செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
இங்கு சுற்றுலா வருபவர்களுக்கு இளம்பெண்கள் வாடகை மனைவிகளாக மாறுகிறார்கள். எங்கு? மற்றும் அதற்கான காரணம் என்னவென்று இங்கே பார்க்கலாம். தாய்லாந்து ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாகும். தாய்லாந்தில் வாடகை மனைவிகளின் போக்கு அதிகரித்து வருகிறது. சமீபத்தில், இதைப் பற்றிய ஒரு புத்தகம் வெளியாகி விவாதத்திற்குள்ளானது. இந்த சர்ச்சைக்குரிய நடைமுறை தாய்லாந்தின் பட்டாயாவில் உள்ளது. இங்குள்ள மக்கள் இதை “wife for hire” என்று அழைக்கின்றனர். இது ஒரு தற்காலிக திருமண ஏற்பாடாகும். அங்கு பெரும்பாலும் ஏழை கிராமப்புறங்களில் இருந்து வரும் பெண்கள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் துணையாக மாறுகிறார்கள். இந்த நடைமுறை முக்கியமாக தாய்லாந்தின் பட்டாயாவின் red-light மாவட்டத்தில் உள்ள பார்கள் மற்றும் இரவு …
-
- 0 replies
- 187 views
- 1 follower
-
-
கூகுள் மேப்ஸை நம்பி பயணித்ததால் ஏற்பட்ட விபரீதம்! இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில், கூகுள் மேப்ஸ் வழிகாட்டுதலை நம்பி சேதமடைந்த பாலத்தின் மீது காரை செலுத்தி சென்றதில் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். அரைகுறையான நிலையில் சேதமடைந்த பாலத்தில் பயணித்த காரானது 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சோக சம்பவம் சனிக்கிழமையன்று நிகழ்ந்தது. வாகன சாதிகள் ஒரு திருமணத்தில் பங்கேற்பதற்காக பரேலிக்குச் சென்றனர். திருமண மண்டபத்தை அடைய கூகுள் மேப்ஸை நம்பி சென்றுள்ளனர். அந்த ஜிபிஎஸ் மேப் அவர்களை உடைந்த மேம்பாலத்தின் மீது வழி காட்டியுள்ளது. அதை நம்பி பாலத்தில் பயணித்த கார், 50 அடி உயரத்தில் இருந்து ஆற்றில் விழுந்த…
-
- 4 replies
- 321 views
- 1 follower
-
-
ஐரோப்பாவில் மிக மோசமான பாலியல் தொந்தரவு வழக்காக மருத்துவர் ஆர்னி பையின் வழக்கு மாறி உள்ளது. 87 பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன் அவர்களுடன் அந்தரங்கத்தில் இருந்த சுமார் 6000 மணி நேர வீடியோ உடன் மருத்துவர் ஒருவர் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளார். இந்த சம்பவம் இணையதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஐரோப்பிய நாடான நார்வேயை சேர்ந்தவர் ஆர்னே பை. 55 வயதாகும் இவர் மருத்துவராக நார்வே நாட்டில் உள்ள பல கிராமங்களில் பணியாற்றியுள்ளார். தொழிலில் திறமை மிக்க நபராக இருந்த போதிலும் பெண்களிடம் பழகுவதில் அவருக்கு அதிக ஆர்வம் இருந்துள்ளது. இவர் மருத்துவர் ஆகுவதற்கு முன்பாக பயிற்சி நிலையிலிருந்த போதே ஏராளமான பெண்களுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். மருத்துவர…
-
- 3 replies
- 471 views
- 1 follower
-
-
7 கோடி கொள்ளையின் சந்தேகநபர் ஒருவர் கைது! பணத்தை பாதுகாப்பாக கொண்டு செல்லும் தனியார் நிறுவனமொன்றின் சாரதி ஒருவர் 7 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மினுவாங்கொடையில் வைத்து கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹா பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் மினுவாங்கொட பொலிஸாரும் இணைந்து நேற்று (19) பிற்பகல் கம்பஹா கடுவங்கஹா பகுதியில் வைத்து சந்தேக நபரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட போது, அவரிடம் இருந்து 5 கிராம் 420 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட நிலையில், கொள்ளையிடப்பட்ட பணத்தில் இருந்து 31,515,291 ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளது. தம்மிட்ட மாகவிட பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுயை ஒருவரே இவ்வா…
