அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
என்செலாடஸ் மேற்பரப்பில் வரிவரியாக உள்ள பிளவுகளில் இருந்து நீராவி பீய்ச்சியடிக்கப்படுகிறது சனிக்கிரகத்தை சுற்றும் துணைக்கோள்களில் ஒன்றான என்செலாடஸில் உறைபனி மூடிய அதன் மேற்பரப்புக்கு கீழே திரவ நீர்நிலை ஒன்று இருப்பதற்கான புதிய ஆதாரங்கள் தற்போது கிடைத்துள்ளன. இந்த குட்டிக் கிரகத்தின் தென் துருவத்தில் வரிவரியாகத் தோன்றும் ஒரு இடத்தில் இருந்து உறைபனியாலான துகள்கள் போலத் தோன்றிய பொருட்கள் பீய்ச்சியடித்ததை விஞ்ஞானிகள் கண்ட காலம்தொட்டே அவர்கள் இது தொடர்பில் உற்சாகம் அடைந்திருந்தனர். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸாவின் கஸ்ஸினி என்ற விண்கலம் இந்த துணைக்கோளின் மேலே பறந்து செல்கையில் அது சேகரித்த தகவல்களை தற்போது ஆராய்ந்துள்ள விஞ்ஞானிகள் இந்த துணைக்கோளில் திரவ நீர…
-
- 0 replies
- 577 views
-
-
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, வானில் அரிய நிகழ்வாக கருதப்படும் சூப்பர்- ப்ளூ மூன் ஞாற்றுக்கிழமை இரவு பிரிட்டனில் தென்பட்டது 30 ஆகஸ்ட் 2023 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் (2024 ஆகஸ்ட் 18-ம் தேதி சூப்பர் ப்ளூ மூன் தென்பட்டதையடுத்து 2023-ல் வெளியிடப்பட்ட இந்த கட்டுரை புதிய தகவல்களுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது) வானில் அரிய நிகழ்வாக கருதப்படும் ‘சூப்பர்- ப்ளூ மூன்’ (Super- Blue moon) ஞாற்றுக்கிழமை இரவு பிரிட்டனில் தென்பட்டது. அப்போது நிலவு திடீரென சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது. வானில் தென்பட்ட இந்த அரிய காட்சியை பிரிட்டன் மக்கள் கண்டு மகிழ்ந்தனர். ‘ப்ளூ மூன்’ என்று அழைக்கப்பட்டாலும், நிலவு உண்மையில் நீல …
-
-
- 1 reply
- 577 views
- 1 follower
-
-
சிவந்த நிலாவை இன்று காணலாம் செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014 13:17 சந்திர கிரகணம் இன்று நடைபெறவுள்ள நிலையில், சந்திரன் தற்போதைய நிறத்தில் இருந்து மாறி பிரகாசமான ஆரஞ்சு (செம்மஞ்சள்) நிறத்தில் தெரியும் என்று அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் மெக்டொனால்ட் ஆய்வகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்த கிரகணம் இன்று நள்ளிரவில் 1 மணி 58 நிமிடத்தில் ஏற்பட தொடங்கும். பின்னர் 1 மணி நேரம் சென்றபின் நிலவு முழுவதுமாக மறைந்து சந்திர கிரகணம் ஏற்படும். இந்த நேரத்தில் நிலவு ஆரஞ்சு, சிவப்பு அல்லது பிரவுன் நிறத்தில் காணப்படும். இந்த கிரகணம் 3 மணிநேரம் தொடர்ந்து நீடித்து அதிகாலை 5 மணி 33 நிமிடங்கள் வரை இருக்கும் எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். வளிமண்டலத்தி…
-
- 2 replies
- 576 views
-
-
