Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. சரிதம் இணையத்தளம் தொடங்கப்பட்டது முதல் இற்றைவரையில் தேசியத்திற்கான பயணத்தில் பயணிக்கும் தலைவர்களின் பாதைகள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்தே வந்திருக்கின்றது. இதனால் ஆசியர் பிடத்திற்கு நெருக்கடிகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆசியர் பீடத்தினர் துரோகிகள் என்றும் சில கட்சிகளின் எடுபிடிகள் என்றும் கூட விமர்சிக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆனாலும் கூட பொது நோக்கம் அறுவடை என்பதால் தனிப்பட்ட விமர்சனங்களைப் பெரிதாக தலைகளில் தூக்கிக் கொண்டு சரியானதைப் பிழை என்றோ, பிழையானதை சரி என்றோ தடம் மாறுவதற்கு சரிதம் ஆசியர் பீடம் தயார் நிலையில் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தொடர்பில் சரிதம் இணையத்த தளத்தினால் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களில் முக்கியமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஒரு…

  2. வீட்டில் கழிப்பறை இல்லாததால் வேறொருவரை மணந்த மணப்பெண்! மணமகன் வீட்டில் கழிவறை கட்டப்படாததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்ணுக்கு மற்றொருவருடன் திருமணம் முடிந்தது. இந்த வினோத சம்பவம் உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது. கான்பூரை சேர்ந்தவர் நேகா (25). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இருவீட்டாரும் திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாட்டை செய்யத் தொடங்கினர். அப்போது மணப்பெண் சார்பில் மணமகன் வீட்டாருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. மணமகன் வீட்டில் கழிவறை கட்டப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. மணமகன் வீட்டிலும் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. திருமணம் நெருங்கிய நிலையிலும் மணமகன் வீட்டில் கழிவறை கட்டுவதற்க…

  3. பென்சில்வேனியா: கொரோனா பாதித்தவர்களை கண்டுபிடிக்க அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இது தொடர்பாக வாஷிங்டன்போஸ்ட் நாளிதழில் வெளியான செய்தி: கொரோனா வைரஸ் தொடர்புடைய வாசனையை வைத்து, கொரோனாவை நாயால் கண்டுபிடிக்க முடியுமா என்பது குறித்து லேப்ரடர் இன நாய்களுக்கு பென்சில்வேனியா பல்கலையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோன்ற பயிற்சி, லண்டனில் உள்ள பல்கலை ஒன்றிலும் நடந்து வருகிறது. இதற்கு முன்னர், மனிதர்களுக்கு மலேரியா தொற்று குறித்து அறிய பயிற்சி நடந்தது. இந்த சோதனை வெற்றி பெறும் பட்சத்தில் நாய்கள் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படும். விமான நிலையங்கள், தொழில் நிறுவனங்கள், மருத்துவமனைகளுக்கு வருபவர்களை கண்காணிக்கும். கொரோனாவை கண்…

    • 0 replies
    • 307 views
  4. ஆயுதங்களுடன் நுழைந்து மூளாயில் கொள்ளை யாழ்ப்பாணம் – மூளாய் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் இன்று (21) அதிகாலை 1.45 மணியளவில் ஆயுதங்கள் மூலம் அச்சுறுத்தி தங்க அபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது. இதன்போது சுமார் 16 1/2 பவுன் தங்கம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாள் மற்றும் கோடரிகளுடன் வீட்டினுள் நுழைந்த 06 பேரே வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தி கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://newuthayan.com/ஆயுதங்களுடன்-நுழைந்து-மூ/

  5. நாட்டின் ஆரோக்கியமான அரசியல் பயணத்துக்கும் இருப்புக்கும் பொருத்தமானதும், முக்கியத்துவம் வாய்ந்ததுமான சில கருத்துக்கள் மூன்று முக்கியமான தலைவர்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கருத்துகளை அறிந்து கொள்வதும், ஆராய்ந்து பார்ப்பதும் ஒவ்வொருவரதும் கவனத்துக்கு உட்பட்டதாகும். ஒருபுறத்தில் இந்தத் தலைவர்கள் எந்தத் திசையை நோக்கிப் பயணிக்கின்றனர் என்பதையும் நோக்க முடிகிறது. மறுபுறம் நாட்டு மக்கள் தலைவர்கள் தொடர்பில் கொண்டிருக்கும் நிலைப்பாடுகள் சரியானதுதான் என்பதையும் எண்ணிப்பார்க்க முடிகிறது. முதலாவது கருத்தைச் சொல்லி இருப்பது நாட்டின் முதற் பிரஜையான ஜனாதிபதி. அடுத்த கருத்தை வெளியிட்டிருப்பது இரண்டாவது பிரஜையான பிரதமர். அடு…

