Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. சினிமா போல் அரங்கேறிய உண்மைச்சம்பவம் (வீடியோ இணைப்பு) கல் தோன்றி மண் தோன்றா தொண்மையான காதல் தான் மனிதத்தோடு மனிதனை இன்னும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. காவியக் காதல், கற்பனைக் காதல், ஒருதலைக் காதல், நல்லக் காதல் இப்படி எத்தனை வகைப் படுத்தினாலும் காதல் காதல் தான் இனம், மதம், மொழி, வயது, பால், அந்தஸ்த்து, குளம், சாதி, அழகு, நிறம் போன்ற எந்த வரையறை வகைப்பாட்டிற்கும் உட்படாமல் மனிதனை மனதால் இனைக்கும் வல்லமை காதலுக்கு மட்டுமே இருக்கிறது. இப்போதெல்லாம் கண்டதும் காதல் கொண்டதும் கோலம் இந்தக் காலத்தில் உண்மைக்காதல் இல்லை என்ற விமர்சனத்திற்கு உட்படுத்தப்படும் காதல் மீண்டும் ஒரு சம்பவத்தின் மூலம் காதல் எப்போதும் காதல் தான் என நிரூபி…

  2. கொரோனாவில் இருந்து மீண்ட தாய்க்குப் பிறந்த குழந்தைக்கு கொரோனா டெல்லியில் மருத்துவமனையில் கொரோனா பாதித்து, குணமடைந்த தாய்க்குப் பிறந்த குழந்தைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பதிவு: ஜூலை 11, 2020 14:02 PM புதுடெல்லி உலகிலேயே முதல் முறையாக கருவில் இருக்கும் சிசுவுக்கு கொரோனா பாதிப்பு தாய் மூலம் ஏற்பட்டிருப்பதாக ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இதுவரை, பிறந்த குழந்தைக்கு, கொரோனா நோயாளிகள் மூலம்தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கொரோனா பாதித்த தாய்க்குப் பிறந்த குழந்தைகளுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்படவில்லை. ஜூன் 11ம் தேதி 24 வயது கர்ப்பிணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதே சமயம், சிகிச்ச…

  3. கைக்கூலிகளை களமிறக்கி முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை இல்லாமலாக்கும் சூழ்ச்சி – அஷாத் சாலி முஸ்லிம்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்களை குறைக்கும் நோக்குடன் செயற்படும் ராஜபக்ஷக்களின் அரசாங்கம், இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் இப்பணியைக் கச்சிதமாக முடிப்பதற்கு சில கைக்கூலிகளைக் களமிறக்கியுள்ளதாக மேல்மாகாண முன்னாள் ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த தலைமையிலான 52 நாள் அரசாங்கத்தில் விஜயதாச ராஜபக்ஷ இதுபற்றி பகிரங்கமாகக் கூறியிருந்தார். ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் அஷ்ரஃபின் வேண்டுதலுக்காக ஐந்து வீதமாக மாற்றப்பட்ட விகிதாசார வெட்டுப்புள்ளியை, மீண்டும் 12 வீதத்துக்கு கொண்டு வந்து, முஸ்லிம்களின் அரசியல் பல…

  4. ஒரே ஆண்டில் 777 திரைப்படங்கள் பார்த்து கின்னஸ் சாதனை படைத்த சினிமா ஆர்வலர் சமீபகாலமாக பல்வேறு துறைகளிலும் கின்னஸ் சாதனை படைப்பவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே வருகிறது. அந்த வகையில் சினிமா ஆர்வலர் ஒருவரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த சாக்ஸ்வோப் என்பவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை முதல் 2023 ஜூலை வரையிலான ஒரு ஆண்டில் மட்டும் மொத்தம் 777 திரைப்படங்கள் பார்த்து கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். 32 வயதான இவர் ஒவ்வொரு வருடமும் சராசரியாக 100 முதல் 150 படங்கள் வரை தியேட்டரில் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கின்னஸ் சாதனை படைப்பதற்காக அங்குள்ள ரீகல் சினிமாஸ் தியேட்டரில் கடந்த ஆண்டு ‘…