திருப்பூர் : ""கோடை வெப்பத்தின் தாக்கத்தால், கோழிகள் மற்றும் கால்நடைகள் "வெப்ப அயர்வு' நோயால் உயிரிழக்க அதிக வாய்ப்புள்ளது,'' என, கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் செல்வராஜ் கூறினார். அவர் கூறியதாவது: வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், கோழிகள் மற்றும் கால்நடைகள் "வெப்ப அயர்வு' நோயால் உயிரிழக்கக்கூடிய அபாயம் உள்ளது. உடலின் வெப்பத்தை வெளியேற்ற, மனிதர்களுக்கு வியர்வை சுரப்பி உள்ளது; கோழிகளுக்கு வியர்வை சுரப்பி இல்லை; வாயை திறந்து, உடல் வெப்பத்தை சிறிதளவே வெளியேற்ற முடியும். வெயில் நேரத்தில் கோழிகள் அதிக தீவனம் சாப்பிடும்போது, அதை ஜீரணிக்க, அதிக வெப்ப ஆற்றல் உடலுக்குள் ஏற்படுகிறது. அதை தவிர்க்க, காலை 7.00 மணிக்குள், அளவான தீவனம் கொடுக்க வேண்டும்; ம…
-
- 0 replies
- 576 views
-
-
அப்பள அளவில் மொபைல் டிஜிட்டல் உலகத்தைப் பொறுத்தவரை, எந்தவொரு பொருளும் அது கண்டு பிடிக்கப்பட்டபோது இருந்ததைவிட, அளவு மற்றும் வசதிகளில் அதன்பின் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவது வழக்கம். மொபைல் போன், தொலைக்காட்சி உள்ளிட்ட பல பொருட்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். முன்னொரு காலத்தில் டேபிள் முழுவதையும் அடைத்துக்கொண்டிருந்த தொலைக்காட்சியின் அளவு, தற்போது சில அங்குல தடிமன் கொண்டதாக மாறியிருக்கிறது. காலப்போக்கில் வோல்பேப்பரைப்போல சுவரில் ஒட்டிக்கொள்ளும் வகையில் தொலைக்காட்சியின் அளவு மாறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அளவில் சிறியதாகவும், பயன்கள் அதிகமானதாகவும் கொண்டதாக ஒரு பொரு…
-
- 0 replies
- 576 views
-
-
பார்த்தீனியம் செடியைக் கட்டுப்படுத்தி உரமாகப் பயன்படுத்தும் முறைகள் குறித்து மேல்புறம் வட்டார வேளாண் விரிவாக்க மைய உதவி இயக்குநர் என். தமிழ்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பார்த்தீனியம் நச்சுக் களைச் செடி நன்கு உயரமாக வளர்ந்து ஆழமாக பரவும் வேர்களைக் கொண்டது. இதன் இலைகள் கேரட் இலைகளைப்போல இருக்கும். செடிகளின் நுனிப்பகுதியில் ஏராளமான வெள்ளை நிறப் பூக்கள் கொத்துக்கொத்தாக இருக்கும். ஒவ்வொரு பூவிலும் ஏராளமான விதைகள் இருக்கும். விதைகள் காற்று, நீர் மூலம் பரவி முளைவிடும். இவை மழைக்காலத்தில் நன்கு வளர்ந்துவிடும். பொதுவாக சாலையோரங்கள், புறம்போக்கு நிலங்கள், தண்டவாளப் பகுதி, ஆற்றங்கரையோரம், கழிவுநீர் வாருகால், விளைநிலங்களில் அதிகம் காணப்ப…
-
- 0 replies
- 576 views
-
-
உங்களது கணணி மொனிட்டரில் குறிப்புகளை எழுதி வைப்பதற்கு விண்டோஸ் 7 இயங்குதளம் புதிய கூடுதல் வசதியை தருகிறது. இதற்கு பெரும்பாலும் அனைவரும் வேறு சில மென்பொருட்களையே பயன்படுத்தி வந்தனர். தற்போது உங்களது கணணியிலேயே ஸ்டிக்கி நோட்ஸ்(sticky notes) வசதி கிடைப்பதால் எளிதாக இதனைப் பயன்படுத்தலாம். கணணியில் அப்ளிகேஷன் புரோகிராம்களில் இயங்கிக் கொண்டே, தொலைபேசியில் பேசுவது, இணையத்தில் தேடல் மேற்கொள்ளுதல், பேக்ஸ்(fax) அனுப்புவது போன்ற பணிகளை மேற்கொள்பவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மிகப் பெரிய அளவில் இது ஒரு வசதி இல்லை என்றாலும் இதனை ஒருமுறை பயன்படுத்தியவர்கள், பெரும்பாலும் இதனை நாடுகின்றனர் என்பதே இதன் சிறப்பு. இங்கு இந்த ஸ்டிக்கி நோட்ஸ் குறித்து பா…
-
- 0 replies
- 575 views
-
-
