Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் கருந்துளைகள் மற்றும் விண்வெளியில் நெடுந்தொலைவில் ஏற்படும் அபூர்வ நிகழ்வுகளை ஆய்வு செய்ய 2012 ஆம் ஆண்டு ஜூன் 12 ந்தேதி அணு நிறமாலை தொலை நோக்கி ஒன்றை அமைத்தது. அணு நிறமாலை தொலைநோக்கி அல்லது நூஸ்டர் எனப்படும் இந்த தொலை நோக்கி கருவி விண்வெளி சார்ந்த சார்ந்த எக்ஸ்-ரே தொலைநோக்கி கருவியாகும். இந்த தொலை நோக்கி எடுத்து அனுப்பிய மிக அரிய புகைப்படம் ஒன்றை நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் கடந்த திங்கட்கிழமை வெளியிட்டது. இது நமது சூரி மண்டலம் குறித்து நீண்ட நாள் நிலவும் மர்மத்தை விடுவிப்பதாக உள்ளது. சூரிய இயக்கவியல் குறித்து படம் எடுத்து அனுப்பி உள்ளது. சூரியன் குறித்து இது எடுத்து அனுப்பி இருக்கும் முதல் படம் இதுவாகும். இந்த படம் பார்ப…

  2. நிலவின் மேற்பரப்பில் கால்பந்து போட்டி 20/07/2023 12:17 344 உலகின் மிகவும் பிரபலமான விளையாட்டு கால்பந்து ஆகும். 2035ம் ஆண்டு நிலவின் மேற்பரப்பில் கால்பந்து போட்டியை நடத்த பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம் தயாராகி வருகிறது. நிலவின் மேற்பரப்பில் குடியிருப்புகள் அமைப்பதுடன் இணைந்து இந்தப் போட்டி நடத்தப்படும். இப்போதும் அமெரிக்க நாசா விண்வெளி வீரர்களை மீண்டும் நிலவுக்கு அழைத்துச் செல்ல ‘ஆர்டெமிஸ்’ என்ற சந்திர பயணத்தைத் தொடங்கியுள்ளது. 2025-ம் ஆண்டுக்கு பிறகு ஒரு ஆணும் பெண்ணும் நிலவில் கால் பதிக்க திட்டமிட்டுள்ளனர…

    • 0 replies
    • 494 views
  3. அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பது தெரியாத ஓர் அதிவேக பயணத்தினை நாம் செய்து கொண்டிருக்கின்றோம். இதில் கொஞ்சம் பிசகினாலும் அதோ கதிதான். மணிக்கு சுமார் 1040 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்திலேயே நாம் வசிக்கும் புவி இடை விடா பயணம் ஒன்றினைச் செய்து கொண்டிருக்கின்றது. ஆனாலும் இவை நன்றாக தெரிந்தும் கூட இன்றுவரை பூலோக வாசிகள் பலரையும் ஆட்டிப்படைக்கும் ஓர் கேள்விதான் பூமியைத் தாண்டி வேற்றுக்கிரகங்கள் உள்ளதா? அப்படியே இருந்தால் அவற்றில் உயிரினங்கள் வசிக்கின்றதா? என்பதே. இந்த கேள்விகளுக்கு நிச்சயமாக நாம் தனித்து தான் வாழ்கின்றோம் என்ற ஓர் பதிலோடு, வேற்றுக்கிரக வாசிகள் இருக்கின்றார்கள் என்றும் இரு வகை பதில்கள் கொடுக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றது. அதேபோன்று ஆய…

  4. விண்வௌியின் எல்லையை தொட்டுத் திரும்பிய விமானம்! அமெரிக்காவின் வெர்ஜின் கேலக்டிக் நிறுவனத்துக்கு சொந்தமான விண்வெளிக்கு செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட சிறப்பு விமானம் விண்வெளிக்கு மிகவும் அருகில் சென்று திரும்பியுள்ளது. ஸ்பேஸ்-ஷிப்-டூ என்று அழைக்கப்படும் அந்த விமானம் பூமியிலிருந்து 82.7 கிலோமீட்டர் உயரத்துக்கு பறந்தது. இது அந்த விமானத்தின் நான்காவது பரிசோதனை பயணமாகும். மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் போட்டியில் எலோன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ஜெஃப் பெஸோஸின் ப்ளூ ஓரிஜின் நிறுவனங்களுடன் சர் ரிச்சர்டு பிரான்சனின் வெர்ஜின் கேலக்டிக் நிறுவனமும் ஈடுபட்டுள்ளது. நேற்றைய தினம் (வியாழக்கிழமை) தனது சோதனை ஓட்டத்தை மேற்கொண்ட குறித்த விமானம…