  5. சாப்பிட்ட வாழைப்பழத்தின் சிறு துண்டு நுரையீரலில் சிக்கியதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபர் யிரிழந்துள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடற்படையின் ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தரான லக்ஷ்மன் ஹெட்டி பத்திரன (64) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த நபர் பல வருடங்களாக நோயினால் அவதிப்பட்டு வந்த நிலையில் இவரை மனைவி கவனித்து வந்துள்ளார். இதற்கிடையே கடந்த 18ம் தேதி மதியம் சாப்பிட்ட பின் வாழைப்பழம் சாப்பிட்டு கொண்டிருந்த போது திடீரென ஒவ்வாமை ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டதில் அவர் இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். அதன்படி, ஹோமாகம மரண விசாரணை அதிகாரி சிந்த…

  6. 48 வது தேசிய விளையாட்டு விழாவில் வடமாகாண வீரர் சாவகச்சேரியினைச் சேர்ந்த அருந்தவராசா புவிதரன் 5.11M உயரத்தினை கடந்து புதிய சாதனையினை நிலைநாட்டியுள்ளார் https://www.facebook.com/share/6mUGvkA5M2xtjZAt/

    • 4 replies
    • 254 views
  7. பாலியல் தாக்­கு­தல்­க­ளுக்கு பெண்கள் பூசி­யி­ருந்த நறு­மணத் தைலங்­களே காரணம் ஜேர்­ம­னிய கோலொன் பிராந்­தி­யத்தில் கடந்த புது வருட தினத்தில் குழு­வொன்றால் பெண்கள் பாலியல் ரீதியில் தாக்­கப்­பட்ட சம்­ப­வத்­துக்கு அந்தப் பெண்கள் நறு­ம­ணத்­தை­லங்­களை பூசி­யி­ருந்­த­மையே காரணம் எனத் தெரி­வித்து அந்தப் பிராந்­திய இமாம் ஒருவர் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்ளார். கடந்த புது வருட தினத்தில் கோலொன் நகரில் நூற்­றுக்­க­ணக்­கான பெண்கள் பாலியல் தாக்­கு­தல்­க­ளுக்கு உள்­ளா­கி­யி­ருந்­தனர். அன்­றைய தினம் மட்டும் அந்­ந­கரில் 3 பாலியல் வல்­லு­றவு சம்­ப­வங்கள் உட்­பட 521 பெண்­க­ளுக்கு எதி­ரான பாலியல் தாக்­குதல் சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன. இத­னை­ய­டுத்து…

  8. இஸ்ரேலிய தாக்குதல்களால் பாலஸ்தீன சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் இறந்தமை குறித்து ஆழ்ந்த கவலையை கொண்டுள்ள பாலஸ்தீன கலைஞர் ராணா பிஷாரா, நத்தார் பண்டிகைக்காக குழந்தை இயேசுவின் சிலையைப் பயன்படுத்தி ஒரு புதிய கலைப்படைப்பை வெளியிட்டுள்ளார். ராணாவின் கலைப்படைப்பு குழந்தை இயேசுவை இன்குபேட்டரில் காட்டுகிறது. இன்குபேட்டரில் குழந்தை இயேசு வைக்கப்பட்டுள்ளதை காட்டும் இந்த கலைப்படைப்பை பெத்லஹேம் தேவாலயத்தின் முன் காணலாம். குழந்தை இயேசு பெத்லகேமில் பிறந்தார். பெத்லகேம் இன்று பெரும்பாலான பாலஸ்தீனியர்கள் வாழும் மேற்குக் கரைக்கு சொந்தமானது. அத்துடன், பாலஸ்தீனியர்கள் காசா பகுதியில் வசிக்கின்றனர். காசா பகுதியைக் கட்டுப்படுத்தும் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலியப் படைகளுக்கு இடையே போர் நடந்து …

  9. மெரினாவில் ஜெர்மன் தம்பதியினரிடம் திருடப்பட்ட நாய் 100 நாட்களுக்குப் பின் மீட்பு ஜெர்மன் தம்பதியினருடன் லூக் நாய் கடந்த ஜூலை மாதம் மெரினாவில் ஜெர்மன் தம்பதியினரிடம் திருடப்பட்ட செல்லப்பிராணி லூக் என்ற லாப்ரடார் வகை நாய் நூறு நாள் தேடலுக்குப் பின் கிடைத்துள்ளது. இதை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூலை 8-ம் தேதி ஜெர்மனியைச் சேர்ந்த ஸ்டீஃபன் கக்ராஹ் என்பவர் தனது மனைவி ஸ்டெஃபன் கஹேராவுடன் சுற்றுலாவுக்காக சென்னை வந்தார். தங்களுடன் தங்களது செல்ல வளர்ப்பு நாயானா லாப்ரடார் வகையை சேர்ந்த கறுப்பு நிற லூக்கையும் அழைத்து வந்தனர்…

