அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3258 topics in this forum
-
[செவ்வாயில் கியூரியோசிற்றி ஆய்வில் ஈடுபட்டுள்ள போது] செவ்வாயில் மீதேன் (காபன் மற்றும் ஐதரசன் கொண்ட ஒரு வாயு - CH4) வாயுவின் இருப்புப் பற்றி ஆராய அனுப்பப்பட்ட நாசாவின் கியூரியோசிற்றி ரோபோ விண்கலம் அதன் முயற்சில் தோல்வி கண்டதை அடுத்து செவ்வாயில் இன்னும் உயிரினங்கள் குறிப்பாக நுண் உயிரினங்கள் இருக்கக் கூடும் என்ற விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பை மலினப்படுத்தியுள்ளதாக நாசாவை ஆதாரம் காட்டி செய்திகள் வெளியாகி உள்ளன. பூமியின் வளிமண்டலத்தில் மீதேன் வாயு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளமையும் அதன் பெரும்பகுதி நுண்ணுயிர்களால் குறிப்பாக பக்ரீரியாக்களால் ஆக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கதாகும். செவ்வாயில் மீதேன் இருப்பு கண்டறியப்பட்டிருந்தால்.. அங்கு தற்போதும் உயிரினங்களில் சில வகைகள் வாழக்…
-
- 1 reply
- 805 views
-
-
-
அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் சுமார் 36 ஆண்டுகளுக்கு முன்னர் (1977 இல்) விண்ணுக்கு அனுப்பிய Voyager விண்கலம் நீண்ட பயணத்தின் பின்னர் சூரிய மண்டலத்தை விட்டு வெளியேறி எமது பால்வீதி அகிலத்தின் இன்னொரு பகுதியில் பயணித்துக் கொண்டிருப்பதாக நாசா அறியத்தந்துள்ளது. மனிதன் உருவாக்கிய ஒரு பொருள் விண்வெளியில் இத்தனை தூரம் பயணித்தமை இதுவே முதற்தடவையும் ஆகும். Voyager இப்பொழுது பூமியில் இருந்து சுமார் 19 பில்லியன் கிலோமீற்றர்கள் தொலைவில் உள்ளதாகவும் அதில் இருந்து சமிக்ஞைகளைப் பெற 17 மணி நேரங்கள் ஆவதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அத்தோடு சில சந்தர்ப்பங்களில் Voyager இல் உள்ள உணரிகள் அதன் உள்ளக சூழ்நிலை மாற்றமடைவதை இனங்காட்டியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். …
-
- 14 replies
- 1.2k views
-
-
அப்பிள் நிறுவனமானது தனது ஐபோன் வரிசையின் அடுத்த ஸ்மார்ட் போனை நேற்று அறிமுகப்படுத்தியது. இறுதியாக வெளியாகியிருந்த ஐபோன்5 வின் தொடர்ச்சியாக ஐபோன் 5எஸ் நேற்று உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்து வைக்கப்பட்டது. எனினும் ஐபோன் 5எஸ் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் மேற்படி நிகழ்வில் அனைவரது கவனத்தினையும் வேறொன்று ஈர்த்திருந்தது. ஆம், நீண்ட நாட்களாக வெளியாகும் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டு வந்த குறைந்த விலை ஐபோன் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.முற்றிலும் பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்டுள்ள இது 3 ஆம் தர பாவனையாளர்களை இலக்குவைத்து வெளியாகியுள்ளது. ஐபோன் 5எஸ். அப்பிளின் கடைசி வெளியீடான ஐபோன்5 இன் அடுத்த வெளீயீடாக வெளியாகியுள்ளது.தங்க நிறம் மற்றும் சில்வர் மற்றும்…
-
- 10 replies