  5. உங்களுக்கு எதிரே நின்றுகொண்டிருக்கும் உங்கள் காதலி, அல்லது காதலன் ஒரு நானோ நொடிக்கு முந்தையவர்! இந்தப் பிரபஞ்சம் ஏதோ ஒரு இடத்தில் தொடங்கியது என்று ஒரு கருத்து நிலவுகிறது. அது உண்மையல்ல. பிரபஞ்சத்தின் பிறப்புக்குக் காரணமான பெருவெடிப்பு (Big Bang) நிகழ்ந்தது இடத்தில் அல்ல, காலத்தில். "பெருவெடிப்பு நிகழ்ந்தது எங்கே?" என்று என்னிடம் பலரும் அடிக்கடி கேட்பதுண்டு. கையெறி குண்டு ஒன்று வெடிப்பதைப் போன்று பிரபஞ்சம் விரிவதையும், அந்தக் கையெறி குண்டின் சிதறல்கள் பறப்பதுபோல் சூரியக் குடும்பத்தையும், பால்வெளியையும் கற்பனை செய்துகொண்டு இது போன்ற கேள்வியைக் கேட்கிறார்கள். இந்தப் பிரபஞ்சம் ஒரு இடத்தில் தொடங்கவில்லை, காலத்தில்தான் தொடங்கியது. கிட்டத்தட்ட 1,380 கோடி ஆண்டுக…

  6. சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து கிறிஸ்துமஸ் வாழ்த்து ( வீடியோ) சர்வதேச விண்வெளி மையத்தில் 46 விண்வெளி வீரர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, அவர்கள் பூமியில் வாழும் மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வீடியோ பதிவு இது. நாசா இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. http://www.vikatan.com/news/world/56724-happy-christmas-from-international-space-station.art

  7. பல உயரினங்கள் கடலின் ஆழத்தில் ஆக்டோபஸ்களுக்கு என்றே தனி நகரம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்று இதயங்களையும் எட்டு கைகளையும் உடைய ஆக்டோபஸ் சுமார் 300 வெவ்வேறும் இனங்களை கொண்டுள்ளது. சமீபத்தில் கடலுக்கு அடியில் ஆக்டோபஸ் நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அலஸ்கா பெசிஃபிக் பல்கலைகழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இதை கண்டிபிடித்துள்ளனர். Octopus Tetricus என்னும் இனத்தை சேர்ந்த ஆக்டோபஸ்கள் வாழும் நகரத்தை கடலுக்கு அடியில் கண்டுள்ளனர். இந்த ஆக்டோபஸ் நகரத்திற்கு Octlantis என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நகரம் கடலில் 10 முதல் 15 மீட்டர் ஆழத்திலும், 18 x 4 சதுர மீட்டர் பரப்பளவிலும்…

    • 1 reply
    • 493 views
  8. நெதர்லாந்தின் டெல்ப்ட் பல்கலைக்கழக என்ஜினீயரிங் மாணவர் அலெக் மோமண்ட் மாரடைப்பு ஏற்படும் நோயாளியை கண்டுபிடித்து அவர்களுக்கு சிகிச்சை உதவி அளிக்கும் டிரோன் என அழைக்கப்படும் ஆளில்லா விமானத்தை கண்டுப்பிடித்துள்ளார். மாரடைப்பு நோயாளிகளின் அவசர டெலிபோன் கால் கிடைத்ததும் டிரோனில் உள்ள அதிர்வு கருவி செயல்படதொடங்கும். அதன் மூலம் ஆளில்லா விமானம் நோயாளி இருக்கும் இடத்துக்கு சென்று சில வினாடிகளில் தேவையான மருத்துவ உதவியை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 கிலோ எடையுள்ள இந்த விமானம் மணிக்கு 100 கிலோமீட்டர் வேத்தில் பறக்கும் என பல்கலைக்கழக குறிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=119787&category=CommonNews&language=tamil

