செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
போதைப் பழக்கத்தால் உயிரை இழந்த தனது 26 வயது கணவரின் உடலுடன், தானும், தனது பிள்ளைகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண். போதைப் பழக்கம் உயிரைப் பறிக்கும். அதை இனியாவது விட்டு விடுங்கள். அதற்காகத்தான் இந்தப் புகைப்படம் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். இதைப் பார்த்து நாலு பேர் திருந்தினால் அது தனக்கு மகிழ்ச்சியே என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த பெண் ஈவா ஹாலந்த். இவரது கணவரின் பெயர் மைக் செட்டில்ஸ். கணவர் ஹெராயின் போதை பழக்கத்திற்கு அடிமையானவர். இந்தத் தம்பதிக்கு லூகாஸ் மற்றும் அவா என்ர மகளும் மகனும் உள்ளனர். மைக்கும் , ஈவாவும் 11 ஆண்டு காலம் சேர்ந்து வாழ்ந்தனர். அமைதியான இவர்களது வாழ…
-
- 7 replies
- 467 views
-
-
-
- 0 replies
- 1k views
- 1 follower
-
-
பைக்கில் செல்லும் போது பெட்ரோல் தீர்ந்து, வேர்வை வழிய பல கிலோ மீட்டர் வண்டியைத் தள்ளிக்கொண்டு சென்ற அனுபவம் நம்மில் பலருக்கு ஏற்பட்டிருக்கும். ஆனால் ஹைதராபாத் சேர்ந்தவர்களுக்கு அந்த கவலை இல்லை. காரணம் சையத் மெராஜூதீன் ஹைத்ரி.ஹைதராபாத் நகரத்தில் போக்குவரத்து பிரிவில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் பதவியில் இருக்கும் சையத், தினமும் வேலைக்கு செல்லும் போது 6 பாட்டில்களில் பெட்ரோலை கொண்டு செல்கிறார். பெட்ரோல் தீர்ந்து போய் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றுகொண்டிருக்கும் யாரைவது பார்த்தால் அவர்களுக்கு பணம் வாங்காமல் பெட்ரோல் கொடுத்து உதவுகிறார். இவரிடம் உதவி பெற்றவர்கள் இந்த தகவலை இணையத்தில் பகிர்ந்ததால் இவரது சேவை வேகமாக பரவி வருகிறது. இது பற்றி சையத் கூறும் போது “சமீபத்தில் என…
-
- 0 replies
- 423 views
-
-
புதுடில்லியில் மந்திரியின் மனைவியை கடித்த நாயை காவல்துறை கைது செய்ய இருக்கிறார்கள். புதுடில்லியின் அர்விந்த் கெஜ்ரிவாலின் அமைச்சரவையில் முன்னாள் சட்ட மந்திரியாக இருந்தவர் சோம்நாத் பார்தி. அவர் மீது, அவரின் மனைவி போலிஸில் புகார் தெரிவித்திருந்தார். அதில் "சோம்நாத் என்னை கொலை செய்வதற்கு இரண்டு முறை முயற்சி செய்தார். 2013ம் ஆண்டு நான் கர்ப்பமாக இருந்த போது, அவர் வளர்க்கும் “டான்” என்ற நாயை ஏவி விட்டு என்னை கடிக்க வைத்தார்" என்று புகார் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, டெல்லி போலிஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். டெல்லி போலிசார் தன்னை கைது செய்யக் கூடாது என்று சோம்நாத் கோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்தார். ஆனால், அந்த மனு நேற்று தள்ளு…
-
- 0 replies
- 248 views
-
-
"பாட்டி" சொன்ன கதையை..... நிஜமாக்கிய காக்கா. வெலிங்டன்: பானை ஒன்றில் இருந்த தண்ணீர் மேலே வர காகம் ஒன்று கற்களை எடுத்து உள்ளே போட்டது என்ற அறிவுப்பூர்வமான கதையை சிறுவயதில் நாம் கேட்டிருக்கிறோம். தற்போது அந்தக் கதையை உண்மையாகவே நிகழ்த்திக் காட்டி சபாஷ் வாங்கியுள்ளது ஒரு காக்கா. நாயைப் போலவே காகத்திற்கும் மக்களுக்கும் இனம் புரியாத ஒரு பாசம் உண்டு. நம் பாட்டிகள் சொல்லும் முக்கிய கதைகளில் தவறாமல் காகமும் இடம் பெற்றிருக்கும். மற்ற பறவைகளை விட தினமும் காகத்திற்கு சாப்பாடு வைப்போர் அதிகம். ஒரு காகத்துக்கு என்னதான் பிரச்சனை வந்தாலும் குடும்பமாக மற்ற காகங்கள், உடனடியாக அதற்காக குரல் கொடுக்கிறது. இக்காட்சிகளைப் பார்க்கும் போது, காகங்கள் நிஜமாகவே புத்திசாலியா? என்கிற கேள்வி அவ்வப்…