-
- 4 replies
- 420 views
- 1 follower
-
-
28 NOV, 2024 | 12:09 PM முல்லைத்தீவு, விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் சிறுத்தை ஒன்று வீடொற்றுக்குள் புகுந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விசுவமடு இளங்கோபுரம் கிராமத்தில் திடீரென சிறுத்தை ஒன்று வீட்டிற்குள் உள்நுழைந்துள்ளது. இதனையடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த சிறுத்தையை மீட்டு கொண்டு சென்றுள்ளனர். தற்போது நிலவும் சீரற்ற வானிலையால் காடுகளுக்கு அருகில் வசிப்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/199901
-
- 0 replies
- 575 views
- 1 follower
-
-
உலகின் மிக வயதான மனிதர் 112 வயதில் காலமானார்! உலகின் மிக வயதான மனிதர் ஜோன் டினிஸ்வுட் (John Tinniswood) தனது 112 வயதில் உயிரிழந்தார் என்று கின்னஸ் உலக சாதனைகள் செவ்வாயன்று (26) தெரிவித்தன. இவர் இரண்டு உலகப் போர்கள் மற்றும் இரண்டு உலகளாவிய தொற்றுநோய்களிலிருந்து உயிர் தப்பியுள்ளார். புகழ்பெற்ற டைட்டானிக் கப்பல் மூழ்கிய அதே ஆண்டில் பிறந்த டினிஸ்வுட், வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள சவுத்போர்ட் நகரில் உள்ள தனது பராமரிப்பு இல்லத்தில் தனது கடைசி மூச்சை விடுத்தார். டின்னிஸ்வுட் ஆகஸ்ட் 1912 இல் லிவர்பூலில் பிறந்தார், 1942 இல் திருமணம் செய்து கொண்டார், இரண்டாம் உலகப் போருக்கு மத்தியில் அவர் ரோயல் ஆர்மி பே கார்ப்ஸின் ஒரு பகுதியாக இருந்தார். பின்னர் அவர் எண்ணெய…
-
- 0 replies
- 546 views
-
-
வெயாங்கொடை மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் புதையல் தோண்டும் பணி ஆரம்பம்! வெயாங்கொடை, வந்துரம்ப பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள காணியில் புதையல் தேடும் பணி நேற்று (21) ஆரம்பமானது. அத்தனகல்லை நீதிவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த இடத்தில் புதையல் இருப்பதாகக் கூறி பல வருடங்களாக புதையல் வேட்டையாடுபவர்களால் மேற்படி இடம் பல தடவைகள் தோண்டப்பட்டுள்ளதாக வெயங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர். பல சந்தர்ப்பங்களில் புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுடன் பலரையும் பாதுகாப்புப் படையினர் கைது செய்திருந்தனர். தொல்லியல் திணைக்களம் மேற்கொ…
-
-
- 5 replies
- 498 views
- 1 follower
-
-
ஜனாதிபதி அநுரகுமாரவின் 56 ஆவது பிறந்த தினம் இன்று! ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்றைய தினம் தனது 56 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். இவர் இலங்கையின் மத்திய மாகாணத்தில் மாத்தளை மாவட்டம் கலேவலை என்னும் ஊரில் 1968 நவம்பர் 24 இல் பிறந்தார். அநுரகுமார தனது பாடசாலைக் கல்வியை தம்புத்தேகமை காமினி மகா வித்தியாலயத்திலும், தம்புத்தேகமை மத்திய கல்லூரியிலும் கற்றார். தனது பாடசாலையில் இருந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான முதலாவது மாணவராக விளங்கிய இவர் பாடசாலை நாட்களில் இருந்தே மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாட்டாளராக இருந்ததோடு, அக்கட்சியில் 1987 இல் இணைந்து, மாணவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நுழைந்த அவர் சில மாதங்களுக்குப…
-
- 0 replies
- 698 views
-
-
