Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் 5.2 கிலோகிராம் எடையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வழக்கமாக ஆண் குழந்தை எனில், அதிகபட்சம் 3.2 கிலோகிராம் எடை என்ற அளவில் தான் பிறக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் முதல் முறையாக, 5.2 கிலோகிராம் எடையில் ஆரோக்கியமாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பு கர்ப்பகாலத்தில் அந்த பெண், எடுத்துக் கொண்ட உணவு முறைகளே குழந்தையின் எடை அதிகமாக இருக்கக் காரணம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். சிசேரியன் சிகிச்சை தங்களுக்கு சவாலாக இருந்ததாகவும் குழந்தையும், தாயும் நலமாக உள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். எங்கள் வீட்டுக்கு விநாயகரே பிறந்…

  2. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சீனாவில் எஸ்சிஓ கூட்டத்திற்கு முன்பு வட கொரியாவின் உயர் தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் சந்திப்பு கட்டுரை தகவல் பாரத் ஷர்மா பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சீன தலைநகர் பெய்ஜிங்கில் அதிக அளவு விவாதிக்கப்படும் ஒரு உயர்மட்ட சந்திப்பு நடைபெற்றது. அது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் வட கொரியாவின் உயரிய தலைவர் கிம் ஜாங் உன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு ஆகும். இந்த இரு தலைவர்களின் சந்திப்பில் நடந்த உரையாடல்கள் விவாதிக்கப்படுகிறது, ஆனால் அதைவிட அதிக கவனம் ஈர்த்திருப்பது இந்த சந்திப்பு முடிந்த பிறகு நடந்த ஒரு நிகழ்வு. சந்திப்பு முடிந்து இரு தலைவர்களும் அங்கிருந்து புறப்பட்டதும், வட கொரியாவின்…

  3. போலி இலக்கத் தகடுகளுடன் பயணித்த சொகுசு காருடன் பெண் மருத்துவர் கைது! போலி இலக்கத் தகடுகளுடன் கூடிய சொகுசு காரை செலுத்தி வந்த பெண் மருத்துவர் ஒருவர், கண்டி பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி வாரியபொல சுமங்கல மாவத்தையில் பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து நடத்தப்பட்ட திடீர் சோதனையின் போது இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. சந்தேக நபரின் கணவரும் ஒரு மருத்துவர், இந்த காரின் உரிமை அவரது கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் அதில் உள்ள உரிமத் தகடுகள் அவரது சகோதரர்களில் ஒருவருக்குச் சொந்தமான காரின் உரிமத் தகடுகள் என்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேகத்திற்குரிய மருத்துவர் கண்டி, பேராதனையில் உள்ள ஒரு பெ…

  4. பேருந்திலிருந்து தவறி வீழ்ந்த பெண் வைத்தியர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! பெல்மதுல்லை பகுதியில் கடந்த ஆகஸ்ட் 19 ஆம் திகதி தனியார் பேருந்து ஒன்றிலிருந்து தவறி வீழ்ந்த 32 வயதுடைய பெண் வைத்தியர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் 14 நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் உயிரிழந்தார். இறந்தவர் இரத்தினபுரியைச் சேர்ந்த வைத்தியர் பி. மதரா மதுஷானி என அடையாளம் காணப்பட்டுள்ளார். மட்டக்களப்பு-கொழும்பு பிரதான சாலையில் தனியார் பேருந்தில் அவர் பயணம் செய்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. பெல்மதுல்லை பொலிஸ் நிலையத்திற்கு அருகில், குறித்த பேருந்தின் சாரதி எதிர்பாராத விதமாக திடீரென பிரேக் பிடித்ததால் அவர் பேருந்தில் இருந்து கீழே வீழ்ந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர் பல…

  5. Published By: Digital Desk 3 29 Aug, 2025 | 01:39 PM கென்யாவில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒருவர் யானையின் தும்பிக்கையில் பியரை ஊற்றி அருந்தக் கொடுக்கும் வீடியோகளை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், இது தொடர்பில் சமூக ஊடகங்களில் சர்ச்சை வெடித்ததை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த சுற்றுலா பயணி வனவிலங்கு சரணாலயத்தில் பிரபலமான 'டஸ்கர்' (Tusker) பியரை குடித்துவிட்டு, மீதமுள்ளதை யானைக்குக் கொடுப்பது போல் படமாக்கப்பட்டு "தந்தம் உள்ள நண்பனுடன் ஒரு டஸ்கர் பியர்," என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இதனை அவதானித்த கென்யர்கள் எதிர்ப்பை வெளியிட்டதை தொடர்ந்து அந்த பதிவு அவரது கணக்கிலிருந்து நீக்கப்பட்டது. பிபிசி இந்த வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து, அதன் உண்மை தன்மையை …