-
- 3 replies
- 3.1k views
-
-
பாஸ் மகள் மீது வெறித்தனமான கள்ளக்காதல்: நாடு கடத்தப்படும் இந்திய வம்சாவளி என்ஜினியர். சிட்னி: ஆஸ்திரேலியாவில் தனது முதலாளியின் மகளை பின்தொடர்ந்த இந்திய வம்சாவளி என்ஜினியருக்கு ரூ.1 லட்சத்து 33 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதுடன் அவர் நாடு கடத்தப்பட உள்ளார். ஆஸ்திரேலியாவின் க்வீன்ஸ்லேண்ட் மாநிலத்தில் உள்ள கிளாட்ஸ்டோனில் வசித்து வருபவர் இந்திய வம்சாவளி என்ஜினியரான அபினவ் சிங்(33). கனடா நாட்டு பாஸ்போர்ட் வைத்துள்ள அவர் தற்காலிக விசாவில் ஆஸ்திரேலியா வந்துள்ளார். அவரது மனைவி ஒரு டாக்டர். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அபினவுக்கு தன்னுடன் பணிபுரியும் தனது முதலாளியின் மகள் மீது கள்ளக்காதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அந்த பெண்ணுக்கு கடந்த ஜூலை மாதம் 14ம் தேத…
-
- 9 replies
- 1.5k views
- 1 follower
-
-
அஜித் விளம்பரப்படங்களில் நடிப்பது இல்லை என்பது அனைவரும் அறிந்ததுதான். அதற்கு காரணமாக அவர் சொல்லியிருப்பது என்னவென்றால் தான் விளம்பரப்படுத்தும் பொருளின் தரம் உண்மையா என தெரியாமல், அதை வாங்கச்சொல்லி மக்களை ஏமாற்ற தன்னால் முடியாது என்பது தான். அதனால் தான் ஒருகாலத்தில் கோக் விளம்பரத்தில் நடித்து அதை பிரபலப்படுத்திய விஜய், பின்னாளில் கத்தி படத்தில் குளிர்பான நிறுவனத்திற்கு எதிராக வசனம் பேசியபோது அது காமெடியாக மாறியது. இப்போது மலையாள மெகாஸ்டார் மம்முட்டிக்கு தான் விளம்பரபடுத்திய சோப் ஒன்றினால் புதிய சிக்கல் முளைத்துள்ளது. இந்துலேகா சோப் விளம்பரத்தில் தோன்றும் மம்முட்டி, இந்த சோப்பை பயன்படுத்தினால் சில நாட்களில் அழகு உங்கள் வீட்டு கதவை தட்டும் என கூறுவார். கேரளாவில் வயநாட்டை சேர…
-
- 2 replies
- 430 views
-
-
தங்களது கனடிய வீட்டில் வசதியாக இருந்து கொண்டு 2,300 மைல்களிற்கு அப்பால் புளொறிடாவில் உள்ள வீட்டில் நடந்த திருட்டை இணைய கமரா மூலம் கவனித்துள்ளனர்.வீடியோவில் பதியப்பட்ட இந்த திருட்டு சம்பவத்தை இவர்கள் புளொரிடா அதிகாரிகளிற்கு அனுப்பி வைத்ததை தொடர்ந்து 45வயதுடைய தோமஸ் ஹின்ரன் என்ற சந்தேக நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். பல இடங்களில் திருடிய சந்தேக நபர் இவர் என தெரியவந்துள்ளது.ஒன்ராறியோ, கனடாவை சேர்ந்த இந்த தம்பதியருக்கு புளொரிடாவில் வோட் மெயர்ஸ் பீச்சில் விடுமுறை இல்லம் ஒன்று உள்ளது. மேற்குறிப்பிட்ட திருட்டு சம்பவம் இந்த வீட்டில் இடம்பெற்றது.இரவு 11மணியளவில் மனிதனொருவரை முதுகு பை ஒன்றை போட்டவண்ணம் கண்டதாக தெரிவித்துள்ளனர். வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமரா ம…
-
- 1 reply
- 955 views
-
-
