செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7090 topics in this forum
-
அரை நிர்வாணப் பெண்களின் ஆர்ப்பாட்டம்: அசராமல் வேடிக்கை பார்த்த புடின் ஜெர்மனி நாட்டின் ஹெனோவர் நகரில் நடைபெற்ற வர்த்தகக் கண்காட்சியொன்றுக்கு வருகை தந்த ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புடினை எதிர்த்து அரை நிர்வாண கோலத்தில் பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தப் போராட்டம் நடந்தபோது அந்த இடத்தில் ஜெர்மனியின் சான்செலர் ஏஞ்சலொ மேர்க்கலும் அருகிலிருந்தார். பெமன் என்ற பெண்கள் உரிமைகள் குழுவைச் சேர்ந்த 3 பெண்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மூன்று பேரும் மேலாடை எதையும் அணியவில்லை. புடின் உள்ளிட்ட குழுவினர் கண்காட்சி அரங்கத்திற்கு வந்தபோது திடீரென மூன்று பேரும் அவர்களை நோக்கிப் பாய்ந்தனர். அவர்களைப் பிடிக்க பொலிஸார் கடும…
-
- 3 replies
- 737 views
-
-
நெல்லை: செல்போனில் மலர்ந்த காதலியை தேடி பரிசு பொருட்களுடன் ஆலங்குளம் வந்த சென்னை வாலிபருக்கு இளம் பெண் டிமிக்கி கொடுத்தார். இதனால் அந்த வாலிபர் பரிதாபத்துக்கு உள்ளானார். திருச்சி புதூர் ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்தவர் விஜய். இவர் சென்னையில் உள்ள ஐடி பார்க் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அவரது செல்போனுக்கு மிஸ்டு கால் வந்தது. அந்த எண்ணில் விஜய் தொடர்பு கொண்டு பேசிய போது எதிர்முனையில் பேசியவர் இளம்பெண் என்பது தெரிய வந்தது. அவரது வசீகர குரலில் மயங்கிய விஜய் அந்த பெண்ணுடன் பேசி காதலை வளர்த்தார். அவரை நேரில் பார்க்க துடித்த விஜய் தனது ஆசையை இளம் பெண்ணிடம் தெரிவித்தார். அதற்கு அந்த பெண் தான் ஆலங்குளத்தில் வசிப்பதாகவும், நீங்கள் அங…
-
- 22 replies
- 1.6k views
-
-
இங்கிலாந்து இளவரசர் வில்லயம், தற்போது கர்ப்பமாக இருக்கும் அவரது மனைவி கேட்டின் முதல் பிரசவத்தை வீடியோ எடுக்க முடிவு செய்துள்ளார். இளவரசர் வில்லியம் அவரது முதல் குழந்தை இந்த உலகில் பிறக்கும் இனிய தருணத்தை வீடியோவில் பதித்து அதை பல்லாண்டுகளுக்கு பாதுகாக்க திட்டமிட்டுள்ளதாக கூறியிருக்கிறார். தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் கேட் மிடில்டன், பிரசவ வீடியோவால் எதிர்காலத்தில் ஏதேனும் பிரச்சனை வரக்கூடும் என்னும் அச்சத்தில் வில்லியமின் இந்த வினோத ஆசைக்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. http://tamil.webdunia.com/newsworld/news/international/1304/08/1130408054_1.htm
-
- 0 replies
- 543 views
-
-
கர்நாடக மாநிலத்தில் தலைமை மடாதிபதி தற்கொலை செய்த மனவேதனை தாங்காமல், 3 இளைய மடாதிபதிகள் இன்று யாக குண்டம் தீயில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் பழமையான சவ்லி மடம் உள்ளது. இது ரெட்டி சமூகத்தை சேர்ந்தவர்களின் மடம். தலைமை மாடதிபதியாக கணேஷ் அவதூத மகாசுவாமி இருந்தார். இளைய மடாதிபதியாக இருந்த ஜீவானந்த சுவாமி கடந்த ஜனவரி மாதம் மடத்தில் இருந்து காணாமல் போய்விட்டார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், மாடதிபதி தான் அவரை கொலை செய்துவிட்டார் என்று பக்தர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது. அவர் மறுப்பு தெரிவித்தும் பக்தர்கள் ஏற்கவில்லை. இதனால் மனம் உடைந்த தலைமை மடாதிபதி, கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி இரவு …