  9. பூமியை நெருங்கும் ராட்சத விண்கல்! [Tuesday 2015-10-20 08:00] பூமிக்கு அபாயம் ஏற்படுத்தும் வகையில், ராட்சத விண்கல் ஒன்று, மணிக்கு 1,25,529 கி.மீ., வேகத்தில் பூமியை நெருங்கி வருகிறது. அவ்விண்கல் வரும் அக்., 31ம் தேதி(30-10-15) புவி சுற்றுவட்ட பாதையை கடக்கும் என நாசா தெரிவித்துள்ளது.கடந்த 2006ம் ஆண்டுக்குப் பிறகு பூமியை தற்போது ஒரு ராட்சத விண்கல் நெருங்கி வருவதாக நாசா அறிவித்துள்ளது. அந்த விண்கல்லுக்கு 2015 டி.பி.,145 என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது 4,99,000 கி.மீ., துாரத்தில் பூமியை, வரும் அக்., 31ம் தேதி கடக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விண்கல் சுமார் 280மீ., முதல் 620மீ., வரை விட்டம் கொண்டது. இவ்விண்கல்லை அக்.,10ம் தேதி நாசா கண்டுபிடித்தது.மணிக்கு 1,25,529 க…

  10. பட மூலாதாரம்,ISRO கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன் எனப்படும் இந்திய விண்வெளி மையத்தை இஸ்ரோ 2035ஆம் ஆண்டு நிறுவத் திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் தற்போதே நடைபெற்று வருகின்றன. இந்த மையத்தின் முதல் பாகம் 2028ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் எஸ் சோம்நாத் தெரிவித்திருந்தார். இதற்காக அமைச்சரவையின் அதிகாரபூர்வ ஒப்புதல் கடந்த மாதம் வழங்கப்பட்டது. முதல் பாகம் விண்ணில் செலுத்தப்பட்டு ஏழு ஆண்டுகள் கழித்து இந்தியா தனது விண்வெளி மையத்தை முழுமையாக இயக்கத் தயாராக இருக்கும். கடந்த 1984ஆம் ஆண்டு சோவியத் நாட்…

  11. பொருட்களை வைத்த இடத்தை மறந்து விட்டு தேடுபவர்களுக்கு உதவும் உயர் தொழில்நுட்பம் பொருட்­களை வைத்த இடத்தை மறந்துவிட்டு தேடு­ப­வர்­க­ளுக்கு உதவும் வகையில் மைக்­ரோசொப்ட் நிறு­வ­ன­மா­னது புதிய தொழில்­நுட்­ப­மொன்றைக் அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது. உயர் தொழில்­நுட்ப மூக்குக் கண்­ணாடி வடி­வி­லான இந்த ஹோலோலென்ஸ் உப­க­ரணம் பயன்­பாட்­டா­ள­ருக்கு அவர் தேடும் பொருளை அதி விரை­வாக தேடிக் கண்­டு­பி­டித்து காண்­பிக்­கி­றது. உதா­ர­ணத்­துக்கு கார் சாவியைத் தொலைத்து விட்டு தேடும் பயன்­பாட்­டாளர் அதற்கு அத­னை­யொத்த சாவி­யொன்றை காண்­பித்து அது மாதி­ரி­யான பொருளைக் கண்­டு­பி­டிக்க கட்­ட­ளை­யி­டு­கையில், அவர் அந்தக் கண்­ணா­டியை அணிந்­தி­ர…

  12. பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, காலநிலை மற்றும் அறிவியல் நிருபர் 2014-ஆம் ஆண்டு முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெரிய விண்கல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சுனாமியை ஏற்படுத்தியுள்ளது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். டைனோசரை அழித்த விண்கல்லைக் காட்டிலும் 200 மடங்கு பெரிய விண்கல் சுமார் 300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியை தாக்கியது. இதை பற்றி தெரிந்து கொள்வதற்காக, தென்னாப்பிரிக்காவில் இந்த விண்கல் விழுந்த பகுதிக்கு விஞ்ஞானிகள் சென்றனர். அங்கு அவர்கள் ஸ்லெட்ஜ் சுத்தியல்களை கொண்டு அந்த விண்கல்லின் சில பாறை துண்டுகளை எடுத்து ஆராய்ச்சி மேற்கொண்டனர். மிகப்பெரிய…