- 5.8k views
-
-
அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ரக ஐ-போன்களில் முதன் முறையாக தமிழ் மொழி இடம் பெற்றுள்ளது நவீன செல்பேசி யுகத்தில், தமிழ் உலகம், வரலாற்றில் பதிவு செய்யக் கூடிய ஒரு மறக்க முடியாத திருப்பு முனையாகும். இதுவரை வெளிவந்துள்ள திறன்பேசிகளில் (smart phone) அறிமுகப்படுத்தப்பட்ட iOS 7 எனப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் செல்பேசிகளில்தான் விசைத் தட்டுடன் (keyboard) கூடிய தமிழ் இயங்குதளம் அதன் மென்பொருளிலேயே சேர்த்து இணைக்கப்பட்டுள்ளது என்பதும் இதன்மூலம் தமிழ் விசைகளை நேரடியாக நாம் பயன்படுத்த முடியும் என்பதும் நவீன தொழில் நுட்பத்தில் தமிழுக்கு ஏற்பட்டுள்ள புரட்சிகரமான முன்னேற்றமாகும். இனி ஐபோன்களிலும் “முரசு அஞ்சல்” விசைத்தட்டுimage புதிய ஐ-போன் ரகங்களில் “தமிழ் 99” மற்றும் …
-
- 2 replies
- 2.3k views
-
-
ஸ்னோடென் அறியாத ரகசியம் பாஸ்டன் பாலா ஹவாய் தீவுகளின் எரிமலைகளுக்கு நடுவில் அந்தக் கட்டிடம் இருக்கிறது. அமெரிக்க பாதுகாப்பு அமைப்பு (என்.எஸ்.ஏ) இருக்கும் இடத்திலிருந்து நாற்பதே நிமிடத்தில் வைகிகி கடற்கரைக்கு சென்றுவிடலாம். பூமிக்கு அடியே பதுங்குகுழி மட்டுமே முன்பு ஒயாஹு தீவில் வைத்திருந்தார்கள். வளர்ந்து வரும் ஆசிய புலிகளையும் வளர்ந்து விட்ட சீனப்புலியையும் வேவு பார்ப்பதற்கு அத்தனை சிறிய நிலவறை போதாது என்பதால் 358 மில்லியன் டாலர் செலவில் சென்ற ஆண்டுதான் விஸ்தரித்து திறக்கப்பட்டது. அமெரிக்கா உளவு பார்ப்பதைப் போட்டுக் கொடுத்த எட்டப்பன் எட்வர்டு ஸ்னோடென் இங்கேதான் வேலை பார்த்தார். எட்வர்ட் ஸ்னோடென் நேரடியாக என்.எஸ்.ஏ.விற்கு வேலை பார்த்தவர் இல்லை. அந்த நிறுவனத்தில் …
-
- 0 replies
- 790 views
-
-
Panoramic- படங்கள் எப்படி எடுப்பது? பெனோரமிக் படங்கள் என்பது நம்மைச் சுற்றி இருக்கும் வெளியை முழுமையாகக் காட்ட முயற்சிப்பது. அதிக பரப்பளவைப் படத்தில் கொண்டுவர முயற்சிப்பது. 'wide shot'-க்கும் இதற்கும் வித்தியாசம் உண்டு. wide shot என்பது நாம் உபயோகிக்கும் லென்ஸைப் பொறுத்துக் குறிப்பது. Panoramic Photo என்பது நீள்வாக்கில்('Horizontally') அகண்ட பரப்பளவுக் கொண்ட புகைப்படத்தைக் குறிப்பது. நாம் ஒரு இடத்தில் நின்றுக்கொண்டு சுற்றி 360 டிகிரியும் பார்த்தால் எப்படி இருக்குமோ அதை ஒரு படத்திலேயே கொண்டுவருவது. பொதுவாக நாம் எடுக்கும் படங்களில் ஒரு குறிப்பிட்ட அளவு பரப்பளவை மட்டும்தான் எடுக்கமுடியும், நாம் உபயோகிக்கும் லென்ஸின் 'ஃபோக்கல் லென்ந்தைப்' பொறுத்துப் பரப்பளவு மாறுபட…
-
- 1 reply
- 1k views
-
-
Rimac எனும் நிறுவனம் ஒன்று மணிக்கு 65 கிலோமீற்றர் வேகத்தில் பயணம் செய்யக்கூடிய Greyp G12 எனும் சைக்கிளை உருவாக்கியுள்ளது. இந்த வேகத்தை எட்டுவதற்காக விசேட மோட்டார் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. இதில் காணப்படும் மின்கலமானது ஒரு முறை மின்னேற்றப்பட்ட பின்னர் 120 கிலோமீற்றர்கள் தூரம் பயணிக்கக்கூடிய சக்தியை வழங்குகின்றது. இந்த மின்கலமானது 220 Volt மின்னோட்டம் மூலம் 80 நிமிடங்களில் 100 சதவீதம் சார்ஜ் செய்யக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=92260&category=CommonNews&language=tamil