நெல்லை மாவட்டம், கடையம் அருகே வனப்பகுதியில் 15 அடி நீளத்திற்கும் அதிகமான ராஜநாகம் பிடிபட்டுள்ளது. மிகுந்த நச்சுத்தன்மை உடைய இந்த பாம்பை வனத்துறையினர் உயிரைப்பணயம் வைத்து பிடித்தனர். வனச்சரகர் இளங்கோ ஆலோசனைபடி வேட்டைத் தடுப்பு காவலர் ஸ்னேக்பாபு என்ற ரமேஸ்பாபு மற்றும் வனத்துறையினர் பிடித்தனர். வயது, வளர்ச்சி, எடை, நீளம் போன்ற விவரம் அளவிட்ட பின்னர் மீண்டும் இந்த பாம்பு வனத்தில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=150894
-
- 2 replies
- 2.1k views
-
-
உலகின் பிரமாண்ட சுவரோவியம்! (வீடியோ) நார்வே நாட்டில் Nuart festival என்ற பெயரில் ஓவியக் கலைஞர்களுக்கான திருவிழா நடைபெற்றது. இதில் பல்வேறு ஓவியக் கலைஞர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார். இதில் பிரெஞ்சு ஓவியர்களான எல்லா (Ella) மற்றும் பிட் (Pitr) இருவரும் சேர்ந்து வரைந்த 'Lilith and Olaf' என்ற ஓவியம் பலரையும் பிரமிக்க வைத்தது. இந்த ஓவியம் 2 லட்சத்து 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், நார்வே தொழிற்சாலைக் கட்டடங்களுக்கு மேல் பரந்து விரிந்துள்ளது. அதன் வீடியோவை காண... http://www.vikatan.com/news/article.php?aid=52288
-
- 0 replies
- 480 views
-
-
ரொறொன்ரோ- யு.எஸ்சில் வெள்ளரிக்காய்களுடன் இணைப்புடைய சல்மனெல்லா வெடிப்பினால் இருவர் மரணமடைந்துள்ளனர். மெக்சிக்கோவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளரிக்காய்கள் மூலம் இந்நோய் ஏற்பட்டுள்ளதால் யு.எஸ். மற்றும் கனடா பூராகவும் இருந்து இவற்றை திருப்பி அழைக்க முற்பட்டுள்ளன. இருவர் மரணமடைந்ததுடன் மேலும் 341 பேர்கள் வரை இந்த சல்மனெல்லா பூனா தொற்று நோய் வெடிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவிலும் வெள்ளரிக்காய் திரும்ப அழைத்தல் விரிவாக்கப்பட்டுள்ளது. 18வயதிற்குட்பட்ட பிள்ளைகள் மேலதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. கனடாவில் எவரும் நோயுற்றதாக தெரியவரவில்லை என கனடிய உணவு பரிசோதனை நிறுவனம் அறிவித்துள்ளது. - See more at: http://www.ca…
-
- 7 replies
- 2k views
-
-
அடர்ந்த காட்டில் ஒபாமாவுக்கு மீன் விருந்து கொடுத்த சாகச வீரர் ! (வீடியோ) நியூயார்க்: அலாஸ்காவில் சமீபத்தில், இங்கிலாந்து சாகச வீரர் பியர் கிரில்ஸ்சுடன் இணைந்து அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, காட்டுப் பகுதியில் மீன் சாப்பிட்டுள்ளார். அந்த காட்சி வீடியோவாக படமாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து சிறப்புப் படை முன்னாள் வீரர் கிரில்ஸ். இவர், இக்கட்டான நேரங்களில் உயிரை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து கற்றுக் கொடுக்கும் சாகச பயண நிகழ்ச்சிகளைக் தொலை காட்சிகளில் நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விருப்பி பார்க்கிறார்கள். இந்நிலையில் அண்மையில் நடந்த இவரது சாகச நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் கலந்து கொ…
-
- 8 replies
- 616 views
-
-
