Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. கொழும்பில் பயண பைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட தலையில்லாத பெண்ணின் சடலம் யாருடையதென ஆரம்பத்தில் கண்டுபிடிக்க முடியா நிலை காணப்பட்டது. இதன் போது குறித்த சடலம் தொடர்பான தகவல்களை பெற பொது மக்களின் உதவியை நாடி தொலைபேசி இலக்கம் ஒன்று அறிவிக்கப்பட்டது. இந்த இலக்கத்திற்கு 200 அழைப்புகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்கள் மனைவிகள் அல்லது வீட்டை விட்டு ஓடிய மகள்களா என்பதனை உறுதி செய்வதற்கு பல்வேறு நபர்கள் மற்றும் வெளிநாட்டில் உள்ளவர்கள் உட்பட பலர் அழைப்பை மேற்கொண்டதாக வெல்லவீதி பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் அஜித் பேதுருஆராச்சி தெரிவித்துள்ளார். அத்துடன் உயிரிழந்த பெண்ணை அடையாளம் காண தங்கள் மனைவியா, மகளா என உறுதி செய்வதற்காக பலர் புகைப்படங்களையு…

  2. மூன்று பிள்ளைகளை அணைத்துக் கொண்டு கிணற்றுக்குள் குதித்த தாய் ! கிளிநொச்சி – வட்டக்கச்சி பிரதேசத்தில் தனது மூன்று பிள்ளைகளையும் அணைத்துக் கொண்டு கிணற்றுக்குள் தாய் ஒருவர் குதித்த நிலையில் அவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இதில் உயிரிழந்த ஒரு பிள்ளையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய குழந்தைகளின் உடல்களை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கணவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே குறித்த சம்பவம் இடம்பெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் இந்த சம்பவம் குறித்து தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://www.meenagam.com/மூன்று-பிள்ளைகளை-அணைத்து/

  3. யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவரின் தலைமையில் நூதன கொள்ளை! யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவரின் தலைமையில் நூதன கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த கொள்ளை கும்பல் முச்சக்கர வண்டி சாரதிகளை இலக்கு வைத்தே கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றது. இது குறித்து தெரிய வருவதாவது, யாழ்ப்பாணம் புறநகர் பகுதிகளான காக்கை தீவு, பொம்மைவெளி, ஓட்டுமடம் பகுதிகளில் வீதியில் நிற்கும் பெண் ஒருவர் வீதியால் வரும் முச்சக்கர வண்டிகளை மறித்து நகர் பகுதிக்கு செல்ல வேண்டும் என வாடகைக்கு அமர்த்துவார். பின்னர் பொம்மை வெளி பகுதியில் தனது உறவினர் வீடு ஒன்று உள்ளதாகவும், அங்கு முதலில் சென்று விட்டு நகருக்கு செல்வோம் என கூறி பொம்மை வெளி பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அழைத…

  4. நான் இறந்தால் சீமானை சிக்க வைக்க திட்டம் போட்டு இருக்கிறார்கள் -விஜயலஷ்மி பகீர் வாக்குமூலம்.

  5. (எம்.மனோசித்ரா) கொழும்பு - டாம் வீதியில் பயணபைக்குள்ளிருந்து மீட்கப்பட்ட சடலம் தொடர்பான விசாரணைகளில், பாலியல் குற்றம் எதுவும் பதிவாகவில்லை. எனினும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் 4 நாட்கள் விடுமுறையில் சென்றுள்ளமைக்கமைய இக்கொலை திட்டமிட்டு இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தினடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு மத்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த சந்திரசேகர தெரிவித்தார். குறித்த சந்தேகநபர் தங்கியிருந்த விடுதியிலிருந்து ஹங்வெல்ல பஸ் தரிப்பிடத்திற்கு சென்ற முச்சக்கர வண்டியிலிருந்து இரத்த மாதிரிகள் பெற்றப்பட்டுள்ளதாகவும், அதனை அடிப்படையாகக் கொண்டும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நிஷாந்த சந்திரசேகர தெரிவித்தார். ப…

  6. 8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் கைது – யாழில் சம்பவம்! யாழ்ப்பாணத்தில் 8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவ இடம்பெற்ற வீட்டுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சென்று குறித்த தாயாரை கைது செய்தனர். விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றில் தாயார் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண்ணின் கணவர் தொழிலுக்காக வெளிநாட்டுக்குச் சென்ற நிலையில், அவர் குழந்தையை எப்போதும் அடித்துத் துன்புறுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, குறித்த பெண்ணின் சகோதரன் குழந்தையை துன…