இந்தியாவின் தேயிலை உற்பத்தி 2013-14-ம் நிதி ஆண்டில் 8 சதவீதம் அதிகரித்து 122.44 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது. அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் தேயிலை விளைச்சல் அதிகரித்ததே உற்பத்தி உயர்வுக்கு முக்கியக் காரணமாகும். 2012-13-ம் நிதி ஆண்டில் தேயிலை உற்பத்தி 113.50 கோடி கிலோவாக இருந்தது என்று தேயிலை வாரியம் வெளியிட்ட குறிப்பு தெரிவிக்கிறது. மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலத்தில் மட்டும் தேயிலை உற்பத்தி 6.52 சதவீதம் உயர்ந்துள்ளது. இவ்விரு மாநிலங்களில் உற்பத்தியான தேயிலை அளவு 98 கோடி கிலோவாகும். முந்தைய ஆண்டு இவ்விரு மாநிலங்களின் உற்பத்தி 92 கோடி கிலோவாக இருந்தது. இந்தியாவில் தேயிலை உற்பத்தியில் அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் பங்களிப்பு 80 சதவீத அளவுக்கு உள்ளது. http…
-
- 1 reply
- 575 views
-
-
அபாயமானதாக கருதப்படும் சீமை கருவேல மரங்களை தடை செய்வது குறித்து, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. தமிழகம் முழுவதும் இந்த மரங்களை அழித்து, மீண்டும் வளர விடாமல் எப்படி தடுப்பது என்பது குறித்து, பலவழிகளில் அரசு ஆராய்ந்து வருகிறது; நிபுணர்களின் உதவியும் கோரப்பட்டுள்ளது. 'சீமை கருவேலம் எனப்படும் வேலி காத்தான் மரங்கள், தமிழகம் முழுவதும் புற்றீசல் போல் வளர்ந்துள்ளன. இதன் அருகில் உள்ள தாவரங்கள் பாதிக்கப்பட்டு, நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. இந்த மரங்களால் எந்த பயனும் கிடையாது. 'இதன் இலைகளை, ஆடு, மாடு போன்ற கால்நடைகள் கூட சாப்பிடுவதில்லை. விறகுக்காக மட்டும் பயன்படும் இந்த மரங்களால், சுற்றுச்சூழல் கெடுகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. எனவே, அவற்றை தடை செய்ய வேண்டும்' என, இயற்க…
-
- 2 replies
- 575 views
-
-
தர்க்கரீதியாக யோசித்துச் சரியான பதிலைக் கண்டுபிடிக்க வேண்டியது சைக்கோமெட்ரிக் தேர்வுகளில் ஒருவகை. இதை ‘லாஜிகல் ரீசனிங்’ என்று குறிப்பிடுவார்கள். இதற்கு உங்களுக்கு உடனடியாகவும் விடை தெரிய வேண்டும். விதவிதமாகவும் யோசிக்க வேண்டி இருக்கும். கீழே உள்ளவற்றில் எது மற்றவற்றிலிருந்து வித்தியாசமாகப்படுகிறது? ஏப்ரல், செப்டம்பர், தை, டிசம்பர். இந்தக் கேள்விக்கான விடை உங்களுக்குப் பார்த்தவுடனேயே தெரிந்துவிடும். தை என்பது தமிழ் மாதம். மற்றவையெல்லாம் ஆங்கில மாதங்கள். எனவே ‘தை’ என்பதுதான் விடை. ஆனால் தர்க்கம் என்பது சில சமயம் பலவிதக் கிளைகளாகப் பிரியும். கேள்வி கீழ்க்கண்டதுபோல் இருந்தால், எதை மற்றவற்றிலிருந்து தனிமைப் படுத்துவீர்கள்? யாஹூ, கூகோல், மில்லியன், கோடி இந்தக் …
-
- 1 reply
- 574 views
-
-
எபோலா பரவுதல் தடுக்கக்கூடியதா? க. சுதாகர் டாக்டர் உமர் ஷேக் கான் இறந்து போனார் என்று செய்தி 29 ஜூலை 2014ல் வந்தபோது பெரிய தாக்கத்தை உலகளவில் ஏற்படுத்தவில்லை. சியர்ரா லியோன் நாட்டில் ஒருவர் உயிர் வாழ்ந்திருந்தால்தான் அது செய்தியாக இருக்க முடியும் என்று கருநகைச் செய்திகளில் அது அமிழ்ந்து போனது. யார் இந்த டாக்டர் கான்? எங்கோ ஆப்பிரிக்காவில் ஒருவர் இறந்த்தற்கு நாம் ஏன் வருந்த வேண்டும்? எபோலா காய்ச்சல் என்ற உயிர்க்கொல்லி நோய்க்கு கினியா, சியர்ரா லியோன், லைபீரியா நாடுகளில் இதுவரை 900 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். நைஜீரியாவில் இது பரவிய செய்தி ஒரு பீதியை ஏற்படுத்தியபின்னரே உலகம் மெல்ல விழித்துக் கொண்டிருக்கிறது. இந்த பீதிக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் எபோலாவைக் குற…
