செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
ஓட்டல்கள் ஆனாலும், வீடு ஆனாலும் பருப்பு குழம்பு தயாரிக்கும் போது அதில் காய்கறிகள் சேர்ப்பதை பார்த்திருப்போம். ஆனால் டுபாயில் உள்ள ஒரு உணவகத்தில் தயாராகும் சிறப்பு பருப்பு குழம்பு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புகழ்பெற்ற சமையல் கலை நிபுணரான ரன்வீர் பிரார் வித்தியாசமான உணவுகளை தயார் செய்வதில் பெயர் பெற்றவர். இவர் டுபாயில் நடத்தி வரும் உணவகத்தில் சிறப்பு உணவாக ‘தால் கஷ்கான்’ என்ற பெயரில் விசேஷமாக பருப்பு குழம்பை தயாரித்து வழங்குகிறார். இந்த பருப்பு குழம்பு ஒரு மரப்பெட்டியில் பிரத்யேகமாக கொண்டு வரப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் அந்த பருப்பு கரைசலில் 24 கரட் தங்க பவுடர் கலக்கப்படுவது தான். இதனை ஒடர் செய்யும் வாடிக்…
-
-
- 5 replies
- 1.1k views
- 2 followers
-
-
Published By: SETHU 08 MAR, 2024 | 01:37 PM பறந்துகொண்டிருந்த சர்வதேச விமானத்தின் சக்கரமொன்று கழன்று வீழ்ந்த சம்பவம் அமெரிக்காவில் நேற்று இடம்பெற்றுள்ளது. சான்பிரான்சிஸ்கோ சர்வதேச விமானநிலையத்திலிருந்து ஜப்பானை நோக்கி புறப்பட்ட யுனைடெட் எயார்லைன்ஸ் விமானமொன்றிலிருந்தே இவ்வாறு சக்கரம் கழன்றது. போயிங் 777 ரகத்தைச் சேர்ந்த அவ்விமானம் தரையிலிருந்து கிளம்பிய நிலையில் அதன் சக்கரமொன்று கழன்று, விமான நிலையத்தின் வாகனத் தரப்பிடப் பகுதியில் வீழ்ந்தது. அதையடுத்து அவ்விமானம் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஜப்பானின் ஒசாக்கா நகரை நோக்கி புறப்பட்ட அவ்விமானத்தில் 249 பேர் இருந்தனர் என யுனைடெட் எய…
-
- 0 replies
- 309 views
- 1 follower
-
-
08 MAR, 2024 | 10:50 AM வர்த்தகரான தனது நண்பன் உறக்கத்தில் இருக்கும்போது அவரது பையில் இருந்த 50 இலட்சம் ரூபா பணத்தை திருடி தப்பிச்சென்ற நபர் ஒருவர் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இந்த திருட்டு சம்பவம் கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு பணத்தை திருடி தப்பிச் சென்றவர் கொஸ்கொடை பிரதேசத்தை சேர்ந்தவராவார். இவர் பாதிக்கப்பட்டவரின் நெருங்கிய நண்பர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக சென்றுள்ள நிலையில் கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் அறையில் தங்கியிருந்து மதுபானம் அருந்திக் கொண்டிருந்துள்ளனர். …
-
- 0 replies
- 442 views
- 1 follower
-
-
ஜேர்மனியில் 62 வயதான நபர் ஒருவர் 217 முறை ‘கொவிட்-19’ நோய்த்தடுப்பு ஊசிகளைப் பெற்றுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நபர் தனியார் மருத்துவமனைகளிலிருந்து ‘கொவிட் 19’ நோய்த்தடுப்பு ஊசிகளைப் பெற்றுள்ளார். கடந்த 29 மாதங்களாக இவர் தடுப்பூசிகளை பெற்றுள்ளார். அந்த நபரிடம் மருத்துவ ஆய்வை மேற்கொண்ட எர்லாங்கன் - நூரம்பெர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ‘கொவிட்-19’க்கு எதிராக அவர் 217 தடுப்பூசிகளைப் பெற்றிருந்தாலும், அவருக்கு எந்த பக்க விளைவுகளும் இல்லை என்று விளக்குகின்றனர். (AFP) https://thinakkural.lk/article/294590
-
- 1 reply