  7. கா.பொ.த.சாதாரண பரீட்சை எழுதும் ‘சுனாமி பேபி’ 22 Views கொரனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இன்று கா.பொ.த.சாதாரண தரப்பரீட்சை நாடளாவிய ரீதியில் ஆரம்பமானது. இன்றைய தினம் மாணவர்கள் பெரும் உற்சாகத்துடன் கா.பொ.த.சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றியதை காணமுடிந்தது. உலகத்தினையே தன்பால் ஈர்த்த சுனாமி பேபி எனப்படும் சுனாமியின்போது தெய்வாதீனமாக உயிர்தப்பிய ஜெயராஜா அபிலாசும் இன்று கா.பொ.த.சாதாரண பரீட்சைக்கு தோற்றினார். மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடத்தில் தற்போது வசித்துவரும் சுனாமி பேபி அபிலாஸ் இன்று செட்டிபாளையம் மகா வித்தியாலத்தில் கா.பொ.த.சாதாரண தரப்பரீட்ச…

  8. உடன்பிறவா சகோதரனால் தாக்கப்பட்ட சிறுவன் உயிரிழப்பு March 1, 2021 உடன்பிறவாத சகோதரனால் தாக்கப்பட்ட சிறுவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். சிறுவனின் தலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என்று உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் கிளிநொச்சி கச்சேரி வீதியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் தயா (வயது -7) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார். கொல்லப்பட்ட சிறுவனின் தாயார் கடந்த 20ஆம் திகதி மட்டக்களப்பு சென்றுள்ளார். சிறுவனுக்கு மூத்த சகோதரனும் (ஒன்பது வயது) இளைய சகோதரனும் (நாலு வயது) உள்ளனர். தாயார் மட்டக்களப்புக்கு சென்றதை அடு…

  9. மனநிலை பாதிக்கப்பட்ட மகன் தாக்கியதில் தந்தை உயிரிழப்பு! யாழ்.புத்தூர் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட மகனின் தாக்குதலுக்கு இலக்கான தந்தை உயிரிழந்துள்ளார். புத்தூர் இராச பாதை வீதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவர் உயிரிழந்துள்ளார். அவரது மகன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், நேற்று இரவு தந்தை – மகனுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டதை அடுத்து மகன் தாக்கியதில் தந்தை உயிரிழந்தார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. அதேவேளை தாக்குதலை மேற்கொண்ட மகன் தலைமறைவாகியுள்ளதாகவும் , சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் , மகனை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் அ…

  10. கொரோனா பாஸ்போர்ட் ஏன் வழங்கப்படுகின்றது? 22 Views கடந்த ஓராண்டு காலமாக கொரோனா பெருந்தொற்று சூழல் உலகெங்கும் கோடிக்கணக்கான மக்களின் பயணத்திட்டங்களை முற்றிலுமாக சீர்குலைத்திருக்கிறது. இந்த சூழலில், கொரோனா பாஸ்போர்ட் என்ற சொல்லாடல் சர்வதேச மட்டத்தில் பேசப்பட்டு வருகின்றது. கொரோனா பாஸ்போர்ட் என்றால் என்ன? கொரோனா பாஸ்போர்ட் என்பது கொரோனா பெருந்தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக தடுப்பூசி செலுத்தியிருந்தால் சம்பந்தப்பட்ட நபருக்கு கொரோனா பாஸ்போர்ட் வழங்கப்படும் எனக் கூறப்படுகின்றது. இது டிஜிட்டல் முறையில் வழங்கப்படும் எனவும் அல்லது நடைமுறையில் உள்ள பாஸ்போர்டுடன் ஒரு சான்றிதழாக வழங்கப்படும் எனவும் சொல்லப்படும் நிலை…

  11. அம்பாறை பொத்துவில்லில் இருந்து பதின்ம வயது சிறுமியை அழைத்து வந்து முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் குடும்பம் நடத்தி வந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் பொத்துவில் கிராமத்தில் வசித்து வரும் இளைஞன் ஒருவன் தன் காதலியான 14வயது சிறுமியை அழைத்துக்கொண்டு முல்லைத்தீவு சிலாவத்தை மாதிரிகிராம பகுதியில் குடும்பம் நடத்தியுள்ளார். குறித்த சிறுமியினை காணவில்லை என பெற்றோர் அம்பாறை பொத்துவில் பகுதி பொலிசாருக்கு முறைப்பாடு செய்ததையடுத்து பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞனையும் சிறுமியையும் கைது செய்துள்ளனர். முல்லைத்தீவில் 14வயது சிறுமியுடன் குடும்பம் நடத்தியவர் கைது! | Virakesari.lk

