செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7082 topics in this forum
-
தந்தையின் உயிரை காப்பாற்றிய கைக்கடிகாரம் குறித்து மகன் பெருமிதம்! அமெரிக்காவில் தந்தையொருவரின் உயிரை காப்பாற்ற அப்பிள் கைக்கடிகாரத்தின் அற்புதமான தொழில் நுட்பம் உதவியதாக அவரது மகன் “பேஸ்புக்”கில் நெகிழ்ச்சியுடனும் பெருமிதமாகவும் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவின் வொஷிங்டன் நகரை சேர்ந்த பொப் என்பவர் அண்மையில் விபத்தொன்றில் சிக்கி மீண்டு வந்தமை குறித்து அவரது மகன் கேப் பர்டெட் என்பவர் கைக்கடிகாரத்தின் தொழினுட்பம் குறித்து பாராட்டியுள்ளார். அண்மையில் கேப், தனது தந்தையின் வருகைக்காக வீட்டில் காத்திருந்தார். அப்போது பொப் அணிந்திருந்த அப்பிள் கைக்கடிகாரத்தில் இருந்து கேப் பர்டெடுக்கு ஒரு குறுந்தகவல் கிடைக்கப்பெற்றது. அதில் பொப் அணிந்திருந்த அப்பிள் கைக்கடிகாரம் க…
-
- 0 replies
- 434 views
-
-
பைடன் மனைவியுடனான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து டிரம்ப் குசும்பு The photo’s caption reads, “A fragrance your enemies can’t resist!” அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்டு டிரம்ப், தன் வாசனை திரவிய பொருட்களின் விளம்பரத்துக்காக தற்போதைய அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில்லுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசுக் கட்சியின் டொனால்டு டிரம்ப், அடுத்த மாதம் 20ல் அதிபராக பொறுப்பேற்க உள்ளார். தொழிலதிபரான டிரம்ப், தன் நிறுவனம் தயாரிக்கும் பொருட்களை தன் சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது விளம்பரப்படுத்துவார். உயர் ரக கை கடிகாரங…
-
- 0 replies
- 150 views
-
-
உலக ஏழைகள் தினத்தில் வசிப்பிடமற்ற 1,500 பேருக்கு போப் உணவளித்துள்ளார் ரோமன் கத்தோலிக்கத் தேவாலயம் அதன் உலக ஏழைகள் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் இருப்பிடம் அற்ற 1,500 பேருக்கு போப் ஃபிரான்சிஸ் இலவச மதிய உணவளித்துள்ளார். வத்திக்கானில் அமைந்துள்ள மண்டபம் ஒன்றில் பழங்கள், காய்கறிகள், இனிப்புப் பண்டங்கள் என அறுசுவை விருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கப்பட்டது. இருப்பிடம் இல்லாதவர்களுக்கு நாளாந்தம் உதவிகளை வழங்கி வரும் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் அவர்களை விருந்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். வசதி குறைந்தவர்களுக்கு இலவச மருத்துவ உதவி வழங்க கடந்த வாரம் முழுவதும் செயின்ட் பீற்றர்ஸ் சதுக்கத்தில் நடமாடும் மருந்தகம் ஒன்றும் செயற்படுத்தப்பட்டது. அத…
-
- 0 replies
- 180 views
-
-
சூனியக்காரன் எனக் கருதி குடும்பத்தினரால் கைவிடப்பட்ட 2 வயது சிறுவன் மீட்பு சூனியக்காரன் எனக் கருதி தனது குடும்பத்தினால் விடப்பட்ட 2 வயதான நைஜீரிய சிறுவனொருவன், தொண்டர் அமைப்பொன்றினால் மீட்கப்பட்டுள்ளான். இச் சிறுவன் மிக மெலிந்த உடற்தோற்றத்துடன் நிர்வாணமாக வீதியில் திரிந்துகொண்டிருந்தான். இச் சிறுவனை ஆபிரிக்க சிறுவர் கல்வி மற்றும் அபிவிருத்தி மன்றம் எனும் அமைப்பினர் தற்போது பராமரித்து வருகின்றனர். மேற்படி தொண்டர் அமைப்பைச் சேர்ந்த அன்ஜா ரின்கரன் எனும் யுவதி, இச் சிறுவனை தான் மீட்டபோது பிடிக்கப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியி…