-
- 2 replies
- 674 views
-
-
இயற்பியலும் தத்துவமும் இளையா 100 ஆண்டுகளுக்கு முன் முதன்முறையாக 1911-ல் சால்வே மாநாடு பெல்ஜியத்தில் நடந்தது. எர்னெஸ்ட் சால்வே என்பவர் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர். தொழிலதிபர். பல கல்வி நிறுவனங்களைத் தோற்றுவித்தவர். அவர் அழைப்பின் பேரில் ஐரோப்பாவின் மிகச்சிறந்த விஞ்ஞானிகள் பலர் மாநாட்டில் கலந்துகொண்டனர். இயற்பியலில் உள்ள சிக்கலான விஷயங்களைப் பற்றிப் விவாதித்தனர். இந்த மாநாடு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இன்றும் நடத்தப்படுகிறது. கடைசியாக 2011-ல் நடைபெற்ற மாநாட்டின் கரு ‘குவாண்டம் உலகின் கோட்பாடு- The theory of Quantum world’. இந்தக் கரு அதன் குழந்தை நிலையில் கிட்டத்தட்ட 80 வருடங்களுக்கு முன்னரே 1927-ல் விவாதிக்கப்பட்டது. 1927-ல் நடைபெற்ற ஐந்தாவது …
-
- 0 replies
- 6.2k views
-
-
அமெரிக்காவுக்கு வயிற்று வலி, நாங்கள் மருந்து சாப்பிட வேண்டியிருந்ததால் பல நாட்களாக பதிவிட முடியவில்லை.சென்ற பதிவில் தனி நபர் தகவல்களை அதிகார வர்க்கம் எப்படியெல்லாம் திருடி தங்கள் சுய லாபங்களுக்காக உபயோகிக்கிறார்கள் என்று பார்த்தோம். இந்த தகவல் திருட்டை தடுக்க சில எளிய வழிமுறைகளைப் இப்பொழுது பார்க்கலாம். நேரிடையாக உள்ளே போவதற்குள் ஒரு சிறிய கதை.! "தொலைவில் வசித்து வரும் இரண்டு நண்பர்கள் தினமும் இரவு அந்த நாளின் நிகழ்வுகளை தொலைபேசியில் பரிமாரிக்கொள்கிறார்கள். ஆனால் இருவரும் "உள்நாட்டுப்போர் நடந்து கொண்டிருக்கும் செழிப்பான"இரு நாட்டின் எல்லைகளில் வசிப்பதால் அடிக்கடி பேசிக்கொள்வது நாட்டின் அரசியல் விவகாரங்கள். அந்த நாடுகளின் இயற்கை வளத்தை கொள்ளையடிக்க உலக வல்லரசுகள் குட்டிக்…
-
- 0 replies
- 682 views
-
-
கலிலியோ vs ரோமன் கத்தோலிக்க திருச்சபை... கலிலியோ தொடர்பில் 2 பதிவுகள் ஏலவே பார்த்தாயிற்று இது இறுதிப்பதிவு.கலிலியோ என்ற விஞ்ஞானி மரபு ரீதியாக நம்பிவந்த விடயங்களை எதிர்த்தான் ஆனால் அந்த மரபுரீதியான விடயங்கள் கிறீஸ்தவ சமயத்திற்குள்ளும் ஆழ ஊடுருவி இருந்ததால் கலிலியோ மீது மதத்தாக்குதல் நடத்தப்பட்டது.ஆயுள்தண்டனை வீட்டுச்சிறை எனப்பலவற்றை கலிலியோ அனுபவிக்க நேர்ந்தது கலிலியோவின் புத்தகங்களை விற்றல் வாங்குதல் மரணதண்டனைக்குரிய குற்றமாகக்கருதப்பட்டது.இறுதி நாளில் தொற்று நோயால் பாதிக்கபப்ட்டபோது கூட வைத்தியர் அனுமதிக்கப்படவில்லை மதம் கலிலியோவை முற்றாக அழிப்பதற்கு தன்னால் ஆனமுழுமுயற்சியையும் மேற்கொண்டு தோற்றது ஆனால் கலிலியோவும் மனமுடைந்துதான் போனார் ஒரு மனிதன் எத்தனை எதிர்ப்பு…
-
- 1 reply
