Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. சர்வதேச விமான நிலையங்களுக்கிடையில் பறந்த பறக்கும் கார்! -வீடியோ பறக்கும் கார் ஒன்று முதல் தடவையாக இரு சர்வதேச விமான நிலையங்களுக்கு இடையில் பறந்துள்ளது. ஸ்லோவாக்கியாவின் நைத்ரா மற்றும் பிரஸ்திஸ்லாவா நகரங்களிலுள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு இடையில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை (28) 35 நிமிட நேரம் இந்தக் கார் பறந்துள்ளது. வீதிகளில் கார் போன்று இதை செலுத்திச் செல்லாம். அத்துடன் இதனால் வானில் பறக்கவும் முடியும். எயார்கார் (Aircar) என இது அழைக்கப்படுகிறது. இந்தக் கார் பறக்க ஆரம்பிக்கும்போது விமானத்தின் தோற்றத்துக்கு மாறும். பேராசிரியர் ஸ்டீபன் கிளெய்ன் (Stefan Klein) இந்தப் பறக்கும் காரை உருவாக்கியுள்ளார். பி.எம்.டபிள்யூ இயந்திரத்தைக் கொண்ட…

  2. 19 ஜூன் 2021 பட மூலாதாரம்,YU CHEN ஒரு மிகப் பெரிய காண்டாமிருக இனத்தை சீனாவின் வட மேற்குப் பகுதியில் கண்டுபிடித்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது நிலத்தில் நடக்கும் மிகப் பெரிய பாலூட்டிகளில் ஒன்றாக இருந்திருக்கும் என கூறப்படுகிறது. 21 டன் எடை கொண்ட (இது நான்கு ஆப்பிரிக்க யானைகளின் எடைக்குச் சமம்) தி பராசிராதெரியம் லின்சியான்ஸ் (The Paraceratherium linxiaense) என்கிற காண்டாமிருக இனம் 26.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக கூறப்படுகிறது. கொம்பு இல்லாத அந்த காண்டாமிருகத்தினால் ஏழு மீட்டர் உயரமுள்ள மரம், செடி கொடிகளை மேய முடிந்திருக்கும் என்பதால், அது ஒட்டகச்சிவிங்கியை விட உயரமானதாக கரு…

  3. நட்சத்திரங்களை இழக்கும் கடல் June 11, 2021 நாராயணி சுப்ரமணியன் குளிர்ப் பிரதேசக் கடற்பகுதிகளில் மட்டுமே காணப்படுகிற கெல்ப் காடுகளைப் பற்றி, வெப்ப மண்டலத்தவர்களான நமக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கெல்ப் பாசிகள் அதிகம் வளரும் இடங்கள் கெல்ப் காடுகள் (Kelp forests)எனவும், குறைந்த அடர்த்தியில் பாசிகள் இருக்கும் இடங்கள் கெல்ப் படுகைகள் (Kelp beds) எனவும் அழைக்கப்படுகின்றன. இவை கடலுக்கடியில் இருக்கும் மழைக்காடுகள். காடு என்பது இங்கே உருவகம் அல்ல. நிஜமாகவே கடலுக்கடியில் ஒரு பிரம்மாண்ட மரகதக் காடு இருப்பதான தோற்றத்தைத் தரக்கூடியவை கெல்ப் காடுகள். பழுப்பு பாசி வகையைச் கெல்ப் பாசிகள்ஆறு முதல் பதினான்கு டிகிரி செல்சியஸ் வரை உள்ள குளிர் வெப்பநிலையில் செ…

