செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் எல்லோருமே புகைப்படம் எடுக்கிறோம்- ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால், பிலிப்பைன்ஸ் நாட்டில் கல்லூரி மாணவி ஒருவர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொண்ட புகைப்படம் இணையத்தின் மனசாட்சியையே உலுக்கியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அந்த புகைப்படத்தின் நாயகனான ஏழை சிறுவனை, ஊக்கத்தின் அடையாளம் என மனதார பாராட்டுகிறது. அதைவிட முக்கியமாக அந்த சிறுவனுக்கு உதவிகள் குவிந்து ,அவனது வாழ்க்கையையே மாற்றி இருக்கிறது. எல்லாம் அந்த ஒரு புகைப்படத்தால் நிகழ்ந்த மாற்றம்! அந்த புகைப்படத்தை பார்த்தால் நீங்களும் கூட உருகித்தான் போவீர்கள்! ஒரு சிறுவன், டெஸ்க் முன் அமர்ந்து மங்கிய விளக்கொளியில் வீட்டுப்பாடம் செய்து கொண்டிருக்கும் புகைப்படம்தான் அது. சாதாரணமாக பார்த்தாலே கூட …
-
- 0 replies
- 231 views
-
-
பாரிஸின் முதல் நிர்வாண உணவகம் ‘ஓ’ நேச்சுரலில் அப்படி என்ன ஸ்பெஷல்? இந்தியாவில் இப்படியான உணவகத்தைக் கனவிலும் நினைத்துப் பார்த்திட வாய்ப்பில்லாத பொழுதில் பாரிஸில் உதயமாகி இருக்கும் இந்த நிர்வாண உணவகம் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்திருப்பதில் ஆச்சர்யமேதுமில்லை. உலகில் நிர்வாணத்தை அதன் புனிதத் தன்மையோடு அங்கீகரிக்கும் நாடுகளின் பட்டியலில் ஃபிரான்ஸ் எப்போதும் முன்னிலை வகிக்கத் தயங்கியதில்லை. நிர்வாணத்தை விரும்பும் மக்களின் மெக்கா, மதினா, காசி, குருத்வாரா, பெத்லகேம் எல்லாமும் பாரிஸ் நகரம் தான் என்று சொன்னால் கூடத் தவறில்லை. அந்த அளவுக்கு நிர்வாணத்தை பூஜிக்கும் நாடாக ஃபிரா…
-
- 0 replies
- 230 views
-
-
இணையத்தளம் ஊடாக, மதுபானம் விற்பனை செய்ய அனுமதி இணையத்தளம் (ஒன்லைன்) ஊடாக மதுபானம் விற்பனை செய்வதற்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. இந்த விடயம் தொடர்பான அறிவிப்பை மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளார். நாட்டில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், சகல மதுபான நிலையங்களும் மூடப்பட்டு முத்திரையிடப்பட்டுள்ளன. இதனையடுத்து, இணையத்தளம் ஊடாக சில அங்காடிகள் மூலம் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி வழங்குமாறு மதுவரி திணைக்களத்தினால் நிதியமைச்சிடம் கோரப்பட்டிருந்தது. இந்நிலையில், மதுவரி திணைக்கள ஆணையாளரின் கோரிக்கைக்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. https://athavannews.com/2021/1223035
-
- 0 replies
- 230 views
-
-
08 APR, 2025 | 05:07 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பாராளுமன்றத்தில் இடம்பெறும் நடவடிக்கைகள் தேசிய தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. எனினும் செவ்வாய்க்கிழமை (08) சபை அமர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பிற்பகல் 1.40 மணி அளவில், எதிர்க்கட்சி பக்கத்திலிருந்து உறுப்பினர் ஒருவர் ஒழுங்கு பிரச்சினையை எழுப்பினார். ஒழுங்கு பிரச்சினையை எழுப்பிய நபர் யார்? என்ன? ஒழுங்கு பிரச்சினையை எழுப்பினார் என்பது நேரடியாக ஒளிபரப்பபடவில்லை. எனினும், யாரோ கூச்சல் போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, சபைக்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்த பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் ஹேமாலி வீரசேகர, சபைக்கு ஒவ்வாத வார்த்தைகளை, பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தினார். இவ்வாறு சபையில் …