-
- 0 replies
- 406 views
-
-
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை குணப்படுத்த மது அருந்தலாம் என்ற வதந்தி: 27பேர் உயிரிழப்பு கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை குணப்படுத்த மது அருந்தலாம் என்ற வதந்திகளுக்குப் பின்னர் ஈரானில் மெத்தனால் அருந்திய இருபத்தேழு பேர் உயிரிழந்துள்ளனர். உயிர்களை காவு கொண்டுவரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள மது அருந்தலாம் என்ற வதந்தி கடந்த சில நாட்களாக வைரலாக பரவிவருகின்றது. இந்தநிலையில் இந்த வதந்திகளை நம்பி மெத்தனால் அருந்திய 218 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குஜெஸ்தானின் தலைநகரான அஹ்வாஸில் உள்ள ஜுண்டிஷாபூர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் அலி எஹ்சான்பூர் தெரிவித்துள்ளார். மது அருந்துவது கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிப்பதில் பய…
-
- 0 replies
- 171 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையில் போர் நடந்த இடங்களில் வேலை செய்தவருடன் ஆவுடையப்பன் செவ்வியின் போது ஆரம்பத்தில் பல நாடுகளில் வேலை செய்த அனுபவத்தைப் பற்றி பேசுகிறார்கள். 17வது நிமிடத்திலிருந்து கச்சதீவு பற்றிய பேச்சு வருகிறது. மீன்பிடி பிரச்சனை பற்றியும் பேசுகிறார்கள். கச்சதீவை இந்தியா கொடுத்திருக்க கூடாது என்று வாதாடும் ஆவடையப்பன் ஒரு சுட்டக்காய் நாடு எப்படி இந்தியாவை மிரட்டி வாங்கிக் கொண்டது என்று ஆச்சரியப்படுகிறார். தமிழ்களுக்கு தமிழீழம் அமைவதை இலங்கை ஒத்துக் கொண்டாலும் இந்தியா ஒத்துக் கொள்ளாது என்று அடித்துக் கூறுகிறார். சீனாவில் இருந்து இலங்கை பாகிஸ்தான் நேபால் மாலைதீவு போன்றவையை எப்படி பிரித்து வைக்கலாம் என்பதில் இந்தியா முயற்சி உள்ளது. பாகிஸ்தானில் தோற்றுவிட்டோம். ம…
-
- 0 replies
- 146 views
- 1 follower
-
-
[size="5"]95 வயதிலும் உழைத்து வாழ விரும்பும் பெரியவர்[/size] இலங்கையர் ஒருவரின் தற்போதைய சராசரி ஆயுள் 76 என சென்றாண்டு அறிக்கை கூறுகிறது. ஜோதிட சாஸ்திரம் நீண்ட ஆயுள் ஒருவருக்கு அமைய அவரது ஜனன ஜாதகத்தில் சனீஸ்வரன் பலம்பெற்று இருக்க வேண்டும் என்கிறது. எது எப்படி இருப்பினும் ஒருவருக்கு ஆரோக்கியத்துடனான நீண்ட ஆயுள் என்பது வரப்பிரசாதமே. அந்த வகையில் இலங்கைத் திருநாட்டில் பதுளையைப் பிறப்பிடமாகக் கொண்ட வி.பி.தங்கவேல் ஐயா(95 வயது) வத்தளையில் தற்போது வசித்து வருகிறார்.இன்று எமது அலுவலகத்தில் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் எம்முடன் பகிந்து கொண்ட சுவாரஸ்யத் தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம். 1918 ஏப்ரல் 22இல் பிறந்த…
-
- 0 replies
- 483 views
-
-
80 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய விபச்சார கப்பல் சிதிலமடைந்த நிலையில், தற்போது தண்ணீருக்கு வெளியே தலைகாட்டியிருக்கிறது. இந்த கப்பலில் பொற்காகாசு குவியல் இருப்பதாக கருதப்படுவதால், இந்த கப்பலை காண மக்கள் கூட்டம் வருவதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா கடற்கரையோரும் புதைந்து கிடக்கும் அந்த கப்பல் அலையின் சீற்றத்தால், தற்போது மெல்ல வெளியில் தெரியத் துவங்கியிருக்கிறது. இந்த கப்பல் தற்போது பல அமெரிக்க ஊடகங்களின் ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது. அமெரிக்க ஊடகங்கள் வழியாக இந்த கப்பல் பற்றி தெரிவிக்கப்படும் சுவாரஸ்யத் தகவல்களை வழங்கியிருக்கிறோம். ‘சரக்கு’ கப்பல் 1921ம் ஆண்டு எஸ்எஸ் மான்டி கார்லோ என்ற பெயரில் கச்சா எண்ணெய் …