  13. நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளின் காரணத்தினால் நாம் உபயோகிக்கும் செல்போன், லேப்-டாப், ஆன்லைன் வணிகம், வங்கிக் கணக்குகள் என ஒவ்வொன்றிற்கும் ஒரு பாஸ்வேர்டு உபயோகிக்கிறோம். சில நேரங்களில் அவற்றை மறந்து விடுவதால் திண்டாட நேரிடுகிறது. மேலும், அவற்றைத் திருட்டுத்தனமாக இயக்கி மோசடியில் ஈடுபட முடிகிறது. இவற்றை தவிர்க்க ரேகைப் பதிவு, குரல் பதிவு மற்றும் முக அடையாளம் போன்றவை பல்வேறு துறைகளில் ரகசிய குறயீடுகளாக பயன்படுத்தப்படுகிறது. இதுபோல் செல்போனிலும் மாற்றம் தேவை என எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம், தனது அடுத்த ஐ-போன் வெளியீட்டில் கைரேகையை ரகசிய குறயீடாக பதிவு செய்து செல்போனை இயக்கும் புதிய முறையை அறிமுகப்படுத்த இருக்கிறது. இதுபோன்ற முறைகள் இ- மெயில், வங்கிக் கண…

  14. செவ்வாய் கிரகத்தில் "விலங்குகளின் மந்தை" : கியூரியாசிட்டி ரோவரின் புகைப்படம் சொல்வது என்ன ? செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா? அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா? என்ற ஆராய்ச்சி நீண்ட காலமாக நடந்து வருகிற நிலையில் செவ்வாய் கிரக மேற்பரப்பில் ஆயிர கணக்கான உயிரினங்கள் மொத்தமாக மேய்வது போன்ற ஒரு காட்சி இடம் பெற்று உள்ளது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’, 2 ஆண்டுகளுக்கு முன்பு ‘கியூரியாசிட்டி ரோவர்’ என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது. செவ்வாய் கிரகத்தில் உள்ள காட்சிகளை படம் பிடித்து அனுப்புவதற்காக ரோவர் விண்கலத்தில் ‘மாஸ்ட்கேம்’ என்ற கமேராவும் பொருத்தப்பட்டது. இந்நிலையில் ‘ரோ…

  15. நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவும் கூடாது ஆனால் சாகவும் கூடாது JAFFNA COLLEGE INSTITUTE OF AGRICULTURE - JCIA நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவும் கூடாது ஆனால் சாகவும் கூடாது!- பல்தேசியக் கம்பனிகளின் வியாபார தந்திரங்களை அம்பலப்படுத்துகிறார் விவசாய விரிவுரையாளர் சுறேன்

  16. இயற்கை உரம் தயாரிக்க நினைக்கிறேன். இதை வெற்றிகரமான தொழிலாகச் செய்ய முடியுமா? நீங்கள் கிராமத்தில் வசிப்பவராக இருந்தால், இயற்கை உரம் தயாரிப்பது எளிதான விஷயமே. 10 சென்ட் இடம் தேவை. மாட்டுச்சாணம், இலை தழைகள் எளிதாக கிடைக்கும் இடமாக இருக்க வேண்டும். குறிப்பாக மண்புழு அவசியம். உலர்ந்த சருகுகள், மாட்டுச்சாணம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, அதன் மேல் மண்புழுக்களை போட்டு விட்டு, குறிப்பிட்ட நாட்கள் கழித்து எடுத்தால் இயற்கை உரமாக மாறியிருக்கும். 1 3 லட்சம் வரை முதலீடு தேவைப்படும். KVIC (Khadi and Village Industries Commission) மற்றும் KVK (Krishi Vigyan Kendra) ஆகிய அமைப்புகள் இயற்கை உரம் தயாரிக்க பயிற்சி கொடுக்கிறார்கள். இயற்கை உரத்துக்காக நீங்கள் பயன்படுத்தும் மண்புழுக்கள் பல்கிப்…

    • 0 replies
    • 491 views
  17. ஒரு நொடிக்கு 1.4 ஜி.பி.பி.எஸ் வேகத்தில் செயல்படும் 5ஜி தொழில்நுட்பம்! இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க உலக அளவில் கடந்த வாரம் வெளியான சில முக்கிய தொழில்நுட்ப செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது பிபிசி தமிழின் இந்த பிரத்யேக வாராந்திர தொழில்நுட்ப தொடர். ஒரு நொடிக்கு 1.4 ஜி.பி.பி.எஸ் வேகத்தில் செயல்படும் 5ஜி தொழில்நுட்பம்! படத்தின் காப்புரிமைJAMESTEOHART இந்தியாவில் இன…