  4. ஷென்சோ-12: சீனா முதல் குழுவினரை புதிய விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியது! சீனா உருவாக்கியுள்ள தியான்ஹே என்ற விண்வெளி நிலையத்தில், கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்காக, பயிற்சி பெற்ற மூன்று விண்வெளி வீரர்கள் விண்ணுக்கு அனுப்ப பட்டுள்ளனர். இன்று (வியாழக்கிழமை) லாங் மார்ச் 2எப் ரொக்கெட் மூலம் ஷென்சூ-12 என்ற விண்கலத்தில் 3 விண்வெளி வீரர்களும் பயணித்தனர். கோபி பாலைவனத்தில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து 09:22 பெய்ஜிங் நேரத்தில் விண்கலம் ஏவப்பட்டது. நீ ஹைஷெங், லியு போமிங் மற்றும் டாங் ஹாங்க்போ ஆகிய மூன்று மனிதர்களும் பூமிக்கு மேலே 380 கி.மீ (236 மைல்) தொலைவில் உள்ள தியான்ஹே தொகுதியில் மூன்று மாதங்கள் செலவிட உள்ளனர். ரொக்கெட் புறப்பட்ட 10 நிமிட…

  5. முழு மரபணு சேர்க்கைத் தொகுப்பு (Whole-Genome Synthesis) பானுமதி.ந ஜூன் 12, 2021 கோவிட்-19-ன் ஆரம்பக் காலக் கட்டங்களில் சீன விஞ்ஞானிகள், அந்தக் கிருமியின் மரபணுத் தொடர்ச்சிகளை, மரபணுத் தரவுகளில் சேர்த்தார்கள். சுவிஸ் நாட்டில் இத்துறையைச் சேர்ந்தவர்கள், அத் தரவுகளைக் கொண்டு அந்தக் கிருமியின் முழு மரபணுவையும் செயற்கையாக அமைத்து அதை உற்பத்தி செய்தார்கள். இதில் கவனிக்க வேண்டிய ஒன்று என்ன வென்றால், அந்த மரபணுக்களை கொரியர் செய்யாமல், அதன் இயல்பு அணுக்களின் மரபினை நேரடியாக ஆய்வுக் கூடத்திற்கு அனுப்ப முடிந்த அந்த ‘டெலிபோர்டிங்’ மற்றும் அதன் வரைபடம் தான். மருத்துவத் துறையிலும், பல்வேறு செயல்களிலும் இந்த முழு மரபணு அச்சு வரைபடம் என்பது துரித…

  6. மண்புழு விவசாய உரம் தயாரிக்கும் முறையும் அதன் பயனும் – மதுஜா வரன் 9 Views பண்டைய காலத்தில் விவசாயமானது இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி செய்யப்பட்டு வந்தது. இதனால் நிறைவான உற்பத்தி அடைந்ததோடு மண்ணின் வளமும் பாதுகாக்கப்பட்டது. ஆனால் இன்றயை சூழலில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பசுமைப் புரட்சியின் காரணமாக அதிக விளைச்சல் தரக்கூடியதும், இரசாயன உரங்களால் கூடுதல் பயன் தரக்கூடியதுமான ரகங்கள் உருவாக்கப்பட்டன. இரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகளின் அதிகமான பயன்பாட்டினால் மண்ணின் வளம் குறைந்ததோடு, மண்ணில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது. எனவே இத்தகைய தரம் குறைந்த, வளமற்ற நிலங்களை வளமான நி…

  7. ஜேம்ஸ் கலேகர் பிபிசி சுகாதாரம் & அறிவியல் செய்தியாளர் பாக்டீரியா தொற்றிய கொசுக்களைப் பரப்பி டெங்கு வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் ஒரு திட்டத்தை பரிசோதனை செய்து பார்த்ததில் 77 சதவீதம் டெங்கு பரவல் கட்டுப்படுவது தெரியவந்துள்ளது என்கிறார்கள் அறிவியலாளர்கள். வோல்பாசியா என்ற இந்த 'அற்புத' பாக்டீரியா தொற்றிய கொசுக்களிடம் டெங்கு கிருமியை பரப்பும் தன்மை கணிசமாகக் குறைகிறது. இந்த பரிசோதனை இந்தோனீசியாவில் இருக்கும் யோக்யகர்தா நகரத்தில் மேற்கொள்ளப்பட்டது. டெங்கு வைரஸை இது முற்றாக ஒழிக்கும் என்ற நம்பிக்கையோடு இப்பரிசோதனை விரிவுபடுத்தப்படுகிறது. உலகம் முழுவதையும் பாடாய்ப் படுத்தும் டெங்கு வைரசுக்கு இது ஒரு தீர்வாக இருக்கலாம் என உலக கொசு த…