கால்பந்து ஜாம்பவான் மரடோனா மீண்டும் திருமணம்! அர்ஜென்டினா அணியின் முன்னாள் கேப்டனும் பயிற்சியாளருமான மரடோனா, தற்போதையை காதலி ரோசியா ஒலிவாவை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். துபாயில் இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். துபாய் விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மரடோனாவின் காதலி ரோசியா ஓலிவா, இந்த ஆண்டு இறுதிவாக்கில் தானும் மரடோனாவும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிவித்தார். மரடோனா, முதல் மனைவி கிளாடியா ஃபில்பானாவை கடந்த 2003ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். இவர் மூலம் மரடோனாவுக்கு 2 மகள்கள் உள்ளனர். திருமண பந்தத்தில், இருவரும் வங்கியில் கூட்டு கணக்கு வைத்திருந்த போது, மரடோனாவின் பணத்தை கிளாடியா மோசடி செய்ததாக வழக்கு ஒன்று நீதிமன்றத்தில்…
-
- 10 replies
- 3.4k views
- 1 follower
-
-
அமெரிக்காவில் மில்லியன் கணக்காண டாலர் மதிப்பிலான மோசடி குற்றச்சாட்டில் அமெரிக்கவாழ் இந்திய தொழில்அதிபர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக இதில் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று செய்திகள் வெளியாகி உள்ளது. லஞ்சம் வழங்குதல், நிவாரணநிதி மோசடி, அமெரிக்காவை ஏமாற்றுவதற்கு சதி மற்றும் ஆதாரங்கள் சேதப்படுத்துதல் என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இந்திய தொழில் அதிபர் ஹரேந்திர சிங் மீது சுமத்தப்பட்டு உள்ளது. மோசடி வழக்கு தொடர்பாக ஹரேந்திர சிங் கைது செய்யப்பட்டுஅமெரிக்க மாஜிஸ்திரேட் காத்லீன் தோம்லின்சொன் முன் ஆஜர்படுத்தப்பட்டார். நியூயார்க்கின் நாச்சு கவுண்டியில் ஹரேந்திர சிங் உணவகம் நடத்திவந்து உள்ளார். நாட்டில் உணவகத்தை செயல்படுத்த சலுகைகளை பெற்று உள…
-
- 0 replies
- 401 views
-
-
சாகித் அப்ரிடியுடன் காதல்; மீடியாக்கள் மீது பாயும் இந்திய மாடல்! "யாருடன் நான் உறங்க வேண்டுமென்பதை இந்திய மீடியாக்கள் முடிவு செய்யக் கூடாது!" என சாகித் அப்ரிடியுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டதாக ஓபனாக அறிவித்துள்ள இந்திய மாடல் ஆர்ஷி கான் தெரிவித்துள்ளார். துபாயில் சாகித் அப்ரிடியுடன், போபாலை சேர்ந்த இந்திய மாடல் அழகி ஆர்ஷி கான் சுற்றித் திரிவதாக மீடியாக்களில் செய்தி கசிந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்த ஆர்ஷி கான், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடி தனக்கு நல்ல நண்பர் என்றும், இருவருக்கிடையே காதல் எல்லாம் இல்லை என்றும் மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் ட்விட்டர் தளத்தில் இன்று ஆர்ஷிகான் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் '' ஆம்! சாகித் அப்ரிடியுடன் நான் …
-
- 4 replies
- 835 views
-
-
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் மற்றும் மத்திய அமைச்சருக்கு வழங்கப்பட்ட தண்ணீர் பாட்டிலில் பாம்பு குட்டி கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதில், அம்மாநில முதல்வர் ராமன் சிங் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அமன் அகூவா என்ற தனியார் நிறுவனம் 20 தண்ணீர் பாட்டில்களை வழங்கியிருந்தது. அந்த குடிதண்ணீர் பாட்டில்கள் முதலமைச்சர், மத்திய அமைச்சர் உட்பட அனைவருக்கும் வழங்கப்பட்டது. அப்போது அங்கிருந்த தண்ணீர் பாட்டில் ஒன்றில் சிறிய பாம்புக் குட்டி ஒன்று நெளிவதை …
-
- 0 replies
- 299 views
-
-
