்களுக்கு மட்டும் உரிய தகவல், திருமணம் செய்ய முன்னரும் செய்தபின்னரும் ஆண்களுக்கு பொதுவாக ஏற்படும் கவலை தனக்கும் தன் மனைவிக்குமாக குழந்தை பிறக்கவேண்டும் என்பதே சிறிது காலம் முயற்ச்சி செய்தும் குழந்தை பிறக்காவிட்டால் பயம் உச்சத்தின் எல்லைக்கே போய்விடும் அத்துடன் வைத்தியரிடம் போகவும் மறுப்பார்கள் காரணம் தன் மனைவி நன்றாக இருந்து தனக்குதான் மலட்டுத்தன்மை இருக்கு என்று வைத்தியர் சொல்லிவிடுவாரோ என்ற பயம். முழுப்பழியையும் எங்கள் சமூகம் அந்தப்பெண்ணிலேயே செலுத்திவிடும். வைத்திய ஆலோசனையுடன் குழந்தை பெறவும் ஆசை, அனால் போகவும் பயம் என்றிருப்பவகர்களுக்கு தாங்களாகவே தங்கள் மல…
-
- 29 replies
- 9.1k views
-
-
சூரிய சக்தி மூலம் தொடர்ந்து 3 நாட்கள் பறந்த விமானம் புதிய உலக சாதனை படைப்பு வீரகேசரி நாளேடு 8/25/2008 7:25:26 PM - இங்கிலாந்தில் உருவாக்கப்பட்ட சூரிய சக்தியில் இயங்கும் ஆட்களற்ற விமானமொன்று தொடர்ந்து 3 க்கும் மேற்பட்ட நாட்கள் வானத்தில் பறந்து உலக சாதனை படைத்துள்ளது. "செபைர் 6' என்ற இந்த விமானமானது இரவு நேரத்தின் சூரிய ஒளியால் சக்தியூட்டப்பட்ட பற்றறிகளைப் பயன்படுத்தி இயங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. அரிஸோனா மாநிலத்திலுள்ள அமெரிக்க இராணுவத்தின் யுமா புரோவிங் தளத்தில் மேற்படி விமானத்தினை பறக்க வைக்கும் செயற்கிரமம் இடம்பெற்றது. படையினருக்கு உதவும் வகையில் நவீன தொழில் நுட்பங்களை உள்வாங்கும் இலக்கிலுள்ள அமெரிக்க இராணுவத்தினருக்கு மேற்படி விமானத்தின் செயற்பாட்…
-
- 2 replies
- 1.4k views
-
-
வீரகேசரி நாளேடு - செவ்வாய்க் கிரகமானது எதிர்வரும் 27ஆம் திகதி பூமிக்கு மிக நெருங்கி வரவுள்ளதாகவும் அது பூமியிலிருந்து பார்க்கும்போது இரண்டாவது சந்திரன் போன்று தோற்றமளிக்கும் எனவும் அராபிய பத்திரிகைகள் அண்மையில் அறிக்கையிட்டிருந்தன. இந் நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வானிலை நிபுணர்கள் மேற்படி எதிர்வு கூறல் அறிக்கைகளை நிராகரித்துள்ளனர். எதிர்வரும் 27ஆம் திகதி செவ்வாய்க் கிரகமானது வானத்தில் பெரிய முழுநிலவு போன்று தோற்றமளிக்கும் எனவும் அதனால், வானத்தில் இரு சந்திரன்களைப் பார்க்கும் வாய்ப்பு மக்களுக்கு கிடைக்கும் எனவும் இணையத் தளங்கள் பலவற்றிலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. செவ்வாயானது ஒவ்வொரு 780 நாட்களுக்கும் ஒரு தடவை சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் பயணிக்கையி…
-
- 1 reply
- 1.1k views
-
-