  6. உலகிலேயே 5 பேருக்கு மாத்திரம் இருந்த விசித்திர நோய் : சிறுமி ஒருவருக்கும் தொற்றியதால் அதிர்ச்சி உலகில் 5 பேருக்கு மாத்திரமே காணப்பட்ட விசித்திர தோல் நோய், பங்களாதேஷில் உள்ள சிறுமி ஒருவருக்கும் ஏற்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பங்களாதேஷின் வட பகுதியில் உள்ள ஒரு பின் தங்கிய கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமியான சஹானா, இ.வி என அழைக்கப்படும் எபிடெர்மோடிஸ்பிலேசியா வெரிசிபோர்மஸ் (epidermodysplasia verruciformis) எனும் அபூர்வ தோல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். குறித்த நோய் காரணமாக சிறுமியின் முகம், காது, நாடி மற்றும் மூக்கு உள்ளிட்ட உறுப்புகளில், மரம் போன்று சிறிய அளவில் சதை வளர்ந்து வருகின்றது. …

  7. யாழில், நீண்ட கால குடும்ப பகை காரணமாக காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தமையால், காதலர்கள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்க்க முனைந்த நிலையில் காதலன் உயிரிழந்துள்ள நிலையில், காதலி அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உறவு முறையான 19 வயது இளைஞனும் , 17 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இரு வீட்டாருக்கும் இடையில் நீண்ட காலமாக குடும்ப பகை நிலவி வந்துள்ளது. இந்நிலையில் தமது பிள்ளைகள் காதலிப்பதனை அறிந்த பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் காதலர்கள் இருவரும் தவறான முடிவெடுத்து உயிர் மாய்க்க முனைந்துள்ளனர். இந்நிலையில், இருவரையும் மீட்டு…

    • 0 replies
    • 205 views
  8. செத்து மடிவோமே அன்றி இலங்கைக்கு திரும்பப் போக மாட்டோம். துபாயில் சிக்கியுள்ள ஈழ அகதிகளின் கண்ணீர். --------------------------------------------------------------------- சர்வதேச நாடுகளுக்கு துபாய் ஈழ அகதிகளின் வேண்டுகோள். எங்களுக்கு புகலிடக் கோரிக்கை தர மறுக்கும் சர்வதேச குடியேற்ற நாடுகளே.!! எங்களுக்கு வீடு வாசல், வசதி வாய்ப்புக்கள், சுகபோக வாழ்க்கை எதுவும் தர வேண்டாம். உங்கள் நாடுகளில் ஏதாவது ஒரு காட்டுப் பகுதியில் ஒரு சிறிய இடம் தந்தாலே போதும், நாம் உயிரோடும், பாதுகாப்போடும், நிம்மதியோடும் வாழ்வதற்கு! ---------------------------------------------------------------------- இவ்வாறு துபாய் சிறையில் வாடும் ஈழத்து உறவுகள் கோரிக்கை வைத்திருப்பது தமிழ் சமூகத…