-
- 0 replies
- 230 views
- 1 follower
-
-
பிரிட்டன் வனமகன்: செல்போன் இல்லை, ஃபேஸ்புக் இல்லை - 40 ஆண்டு காட்டு வாழ்கை அனுபவங்கள் ஸ்டீவன் ப்ரோக்கிள்ஹர்ஸ்ட் பிபிசி ஸ்காட்லாந்து நியூஸ் 14 நவம்பர் 2021, 02:07 GMT பட மூலாதாரம்,URUNA PRODUCTIONS படக்குறிப்பு, கென் ஸ்மித் ஏறக்குறைய 40 ஆண்டுகளாக கென் ஸ்மித் பிறரைப் போல இயல்பான வாழ்க்கையைத் தவிர்த்துவிட்டு, ஸ்காட்டிஷ் ஹைலேண்ட்ஸில் உள்ள ஒரு தொலைதூர லோச்சின் கரையில் கையால் செய்யப்பட்ட மரத்தடி அறையில் மின்சாரம் அல்லது குழாய் நீர் வசதியின்றி வாழ்கிறார். "இது ஒரு நல்ல வாழ்க்கை," என்று கூறும் கென், "எல்லோரும் இப்படி செய்ய விரும்புகிறார்கள், ஆனால் யா…
-
- 0 replies
- 230 views
- 1 follower
-
-
புத்தூர் பகுதியை சேர்ந்த 59 வயதான குகபிரகாசம் மற்றும் அவரது மனைவியான 55 வயதான சுகுணா ஆகிய இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். வீட்டில் உள்ள நீர் தொட்டியில் மனைவி நீர் அள்ளும் போது மின்சாரம் தாக்கியதாகவும், அவரை காப்பாற்ற முயன்ற வேளை கணவனும் மின்சார தாக்குதலுக்கு இலக்காகியதில் உயிரிழந்ததாக ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். யாழ் புத்தூர் பகுதியில் மின்சாரம் தாக்கி கணவன், மனைவி உயிரிழப்பு | Virakesari.lk
-
- 0 replies
- 230 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு பாலம் இடிந்து விழுந்தது. ஆனால் அது அப்போதும் கூகுள் மேப்பில் சரியாகக் காட்டப்படாமல் பாலம் அப்படியே முழுமையாகத் தோன்றியது. மேலும், கூகுள் தனது மேப்பைப் புதுப்பிக்காததால் தான், இடிந்து விழுந்த அந்த பாலத்தில் வாகனம் விழுந்து தண்ணீரில் மூழ்கி அமெரிக்கர் ஒருவர் இறந்துவிட்டதாக, அவரது குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். ஸ்னோ க்ரீக் பாலம் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு விழுந்துவிட்டதைப் பற்றிக் குறிப்பிடாமல் கூகுள் நிறுவனம் அலட்சியம் காட்டியுள்ளது என, பிலிப் பாக்ஸன் என்ற அந்த அமெரிக்கரின் உறவினர்கள் கூகுள் நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர். வடக்கு கர…
-
- 1 reply
- 230 views
- 1 follower
-
-
மாணவன் மாயமானதை... மறைத்த, மூன்று மாணவர்கள் கைது! பெல்மடுல்ல – கிரிதிஎல அணைக்கட்டில், நண்பர்களுடன் குளிக்கச்சென்ற 16 வயது மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மாணவன் கடந்த 26ஆம் திகதி லெல்லுப்பிட்டிய பகுதிக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றுள்ளார். எனினும், அவர் வீடு திரும்பாமை தொடர்பில் அவரது பெற்றோர் கடந்த 27ஆம் திகதி இரத்தினபுரி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்தநிலையில் நேற்று (திங்கட்கிழமை) குறித்த மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டமையினைத் தொடர்ந்து, பொலிஸாரின் மேலதிக விசாரணைகளில் குறித்த மாணவன் மேலும் சில மாணவர்களுடன் நீர்த்தேக்கத்திற்கு நீராடச் சென்றமை தெரியவந்தது. குறித்த மாணவன்…
-
- 0 replies
- 229 views
-
-
கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்றுவந்த நால்வர் தப்பியோட்டம்: தீவிர தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார் தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 4கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம், ஐதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரவிக்கின்றன. தெலுங்கானா மாநிலம்- சார்லபள்ளி சிறையிலுள்ள கைதிகள் 4பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்கள் அனைவரும், செகந்திராபாத்திலுள்ள காந்தி வைத்தியசாலையிலுள்ள கொரோனா சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில்,கைதிகள் 4 பேரும் நேற்று முன்தினம் அதிகாலையில் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர். குறித்த நான்க…
-
- 0 replies
- 229 views
-
-
உலகின் உயரமான மனிதன் - தினசரி வாழ்வில் சந்திக்கும் சிக்கல் கட்டுரை தகவல் எழுதியவர்,ஃபவர் நுன்னு பதவி,பிபிசி செய்திகள் பிட்ஜின் 24 நிமிடங்களுக்கு முன்னர் உலகின் உயரமான மனிதராக வடக்கு கானாவை சேர்ந்த ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆனால் உயரத்தை அளக்க போதிய வசதிகள் இல்லாததால், அவரின் சாதனையை உறுதி செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. உள்ளூரில் இருக்கும் மருத்துவமனையில், இவரின் உயரத்தை துல்லியமாக அளக்க உதவும் கருவிகள் இல்லாத காணப்படுகிறது. "அளக்க டேப் இல்லை" வடக்கு கானாவில் உள்ள ஒரு உள்ளூர் மருத்துவமனைக்கு சமீபத்தில் வழ…
-
- 1 reply
- 229 views
- 1 follower
-
-
ஒரே நாளில் இத்தனை பேருக்குப் பிறந்தநாளா? கின்னஸ்ஸில் இடம்பிடித்த குடும்பம் பாகிஸ்தானைச் சேர்ந்த குடும்பமொன்று ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் கின்னஸ் சாதனையொன்றைப் படைத்துள்ளது. பாகிஸ்தானின் லர்கானா பகுதியைச் சேர்ந்தவர் அமீர் அலி. இவரது மனைவி குதேஜா. இவர்களுக்கு 19 முதல் 30 வயதுடைய 7 குழந்தைகள் உள்ளனர். இதில் பெண் இரட்டையர்களும், ஆண் இரட்டையர்களும் அடங்குவர். இவர்கள் 9 பேருமே ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி அன்று பிறந்துள்ளனர். இந்நிலையில் இது தற்பொது உலக சாதனையாக மாறி இருப்பதாக கின்னஸ் அமைப்புஅறிவித்துள்ளது. இதற்கு முன்பு அமெரிக்காவில் கம்மின்ஸ் என்பவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 குழந்தைகள் இச் சாதனையைப் படைத்திருந்தனர். அவர்கள் பெப…
-
- 0 replies
- 229 views
-
-
ஆசிரியர் அறைந்ததால்... செவிப்பறை பாதிப்பு – யாழ் வைத்தியசாலையில், மாணவன்! ஆசிரியர் அறைந்ததால் செவிப்பறை பாதிப்படைந்து தரம் 10 ல் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழில் உள்ள பிரபல கல்லூரி ஆசிரியரே கடந்த செவ்வாய்க்கிழமை இவ்வாறு அறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாணவன் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவரது செவிப்பறை சவ்வு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பொலிஸ் பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1283212
-
- 0 replies
- 229 views
-
-