-
- 0 replies
- 373 views
-
-
`மகனின் விந்தணு மீது பெற்றோருக்கே உரிமை கிடையாது!' - கொல்கத்தா நீதிமன்றத் தீர்ப்பும் அலசலும் Guest Contributor Court (Representational Image) வழக்கை விசாரித்த நீதிபதி சபயசாச்சி பட்டாச்சார்யா, உயிரிழந்த நபர் திருமணமானவர் என்பதால் அவரின் மனைவியைத் தவிர வேறு எந்த நபருக்கும் அதைப் பெற உரிமை இல்லை; மகனின் சந்ததியினர் மீது தந்தைக்கு உரிமை கிடையாது என்று தீர்ப்பளித்துள்ளார். ``கணவனின் விந்தணு மீது மனைவிக்கு மட்டுமே உரிமை. அவரின் பெற்றோருக்குக்கூட உரிமை இல்லை" என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை வெளியிட்டுள்ளது. டெல்லி மருத்துவமனையில் பாதுகாக்கப்பட்டு வரும் இறந்துபோன தன் மகனின் விந்தணுவை தன்னிடம் வழங்கக்கோரி கொல்கத்த…
-
- 0 replies
- 624 views
-
-
நம்ம ஊர் சாலைகளில் ஆடு, மாடுகள் சர்வ சாதாரணமாக சுற்றித்திரிவதும், அதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதும் வழக்கமாக நடக்கும் ஒன்று. . ஆனால் ஜெர்மனியில் போக்கு வரத்து விதிகளை யார்மீறினாலும் அவர்களுக்கு தண்டனை நிச்சயம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், போக்குவரத்து இடைஞ்சலாக இருந்த ஒரு ஆட்டை சிறையில் தள்ளி இருக்கின்றனர் அந்த ஊர் போலீசார். பிரெமன் எனும் நகரில் சாலை சந்திப்பின் நடுவே நின்று கொண்டிருந்த பில்லி என்னும் ஆடு போக்குவரத்து இடைஞ்சல் செய்ததுடன் அதை பிடிக்க முயன்ற போலீசாருக்கும், வாகன டிரைவர் களுக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு ஓடியது. ஒரு வழியாக அதை பிடித்த போலீசார் தற்போது அதை சிறையில் அடைத்துள்ளனர்.
-
- 0 replies
- 546 views
-
-
ரெண்டு பக்கமும் வழிச்சு.. நடுவுல கீரிப்பிள்ளை மாதிரி.. இதுதாங்க இப்போ டோணி ஹேர்ஸ்டைல்! மும்பை: ஹெலிகாப்டர் ஷாட் அடிப்பாரோ இல்லையோ, முதல்ல ஹேர்ஸ்டைலை மாற்றி விட்டார் கேப்டன் டோணி. ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்க கிளம்பி விட்ட கேப்டன் டோணி புது விதமான ஹேர் ஸ்டைலுடன் காட்சி தருகிறார். டிசம்பர் 9ம் தேதி இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. முதலில் டோணி முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக பில் ஹியூக்ஸ் என்ற ஆஸ்திரேலிய வீரர் பவுன்சர் பந்து பட்டு மரணமடைந்ததால் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 9ம் தேதிக்குத் தள்ளிப் போய் விட்டது. ரெண்டு பக்கமும் வழிச்சு.. நடுவுல கீரிப்பிள்ளை மாதிரி.. இதுதாங்க இப்போ டோணி ஹ…
-
- 0 replies
- 553 views
-
-
டோணியுடனான என் காதல் கறையை போன்றது: ராய் லக்ஷ்மி சென்னை: கிரிக்கெட் வீரர் டோணியுடனான காதல் உறவு கறை அல்லது வடுவை போன்றது என நடிகை ராய் லக்ஷ்மி தெரிவித்துள்ளார். நடிகை ராய் லக்ஷ்மி ஒரு காலத்தில் கிரிக்கெட் வீரர் டோணியை காதலித்தார். அதன் பிறகு அவரவர் பாதையை பார்த்து சென்றுவிட்டனர். மக்களும் அதை பற்றி மறந்தே போய்விட்டனர். இந்நிலையில் இது குறித்து ராய் லக்ஷ்மி தற்போது பேசியுள்ளார். அவர் கூறுகையில், டோணி, ராய் லக்ஷ்மியை பத்தி தான் ஊரே பேசுதாமே! டோணியுடனான என் உறவு கறை மற்றும் வடுவை போன்று மறைய பல காலம் ஆகும் போன்று. அது பற்றி தற்போது பேசும் அளவுக்கு மக்களுக்கு தெம்பும், பொறுமையும் உள்ளது ஆச்சரியமாக உள்ளது. ஒவ்வொரு முறையும் டிவி சேனல்கள் டோணியின் காதலிகள் பற்றி பேசுக…