கம்ப்யூட்டரில் தொடர்ந்து 22 நாட்களாக வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென உயிரிழந்தார். ரஷ்யாவின் உச்சாலி நகரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ருஸ்டம். கம்ப்யூட்டரில் கேம் விளையாடுவதில் அதிக ஆர்வம் கொண்ட அவன், தனிமையில் இருக்கும்போதெல்லாம் மணிக்கணக்கில் விளையாடி பொழுதைக் கழிப்பான். குறிப்பாக 'டிபென்ஸ் ஆப் ஏன்ஷியன்ட்ஸ்' எனும் பழங்கால போர் தொடர்பான வீடியோ கேமை ஆரம்பித்தால் தன்னையே மறந்துவிடுவான். இந்நிலையில், கடந்த மாதம் விபத்தில் அவனது கால் முறிந்தது. குணமடையும் வரை வரை வீட்டில் ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் பரிந்துரைத்ததால் படுக்கையை விட்டு நகரவில்லை. வீட்டில் தனது விருப்பமான டிபென்ஸ் ஆப் ஏன்ஷியன்ட்ஸ் வீடியோ கேமை கம்ப்யூட்டரில் விளையாடத் தொடங்கிய ருஸ்டம், …
-
- 0 replies
- 888 views
-
-
-
- 0 replies
- 295 views
-
-
-
- 0 replies
- 283 views
-
-
நடிகையுடன் ஊர் சுற்றும் பிரபல கிரிக்கெட் வீரர் இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2011-ம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்றது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் யுவராஜ் சிங். இவர் கடைசியாக, 2013-ம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் விளையாடினார். அதன்பின் அவர் அணியில் இடம்பெறவில்லை. கிரிக்கெட்டில் கொடிகட்டிப் பறந்த காலங்களில் பல்வேறு நடிகைகளுடன் இணைத்து பரபரப்பாக பேசப்பட்ட இவர், தற்போது லண்டன் நடிகை ஒருவருடன் டேட்டிங் சென்றதாக தகவல் பரவியுள்ளது. அந்த நடிகை பெயர் ஹசல் கீச் (28) என்று சொல்லப்படுகிறது. இவர் ஹிந்தியில் வசூலை வாரிக் குவித்த பாடிகார்டு படத்தில் நடித்துள்ளார். அத்துடன் அவர் பில்லா படத்திலும் நடித்துள்ளார். இருவரும் லண்டனில் ஒன்றாக இணைந்து சுற்றியுள்ளதாகவும்…
-
- 0 replies
- 371 views
-
-
ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு அமெரிக்க நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு [ ஞாயிற்றுக்கிழமை, 06 செப்ரெம்பர் 2015, 01:34.50 AM GMT ] அமெரிக்காவிலுள்ள எட்டு ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களின் சொத்து விபரங்களை அந்நாட்டு நீதிமன்றம் கோரியுள்ளதாக தெரிய வருகிறது. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் “பொரின் பொலிஸ்” சஞ்சிகை இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது. அமெரிக்க பிரஜைகளான பசில் ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, துமிந்த மனோஜ் ராஜபக்ச, புஷ்பா ராஜபக்ச, தேஜானி ராஜபக்ச, பிசல்கா ராஜபக்ச, டட்லி ராஜபக்ச, ஷசீந்திர ராஜபக்ச ஆகியோருக்கே இந்த நீதிமன்ற அறிவிப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் இலங்கையின் புகழை உயர்த்துவதற்காக இலங்கை மத்திய வங்கி 65 லட்சம் டொ…
-
- 0 replies
- 320 views
-
-