பொதுவாக ஒரு மனிதன் கொட்டாவி (Yawn) விட்டால் அருகில் இருக்கும் மனிதர்கள் தாமாகவே கொட்டாவி விட ஆரம்பித்து விடுவார்கள். இந்த இயல்பு குரங்குகள் அடங்கும் பிறைமேற் விலங்குகளிலும் அவதானிக்கப்பட்டிருக்கிறது. மனிதர்களுடன் நெருங்கி வாழும் நாய் கூட மனிதர்கள் கொட்டாவி விட தானும் விட்டுக் கொள்வதை பல முறை நடைமுறை வாழ்க்கையில் கண்டிருப்பினும் ஆய்வு ரீதியாக மனிதர்களை ஒட்டி நாய்களும் கொட்டாவி விடுகின்றன என்ற உண்மை தற்போதே வெளிப்பட்டுள்ளது. ஆய்வுசாலையில் ஒரு மனிதன் கொட்டாவி விடும் போது நாயும் அதனைப் பிரதிபண்ணிக் கொள்ளும் நிகழ்வு நிகழ்ந்துள்ளது. அசதி, களைப்பு, பசி போன்ற காரணங்களால் எழும் கொட்டாவியை ஏன் இன்னொருவர் பிரதிபண்ணுகிறார் என்பது இன்னும் விளங்க முடியாத அதிசயமாகவே இருக…
-
- 4 replies
- 1.5k views
-
-
மாறி வருகின்ற பழக்க வழக்கம், பண்பாட்டுச் சீர்கேட்டால் மனிதர்கள் மட்டுமல்ல இந்த பிரபஞ்சமும் (இயற்கை) இழந்து வருவது ஏராளம் என்பதை நாம் உணராமல் இருப்பது வேதனைக்குரியது. புதியனவெல்லாம் நன்மை பயக்குமேயானால் ஏற்புடையது தான், ஆனால் பழைய பண்பாடுகளை ஆராயாமல் புறந்தள்ளிவிடுவது விவேகமாகாது. பண்டைய பண்பாடுகளில் உணவு உள்பட அனைத்திலும் ஒரு காரணம், நன்மை இல்லாமல் இல்லை. உதாரணம் எள்ளிலிருந்து பெறப்படும் நல்ல எண்ணெய் இன்று வழக்கத்திலிருந்து மறைந்துவிடும் நிலையில் உள்ளது. எண்ணெய் வகைகளில் தனிச்சிறப்பு வாய்ந்தது நல்லெண்ணெய். இது மற்ற எண்ணெய்கள் போல் இரத்தத்தில் கொழுப்பு சேர விடுவதில்…
-
- 6 replies
- 2.2k views
-
-
டெல்லி: ஆகஸ்ட் 1ம் தேதி முழு சூரிய கிரகணம் வருகிறது. அன்று சூரியனை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சூரியனுக்கும், பூமிக்கும் நடுவே சந்திரன் வருவதால் சூரியன் மறைக்கப்படும். இதுவே சூரிய கிரகணம் எனப்படுகிறது. சூரியனை சந்திரன் முழுவதுமாக மறைப்பதால் முழு கிரகணம் உண்டாகிறது. சூரிய கிரகணம் கனடாவில் ஆரம்பித்து வடக்கு கிரீன்லாந்து, ஆர்க்டிக்,, ரஷ்யா, மங்கோலியா, சீனா வழியாக நடைபெறும். இதன் காரணமாக ரஷ்யா, மங்கோலியா, ஆர்க்டிக் பிராந்தியங்களில் சூரிய கிரகணம் முழுமையாக இருக்கும். வட அமெரிக்காவில் வடக்கு, கிழக்கு பகுதிகள், கிரீன்லேண்ட், வடக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பான் தவிர ஆசியாவின் மற்ற நாடுகளில் முழு கிரகணம் தெரியும். அதேசமயம், இந்திய…
-
- 1 reply
- 969 views
-
-
2100 ஆண்டுகள் பழமையானது எனக் கருதப்படும் கணணி. 1901 ம் ஆண்டு, ரோமன் கப்பல் சிதைவுகளில் இருந்து சுழியோடிகளால் தற்செயலாக கண்டெடுக்கப்பட்டது மிகப் பழமையான பொறி ஒன்று. நீண்ட ஆய்வுகளின் பின்னர் குறிப்பாக X-கதிர்ப்பு தொழில்நுட்பம் மற்றும் அதனோடிணைந்த கணணி மயப்படுத்தப்பட்ட நுட்பமான முப்பரிமான ஆய்வுகளின் பின் குறித்த பொறி ஆதியான ஒலிம்பிக் நகரில் வான் கோள்களின் சுழற்சிக் கால அளவைக் கணித்துச் செயற்படும் ஒலிம்பிக் போட்டிகளுக்கான நாட் காட்டியாக பயன்படுத்தப்பட்டிருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொறி 2100 ஆண்டுகள் பழமையானது என்றும் கண்டறிந்துள்ளனர். அதுமட்டுமன்றி இந்தப் பொறி வெண்கல கலப்புலோகத்தால் ஆன உதிரிப் பாகங்களை கொண்டிருக்கிறது. source: http:…