- 2.6k views
-
-
It's your turn to vote Which project is most likely to change the world? Check out the 15 finalist projects and cast your nomination for the voter’s choice award by August 30. https://www.googlesciencefair.com/en/2013/
-
- 0 replies
- 815 views
-
-
www.tamilarchives.org http://tamilarchives.org/ By the Grace of God, Most Gracious, Most Merciful - On this day, I declare to initiate the construction of the Website which would slowly grow to become the largest virtual streaming video archive in Tamil over the next 22 years. இதுவரை பதிவுகளை கொடுத்த அனைத்து அறிஞர்களுக்கும் மனமார்ந்த நன்றி. ஒரு தனி மனிதனால் என்ன செய்துவிட முடியும் ? இப்படி, நிறைய நண்பர்கள் என்னை கேட்டார்கள் அவர்களுக்கான எனது பதில்...... ஒரு தனி மனிதனால் என்ன செய்துவிட முடியாது....... ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியின் நான்கு சுவர்களுக்கு உள்ளே வாழும் ஒரு தனி மனிதனே இவ்வளவு செய்யும்பொழுது ? தமிழே உயிர் என்று மேடைகளில் பேசும் தமிழ் ஆர…
-
- 0 replies
- 627 views
-
-
புகைப்படக் கருவி எவ்வாறு தொழிற்படுகின்றது? புகைப்படக் கருவியை வைத்திருக்கும் நாம் எல்லோரும் அது எவ்வாறு தொழிற்படுகின்றது என அறிந்திருத்தல் மிகவும் பயனுள்ள விடயமாகும். கமெரா ஒன்றின் அடிப்படைப் பகுதிகள் கீழே காட்டியவாறு அமைந்திருக்கும். நாம் கமெராவை ஒரு பொருளின் மீது குவியப்படுத்தும் (focus) போது பொருளில் இருந்து தெறிப்படையும் ஒளிக்கதிர்கள் (Light rays) கமெராவின் வில்லைகளின் (lens) ஊடாக பயணித்து ஆடி ஒன்றில் (flip-up mirror) தெறிப்பு அடைந்து கமெராவின் பார்வைப்பகுதியை (view finder) அடைந்து விம்பமாக (image) பிரதிபலிக்கின்றன. பார்வைப்பகுதியில் தெரியும் விம்பத்தை அவதானித்து எமது புகைப்பட தேவைக்கு ஏற்றவாறு கமெராவை சரிசெய்து (adjusting the settings) கமெராவின் பொத்தானை (sh…
-
- 8 replies
- 1.1k views
-
-
பல வருடங்களுக்குப் பின், கல்லூரி நண்பனை எதேச்சையாக வழியில் சந்திக்கிறீர்கள். இழந்த இளமை சற்றே எட்டிப் பார்க்க ஆனந்தமாக அவருடன் ஒரு உணவகத்துக்குச் சென்று உரையாடுகிறீர்கள். பல விசயங்கள் பேச்சினிடையே வந்து போகின்றன. கல்லூரி நாட்களில் மிகவும் நியாயமானவனும், நேர்மையானவனும் என்று மதிக்கப்பட்ட நண்பன் அவன். திடீரெனப் பேச்சு வேறு ஒரு திசைக்கு மாறுகிறது. நண்பன் உங்களிடம் கேட்கிறார், "டே மச்சான், "பேய் இருக்குன்னு நம்புறியா?" "என்ன மச்சி! திடீர்ன்னு இப்படிக் கேட்கிற? பேய்கள், ஆவிகள் எதையும் நான் நம்புவதில்லைடா" "எனக்குத் தெரியும்டா மச்சான், நீ நம்பமாட்டன்னு. ஆனால் பேய் இருக்குடா. நான் அதைப் பார்த்தேன்" "என்னடா சொல்றா? பார்த்தியா? யார், நீயா, எப்படா? என்ன விளையாடுறியா?" "இல்லை…
-
- 4 replies
- 1.8k views
-
-