  9. ரஷ்யாவின் பெலராஸ் பகுதியில் கடந்த 1887ஆம் ஆண்டில் பிறந்த மார்க் சாகல் என்ற பிரபல ஓவியர் நவீன யுகத்தின் முன்னோடியாகக் கருதப்பட்டவர். இவர் பின்னாளில் பிரான்ஸ் நாட்டில் குடியேறி அங்கு 1985 ஆம் ஆண்டு இறந்தார். இவருடைய ஓவியங்கள் பல மில்லியன் பவுண்டுகள் மதிப்பிற்கு விற்கப்பட்டன. கலை உலகில் இவரது நற்பெயரைக் காப்பற்றும் வண்ணமாக இவரது பேரப்பிள்ளைகளே சாகல் குழு என்ற அமைப்பினை நிர்வகித்து வருகின்றனர். இங்கிலாந்தின் லீட்ஸ் பகுதியைச் சேர்ந்த மார்டின் லங்(63) என்ற தொழிலதிபர் கடந்த 1992 ஆம் ஆண்டு 1,00,000 பவுண்டு கொடுத்து இந்த ரஷ்ய ஓவியரின் ஓவியம் ஒன்றினை வாங்கியிருந்தார். 1909 -10 ஆம் ஆண்டுக்காலத்தில் வரையப்பட்டது என்று வாங்கப்பட்ட இந்த ஓவியம் பற்றித் தெரிந்து கொள்வதற்கா…

  10. “எட்டே கால் இலட்சணமே, எமனேறும் பரியே மட்டில் பெரியம்மை வாகனமே கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே ஆரையடா சொன்னாய் அது” - ஔவையார் – (எட்டு இலக்கத்தை ‘அ’ எனவும் கால் என்ற கணக்கை ‘வ’ என்றும் தமிழ் எழுத்துக்களில் குறிப்பிடப்படும். அதன் படி எட்டே கால் இலட்சணம் என்றால் எமனுடைய வாகனமான எருமைக்கடாவாகும். பெரியம்மை வாகனம் என்பது மிகவம் அவலட்சணமான யாழி வாகனமாகும். கூரையில்லா வீடு என்பது மூளையில்லாத மனிதனைக் குறிக்கிறது. குரலாமன் தூதுவன் என்றால் இராமாயணத்தில் இராம தூதனாக விளங்கிய அனுமான் என்ற குரங்கைச் சுட்டிக்காட்டுகிறது. இதைத் தமிழில் வசைக் கவி எனக் கூறுவர். இது காளமேகம் செய்தியின் அறிமுகம்) காளமேகம் செய்திகள்: தயாரித்து வழங்குபவர் ‘பொய்யா மொழி’ இனி தலைப்புச் செய்திகள்! …

  11. அழும்போது கண்ணில் இருந்து இரத்தம் வரும் அபூர்வ சிறுமி ...(காணொளி இணைக்கப்பட்டுள்ளது) வியாழன், 26 ஆகஸ்ட் 2010 06:26 கடுமையான துக்கத்தை வெளிப்படுத்துவதற்காக ரத்தக் கண்ணீர் வடித்தேன் என சிலர் கூறுவதுண்டு. ஆனால், இங்கிலாந்தில் வசிக்கும் ஒரு இந்திய சிறுமி உண்மையிலேயே ரத்தக் கண்ணீர் வடிக்கிறார். உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ட்விங்கிள் திவிவேதி. 13 வயதான இவர் இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இந்த சிறுமி அழ ஆரம்பித்தால், கண்ணில் கண்ணீர் வருவதற்கு பதில் ரத்தம் வடிகிறது. அதுமட்டு மல்லாமல் கை, கால், தலை என உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து ரத்தம் வடிகிறது. இந்த பிரச்னையால் பள்ளிப் படிப்பையும் தொடர முடியாமல் உள்ளார். ஏற்கனவே படித்து வந்த பள்ளி நிர்வாகம் வெளியி…

  12. ஆங்கிலேயர்கள் புரிந்து கொண்ட அளவிற்குக் கூட இந்திய அரசு புரிந்து கொள்ளவில்லை ! இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் எல்லா தேசிய இனங்களின் மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ள இந்திய ரூபாய் ஆங்கிலேயர்கள் 1910 ல் வெளியிட்டது. இந்த ரூபாய்த் தாளில் தமிழில் எண் இருப்பதை நீங்கள் காணலாம். மொழி சம உரிமையை ஆங்கிலேயர்கள் புரிந்து கொண்ட அளவிற்குக் கூட இந்தி அரசு புரிந்து கொள்ளவில்லை என்பது தான் வேதனை. இந்திய ரூபாய்த் தாள்கள் அந்தந்த மாநிலத்தின் பெருமை சாற்றும் வகையில் அந்தந்த மாநில மொழியிலும் எண்களிலும் அச்சிட்டு வழங்க இந்திய அரசு முன்வர வேண்டும். காந்தியை மட்டுமே போற்றும் இந்தி அரசு நம்முடைய தலைவர்களையும் சான்றோர்களையும் ரூபாய்த் தாள்களில் கொண்ட வர அனுமதி அளிக்க வேண்டும்.