-
- 0 replies
- 370 views
-
-
கமலா ஹாரீஸ் பற்றி கமென்ட்... மன்னிப்பு கேட்டார் ஒபாமா அட்டர்னி ஜெனரல் கமலா ஹரீஸ் பற்றி தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மன்னிப்பு கோரியுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் அட்டர்னி ஜெனரலாகப் பணிபுரிந்து வருபவர் இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ். வியாழன் அன்று, வாஷிங்டனில் அதிபர் ஒபாமாவுடன் அவர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, ஒபாமா அவரது பணியாற்றும் திறமையையும், அழகையும் புகழ்ந்தார். சமூக வலைத்தளங்கள், இணையதளங்களிலும் உடனடியாக இது தொடர்பான செய்திகள் வெளியாகின. முக்கிய பொறுப்பில் இருப்பவரின் அழகை அதிபர் வெளிப்படையாக புகழ்ந்தது தவறான செயலாகும் என்ற கருத்து எழுந்தது. பொது மேடையில் பெண்களின் அழகை வர்ணிப்பது அதிபர்…
-
- 9 replies
- 805 views
-
-
பெண்கள்இனி மினி ஸ்கர்ட் போன்ற தொடை தெரியும் கவர்ச்சி உடைகள் அணிந்து வெளியே வந்தால் அவர்களுக்கு 10 மில்லியன் டாலர் அபராதம் அல்லது 10 ஆண்டு ஜெயில் போன்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என உகாண்டா பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற உள்ளது. இந்த மசோதா நிறைவேறிய பின் இந்த விதிகள் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களுக்கும் பொருந்தும் என அதிரடியான அறிக்கை அரசிடமிருந்து வெளிவந்துள்ளது. இதற்கு பலத்த எதிர்ப்பும் சிறிய அளவிலான ஆதரவும் நாடு முழுவதும் காணப்படுகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை குறைப்பதற்காக உகாண்டா அரசு கொண்டு வந்துள்ள இந்த அதிரடி மசோதாவை, உகாண்டாவின் அமைச்சர் Simon Lokodo அவர்கள் பாராளுமன்றத்தில் வரும் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க உள்ளார். இந்த மசோதாவின்…
-
- 0 replies
- 644 views
-
-
பிரிட்டிஷ் இளவரசி கேத் மிடில்டன்தற்போது ஆறுமாத கர்ப்பிணியாக இருக்கிறார். அதேபோல ஹாலிவுட் கவர்ச்சி நாயகிகிம் கர்தர்ஷனும் ஆறுமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இருவருக்குமே இது முதல் பிரசவம். இருவரும் கர்ப்பமாக இருப்பது குறித்தும் ஊடகங்களில் தினந்தோறும் பல செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. இதையொட்டி ஊடகங்கள் இருவரும் கர்ப்ப காலத்தில் அணியும் உடைகள் பழக்கவழக்கங்கள் குறித்து தற்போது ஊடகங்கள் ஒப்பீடு செய்து வருகிறது. கேத்மிடில்டனுக்கு 31 வயது ஆகிறது, கிம் கர்தர்ஷன் 32 வயது ஹாலிவுட் நடிகை. இருவருக்கும் ஜூலைமாதம் தான் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். இருவருக்கே பெண் குழந்தைகள்தான் பிறக்கும் என தாங்கள் எதிர்பார்ப்பதாக பேட்டியில் கூறியிருக்கின்றார்க…
-
- 0 replies
- 571 views
-
-