-
- 0 replies
- 517 views
-
-
7/13/2011 7:20:07 PM அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்த தாயொருவர் உலகிலேயே எடைகூடிய குழந்தையை பிரசவித்துள்ளார். இக்குழந்தையின் நிறை 7.3 கிலோகிராம்களாகும். ஜெனட்ஜொன்ஸன் மற்றும் மிட்செல் பிரவுன் தம்பதிகளுக்கே இக்குழந்தை பிறந்துள்ளது. சிசேரியன் மூலமே இக்குழந்தை பிரசவிக்கப்பட்டுள்ளது. இக்குழந்தையைக் கண்ட வைத்தியர்கள் தாம் கண்டவற்றிலேயே மிகப்பெரிய குழந்தை இதுவென தெரிவித்துள்ளனர். குழந்தையின் தாயாருக்கு பிரசவத்தின் போது நீரிழிவு நோய் ஏற்பட்டதாகவும் இதுவே குழந்தைகள் அதிக நிறையுடன் பிறப்பதற்கான காரணமெனவும் வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். கின்னஸ் உலக சாதனையின் படி உலகிலேயே அதிக நிறைகொண்ட குழந்தை 1879 ஆம் ஆண்டு ஒய்யோ மாநிலத்தில் தாயொரு…
-
- 0 replies
- 496 views
-
-
நீங்கள் ஐந்து வருடங்களுக்குள் இறந்து விடுவீர்களா என்பதை ஆன்லைனில் கேட்கப்படும் கேள்விக்கு பதிலளிப்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். இதற்காக சுவீடன் விஞ்ஞானிகள் உருவாக்கிய வலைதளத்தில் ஆண்களுக்கு 11 கேள்விகளும், பெண்களுக்கு 13 கேள்விகளும் கேட்கப்படுகின்றன. இந்த கேள்விகளுக்கு நீங்கள் பதிலளித்தால் நீங்கள் 5 வருடங்களில் இறப்பதற்கான வாய்ப்புகள் தெளிவாக தெரிந்துவிடும். புகை பிடிக்கும் பழக்கம், உடல்நலக்கோளாறு குறித்த வரலாறு, நீங்கள் நடக்கும் வேகம், நீங்கள் எத்தனை கார்களை வைத்துள்ளீர்கள் போன்ற கேள்விகள் அதில் இடம் பெற்றுள்ளன. எனினும் இதில் கலந்து கொள்ள உங்களுக்கு 40 வயது நிரம்பியிருக்கவேண்டும். ஸ்காட்லாந்து நாட்டில் இரு மருத்துவமனைகளில் அனுதிக்கப்பட்ட 35 ஆயிரம் நோயாளிகளிடம் இந்த வலை…
-
- 0 replies
- 439 views
-
-
60 வயது 'மிஸ்டர் பீன்' கொண்டாடிய 25வது பிறந்தநாள்! கலகலப்பான தோற்றம், பார்த்தாலே சிரிப்பு வரும் சைகைகள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே கவரும் கதாபாத்திரம் தான் மிஸ்டர் பீன். கடந்த வெள்ளிக்கிழமையோடு மிஸ்டர் பீன் கதாப்பாத்திரம் உருவாகி 25 ஆண்டுகள் நிறைவடைவதை வித்தியாசமான முறையில் கொண்டாடினார் 60வது வயதான ரோவன் அட்கின்சன். 1994ம் ஆண்டில் ரோவன் அட்கின்சன் (Rowan Atkinson) நடித்த மிஸ்டர் பீனின் பகுதியில் இருந்து வரும் ஒரு காட்சியை நேரடியாக செய்து காட்டி அசத்தினார்.அதில் தனது கார் முழுவதும் பரிசு பொருட்களால் நிறைந்து விட அதனை சமாளிக்க காரின் மீது ஒரு நாற்காலியை வைத்து அதில் அமர்ந்து காரை இயக்குவார் பீன்.அதேபோல் 25வது வருடத்தை லண்டனின் பக்கிங்ஹாம் அரண்மனையை பிர…
-
- 0 replies
- 763 views
-
-
புரட்சிகரமான தமிழ் உறவுகளே.இது தூங்குவதற்கான நேரமல்ல. ஒன்று திரண்டு உன் வரலாற்று கடமையை நிறைவேற்றும் நேரமிது. உனக்காக வீழ்ந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களது கனவுகளை நிறைவேற்றும் நேரமிது. உனது உடன் பிறந்த உனது உடம்பில் ஓடுகிற அதே தமிழ்ரத்தம் ஓடுகிற உனது சகோதரர்களை கூண்டோடு அழித்தவனை குற்றவாளிக்கூண்டில் ஏற்றும் நேரமிது. மறக்காகாதீர்கள். எம் அருமை உறவுகளே. வருகின்ற 05.03.2012 அன்று ஜெனீவா ஐநாப்பொதுமன்றத்தின் முன்றலிலே நெருப்புத்தமிழன் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலிலே நடைபெற இருக்கின்ற பேரணியில் உணர்வுள்ள அனைத்துத் தமிழனும் பங்குபற்றவேண்டும். ஏனென்றால் உலகத்தமிழர்களுக்கு இது மாபெரும் பேரணி மட்டுமல்ல. உலகத்தமிழனின் 60 ஆண்டுகாலப்போராட்டத்தின் ஒரு முக்கிய மைல்கல்லை …