-
- 0 replies
- 818 views
-
-
உலகில் குறிப்பாக வெப்ப வலைய நாடுகளில் வருடத்துக்கு பல ஆயிரக்கணக்கானோரின் உயிரை பலி எடுக்கும் மலேரியா நோய்க்கு புதிய வகையில் சிகிச்சை அளிக்கக் கூடிய முறை ஒன்றை அவுஸ்திரேலிய ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மலேரியா நோயை உருவாக்கும் புரட்டோசோவா (protozoa) வகை ஒட்டுண்ணி நோயாக்கி குருதியில் உள்ள செங்குருதிக் கலங்களுள் புகுந்து கொண்டு குறிப்பிட்ட காலம் வாழ்வதால் அவ்வாறு ஒட்டுண்ணிகள் புகுந்து கொண்ட செங்குருதிக் கலங்களை உடலில் உள்ள நிர்ப்பீடணம் (immune system) இனங்கண்டு தாக்காதிருக்க உதவும் புரதப் பசைப் படையை உருவாக்கும் 8 புரத மூலக் கூறுகளை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் 8 புரத மூலக்கூறுகள் சேர்ந்து ஆக்கப்படும் அந்த பாதுகாப்புப் பசையில் ஒரு புர…
-
- 4 replies
- 1.6k views
-
-
மைக்ரோசாப்ட் ஓ-ஃபோன் : - இணையத்தில் புதியது ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 2 replies
- 1.9k views
-
-
மலேரியா தாக்கத்தை அதிகளவில் எதிர்கொள்ளும் சூழலைச் சந்திக்கும் ஆபிரிக்கக் கண்டத்தைச் சார்ந்த மக்களை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருந்து மலேரியாவை எதிர்க்க என்று கூர்ப்படைந்த "DARC" மரபணுவைக் கொண்டவர்களிடத்தில் அதே நோய்க்கு எதிராக கூர்ப்படையாத "DARC" மரபணுவைக் கொண்டவர்களைக் காட்டினும் சுமார் 40% அதிகரித்த அளவில் எயிட்ஸ் தாக்கம் ஏற்படுவதாக அமெரிக்க மற்றும் பிரித்தானிய விஞ்ஞானிகள் இனங்கண்டுள்ளனர். மலேரியாவுக்கு எதிராக கூர்ப்படையாத "DARC" மரபணு உடலில் chemokines எனும் இரசாயனத்தின் அளவில் செல்வாக்குச் செய்து, எயிட்ஸ் நோய்க்கான வைரசின் தாக்கத்தை குறைக்கும் வகையில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி போராட வசதி அளிப்பதாகக் கண்டறிந்துள்ள விஞ்ஞானிகள்.. மலேரியாவின் பெ…
-
- 0 replies
- 914 views
-
-
கீழே X மற்றும் Y ற்கு ஒரே பெறுமதி (same values)கொடுக்கப்பட்டுள்ளன. யாரவது X ம் Y ம் சமனில்லை என நிறுவ முடியுமா? X = 34019 ------ (1a) X = abz ---------(1b) Y = 34019 -------(2a) Y=abz -----------(2b) Provide evidence, X is not equal to Y. You are allowed to apply any assumptions/therories or derive your own formula to turn up.