  8. அமிலத்தில் கரையும் கடல் பட்டாம்பூச்சிகள் நாராயணி சுப்ரமணியன் கடலின் சூழல் என்பது மிகவும் நுணுக்கமான வேதிவலைப் பின்னல்களால் எப்போதும் சமநிலையில் பாதுகாக்கப்படுகிறது. கடல்வாழ் உயிரினங்கள் பலவும் இந்த சமநிலையையே நம்பியிருக்கின்றன. வேதிக்கூறுகள் மாறும்போது உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. கடல்நீர் அமிலமாதல் (Ocean acidification) என்கிற சூழலியல் பாதிப்பு கடலுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது. பல்வேறு அறிவியல்/அரசியல் குழப்பங்களுக்குப் பிறகு இது உறுதிப்படுத்தப்பட்டு, இப்போது பரவலாக விவாதிக்கப்படுகிறது. அறிவியல் பின்னணி காலநிலை மாற்றத்தோடு கூடவே பிறந்த இரட்டைப் பிள்ளை இது. காலநிலை மாற்றத்துக்கு அடிப்படைக் காரணமாக இருக்கிற கரிம உம…

  9. எம். மணிகண்டன் பிபிசி தமிழ் முக்கிய வானியல் நிகழ்வுகளுள் ஒன்றான சூரிய கிரகணம் ஜூன் 10-ஆம் தேதி நடக்க இருக்கிறது. இது குறித்தும், சூரியனைப் பற்றி நமக்குத் தெரியாத புதிர்கள் குறித்துமான கேள்விகளுக்கு நமக்கு பதில் தருகிறார் இந்திய அரசின் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் மூத்த விஞ்ஞானி டி.வி. வெங்கடேஸ்வரன். சூரிய கிரகணம் என்பது என்ன? மிக எளிமையாகச் சொல்வதென்றால் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது பூமியில் இருந்து பார்த்தால் சூரியன் முழுமையாகவே, பகுதி அளவிலோ மறைக்கப்பட்டிருக்கும் இதைத்தான் சூரிய கிரகணம் என்கிறோம். தமிழில் இதைச் சூரியன் மறைப்பு என்று கூறலாம். தற்போது நடக்கும் சூரிய கிரகணம் எப்படிப்பட்டது? இப்போது நடக்க…

  10. உயிர்சத்துக்களுக்கான கடல்வழிச்சாலை நாராயணி சுப்ரமணியன் தகவல்கள் அடைக்கப்பட்ட கண்ணாடிப் போத்தல்கள் கரையொதுங்குவதும், அதையொட்டிய தேடலில் தொடங்கும் பயணம் காதலில் முடிவதாகவும் பல புனைவுகள் எழுதப்பட்டிருக்கின்றன. எங்கிருந்தோ வீசியெறியப்பட்ட கண்ணாடி பாட்டிலை கரைசேர்ப்பதில் கடல் அலைகளுக்கு மட்டுமல்ல, கடல் நீரோட்டங்களுக்கும் (Ocean currents) பெரும் பங்கு உண்டு. “உள்நாட்டுக் கடல் எல்லைகளில் பிடிக்கப்படுகிற மீன்களில் 90 விழுக்காடு வேறு ஒரு நாட்டிலிருந்து இங்கு வலசை வந்தவை தான்” என்று சமீபத்திய ஒரு ஆய்வில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்த மீன்களின் பயணத்திற்கு நீரோட்டங்களும் துணைபுரிகின்றன. கடல் உயிரினங்களின் வலசைப்பாதையை நிர்ணயிப்பதில் கடல் நீரோட்டங்கள் பெரும…