-
- 0 replies
- 574 views
-
-
இன்றைக்கு இயற்கை வேளாண் உலகில் மண்புழு வளர்ப்பு பற்றிய பல சர்ச்சைகள் வந்துகொண்டிருக்கின்றன. சிலர் மண்புழுவை ஏன் வளர்க்க வேண்டும்? அவைதாம் மண்ணிலேயே இருக்கின்றனவே என்றும், வெளிநாட்டு புழுக்கள் நமக்கு எதற்கு (கலப்பின மாடுகளைப் போல) என்று கூறுபவர்களும் உள்ளனர். பொதுவாக மண்புழுக்களில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒன்று, மண்ணின் மேல்புறத்தில் சாணத்தை உண்டு, தம்மைப் பெருக்கிக்கொள்ளும் சாணப்புழுக்கள். இவை ஏராளமான கழிவை உண்ணும் திறன் பெற்றவை. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியானவை என்று கருதப்படுபவை. இவற்றில் இரண்டு இனங்களை நமது பண்ணையாளர்கள் பெரிதும் பயன்படுத்துகின்றனர். ஒன்று Eisenia fetida , மற்றொன்று Eudrilus eugeniae. இந்த இரண்டும் வெளிநாட்டு புழுக்கள் என்று சொல்லப்பட்டால…
-
- 0 replies
- 574 views
-
-
Samsung Galaxy A9 – இன் சிறப்பம்சங்கள் 22/12/2015 | 6:05 Samsung-Galaxy-A8ஆண்ட்ராயிட் தொழில்நுட்பத்தின் முன்னணியில் உள்ள சாம்சுங் நிறுவனம் தற்போது தனது கேலக்ஸி ஏ 9 கைப்பேசி மூலம் களமிறங்கவுள்ளது. இந்த கைப்பேசி அடுத்த ஆண்டு சந்தைக்கு வரும் என்று கூறப்படுகிறது. அதற்குள்ளாகவே இந்த மொபைல் பற்றிய பல வதந்திகள் பரவ தொடங்கியுள்ளன. இதற்கிடையே இந்த கைப்பேசியில் பல சிறப்பம்சங்கள் இணைக்கப்பட்டிருக்கலாம் என்று மொபைல் பயன்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது இணையத்தில் உலவும் தகவல்களின்படி இந்த கைப்பேசியில் 1080வு1920 Pixel கொண்ட 6 Inch Hd Screen அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் Dual Sim பயன்படுத்தும் வசதியும் இதில் இடம் பெற்றுள்ளது. Android 5.1.1…
-
- 0 replies
- 573 views
-
-
செவ்வாயில் பாறை துகள்களை சேகரிக்கும் முதல் முயற்சி தோல்வி நாசா கடந்த பெப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர், செவ்வாய் கிரகத்தை படம் பிடித்து பூமிக்கு அனுப்பியது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்தனவா என்பதை ஆராய்வதற்காக அங்கிருந்து பாறை மற்றும் மண் துகள்களை சேகரிக்கும் பணியில் பெர்சவரன்ஸ் ரோவர் ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில் பாறை துகள்களை சேகரிக்கும் பெர்சவரன்ஸ் ரோவரின் முதல் முயற்சி தோல்வியில் முடிந்ததாக நாசா தெரிவித்துள்ளது. பெர்சவரன்ஸ் ரோவரில் பொருத்தப்பட்டுள்ள 7 அடி நீளமுள்ள ரோபோ கையில் தரையில் துளையிடுவதற்கான கருவி மற்றும் மாதிரிகளை எடுப்பதற்கான கருவி பொருத்தப்பட்டுள்ளன. மேலும் எடுக்கப்பட்ட ம…
-
- 0 replies
- 573 views
-
-