அவுஸ்திரேலியாவில் வினோதம் : வீதியை ஆக்கிரமித்த சிவப்பு நண்டுகளால் போக்குவரத்து தடை ! 25 Oct, 2025 | 11:09 AM அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவு தேசியப் பூங்காவில் (Christmas Island National Park) வசிக்கும் இலட்சக்கணக்கான சிவப்பு நண்டுகள் (Red Crabs), தங்களின் வருடாந்திர இனப்பெருக்கப் பயணத்தின் காரணமாகச் வீதிகளை ஆக்கிரமித்துள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடக்கும் ஒரு வினோதமான இயற்கை நிகழ்வாகும். இந்தச் சிவப்பு நண்டுகள் கிறிஸ்மஸ் தீவின் காட்டுப் பகுதிகளில் சிறிய குழிகளை அமைத்து வாழ்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில், இனப்பெருக்கப் பருவம் வரும்போது, இலட்சக்கணக்கான ஆண் மற்றும் ப…
-
-
- 4 replies
- 229 views
-
-
கழிவு நீரிலிருந்து சிங்கப்பூரில் பியர் தயாரிப்பு ! -சி.எல்.சிசில்- சிங்கப்பூரில் கழிவு நீரிலிருந்து பியர் தயாரிக்கப்பட்டுள்ளது . கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு சுத்தமான நீர் ஆக்கப்படுகிறது . இவ்வாறு மறுசுழற்சி செய்யப்படும் குடிநீர் பிராண்ட் நியூவாட்டர் (NEWater) எனப்படுகிறது. இந்தக் குடிநீரை பியர் தயாரிப்புக்கு பயன்படுத்துகின்றனர். சிங்கப்பூரில் தேசிய நீர் நிறுவனத்துடன் இணைந்து உள்ளூர் மதுபான நிறுவனமொன்று இந்தச் சிறப்பு பியரை அறிமுகப்படுத்தியுள்ளது. கழிவு நீரில் இருந்து தயாரிக்கப்பட்டதா? என்ற சலசலப்பு இருந்தாலும், சிங்கப்பூர் முழுவதும் இந்த சிறப்பு பியர் பற்றிய பேச்சுதான் …
-
- 1 reply
- 228 views
-
-
48 வது தேசிய விளையாட்டு விழாவில் வடமாகாண வீரர் சாவகச்சேரியினைச் சேர்ந்த அருந்தவராசா புவிதரன் 5.11M உயரத்தினை கடந்து புதிய சாதனையினை நிலைநாட்டியுள்ளார் https://www.facebook.com/share/6mUGvkA5M2xtjZAt/
-
- 4 replies
- 228 views
-
-
கொரோனா வைரஸை வைத்து "ஏப்ரல் பூல்" ஜோக்ஸை பரப்ப கூடாது.. போலீஸ் எச்சரிக்கை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் நாளை ஏப்ரல் 1ம் தேதி முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கொரோனா வைரஸை வைத்து சமூக ஊடகங்களில் மக்களை முட்டாளாக்கும் நையாண்டி பதிவுகளை பரப்ப கூடாது என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.ஒவ்வாரு ஆண்டும் ஏப்ரல் 1ம் தேதி முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுகிறது இந்த நாளில் நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்களை முட்டாளாக்கும் விதமாக ஏதேனும் இல்லாத ஒரு பொய்யை சொல்லி நம்ப வைத்து பின்னர் அது இல்லை என்று நையாண்டி செய்வது மக்களின் வழக்கம்.காலமாற்றத்தால் சமூக வலைதளங்கள் மூலம் ஒருவருக்கு ஒருவர் முட்டாளாக்கும் விதமாக கிண்டல் பதிவுகள், பொய்யான நையாண்டி பதிவுகளை பரப்புவா…
-
- 0 replies
- 228 views
-
-
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி ஒருவர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி ஒருவர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மருத்துவ பீடத்தை சேர்ந்த திருலிங்கம் சாருகா என்ற முதலாமாண்டு மாணவி ஒருவரே நேற்று மாலை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .சுன்னாகத்தினைச் சேர்ந்த குறித்த மாணவி உடுவில் மகளிர் கல்லூரியில் முதன்மையான மாணவியாக திகழ்ந்துள்ளார். குறித்த கல்லூரியில் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் மருத்துவத் துறைக்குத் தெரிவாகி பாடசாலைக்கு பெருமை சேர்த்தவர் என்றும் அண்மையில் வெளியாகிய பல்கலைக்கழக பரீட்சை முடிவுகளிலும் நிறைவான புள்ளிகளைப் பெற்றிருந்தவர் என்றும…