கனடா- மருத்துவ பயிற்சியற்ற வரவேற்பாளர் ஒருவர் தனது மூன்று வயது மகனிற்கு கண் இமையில் ஏற்பட்ட சிறிய வெட்டு காயத்திற்கு ஒட்டுவதற்கு சாதாரண பசையை பாவித்தார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.கியுபெக்கை சேர்ந்த இவர் தான் அதிர்ச்சியடைந்ததாகவும் இச்சம்பவம் பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்ததாகவும் தெரியப்படுத்தினார்.அவர்களது பூனை சிறுவன் வின்னியின் கண் இமையில் கீறியதால் வீட்டிற்கு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவ மனை ஒன்றிற்கு மகனை கொண்டு சென்றார்.வைத்தியர் மருத்துவ பசையினால் காயத்தை அடைத்து விடலாம் என தீர்மானித்து தனது சக பணியாளரை அழைத்தார்.வைத்தியர் சிறுவனையும் அவனது கண்ணையும் பிடித்திருக்க சக பணியாளர் பசையை பூசியுள்ளார். கண்ணும் மூடிவிட்டது. கண்ணை திறக்க முடியவில்லை என சிறுவன் கத்தினா…
-
- 0 replies
- 336 views
-
-
இந்த நவீன உலகில் பெற்றோர்கள் வேலைக்கு சென்று விடுவதால், குழந்தைகளுடன் வெளியே செல்வது அவர்களுக்கு சவாலான காரியமாகவே உள்ளது. அடிக்கடி வெளியில் சுற்றுலா செல்லாமல் வீட்டுக்குள்ளேயே அடைப்பட்டு கிடப்பது குழந்தைகளுக்கு தனிமையான உணர்வை கொடுக்கலாம். இது அவர்களது இளமைக்கால மகிழ்ச்சியை கூட குறைக்கலாம். நீண்ட தூரம் பயணம் செய்து பல்வேறு விதமான மக்களின் வாழ்க்கை முறையை உணர்வது அற்புதமான மனிதனை செதுக்கும். கனடா நாட்டை சேர்ந்த தம்பதி, தங்கள் குழந்தைகளுக்கு அவர்களது வாழ்நாளில் அழிக்க முடியாத சந்தோஷமான தருணத்தை கொடுக்க நினைத்தனர். புருஸ் கிர்பை மற்றும் கிரிஷ்டின் பிட்கெனென் என்ற அந்த தம்பதி தங்களது இரு ஆண் குழந்தைகளையும் உலகம் முழுவதும் சுற்றுலாவாக அழைத்து செல்ல எண்ணினர். அது பெரும்பாலா…
-
- 0 replies
- 352 views
-
-
ம்ரிதா ராய் தனது பேஸ்புக் பக்கத்தில், தானும் திக்விஜய் சிங்கும் இந்து மத முறைப்படி திருமணம் செய்து கொண்டு, அதனை பதிவு செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். அம்ரிதா ராய் இது தொடர்பாக தனது பெஸ்பு பக்கத்தில், நானும், திக்விஜய் சிங்கும் திருமணத்தை நடத்தி முடித்துள்ளோம் என்பது எனது நண்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்து மத முறைப்படி இந்தத் திருமணம் நடந்தது. மேலும் எங்களது திருமணத்தையும் பின்னர் முறைப்படி பதிவு செய்து கொண்டோம். இந்தத் தருணத்தில், கஷ்டமான நேரத்தில் என்னுடன் வழிநெடுக துணை நின்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். மிகக் கடினமான கட்டத்தைத் தாண்டி வந்துள்ளேன். கடந்த ஒன்றரை வருடங்கள் எனக்கு மிகவும் கடினமானதாக, துயரம் மிகுந்ததாக, …
-
- 3 replies
- 391 views
-
-
ஃபரீதாபாத் இடையிலான மெட்ரோ விரிவாக்க வழித் தடத்தை ஹுடா மைதானத்தில் நடைபெற்ற விழாவில் தொடக்கி வைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தில்லி ஜன்பத் மெட்ரோ நிலையத்திலிருந்து பாட்டா செக் வரை மெட்ரோ ரயிலில் ஞாயிற்றுக்கிழமை திடீர் பயணம் செய்தார். அவர் ஃபரீதாபாத் சிவில் நீதிமன்ற வளாக மைதானத்துக்கு ஹெலிகாப்டரில் சென்று பதர்பூர்-ஃபரீதாபாத் இடையிலான மெட்ரோ விரிவாக்க வழித் தடத்தை ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஹெலிகாப்டரில் பயணிப்பதை தவிர்த்துவிட்டு, அவர் திடீரென மெட்ரோ ரயிலில் பயணித்தார். ஜன்பத் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து சுமார் காலை 10 மணிக்கு புறப்பட்டார். 32 கிலோ மீட்டர் தொலைவுடைய, விழா நடைபெறும் இடத்துக்கு அருகில் உள்ள பாட்டா செக் வ…
-
- 0 replies
- 181 views
-