யாழில் ஊருக்குள் புகுந்த பாரிய முதலையால் பரப்பு! யாழ்ப்பாணம் கச்சேரி – நல்லூர் வீதியில் உள்ள மூத்தவிநாயகர் கோவிலுக்கு அண்மையில் 8 அடி நீளமான முதலை ஒன்று பிடிபட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றின் முன்பாக முதலை உயிருடன் இருப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு அறிவித்தனர். இந்நிலையில் அப்பகுதிக்கு வருகைதந்த வனஜீவராசிகள் உத்தியோகத்தர்களால் முதலை உயிருடன் பிடிக்கப்பட்டு கொண்டுசெல்லப்பட்டது. யாழ் மாவட்டத்தில் நிலவிவரும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக அருகில் உள்ள நீர்நிலைகளில் இருந்து குறித்த முதலை ஊருக்குள் வந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். https://athavannews.com/2024/1409594
-
- 3 replies
- 398 views
-
-
ஆர்.ராம் பத்தாவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு வியாழக்கிழமை (21) நடைபெற்றிருந்த நிலையில் இதன்போது, முதலில் சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தலைவர் தெரிவுகள் இடம்பெற்றிருந்தன. இதனையடுத்து, புதிதாக தெரிவு செய்யப்பட்ட சபாநாயகர் அஷோக்க ரன்வெலவுக்கு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார். அவரைத்தொடர்ந்து மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம் வாழ்த்துக்களைத் தெரிவு செய்திருந்தார். அவர்களைத்தொடர்ந்து சிவஞானம் சிறிதரன், நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதற்காக தமது ஆசனங்களில் இருந்து எழுந்தபோதும், நேரமின்மை காரணமாக வாழ்த்துரைகள் மட்டப்படுத்தப்பட்டன. இதனை அவதானித்த சபை முதல்வர் அ…
-
-
- 1 reply
- 398 views
- 1 follower
-
-
யாழ்.(Jaffna)மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன்(Dr.Archuna) புதிய நாடாளுமன்றத்தின் முதல் நாள் அமர்வு இன்றையதினம்(21) ஆரம்பமானபோது பாரம்பரியமாக எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்ததுடன் அந்த கதிரையிலிருந்து நகர மறுத்தமை பேசுபொருளாக மாறியுள்ளது. இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றுக்கான கன்னி அமர்வு இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. இதன்போது முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினரான வைத்தியர் அரச்சுனா எதிர்க்கட்சித் தலைவரின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஆசனத்திலிருந்து நகர மறுத்த அர்ச்சுனா உடனடியாகவே நாடாளுமன்ற ஊழியர்கள் இது எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனம் எனவே அந்த இடத்திலிருந்து நகருமாறு தெரிவித்தபோதும் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்…
-
-
- 7 replies
- 303 views
- 1 follower
-
-
(இராஜதுரை ஹஷான்) ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தியின் 50 இற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை (20) பாராளுமன்றத்துக்கு பிரத்தியேக பேருந்தில் வருகைத் தந்து தகவல்களை பதிவு செய்தனர். தேசிய மக்கள் சக்தியின் சார்பில் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை (20) பத்தரமுல்லை பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இந்த விசேட கூட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோர் கலந்துக் கொண்டனர். தேசிய மக்கள் சக்தியின் சார்பில் பாராளுமன்றத்துக்கு தெரிவாகிய உறுப்பினர்களுக்கு இதன்போது பிரதமர் …
-
- 0 replies
- 105 views
- 1 follower
-
-