    • 0 replies
    • 666 views
  13. மனிதப் பிறவி மகா உன்னதமானது. உயிர் பிறப்பின் இறுதிநிலை மனிதப்பிறப்பாகுமென சொல்லிச் செல்கிறார்கள், இறுதி இருப்பை உய்த்துணர்ந்து கொண்டவர்கள். துன்பத்தை பரிசளிப்பவர்கள் எம்மில் ஏராளமானோர்கள் இருக்கின்றார்கள். நாம் கேட்காமலேயே துன்பத்தை பரிசளிப்பவர்கள் அப்பால் சிரித்து மகிழ்ந்து கொள்கின்றார்கள். அகமும் புறமும் மலர மகிழ்ச்சியை பரிசளிப்பவர்கள் மானுடத்தின் மகத்துவங்கள். எம்முடனே நடமாடிச் சென்றவர்கள், மகிழ்ச்சியை பரிசளித்தவர்கள் எனில் இறுதி இருப்பை சுகப் பதிவாக்கிய மானுட மகானுபாவர்கள். இயந்திர மயமாகிவிட்ட விஞ்ஞான உலகில் மானுடம் குறித்த தேடல்கள் அரிதானவை. காலத்தின் காலமாதலுக்கு உயிர் சேகரித்த உன்னதமானவர்கள்; வறட்சிப் பிடிப்பின் நீர்த்திவலைகள். அடித்து அழவைக்க முடியும் பிடித்து வைத…

  14. விண்வெளியில் ஒரு பரிசோதனை . . டோக்கியோ, மார்ச் 23: ஜப்பானிய விண்வெளி வீரர் ஒருவர் நடத்திய சோதனையில் வியக்கத்தகு உண்மை வெளியாகி இருக்கிறதாம். . விண்வெளியில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச ஆய்வு மையத்திற்கு ஜப்பானிய விண்வெளி வீரர் டகாவோ டோய் சென்றிருக்கிறார். அங்கு விண்வெளி ஆய்வை மேற்கொண்டு வரும் அவர், தனக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில் ஜாலியான பரிசோதனை ஒன்றை செய்து பார்த்தாராம். அதாவது பூமராங் ஆயுதத்தை விண்வெளி யில் வீசி பார்த்தாராம். பூமியில் பயன்படுத்தும் போது இலக்கை தாக்கி விட்டு மீண்டும் செலுத்தியவர் இடத்திற்கே வந்து சேர்ந்து விடும் இந்த ஆயுதம் விண்வெளியிலும் அவ்வாறே திரும்பி வந்திருக்கிறதாம். அவருடைய நண்பரான பூமராங் சாம்பியன் கேட்டுக் கொண்டதற்கு இண…

    • 0 replies
    • 904 views
  15. கோகுலம் விருந்தினர் மாளிகையில் நன்கொடையைச் செலுத்தி ரசீதைப் பெற்றுக்கொள்ளலாம். அங்கு அவருக்கு முன்னுரிமை அடிப்படையில் வி.ஐ.பி. பிரேக் தரிசன அனுமதி வழங்கப்படும். திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய தினமும் லட்சக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். ஆனால், எல்லோரும் 40 அடி தள்ளி நின்றுதான் சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை இருந்து வந்தது. ஆனால், இப்போது 10,000 ரூபாய் பணம் கட்டினால் திருப்பதி வேங்கடேசப் பெருமாளை அருகில் நின்று தரிசிக்கலாம். தீபாவளி இனிப்பாக இனிக்கும் இந்தச் செய்தியை விரிவாகப் பார்ப்போம். Tirupati திருமலை திருப்பதி வேங்கடசப் பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு, சர்வ தரிசனம், நேர ஒதுக்கீட…