செவ்வாய் கிரகத்தில் நன்னீர் ஏரி இருந்தற்கான அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாய் கிரகத்தில் கல்லில் நடத்திய ஆய்வில் இந்த தகவல் உறுதியாகியுள்ளது. அமெரிக்காவின் கியுரீயாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தில் இருந்த ஒரு மலையில் இருந்து துளையிட்டு எடுத்த கல்லில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நன்னீர் ஏரி இருந்தற்கான படிமங்கள் கிடைத்துள்ளது என்று அமெரிக்காவின் கலிபோர்னியா தொழில்நுட்ப விஞ்ஞானி ஜான் குரோசிங்கர் கூறியுள்ளார். இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வசிப்பதற்கான சாத்திய கூறுகள் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=98741&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 573 views
-
-
நிக்கோலஸ் ஆர் லாங்ரிச் பிபிசி 12 நவம்பர் 2020 பட மூலாதாரம்,SCIENCE PHOTO LIBRARY 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நியாண்டர்தால் மனிதர்கள் அழிந்து போனதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. ஆனாலும், அந்தக் காலத்தில் வாழ்ந்த நமது மனித மூதாதையர்களுடன் ஏற்பட்ட போரில் அவர்கள் அழிந்திருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக பரிணாம உயிரியல் வல்லுநர் நிக்கோலஸ் லாங்ரிச் தெரிவித்துள்ளார். சுமார் 6 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் மனித இனம் இரண்டாகப் பிரிந்தது. ஒரு பிரிவு ஆப்பிரிக்காவில் தங்கி, நம்முடைய மனித இனமாக பரிணாம வளர்ச்சி பெற்றது. இன்னொரு பிரிவு ஆசியா மற்றும் ஐரோப்பாவில் தங்கி ஹோமோ நியாண்டர்தாலென்சிஸ…
-
- 0 replies
- 573 views
-
-
டூடுல் மூலம் கலர்புல் புத்தாண்டு வாழ்த்து கூகுள் தனது டூடுல் சேவை மூலமாக உலகின் தலை சிறந்த மனிதர்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை வித்தியாசமான படங்களின் மூலமாக ஆண்டு முழுவதும் கொண்டாடி வரும் கூகுள், இந்த ஆண்டின் கடைசி தினமான இன்று, கிளையில் உள்ள பல வண்ணப்பறவைகள் புத்தாண்டுக்காக காத்திருப்பது போல் அனிமேஷன் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் 2016 என்ற எண் பொறிக்கப்பட்டுள்ள முட்டைக்கு அருகே உள்ள பறவை தன் கையில் உள்ள கடிகாரத்தை அடிக்கடி எடுத்துப் பார்த்து எப்போது புத்தாண்டு வரும் என்று காத்திருக்கிறது. வெடிக்கக் காத்திருக்கும் 2016 என்ற அந்த முட்டை வெடிக்கும் வரை நாமும் புது வருடப் பிறப்பிற்காக காத்திருப்போம். http://www.virakesari.lk/artic…
-
- 0 replies
- 572 views
-
-
சூரியனில் இருந்துபயங்கர புயல் ஒன்று, பூமியை தாக்கலாம் என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால், செயற்கைக்கோள்கள், விமானம் மற்றும் மின்சார சேவைகள் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரித்து உள்ளனர். சூரியனால் உமிழப்படும் துகள்கள், ஒன்று சேர்ந்து இந்த புயல் உருவாகிறது. டன் கணக்கில் உமிழப்படும் துகள்கள், மணிக்கு, 16 லட்சம் கி.மீ., வேகத்துடன் பூமியை நோக்கி வரும். இந்த புயல் தோன்றுவதற்கு, 30 நிமிடங்களுக்குமுன் தான், அது உருவானது பற்றி அறிய முடியும். நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை உருவாகும் இந்த பெரிய புயல், கடந்த, 1859ல் பூமியை தாக்கியுள்ளது.கனடாவில், 1989ல் அளவில் சிறியதான புயல் ஒன்று தாக்கியதில், மின் தொகுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டு, பெரும் மின் வெட்டு ஏற்பட்டது. …
