செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7111 topics in this forum
-
பயமுறுத்தும் கொரோனா.. டாய்லெட் பேப்பர் தட்டுப்பாடு.. ஆஸ்திரேலியா செய்திதாள் நிறுவனம் செய்த காரியம் பிரபல ஆஸ்திரேலிய செய்தித்தாள் நிறுவனம் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வாடிக்கையாளர்களிடையே பீதி ஏற்பட்டதால், எங்கே கிடைக்காமல் போய்விடுமா என்ற அச்சத்தில் அனைவரும் கழிப்பறை காகிதத்தை தேடி அலைகிறார்கள். இதற்கு ஆஸ்திரேலியாவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் மக்கள் கழிப்பறி காகிதத்தை பயன்படுத்த கூடுதல் பக்கங்களை தனது செய்திதாளில் இரண்டு பக்கங்களை ஒன்றும் இல்லாமல் அச்சிட்டுள்ளது. சீனாவில் தொடங்கி கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு பரவி விட்டது. சீனாவில் மட்டும் கொரோன வைரஸ் தாக்கி 3200 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளார்கள். இத்தாலி, தென்கொரியா, ஈரான் உள்ளிட்ட நாட…
-
- 2 replies
- 393 views
-
-
பெண்களின் உள்ளாடைகளில் ஒட்டுவதற்கான வைத்திருந்த சந்தேகத்தில் தர்மசக்கரம் 1180 உடன் சந்தேகநபர் ஒருவரை நேற்று முன்தினம் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். குறிப்பிட்ட நபர தங்கொட்டுவ பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார். பொலிஸ் புலனாய்வு துறைக்கு கிடைத்த தகவல்களின்படி மொஹட்டு முல்ல பிரதேச ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் சோதனை செய்யும்போது குறிப்பிட்ட தர்ம சக்கரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பின்னர் குறிப்பிட்ட ஆடை தொழிற்சாலை உரிமையாளரை கைது செய்து விசாரித்தபோது அந்த தர்மச் சக்கரங்கள் அப்பிரதேசத்தில் உள்ள பிரபல ஆடைத் தொழிற்சாலை ஒன்றுக்கு வழங்குவதற்காக வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார். கைப்பற்றப்பட்ட தர்ம சக்கரங்கள் பெண்களின் உள்ளாடைகளில ஒட்டி தைத்து …
-
- 3 replies
- 1.2k views
-
-
கொரோனா வைரஸ் பரவல் குறித்த செய்திகள் வெளிவரத் தொடங்கியதிலிருந்து, ஒருவருக்கொருவர் கைகுலுக்காமல், வேறு எந்தெந்த வழிகளில் வரவேற்கவும், வணக்கம் சொல்லவும் முடியும் என பலரும் பேசி வருகிறார்கள். கைகுலுக்கும்போது, கிருமிகள் ஒருவரிடமிருந்து, மற்றொருவருக்கு பரவ வாய்ப்புள்ளதால் வேறு வழிகளை கையாளுமாறு மருத்துவ நிபுணர்களும் கூறுகிறார்கள். சீனாவில் கைகளை குலுக்க வேண்டாம் என்று எல்லா இடங்களிலும், விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. பிரான்ஸில், அதற்கு உள்ள மாற்று வழிகள் குறித்த விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஜெர்மனி, போலாந்து என பல உலக நாடுகளிலும் இதே கதைதான். இந்த மாதம், இலங்கைக்கு செல்லும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் கைகுலுக்க மாட்டோம் என்று ஏற்கனவே தெரிவித்த…
-
- 6 replies
- 565 views
-
-