  10. ஒவ்வொரு நாளும் புதுவாழ்க்கை வாழும் விசித்திர பெண் இங்கிலாந்தை சேர்ந்த கிறிஸ்டினா கார்ப்(Christina Corp) என்ற பெண்மணிக்கு, தனது வாழ்வில் முதல் நாள் நடந்த சம்பவங்களை அடுத்த நாளில் நினைவுகூற முடியாது. ஏனெனில், இவருக்கு 17 வயது இருக்கும்போது ஏற்பட்ட கார் விபத்தில் இவரது மூளை சேதமடைந்தது, அதன் பின்னர் சுயநினைவிழந்து இருந்தார். அதன் பின்னர் குணமடைந்த அவரால், வாழ்வில் முதல் நாள் நடந்த சம்பவங்களை அடுத்த நாள் நினைவுகூற இயலாது. ஒவ்வொரு நாளும் புதுநாட்களாகவே அவருக்கு இருந்துள்ளது. மகளின் வாழ்க்கையை நினைத்து கவலையில் இருந்த கிறிஸ்டினாவின் பெற்றோருக்கு, இன்பமூட்டும் சம்பவமாக, ஜோ சிவேனி(Joe Sweeney - Age 29) என்பவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் கிறிஸ்டினாவை சந்தித்துள்ளார். நாளடை…

  11. ஐரோப்பாவில் உள்ள குட்டி நாடான மான்டெனெக்ரோ நகரம் சின்ன சின்ன கிராமங்களையும், அழகிய கடற்கரைகளையும் கொண்ட பகுதி ஆகும். மொத்தமே 6 இலட்சம் பேர் வசிக்கும் இந்த நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ‘சோம்பேறி குடிமகன்’ போட்டி நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான போட்டி கடந்த மாதம் தொடங்கி 26 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்போர் 24 மணி நேரமும் படுக்கையிலேயே படுத்தபடி இருக்க வேண்டும். அவர்கள் எழுந்து நடக்கவோ அல்லது உட்காரவோ அனுமதி கிடையாது. அதிக நேரம் படுத்தே இருப்பவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். இந்த போட்டியின் தொடக்கத்தில் 21 பேர் பங்கேற்ற நிலையில், தற்போது 7 பேர் மட்டுமே எஞ்சி உள்ளனர். ஏனையவர்கள் போட்டியில் இருந்து விலகி விட்டனர். விதிப்படி, போட்ட…

  12. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணிடம் நீதிபதி கேட்க கேள்வியினால் பரபரப்பு கனடா நாட்டில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் ஒருவரிடம் கீழ்த்தரமான கேள்விகளை எழுப்பிய நீதிபதி ஒருவரின் பதவி பறிபோக வாய்ப்புள்ளது. கனடாவில் உள்ள அல்பேர்ட்டா மாகாணத்தில் ரோபின் கேம்ப் என்பவர் நீதிபதியாக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டில் 19 வயது இளம்பெண் ஒருவரை ஸ்கொட் வால்டர் என்பவர் பலவந்தப்படுத்தி பாலியல் துஷ்பிரியோகம் செய்யப்பட்டுள்ளார். இந்த பாலியல் துஷ்பிரியோகம் தொடர்பான வழக்கிற்கு நீதிபதியான ரோபின் கேம்ப் முன்னிலையில் வந்துள்ளது. நீதிபதி விசாரணையின்போது பாலியல் துஷ்பிரியோகம் செய்யப்பட்ட இளம்பெண்ணிடம் ‘நபர் உங்களை ப…