- 318 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 05 MAR, 2024 | 09:23 AM கூகுள் மேப் காட்டிய பாதையில் சென்று கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமர் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த இருவருக்கு கோட்டை நீதவான் பிணை வழங்கியுள்ளார். இந்த இரு நபர்களும் சனிக்கிழமை கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மென்பொருள் பொறியியலாளர் ஒருவரும் கப்பலில் பணிபுரியும் நபர் ஒருவரும் சனிக்கிழமை (03) இரவு நேர களியாட்ட விடுதிக்கு சென்றுள்ளனர். பின்னர் அங்கு மது அருந்தி விட்டு முகாந்திரம் வீதியில் உள்ள தங்குமிடத்திற்கு செல்ல கூகுள் மேப்பை பயன்படுத்தியுள்ள…
-
-
- 4 replies
- 751 views
- 1 follower
-
-
உலகின் பணக்கார செல்லப்பிராணியாக ஆறாம் குந்தர் என்ற வளர்ப்பு நாய் கருதப்படுகிறது. இந்த நாயானது, ஹாமா தீவுகளில் சொந்தமாக வீடு முதல் சொந்தமாக ஆடம்பரப் படகு என்று செல்வந்த மனிதர்களுக்கு இணையாக வாழந்து வருகிறது. குறிந்த செல்வந்த நாய், பாடகி மடோனா முன்னர் வாழ்ந்து வந்த வீட்டில் தற்போது வாழந்து வருகிறது. ஜெர்மன் ஷெபர்ட் வகையை சேர்ந்த இந்த நாயின் வீடானது, 65 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய ஒரு வீடாகும். இந்நிலையில், ஆறாம் குந்தரின் சொத்து மதிப்பு, 300 மில்லியன் பவுண்டுகள் என கூறப்படுகிறது. அதேவேளை, குந்தனின் முன்னாள் உரிமையாளரான செல்வந்தரான Karlotta Leibenstein என்னும் ஜேர்மானிய சீமாட்டி, தான் மரணமடையும் நேரத்தில் தனக்கு குடும்பம் என்று எதுவு…
-
-
- 2 replies
- 506 views
- 1 follower
-
-
தேங்காயின் விலை உயர்வானது எதிர்காலத்தில் பொதி செய்யப்பட்ட உணவுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என உணவுத் தொழில்துறை தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான கறிகள் தேங்காய் பாலினை கொண்டு தயாரிக்கப்படுவதால் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளனர். 60 ரூபா முதல் 80 ரூபா வரையில் இருந்த தேங்காயின் வழமையான விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ருக்ஷான் ஹர்ஷன ஊடகங்களுக்கு தெரிவித்தார். தேங்காய் தற்போது ரூ.120 முதல் 150 ரூ .வரை விற்பனை செய்யப்படுகிறது. அதிகரித்துள்ள தேங்காய் விலையினால் உணவு பொதிகளை தயார் செய்ய முடியாமல் சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி…
-
- 0 replies
- 179 views
- 1 follower
-
-
கழிவுநீர் கால்வாய்க்குள் பாய்ந்த மட்டக்குளி கதிரானவத்தை குடு ராணி கைது! 04 MAR, 2024 | 11:58 AM மட்டக்குளியில் கதிரானவத்தை குடு ராணி என அழைக்கப்படும் 45 வயதுடைய பெண் ஒருவரை பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) கைது செய்துள்ளனர். யுக்திய நடவடிக்கையின்போது முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 5 லட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் . மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொலிஸார் குறித்த பெண்னை கைது செய்ய முற்பட்டபோது அவர் அருகில் இருந்த கழிவு நீர் கால்வாயில் குதித்துள்ளார். பின்னர் மேலதிக பொலிஸ் அதி…
-
- 0 replies
- 298 views
- 1 follower
-
-