-
- 1 reply
- 1.7k views
-
-
-
தண்ணீரில் ஓடும் கார் யப்பானியர்களால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 1 லீற்றர் தண்ணீரில் 80 கி.மீ வரை ஓடும் என கூறப்படுகிறது. பெற்றோலின் விலைக்கு பதிலான இக்கண்டு பிடிப்பு உலக மக்களுக்கு ஒரு நம்பிக்கையை ஊட்டியுள்ளது என்றால் அது மிகையாகாது. ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ஆற்று நீர்,கடல் நீர் எதுவானாலும் பாவிக்கலாம் என யப்பானிய விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
-
- 1 reply
- 1.5k views
-
-
இந்தியாவின் வடக்கு உத்திரப்பிரதேச மாநிலத்தில் Omkari Panwar எனும் கிட்டத்தட்ட 70 வயது மதிக்கத்தக்க பாட்டி ஒருவருக்கு ஆணும் பெண்ணும் என்று இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. IVF முறையில் கருக்கட்ட வைத்து பாட்டியின் கருப்பையில் வளர்க்கப்பட்ட குழந்தைகள் இரண்டும் சிசேரியன் மூலம் பிரசவிக்கச் செய்யப்பட்டுள்ளன. குழந்தைகள் தலா இரண்டு இறாத்தல் எடையுள்ளனவாக ஆரோக்கியமானவையாக இருக்கின்றன என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்துள்ளன. 70 வயதுப் பாட்டிக்கு ஏற்கனவே இரண்டு மகள்களும் 5 பேரப்பிள்ளைகளும் உள்ளனர். ஆண் வாரிசு வேண்டி இக்குழந்தைகளை இந்த வயதில் பெற்றெடுக்கத் தீர்மானித்ததாக பாட்டியின் கணவர் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்துள்ளார். இந்தப் பாட்டிக்கு அவரின் வயதை நிறுவத்த…
-
- 18 replies
- 2.5k views
-
-
சுமார் 50 மில்லியன் ஆண்டுகளாக எமது பூமிப்பந்தில், பரந்த அளவில், ஆழம் குறைந்த கடற்கரைப் பகுதிகளில் வாழ்ந்து வரும் பவளப் பாறைகளை (coral reefs )உண்டாக்கும் எளிமையான உயிரினங்கள் தற்போது புவி வெப்பமடைத்தல், காலநிலை மாற்றங்கள், கடலோடு மாசுக்கள் கலத்தல், கடற்கரையில் உள்ள இயற்கையான வாழிடங்கள் அழிக்கப்படுதல் மற்றும் மீன்பிடி போன்ற முக்கிய காரணிகளால் முன்னர் எதிர்பார்க்கப்பட்டதை விட விரைந்து அருகி வரும் நிலை சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவொன்றில் இருந்து அறியப்பட்டுள்ளது. இந்தப் பவளப் பாறைகளே கடலரிப்பைத் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி பல்வேறு கடல் வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கான வாழிடத்தையும் இவை அளிக்கின்றன. உல்லாசப் பயணத்துறையில்…
-
- 0 replies
- 2.2k views
-
-
வீரகேசரி நாளேடு - பூமியின் உப கோளான சந்திரனின் மேற்பரப்பின் உள்ளடக்கத்தில் தற்போது நீரில்லை என்பதற்கான ஆதாரங்கள் அண்மைய ஆய்வொன்றின் மூலம் தமக்குக் கிடைத்துள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். சந்திரனில் ஆரம்ப காலத்தில் நீர் இருந்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் இவ்விஞ்ஞானிகள், வெப்ப விளைவுகள் காரணமாக அந்நீர் தற்போது ஆவியாகியிருக்கலாம் என தாம் நம்புவதாகக் கூறுகின்றனர். பிறவுண் பல்கலைக்கழகம், கர்னேஜி விஞ்ஞான நிறுவகம், கேஸ் வெஸ்ட்டர்ன் றிஸேர்வ் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இரண்டாம் நிலை அயன் திணிவு அலை நீள அளவுத்திட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொண்ட இப்பரிசோதனையின் முடிவுகள் "நேச்சர்' சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளன. 3 பில்லி…
