அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3258 topics in this forum
-
சூரியனின் மத்திய பகுதியிலிருந்து கடந்த 7-ம் தேதி மிகப்பெரிய அளவிலான ஒளிக்கற்றைகள் பீய்ச்சி அடிக்கப்பட்டன. சூரியன் உமிழ்ந்த இந்த கிளரொளிக் காட்சிகளை நாசாவின் சோலார் டைனமிக் ஆய்வகம் வெளியிட்டுள்ளது. ஏ.ஆர். 1944 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கிளரொளியானது கடந்த பத்து வருடங்களில் காணப்படாத மிகப்பெரிய ஒன்று என்றும் நாசா கூறியுள்ளது. இந்த கிளரொளிக் காட்சியின் போது சக்திவாய்ந்த கதிர்கள் சூரியனிலிருந்து வெடித்து சிதறுகின்றன. இவ்வாறு வெடித்து சிதறிவரும் மனிதனுக்கு தீங்கிழைக்கூடிய கதிர்வீச்சுகள் பூமியின் காற்றுமண்டலத்திற்குள் நுழையமுடியாது. ஆனால் இது பூமிக்கு அருகில் செயல்பட்டு கொண்டிருக்கும் நமது தகவல் தொடர்பு சாதனங்களையும், செயற்கை கோள்களுக்கும் தீங்கிழைக்கக்கூடும். ம…
-
- 0 replies
- 491 views
-
-
செம்மரம் என்றால் என்ன 'டெரோகார்பஸ் சந்தாலினஸ்' எனும் அறிவியல் பெயர் கொண்ட செம்மரம் மணமில்லா சந்தன மர வகையைச் சார்ந்தது ஆகும். இது பெரும்பாலும் மலைப் பிரதேசங்களில்தான் வளரும். சுமார் 3 அல்லது 4 ஆண்டுகளுக்குள் 8 அல்லது 10 மீட்டர் வரை வளர்ந்து விடும். அதன்பிறகு வளர்ச்சி குறையும். 2,200 ஆண்டுகள் கூட செம்மரம் அழியாமல் வளரும். அதனுடைய தண்டுப் பகுதி பயன்படுத்தும் அளவுக்கு வளர்வதற்கு 20 முதல் 25 ஆண்டுகள் வரை பிடிக்கும். இந்த வகை மரம் உலகின் வேறு எந்தப் பகுதியிலும் வளர்வதில்லை என்று ஆந்திர காவல்துறையினர் கூறுகின்றனர். இந்த மரம் குறிப்பாக எங்கே வளர்கிறது முட்புதர் மற்றும் வறண்ட இலையுதிர் காடுகள் உள்ள மத்திய தக்கான பீடபூமிப் பகுதியில் 500 அடி முதல் 3 ஆயிரம் அடிக்கு இடைப்…
-
- 0 replies
- 1.3k views
-
-
குழந்தைகளுக்கான முதல் ஸ்மார்ட்பாேன் அறிமுகம்! ஸ்மார்ட்போன் சந்தையில் அடுத்த புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் அட்டகாசமாக களம் இறங்கியிருக்கிறது ஸ்வைப் டெலிகாம் நிறுவனம். வழக்கமான ஸ்மார்ட்போன் மாடல்களை தவிர்த்து, சந்தையில் அனைவரும் வியக்கும் வகையில் குழந்தைகள் மட்டும் பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அந்த ஸ்மார்ட்பாேன் பற்றிய தகவல்கள்... * ஸ்வைப் நிறுவனம் ஜூனியர் எனும் புதிய மாடல் ஸ்மார்ட்போனை சந்தையில் அறிமுகம் செய்திருக்கிறது. * குழந்தைகள் மட்டும் பயன்படுத்தும் அளவுக்கு இந்த கருவி வடிவமைக்கப்பட்டிருக்கிறது தனி சிறப்பு. * சுமார் 5 முதல் 15 வயதுடைய குழந்தைகள் மட்டும் இந்த கருவியை பயன்படுத்தலாம் என அந்நிறுவனம் தெரிவித்…