  11. 250 கிராம் விதை நெல்லில் 1 ஏக்கர் சாகுபடி; 18 ஆண்டுகளாக அசத்தும் விவசாயி! மு.இராகவன்பா.பிரசன்ன வெங்கடேஷ் நெல் ஓர் ஏக்கர் விவசாயம் செய்வதற்கு எனக்கு ஆகும் செலவு ரூ.15,000. மற்ற விவசாயிகள் குறைந்தபட்சம் ரூ.25,000-லிருந்து ரூ.30,000 வரை செலவு செய்கின்றனர். 250 கிராம் விதை நெல்லைக் கொண்டு ஒரு ஏக்கர் நிலத்தில் குறுவை சாகுபடியை கடந்த 18 ஆண்டுகளாக செய்து சாதனை படைத்துவரும் விவசாயிக்கு பாராட்டுகள் குவிகின்றன. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா ஆலங்குடியைச் சேர்ந்தவர் முன்னோடி விவசாயி பெருமாள் (65). நம்மாழ்வாரால் பாராட்டு பெற்ற இவர் 2004-ம் ஆண்டிலிருந்து விவசாயத்தில் புரட்சி செய்து வருகிறார். …

  12. ணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இரண்டு விண்கலன்களும் வெள்ளியில் இன்னும் எரிமலை சீறுகிறதா என்பது முதல் அங்கே கடல் இருந்ததா என்பது வரை பல கேள்விகளை ஆராயும். சூரிய குடும்பத்தில் மிக வெப்பமான கோளான வெள்ளிக்கு இரண்டு விண்கலன்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா. இந்த இரண்டு விண்கலன்களும் புவிக்கு அருகில் உள்ள கோளான வெள்ளியின் வளி மண்டலத்தையும், மண்ணியல் கூறுகளையும் ஆராயும். இந்த விண்கலன் ஒவ்வொன்றையும் அனுப்புவதற்கு தலா 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் விண்கலன் 2028ம்…

  13. Ghost Town: இந்த நகரம் இப்போது உலக வரைப்படத்தில் இல்லை - ஏன் தெரியுமா? | பகுதி 1 Ghost Town: இந்த நகரம் இப்போது உலக வரைப்படத்தில் இல்லை - ஏன் தெரியுமா? | பகுதி 1 இரா.கலைச் செல்வன் Ghost Town: இந்த நகரம் இப்போது உலக வரைப்படத்தில் இல்லை - ஏன் தெரியுமா? | பகுதி 1 Ghost Town இரவு, பகலாக அணையாமல் எரிந்துக் கொண்டேயிருந்தது. மக்கள் பயந்தனர். தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர். ஒரு தொடக்கத்திற்கும், முடிவிற்குமான இடைவெளியில் ஒரு பெரும் பயணம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இயற்கையின் மற்றுமொரு பரிமாணத்திலிருந்து இதைப் பார்த்தோமேயானால், ஒரு முடிவு அல்லது அழிவிலிருந்து தான் புதிய தொடக்கம் தொடங்குகிற…

  14. அடுத்த மாதத்திலிருந்து கூகிளில் படங்கள் வைத்திருப்பதற்கு கட்டணம் அறவிட போவதாக மின்னஞ்சல் வந்தது(நீண்ட நாட்களின் முன்). இப்போது காலம் நெருங்கிவிட்டது. ஆயிரமாயிரம் படங்களை கூகிள் படத்தில் வைத்துள்ளேன்.அத்தனையும் இழக்க முடியாது.பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் பிரயாணப் படங்கள் போனவந்த இடங்களில் நண்பர்கள் உறவினர்கள் என்று நிறையவே இருக்கிறபடியால் எப்படியும் சேமிக்க யோசிக்கிறேன். உங்களுக்கும் இது போல பிரச்சனைகள் இருக்கலாம். ஏதாவது வழிமுறைகள் தெரிந்தால் எழுதுங்கள். நன்றி.