-
- 0 replies
- 848 views
-
-
பிப்ரவரி 14, காதலர் தினம் பிப்ரவரி 28, உலக அறிவியல் தினம் மார்ச் 2, உலக புத்தக தினம் மார்ச் 8, உலக மகளிர் தினம் மார்ச் 22, உலக தண்ணீர் தினம் ஏப்ரல் 1, முட்டாள்கள் தினம் ஏப்ரல் 7, உலக சுகாதார தினம் ஏப்ரல் 22, உலக பூமி தினம் ஏப்ரல் 25, உலக இறைச்சல் விழிப்புணர்வு தினம் மே 1, உழைப்பாளர் தினம் மே 8, உலக விலங்குகள் பாதுகாப்பு தினம் மே 11, உலக அன்னையர் தினம் மே 15, உலக குடும்பங்கள் தினம் மே 18, உலக அருங்காட்சியக தினம் மே 31, உலக புகையிலை எதிர்ப்பு தினம் ஜுன் 5, உலக சுற்றுச்சூழல் தினம் ஜுன் 12, உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஜுலை 1, உலக நகைச்சுவை தினம் ஜுலை 11, உலக மக்கள் தொகை த…
-
- 0 replies
- 1.7k views
-
-
இனிய வணக்கங்கள், எல்லாருக்கும் பயன்படக்கூடிய ஒரு பிரயோசனமான பதிவு ஒண்டப்போடுவம் எண்டு நினைச்சுப்போட்டு சிலருக்கு தெரிஞ்சு இருக்கக்கூடிய பலருக்கு தெரிஞ்சு இருக்காத Chris Anderson என்பவர் சொன்ன நீளமான வால் - THE LONG TAIL பற்றிய ஒரு சின்னப் பதிவ இதில போடுறன். Chris Anderson சிலிக்கன் வலியில (Silicon Valley) பிரபலமான Wired magazine இல பிரதான ஆசிரியர். இவர் 2004 ம் ஆண்டில நீளமான வாலப் பத்தின ஒரு கட்டுரை எழுதினார். பிறகு THE LONG TAIL எண்டு ஒரு புத்தகமும் வெளியிட்டார். இவர் சொன்ன கருத்துக்களை ஏற்கனவே வேற ஆக்கள் சொல்லி இருந்தாலும், மேலும் புள்ளிவிபர ஆய்வாளர்களும் இதுபற்றி பல வருடங்களுக்கு முன்னமே கதைச்சு இருந்தாலும், இவர் சொன்னமாதிரி இந்த நீளமான வால் தத்துவத்தை வேற ஒ…
-
- 2 replies
- 1k views
-
-
தொலைகாட்சி,வீடியோ சம்பந்தமான பிரச்சனைகளுக்கு என்னால் முடியுமான ஆலோசனகள் தரமுடியுமென நம்புகிறேன்...பிழையென நினைத்து வெளியில் எறிய முன்.........அல்லது பெரும் பணம் கொடுத்து சீர் செய்ய முன்...... தலைப்பு தமிழில் திருத்தப்பட்டுள்ளது.-யாழ்பிரியா
-
- 2 replies
- 2.6k views
-
-
fig: bbc.com இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான மேகாலயாவில் (Meghalaya) Garo hills பகுதியில் ஒதுக்குப்புறமாக உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் சில இடங்களில், காட்டு மனிதன் (அனுமான் உருவ மனிதன்) ஆங்கிலத்தில் ape-like creature அல்லது நேபாள வழக்கில் yeti அல்லது மேகாலய வழக்கில் mande barung என்று அழைக்கப்படும் உயிரி அவதானிக்கப்பட்டுள்ளதாக அதனை அவதானித்த பலரும் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்துள்ளனர். சுமார் 10 அடி (3 மீற்றர்கள்) உயரமுள்ள சுமார் 300 கிலோகிராம் எடையுள்ளதாக இருக்கலாம் என்று கருதப்படும் இந்த காட்டு மனிதன் உடல் முழுதும் உரோமத்தால் மூடப்பட்டு கறுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் இருப்பதுடன் தாவரபோசணையை உணவுப் பழக்கமாகக் கொண்டிருப்பதாக அவனை அவதானித்த மக்கள் கரு…