-
- 0 replies
- 411 views
-
-
இந்தியாவில் பிக்காசூக்களை பிடிக்கிறீர்களா? சற்றே கவனம் உணவருந்தச் செல்லும் ஹோட்டல்கள் துவங்கி வகுப்பறையின் உள்ளே வரை பிக்காசூக்களைத் தேடி ஒரு கூட்டம் செல்போனும் கையுமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆம் “போக்கிமான் கோ" இந்த வார்த்தையை உச்சரிக்காத ஸ்மார்ட் மொபைல் போன் பயன்பாட்டாளர்களே இருக்க முடியாது எனலாம். "ஆகுமெண்ட்டட் ரியாலிட்டி" தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டு, நிஜ உலகத்தில் மாய உலகின் பூச்சிகளை பிடிப்பதே ஆகும். அமெரிக்காவைச் சேர்ந்த “நயாண்டிக்" என்னும் மென்பொருள் நிறுவனம்தான் "போக்கிமான் கோ"வை இம்மாத தொடக்கத்தில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து போன்ற சில நாடுகளில் வெளியிட்டது. தொடர்ந்து மற்ற நாடுகளிலும் வெள…
-
- 0 replies
- 454 views
-
-
மகுடி இசைக்குக் கட்டுண்டுதான் பாம்பு ‘படம்’ எடுத்து ஆடுகிறதா? இந்தக் கேள்வி நம்மில் சிலருக்கு இருக்காது. ஏனெனில் ‘ஆம்’ என்கிற பதிலில் அசைக்கமுடியாத நம்பிக்கை. எனக்குச் சிறுவயது முதல் இக்கேள்வியும் அதற்கான மேற்படி பதிலில் நம்பிக்கையின்மையும் இருந்தது. குடவாசல் பாம்பாட்டி மகுடி கொண்டு வர மறந்து ஒரு முறை பாம்புக்கூடையின் மூடியை திறந்து அதைவைத்து ஆட்டியே பாம்பை படமெடுக்கச் செய்தது முதல். இதனால் சிறுவயதிலேயே எனக்கு இதற்கு தீர்வு தெரிந்துவிட்டது என்று சொல்லமாட்டேன். இப்பொழுதும் ரேடியோவில் புன்னாகவராளி கேட்கையில் அப்படி இப்படி பார்த்துவிட்டு, காலை நாற்காலி மீது மடித்து வைத்துக்கொள்ளுவேன். சரி, அப்ப விடை என்ன? நம்மில் பலருக்கு மகுடி இசையை கேட்டுதான் பாம்பு படம் எடு…
-
- 0 replies
- 1.9k views
-
-
100,000 ஆண்டுக்கு ஓர்முறை நேரும் மர்மமான பனியுகச் சுழற்சி எப்படி நிகழ்கிறது ? Posted on December 16, 2016 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா ++++++++++++++++++++ நூறாயிரம் ஆண்டுக் கோர்முறை நேரும் பனியுகச் சுழற்சி ! கடல் நீர் சுண்டி, தமிழகத் தென்கரை நீண்டு குமரிக் கண்டம் கூந்தலை விரித்தது! சூட்டுயுகப் புரட்சிக் கணப்பில் படிப்படியாய், பனிப் பாறைகள் உருகி நீர் மட்டம், உஷ்ணம் கடலில் உயர நிலத்தின் நீட்சி மூழ்கும்! கடல் மடி நிரம்பி முடிவில் புதைப் பூமியாய் சமாதி யானது, குமரிக் கண்டம் ! ++++++++++++++ வடதுருவப் பனியுகம் பர…
-
- 0 replies
- 1.2k views
-
-
டிஸ்கவரி விண்கலம் விண்வெளிக்கு ஏவப்படும் காட்சி.