இந்த அல்பினோ மனிதக் குரங்கை, தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் கிராமவாசிகள் தாக்குவதுண்டு. காரணம், அவை பயிர்களை சேதம் செய்துவிடும் என்னும் அச்சத்தால். உலகில் ஒன்றேயொன்றுள்ள அரியவகை மனிதக் குரங்கு; பல மாதங்கள் கழித்துத் தென்பட்ட அதிசயம்! இந்த அல்பினோ மனிதக் குரங்கை, தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் கிராமவாசிகள் தாக்குவதுண்டு. காரணம், அவை பயிர்களை சேதம் செய்துவிடும் என்னும் அச்சத்தால். போர்னியாவில் உள்ள மழைக் காடுகளில் சுமார் ஓராண்டுக்கு முன்னர் விடபட்டது ‘அல்பா' என்னும் அல்பினோ மனிதக்குரங்கு. மனிதர்களுக்குத் தெரிந்து இந்த வகை குரங்கில் இது ஒன்றுதான் தற்போது உலகில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட அரிய உயிரினம் தற்போது மீண்டும் கண்ணில் பட்டுள்ளது. இது பலரை …
-
- 0 replies
- 411 views
-
-
திட்டமிட்டே பூனையை இந்தியாவுக்கு அனுப்பியது அம்பலம்..!! மீண்டும் சீனாவுக்கே பூனையை திருப்பி அனுப்ப திட்டம்.! சீனாவிலிருந்து வந்த கப்பலில் திட்டமிட்டே பூனையை கூண்டுக்குள் அடைத்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது . இந்நிலையில் பூனையை மீண்டும் சீனாவுக்கு அனுப்பும் முயற்சியில் துறைமுக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் . கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது . இதில் கடந்த மாதம் சீனாவில் இருந்து வந்த கப்பலில் பூனை ஒன்று கூண்டில் அடைக்கப்பட்டு வந்திருந்தது தெரியவந்தது . சென்னை துறைமுகத்தில் கப்பலில் உள்ள சரக்குகளை இறக்கும்போது பூனை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . இதனால் அதிர்ச்சி அடைந்த துறைமுக அதிகாரிகள் உட…
-
- 0 replies
- 362 views
-
-
குழந்தையின் தலையில் தாக்கிய நபரை பொலிஸார் தேடுகின்றனர் அழுத குழந்தையின் தலையில் நபர் ஒருவர் தாக்கிய சம்பவம் லூற்றனில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 19 மாதக் குழந்தையொன்று தள்ளுவண்டியில் தனது தாயுடன் பஸ்ஸில் பயணம் செய்தபோது அந்தக் குழந்தை அழுதுள்ளது. இந்நிலையில் அந்த பஸ்ஸில் பயணித்த நபர் ஒருவர் குழந்தையின் தலையில் தாக்கியுள்ளார். தாக்குதல் மேற்கொண்ட நபரின் சி.சி.ரி.வி படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2:50 அளவில் லூற்றனின் 29வது இலக்க பஸ்சில் நடந்துள்ளது. பொலிஸ் கொன்ஸ்ரபிள் கரோலின் ஹோர் கூறுகையில்; எங்களது மாவட்டத்தில் இந்த வகையான நடத்தையை நாம் பொறுத்துக்கொள்ள மாட்டோம். பகல் நேரத்தில் ப…
-
- 0 replies
- 226 views
-
-
ஏ.எச்.ஏ. ஹுஸைன் மட்டக்களப்பு நகரில் பியர் மதுபானங்களை ஏற்றி வந்த வாகனத்தின் தட்டி தானாகத் திறந்து கொண்டதால் அவ்வாகனத்திலிருந்த பெருமளவிலான பியர் போத்தல்கள் தெருவில் விழுந்து உடைந்து நொருங்கி பியர் வெள்ளமாகப் பரவியது. இச்சம்பவம் வியாழக்கிழமை 05.03.2020 பகல் மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றது. இச்சம்பவத்தில் பெருந் தொகையான பியர் போத்தல்கள் உடைந்து தெருவில் பியர் ஓடியது. அப்பகுதியில் தொடர்ச்சியாக பியர் வாசம் வீசத் தொடங்கியதால் பியர் பிரியர்கள் ஸ்தலத்திற்கு ஓடி வந்து பியர் வெள்ளம் வீதியில் ஓடுவதை கவலையோடு அவதானித்துக் கொண்டு நின்றனர் http://www.jaffnamuslim.com/2020/03/blog-post_360.html
-
- 0 replies