லீப் ஆண்டில் பிறந்த தாய்க்கு இந்த 2024 லீப் வருடத்தில் பெண் குழந்தை பிறந்ததாக அமெரிக்காவில் இருந்து ஒரு செய்தி பதிவாகியுள்ளது. வட கரோலினா பகுதியில் வசிக்கும் பேராசிரியரான காய் சன் பெப்ரவரி 29 அன்று சோலி என்ற மகளை பெற்றெடுத்தார். வட கரோலினாவில் உள்ள டியூக் ஹெல்த் காலேஜ் ஆஃப் மெடிசினில் உதவி பேராசிரியராக பணிபுரியும் காய் சன், பெப்ரவரி 29 அன்று காலை 5:12 மணிக்குப் பெண் குழந்தையை பிரசவித்தார். https://thinakkural.lk/article/294139
-
- 0 replies
- 300 views
- 1 follower
-
-
நேற்று இரவு குருமெட்டிய, கித்துல்கல அருகே கொழும்பு- ஹற்றன் வீதியில் ஓடும் முச்சக்கர வண்டியில் இருந்து ஒரு மாத கைக்குழந்தை ஒன்று விழுந்துள்ளது. நீர்கொழும்பில் இருந்து ஏனையவர்களுடன் பயணித்த தாய், முச்சக்கர வண்டியின் பின்புறத்தில் உறங்கிக் கொண்டிருந்த போது, கைக்குழந்தை மடியிலிருந்து விழுந்துள்ளது. முச்சக்கரவண்டியை பின்தொடர்ந்து வந்த காரில் வந்தவர்கள் வீதியில் குழந்தை இருப்பதை அவதானித்து கித்துல்கல பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றதுடன், குழந்தையை உடனடியாக கித்துல்கல வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். அம்மாவும் ஏனையவர்களும் இந்தச் சம்பவத்தை அறியாமல் பயணத்தைத் தொடர்ந்தனர். குழந்தை காணாமல் போனதை அறிந்த அவர்கள் மீண்டும் தேடிச் சென்று பார்த்தபோது, குழந்தை மருத்…
-
- 0 replies
- 291 views
- 1 follower
-
-
இங்கிலாந்தில் உயிரை மாய்த்துக் கொண்ட இலங்கையரின் மரணத்துக்கு காரணம் நிர்வாண புகைப்படங்களாம்! 29 FEB, 2024 | 02:42 PM இங்கிலாந்தில் வசித்த 16 வயது இலங்கையர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் டினால் த அல்விஸ் என்ற 16 வயது இளைஞராவார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி அன்று உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் இந்த மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த இளைஞரது நிர்வாணப் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிடுவதாக கூறி அச்சுறுத்தி ஒருவர் கப்பம் கோரியுள்ளதாக தெரிய வந்துள்ளது. சந்தேக நபர் தொடர்பில் எந்தவித தகவல்களும் …
-
- 0 replies
- 400 views
- 1 follower
-
-
25 பிப்ரவரி 2024 ஓட்டுநரே இல்லாமல் 70கி.மீ வேகத்தில் ஒரு சரக்கு ரயில் சீறிப்பாய்ந்த காட்சி இது. ஜம்மு காஷ்மீரின் கத்துவாவில் இருந்து பஞ்சாப் வரை சரக்கு ரயில் ஒன்று ஓட்டுநர் இல்லாமலேயே ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ஹாலிவுட் திரைப்படமான அன் ஸ்டாப்பிள் பாணியில், ஞாயிறுக்கிழமை காலையில் இந்த சம்பவம் அரங்கேறியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ரயில் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கபப்ட்டதாகவும் இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகளை மேற்கோள்காட்டி பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது பிடிஐ செய்தி முகமையின்படி, ஜம்மு காஷ்மீரின் கத்துவாவிற்கு 53 பெட்டிகள் மற்றும் 2 எஞ்சின்களை கொண்ட சரக்கு ரயில் காலை 7:30 ம…
-
- 2 replies
- 446 views
- 1 follower
-
-
-
-
- 2 replies
- 616 views
- 1 follower
-
-