  6. ஐக்கிய நாடுகள் சபையில் போர் நடந்த இடங்களில் வேலை செய்தவருடன் ஆவுடையப்பன் செவ்வியின் போது ஆரம்பத்தில் பல நாடுகளில் வேலை செய்த அனுபவத்தைப் பற்றி பேசுகிறார்கள். 17வது நிமிடத்திலிருந்து கச்சதீவு பற்றிய பேச்சு வருகிறது. மீன்பிடி பிரச்சனை பற்றியும் பேசுகிறார்கள். கச்சதீவை இந்தியா கொடுத்திருக்க கூடாது என்று வாதாடும் ஆவடையப்பன் ஒரு சுட்டக்காய் நாடு எப்படி இந்தியாவை மிரட்டி வாங்கிக் கொண்டது என்று ஆச்சரியப்படுகிறார். தமிழ்களுக்கு தமிழீழம் அமைவதை இலங்கை ஒத்துக் கொண்டாலும் இந்தியா ஒத்துக் கொள்ளாது என்று அடித்துக் கூறுகிறார். சீனாவில் இருந்து இலங்கை பாகிஸ்தான் நேபால் மாலைதீவு போன்றவையை எப்படி பிரித்து வைக்கலாம் என்பதில் இந்தியா முயற்சி உள்ளது. பாகிஸ்தானில் தோற்றுவிட்டோம். ம…

  7. கலேவெல பகுதியில் நபரொருவர் கொலை; கடற்படை சிப்பாய் கைது! கலேவெல, மகுலுகஸ்வெவ பகுதியில் நபரொருவர் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். பொலிஸாரின் கூற்றுப்படி, 119 அவசர தொலைபேசி இலக்கத்தின் மூலம் ஒருவர் தாக்கப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டதாகக் கூறி முறைப்பாடு அளிக்கப்பட்டது. விசாரணையின் போது, அந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பாதிக்கப்பட்டவரை, மற்றொரு நபர் மோட்டார் சைக்கிளில் சென்று வழிமறித்து, தாக்கி, பின்னர் கொலை செய்ததாக தெரியவந்துள்ளது. இறந்தவர் தேவஹுவ பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக 26 வயதுடைய கடற்படை சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவருடன் நீண்டகாலமாக ஏற்பட்ட தகராறு காரணமாக சந்…

  8. அம்மாவாகும் ரோபோக்கள் 2025 ஓகஸ்ட் 25 , பி.ப. 02:39 வாடகைத் தாய்க்கு பதிலாக, கர்ப்ப காலங்களில் ரோபோக்களை உருவாக்கி மனித குழந்தைகளைப் பெற்றெடுக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். குறித்த ரோபோக்களில் செயற்கை கருப்பையைப் பொருத்தி, ஒரு குழாய் மூலம் ஊட்டச்சத்துக்கள் செலுத்தப்படும் எனசீன விஞ்ஞானி ஜாங் கியூ இஃபெங் தெரிவித்துள்ளார். இருப்பினும் குறித்த தொழில்நுட்பம் மீது பல்வேறு நெறிமுறை சார்ந்த கேள்விகளும் எழுந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் குறித்த திட்டத்தை எதிர்வரும் 2026ஆம் ஆண்டுக்குள் அறிமுகப்படுத்த சீனா திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப் படுகின்றது. https://www.tamilmirror.lk/science-tech/அம்மாவாகும்-ரோபோக்கள்/57-363457

  9. Published By: VISHNU 21 AUG, 2025 | 03:35 AM மட்டக்களப்பில் இந்திய சினிமாவில் வரும் காட்சி போல நீதிமன்றத்துக்கு சென்று வெளியே வந்த பெண் ஒருவரை பெண் ஒருவர் உட்பட்ட ஒரு குழுவினர் இணைந்து அவரின் வாயை பொத்தி இழுத்துச் சென்று ஆட்டோவில் ஏற்றிய போது அவரை காப்பாற்ற சென்ற உறவினரை அடித்து கீழே தள்ளிவிட்டு பெண்ணை கடத்தி சென்ற சம்பவம் செவ்வாய்க்கிழமை (19) காலையில் நீதிமன்றத்துக்கு முன்னால் உள்ள வீதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இத பற்றி தெரியவருவதாவது; 27 வயது பெண் ஒருவர் 29 வயதுடைய ஆண் ஒருவரை காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் கடந்த 2023 பதிவு திருமணம் செய்துவிட்டு தனது பெற்றோர் வீட்டில் இருந்துள்ளார் அவ்வாறே காதலன் அவரது பெற்றோர் வீட்டில் இருந்துள்ளனர். இந்த நிலையில்…