- 454 views
-
-
கொரோனா வைரஸ் : சிங்கப்பூர் மாணவர் மீது லண்டனில் தாக்குதல் என் நாட்டில் உங்கள் கொரோனா வைரஸ் தேவையில்லை என்று கூறி சிங்கப்பூரைச் சேர்ந்த மாணவர் மீது லண்டனில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 23 வயதான ஜோனதன் மொக் என்ற மாணவர் கடந்த திங்கட்கிழமை ஓக்ஸ்பேர்ட் ஸ்ட்ரீட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவரை நோக்கி “கொரோனா வைரஸ்” என்று ஒலி எழுப்பப்பட்டது. நான்கு பேர் கொண்ட கும்பல் அவரைச் சூழ்ந்து கொண்டு தாக்குதல் நடத்தியதனால் அவரது முகத்தில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலை இனரீதியான மிகவும் மோசமான தாக்குதல் என்றும் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் மெற்றோ பொலிற்றன் பொலிஸார் தெரிவித்தனர். ரொட்னம் கோர்ட் ரோட் (Tottenham Court road…
-
- 1 reply
- 287 views
-
-
செல்லப் பிராணிகள் இறக்குமதிக்கு தடை விதித்தது உக்ரைன்! சீனாவிலிருந்து செல்லப்பிராணிகளை இறக்குமதி செய்வதற்கு உக்ரைன் அரசாங்கம் தடை விதித்துள்ளது. ஹொங் கொங்கில் நாய் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்தே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிவிப்பு ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ‘கொரோனா நோய்க்கிருமியை உக்ரைனுக்கு பரப்புவதால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்க, உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புக்கான மாநில சேவை, சீன மக்கள் குடியரசில் இருந்து 33 ஆவது பிரிவின் கீழ் செல்லப்பிராணிகளை (நாய்கள், பூனைகள் போன்றவை) மற்றும் மாமிசங்களை இறக்குமதி செய்வதை உக்…
-
- 0 replies
- 237 views
-
-
சில நாட்களிற்கு முன்னர் நேப்பிளசில் பிரான்ஸ் இத்தாலி உச்சி மாநாடு இடம்பெற்றவேளை பிரான்ஸ் ஜனாதிபதி இத்தாலிய பிரதமரை இரண்டு தடவைகள் முத்தமிட்டார். அது வெறுமனே நட்புறவை வெளிப்படுத்தும் முத்தம் மாத்திரமல்ல. கொரோன வைரஸ் அச்சம் உலகை ஆட்கொண்டுள்ள சூழலில்உங்கள் அயலவர்களை பார்த்து அஞ்சவேண்டாம் என மக்களிற்கு தெரிவிக்கும் செய்தியாகவும் அந்த முத்தம் காணப்பட்டது. கொரோனா வைரஸ் காரணமாக, நட்பை வெளிப்படுத்துவதற்கு முத்தமிடுவதும் தர்மசங்கடமானதாக மாறியுள்ளது. குறிப்பாக தென்ஐரோப்பாவில் இந்த நிலை காணப்படுகின்றது. இத்தாலிய அரசாங்கத்தின் கொரோன வைரசிற்கான விசேட ஆணையாளர் இத்தாலியர்கள் தங்கள் நெருக்கத்தை அதிகமாக வெளிப்படுத்துவதற்கு கையாளும் வழிமுறைகள் கொரோனா வைரஸ் பரவுவதற்…
-
- 4 replies
- 462 views
-
-
அமெரிக்காவில் பள்ளிச்சிறுவன் ஒருவன் தனது ஆசிரியருக்கு விடைத்தாளில் விடுத்த வினோத கோரிக்கை, இணையவாசிகள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. கெண்டக்கி மாநில பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது மாணவனின் விடைத்தாளை புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவிட்டிருந்தார். அதில் 94 மதிப்பெண்கள் எடுத்திருந்த அந்த மாணவன், தனக்கு வழங்கப்படும் மதிப்பெண்கள் ஐந்தினை, அது மிகவும் தேவைப்படும் வேறு மாணவனுக்கு வழங்க முடியுமா என கேள்வி எழுப்பியிருந்தான். இதனை பார்த்து வியப்படைந்த ஆசிரியர் சிறுவனின் பெருந்தன்மையை எண்ணி அவனது விடைத்தாளை புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவிட, அது இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனை பார்த்த இணையவாசிகள் பலரும் சிறுவனை புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர். https://www.poli…