  13. உலகில் அதிக வேறுபாடுகள் இல்லாத ஒரே மாதிரியான உருவம் உள்ள இரட்டையர்களில் முதல் இடம் பிடிப்பவர்கள் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரை சேர்ந்த இரட்டை சகோதரிகள் லூசி மற்றும் அண்ணா சினிகியூ ஆகும். இவர்கள் ஏற்கனவே தங்கள் மார்பகத்தை பெரிதாக்குதல் பிளாஸ்டிக் சர்ஜரிக்காக ஒரு கோடிக்கும் அதிகமாக செலவழித்து பிரபலமானார்கள் ஸாஈஈஆஈள் இருவரும் ஒரே வாலிபரை காதலித்து திருமணம் செய்ய உள்ளனர். இவர்கள் தாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் கருத்தரித்து குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை இருப்பதாக தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர். காரணம், இருவரும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்பதற்காக. இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர்கள், இரட்டை சகோதரிகளுக்கு 99.9…

  14. துருக்கி நிலநடுக்கத்தின் போது செவிலியர்களின் தீரச்செயல் காணொளிக் குறிப்பு, துருக்கி நாட்டில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் போது குழந்தைகளை காப்பாற்றிய செவிலியர்கள் 23 பிப்ரவரி 2023 அண்மையில் துருக்கி நாட்டில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் போது குழந்தைகளை காப்பாற்றிய செவிலியர்கள் துருக்கியின் சுகாதார அமைச்சகம் ஒரு சிசிடிவி காட்சியை வெளியிட்டுள்ளது. இந்த காணொளியில், துருக்கியின் காசியான்டெப் நகரின் மருத்துவமனையில் பணியில் இருந்த செவிலியர்கள், அங்கு நிலநடுக்கம் ஏற்பட்ட போது தங்களது உயிரை பொருட்படுத்தாமல் சிகிச்சையில் இருக்கும் குழந்தைகளை காப்பாற்றி வெளியேறும் காட்சி இடம்பெற்றுள்ளது. செவிலியர்களின் இந்த தீரச் செய…

  15. ரிதிகம பிரதேச செயலகப் பகுதியிலுள்ள குறைந்த வருமானம் பெறுவோருக்கு வழங்கப்பட்ட அரிசியை பனகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் எடுத்துச் சென்று கோழிகளுக்கு உணவளித்துள்ளார். மேற்படி அரிசியை சாப்பிட்ட 7 கோழிகள் உயிரிழந்ததாக உரிமையாளர் சுகாதார பரிசோதகரிடம் முறைப்பாடு செய்துள்ளார். கோழிகளின் இறப்பு தொடர்பில் சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளில் இறப்புக்கான காரணம் எதுவும் கண்டறியப்படவில்லை, எனவே உண்மைகளை நீதிமன்றத்தில் தெரிவிக்கவும், பரிசோதனை அறிக்கையை பெறவும் உத்தரவு பெறப்பட்டதாக பொது சுகாதார மருத்துவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/301509

  16. பூமியில் இருந்து விரைவில் காணாமல் போகும் முதல் நாடாக தென் கொரியா மாறுமா?. அதற்கான காரணமாக சொல்லப்படுவது என்ன தெரியுமா?. ஒரு காலத்தில் அதன் விரைவான நவீனமயமாக்கல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக கொண்டாடப்பட்ட தென் கொரியா, தற்போது கடுமையான மக்கள் நெருக்கடியை எதிர்கொள்கிறது. நாட்டின் பிறப்பு விகிதம் வரலாற்றில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. இந்த நூற்றாண்டின் இறுதியில் அதன் மக்கள் தொகை மூன்றில் இரண்டு பங்காக சுருங்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விஷயத்தை கருத்தில் கொள்ளாமல் விட்டால், இது பொருளாதாரத்தை சீர்குலைத்து, தென் கொரியாவின் சமூகத்தை மறுவடிவமைக்கும் என்று சொல்லப்படுகிறது. 1960-களில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த குடும்பக் கட்டுப்பாடு கொள்கையை அர…

  17. செயின்ட் ஹெலனா தீவில் பராமரிக்கப்பட்டு வரும் ஒரு ஆமை, உலகின் மிக வயதான ஆமை என்ற சிறப்பை பெற்றுள்ளது. ஜோனாதன் என அழைக்கப்படும் குறித்த ஆமை கி.பி. 1832ஆம் ஆண்டு பிறந்ததாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆமை 1882இல் செசல்சில் இருந்து செயின்ட் ஹெலனா தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டது. வயதானாலும் சுறுசுறுப்புடன் வலம் வரும் ஜோனாதன், இந்த ஆண்டு 191ஆவது பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருக்கிறது. இது தொடர்பான காணொளியை கின்னஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. ஆமையின் வேகமும் சுறுசுறுப்பும் குறைவதற்கான அறிகுறி இல்லை என அதற்கு சிகிச்சை அளித்து வரும் கால்நடை மருத்துவர் ஜோ ஹோலின்ஸ் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/283378