  10. திருப்பதி கோயிலுக்கு 121 கிலோகிராம் தங்கத்தை நன்கொடையாக அளிக்க முன்வந்த தொழிலதிபர். திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ தங்கத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக அளிக்க முன்வந்து இருப்பதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 121 கிலோ தங்கத்தை நன்கொடையாக அளிக்க தொழில் அதிபர் ஒருவர் முன்வந்து இருப்பதாக ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். இது தொடர்பாக சந்திரபாபு நாயுடு கூறியிருப்பதாவது ”தொழிலதிபர் ஒருவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 121 கிலோ தங்கத்தை நன்கொடையாக அளிக்க முன்வந்துள்ளார். இதன் மதிப்பு இந்திய மதிப்பில் 140 கோடியாகும். புதிதாக தொடங்கிய நிறுவனம் வெற்றிகரமாக இயங்குவதால் தங்கத்தை நன்கொடையாக அளிக்க முன்வந்து இருக்கிறார். தனது நிறுவனத…

  11. உலகில் முதன் முதலில் நடைபெற்ற மனித உருவ ரோபோ ஒலிம்பிக் போட்டி! உலகில் முதன்முறையாக நடத்தப்படும் மனித உருவ ரோபோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி சீனாவின் பீஜிங்கில் இடம்பெற்றது. 15 ஆம் திகதி முதல் இடம்பெறும் இந்த போட்டிகள் நேற்று வரை நடைபெற்றது. சீனா, அமெரிக்கா, ஜேர்மனி, பிரேசில், ஜப்பான் உள்ளிட்ட 16 நாடுகளைச் சேர்ந்த 280 அணிகள் பங்கேற்ற இந்த நிகழ்வில், 500க்கும் மேற்பட்ட ரோபோக்கள் பங்கேற்றுள்ளன. உலகில் மனித உருவ ரோபோக்கள் மட்டுமே பங்கேற்று நடைபெற்ற முதல் ஒலிம்பிக் போட்டி இதுவாகும் . இந்த போட்டியில், கால்பந்து, குத்துச்சண்டை , ஜிம்னாஸ்டிக்ஸ், உள்ளிட்ட 26 விளையாட்டுக்கள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1443489

  12. உலகை சுற்றிவரும் பயணத்திலுள்ள அவுஸ்திரேலிய 15 வயதான இளம் விமானி கொழும்பில் தரையிறங்கினார்! உலகைச் சுற்றி வந்த இளைய துணை விமானியாக மாறுவதற்கான வரலாற்று முயற்சியில் இறங்கியுள்ள 15 வயதான பிரிஸ்பேனைச் சேர்ந்த பைரன் வாலர் (Byron Waller) கொழும்பில் பாதுகாப்பாக தரையிறங்கினார். கொழும்பு, இரத்மலானை விமான நிலையத்தை (CIAR) வந்தடைந்த அவரை விமான நிலைய அதிகாரிகள் ஊக்கத்துடன் வரவேற்றனர். இந்தியப் பெருங்கடலில் 11 மணி நேர விமானப் பயணத்திற்குப் பின்னர் ஞாயிற்றுக்கிழமை (17) பைரன் வாலர் விமான நிலையத்தை வந்தடைந்ததாக CIAR ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. பைரன் 45,000 கிலோ மீட்டர்கள், ஏழு கண்டங்களிலும் 30 நாடுகளை சுற்றிவர சுமார் இரண்டு மாதங்கள் எடுக்கும் ஒரு பயணத்தை மேற்கொள்கிறார். …