-
- 0 replies
- 228 views
-
-
காகங்கள் உணவருந்த உணவகம் திறப்பு லண்டனை சேர்ந்த சார்லஸ் கில்மோர் என்பவர் காகங்களின் மீது அன்பு கொண்டவர். இதன் காரணமாக, காகங்கள் உணவருந்துவதற்காக உணவகம் ஒன்றினை ஆரம்பித்துள்ளார். அதில், காகங்களின் உணவான புழுக்கள் மற்றும் கரப்பான் பூச்சிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த உணவகத்தினை வேடிக்கை பார்க்க வரும் பொதுமக்களுக்கு காகம் வடிவிலான பிஸ்கெட்டினை செய்து கொடுத்து வருகிறார். http://kumariexpress.com/காகங்கள்-உணவருந்த-உணவகம்/
-
- 0 replies
- 228 views
-
-
ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலை கிராமம் பூதிநத்தம். இங்குள்ள மக்கள் திடீரென்று மதுபாட்டில்களை பொதுவெளியில் உடைத்தது ஏன்? இங்குள்ள மது பிரியர்கள் 15 கிலோ மீட்டர் சென்று பாபப்பாரப்பட்டி அரசு மதுபான கடைக்கு சென்று தான் மது வாங்கி குடிக்க வேண்டும். இதை பயன்படுத்தி பூதிநத்தம் , பெரியூர், பிக்கிலி, கொல்லப்பட்டி, புதுகரம்பு, உள்ளிட்ட மலை கிராம பகுதிகளில் சிலர் சட்ட விரோதமாக அரசு மதுபானங்களை பெட்டி பெட்டியாக பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு சிலர் விற்பனை செய்தனர். 24 மணி நேரமும் தங்கு தடையின்றி மது கிடைப்பதால் கல்லூரி மாணவர்கள், இளம் வயதினர், கூலி வேலைக்கு செல்லும் தொழிலா…
-
- 0 replies
- 228 views
- 1 follower
-
-
ஒபாமாவிற்கே சவால் விட்ட மகிந்தவின் வட்டச் செயலாளர்…. July 19, 20159:22 am சில தினங்களின் முன்னர் அநுராதபுரத்தில் ஆரம்பித்த மகிந்தவ ஆதரவு அணியின் முதலாவது பிரசார கூட்டத்தில் உள்ளூரில் உள்ள எதிரணியினர் தொடக்கம் அமெரிக்காவிலுள்ள பராக் ஒபாமா வரை அனைவரிற்கும் சாவல் விடுத்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. மகிந்தவின் வெற்றியை ரணில் மட்டுமல்ல ஒபாமா கூட தடுக்க முடியாதென கூறி கிச்சுகிச்சு மூட்டியுள்ளார் உதய கம்மன்பில. அங்கு உரையாற்றிய கம்மன்பில – ‘ஜனாதிபதியின் உடலில் பச்சை இரத்தம்தான் ஓடுகிறதென்ற சந்தேகம் கடந்த ஜனவரியிலேயே எனக்கு ஏற்பட்டு விட்டது. அது அண்மைய உரையின் மூலம் உறுதியாகிவிட்டது. ஜனாதிபதியின் உரையுடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பினர் ஓரணிக்கு வந்துவிட்டனர். எம்ம…
-
- 1 reply
- 227 views
-
-
உத்தரபிரதேசத்தில்... கிணற்றில் தவறி விழுந்த, 13 பெண்கள் உயிரிழப்பு! உத்தரபிரதேச மாநிலத்தில் கிணற்றில் தவறி விழுந்து 13 பெண்கள் உயிரிழந்துள்ளனர். திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த பெண்கள் அங்கிருந்த கிணற்று பலகை மீது அமர்ந்திருந்த நிலையில், பலகை உடைந்து விழுந்ததால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 13 பெண்கள் உயிரிழந்துள்ள நிலையில், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், குறித்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து ருவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரில் நட…
-
- 0 replies
- 227 views
-
-