  18. உலகில் ஒருவரைப் போல மற்றொருவர் இருக்க என்ன காரணம்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜெர்மனி கால்பந்து வீரர் மெசுட் ஓசில் மற்றும் ஃபெராரி அணியின் நிறுவனர் என்சோ ஃபெராரி 18 நவம்பர் 2022 ஆக்னஸ் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது, அவரை அணுகிய ஓர் ஆண் ஆக்னஸிற்குத் தெரியாத விஷயங்களைப் பற்றி பேச ஆரம்பித்தார். அந்த நபர் நினைக்கும் நபர் நாம் இல்லை என்று உணர ஆக்னஸிற்கு அதிக நேரம் எடுக்கவில்லை. அதை அவர் தெளிவுபடுத்தியதும், ஆக்னஸை போன்று இருக்கும் ஒருவரை தனக்கு தெரியுமென அந்த நபர் கூறினார். தன்னைப் போன்று இருக்கும் எஸ்டர் என்ற பெயர் கொண்ட அந்த நபரை முதலில் ஃபேஸ்புக் வழியாக ஆக்…

  19. கிளிநொச்சியில்... அரிய வகை ஆமை, மீட்பு! கிளிநொச்சியில் அரிய வகை நட்சத்திர ஆமை மீட்கப்பட்டு வன ஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, தரம்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயில்வாகனபுரம் பகுதியில் விவசாயி ஒருவர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோதே குறித்த ஆமை அடையாளம் காணப்பட்டுள்ளது, இந்த ஆமை இனமானது அருகிவரும் நட்சத்திர ஆமை வகையை சேர்ந்தது என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆமை இனமானது இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் நாட்டிற்கு உருத்துடையவைகள் எனவும், கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படும் அரிய வகையான ஆமை இனம் எனவும் தெரியவருகின்றது. உலகளவில் அதிகம் கடத்தப்படும் உயிரினங்களில் இந்த நட்சத்திர ஆமை இனமும் ஒன்றாகும். …

  20. 22 கோடி ரூபாவை நிறுவன ஊழியர்களுக்கு எழுதி வைத்துவிட்டு இறந்த தொழிலதிபர் இத்தாலியிலுள்ள நிறுவனமொன்றின் உரிமையாளர் ஒருவர், தனது சொத்தில் சுமார் 22 கோடி ரூபாவை தொழிற்சாலையின் ஊழியர்களுக்கு வழங்குவதாக உயில் எழுதி வைத்துவிட்டு இறந்துள்ளார். இதனால் அத்தொழிற்சாலையின் ஊழியர்களுக்கு 3 இலட்சம் ரூபா முதல் 15 இலட்சம் ரூபா வரை விசேட அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இத்தாலியின் எனோபிளாஸ்டிக் எனும் நிறுவனத்தின் ஊழியர்களுக்கே இந்த அன்பளிப்பு கிடைத்துள்ளது. போத்தல் தக்கைகள், லேபல்கள், ஸ்குரூ ஆணிகளுக்கான மூடிகள் போன்றவற்றை தயாரிக்கும் நிறுவனம் இது. பியரோ மாச்சி என்பவர் 1957 ஆம்…

  21. லண்டன்: கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக, பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தியுள்ளனர். வீட்டில் பணிபுரிபவர்கள், அலுவலக மீட்டிங்கிற்கு அதிகளவில், 'வீடியோ கால்' பயன்படுத்துகின்றனர். தனது பணியாளர்களுடனான வீடியோ கால் மீட்டிங்கில், முதலாளி தெரியாமல் உருளைக்கிழங்கு போல தோற்றமளிக்கும், பில்டர் ஆப்சனை தொட்டுவிட்டார். இந்த ஆப்சனை எவ்வாறு மாற்ற வேண்டும் என அவரால், கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், மீட்டிங் முழுவதும் உருளைக்கிழங்கு தோற்றத்திலே இருந்துள்ளார். பணியாளர்களால் இணையத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெளியான சில மணி நேரங்களில், பல கோடி பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். https://www.…