-
- 0 replies
- 423 views
-
-
தாயார் போதையில் வாகனம் செலுத்துவதாக வேனின் பின் ஆசனத்திலிருந்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்த 9 வயது சிறுவன் கனடாவைச் சேர்ந்த 9 வயதான சிறுவனொருவன், தனது தாயார் மதுபோதையில் வாகனம் செலுத்துவதாக பொலிஸாருக்கு அக்காரின் பின் ஆசனத்திலிருந்த நிலையில் தகவல் கொடுத்துள்ளான். கடந்த புதன்கிழமை இச்சம்பவம் நடைபெற்றதாக கனடாவின் யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சிறுவன் தனது தாயாருடன் வேன் ஒன்றில் பயணம் செய்தபோது, பின் ஆசனத்திலிருந்தவாறு தனது செல்லிடத் தொலைபேசி மூலம் 911 எனும் கனேடிய அவசரசேவை இலக்கத்தின் மூலம் பொலிஸாரை அழைத்தான். இச்சிறுவன் அச்சத்துடன் உரையாடியபோதிலும் தனது…
-
- 0 replies
- 401 views
-
-
உணவகத்தில் பிரித்தானிய அரச தம்பதியினருக்கு அனுமதி மறுப்பு! கனடாவிற்கு சுற்றுலா சென்றுள்ள பிரித்தானிய அரச குடும்பத்திற்கு உணவகம் ஒன்றில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய இளவரசர் ஹரி குடும்பத்தை கனடா பிரதமரே வரவேற்றுள்ள நிலையில், உணவகம் ஒன்று அவர்களுக்கு அனுமதி மறுத்துள்ளது. வன்கூவரிலுள்ள Deep Cove Chalet என்ற உணவகத்தைக் கண்ட ஹரியின் பாதுகாவலர்கள், அந்த உணவகம் ஹரி குடும்பம் உணவு உண்ண பாதுகாப்பானதாக இருக்கும் என எண்ணி அங்கு முன் பதிவு செய்வதற்காக சென்றுள்ளனர். குறித்த உணவகத்தை நடத்தி வரும் Pierre மற்றும் Bev Koffel ஆகியோர் ஹரி குடும்பத்தின் வேண்டுகோளை நிராகரித்துள்ளனர். தங்கள் உணவகம் அமைந்திருக்கும் Horth Hill என்னும்…
-
- 0 replies
- 304 views
-
-
வேர்ட்பிரஸ் பவானையாளர்கள் கடவுச் சொற்களை மாற்றிப் பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள வேர்ட்பிரஸ் இணையப் பக்கங்கள் மீது அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கடவுச் சொற்களை ஊடறுப்பதன் மூலம் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 64 மில்லியன் இணையத் தளங்கள் வேர்ட்பிரஸ் இணைய மென்பொருளைப் பயன்படுத்துகின்றன. உலகின் 17 வீதமான இணைய தளங்கள் வேர்ட்பிரஸ் மென்பொருளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிறது. அண்மைய நாட்களாக வேர்ட்பிரஸ் மென்பொருளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட இணையத் தளங்கள் தாக்குதலுக்கு இலக்கி வருவதாகவும், வலுவான கடவுச் சொற்களைப் பயன்படுத்துமாறும் மென்பொருளின் ஸ்தாபகர் Matt Mullenweg கோரியுள்ளார். htt…
-
- 0 replies
- 322 views
-
-
-
இலவச சூம் வகுப்புக்களை குழப்பும் விஷமிகள் – ஆசிரியர்கள் கவலை June 3, 2021 மாணவர்களுக்கு இலவச கற்றல் செயற்பாடுகளை சூம் செயலி ஊடாக முன்னெடுக்கும் போது , போலி இணைப்புக்களில் ஊடுருவும் விஷமிகள் கற்றல் செயற்பாடுகளை குழப்புவதாக ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடளாவிய ரீதியில் பயண தடை அமுலில் உள்ளது. இதனால் மாண்வர்களின் கல்வி செயற்பாடுகளுக்கு பெரும் தடங்கல் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் சூம் செயலி ஊடாக கற்றல் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சில ஆசிரியர்கள் சூம் ஊடான கற்றல் செயற்பாடுகளுக்கு கட்டணம் அறவிட்டு , கட்டணம் செலுத்தியவர்களுக்கு இணைப்பு வழங்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வறிய மாணவர்கள…