  15. வளர்ந்து வரும் பத்து சிறந்த தொழில் நுட்பங்கள் – 2020 பானுமதி.ந டிசம்பர் 12, 2020 உலகப் பொருளாதார அமைப்பு, ஒரு சிறப்புக் கட்டுரையை ‘மாற்ற முன்னோடிகளின் மாநாட்டில்’ 10 தொழில் நுட்பங்களை முன்னிறுத்தி நவம்பர் 10, 2020 அன்று வெளியிட்டது. அதிலிருந்து நாம் இந்தக் கட்டுரையைத் தொடங்குவோம். மனிதன் பல உயிரினங்களிலிருந்து மாறுபடுவது அவனது சிந்திக்கும் திறனால்தான். உண்ணும் உணவினுக்காய், உலகத்தின் பூபரப்பை, செந்நெல் கழனிகளாய், செங்கரும்புத் தோட்டங்களாய் மாற்றிய வேளாண்மை நாகரிகத்திலிருந்து, கைத்தொழில்களை இயந்திர மயமாக்கியதும் இயந்திரப் புரட்சியிலிருந்து தொழில்நுட்பப் புரட்சிக்கு முன்னேகியதும் அவன் அறிவின் வீச்சிற்குச் சான்று. இவை அனைத்தும் மனித சமுதாயத்திலும் தொழிற்சாலைகள…

  16. செவ்வாய் கிரகத்தை... ஆய்வு செய்வதற்காக, அனுப்பிய விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது: சீனா சீனா, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய தியான்வென்-1 ரோவர் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கி உள்ளது. செவ்வாய்கிரகத்தின் மேல், கீழ் பகுதிகளின் புவியியல் அமைப்பு குறித்து இந்த விண்கலம் ஆய்வு செய்ய உள்ளது. செவ்வாய்கிரகம் தொடர்பான படங்களை எடுக்கவும் கேமராக்கள் இதில் பொருத்தப்பட்டிருக்கின்றன. மேலும் இந்த தியான்வென்-1 ரோவர் விண்கலத்தில் இணைக்கப்பட்டிருக்கும் ஐந்து கருவிகள், செவ்வாய் கிரகத்தின் பாறை தன்மைகள், நீர் ஆகியவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கின்றன. ஏற்கனவே சீனா விண்வெளிக்கு வீரர்களை அனுப்பியுள்ளது. அதே போல நிலவை ஆய்வு செய்வதற்கும் விண்கலங்களை அனுப்பி…

  17. தடுப்பூசி அறிவியல்: யாருடைய சொத்து? டிசம்பர் 2019-ல் கரோனா தலைகாட்ட ஆரம்பித்தது. ஜனவரி 2020-ல் அதன் மரபுக் கட்டமைப்பு அறியப்பட்டது. அடுத்த 10 மாதங்களில் தடுப்பூசிகள் தயாராகிவிட்டன. இம்மாதிரி உயிர் காக்கும் மருந்துகள் மக்களைச் சென்றடைவதில் ஒரு சிக்கல் இருந்துவருகிறது. மருந்து நிறுவனங்கள் புதிய மருந்துகளைக் கண்டறியப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்கின்றன. ஆய்வு வெற்றியடையும்போது நிறுவனங்கள் மருந்தின் கலவையையும் செய்முறையையும் பகிர்ந்துகொள்வதில்லை. எனவே, மருந்துகள் அதீத விலைக்கு விற்கப்படுவதைத் தடுக்க முடிவதில்லை. 1995-ல் உலக வணிக அமைப்பு உருவாக்கிய ஒப்பந்தம் இவர்களின் நலனைக் காக்கிறது. அறிவுசார் சொத்துரிமையில் வணிகம் தொடர்பான சட்டங்கள் (டிரிப்ஸ்) என்பத…