-
- 0 replies
- 357 views
-
-
நமது காலண்டரில் ஒவ்வொரு ஆண்டின் 12 மாதங்களில் 30,31 நாட்கள் உள்ளன. ஆனால் இரண்டாம் மாதமாக வரும் பிப்ரவரியில் 28 நாட்களும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை லீப் மாதமாக 29 நாட்களும் வருகிறது. அதற்கான வரலாற்றை பார்ப்போம். ஒரு வருடத்திற்கு 365 நாட்கள், 12 மாதங்கள், 52 வாரங்கள் (ஒன்றரை நாள்களும் ) லீப் வருடத்திற்கு 366 நாட்கள் 12 மாதங்கள் 52 வாரங்கள் ( இரண்டு நாட்களும் ) உள்ளன. பழங்கால கிரிகோரிய நாட்காட்டி படி லீப் ஆண்டு என்பது நான்கில் பெருக்கங்களாக வருவபை. 2016,2020, 2024 போன்றவை லீப் ஆண்டாக இருந்து வருகின்றன. இதற்கு கிரிகோரிய ஆண்டின் நெட்டாண்டு என பெயரிட்டுள்ளனர். ஆனால் நான்கின் பெருக்கங்களாக “00”என முடியும் ஆண்டு லீப் ஆண்டாக இருப்பதில்லை. உதாரணத்திற்க்கு “00” என…
-
- 1 reply
- 564 views
-
-
காதலியை சந்திக்க பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் - போலீசிடம் சிக்கியது எப்படி? காதலியை சந்திப்பதற்கு பிறர் கவனத்தை திசை திருப்பும் வகையில் பெட்ரோல் குண்டு வீசி இருக்கிறார் இளைஞரொருவர். திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் சாலையில் ஒரு குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் திடீரென தீ பிடித்துள்ளது. வத்தலகுண்டு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் குடோன் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரியவந்தது. பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அருகிலிருந்த பெட்ரோல் நிலைய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது இளைஞர் ஒருவர் பாட்டிலில் பெட்ரோல் வாங்கி செல்வது பதிவாகியிருந்தது. …
-
- 0 replies
- 338 views
-
-
இங்கிலாந்து நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ரகசிய கதவு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாடாளுமன்றம் அமைந்துள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை குறித்து ஆராய்ச்சியாளர்களை ஆய்வு செய்தபோது, சுமார் மூன்றரை மீட்டர் உயரமுள்ள இரண்டு ரகசிய கதவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. மரத்திலால் ஆன கதவை திறந்து பார்த்த போது மன்னரும் ராணியும் அமரும் மேல் அவைக்கு செல்லும் ரகசிய பாதையும் பென்சிலால் எழுதப்பட்ட சிறுசிறு குறிப்புகளும் அங்கு இருப்பது தெரிய வந்தது. இந்த பாதையானது 1661-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டிருக்கலாம் என்றும் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை சீரமைப்புக்கு பின்னர், இந்த பாதை சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 282 views
-
-