-
- 0 replies
- 204 views
-
-
சிங்கள தமிழ் புதுவருடகாலத்தில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட புதுவருட விளையாட்டு விழா, வென்னப்புவ வைக்கால் பிரதேசத்திலுள்ள உல்லாசப் பயண ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்றது. முழு நாள் நிகழ்வாக இடம்பெற்ற இந்த விளையாட்டு விழாவில் கயிறு இழுத்தல், தலையணை அடித்தல், கிடுகு இழைத்தல் உட்பட பல்வேறு போட்டிகள் இந்த உல்லாசப் பயணிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த அனைத்துப் போட்டிகளிலும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்தப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு ரண்வெளி உல்லாசப் பயணிகள் ஹோட்டல் நிர்வாகத்தினரால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. http://metronews.lk/article.php?ca…
-
- 0 replies
- 512 views
-
-
தெய்வ ரூபமாக வணங்கப்படும் எலிகள் : எலி குடித்த பால் தான் பிரசாதம் ! ஆச்சரியப்படுத்தும் இந்தியாவின் எலிக்கோவில் ! இந்தியா பல்வேறு கலாச்சார இடங்களை கொண்டுள்ளது. அவற்றில் பல நம்மை ஆச்சரியப்படுத்தும், அப்படி சுவாரஸ்யமான இடங்களில் ஒன்று தான் ராஜஸ்தான் தேஷ்நோக்கில் உள்ள கர்னி மாதா கோவில். இது “எலிகளின் கோவில்” என்று பிரபலமாக அறியப்படுகிறது. ஆயிரக்கணக்கான இந்து யாத்ரீகர்கள் கர்னி மாதாவை வழிபடுகின்றனர். 25,000 கருப்பு எலிகள் அந்த கோவிலில் வசிக்கின்றன. …
-
- 0 replies
- 204 views
- 1 follower
-
-
குலுக்கலில் பரிசு விழுந்திருப்பதாக கூறி ரூ.14 லட்சம் மோசடி - அர்ச்சகரை ஏமாற்றிய மூவர் கைது பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் கோவில்பட்டி அருகே குலுக்கல் முறையில் பைக், கார் பரிசு என ஆசை காட்டி கோவில் அர்ச்சகரிடம் 14 லட்ச ரூபாய் மோசடி செய்த கும்பலில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் ராமசுந்தரம் (40) என்பவர் கோவில்பட்டியில் உள்ள 4 கோவில்களில் அர்ச்சகராக இருந்து வருகிறார். அவர் துபாயிலும் பணிபுரிந்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு இலுப்பையூரனி பகுதிக்கு ஆம்னி வேனில் வந்த நபர்கள் கு…
-
- 0 replies
- 551 views
- 1 follower
-
-
மீனுடன் புகைப்படம் எடுத்த இருவர் கைது நட்சத்திர மீனுடன் செல்பி எடுத்த சீன சுற்றுலா வாசிகள் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட விநோத சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த சுற்றுலாவாசிகள் நட்சத்திர மீன்களைக் கையில் பிடித்து அதனுடன் புகைப்படம் எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு தாய்லாந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் . தாய்லாந்து அரசு இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக பவள பாறைகள் மற்றும் அழியக்கூடிய சூழலில் வாழும் கடல் வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதற்காக கடுமையான சட்டங்கள…
-
- 0 replies
- 552 views
-