தேசிய பூங்காக்கள், அடர்ந்த வனப்பகுதிகளில் சுற்றுலா பயணிகள் செல்லும் போது அங்கு விலங்குகளை புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு சுற்றுலாப்பயணிகள் அத்துமீறி நடந்து கொள்வதும், அவர்களை வன விலங்குகள் துரத்தும் காட்சிகளும் சமீப காலமாக சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாகி வருகிறது. இந்நிலையில் தற்போது X இல் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், யானை ஒன்று இலைகளை சாப்பிட்டு கொண்டிருக்கிறது. அந்த யானைக்கு உணவளிப்பதற்காக இளம்பெண் ஒருவர் அருகில் செல்கிறார். அப்போது ஆவேசம் அடையும் யானை அந்த பெண்ணை தனது துதிக்கையால் தாக்குவதும், அந்த பெண் தூக்கி வீசப்படும் காட்சிகளும் பயனர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக அந்த பெண்ணுக்கு பெரிய அளவில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. …
-
-
- 4 replies
- 812 views
- 1 follower
-
-
உலகின் மிக உயரமான ஆணும், மிகவும் குள்ளமான பெண்ணும் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவின் இர்வினில் நேரடியாக சந்தித்து அளவளாவி இருக்கின்றனர். உலகின் மிகவும் உயரமான ஆணாக அறியப்படுபவர் சுல்தான் கோசன். அதே போன்று உலகின் மிகவும் குள்ளமான பெண்ணாக அறியப்படுகிறார் ஜோதி ஆம்கே. இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நேரடியாக சந்தித்து மகிழ்ச்சி பரிமாறி உள்ளனர். மேலும், புகைப்படங்களுக்காக அணுகிய கேமராக்களுக்கு இருவரும் அலுக்காது போஸ் தந்துள்ளனர். இருவருக்கும் இது முதல் சந்திப்பல்ல. 6 ஆண்டு…
-
- 0 replies
- 301 views
- 1 follower
-
-
யாழ் வல்வை பட்டப் போட்டியில் முதலிடம் பெற்ற இளைஞன் தாய்லாந்தில் புதிய சாதனை யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற மாபெரும் பட்டம் போட்டியில் முதலிடம் பிடித்த விநோதன் தாய்லாந்திலும் சாதனை புரிந்து உலகவாழ் மக்களின் கவனத்தினை ஈர்த்துள்ளார். வல்வை பட்டப் போட்டித் திருவிழாவில் போர்தாங்கி ஆகாயவிமானத்தை பறக்கவிட்டு உலகில் உள்ள அனைத்து தமிழர்களையும் விநோதன் வியக்க வைத்திருந்தார். இதனை தொடர்ந்து தாய்லாந்தில் 36 நாடுகள் பங்குபற்றிய பட்டக் காட்சியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டு, இரண்டு வித்தியாசமான பட்டங்களை பறக்கவிட்டுள்ளார். தாய்லாந்தில் விநோதனின் சாதனை கடந்த ஐந்து நாட்களில் விநோதன் தாய்லாந்துக்கு சென்று இரண்டு பட்டங்களை கட்டி…
-
- 1 reply
- 447 views
-
-
Published By: DIGITAL DESK 3 24 FEB, 2024 | 09:34 AM இந்தியாவில் சிலிகுரி மிருகக்காட்சி சாலையில் அடைக்கப்பட்டுள்ள சீதா, அக்பர் என்ற இரு சிங்கங்கள் பெயரை மாற்ற வேண்டும் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மிருகக்காட்சி சாலையில் ஒரே பகுதியில் சீதா, அக்பர் என்ற இரு சிங்கங்களை அடைக்க எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் விஹெச்பி தாக்கல் செய்த மனுவின் கீழ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. திரிபுரா மாநிலம் செபஹிஜாலா மிருகக்காட்சி சாலையில் இருந்து மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள பெங்கால் மிருகக்காட்சி சாலைக்கு பெப்ரவரி 12-ம் திகதி இரண்டு சிங்கங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இந்த இரண்டு சிங்கங்களில் ஏ…
-
-
- 1 reply
- 309 views
- 1 follower
-
-