-
- 0 replies
- 1.1k views
-
-
கல்வி பற்றிய எந்தவொரு விவாதத்திலும் தவறாமல் பின்லாந்து நாட்டின் பெயர் இடம் பெற்றுவிடும். தமிழக அரசுப் பள்ளிகளிலிருந்தும் மாணவர்கள் அங்கு கல்விச் சுற்றுலா செல்வது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. உண்மையில், பின்லாந்து நாட்டின் கல்விச் சூழல் எவ்வாறு கட்டமைக்கப்பட்டிருக்கிறது; அதேபோன்ற நிலையை இந்தியாவில் பின்பற்ற முடியாதா... என்று கல்வியாளர் ஆயிஷா இரா.நடராசனிடம் கேட்டோம். ``ஐ.நா சபை ஒவ்வோர் ஆண்டும் கல்வி குறித்து தரப் பட்டியலை வெளியிடுகிறது. அந்தப் பட்டியலில் கடந்த சில ஆண்டுகளாக நான்கு நாடுகளின் பெயர் கட்டாயம் வந்துவிடுகின்றன. அவற்றில் பின்லாந்து மற்றும் டென்மார்க் கட்டாயம் இடம்பெற்றுவிடுகிறது. இந்தளவு தொடர்ச்சியாகச் சாதிக்கும் அளவுக்கு அப்படி என்னதான் பின்லாந்தில் கற்றுக்கொ…
-
- 0 replies
- 466 views
-
-
சிகை திருத்தம் செய்துகொள்வதுபோல மரபணுத் திருத்தம் செய்துகொள்ளலாமா? யானையின் கன்று யானை மாதிரியே பிறக்கிறது. பூனையின் குட்டி பூனை மாதிரியே பிறக்கிறது. ஆனாலும், கருத்தரித்த சில வாரங்களுக்குள் கருப்பையில் உருவாகியிருக்கிற கருவைப் பார்த்தால், மனிதன் முதல் மீன் வரை எல்லா உயிரினங்களிலும் அதன் வடிவம் ஒரே மாதிரியாக இருக்கிறது. நாளாக நாளாகத்தான் கரு, அதன் பெற்றோரின் வடிவத்தைப் படிப்படியாக அடைகிறது. இவ்வாறு பெற்றோரின் வடிவமைப்பு பிள்ளைகளுக்கும் அமைவதற்குப் பாரம்பரியம் என்ற பண்பு காரணமாகிறது. பொதுவான அம்சங்களில் பெற்றோருக்கும் பிள்ளை களுக்கும் இடையில் வடிவ ஒற்றுமை காணப்படுகிற போதிலும், சின்னச் சின்ன விஷயங்களில் வித்தியாசங் களும் இருக்கும். அதன் காரணமாகவே ஒரே ஈற்றில் ஒட்டிப் பி…
-
- 0 replies
- 397 views
-
-
ஒளி வளைவு அறிதல் அரவிந்தன் நீலகண்டன் மே 29 1919 தேதியன்று பூமத்திய ரேகைப் பிரதேசத்தில் ஒரு முழு சூரிய கிரகணம் நிகழ்ந்தது. அன்று ஆப்பிரிக்காவின் கினியா வளைகுடாவில் உள்ள தீவு ஒன்றில் அறிவியலாளர் குழு ஒன்று தயாராக இருந்தது. அதே போல மற்றொரு குழு பிரேஸிலில் ஓரிடத்தில். இக்குழுக்களை ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்தவர் ஆர்தர் எடிங்டன் என்கிற இயற்பியலாளர். சரியாக சொன்னால் வானவியல் இயற்பியலாளர் (astro-physicist). அவர்களது நோக்கம் சூரியனில் முழு கிரகணம் ஏற்படும் போது ஹையடெஸ் எனும் விண்மீன் தொகுப்பை (Hyades star cluster) புகைப்படங்கள் எடுப்பது. இந்த விண்மீன் தொகுப்பு சூரியனுக்கு அருகில் உள்ள தொகுப்பு. முழு சூரிய கிரகணம் அன்று ஆறு நிமிடங்கள் நீடித்தது. அப்போது எவ்வள…
-
- 0 replies
- 802 views
-
-