  18. வியக்க வைக்கும் மனித உடல் நாம் தட்டில் உணவை வைத்து, அதை ஒரு ஸ்பூனில் எடுக்கும்போது, உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன. வியக்க வைக்கும் மனித உடல் * மனித உடலின் மூலப் பொருட்களாக, 58 வகையான தனிமங்கள் இருக்கின்றன. அவற்றில் ஆக்சிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர மற்ற தனிமங்கள் அனைத்தும் மண்ணில் இருந்து கிடைத்தவை. மீண்டும் மண்ணோடு கலப்பவை. * மனித உடலின் வளர்ச்சி, 21 வயதோடு நின்று போய்விடும். ஆனால் மனிதர்களின் ஆயுள் முடியும் வரை வளர்வது காது மட்டும்தான். ஒரு மனிதன் ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதாக வைத்துக்கொண்டால், …

  19. முதுகுத் தண்டுக்குள் கேமரா; நூலிழைத் துல்லியத்தில் சிகிச்சை! - Dr. S. கருணாகரன் Sponsored content சிகிச்சை மருத்துவர், நுண் கருவிகளின் துணைகொண்டு, பாதிப்படைந்த நரம்பு/சவ்வைச் சரி செய்கிறார். அப்போது முதுகில் உள்ள திசுக்களோ, எலும்புகளோ, நரம்புகளோ தொடப்படுவதில்லை. இதனால் வழக்கமான அறுவை சிகிச்சையின்போது ஏற்படுகின்ற நரம்புப் பாதிப்புப் பிரச்னை இல்லை. அவர் ஒரு பிளம்பர். வேலை செய்யும்போது, இறுகி இருந்த பைப் ஒன்றைத் தன் முழு சக்தி கொண்டு இழுக்கிறார். அவ்வளவுதான், இடுப்புக்குக் கீழே ஆசனவாய்ப் பகுதியில் இருந்த உணர்வு முழுதும் செயலிழந்து அப்படியே கீழே சரிந்துபோகிறார். உடனடியாக கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனைக்கு அழைத்த…

  20. யூரி ககாரின்: மனிதன் முதல் முறையாக விண்வெளிக்கு சென்று 60 ஆண்டுகள் நிறைவு - மெய்சிலிர்க்கும் தருணங்கள் 12 ஏப்ரல் 2021 பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, யூரி ககாரின் "உலகத்திலிருந்து வெகு தொலைவில், இங்கே நான் ஒரு தகரப் பெட்டியில் அமர்ந்திருக்கிறேன். பூமி நீல நிறத்தில் காட்சியளிக்கிறது. ஆனால், இங்கிருந்து என்னால் எதுவும் செய்ய முடியாது." டேவிட் போயின் ஸ்பேஸ் ஒடிடி இசைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள இந்த வரிகளை விண்வெளிக்குச் சென்ற முதல் நபரான யூரி ககாரின் கண்டிப்பாக உணர்ந்திருப்பார். இரண்டு மீட்டர் விட்டம் கொண்ட ஒரு சிறிய விண்கலத்தில், யூரி ககாரின் ஒரு விண்வெளி வீரரை போன்றல்லாமல் வெறும்…

  21. எகிப்தில் 3,400 வருடங்கள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு 16 Views சுமார் 3,400 வருடங்கள் பழமையான நகரம் தொல்லியல் ஆய்வாளர்களால் எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கி.மு. 1390 காலகட்டத்தில் எகிப்தை ஆட்சி செய்த அமன்ஹோடெப் III என்பவரது ஆட்சிக்காலத்தில் இந்த நகரம் உருவாக்கப்பட்டதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நகரம் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் எகிப்திய பேரரசு செல்வ செழிப்புடன் இருந்த காலகட்டத்தில் பண்டைய எகிப்தியர்கள் எப்படி வாழ்ந்தார்கள்? என்பதை அறிவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தொல்லியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நகரத்தில் சேதமடையாத சுவர்கள், வெதுப்பகம், அடுப்புகள், கல்லறைகள், கருவிகள் நி…