22 FEB, 2024 | 10:00 AM மாணவர்கள் குப்பிவிளக்கில் கல்விகற்க பழகவேண்டும் என இலங்கை மின்சாரசபையின் பேச்சாளர் நொயல் பிரியந்த சர்ச்சை கருத்தினை வெளியிட்டுள்ளார். மாணவர்கள் அவசியம் ஏற்பட்டால் குப்பிவிளக்கில் கல்விபயில முயலவேண்டும் இந்த விடயத்தில் முன்னோர்களை அவர்கள் பின்பற்றவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். அதிகரிக்கும் மின்கட்டணங்கள் குறித்த கரிசனைகள் குறித்து; கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். மின்கட்டணங்களை செலுத்தாததால் மின்துண்டிக்கப்படுவதால் பெரும் பாதிப்புகள் ஏற்படுவதை ஏற்றுக்கொண்டுள்ள மின்சாரசபையின் பேச்சாளர் இலவச மின்சாரம் என்ற கலாச்சாரத்திலிருந்து நுகர்வோர்கள் மாறுவதால் இந்த நெருக்கடிகளை அவர்கள்…
-
-
- 4 replies
- 620 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்காவில் ஒருவருக்கு 2,500 கோடி ரூபாய் ஜாக்பாட் பரிசை லாட்டரியில் வென்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த எண்களைக் கொண்ட லாட்டரியை வைத்திருந்த நபருக்கு பரிசைக் கொடுக்க அந்த லாட்டரி நிறுவனம் மறுத்துள்ளது. இதனால், லாட்டரியில் ‘வென்ற’ நபர் அதிர்ச்சியடைந்துள்ளார். அவர் அந்த லாட்டரி நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி 2023 இல், ஜான் சீக்ஸ் என்பவர் பவர்பால் லாட்டரியை வாங்கி வைத்திருந்தார். அந்த லாட்டரி தொகுப்பின் வெற்றி பெற்ற எண்கள் அந்த நிறுவனத்தின் இணையத்தில் வெளியிடப்பட்டது. அந்தத் தருணம் குறித்து விவரித்த ஜான் சீக்ஸ்,“பவர்பாலின் வெற்றி எண்களுட…
-
- 0 replies
- 353 views
- 1 follower
-
-
உலகிலேயே பரப்பளவில் 5 ஆவது இடத்தில் உள்ள பெரிய நாடு, பிரேசில் (Brazil). இதன் தலைநகரம் பிரெசிலியா (Brasilia). 2007 ஜனவரி மாத காலகட்டத்தில் பிரேசில் நாட்டின் சா பாலோ (Sao Paulo) நகரின் பின்ஹெரோ (Pinheiros) பகுதியின் சுற்றுப்புறத்தில், மெட்ரோ அமைப்பை விரிவுபடுத்துவதற்காக தொழிலாளர்கள் சுரங்கப்பாதை தோண்டிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பூமி உள்வாங்கி அங்கு மிக பெரும் பள்ளம் ஏற்பட்டது. இதனை சற்றும் எதிர்பாராத அப்பகுதி வழியாக நடந்து சென்ற பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் இந்த பெரும் பள்ளத்தில் விழுந்தனர். 23,680 சதுர அடி அளவில் ஏற்பட்ட இந்த பள்ளம், ஒரு மினி பஸ், 7 வீடுகள் மற்றும் பொதுமக்களில் சுமார் 200 பேர் என உள்ளே இழுத்து கொண்டது. பல லொரிகள் ஒன்றின் …
-
- 0 replies
- 244 views
- 1 follower
-
-
இணையவழி உள்ளடக்க தேடலில் உலகின் முன்னணி தேடல் இயந்திரம் (search engine) அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனத்தின் “கூகுள் தேடல் இயந்திரம். கடந்த 2022 இறுதியில் தோன்றிய “ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ்” (Artificial Intelligence) எனும் “செயற்கை நுண்ணறிவு” தொழில்நுட்பம், கூகுள் நிறுவன தேடல் இயந்திரத்திற்கு சவாலாக இருந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள சென்னை இந்திய தொழில்நுட்ப கழகத்தின் (IIT) முன்னாள் மாணவரான அரவிந்த் ஸ்ரீனிவாஸ் மற்றும் 3 பேர் இணைந்து 2022இல் உருவாக்கிய நிறுவனம், பெர்ப்லெக்சிடி. இந்நிறுவனத்தின் தேடல் இயந்திரம், “பெர்ப்லெக்சிடி ஏஐ” (Perplexity AI). பெர்ப்லெக்சிடி நிறுவனத்தில் பணியாற்ற கூகுள் நிறுவன “…