  13. 10 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ள மாம்பழம்! யாழ்ப்பாணம் நாகர்கோவில் வடக்கு முருகையா தேவஸ்தான மாம்பழத் திருவிழாவில் மாம்பழம் ஒன்று 10 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. மேற்படி ஆலயத்தின் கொடியேற்ற திருவிழா கடந்த எட்டாம் திகதி ஆரம்பமாகிய நிலையில் இதன் ஏழாம் திருவிழாவான மாம்பழத் திருவிழா நேற்று (14) இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து இரவு முருகனுக்கும் விநாயகப் பெருமானிற்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில் உலக சுற்றி முதலில் வலம் வருபவருக்கே மாம்பழம் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து முருகப் பெருமான் மயில் ஏறி உலகைச் சுற்ற செல்ல விநாயகப் பெருமான் சிவனையும் உமாதேவியாருமான வலம் வந்து மாம்பழத்தை பெற்றுக்கொண்டார். இச் சரித்திரத்தை பிரதிபலிக்கும் நாடகம் …

  14. இலங்கையில் கஞ்சா பயிரிட வெளிநாட்டவர்களுக்கு அனுமதி! Vhg ஆகஸ்ட் 13, 2025 இலங்கை அரசாங்கம் முதல் முறையாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கஞ்சா பயிரிட அனுமதித்துள்ளது. இதன் முதன்மை நோக்கம் மருந்து உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காகப் பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்படும் கஞ்சா சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம், நாட்டிற்கு குறிப்பிடத்தக்க அந்நியச் செலாவணியை ஈட்டுவதாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 7 வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அனுமதி இந்தத் திட்டத்திற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட 37 விண்ணப்பங்களில், தகுதிவாய்ந்த 7 வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு 6 மாத காலத்திற்கான தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் அவர்களின் திட்டங்கள…

  15. Published By: DIGITAL DESK 3 14 AUG, 2025 | 11:59 AM கண்டி, பேராதனை பகுதியில் கடையொன்றில் சிறிய சொக்லேட் பக்கற்றை திருடிய 67 வயதுடைய முதியவர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையை செய்த கடையின் உரிமையாளரும் அவரது ஊழியரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பேராதனையில் உள்ள ஈரியகம பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் பிள்ளைகள் திருமணமாகி வேறு பகுதிகளில் குடியேறிய பின்னர் அவர் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். குறித்த நபர் சம்பவத்தன்று உணவுப் பொருட்கள் வாங்குவதற்கு கடைக்குச் சென்றுள்ளார். அங்கு இரண்டு பேர் அவரை கடைக்குள் இழுத்துச் சென்று தாக்கியுள்ளனர். ஏன…

  16. பழனி காதலனுக்காக கள்ளப்படகில் ராமேஸ்வரம் வந்த இலங்கை இளம்பெண்.. மண்டபத்தில் காத்திருந்த ட்விஸ்ட்! ராமேஸ்வரம்: பழனியில் உள்ள தன் காதலனை பார்ப்பதற்காக இலங்கை இளம்பெண் ஒருவர் தன் தங்கச் செயினை விற்று அந்த பணத்தில் கள்ளப் படகில் ராமேஸ்வரம் வந்தடைந்துள்ளார். எப்படியாவது தனது காதலனை கரம் பிடித்தே ஆக வேண்டும் என நினைத்த விதுர்ஷியாவை போலீசார் கைது செய்து அகதிகள் முகாமில் அடைத்துள்ளனர். இந்தியா வருவதற்கு விண்ணப்பித்த போது அவருக்க்கு விசா வழங்க இந்திய தூதரகம் அனுமதி மறுத்து இருக்கிறது. இதனால் தான் அவர் கள்ளப்படகில் வந்துள்ளார். இலங்கையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தமிழகத்தில் அகதிகள் வசித்த போது இங்குள்ள இளைஞருடன் காதல் வயப்பட்டு இருக்கிறார். சொந்த நாட்டிற்கு சென்ற போதும் காதலனை மறக்…

  17. ஆசிரியர் கையில் 15,000 ராக்கிகளைக் கட்டிய மாணவிகள்..! பீகாரைச் சேர்ந்த பிரபல ஆசிரியர் ஒருவரின் கையில் 15,000 ராக்கிகளை அவரிடம் படித்த மாணவிகள் கட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கான் என அழைக்கப்படும் குறித்த ஆசிரியர் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றை அமைத்து குறைந்த கட்டணத்தில் அதிக மாணவர்களை படிக்க வைத்து, போட்டி தேர்வுகளாக பயிற்சி அளித்து வருகிறார். அவரிடம் படித்த பல மாணவர்கள் தற்போது அரசு அதிகாரிகளாக உள்ளனர். இந்நிலையில் வடமாநிலத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் சகோதர-சகோதரிகளுக்கு ராக்கி கயிறு கட்டி அன்பை வெளிப்படுத்தும் ரக்‌ஷா பந்தன் தினத்தன்று, ஆசிரியர் கானிடம் படித்த சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவிகள் அவரை நேரில் சந்தித்து ராக்கி கயிறு கட்டிய…