  12. தற்கொலைக்காக ஐஸ்கிரிமில் விஷம் கலந்த பெண் ; எதிர்பாராதவிதமாக தங்கை - மகன் பலி காசர்கோடு கேரள மாநிலம் காசர்கோடு கன்கங்காட்டு பகுதியைச் சேர்ந்தவர் வர்ஷா( 25) . வர்ஷாவிற்கு திருமணமாகி 5 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் காசர்கோட்டில் உள்ள கன்ஹங்கட் பகுதியில் இருக்கும் தனது தாய் வீட்டுக்கு மகனை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார் வர்ஷா. கடந்த 11 ஆம் தேதி இரவு , தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில், ஐஸ் கிரீம் ஒன்றை வாங்கி அதில் எலி மருந்தைக் கலந்துள்ளார் வர்ஷா . பின் அதனை உட்கொண்ட வர்ஷாவிற்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தனது அறைக்குச் சென்று படுத்துவிட்டார் வர்ஷா. ஆனால் மீதமிருந்த எலி மருந்து கலந்த ஐஸ் கிரீமை அதே இடத்தில் வைத்தி…

  13. தற்கொலையைத் தடுக்க தனித்துறையை உருவாக்கியது ஜப்பான்! ஜப்பானில் தற்கொலையைத் தடுக்க வேண்டும் என்பதற்காக ‘தனிமை’ எனும் தனித்துறை உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதற்கு டெட்சுஷி சாகாமோட்டோ என்பவரை அமைச்சராக ஜப்பான் அரசாங்கம் நியமித்துள்ளது. இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘சமூக தனிமை மற்றும் தனிமைப்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கும் மக்களுக்கிடையிலான உறவுகளைப் பாதுகாப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என கூறினார். கொரோனா நோய்த் தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு, வேலை வாய்ப்பின்மை மற்றும் சமூக தனிமைப் படுத்தல் காரணமாக, கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குத் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஜப்பான் பெண…

  14. ஆர்டர் செய்த உணவுடன் வந்த குளிர்பானத்தில் சிறுநீர் - மன்னிப்புக் கோரிய பிரபல நிறுவனம்! வெ.கௌசல்யா பாட்டிலில் சிறுநீர் லண்டனில், ஆர்டர் செய்த உணவுடன் வந்த கோக் பாட்டிலில், சிறுநீர் நிரப்பப்பட்டிருந்தது வாடிக்கையாளரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உலக அளவில் பிரபலமான உணவு டெலிவரி நிறுவனம் ஹலோஃப்ரெஷ் (HelloFresh). மீல் கிட் (Meal Kit) எனப்படும், வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் இடு பொருள்களைக் கொண்டு உணவு தயார் செய்து வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் சேவையை இந்நிறுவனம் வழங்கிவருகிறது. கோக் பாட்டிலில் சிறுநீர் அப்படியொரு மீல் கிட்டை ஆர்டர் செய்த லண்டனைச் சேர்ந்த ஆலிவர் மெக்மன…

  15. ஆசிரியர் விடுத்த மிரட்டல்! நடந்தது என்ன? வெளியான தகவல்! எழுச்சி பெறும் மாணவ சமூகம்! மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபல ஆண்கள் பாடசாலையின் ஆசியை ஒருவர் மாணவனுக்கு தொலைபேசியூடாக கடுமையான மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை எற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பில் இயங்கும் பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றில் இரசாயனவியல் பாடம் கற்பிக்கும் ஆசிரியை ஒருவர் அதே பாடசாலையில் கற்கும் மாணவனுக்கு தொலைபேசியூடாக மிரட்டல் விடுத்துள்ளார். குறித்த மாணவன் ஆசிரியையின் மகனுடன் சண்டை போட்டதாகத் தெரிவித்தே இவ்வாறு மிரட்டல் விடுத்துள்ளார். எனினும் முன்னரும் பலதடவைகள் தனது மகனுடன் தகாத வார…

  16. குப்பைப் பொதியினுள் வீசப்பட்ட 12பவுண் தங்க நகை உரிமையாளரிடம் ஒப்படைப்பு February 22, 2021 அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையில் திண்மக் கழிவகற்றல் சேவையின் போது ஒரு வீட்டின் குப்பைப் பொதியினுள் தவறுதலாக வீசப்பட்ட 12பவுண் தங்க நகை உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 20ஆம் திகதி சம்மாந்துறை சின்னப்பள்ளி வீதியில் குறித்த வீட்டு உரிமையாளர் தனது வீட்டில் திருமண நிகழ்வு இடம் பெற்ற நிலையில் 12பவுண் தங்க நகையை தன்னையுமறியாமல் குப்பையோடு குப்பையாக கழிவுப் பொதிக்குள் வீசியுள்ளார். அப்பொதி சம்மாந்துறை பிரதேச சபையின் கழிவகற்றல் வாகனத்திற்கு வழங்கப்பட்ட நிலையில், வீட்டு உரிமையாளர் வீட்டில் இருந்த நகையை தேடிய போது காணாமல் போயிருப்பது கண்டறிப்பட்டது…