சாம்சங்கின் துணை நிறுவனமான ஸ்டார் லேப், நியான் என்கிற செயற்கை மனிதனை அறிமுகப்படுத்தியுள்ளது. Above: A few avatars generated by Neon. அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்று வரும் நுகர்வோருக்கான மின்சாதன பொருட்களின் பொருட்காட்சியில், செயற்கை நுண்ணறிவு கொண்டு செயல்படும் 6 செயற்கை மனிதர்களை ஸ்டார் லேப் அறிமுகப்படுத்தியுள்ளது. சாதாரண மனிதர்களை போன்று இவை அனைத்து வகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்த கூடியதாய் உள்ளது. மனிதர்கள் உடனான உரையாடலை சேமித்து வைத்து அதன் மூலம் கற்றுகொண்டு, சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படும் திறன் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நடப்பாண்டின் இறுதியில் இந்த செயற்கை மனிதர்களுக்கான துணையை அறிமுகப்படுத்தும் திட்டம் உள்ளதாகவும் ஸ்டா…
-
- 0 replies
- 751 views
-
-
அங்குமிங்கும் ஆர்ப்பரித்துப் பறக்கும் பறவைகள், வேலையும் இல்லை; நிற்க நேரமுமில்லை என்பதுபோல் பரபரப்பாகத் திரியும் நாய்கள், அசைபோட்டுக் கொண்டே அமர்ந்திருக்கும் கால்நடைகள், பொழுதுக்கும் தூங்கும் பூனைகள் இவையெல்லாம் இரை தேடுதலைத் தாண்டி தம் மனதில் என்ன யோசிக்கும் என்று எப்போதாவது நாம் நினைத்துப் பார்த்து சிரித்துச் சென்றிருப்போம். சில நேரங்களில் விளையாட்டாக அதற்கு ‘வாய்ஸ் ஓவர்’ கொடுத்து கிண்டலும்கூட செய்து மகிழ்ந்திருப்போம். இப்போதைய ஏஐ உலகில், பூனை, நாய்கள் பேசுவது போல் ரீல்ஸ் கூட நாம் டூம்ஸ்க்ரால் செய்யும்போது பார்த்து அடடே நல்லாயிருக்கே என்று லைக்ஸ் போட்டுக் கடந்திருப்போம். ஆனால், உண்மையிலேயே பறவைகள் என்ன நினைக்கின்றன என்பதை, அவற்றின் உணர்வு நிலை எத்தகையது என்பதை முழுவீச்ச…
-
- 0 replies
- 301 views
-
-
மலேரியா எச்சரிக்கை மருந்துகளுக்குக் கட்டுப்படாத மலேரியா ஒட்டுண்ணிகள் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் எல்லைகளுக்குப் பரவி, இந்த நோயைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்கு அச்சுறுத்தலைத் தோற்றுவித்திருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்திருக்கின்றனர். கம்போடியா, பர்மா ,தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் சுமார் 1,000 நோயாளிகளுக்கும் மேற்பட்டோர் மீது நடத்தப்பட்ட ஆய்வுகள் , மலேரிய எதிர்ப்பு மருந்துகளில் மிகவும் சக்தி வாய்ந்த மருந்தான, ஆர்டெமிஸ்னின் என்ற மருந்தால்கூட கொல்லப்பட முடியாத அளவுக்கு ஒட்டுண்ணிகள் வளர்ந்திருப்பதைக் காட்டின. இந்த ஒட்டுண்ணிகள் மருந்துகளுக்கு எதிராக பலம்பெறுவது , ஆசியா மற்றும் ஆப்ரிக்கா ஊடாகப் பரவுவதைத் தடுக்க , நோய் தோன்றிய …
-
- 0 replies
- 287 views
-
-
நியூட்டன் தலையில் ஆப்பிள் விழவே இல்லையா? ஈர்ப்பு விசையை அவர் எப்படி கண்டுபிடித்தார்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐசாக் நியூட்டன் ஆப்பிள் மரத்தடியில் அமரவுமில்லை, அந்த மரத்திலிருந்து அவர் தலைமீது பழம் விழவுமில்லை. கட்டுரை தகவல் எழுதியவர், க. சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தது யார்? இந்தக் கேள்விக்குப் பள்ளிப்பருவத்தில் அனைவருமே ஒருமித்த குரலில் ஐசாக் நியூட்டன் என்று உரக்கச் சொல்லியிருப்போம். அவர் ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தது எப்படி என்ற கேள்விக்கும் அதேபோல் ஒருமித்த குரலில், நியூட்டன் தலையில் விழுந்த …
-
- 0 replies