-
- 0 replies
- 571 views
-
-
நியூட்டனை இயற்பியலின் பிதாமகர்களில் ஒருவர் என்று தான் இவரை சொல்ல வேண்டிருக்கிறது . பள்ளிக்காலத்தில் மக்குப்பையனாக அம்மாவின் அன்புக்கு ஏங்கிக்கொண்டு இருந்த இவர் இவ்வளவு பெரிய மேதையாக உருவெடுப்பார் என்றால் அப்பொழுது யாரும் நம்பி இருக்க மாட்டார்கள் தான் . மண்டையின் மீது ஆப்பிள் விழுந்தது ;புவி ஈர்ப்பு விசை கண்டுபிடிப்பு நிகழ்ந்தது .அது பூமி சூரியனை சூற்றி வருகிறது என்பதை சந்தேகமின்றி நிரூபித்தது .இவர் எழுதிய Philosophiæ Naturalis Principia Mathematica நூல் தான் மெக்கானிக்ஸ் துறையின் வேதமானது . சூரிய ஒளியில் எழு வண்ணங்கள் உள்ளன என நிரூபிக்கவும் செய்தார் .பயன்படுத்த தகுந்த தொலைநோக்கியையும் நியூட்டன் வடிவமைத்தார் . ஹாலி தன்னுடைய வானியல் சார்ந்த குழப்பங்களுக்கான வ…
-
- 0 replies
- 571 views
-
-
கிரிப்டோகரன்சிகளில் ஒன்றான பிட்காயினின் மதிப்பு, அதன் உச்சத்தை எட்டியிருக்கிறது. அதாவது, இந்திய மதிப்பில் ஒரு பிட்காயின் மதிப்பு 50 லட்சம் ரூபாயை எட்டியுள்ளது. பிட்காயின் மதிப்பு அதிகரித்தன் பின்னணியில் அமெரிக்க முதலீட்டு நிறுவனங்கள் உள்ளதாக சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த கிரேஸ்கேல், பிளாக்ராக் மற்றும் ஃபிடிலிட்டி போன்ற முதலீட்டு நிறுவனங்கள், நிலையற்றது என்று வர்ணிக்கப்படும் இந்த டிஜிட்டல் கரன்சியை வாங்க பில்லியன்கணக்கான டாலர்களை செலவிட்டுள்ளன. இந்த முதலீட்டின் காரணமாக, இந்த சக்திவாய்ந்த நிறுவனங்கள் 'பிட்காயின் திமிங்கலங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. பிட்காயின் என்றால் என்ன? பிட்காயின் என்பது மின்னணு …
-
- 0 replies
- 570 views
-
-
'எதிர்கால செயலிகள் நம்மைத்தேடி வரும்..!' - செல்போன் பிதாமகரின் பேட்டி ஸ்மார்ட்போன்கள் என்னவெல்லாம் செய்கின்றன என்று வியப்பாக இருக்கிறதா? விரல் நுனியில் இணையம், ஒவ்வொரு தேவைக்கும் நூற்றுக்கணக்கில் செயலிகள் என அவரவர் உள்ளங்கைகளில் உலகை கொண்டு வந்திருக்கின்றனதான். ஆனால் இவை எல்லாம் ஒன்றுமே இல்லை, ஸ்மார்ட்போன்கள் இனி மேல்தான் விஸ்வரூபம் எடுக்க இருக்கின்றன என்று சொன்னால் எப்படி இருக்கும்? மார்டின் கூப்பர் அப்படிதான் நினைக்கிறார். ஸ்மார்ட்போன்களின் முழுமையான ஆற்றலை நாம் உணர இன்னும் இரண்டு தலைமுறை ஆகும் என்றும் சொல்லி அசர வைக்கிறார் கூப்பர். என்ன நம்ப முடியாமல் இருக்கிறதா? கூப்பர் சொல்வதை பார்ப்பதற்கு முன்னர் அவர் யார் என்று தெரிந்து கொண்டு விடலாம். கூப்பர் வேறு யாருமில்லை, ம…
-
- 0 replies
- 570 views
-
-
தொழில்நுட்பத்தின் வழியே கொள்ளும் உறவில் மொழிக்கு இடமேது? வெகு விரைவில் மனித இனங்கள், அதாவது தொழில்நுட்பம் என்னும் அசுரனின் வலையில் விழுந்திருக்கும் மனித இனங்கள், பேச்சையும் செவித்திறனையும் இழந்துபோனால் அதற்கு ஒப்பாரி வைக்கக்கூட இயலாமல் போகும். குறுந்தகடு, ஃபேஸ்புக், ட்விட்டர் யுகத்தில் மொழி என்பது கண்டந்துண்டமாய்ச் சிதிலமடைந்துவிட்டது. 'குயின்'ஸ் இங்கிலீஷ்' என்ற பெருமை கொண்ட ஆங்கில மொழி, சொற்களை இழந்து உருமாறிப்போனது நினைத்துப்பார்க்க முடியாத சோகம். மூன்று எழுத்து, நான்கு எழுத்து வார்த்தைகளெல்லாம் ஒற்றை எழுத்துக்களாகச் சுருங்கி நிற்கும் வாக்கியங்களுக்குப் பழகிப்போன இளைய தலைமுறைக்கு இனி ஒழுங்காக ஆங்கிலம் எழுத முடியுமா என்பது சந்தேகம். தமிழில் இன்னும் அத்தனை அவலம் வராவிட…