      • Like
    • 1 reply
    • 131 views
  18. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 20 வயது இளைஞன் ஒருவன், குரோஷியா - செர்பியா நாடுகளுக்கிடையே வெர்டிஸ் என்ற சிறிய நாட்டை உருவாக்கியுள்ளதாக தி நியூயார்க் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த இளைஞன், குரோஷியாவிற்கும், செர்பியாவிற்கும் இடையிலான, டானூப் ஆற்றின் குறுக்கே 125 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள, உரிமை கோரப்படாத நிலத்தை, வெர்டிஸ் குடியரசு நாடாக அறிவித்து, அதன் ஜனாதிபதி நான் தான் என, தனக்கு தானே அறிவித்துள்ளார். அதிகார பூர்வ மொழிகளாக அதன் கொடி, அமைச்சரவை, நாணயம் மற்றும் 400 குடிமக்களைக் கொண்டுள்ள இந்த சிறிய நாடு, இப்போது இத்தாலியில் உள்ள வாடிகன் நகரத்திற்குப் பின், உலகின் இரண்டாவது சிறிய நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் அதிகார பூர்வ மொழிகளாக ஆங்கிலம், கு…

  19. AI பயனாளர்களின் நினைவுத் திறன் பாதிப்பு! ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல். செயற்கை நுண்ணறிவுத் தளங்களைப் பயன்படுத்துபவர்களது மூளையின் சிந்திக்கும் ஆற்றல் 47% குறைவடைந்து விட்டதாக அதிர்ச்சித் தகவலொன்று வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள தனியார் பல்கலைக்கழகமான மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (Massachusetts institute of technology ) செயற்கை நுண்ணறிவு தலமான chatgpt பயனாளர்களின் மூளையின் செயற்பாட்டை ஆராய்ந்து அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. கடந்த 4 மாதங்களாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் chatgpt பயன்படுத்துபவர்களின் மூளையின் சிந்திக்கும் ஆற்றல் 47% குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக chatgpt பயனாளர்கள் பலருக்கு சில நிமி…

  20. 05 AUG, 2025 | 05:00 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) தந்தைக்கும், சித்தப்பாவுக்கும் ஏற்றாட்போல் தீர்ப்பளிக்காத காரணத்தால் முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க சட்டவிரோதமான முறையில் பதவி நீக்கப்பட்டதை நாமல் ராஜபக்ஷ அறியாமல் இருப்பது வேடிக்கையாகவுள்ளது. தனியறையில் இருந்து சட்டக்கல்லூரி இறுதி பரீட்சையை எழுதிய நாமல் ராஜபக்ஷ முதலில் சட்ட ஏற்பாடுகளை தெளிவாக கற்றுக்கொள்ள வேண்டும் அதன் பின்னர் சட்ட ரீதியிலான தர்க்கங்களை முன்வைக்க வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05) நடைபெற்ற பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்கம் செய்வது …

  21. சூட்கேஸுக்குள் இருந்து 2 வயது குழந்தை மீட்பு; நியூஸிலாந்தில் சம்பவம்! பேருந்து ஒன்றிலிருந்த சூட்கேஸுக்குள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு வயது குழந்தை ஒன்று உயிருடன் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் நியூஸிலாந்தில் பதிவாகியுள்ளது. குறித்த குழந்தையை கைவிட்ட குற்றச்சாட்டில் நியூசிலாந்து பெண் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (03) கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை ஆக்லாந்திலிருந்து 60 மைல் வடக்கே உள்ள கைவாகாவில் திட்டமிடப்பட்ட ஒரு நிறுத்தத்தின் போது, ஒரு பயணி லக்கேஜ் பெட்டியை அணுக அனுமதி கேட்டதை அடுத்து, பேருந்து சாரதி பைக்குள் அசைவு ஒன்று ஏற்படுதை கவனித்தார். சாரதி, சூட்கேஸைத் திறந்தபோது, அவர்கள் அந்த 2 வயது பெண் குழந்தையை கண்டுபிடித்தனர். இதன்போது, குழந்தைய…