- 371 views
- 1 follower
-
-
5.3 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விலை போன `விண்வீழ்கல்‘ செவ்வாய்க் கோளைச் சேர்ந்த 24.5 கிலோகிராம் எடையுடைய அரிய விண்வீழ்கலொன்று 5.3 மில்லியன் அமெரிக்க டொலருக்கு Sotheby’s நிறுவனம் நடத்திய ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஏலம் சுமார் 15 நிமிடங்கள் நீடித்துள்ளது எனவும், அதில் நிகழ்நிலை மூலமாக பலர் பங்கேற்றிருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘NWA 16788’ எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த விண்வீழ்கல்லானது 2023ஆம் ஆண்டு சஹாரா பாலைவனத்தில் உள்ள நைஜர் நாட்டின் அகாடெஸ் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் குறித்த விண்வீழ் செவ்வாய்க் கோளிலிருந்து பிரிந்த மிகப்பெரிய துண்டு என்றும் உறுதி செய்யப்பட்டது. இது குறித்து Sotheby’s நிறுவனத்தின் துணைத்தலைவர் கெசேண்ட்ரா ஹெட்டன…
-
- 0 replies
- 148 views
-
-
[size=4]ஆகஸ்ட் மாதக் கடைசி வாக்கில் அமெரிக்காவின் தென் பகுதியை ஐசக் என்று பெயரிடப்பட்ட புயல் தாக்கிய போது மிஸ்ஸிஸிபி நதியானது சுமார் 24 மணி நேரத்துக்குப் பின்னோக்கி ஓடியது. இதற்குப் புயலே காரணம். மிஸ்ஸிஸிபி நதியானது அமெரிக்காவின் மிகப் பெரிய நதியாகும். இந்த நதி கடலில் கலக்கும் இடத்தைத் தான் புயல் தாக்கியது. மணிக்கு சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் வீசிய போது கடும் காற்று கடல் நீரை கரையை நோக்கியும் நதியின் முகத்துவாரத்தையும் நோக்கித் தள்ளியது.அதே நேரத்தில் காற்றினால் கடலில் ஏற்பட்ட அலைகளும் கடல் நீரை நதி முகத்துவாரத்தை நோக்கித் தள்ளின.[/size] [size=4][/size] [size=4]ஐசக் புயலினால் ஏ…
-
- 0 replies
- 648 views
-
-
அறிவியல் பார்வையும், ஒட்டுமொத்த சமூக திரட்டலுமே கரோனா கிருமிக்கு எதிரான போரில் நமது ஆயுதங்கள்…! கரோனா கிருமியும் கணிதமும் இதுவரை உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தாக்குதலில் மடிந்தவர்களின் எண்ணிக்கை 9,840. சீனாவில் சாலை விபத்தில் ஒவ்வொரு நாளும் 700 பேர் மடிகிறார்கள். இந்தியாவில் ஆண்டுதோறும் பாம்புக்கடிக்கு மட்டும் மரணிப்பவர்கள் சுமார் ஐம்பதாயிரம். அப்படி என்றால் ஏன் கரோனா வைரஸ் குறித்து உலகளாவிய பீதி? இலுமினாட்டிகளின் சதி, சந்தை மார்கெட் சரிவு செய்ய சீன பொருளதார யுத்தம், தனது பொருளாதார தோல்வியை மறைக்க தேவையற்ற பீதியை அரசு செய்கிறது, இயற்கையை மன…
-
- 0 replies
- 1.1k views
-
-
பருவநிலை மாற்றமடையும் வேகம் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு தற்காலிகமாக குறையும் என்று பிரிட்டனின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூவியின் வெப்பநிலை தொடர்ந்து உயரும் என்றாலும், வெப்பநிலை உயர்வு முன்பு கணிக்கப்பட்ட அளவை விட இருபது சதவீதம் குறைவாக இருக்கும் என்றும் அது கணித்துள்ளது. இயற்கை காரணங்கள் காரணமாக புவி வெப்பமடைவது குறைந்திருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சூரியனில் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படும் மாற்றங்களும் கடல் நீர் சுழற்சியும் இதில் முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன. இயற்கை மாற்றங்களால் சற்றே தணியும் புவி வெப்பமடையும் வேகம், எதிர்காலத்தில் வெப்ப வாயுக்கள் வெளியீட்டால் மீண்டும் பழைய படி அதிகரிக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.…