    • 0 replies
    • 291 views
  16. ரஷியாவில் எரிவாயு நிலையம் ஒன்றில் மிளகாய் பொடி தூவிய திருடனை, பெண் ஊழியர் துடைப்பத்தால் அடித்து துரத்தும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. நோவோஸிபிரிக் என்ற இடத்தில் உள்ள எரிவாயு நிலையத்தின் பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்த திருடன், மிளகாய்ப்பொடியை தூவி அங்கிருந்த ஊழியரை விரட்டிவிட்டு பணத்தை திருடுகிறான். https://www.msn.com/en-ca/video/watch/employee-at-siberian-gas-station-kicking-robber-out-with-mop/vi-BBY52aT அவனை பிடிக்க முயன்ற மற்றொரு பெண் ஊழியர் மீதும் மிளகாய் பொடியை தூவ முயற்சிக்கிறான். உடனடியாக சுதாரித்துக் கொண்ட அந்த பெண் ஊழியர், அருகில் இருந்த துடைப்பத்தை எடுத்து திருடனை அடித்து அங்காடியில் இருந்து விரட்டுகிறார். பெண்ணின் இந்த துணிச்சலான …

    • 0 replies
    • 626 views
  17. இன்றைய நாட்களில் இது போன்ற செய்திகள் எங்களை வந்தடையும் போது எங்கள் முகத்தில் ஒரு புன்னகை தானாக வந்து விடுகிறது. மனது சந்தோசப் படுகிறது. “கோரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்டது இத்தாலி. கொரோனோவை கட்டுப் படுத்த முடியாமல் இத்தாலி திண்டாடுகிறது” என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருக்கும் போது இத்தாலி நாட்டில் Rimini நகரத்தில் இருந்து ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்திருக்கிறது. 101 வயதான முதியவர் ஒருவர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக இத்தாலியில் Emilia-Romagna இல் உள்ள Infermi மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். அந்த முதியவர் பூரண குணமடைந்து புதன் கிழமை (25.03.2020) மருத்துவமனையில் இருந்து வெளியேறி தனது குடும்பத்தாருடன் இணைந்து கொண்டார் என்றொரு…

  18. நியூயார்க், குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் அதனை மூச்சு திணறடிக்க வைத்து கொலை செய்துள்ளார் அந்த கல் மனது படைத்த தாய். அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலம் அலேக்சாண்டர் கவுண்ட்டியை சேர்ந்தவர் அய்ஷியா மேரி (வயது 22) அவருக்கு கடந்த மாதம் 20-தேதி அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கடந்த 23-தேதி இரவு குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளது. குழந்தையை சமா்தானம் படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட மேரி குழந்தையின் அழுகையை நிறுத்த முடியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மேரி குழந்தையை தனது நெஞ்ச்சோடு வைத்து இறுக்கி அணைத்துள்ளார். இதனால் குழந்தை இறந்து போனது. மேரியின் செயலை கண்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார்…

  19. கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள இந்த கால கட்டத்தில், வாசகர்கள் பத்திரிகை படிக்கும் நேரம் அதிகரித்து உள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால், அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து பணிகளும் முடங்கி உள்ளன. இதனால் மக்கள் வீடுகளிலேயே இருக்கிறார்கள். இந்த சூழ்நிலை மக்களிடம் உள்ள வாசிப்பு பழக்கத்தில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை அறிந்து கொள்வதற்காக, ‘அவான்ஸ் பீல்டு அண்டு பிராண்டு சொலூசன்ஸ்’ என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த 13-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்களிடம் தொலைபேசி மூலம் நடத்தப்பட…

  20. விசாரணைக்கு தடையாக தரிஷா இருந்திருந்தால் நடவடிக்கை எடுக்க முடியும் – நீதிமன்றம் கடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் நாடகமாடியதாக குற்றம்சாட்டப்படும் வழக்கில் தமது விசாரணையை தடுக்க முயன்றிருந்தால் ஊடகவியலாளர் தரிஷா பஸ்டியனுக்கு எதிராக விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று இன்று (21) சிஜடிக்கு கொழும்பு பிரதம நீதிபதி லங்கா ஜயரத்ன தெரிவித்துள்ளார். இன்றைய இந்த வழக்கு விசாரணையின் போது ஊடகவியலாளர் தரிஷாவின் லப்டொப் தொடர்பில் விவாதிக்கப்பட்டது. இதன்போது தரிஷாவின் லப்டொப் ஜூன் 4ம் திகதி சிஐடியால் கைப்பற்றப்பட்டது என்று அவரது சார்பான சட்டத்தரணி சிராஷ் நூர்டீன் மன்றில் தெரிவித்தார். இதனை மறுத்து மன்றுரைத்த சிஐடியினர் ஜூன் பத்தாம் திகதியே லப்டொப்பை கைப்ப…