  22. குரங்குப் பணியாளர்களால் சரியும் தாய்லாந்து சந்தை: இலங்கைக்கு சாதகமா? குரங்குகளை வேலைக்குப் பயன்படுத்துவதால் உலகின் முக்கிய தென்னை சார் உற்பத்தி விநியோகஸ்த்தரான தாய்லாந்திடமிருந்து உற்பத்திகளைக் கொள்வனவு செய்வதை பெரும்பாலான சர்வதேச நிறுவனங்கள் தவிர்த்து வரும் நிலையில் , தனது தென்னை சார் உற்பத்தி ஏற்றுமதியை விரிவுபடுத்தக் கூடிய சந்தர்ப்பத்தை இலங்கை பெற முடியும். PETA அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளைத் தொடர்ந்து, வோல்மார்ட், கோஸ்ட்கோ, டார்கட் அன்ட் க்ரோகர் போன்ற உலகின் முக்கிய விற்பனையாளர்கள், வலுக்கட்டாயமாக குரங்குகளைப் பணியமர்த்துவதாக குற்றஞ்சாட்டப்பட்ட தாய்லாந்தைச் சேர்ந்த சில விநியோகஸ்தர்களிடமிருந்து தேங்காய்பால் உள்ளிட்ட தென்னை சார்ந்த உற்பத்திகளை…

  23. மண்ணில் புதைந்த தொழிலாளிகள்: சமார்த்தியமாக மீட்ட சக தொழிலாளிகள் 5 மணி நேரங்களுக்கு முன்னர் காங்கோவில் மண்ணில் புதைந்த தொழிலாளிகளை சக தொழிலாளிகள் கைகளால் மண்ணிலை தோண்டி மீட்டனர் காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் உள்ள தங்க சுரங்கத்தில் கன மழையை தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டது. சுரங்கத்தில் வேலை பார்த்துகொண்டிருந்த 9 தொழிலாளிகள் நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்தனர். அங்கிருந்த சக தொழிலாளிகள் உடனடியாக தங்களது கைகளால் மண்ணை தோண்டி தொழிலாளிகள் வெளியே வருவதற்கு வழியை ஏற்படுத்து தந்தனர். அதன்வழியாக 9 தொழிலாளிகளும் பத்திரமாக வெளியே வந்தனர். பாதுகாப்பு நடைமுறைகள், முறையான உபகரணங்களின் பற்றாக்குறை போன்றவை உள்ளூர் சுரங்கங்களில் ஏற்படும் இத்தகைய சிக்கல்களுக்…

  24. மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் தாலுகாவின் ஸ்ரீகொண்டாவில் உள்ள விவசாய நிலத்தில், உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், சிறுத்தை ஒன்று காணப்பட்டது. மிகவும் சோர்வாக இருந்த அந்த சிறுத்தையைக் கண்ட கிராம மக்கள் அதன் அருகே கூடினர்.

  25. யாழ்ப்பாணத்தில் உயிருடன் வாழந்து கொண்டிருக்கும் ஒருவர் தன்னுடைய மரணக் கொடுப்பனவை வழங்குமாறு விண்ணப்பித்துள்ள சுவாரஸ்யமான சம்பவமொன்று நடைபெற்றுள்ளது. யாழ். மாவட்ட சிகை ஒப்பனையாளர் சங்கம் அங்கத்தவர்கள் மரணித்தால் 10 ஆயிரம் ரூபா வழங்கி வருகிறது. இதில் அங்கம் வகிக்கும் கொக்குவிலைச் சேர்ந்த ஒருவர் அவ் விதம் சங்க நிர்வாகத்திடம் விண்ணப்பித்து இருக்கிறார். விண்ணப்பித்ததுடன் நின்று விடாமல் அடிக்கடி சங்கத்துக்குப் போய் நெருக்கடி கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவருக்கு மரணத்தின் பின்பாக வழங்கப்பட வேண்டிய மரணக் கொடுப்பனவை சங்கம் முன்னதாகவே வழங்கி விடவும் தீர்மானித்திருப்பதாகவும் தெரிய வருகிறது. http://www.virakesari.lk/article/local.php?vid=5949

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.