-
- 1 reply
- 570 views
-
-
பாகிஸ்தானில் தலீபான்களின் கொள்கைகளுக்கு எதிராக, பெண் கல்விக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தவர் மலாலா. இதற்காக அவர் கடந்த 2012-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 9-ந் தேதி, பள்ளிக்கு சென்று வரும்போது தலீபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டார். படுகாயம் அடைந்த அவர் லண்டன் நகரில் சிகிச்சை பெற்று குணம் பெற்றார். தற்போது இங்கிலாந்தில் வசித்து வரும் அவருக்கு கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு, இந்தியரான கைலாஷ் சத்யார்த்தியுடன் இணைந்து வழங்கப்பட்டது. இப்போது விண்ணில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘316201’ எரிகல்லுக்கு மலாலாவின் பெயரை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவின் ஜெட் உந்துவிசை ஆய்வுக்கூட வானியல் ஆராய்ச்சி விஞ்ஞானி ஆமி மைன்ஸர் சூட்டி உள்ளார். இது பற்றி அவர் குறிப்பிடுகையில், “எரிகல்லுக…
-
- 1 reply
- 570 views
-
-
உலகின் எந்த பகுதியில் நீங்கள் இருக்கிறீர்கள், அங்குள்ள வானிலை என்ன என்பதை பொறுத்தே 'சூப்பர் பிங்க் மூன்'' என்று அழைக்கப்படும் இந்தப் பெருநிலவை காண்பது சாத்தியமா என்று கூறமுடியும். ஏப்ரல் 7 அல்லது 8ம் தேதி தோன்றக்கூடிய 2020ம் ஆண்டின் மிகவும் பெரிய மற்றும் ஒளி மிகுந்த நிலவு, ''சூப்பர் பிங்க் மூன்'' என்று அழைக்கப்படும். இந்த நாளன்று நிலவு இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்காது. நிலவு இவ்வாறு தெரிவதற்கு ஏன் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது? இந்த இளஞ்சிவப்பு நிலவின் சிறப்பு என்ன? ஏப்ரல் மாதத்தின் முழு நிலவு வானத்தில் மிகவும் பெரியதாக காட்சியளிக்கும். இந்த வகையான சூப்பர் மூன் எனப்படும் பெரிய நிலவு, பூமியை சுற்றியுள்ள சுற்றுப்பாதையில் சரியான வட்டத்தில் பூமியை சுற…
-
- 2 replies
- 569 views
-
-
[size=4]தொழில்நுட்ப வளர்ச்சியானது சகல துறைகளையும் ஆக்கிரமித்து வரும் அதேவேளை இராணுவத் துறையிலும் அதன் பயன்பாடு அதிகரித்துக் காணப்படுகின்றது.இதற்காக பல்வேறு கண்டுபிடிப்புக்களும் இடம் பெற்றுக் கொண்டே இருக்கின்றன.[/size] [size=4]இவற்றின் அடிப்படையில் தற்போது எந்த ஒரு சிறிய இடத்திலும் புகுந்து தகவல்களை சேகரிக்கக்கூடிய வகையிலும், றிமோட் மூலம் தொலைவிலிருந்து இயக்கக்கூடிய வகையிலும் இலத்திரனியல் கரப்பான் ஒன்றினை நோர்த் ஸ்டேட் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.[/size] [size=4]வியாபார நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட இந்த இலத்திரனியல் கரப்பான் ஆனது வயர்லெஸ் மூலம் இயங்கும் தகவல் வாங்கி(Receiver), தகவல் பரிமாற்றி(Transmitter) மற்றும் கட்டுப்படுத…
-
- 0 replies
- 568 views
-