-
- 0 replies
- 268 views
- 1 follower
-
-
தங்களை கருணை கொலை செய்யுமாறு விடுத்த கோரிக்கையை ஏற்று நெதர்லாந்து முன்னாள் பிரதமர் தன் மனைவியுடன் கை கோர்த்தபடி மரணித்த சம்பவம் நடந்துள்ளது. தீராத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவரை மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் வாழச் செய்வதை தவிர்த்து கண்ணியமாக மரணிக்க செய்வதை பல்வேறு நாடுகளும் அனுமதித்து உள்ளது. இந்நிலையில் உலகில் முதன்முறையாக 2002ம் ஆண்டு கருணை கொலைக்கு நெதர்லாந்து நாடு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கியது. அந்நாட்டின் முன்னாள் பிரதமரும் கிறிஸ்டியன் ஜனநாயக அப்பீல் கட்சியின் தலைவருமான டிரைஸ்-வான்-ஆகட் ( 94 வயது), இவர் 1977-ம் ஆண்டு முதல் 1982 ம் ஆண்டு வரை அந்நாட்டின் பிரதமராக இருந்தார். இவரது மனைவி இகுனி (93 வயது) இவரும் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக இணைபிரியா…
-
- 3 replies
- 699 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியில் உள்ள விற்பனை நிலையத்தில் தவளையுடன் ஐஸ்கிறீம் வழங்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த குளிர்பான விற்பனை நிலையத்தில் நேற்று (14) ஐஸ்கிறீம் குடிக்க சென்றவருக்கே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது இந்தநிலையில் குறித்த குளிர்பான விற்பனை நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. https://thinakkural.lk/article/291932
-
- 0 replies
- 208 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 14 FEB, 2024 | 10:14 AM கொவிட்பெருந்தொற்று காலத்தில் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் அவசரசேவை பிரிவிற்கு அழைப்பு விடுத்த போதிலும் அவர்களின் உதவி கிடைக்காததால் இலங்கையர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. 23 வயது இலங்கையரான சச்சிந்த பட்டகொடகே நவம்பர் 2020இல் ஐந்து நாட்களில் மூன்று தடவைகள் அடிலெய்ட் ரோயல் மருத்துவமனைக்கு அழைப்புவிடுத்ததும் தனக்கு இருமல் உள்ளதாகவும் இருமும்போது இரத்தம் வருவதாக தெரிவித்ததும் அதற்கு சில நாட்களின் பின்னர் அவர் உயிரிழந்தமையும் மரணவிசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. 2020 இல் அடிலெய்டிற்கு குடிபெயர்ந்த சச்சிந்த தனது மனைவியுடன் அங்கு வசித்து வந்துள்…
-
- 0 replies
- 152 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 13 FEB, 2024 | 09:58 AM யாசகர் ஒருவர் ஐ போன் ஒன்றை திருடி அதனை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை பகுதியில் நேற்று (12) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. யாசகம் கேட்டு வந்த முதியவர் ஒருவர் வீடு ஒன்றிலிருந்த பெறுமதி வாய்ந்த ஐ போன் ஒன்றை திருடிச் சென்றுள்ளார். இவ்வாறு திருடிச் சென்ற நபரின் புகைப்படத்தை சி.சி.ரி.வியின் உதவியுடன் முகநூலில் பதிவிட்டதன் பின்னர் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர் வசமாக சிக்கியுள்ளார். திருடிய கைபேசியை ஆயிரம் ரூபாய்க்கு விற்பன செய்த அந்நபர் அந்தப் பணத்தில் மது அருந்திக…
-
- 0 replies
- 305 views
- 1 follower
-