-
- 0 replies
- 426 views
-
-
பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான யானைக் குட்டியின் உடல் இதுதான். அகழ்வாராய்ச்சியில் அபூர்வமான பொருட்கள் கிடைப்பது ஆச்சரியமான விஷயம் இல்லை. அந்தக் குட்டியானையின் உடல் இப்போது லண்டனிலுள்ள இயற்கை உயிரின அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.ஆனால் எந்தவிதமான சேதாரமும் இல்லாமல் 42,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த மேமோத் எனப்படும் மாமத யானை அல்லது கம்பளி யானை என்று அழைக்கப்படும் உயிரினத்தின் முழுமையான உடல் ஒன்று கிடைத்துள்ளது அதிசயம் மட்டுமல்லாமல் ஆச்சரியமானதும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சைபீரியாவில் பனிப்பகுதிகளில் அலைந்து திரியும் மான்களை மேய்க்கும் ஒருவரால் இந்த யானையின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது 50 கிலோ எடையும் 130 செ மீ உயரமும் இருக்கிறது. …
-
- 0 replies
- 587 views
-
-
நவீன விவசாயத்தில் வெற்றி பெற்ற உலக நாடுகள் https://ezhunaonline.com/wp-content/uploads/2023/05/331310668-44100-2-23323367b2123.m4a ஒலி வடிவம் இங்கே.... நம்மிடையே உள்ள பாராம்பரிய வேளாண்மை முறைமைகளில் நவீன நுட்பங்களை புகுத்தி, இலங்கையில் ஒரு விவசாயப் புரட்சியை ஏற்படுத்துவதற்கான நவீன விவசாயக் கொள்கைகளை உருவாக்கும் சாத்தியங்கள் குறித்து ஆராய்ச்சி முடிவுகளுடன் தர்க்கித்து, மக்களுக்கும், விவசாயத்துறை சார்ந்தவர்களுக்கும் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாது ஆராய்ச்சித் துறை மாணவர்களுக்கு உசாத்துணை ஆதாரமாகவும் ‘இலங்கையின் வேளாண்முறைமையில் நவீன நுட்பங்கள்’ என்ற இந்தக்கட்டுரைத்தொடர் அமைகிறது. இலங்கையின் பாரம்பரிய வ…
-
- 0 replies
- 1.2k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜோனதன் ஓ கேலகன் பதவி, பிபிசி ஃப்யூச்சர் 26 அக்டோபர் 2023 கடந்த சில காலமாக விண்வெளியில் உயிர்கள் வாழ்வதற்கு உகந்த இடம் உள்ளதா என நாம் ஆராய்ந்து வருகிறோம். பிரபஞ்சத்தில் வேறு எங்கும் உயிர்கள் இருக்கக்கூடும் என்பதற்கான சில சாத்தியக்கூறுகளை வானியல் ஆய்வாளர்கள் அடையாளம் கண்டிருந்தாலும், வேற்றுகிரகவாசிகள் வாழ்வதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இன்னும் கிடைக்கவில்லை. ஆனால், ஒருவேளை நிஜமாகவே ஏலியன்கள் இருந்தால்? ஏலியன்கள் இருக்கிறார்களா என நாம் உற்றுப் பார்ப்பது போல அவர்கள் பூமியை உற்று நோக்கினால், பூமியில் மனிதர்கள் இருப்பதை அவர்களால் பார்க்கமுடியுமா?…
-
- 0 replies
- 809 views
- 1 follower
-
-