2013-04-04 15:17:00 மனிதர்களின் முகம் ஒன்றின் அளவு பெரிதான சிலந்தி ஒன்று வடமாகாணத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மாங்குளம் வைத்தியசாலைக்கு அருகில் உள்ளமரம் ஒன்றில் இருந்து இந்த சிலந்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பொயிசிலத்தேரிய வகைச் சிலந்தியை சேர்ந்தவை என்று தெரிவிக்கப்படுகிறது. குறுக்காக சுமார் 8 அங்குளம் நீலம் வரையில் இருக்கும் இந்த சிலந்தி, மனிதனின் முகம் ஒன்றுக்கு ஈடான அளவில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. http://www.virakesari.lk/article/local.php?vid=3822
-
- 1 reply
- 513 views
-
-
அக்கரைப்பற்று, சின்ன முகத்துவார பிரதேசத்தில் தனது முதல் கணவனுக்கு பிறந்த இரு சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய் மற்றும் அவரது இரண்டாவது கணவன் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த பெண்ணின் இரண்டாது கணவன் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துள்ளாக்கி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். கணவன், மனைவி மற்றும் விபச்சார முகவர்களாக செயற்பட்வர்கள் உட்பட 4 பேரே நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளனர் என அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். பொலிசாருக்கு பிரதேச மக்கள் கொடுத்த முறைப்பாட்டையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சின்னமுகத்து வாரத்தில் உள்ள குறித்த இரு சிறுமிகளின் தாய் …
-
- 15 replies
- 834 views
-
-
இறுதி அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்த சடலமொன்று திருடப்பட்ட சம்பவமொன்று நொச்சியாகவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து தெரியவருவது, ஆர்.வி. டிங்கிரி என்ற 87 வயதான பெண்ணொருவர் கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்துள்ளார். நான்கு பிள்ளைகளின் தாயாரான இவர் தனது மகளொருவரின் வீட்டில் வசித்து வந்துள்ளார். அவரது மகள் வெளிநாட்டில் தொழில் புரிந்து வருகின்றமையால் மருமகனின் பராமரிப்பிலேயே டிங்கிரி இருந்துள்ளார். இந்நிலையில் டிங்கிரியை பார்க்கும் பொருட்டு அவர் வசித்து வரும் வீட்டுக்குச் சென்ற அவரது மகன் தாயார் நோய்வாய்ப்பட்டிருப்பதால் அவரை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். மகனது வீட்டில் இருந்த டிங்கிரி 3 நாட்களில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து யா…
-
- 0 replies
- 277 views
-
-
இந்தியாவின் டெல்லி நகரில் மருத்துவ கல்லூரி மணவியொருவர் ஓடும் பஸ்ஸில் வைத்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டமையும் பின்பு அவர் உயிரிழந்தமையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இதுமட்டுமன்றி அங்கு தினந்தோறும் ஏராளமான பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகுகின்றனர். டெல்லி சம்பவத்திற்கு முன்னரும் இதே நிலைதான், அதற்கு பின்னரும் இதே நிலைதான். இதற்கு சிறந்த உதாரணமாக அங்கு வெளிநாட்டுப் பெண்ணொருவர் மானத்தை பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு ஹோட்டலின் அறையிலிருந்து கீழே குதித்து தனது காலை உடைத்துக்கொண்டமையை குறிப்பிடலாம். எனினும் டெல்லி சம்பவமும் அதன் பின்னரான நாடளாவிய எழுச்சியும் இந்தியாவில் இடம்பெறும் பாலியல் கொடுமைகள் தொடர்பில் அதிக க…