  17. அப்போது ரகத் ஹுசைனுக்கு வயது வெறும் 15 தான். திருமணத்தின் போது, இராக் மற்றும் இரானுக்கு இடையே போர் நடந்து கொண்டிருந்தது. 1996ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது 25ஆம் வயதில் ரகத் தனது குடும்ப உத்தரவின் பேரில் விவாகரத்து பெற்றார். விவாகரத்து பெற்ற இரண்டு நாட்களுக்குப் பிறகு அவரது கணவர் கொல்லப்பட்டார். ரகத் ஹுசைன், சதாம் ஹுசைனின் ஒன்றுவிட்ட சகோதரர் ஹுசைன் கெமையில் அல் மஜித்தை மணந்தார். அப்போது ஹுசைன் கெமையில், சதாம் ஹூசைனின் பாதுகாப்புப்பணியில் இருந்தார். சதாமின் இரண்டாவது மகள் ராணா சதாமின் திருமணம், ஹுசைன் மெமையிலின் சகோதரர் சதாம் கெமையில் அல் மஜித்துடன் நடந்தது. சதாமின் இரண்டு மகள்களின் திருமணம், விவாகரத்து மற்றும் கணவர்களின் கொலை பற்றிய கதை மிகவும் சோகமான…

  18. சம்பவம் நடந்த அடுத்த மூன்று, நான்கு நாள்களில் தனது குடும்ப நபர்கள் 7 பேரை ஷப்னம் கொலை செய்தது தெரிய வந்தது. மேலும், கொலை செய்வதற்கு ஷப்னமின் காதலர் சலீம் உதவியதும் தெரியவந்தது. உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோகாவை சேர்ந்தவர் ஷப்னம். இவருக்கும் இவர் காதலர் சலீமுக்கும் தூக்குத் தண்டனை வழங்கி, 2008-ம் ஆண்டு அம்ரோகா மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தொடர்ந்து அலகாபாத் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர் இருவரும். இரண்டு நீதிமன்றங்களுமே தண்டனையைக் குறைக்க இயலாது என்று மறுக்க, குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினர். அதுவும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இந்நிலையில், ஷப்னம் மற்றும் சலீமை தூக்கிலிடுவதற்கான மரண தண்டனைக்கான ஆணை விரைவில் பிறப்…

  19. அடிக்கடி கிருமிநாசினியை பயன்படுத்தினால் கைரேகை அழியும் என எச்சரிக்கை கொரோனா வைரசில் இருந்து தப்பிக்க அடிக்கடி கிருமி நாசினியை பயன்படுத்தினால் கைரேகை அழியும் ஆபத்து இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கொரோனா வைரசில் இருந்து தப்பிக்க அடிக்கடி கிருமி நாசினியை பயன்படுத்தினால் கைரேகை அழியும் ஆபத்து இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இது தொடர்பாக அகமதாபாத்தை சேர்ந்த அன்சுல்வர்மன் என்ற தோல் மருத்துவ நிபுணர் கூறியிருப்பதாவது:- தற்போது பல்வேறு அலுவலகங்களில் பயோ மெட்ரிக் முறை மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. அடிக்கடி கிருமி நாசினியை பயன்படுத்துவதால் கைரேகை அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. சானிடைசர் உள்பட கிருமி நாசினியை அடிக்கடி பயன்படுத்…

    • 2 replies
    • 371 views
  20. யாழ்.மணியந்தோட்டம் இளைஞனின் வங்கி கணக்கிற்கு கனடாவிருந்து வைப்பிலிடப்பட்ட நூறு கோடி ரூபாய் பணம்..! அதிர்ச்சியில் மத்தியவங்கி.! யாழ்.மணியந்தோட்டம் பகுதியை சேர்ந்த இளைஞனின் வங்கி கணக்கில் சுமார் பல நூறு கோடி ருபாய் பணம் கனடாவில் இருந்து வைப்பிலிடப்பட்டுள்ள நிலையில் குறித்த இளைஞனுக்கு தெரிந்த யாரேனும் ஒருவர் இணைய வங்கி ஊடாக சுருட்டிய பணம் இவ்வாறு வைப்பிலிடப்பட்டிருக்கும் என்ற கோணத்தில் புலனாய்வு பிரிவு சந்தேகம் வெளியிட்டுள்ளது. சுமார் 490 கோடி கனேடியன் டொலர் என்ற அடிப்படையில் 4 தடவைகளுக்கு குறையாமல் வைப்பிலிடப்பட்டுள்ளது. இந்த பணம் இலங்கைக்குள் அனுமதிக்கப்பட்டால் இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியடையும் என கூறப்படுகிறது. மே…