ஈக்வாட்டார் நாட்டின் லாஸ் ரியோஸ் மாகாணத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென அந்த விமானத்தின் மீது ராட்சத பறவை ஒன்று மோதியது. பறவையின் காலும், இறக்கையும் மோதியதில் விமானத்தின் காக்பிட் அறை சேதமடைந்தது. இதில் கண்ணாடிகள் சிதறி விழுந்ததில் விமானி படுகாயம் அடைந்தார். அவரது முகத்தில் இரத்தம் கொட்டியது. உடனே அவர் விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது. விமானம் தரை இறங்கியதும், விமானி இரத்தம் சொட்ட, சொட்ட விமானத்தில் இருந்து வெளியே வந்தார். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. விமானத்தின் மீது மோதிய பறவை ஆண்டியன் காண்டன் வகை இராட்சத பறவையாக இருக்க…
-
- 0 replies
- 227 views
- 1 follower
-
-
ஆண் வேடமிட்டு, 3 பெண்களை மணந்த.. ஆந்திரா இளம்பெண் சிக்கினார். ஆண் போல வேடம்போட்டுக் கொண்டு 3 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய கில்லாடி ஆந்திரா இளம்பெண் போலீசில் சிக்கியிருக்கிறார். ஆந்திராவின் புலிவேந்துலா மில் ஒன்றில் பணியாற்றிய நபர், 17 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை காட்டி திருமணம் செய்திருக்கிறார். திருமணம் செய்த உடனேயே வெளியூருக்கு செல்வதாக கூறிவிட்டு எஸ்கேப்பாகிவிட்டார். 2 மாதங்களாகியும் அந்த நபர் திரும்பாததால் பெற்றோரிடம் சிறுமி தெரிவித்தார். இது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அந்த நபரை சொந்த ஊருக்கு தந்திரமாக வரவழைத்த போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில்தான் சம்பந்தப்பட்ட நபர் ஒரு இளம்பெண் தெரியவந்தது போலீசாருக்கு பெரும்…
-
- 1 reply
- 227 views
-
-
தனது பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டதை எதிர்த்து பயனாளர் தொடர்ந்த வழக்கில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையை இழப்பீடு வழங்க பேஸ்புக் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் கொலம்பஸ் நகரை சேர்ந்தவர் ஜெசன் கிரவ்பொர்ட். வழக்கறிஞரான ஜெசனின் பேஸ்புக் கணக்கு கடந்த 2022ஆம் ஆண்டு முடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் கூறுகையில், நான் ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்து எனது செல்போனில் பேஸ்புக் பக்கத்தை திறந்தேன். ஆனால், எனது கணக்கு முடக்கப்பட்டுள்ளது. நான் தடை செய்யப்படுவதாக பேஸ்புக் தெரிவித்தது. எனது கணக்கு முடக்கப்பட்டதற்காக நீளமான விளக்கத்தை அது கொடுத்தது. அதில், குழந்தைகள் தொடர்பான ஆபாச பதிவுகளை பார்த்ததாகவும், அது பேஸ்புக் விதிகளை மீறும…
-
- 1 reply
- 227 views
- 1 follower
-
-
டிப்பரால் மோதப்பட்டு பொலிஸ் அதிகாரி கொலை; கள்ளமணல் கும்பலின் திட்டமிட்ட செயல்! குருநாகல் – கொபெய்கனே பகுதியில் இன்று (29) அதிகாலை கள்ள மணல் டிப்பரின் சாரதி ஒருவர் தனது டிப்பரால் பொலிஸ் அதிகாரியை வேண்டுயென்றே மோதிக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆற்றுப்பகுதி ஒன்றில் கள்ள மாணல் அகழப்படுவதாக கிடைத்த தகவல் தொடர்பில் ஐவர் கொண்ட பொலிஸ் குழு விசாரணை செய்ய சென்ற போது மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் தனது டிப்பரை ஓட்டி சென்று பொலிஸ் அதிகாரி மீது மோதயுள்ளார். சம்பவத்தில் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட இரு பிள்ளைகளின் தந்தையான 32 வயதுடைய பொலிஸார் அதிகாரி மரணமடைந்துள்ளார். இந்நிலையில் மறைந்திருந்த குறித்த டிப்பரின் சாரதி இன்று காலை நிக்கவரட்டியவில் கைது செ…
-
- 0 replies
- 226 views
-