மனித கொழுப்பிலிருந்து காது, மூக்கு தயாரிப்பு: இங்கிலாந்து மருத்துவர்கள் சாதனை [Thursday, 2014-03-06 12:09:00] பிறவியிலேயே சிலர் காது, மூக்கு இன்றி பிறக்கின்றனர். மேலும் விபத்துகளிலும் அவற்றை பறிகொடுக்கின்றனர். அது போன்ற குறை உள்ளவர்கள் இனி கவலைபட தேவையில்லை. அவர்களுக்காக தற்போது மனித கொழுப்பில் இருந்து மூக்கு, காது போன்ற உறுப்புகளை இங்கிலாந்து டாக்டர்கள் உருவாக்கியுள்ளனர். இச்சாதனையை லண்டனில் உள்ள கிரேட் ஆர்மண்ட் ஸ்டிரீட் ஆஸ்பத்திரி மற்றும் யூ.சி.எல்.இன்ஸ்டியூட் குழந்தைகள் நல ஆஸ்பத்திரி டாக்டர்களும் படைத்துள்ளனர். மேற்கண்ட உடல் உறுப்புகள் தேவைப்படும் குழந்தைகளின் வயிற்றின் அடிப்பகுதியில் இருந்து சிறிதளவு கொழுப்பு எடுத்து அதில் இருந்து ஸ்டெம் செல்கள் பிரித்த…
-
- 0 replies
- 424 views
-
-
வாஷிங்டன், இந்தியாவில் பழைய லேப்டாப் பேட்டரியை கொண்டு குடிசைபகுதிகளுக்கு மின்சாரம் வழங்க முடியும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற வளரும் நாடுகளிலும் மின்சாரம் வழங்க முடியும் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் நடந்த மாநாட்டில், அப்புறப்படுத்தப்படும் பேட்டரிகளின் மாதிரிகளை கொண்டு செய்யப்பட்ட ஆய்வில், எல்.இ.டி. விளக்கை ஒருவருடத்திற்கு, நாள் ஒன்றிற்கு 4 மணி நேரங்களுக்கு மேலாக எரியசெய்யும் அளவு 70 சதவீத ஆற்றல் உள்ளது என்று ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது. ஐ.பி.எம். இந்தியா ஆய்வு குழுவினரின் தகவலின்படி, இந்தியாவில் ஒரு வருடத்திற்கு சுமார் 50 மில்லியன் லித்தியம் அயன் லேப்டாப் பேட்டரிகள் அப்புறப்படுத்தப்படுகிறது, இதன்மூலம் வளரும் ந…
-
- 0 replies
- 589 views
-
-
கல்வியில் சாதிக்க மரபணுக்கள் உதவுகின்றனவா? ஆராய்ச்சியில் புதிய முடிவுகள் காய்லி ரிம்ஃபெல்டு &மார்கெரிட்டா மலான்சினி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஒரு குழந்தையின் மரபணுக்கள், பள்ளியில் கல்வித் திறமையைத் தீர்மானிப்பதில் பங்கு வகிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். படத்தின் காப்புரிமைEYE UBIQUITOUS/UIG VIA GETTY IMAGES பள்ளிகளில் குழந்தை…
-
- 0 replies
- 365 views
-
-
வீரகேசரி இணையம் 7/11/2011 4:03:07 PM நேக்ட் மோல்' எனப்படும் எலி வகையின் மரபணுக்களைத் தொடர்ச்சியாக ஆராய்ச்சி செய்வதன் மூலம் புற்றுநோய்க்கெதிரான மருந்துக் கண்டுபிடிப்பில் புதிய புரட்சியை மேற்கொள்ள முடியுமென விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து லிவர்பூல் பல்கலைக்கழக விஞ்ஞானிகளே முதன்முறையாக இவ்வகை எலியின் முழு மரபணு வரைவினை வெளியிட்டுள்ளனர். லண்டன் குயீன்மேரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் இணைந்தே இவ்வாய்வை மேற்கொண்டுள்ளனர். ' நேக்ட் மோல்' (Naked Mole) எலிகள் இவ்வகை எலிகளானது கிழக்கு ஆபிரிக்காவில் பரவலாக உள்ளன. இவற்றின் ஆயுட்காலம் சுமார் 30 வருடங்களாகும். அதாவது சாதாரண எலிகளை விட 7 முதல் 10 மடங்கு அதிக காலம் இவை வாழக்கூடியவை. …
-
- 0 replies
- 1k views
-