  21. வலிகாமம் பாடசாலையில் மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் -விசாரணை ஆரம்பம் 27 Views வலிகாமம் பாடசாலையில் மாணவர்கள் பாலியல் நீதியில் துன்புறுத்தப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியான தகவலையடுத்து விசாரணை மேற்கொள்ளுமாறு யாழ் மானித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வலிகாம கல்விபயிலும் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்கள் மீது அதே பாடசாலையில் கல்வி கற்ப்பிக்கும் ஆண் ஆசிரியர்கள் சிலரால் பாலியல் துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவிக்கும் நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. …

  22. சிவராத்திரி அனுட்டிக்கப்படும் மாசி மாதத்தை ‘சைவத்தமிழ் மறுமலர்ச்சி’ மாதமாக கடைப்பிடிக்க வேண்டுகோள் 14 Views மகா சிவராத்திரி அனுட்டிக்கப்படும் மாசி மாதத்தை (13/02/2021-13/03/2021) சைவத்தமிழ் மறுமலர்ச்சி மாதமாக கடைப்பிடிக்க சைவத்தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. சைவத்தமிழர்களினுடைய ஆதி பரம்பொருளான சிவபெருமானைக்குரிய தலைசிறந்த விரதமான மகா சிவராத்திரி மாசி மாதத்தில் அனுட்டிக்கப்படுகின்றது. அந்தரீதியில் சைவத்தமிழ் மக்களிடையே ஆன்மீக கலாச்சார அறநெறி விழிப்புணர்வுகளை செயற்றிட்டங்களை முன்னெடுக்குமாறு அனைத்து ஆலயங்களிடமும் சைவத்தமிழ் அமைப்புக்களிடமும் சிவதொண்டர்களிடமும் சைவத்தமிழர் பேரவை வேண்டுகோள் விடுக்கின்றது. …

  23. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- புலத்சினி மீண்டும் இலங்கை வந்துள்ளார்? விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சிஐடியினருக்கு உத்தரவு உயிர்த்த ஞாயிறுதாக்குதலுடன் தொடர்புடையவர் என கருதப்படும் சார என அழைக்கப்படும் புலத்சினி ராஜேந்திரன் இந்தியாவிலிருந்து மீண்டும் இலங்கை வந்துள்ளார் என வெளியாகும் தகவல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஆணைக்குழு சிஐடியினருக்கு உத்தரவிட்டுள்ளது. கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்டவரின் மனைவி சாரா என அழைக்கப்படும் புலத்சினி இராஜேந்திரன் இந்தியாவிற்கு தப்பியோடியிருந்த நிலையில் மீண்டும் கடல்மார்க்கமாக இலங்கை திரும்பியுள்ளார் என்பது குறித்து விசாரணைகளை ம…

  24. 37 ஆண்டுகளுக்கு முன் அன்னப்பறவை ஒன்றை மீட்ட நபர்: இப்போது என்ன நடக்கிறது பாருங்கள்! துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் மிர்சான் என்பவர், 37 ஆண்டுகளுக்கு முன் காயம்பட்டுக் கிடந்த அன்னப்பறவை ஒன்றை மீட்டுக் கொண்டுவந்தார். அதை அப்படியே விட்டுவிட்டால், நரிகள் கொன்றுவிடக்கூடும் என்பதால், தனது வீட்டுக்குக் கொண்டு வந்து, அதன் முறிந்த இறக்கைகளுக்கு சிகிச்சையளித்தார். சிகிச்சைக்குப் பின் அந்த அன்னப்பறவை குணம் அடைந்தாலும், அது அவரை விட்டுச் செல்லவில்லை. அதற்குக் கரிப் என்று பெயரிட்டுத் தானே வளர்க்க ஆரம்பித்தார். அந்த அன்னப்பறவையை மீட்டு 37 ஆண்டுகள் ஆன நிலையிலும், அது அவரை விட்டுப் பிரியவில்லை. பொதுவாக அன்னப்பறவைகள் பல்வேறு காரணங்களால் 12 ஆண்டுகள் வரைதான் உயிர்வாழும். பாதுகாத்து வைத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.