கடல்கள் மற்றும் பெருங்கடல்கள் பற்றிய உண்மைகள் Image Courtesy: oceanexplorer.noaa.gov அமெரிக்காவின் கொலோரடாவிலுள்ள பவுல்டர் நகரில் அமைந்திருக்கும் கொலோரடா பல்கலைக்கழக்கத்தில் புவியியல் அறிவுகளின் பேராசிரியராகப் பணியாற்றும் டாக்டர் வில்லியம் ஹே அவர்களை தங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம். அவர் முன்பு அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் மியாமியிலுள்ள மியாமி பல்கலைக்கழகத்தில் உள்ள ரோசன்ஸியல் பள்ளியிலுள்ள கடல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியலின் தீன் ஆகவும் முன்பு பணியாற்றியுள்ளார். திருக்குர்னிலும் ஹதீதிலும் காணப்படும் அறிவியல் அத்தாட்சிகள் குறித்து நாம் செய்யும் ஆராய்ச்சி தொடர்பான ஒரு சிலவற்றை நமக்குக் அவர் காண்பிக்கும் வகையில் அவருடன் ஒரு கடல் பயணம் செய்தோம். கடலின் மே…
-
- 2 replies
- 1.1k views
-
-
நானோ டெக்னாலஜியில் புதிய டிஸ்க் ப்ளூ ரே யை விட2,800 மடங்கு அதிக ஆயுட்காலம் கொண்ட நானோ டெக்னாலஜியில் கண்ணாடியால் கட்டமைக்கப்பட்ட ஒரு படிகத்தை ( crystal of nano structured glass) பிரிட்டனில் ஒரு ஆராய்ச்சி குழு கண்டறிந்துள்ளது. இதன் ஆயுட்காலம் மனித குலம் அழிந்து வேறு கிரகவாசிகள் வரும் வரை இருக்குமாம். (DVD ன் ஆயுட்காலம் ஏழுவருடங்கள் தானாம்). புதிதாக உருவாக்கப்பட்ட இந்த சேமிப்பு சாதனம் (storage device) ஒரு டிவிடி அளவிலான வட்டு 360 டெராபைட்டுகள் சேமிப்பு திறன் கொண்டதாக இருக்கும். சமீபத்திய கண்டுபிடிப்பான நான்கடுக்கு ப்ளூ ரே டிவிடி அதிகபட்ச கொள்ளளவு 128 ஜிகாபைட் மட்டுமேஉள்ளது. நன்றி : myscienceacademy.org http://oseefoundation.wordpress.com/2013/07/13/%E0%AE%A8%E0%A…
-
- 1 reply
- 535 views
-
-
மல்டி லெவல் மார்க்கெட்டிங்கில் நீங்கள் கோடி கோடியாகச் சம்பாதிக்க முடியும் என்பார்கள். ஒரே நாளில் குபேரனாக ஆகவிடலாம் என்று வலை வீசுவார்கள். எம்எல்எம்-ல் சேருங்கள் என்று பலரும் உங்களுக்கு ஆசை காட்டி இருப்பார்கள். அசந்தால் ஆளை விழுங்கிவிடுவார்கள். உங்களுக்கும் சபலம் தட்டத்தான் செய்யும். என்ன குடிமுழுகிவிடப் போகிறது என்று முயன்றுதான் பார்ப்போமே என்று நினைப்பீர்கள். நீங்கள் கொஞ்சம் நல்ல மனிதராக இருக்கிறீர்கள். உங்களுக்குக் கொஞ்சம் கணக்கும் தெரியுமானால் இந்தக்கற்பனைக் கோட்டைக் கனவில் இருந்து தப்பித்து விடலாம். ஏமாற்றுவதையே தொழிலாக ஏற்றுக் கொள்ளலாம் என்று எண்ணுபவர்கள் இந்த வழியில் எப்படி வேண்டுமானாலும் சம்பாதித்துவிட்டுப் போகட்டும். நீங்கள் ஒதுங்கி இருப்பது எப்படி என்பதை…
-
- 0 replies
- 856 views
-
-