அமெரிக்காவின்(United States) - கலிபோர்னியா கடற்கரையில் அழிவின் முன்னோடி என்று அழைக்கப்படும் அழிவு நாள் மீன் மீண்டும் கரை ஒதுங்கியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒர்ஃபிஷ்(Oarfish) என அழைக்கப்படும் இந்த மீனினம் சுனாமி அல்லது பூகம்பம் போன்ற பேரழிவுக்கு அறிகுறியாக அமைந்துள்ளமையாகும். புராண நம்பிக்கை ஜப்பானிய புராணக்கதையின் படி, இந்த மீன் வரவிருக்கும் பேரழிவை குறிக்கும் சின்னமாக அமைந்துள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டில் பூகம்பம் மற்றும் சுனாமிக்கு சில மாதங்களுக்கு முன்பு, இந்த மீன் கடற்கரையில் 20க்கும் மேல் தோன்றிய பிறகு, ஜப்பானிய கோட்பாடு பிரபலமடைந்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா …
-
- 1 reply
- 222 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், நிஹாரிகா ராம ராவ் பதவி, பிபிசி செய்தியாளர் பல்வேறு நாடுகளில் பெண்ணுரிமைகள் மீதான தாக்குதல் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகள் போன்றவை அவர்களை ஒரு இயக்கம் அமைக்க வழிவகுத்துள்ளது. தென் கொரியாவில் உருவான 4B இயக்கத்தினால் (4B Movement) இந்த இயக்கம் உந்துதல் பெற்றிருக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனல்ட் டிரம்ப் வெற்றிபெற்ற அடுத்த நாள், 4B இயக்கத்தைப் பற்றி கூகுளில் 2 லட்சம் நபர்களுக்கு மேல் தேடியுள்ளனர். சில பெண்கள் இந்த 4B இயக்கத்தில் பங்கேற்கப் போவதாகவும் அறிவித்தனர். இந்த இயக்கத்தைப் பின்பற்றும் பெண்கள் ஆண்களோடு உடலுறவு கொள்வதில்லை என்று கூறுகின்றனர். இந்த இய…
-
-
- 9 replies
- 950 views
- 1 follower
-
-
ரஷ்யா நாட்டில் செக்ஸிற்கென தனி அமைச்சகத்தை ஏற்படுத்த ஜனாதிபதி விளாடிமிர் புதின் திட்டமிட்டுள்ளார். இதற்கான காரணம் குறித்த பின்னணி தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. ரஷ்யாவுக்கும் – உக்ரைன் நாட்டிற்கும் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், இருநாட்டு எல்லையில் உள்ள ஏராளமான பொதுமக்கள் இடம்பெயர்ந்து வருகிறார்கள். இதனால் இந்த இரு நாடுகளிலும், மக்கள் தொகை எண்ணிக்கையில் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக வலிமையான நாடுகளில் ஒன்றாக கருதப்படும் ரஷ்யாவுக்கு இந்த மக்கள் தொகை பெருக்கம் குறைவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் ரஷ்யாவில் மக்கள் தொகை குறைந்து வருவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 119 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,UGC படக்குறிப்பு, ஒரு பெண் ஆடைகளை களைந்து உள்ளாடைகளுடன் இருந்ததால் கைது செய்யப்பட்ட காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. எழுதியவர், ரோசா அசாத் பதவி, பிபிசி பாரசீகம் இரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அறிவியல் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழக வளாகத்தில் நவம்பர் 2-ஆம் தேதி (சனிக்கிழமை) ஒரு பெண் ஆடைகளை களைந்து உள்ளாடைகளுடன் இருந்ததால் கைது செய்யப்பட்ட காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த காணொளி தொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தப் பெண் தனது ஆடைகளை கழற்றி வீசியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிபிசி பாரசீக டிஜிட்டல் குழு இந்த சம்பவம் நடந்த இடத்தை உறுதி செய்த…
-
-
- 28 replies
- 2k views
- 1 follower
-
-
இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிறுவன் ஒருவனுக்கு இடது கண்ணுக்கு பதில் வலது கண்ணில் தவறுதலாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 7 வயது சிறுவனின் இடது கண்ணில் தொடர்ந்து நீர் வந்து கொண்டே இருந்ததால், அவனது பெற்றோர் அவனை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சிறுவனின் கண்ணை சோதனை செய்த வைத்தியர் அவனது கண்ணுக்குள் மெல்லிய பிளாஸ்டிக் போன்ற பொருள் இருப்பதாகவும், சிறிய அறுவை சிகிச்சை மூலம் அதனை அகற்றிவிடலாம் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து பெற்றோரின் சம்மதத்துடன் சிறுவனின் கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆனால், சிறுவனின் இடது கண்ணுக்கு பதிலாக தவறுதலாக வலது கண்ணில் அறுவை சி…
-
- 0 replies
- 155 views
- 1 follower
-
-
(எம்.மனோசித்ரா) நான் அரசியலிலிருந்து ஓய்வு பெறவில்லை. நினைத்தால் அடுத்த தேர்தலில் போட்டியிடுவேன். சர்வஜன பலய கட்சிக்கு நாடளாவிய ரீதியில் சிறந்த வரவேற்பிருக்கிறது. எனவே இந்த தேர்தலில் சிறந்த வெற்றியை எதிர்பார்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். வியாழக்கிழமை (14) தேர்தலில் வாக்களித்தன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், சர்வஜன பலய கட்சிக்கு நாடளாவிய ரீதியில் சிறந்த வரவேற்பிருக்கிறது. எனவே இந்த தேர்தலில் சிறந்த வெற்றியை எதிர்பார்க்கின்றோம். அரசாங்கத்தின் சிறந்த தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பை வழங்குவோம். மாறாக மக்களுக்கு பாதகமான நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்பட…
-
- 3 replies
- 269 views
- 2 followers
-
-
சென்னையில் அரசு மருத்துவமனையில், மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு புற்றுநோய் பிரிவில் பாலாஜி என்பவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இளைஞர்கள் மருத்துவமனைக்குள் புகுந்து பாலாஜியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினர். தங்கள் தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி, மருத்துவரை கத்தியால் குத்தியுள்ளனர். கத்திக்குத்தில் காயமடைந்த பாலாஜி மீட்கப்பட்டு, அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கத்தியால் குத்திய இளைஞர்கள்…
-
- 2 replies
- 240 views
- 1 follower
-
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன. உங்களுக்கு தெரிந்ததை இங்கே பதியுங்கள். @Kandiah57 அண்ணை கேட்டுக் கொண்டதற்கு இணங்க... வரும் பாராளுமன்ற தேர்தலில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்ற தகவலை, ஊர்ப்புதினம் செய்திகளில் இருந்து திரட்டியவற்றை... கீழே பதிந்துள்ளேன். சில விடுபட்டு இருக்கலாம். அதனை தயவு செய்து... நீங்கள் மேற்கொண்டு இணைத்து விடுங்கள். 1) தமிழரசு கட்சி, (ஸ்ரீதரன், சுமந்திரன்.....) (சின்னம்: வீடு) 2) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, (கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன்...) (சின்னம்: சைக்கிள்.) 3) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, (தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சசிகலா …
-
-
- 89 replies
- 5.7k views
- 1 follower
-
-
நான் ஏன் இறந்தேன்? அம்ஸ்டர்டாமின் சிவப்பு விளக்குப் பகுதியில் இருக்கும் கண்ணாடி ஷோகேஸுகள் (showcase) உலகப் பிரசித்தி பெற்றவை. இங்குதான் பாலியல் தொழிலாளிகள் அமர்ந்திருந்து காட்சி தருவார்கள். சுற்றுலா வரும் பயணிகள் அதிகம் உலா வரும் இடம் இது. இந்த இடம், “அந்தி மலரும் நந்தவனம். அள்ளிப் பருகும் கம்பரசம்” கடந்த சனிக்கிழமையிலிருந்து ஒரு ஷோகேஸில் இருந்த பெண்ணிடம் வித்தியாசம் தெரிந்தது. ஷோகேஸின் கண்ணாடிக்குப் பின்னால் உள்ளாடை அணிந்த பொன்னிறமான பெண் ஒருத்தி இருந்தாள். அவள் பெயர் பெற்றி(Betty). ஆனால் அவள் இன்று உயிரோடு இல்லை. பெற்றி இறந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன. 3D தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெற்றியின் உருவம் அந்த ஷோகேஸில் இப்பொழுது காட்சிப் படுத்தப்பட்டிருக்க…