  22. பூமியைத் தாக்கினால் பேரழிவு: நெருங்கிவரும் அப்போபிஸ் கோள் குறித்து நாசா புதிய அறிவிப்பு! 2068ஆம் ஆண்டில் பூமியைத் தாக்கும் என்று கருதப்பட்ட அப்போபிஸ் என்ற சிறுகோள் ஒரு நூற்றாண்டுக்கு பூமியைத் தாக்காது என நாசாவின் புதிய அவதானிப்புகளின் படி தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2004ஆம் ஆண்டில் குறித்த சிறுகோள் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டபோது வானியலாளர்களுக்கு ஒரு பயம் ஏற்பட்டது. அவர்களின் கணக்கீடுகளின் படி அந்தக் கோள் பூமி மீது விரைவாக மோதும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அந்தக் கணிப்பு, பின்னர் 2068இற்குப் பின்தள்ளப்பட்ட நிலையில் தற்போது நாசா, குறைந்தது 100 ஆண்டுகளில் இவ்வாறு மோதல் ஏற்படாது எனத் தெரிவித்துள்ளது. இந்தச் சிறு கோளுக்கு பண்டைய எகிப்திய தெய…

  23. மார்கரிட்டா ரோட்ரிக்ஸ் பிபிசி நியூஸ் முண்டோ மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எடுவார்ட் மற்றும் ஹன்ஸ் ஆல்பெட் ஐன்ஸ்டீன் ஐன்ஸ்டைன் தனது மகனின் மனநல கோளாறுடன் ஈடுகொடுக்க சிரமப்பட்டார் என்று நான் நினைக்கிறேன், "என்று ஐன்ஸ்டைன் பேப்பர்ஸ் திட்டத்தின் ஆசிரியரும் துணை இயக்குநருமான ஃஜீவ் ரோசன்க்ரான்ஸ் கூறுகிறார். 'டெட்' என்ற செல்லப்பெயர் கொண்ட எட்வர்ட், ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் இளைய குழந்தை. சிறு பையனாக அவனது உடல் ஆரோக்கியம் குறித்து குடும்பத்தினர் மிகுந்த அக்கறை கொண்டிருந்தனர். அவனது மனநல பிரச்னைகள் அவன் பெரியவனாகும் வரை வெளியே தெரியவில்லை…

  24. துண்டான தலையில் இருந்து இதயம்,உடலை வளர்க்கும் கடல் அட்டை: விஞ்ஞானிகள் வியப்பு ஜப்பானில் உள்ள நாரா மகளிர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், சாயகா மிட்டோ மற்றும் யோயிச்சி யூசா ஆகியோர் சாகோக்ளோசான் என்ற கடல் அட்டை குறித்து ஆராய்ச்சி நடத்தி வந்தனர்.அப்போது ஒரு நாள், தங்கள் ஆய்வுகூடத்தில் இருந்த கண்ணாடி மீன் தொட்டியில், இருந்த ஒரு கடல் அட்டையின் தலை மட்டும் தனியே நீந்தியபடி இருந்தது. அதன் உடல் தனியே மிதந்து சில மணி நேரத்தில் இறந்துவிட்டது. ஆனால், தலை இறந்து விடாமல், மெல்ல மெல்ல தனது உடலை வளர்த்துக்கொண்டே வந்தது. அடுத்த சில நாட்களில், அந்த அட்டைக்கு, இதயம் உள்பட உடலின் அனைத்து உள் அங்கங்களும் கொண்ட புதிய உடல் முளைத்துவிட்டது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.