ந.செல்வன் - புகைப்படக் கலைஞர் ( நேர்காணல் ) கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக இவர் புகைப்படத் துறையினில் இயங்கி வருகிறார். கும்பகோணம் அரசு நுண்கலைக் கல்லூரியில் ஓவியம் பயின்று புகைப்படத் துறையினில் ஆர்வம் கொண்டு தன்னைச் சுற்றியுள்ள உலகினை கேமராவால் பதிவு செய்து வருகிறார். இதுவரை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் ஆகிய முன்னணி பத்திரிகைகளில் இவரின் 950 படங்கள் வெளிவந்துள்ளன. 350 க்கும் மேற்பட்ட கவிதை, கதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு நூல்களுக்கு இவரது புகைப்படங்களுடன் முகப்பு அட்டையினை வடிவமைத்துள்ளார். இவரது புகைப்படங்கள் பல தேசிய மாநில பரிசுகளை வென்றுள்ளது. இவர் இதுவரை 7 ஆவணப்படங்களை இயக்கியுள்ளார். 15 முறை புகைப்படக் கண்காட்சிகளை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிட…
-
- 0 replies
- 1.1k views
-
-
சினிமா மூலம் அறிவியல் கற்போம் - பகுதி – 4 - படம் : இரட்டை வால் குருவி இசை : இளையராஜா பாடியவர்: எஸ். ஜானகி இயக்கம்: கே. பாலச்சந்தர் பாடல்: "கண்ணன் வந்து பாடுகின்றான்" இந்த பாடல் மூலம் கற்கக்கூடிய அறிவியல் துறைகள் : [௧] உடற்கூற்றியல் [௨] நரம்பியல் [௩] உடல் இயக்க இயல் [௪] பரிணாமவியல் [௫] உளவியல் அறிவியல் செய்திகள் இந்த விழியத்தில் இடம் பெறும் இடம்: 01:33 - பாடல் காட்சி 03:09 -- பாடல் பற்றிய வர்ணனை 04:08 -- கன்னம் பகுதியின் அமைப்பு எவ்வாறு உள்ளது என்று உடற்கூற்றியல் அடைப்படையில் ஒரு கண்ணோட்டம் 04:22 -- கன்னத்தின் தோல் அமைப்பு சிறப்பானது 04:33 -- கன்னத்தில் உள்ள இரத்த நாளங்களின் அமைப்பு 05:01 -- இரத்த நாளங்களின் பொதுவான இயல்பு 05:07 -- நீரோடையின…
-
- 0 replies
- 784 views
-
-
நின்ற செம்மல் – ஆங்கிலம் தெரிந்தால் பணக்காரர் ஆகிவிட முடியுமா ? http://storyofsemmal.blogspot.in/2013/07/blog-post_13.html ஆங்கிலம் தெரிந்தால் பணக்காரர் ஆகிவிடமுடியும் என்று நீங்கள் நம்புபவரா ? இந்த விழியத்தை கண்டு தெளியவும் டாக்டர்.மு.செம்மல் பாரிஸ் மாநகரில் தனது நண்பர் திரு.நடேசன் கைலாசம் ஐயா அவர்களுடன் உருவாக்கிய விழியம் இது. “அம்மா” என்ற அழகான தமிழ் சொல்லை விடுத்து “மம்மி” என்று செத்த பிணத்தை அழைக்கும் சொல்லை பயன்படுத்தி தனது பிள்ளைகள் தங்களை அழைக்க வேண்டுமென்று விரும்பும் பெற்றோர்கள் இந்த விழியத்தை கண்டு அறிவு பெறவேண்டும். தமிழர்கள் உலகம் முழுவதும் பரவு வெற்றிவாகை சூடி வாழ்வதற்கு காரணம் அவர்களின் அறிவுத்திறன் மட்டுமே, வெறுமனே ஆங்கிலம் பேசின…
-
- 4 replies
- 674 views
-
-
அறிவியல் தமிழ் மன்றம் தனது 232 ஆவது விழியத்தை இன்று வெளியிடுகிறது அகமொழிகள் என்றால் என்ன ? பகுதி - I http://tamillanguagearchives.blogspot.in/2013/08/tamil-language-archives-71.html விளக்கம் அளிக்கிறார், முனைவர். அண்ணா கண்ணன் , நிறுவனர் வல்லமை இணைய இதழ் இதுவரை அறிவியல் தமிழ் மன்ற விழியங்களை 30,701 தமிழர்கள் கண்டுள்ளார்கள் Country-wise viewership data generated as on 13th April,2013 India - 15233 USA - 1636 UAE - 1862 Saudia - 2210 UK - 1064 Canada - 951 Germany - 482 France - 973 Singapore - 967 Malaysia - 1053 Tamil Eelam - 1028 Total of 30,701 views in 95 Countries with 208 Subscribers இப்படிக்கு, , அன்புடனும் அ…