-
- 17 replies
- 1k views
-
-
திருவேற்காட்டில் இருந்து பெரம்பூர் செல்லும் 29இ பேருந்து இன்று காலை பெரம்பூர் ஜமால்யா என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தது. அப்போது பேருந்தில் இருந்த மாணவர்களுக்குள் கோஷ்டி தகராறு ஏற்பட்டது. அப்போது மாணவர்களில் ஒரு கோஷ்டியில் திடீரென பேருந்தில் இருந்து கீழே இறங்கி கற்களை வீசினர். திடீரென கற்களை வீசியதால் பேருந்தில் இருந்த பெண்கள், பள்ளி குழந்தைகள் உட்பட அனைவரும் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது. பேருந்தில் பயணம் செய்த பெண்கள் சிலர் கூறியதாவது, இருவேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்குள் ஏற்கனவே தகறாறு இருந்ததாகவும், இன்று பேருந்து படிக்கட்டில் நின்று தகரத்தை தட்டிக்கொண்டு பாட்டு பாடிவதில் தகராறு ஏற்பட்டதாகவும் …
-
- 1 reply
- 425 views
-
-
மதுரை: மதுரையில் நேற்று நூதன புகாருடன் கலெக்டரிடம் வந்து நின்றார் குமாரசாமி என்பவர். அந்த சோகக் கதையைக் கேளுங்கள்... மதுரை தெற்குவாசல் பகுதியைச் சேர்ந்தவர் குமாரசாமி. இவரது மனைவி பெயர் சந்திராதேவி. இந்தத் தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒருவர் பி.இ. படிக்கிறாராம். இன்னொருவர் 10ம் வகுப்பு படிக்கிறாராம். நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு ஒரு நாயுடன் வந்தார் குமாரசாமி. இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவரிடம் என்ன ஏது என்று விசாரித்தபோது அவர் சொன்னது இது... எனது வீட்டை எனது மனைவி பெயருக்கு மாற்றி எழுதிக் கொடுத்தேன். அதன் பின்னர் அவரது நடத்தையே மாறிப் போனது. நான் நாய் வளர்க்கக் கூடாது என்று கண்டிக்க ஆரம்பித்தார். இப்போது எனது வீட்டை வேறு ஒருவருக்க…
-
- 6 replies
- 821 views
-
-
பயணிகளின் எடைக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்க, சமோவா நாட்டு விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. விமானங்களில் முதல் வகுப்பு, "எகானமி' வகுப்பு, "பிசினஸ்' வகுப்புக்கு ஏற்ப கட்டணம் வேறுபடும். ஆனால், பசிபிக் கடலின் தென் பகுதியில் அமைந்துள்ள சமோவா நாட்டில், பருத்த உடலுடடைய பயணிகள், விமானங்களில் அதிகம் பயணிப்பதால், சாதாரண முறை கட்டணம் கட்டுபடியாக வில்லை. இதையடுத்து, பயணிகளின் எடைக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்க, அந்நாட்டு விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. குறுகிய தூரம் செல்லும் விமானங்களில், ஒரு கிலோவுக்கு, 55 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. நீண்ட தூரம் செல்லும் விமானங்களில், ஒரு கிலோவுக்கு, 225 ரூபாய் வீதம் கட்டணம் பெறப்படுகிறது.இந்த கட்டண முறையில், தில்லு முல்…
-
- 8 replies
- 511 views
-
-