-
- 2 replies
- 366 views
- 1 follower
-
-
எழுதியவர், விஷ்ணுகாந்த் திவாரி பதவி, பிபிசி செய்தியாளர் “குழந்தைப் பருவத்திலேயே எங்களுக்கு நிச்சயம் செய்துவிடுவார்கள். அதன் பிறகு அந்த பெண்ணின் வாழ்க்கையில் எல்லா முடிவுகளையும் மாப்பிள்ளை வீட்டார் தான் எடுப்பார்கள். ஒருவேளை அந்த பெண்ணுக்கு இந்த உறவிலிருந்து வெளியில் வர வேண்டும் என்றால் அதற்கு பணம் கொடுக்க வேண்டும். என்னிடம் எனது கணவர் வீட்டார் ரூ. 18 லட்சம் கேட்டுள்ளனர்.” மத்திய பிரதேசத்திலுள்ள ராஜ்கர் மாவட்டத்தில் இருக்கும் கெளஷல்யா இவ்வாறு கூறுகிறார். இந்த நடைமுறை பல தலைமுறைகளாக அங்கு நடப்பதாகவும் இதை ‘ஜடா நாத்ரா’ என்று அழைப்பதாகவும் அவர் தெரிவித்தார். பகாரியா கிராமத்தை சேர்ந்த கெளஷல்யா, தனது இரண்டாம் வயதில் இந்த நாத்ரா வழக்கப்பட…
-
- 0 replies
- 231 views
- 1 follower
-
-
நாங்கள் ஆட்சி அமைக்க மாட்டோம் என தெரிந்தும் களுத்துறை பிரதேசத்திற்கு நன்றியை தெரிவிக்கவே வந்தேன் என தெரிவித்து முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன(Rohitha Abeygunawardana) கண்ணீர் விட்டழுத சம்பவம் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. களுத்துறையில்(kalutara) நேற்று(10.11.2024) இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் கண்ணீர் விட்டழுதுள்ளார். அங்கு உரையாற்றிய அவர், அபேகுணவர்தன அமைச்சராக மாட்டார் என்பது இங்குள்ள மக்களுக்கு தெரியும். நாங்கள் ஆட்சி அமைக்க மாட்டோம். நன்றி தெரிவிப்பு அதையறிந்து நான் இங்கு எனது நன்றியை தெரிவிக்கவே வந்தேன். எனினும் விரக்தியால் அரசியலை விட்டு விலக மாட்டேன்.” என தெரிவித்துள்ளார். இந்நிலையில், கடந்த 2022 ஆண்டும்…
-
-
- 7 replies
- 459 views
- 1 follower
-
-
உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் மீது மோதிய வாகனம் – 35 பேர் உயிரிழப்பு (காணொளி இணைப்பு) சீனாவின் ஜுஹாய் நகரில் உள்ள மைதானத்திற்கு வெளியே உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் மீது வாகனம் மோதியதில் 35 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் 43 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விபத்தை ஏற்படுத்திய சாரதி தற்போது கோமா நிலையில் இருப்பதாகவும், இதன் காரணமாக விபத்து தொடர்பில் வாக்குமூலம் பெற முடியாமல் பொலிஸாரினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்களில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1408264
-
- 0 replies
- 284 views
-
-
விந்தணுவால் மட்டும் மாதம் 5 லட்சம் லாபம்… எருமை மாடுனு யாரையும் திட்டாதீங்க! Kumaresan MNov 12, 2024 16:33PM ராஜஸ்தானில் எருமை மாடு ஒன்றை 23 கோடிக்கு ஏலம் கேட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் ஆண்டுதோறும் சர்வதேச புஷ்கர் கண்காட்சி நடைபெறும். இதுவே இந்தியாவின் பெரிய கால்நடை கண்காட்சி ஆகும். இந்த கண்காட்சியில் கோடிக்கணக்கில் குதிரைகள் ஏலம் போகும். குதிரைகளை விட இந்த கண்காட்சியில் இருந்த அன்மோல் என்கிற முரா ரக எருமை மாடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஹரியானா மாநிலம் சிர்ஷா பகுதியை சேர்ந்த ஜகத் சிங் என்பவருக்கு இந்த எருமை சொந்தமானது. சுமார் 13 அடி நீளம், 6 அடி அகலம் 1500 கிலோ எடை கொண்ட அன்மோல் எருமை கண்காட்சியில் ஹ…
-
- 0 replies
- 377 views
-