-
- 0 replies
- 444 views
-
-
தமிழால் இணைவோம் அணு உலைக்கு மாற்றாக மிதக்கும் சூரிய மின்சக்தி தீவுகளை உருவாக்குகிறது சுவிட்சர்லாந்து ! சுவிஸ் நாட்டில் உள்ள ஏரியில் மூன்று மிதக்கும் சூரிய ஒளித் தீவுகளை உருவாக்கி வருகிறது இரு தனியார் நிறுவனங்கள். இத்தீவுகள் செயற்கையாக உருவாகப்படுபவை. ஒவ்வொரு சூரிய தீவுகளிலும் 100 சூரிய தகடுகள் பொருத்தப்பட்டிருக்கும். ஒவ்வொரு மிதக்கும் தீவும் 25 மீட்டர் குறுக்களவு கொண்டது . இவைகள் சூரிய ஒளியை மின்னாற்றலாக மாற்றும் சோதனைக் கூடமாக செயல்படும் . இதில் உள்ள சூரியத் தகடுகளில் படும் ஒளி அருகில் உள்ள வெந்நீர் தொட்டிக்கு அனுப்பப்படும். அதிலிருந்து உருவாகும் நீராவியை குழாய்கள் வழியாக கரையில் இருக்கும் மின்னுற்பத்தி நிலையத்திற்கு அனுப்பப்படும். அங்குள்ள நீராவியால் இயங்கும் …
-
- 0 replies
- 384 views
-
-
உலகச் சந்தையில் நம்மவர்கள் மூளைக்கு மதிப்பு அதிகம் என்பதை நிரூபித்து இருக்கிறார் திருப்பூரைச் சேர்ந்த சிவராஜ். எம்.பி.ஏ. பட்டதாரியான இவருக்கு ஆட்டோமொபைல் துறையில் ஆர்வம் அதிகம். தற்போது இவர் கண்டுபிடித்துள்ள, பெட்ரோல் தேவைப்படாத சூரிய சக்தியால் இயங்கும் 'எக்கோ ஃப்ரி கேப்’தான் திருப்பூரின் ஹைலைட். பார்க்க மூன்று சக்கர ரிக்க்ஷாபோல இருந்தாலும் கிட்டத்தட்ட காரின் ரிச் லுக்கோடு இருக்கிறது இந்த ரிக் ஷா. புவி வெப்பமயமாதல் என்கிற அசுரப் பிடியில் சிக்கி இருக்கும் பூமிக்கு இவர் கண்டுபிடித்து இருக்கும் வாகனம் உண்மையில் ஒரு வரப்பிரசாதம். 'இந்தியா புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ இவருடைய கண்டுபிடிப்பை அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் கீழ் அங்கீகரித்து இருப்பது இன்னும் ஒரு சிறப்பு. '…
-
- 2 replies
- 969 views
-
-
ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் பஸ்சை மகேந்திரகிரியை சேர்ந்த ஓய்வு பெற்ற விஞ்ஞானி வடிவமைத்து சாதனை படைத்துள்ளார்.நெல்லை மாவட்டம், மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோவில் பணியாற்றி ஓய்வு பெற்ற விஞ்ஞானி ஞானகாந்தி. இவர் டீசல், கேஸ் ஏதுமின்றி ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் பஸ்சை வடிவமைத்துள்ளார். நீண்ட வருடங் களாக, ஹைட்ரஜன் வாயு வில் இயங்கும் வாகனம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுவந்த இவர் இந்த முயற்சி வெற்றியடையே பஸ்சையே இயக்க முடியும் என்ற விபரத்தை ஐஎஸ்ஆர்ஓ உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தார். இஸ்ரோ குழுவினர் மற்றும் டாடா வாகன உற்பத்தி நிறுவனத்தின் துணை பொது மேலாளர் ராஜா தலைமையிலான குழுவினர் ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் மெகா சைஸ் வால்வோ பஸ்சை தயாரிக் கும் பணியில் கடந்த 5 ஆண்டுகள…
-
- 3 replies
- 766 views
-