-
- 8 replies
- 2.3k views
-
-
fig: bbc.com கிட்டத்தட்ட சூரியனின் பருமனை ஒத்த நட்சத்திரமென்றை சுற்றி வரும் பூமியைப் போல முறையே 4.2, 6.7 மற்றும் 9.4 மடங்கு அதிக பருமனுடைய மூன்று "சுப்பர் - பூமிகள்" (புதிய கோள்கள்) விண்ணில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எம்மில் இருந்து சுமார் 42 ஒளியாண்டுகளுக்கு அப்பால் எமது சூரியனை விட சற்றுச் சிறிய HD 40307 எனும் குறியீட்டு நாமம் இடப்பட்ட நட்சத்திரத்தைச் சுற்றி இக்கோள்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இவை பூமியை விடப் பருமன் கூடியவையாக அமைந்திருப்பதால் இவற்றுக்கு "சுப்பர்" பூமிகள் (super-Earths) என்று பெயரிடப்பட்டுள்ளன. இவை எமது சூரியக் குடும்பத்தில் உள்ள நெப்ரியூன், யுரேனஸ் கோள்களை விடச் சிறியனவையாகும். இத்தகவல்கள் சமீபத்தில் பிரான்சில் நடந்த விண்ணியலாளர…
-
- 0 replies
- 952 views
-
-
Rick Hansen (றிக் ஹான்சன்) யார் இவர்? ஒரு மனிதனின் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு முக்கியமானது எவை என்பதை செயலிலும் சாதித்துக்காட்டிய ஒரு சாதனை வீரரின் சுய கதையை இன்று பலரின்; நன்மை கருதி யாழில் பதிவு செய்கின்றேன். மனிதனாகப் பிறந்து விட்டாலே சோதனை, வேதனை, தடங்கல்கள் இப்படி எத்தனையோ விடயங்களை நாம் தாண்ட வேண்டியிருக்கும். எது எப்படியிருப்பினும் மனதில் திடகாத்திரம் இருந்தால் எதையும் இலகுவில் அடைந்துவிடலாம் என்பது தான் இந்த ஆக்கத்தின் மையக்கருத்து. இந்த சாதனையாளரைப்பற்றிய மேலதிக தகவல்களைப் பெற விரும்பின் இந்த www.rickhansen.com இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.. அந்தச் சிறுவனுக்கு ஓர் இடத்தில் உட்காருவதென்றாலே வெறுப்பு. சாப்பிடுவதற்காவது ஓ…
-
- 3 replies
- 1.3k views
-
-
ஆரியர்கள் தூய்மையானவர்கள் எனும் ஹிட்லரின் கொள்கை: தவறு என மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டது லண்டன்இ ஜூன் 16- வட அய்ரோப்பாவிற்குச் சென்று குடியேறிய ஆரியர்கள்இ அங்கு பிற இனத்தவர்களுடன் கலக் காமல் தூய்மையாக வாழ்ந் தார்கள் என்றும்இ அப்படிப் பட்ட நார்டிக் ஆரியர்கள் உலகத்தில் அனைத்து இனத் தாரைவிட உயர்ந்தவர்கள் என்றும்இ ஜெர்மனியை ஆண்ட (1933-45) ஹிட்லர் கூறினான். ஆரியர் அல்லாதஇ செமிட்டிக் இனத்தவர்களான யூதர்களை தாழ்ந்தவர்கள் என்றும் சொன் னான். அத்துடன் பல லட்சக் கணக் கில்இ யூதர்கள் நச்சு வாயுக் கூடங்களில் அடைத்துக் கொன்றான்; அதற்கு ஹஹொலா காஸ்ட் எனப் பெயர். இந்தக் கொடுமைகளுக்கும்இ இரண் டாம் உலகப் போருக்கும் (1939-45) காரணமானஇ தூய்மையான நார்டிக் ஆரியர் உயர்ந்தவர்கள் எனும் நாஜி…
-
- 0 replies
- 1.1k views
-