  18. அமெரிக்க சைகை மொழியில் காதலை வெளிப்படுத்தும் எமோஜி அப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் 11.1 அப்டேட்டில் நூற்றுக்கும் அதிகமான புதிய எமோஜிக்கள் இடம்பெறுமென அப்பிள் அறிவித்துள்ளது. எமோட்டிவ் ஸ்மைலிக்கள், இரு பாலினத்தவருக்குமான கதாபாத்திரங்கள், மற்றும் பல்வேறு இதர உருவங்கள் நிறைந்திருக்கும்.ஜுலை மாதம் உலக எமோஜி தினத்தன்று அறிவிக்கப்பட்ட எமோஜிகளும் புதிய இயங்குதளத்தில் வழங்கப்படும். இதில் தலைப்பாகை அணிந்த பெண், தாடி கொண்டிருக்கும் ஆண், பாலூட்டுவது, , தாமரை உருவம் கொண்ட மனிதன் மற்றும் பல்வேறு புதிய உணவு வகைகள் இடம்பெற்றிருக்கின்றன . இத்துடன் அமெரிக்க சைகை மொழியில் காதலை வெளிப்படுத்தும் எமோஜியும் சேர்க்கப்படுமென அப்பிள் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் யு…

  19. முப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சீனாவைச் சேர்ந்த தனியார் கம்பனியொன்று தினசரி 10முழுமையான வீடுகளை உருவாக்கி வருகிறது. அந்தக் கம்பனியானது 10 மீற்றர் நீளமும் 6.6மீற்றர் அகலமும் உடைய முப்பரிமாண அச்சிடும் கருவியைப் பயன்படுத்தி சீமெந்து மற்றும் நிர்மாண கலவையை படலம் படலாக விசிறி இணைப்புக்களைக் கொண்டதாக சுவர்களை உருவாக்குகிறது. மேற்படி வீடுகளை உருவாக்குவதற்கு குறைந்த அளவான நிர்மாணப் பணியாளர்களே தேவைப்படுகின்றனர். ஒவ்வொரு வீடும் 5000 டொலருக்கும் குறைவான செலவில் உருவாக்கப்படுகின்றன. வாடிக்கையாளர்களால் வழங்கப்படும் இலத்திரனியல் ரீதியாக எந்த வீட்டு வடிவமைப்புக்கும் ஏற்ப தாம் வீடுகளை அச்சிட்டு வழங்குவதாக தெரிவித்த வின்சன் கம்பனியின் தலைமை நிறைவேற்றதிகா…

  20. பாதுகாப்பு இல்லாததா வாட்ஸ் அப்? ப்ராக்: வாட்ஸ் அப்பில் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரகசியமாகப் பதிவு செய்யப்படுகின்றன என்றும், அவை என்றாவது ஒருநாள் திருடப்பட்டு வெளியில் கசியவிடப்படும் என்றும் செக்கோஸ்லாவாகியா நாட்டின் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. வாட்ஸ்அப் நமது அலைபேசி எண்ணுடன், இதன் அழைப்புகளையும் பதிவு செய்து தமது கணிப்பொறிகளில் சேமித்துக் கொள்கின்றது. ஆகவே, இது ஹேக்கர்களின் கைகளில் சிக்கினால் நமது ரகசியம் எளிதில் வெளியே கசியலாம் என்றும் கூறப்படுகிறது. இந்தக் கணினிகள் பாதுகாப்பு மிகுந்ததாகத்தான் இருக்கும் என்றாலும், ஒருவேளை ஹேக்கிங் செய்யப்பட்டால், வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் வ…

  21. நமது ஸ்மார்ட் போன்கள் பொதுவாகவே மோசமான பேட்டரி திறன் உடையவையாகவே நம்மால் கணிக்கப்பட்டுவரும் போதிலும், பேட்டரியின் திறன் மோசமடைவதில் நமது பங்கும் உள்ளது என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்? இடையிடையே சார்ஜ் போடுவதைவிட ஒவ்வொரு முறையும் பேட்டரி முழுமையாக தீரும் முன்பாக சார்ஜ் போடுவதே சிறந்த முறையாக லித்தியம்-இரும்பு பேட்டரி தயாரிப்பவர்களும், அது தொடர்பாக ஆய்வு மேற்கொள்பவர்களும் தெரிவிக்கின்றனர். மனிதர்களுக்கு ஏற்படும் 'stress' எப்படி அவர்களது வாழ்நாளை குறைக்கக் கூடியதோ, அதேபோல், நமது ஸ்மார்ட் போன்களை கையாளுல் மற்றும் முறையற்ற வகையில் சார்ஜ் போடுவதால் பேட்டரிகளுக்கு ஏற்படும் 'stress' அதன் திறனையும், ஆயுளையும் குறைக்கக் கூடியது என்று தொழில்நுட்ப அறிஞர்கள் தெரிவித்துள்…