  21. பூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம் சுவாசக் கருவியை அணிந்து கொண்டு பலரும் கடலுக்குள் ஜாலியாக மீன்களுக்கு நடுவே வளைய வளைய நீந்தி வருகின்ற காட்சிகளை டிவியில் டிஸ்கவரி போன்ற சேனல்களில் பார்த்திருப்பீர்கள். இதைப் பார்க்கும் போது நமக்கும் இது போன்று கடல் நீருக்குள் நீந்துவதற்கு ஆசையாக இருக்கும். இப்படி கடலில் நீந்துபவர்கள் எவ்வளவு ஆழம் வரை செல்வர் என்று உங்களால் ஊகித்துக் கூற முடியுமா? வெறும் 10 மீட்டர் ஆழம் தான். இது பெரிய ஆழமில்லை. ஆனால் இதற்கே நிபுணர்களின் மேற்பார்வையில் பயிற்சி தேவை. ஸ்குபா என்ற சுவாசக் கருவியை அணிந்து கொண்டு ஆழத்தில் இறங்குவதில் கைதேர்ந்த நிபுணரான நுனோ கோம்ஸ் 2005 ஆம் ஆண்டில் உலக சாதனையாக 318 மீட்டர் ஆழம் வரை இறங்கினார். இச்சாதனையை நி…

  22. மண்ணில் புதைந்த தொழிலாளிகள்: சமார்த்தியமாக மீட்ட சக தொழிலாளிகள் 5 மணி நேரங்களுக்கு முன்னர் காங்கோவில் மண்ணில் புதைந்த தொழிலாளிகளை சக தொழிலாளிகள் கைகளால் மண்ணிலை தோண்டி மீட்டனர் காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் உள்ள தங்க சுரங்கத்தில் கன மழையை தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டது. சுரங்கத்தில் வேலை பார்த்துகொண்டிருந்த 9 தொழிலாளிகள் நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்தனர். அங்கிருந்த சக தொழிலாளிகள் உடனடியாக தங்களது கைகளால் மண்ணை தோண்டி தொழிலாளிகள் வெளியே வருவதற்கு வழியை ஏற்படுத்து தந்தனர். அதன்வழியாக 9 தொழிலாளிகளும் பத்திரமாக வெளியே வந்தனர். பாதுகாப்பு நடைமுறைகள், முறையான உபகரணங்களின் பற்றாக்குறை போன்றவை உள்ளூர் சுரங்கங்களில் ஏற்படும் இத்தகைய சிக்கல்களுக்…

  23. ஜோத்பூரை பீதியில் உறைய வைத்த சத்தம்: விடை தெரியாமல் நீடிக்கும் மர்மம் [ புதன்கிழமை, 27 மே 2015, 09:13.45 AM GMT +05:30 ] உலகில் தினமும் பல்வேறு வித்தியாசமான விடயங்கள், புரியாத புதிர்கள், குழப்பமான நிகழ்வுகள் நடந்த கொண்டே தான் இருக்கின்றன. அந்த வகையில் கடந்த 2012ம் ஆண்டு, டிசம்பர் 18ம் திகதி ஜோத்பூரில் நடந்த சம்பவம் தற்போது வரை ஒரு புதிராக உள்ளது. அந்த அற்பதமான சம்பவம் எதனால் நடந்தது என்பது இன்னும் மறைக்கப்பட்ட வரலாறாகவே இருக்கிறது. காலை சரியாக 11.25 நிமிடத்தில் காதை பிளக்கும் சத்தத்துடன் அணு குண்டு வீசப்பட்டது போல், ஒரு விமானம் போன்ற பொருள் வானத்தில் இருந்து விழுந்தது போல ஒரு வித்தியாசமான சத்தம் கேட்டது. அ…

    • 0 replies
    • 383 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.