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறந்ததும், அவரது உடலைப் பொதிந்து அடக்கம் செய்ததாக கருதப்படும் துணி இத்தாலி நாட்டின் தூரின் நகர தேவாலயத்தில் உள்ளது. 14.3 அடி நீளமும், 3.7 அடி அகலமும் கொண்ட இந்த துணியில் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட ஒருவரது உடலின் முன் மற்றும் பின் பகுதி பதிந்துள்ளது. ஈட்டியால் குத்தியதில் இயேசுவின் விலாவில் ஏற்பட்ட காயத்தின் வடுவும் இதில் காணப்படுகிறது. 1988ஆம் ஆண்டு இந்த துணியின் சிறு பகுதியை ஆய்வு செய்த அமெரிக்க விஞ்ஞானிகள், இது 13ஆம் நூற்றாண்டளவில் போலியாக தயாரிக்கப்பட்ட ஓவியமாக இருக்கலாம் என கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், இத்தாலியின் பதுவா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த துணியின் மற்றொரு பகுதியை ஆய்வுக்கு உட்படுத்தினர். கார்பன் …
-
- 2 replies
- 567 views
-
-
நியூயார்க்: ஸ்பெயின் நாட்டில் உள்ள, ஒரு விவசாயியின் வீட்டு சமையலறையில், 30 கோடி ரூபாய் மதிப்புள்ள, விண் கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய நாடான ஸ்பெயினில், சியூடாட் ரியால் பகுதியைச் சேர்ந்தவர் லோபஸ். இவர் தன் தந்தையுடன், கடந்த, 1980ல், கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த போது, 18 அங்குல நீளம், 12.5 அங்குல அகலம், 8 அங்குல உயரமும் கொண்ட, ஒரு கல் கிடைத்தது. ஸ்பெயினில் நடந்த உள்நாட்டுப் போரில், ராணுவத்தினரால் போடப்பட்ட குப்பை என நினைத்து, வீட்டில், இறைச்சிகளை சுத்தப்படுத்த, லோபஸ் இந்த கல்லை பயன்படுத்தி வந்தார். கடந்த, 2011ல், ஒளிபரப்பப்பட்ட, "டிவி' நிகழ்ச்சியில், இது போன்ற கற்கள் ஸ்பெயினில் சில இடங்களில் விழுந்துள்ளது என்பதை அறிந்த லோபஸ், தன் வீட்டில் கிடந்த கல்லை, ஒரு ப…
-
- 4 replies
- 668 views
-
-
இந்தூர்: இரண்டு வயது பெண் குழந்தை, படுக்கையில் சிறுநீர் கழித்ததால், ஆத்திரமடைந்த தந்தை, குழந்தையை தூக்கி வீசினார்; இதில், குழந்தைக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.மத்திய பிரதேச மாநிலம், இந்தூரைச் சேர்ந்தவர், ரயீஸ். இவர், தன் வீட்டில் கட்டிலில் படுத்திருந்த போது, அருகில், தன் இரண்டு வயது மகள் சானியாவை, படுக்க வைத்திருந்தார். தூக்கத்தில் குழந்தை சானியா, சிறுநீர் கழித்ததால், படுக்கை ஈரமானது. ஆத்திரமடைந்த ரயீஸ், குழந்தை சானியாவை தூக்கி வீசினார். இதில், குழந்தைக்கு படுகாயம் ஏற்பட்டதோடு, கை எலும்பும் முறிந்தது. பதறிப் போன, குழந்தையின் தாத்தா, அவளை மருத்துவமனையில் சேர்த்தார்; அத்துடன், போலீசிலும் புகார் செய்தார். "சிறு குழந்தை, தூக்கத்தில் சிறுநீர் கழித்ததற்கு, இப்படியா கொடூரமாக…
-
- 4 replies
- 613 views
-
-
கிணத்த காணோம்… வடிவேலு பாணியில் நெல்லை கலெக்டரிடம் விவசாயி புகார் Published: Tuesday, April 2, 2013, 12:32 [iST] நெல்லை: வெளியூருக்கு போய் வருவதற்குள் அரசு தோண்டிய கிணற்றை யாரோ திருடி விட்டதாக நெல்லை கலெக்டரிடம் விவசாயி ஒருவர் கூறிய புகாரால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சங்கரன்கோவில் அருகே உள்ள நொச்சிகுளம் காலனி நடுத்தெருவை சேர்ந்தவர் விவசாயி முத்துபாண்டி. இவர் நெல்லை கலெக்டரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், கூறியிருப்பதாவது: எனது ஊரில் சர்வே எண் 3-11ஏ என்ற புஞ்சை நிலம் எனது தந்தையால் வள்ளியம்மாள் என்பவரிடம் இருந்து வாங்கப்பட்டது. இதற்கு நான் தீர்வை செலுத்தி அனுபவித்து வருகிறேன். இதில் ஜூவன்தாரா திட்டத்தில் கிணறு வெட்டப்பட்டிருந்தது. இந்நில…