  22. தகவற்சித்திரங்கள் - Infographics Infographics என ஆங்கிலத்தில் கூறப்படும் தகவற்சித்திரங்கள் இணையமெங்கும் பரவிக் கிடக்கின்றன. நீங்களும் பலவற்றை பார்த்திருப்பீர்கள். நான் கண்ட சுவாரசியமான தகவற்சித்திரங்களை அவ்வப்போது உங்களுடன் இத்தொடரில் பகிர்ந்துகொள்ளலாம் என்றிருக்கின்றேன். தகவற்சித்திரம் – சிறுவிளக்கம் பக்கம், பக்கமாக எழுதி ஒரு கட்டுரையில் சொல்லவேண்டிய தகவல்களை எளிதாக ஒரு தகவற்சித்திரத்தில் வடிவமைத்துவிடலாம். இன்னும் சொல்லப்போனால் குறும்தகவல்கள், வரைபடங்கள், சித்திரங்களென செறிவுமிக்க தகவல்களை உள்ளடக்கிய ஒரு தகவற்சித்திரத்தை சிறப்பாக வடிவமைப்பதன் மூலம் சொல்லவேண்டிய விடயத்தை இலகுவாகவும், எளிதாகவும் வாசகர்களுக்கு புரிய வைத்துவிடலாம். இனி இன்றைய தகவற்சித்திரத்தைப் …

  23. மிகப் பிரகாசமான வால் நட்சத்திரங்களில் ஒன்றான ஐஸோன் ISON என அழைக்கப்படும் வால் நட்சத்திரத்தினை இலங்கையர்கள் தெளிவாக அவதானிக்கலாம் என இலங்கை வானியல் சங்கம் தெரிவித்துள்ளது. “இந்த நூற்றாண்டின் வால் நட்டத்திரம்” எனக் கூறப்படும் ஐஸோனானது, இந்த தசாப்தத்தில் அல்லது நூற்றாண்டில் பூமியைக் கடக்கும் மீ உயர் பிர­கா­ச­மான வால் நட்சத்திரம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இலங்கையின் கிழக்கு வான் பரப்பில் எதிர்வரும் 18 ஆம் திகதி காலைவேளையில் ஐஸோன் வால் நட்சத்திரத்தினை அவதானிக்கலாம் எனக் கூறப்படுகின்றது. பகல்வேளையானாலும் சூரிய வெளிச்சத்தை மிஞ்சும் வகையில் ஐஸோனின் வெளிச்சம் அமையும். வெற்றுக் கண்ணால் பார்க்கக்கூடியதாக இருக்கும். சிலவேளையில் வெளிச்சம் கண்ணில் வலியை ஏற்படுத்தலாம் என நாஸ…

  24. ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் (ஈஎஸ்ஏ) தனது எக்ஸ் (டுவிட்டர்) பக்கத்தில் ஒரு செயற்கைக்கோள் புகைப்படத்தை வெளியிட்டது. அதில், சூரியனின் ஒளி பூமியின் மேற்பரப்பில் சரி பாதியாக படுவது தெளிவாக பதிவாகி உள்ளது. ‘ஈக்வினாக்ஸ்’ என்பது சூரியன் நேரடியாக பூமத்திய ரேகைக்கு மேல் தோன்றுவதால், பகல், இரவு சம அளவு ஏற்படும். இந்தப் புகைப்படத்தை பகிர்ந்து ஈஎஸ்ஏ கூறும்போது, ‘‘குளிர்காலம் வருகிறது. பகல் இரவு பாதியாக இன்று பிரிந்தது. இந்த செயற்கைக்கோள் படம் காலை 09.00 மணிக்கு எடுக்கப்பட்டது’’ என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஸ்பேஸ்.காம் இணையதளத்தில், ‘‘பூமியின் வடக்கு அரைகோள பகுதியில் இலையுதிர் காலம் தொடங்கியது. தெற்கு அரை கோளத்தில் வசந்த காலம் தொடங்கியது. தற்போது சூரியன்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.