  22. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நாக்பூரில் நடைபெற்ற திருமண மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கட்டுரை தகவல் பாக்யஸ்ரீ ராவத் பிபிசிக்காக 2 ஆகஸ்ட் 2025, 06:04 GMT வட இந்தியாவில் 'கொள்ளைக்கார மணமகள்' சம்பவங்கள் நடப்பதை கேள்விப்பட்டிருப்போம். அதைப்பற்றி பல திரைப்படங்களும் எடுக்கப்பட்டுவிட்டன. அத்தகைய ஒரு நபர் தற்போது நாக்பூர் போலிஸால் கைது செய்யப்பட்டுள்ளார். இது வரை எட்டு பேரை திருமணம் செய்துள்ள அவர், அனைவரிடமும் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். நாக்பூரில் மூன்று காவல் நிலையங்களிலும், சத்திரபதி சம்பாஜி நகர், மும்பை மற்றும் பவனி காவல்நிலையங்கலிலும் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் திருமணம் செய்து கொண்ட எட்டு பேரும் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் …

  23. "அறுகம் குடா இலங்கையில் இருக்கின்றதென நான் நினைத்தேன் ஆனால் அது இஸ்ரேலின் டெல் அவிவ் போல காணப்படுகின்றது" : சமூக ஊடகத்தில் அவுஸ்திரேலிய டிஜே அதிர்ச்சி 01 AUG, 2025 | 11:29 AM இலங்கையின் அறுகம்குடாவில் இஸ்ரேலியர்களின் பிரசன்னமும் அவர்களின் வர்த்தக நடவடிக்கைகளும் அதிகரித்து வருவது குறித்து சர்வதேச டிஜே டொம் மொனாக்லே கரிசனை வெளியிட்டுள்ளார். நான் அறுகம் குடா இலங்கையில் இருக்கின்றது என நினைத்தேன், ஆனால் அது இஸ்ரேலின் டெல்அவிவ் போல காணப்படுகின்றது என இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ள வீடியோவொன்றில் அவர் தெரிவித்துள்ளார். அறுகம்குடா இஸ்ரேலியர்களுடையது என 5000 ஆண்டுகளிற்கு முன்னர் வாக்குறுதியளிக்கப்பட்டதா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அறுகம்குடாவில் காணப்படும் பல உணவகங்களின் படங்…

  24. பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா ஒரு குழந்தைக்கு 1500 டொலர்! பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட சீன அரசாங்கத்தின் முயற்சியாக நாடு தழுவிய ரீதியில் மூன்று வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைகளின் பெற்றோருக்கு ஆண்டுக்கு 3,600 யுவான் (£375; $500) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உதவித் தொகைகள், குழந்தைகளை வளர்ப்பதற்கான செலவைச் சமாளிக்க சுமார் 2 கோடி குடும்பங்களுக்கு உதவும் என்று அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. திங்களன்று (28) அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், பெற்றோருக்கு ஒரு குழந்தைக்கு மொத்தம் 10,800 யுவான் வரை வழங்கும். உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு மக்கள்தொகை நெருக்கடியை எதிர்கொள்வதால், அதிக குழந்தைகளைப் பெறுவதை ஊக்குவிப்பதற்காக சீனா முழுவதும்…

  25. பட மூலாதாரம்,ALOK CHAUHAN படக்குறிப்பு, பிரதீப் நேகி (இடது) மற்றும் கபில் நேகி (வலது) ஆகிய இரு சகோதர்களை சுனிதா சௌஹான் (நடுவில்) மணந்தார் கட்டுரை தகவல் சௌரப் சௌஹான் சிர்மெளரிலிருந்து பிபிசிக்காக 28 ஜூலை 2025 புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் ஹிமாச்சல் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டத்தின் ஷிலாயி கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற திருமணம் குறித்து விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குன்ஹாட் கிராமத்தைச் சேர்ந்த சுனிதா செளஹான் என்ற பெண், பிரதீப் நேகி, கபில் நேகி ஆகிய இரண்டு சகோதரர்களை மணந்தார். பட்டியலிடப்பட்ட பழங்குடியினராகப் பதிவுசெய்யப்பட்ட ஹாடி சமூகத்தின் 'ஜோடிதாரா' என்ற பழங்கால நடைமுறையின்படி இந்த பலதார திருமணம் நடைபெற்றது. உள்ளூர் மொழியில் 'ஜோடிதாரா' அல்ல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.