-
- 1 reply
- 721 views
-
-
கோவை சித்தாபுதூர் வி.கே.கே. மேனன் ரோட்டைச் சேர்ந்தவர் ரங்கசாமி நாயுடு(வயது 102 ). இவரது மனைவி ரங்கநாயகி(92). இவர்களுக்கு 1 மகனும், 3 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி சென்றுவிட்டனர். பேத்தி, பேரன், கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்தி என மகிழ்ச்சியுடன் வசித்து வந்தனர். இந்நிலையில் ரங்கநாயகி இதய நோயால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை எடுக்க வேண்டி இருந்ததால் சாய்பாபா காலனியில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி இருந்தார். ரங்கசாமி மட்டும் வீட்டில் தனியே இருந்தார். மனைவிக்கு இதய நோய் வந்து விட்டதே எனவும்,இனி தன்னை யார் கவனிப்பார்கள் எனவும் வருந்திய ரெங்கசாமி ரங்கசாமிநாயுடு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் காவல…
-
- 13 replies
- 750 views
-
-
தென் ஆப்பிரிக்காவின் முதல் பெண்ணாக ஒரு இந்தியர் இருந்திருக்கக்கூடிய வாய்ப்பு, நெல்சன் மண்டேலாவின் காதலை நிராகரித்ததால் ஆமினா கச்சாலாவிற்கு கிடைக்காமல் போனது. மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் தங்கியிருந்த போது அவருடன் கறுப்பினத்தவர்களுக்கு சமஉரிமை கோரும் போராட்டங்களில் பங்கேற்றவர் இந்தியரான இப்ராகீம் அஸ்வத். இவரது மகள் ஆமினா.தென் ஆப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபராக 1994-ம் ஆண்டு பதவியேற்ற புரட்சியாளர் நெல்சன் மண்டேலா தன் மீது கொண்ட காதலை ஆமினா புத்தகமாக எழுதியுள்ளார். ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் பிரதிநிதியாக இந்தியாவில் அடைக்கலம் தேடிவந்த யூசப் கச்சாலியா என்பவரை ஆமினா திருமணம் செய்து கொண்டு டெல்லியில் வாழ்ந்தார். அதற்கு முன்னதாக தென்னாப்பிரி…
-
- 7 replies
- 626 views
-
-
ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்த இந்திய ஆட்டு இறைச்சியில் நாய் மற்றும் பூனைக்கறி கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இறைச்சியுடன் கழுதைக் கறியும், குதிரை கறியும் கலந்து விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்தன. அதை தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆட்டு இறைச்சியுடன் ஏதோ ஒரு விலங்கின் கறி கலப்படம் செய்யப்பட்டிருப்பதாக நிபுணர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது பற்றிய டாகுமெண்டரி படம் பி.பி.சி டி.வி.யில் ஒளிபரப்பப்பட்டது. அதில் பேட்டி அளித்த நிபுணர். இந்திய ஆட்டு இறைச்சியை பரிசோதித்து பார்த்ததில் அதில் எந்த மிருகத்த…
-
- 5 replies
- 912 views
- 1 follower
-
-
இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த எம்.எல்.ஏ : "சிடி'க்கள் வெளியானது. கர்நாடக மாநிலத்தில் உள்ளூர் கேபிள் டிவி ஒன்றில் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ ஒருவர் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை ஒளிபரப்பதானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாரதிய ஜனதா தலைவர்கள் அதிர்ச்சியைடந்துள்ளனர். கர்நாடகா சட்டசபையில், பா.ஜ., அமைச்சர்கள், மொபைல் போனில் ஆபாச படம் பார்த்த சர்சை இன்னும் ஓயாத நிலையில், அம்மாநில உடுப்பி தொகுதி, பா.ஜ., - எம்.எல்.ஏ., ரகுபதி பட் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.இவர், இளம் பெண் ஒருவருடன், உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள், உடுப்பி மாவட்டம் முழுவதும், உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின. நேற்று காலை, தனியார் தொலைக்காட்சி ஒன்று, மாநிலம் முழுவதும், இந்த வீடிய…
-
- 1 reply
- 970 views
-
-
ஈழத்தமிழர் விடயத்தில் தமிழ் சாமியார் பங்காரு அடிகளார் என்ன கருத்தில் உள்ளார்? மாணவர் போராட்டத்திற்கு அவரது ஆதரவு அவர் பக்தர்களின் ஆதரவு மன்றங்களின் ஆதரவு இருக்கா ! என்று அறிக்கை விடலாமே. புலம்பெயர் நாடுககில் இருந்து பல ஆயிரம் பக்தர்களும் பல கோடிக் கணக்கான பணமும் செல்லும் இடமான மருவத்தூர் சாமி ஈழத் தமிழர் விவகாரத்தில் என்ன முடிவு எடுத்திருக்குறார் என்று அவரோ இல்லை என்றால் அவர் மன்றங்களோ பக்த கோடிகளோ பதில் சொல்லுங்கள். சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகள், மாணவர்கள் என்று போராட்டம் நடக்கிறது கருத்து சொல்கிறார்கள். ரவிசங்கர் சாமி கருத்து சொல்கிறார். ஆனால் ஈழத் தமிழர்கள் அதிகம் நம்பும் பங்காரு அடிகளார் ஈழ ஆதரவு பற்றி கருத்து சொல்லாமல் இருப்பது ஏன்? அவருக்கும் தமிழர்க்கும் தமிழர்…
-
- 4 replies
- 1k views
-
-
அன்பார்ந்த புலம்பெயர் மக்களே தமிழகத்தில் உயிர் விட்டு எமக்காக மாணவர்கள் போராடும் இவ்வேளை புலம்பெயர் தமிழர் நாடுகளில் அந்த உறவுகளுக்கான பலம் சேர்க்கும் போராட்டங்களை செய்யுங்கள் எழுச்சி மிக்க இனம் சார்ந்த மொழி சார்ந்த நிகழ்வுகளை செய்யுங்கள் வெறுமனே மக்களை முட்டாள் ஆக்கும் சினிமா கேளிக்கை நிகழ்வுகளை நிறுத்துங்கள் என்று உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம் இப்படிக்கு உண்மையான தமிழர்கள்
-
- 4 replies
- 574 views
-
-
சவூதி அரேபியாவில் ஒரு பாகிஸ்தானியரை கொன்றதற்காக ஏமன் நாட்டைச் சேர்ந்த ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டு, உடல் சிலுவையில் அறையப்பட்டது. சவூதி அரேபியாவில் பணிபுரிந்த பாகிஸ்தானைச் சேர்ந்த பாஸ்தே செய்யது கான் என்பவரை ஓமனைச் சேர்ந்த முகம்மது ரஷாத் கைரி ஹுசைன் கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். அதன் பிறகு ஹுசைன் கானை கொலை செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த ரியாத் நீதிமன்றம் ஹுசைனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து ஜிசான் நகரில் ஹுசைனின் தலை துண்டிக்கப்பட்டது. அதன் பிறகு அவரது உடல் சிலுவையில் அறையப்பட்டுள்ளது. சவூதியில் ஹுசைனையும் சேர்த்து இந்த ஆண்டில் மட்டும் 28 பேரின் தலை துண்டிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டில் சவூதியில் மொத்தம் 76 பேரி…
-
- 0 replies
- 443 views
-