கொவிட் 19 என்ற கொடிய கொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியில் பரவியுள்ள நிலையில் அதனை எதிர்த்துப் போராடும் நோக்கில் உலகம் முழுவதும் முகக்கவசங்கள் மற்றும் சுவாசக் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால், ஆண்கள் முகத்தில் தாடி வளர்ப்பதை தவிர்க்க வேண்டும் என சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன. எந்த வடிவத்தில் தாடியை வளர்த்தால் முகத்தில் முகக்கவசங்கள் அணிய ஏதுவாக இருக்கும் என அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையம் வெளியிட்டுள்ள படம் ஒன்றை குறிப்பிட்டு இந்த செய்தி பரவி வருகிறது. ஆனால் இந்த படத்திற்கும் கொரோனா தொற்றுக்கும் எந்த தொடர்பும் இல்லை. 2017 ஆம் ஆண்டு பணியிடங்களுக்க…
-
- 0 replies
- 568 views
-
-
உலகின் மிக வயதான மனிதர் பொப் வீற்ரனின் வயது 111 பிரித்தானியாவில் நீண்ட ஆயுளைக் கொண்ட மனிதராகக் கருதப்படும் பொப் வீற்ரனின் (Bob Weighton) வயது 111 ஆகும். பொப் வீற்ரன் கடந்த ஆண்டு தனது 111 வது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார். ஜப்பானில் நீண்ட ஆயுளைக் கொண்ட மனிதரின் மரணத்தைத் தொடர்ந்து பிரித்தானியாவில் நீண்ட ஆயுளைக் கொண்ட நபரான பொப் வீற்ரனே இப்போது உலகின் மிக வயதான மனிதராகக் கருதப்படுகின்றார். ஸ்கொட்லாந்தின் பேர்த்ஷையரிலுள்ள (Perthshire) செயின்ற் மடோஸைச் (St Madoes) சேர்ந்த அல்பிரட் ஸ்மித்தின் (Alfred Smith) மரணத்தின் பின்னர் பொப் வீற்ரன் பிரித்தானியாவின் மிக வயதான மனிதரானார். 1908 மார்ச் 29 இல் பிறந்த பொப் வீற்ரன் கடந்த ஆண்டு கோடையில் இருந்து பிரித்தா…
-
- 0 replies
- 371 views
-
-
கேலி கிண்டலுக்குள்ளான சிறுவனுக்கு மைதானத்திற்குள் கம்பீர வரவேற்பு – நெகிழ்ச்சியான சம்பவம்! அவுஸ்ரேலியாவில் பாடசாலை ஒன்றில் மாணவர்களால் கேலி கிண்டலுக்குள்ளான சிறுவனை ஆல்-ஸ்டார் ரக்பி அணியினர் மைதானத்திற்கு அழைத்து வந்து அணியை வழிநடத்தும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வளர்ச்சியின்மை காரணமாக குறித்த சிறுவன் பாடசாலையில் எதிர்கொண்ட துன்பங்களை தனது தாயிடம் தெரிவித்து, தான் தற்கொலை செய்துக்கொள்ளப் போகிறேன் எனவும் தெரிவித்து அண்மையில் மனதை உருக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது இதனை அடுத்து உலக நாடுகளில் அச் சிறுவனுக்கு ஆதரவாக குரல் எழுப்பட்டு வருகிறது குறிப்பாக சிறுவனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சர்வதேச ரீதியில் பிரபலங்கள் உள்பட வ…
-
- 3 replies
- 689 views
-
-
திரைப்படங்களில் வில்லன்கள் ஐபோன் உபயோகிக்கக் கூடாது என்ற ஆப்பிள் நிறுவனத்தின் ரகசிய விதிமுறையை நைப்ஸ் அவுட் ஆங்கில திரைப்பட இயக்குநர் கசிய விட்டுள்ளார். நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குநர் ரியான் ஜான்சன், திரைப்படங்களில் ஐபோன் பயன்படுத்துவது தொடர்பாக தயாரிப்பு நிறுவனங்களுடன் ஆப்பிள் நிறுவனம் செய்துள்ள ஒப்பந்தங்கள் குறித்த சில சுவாரஸ்மான தகவல்களை வெளியிட்டார். மர்ம திரைப்படங்கள் எடுக்கும்போது மிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் ஏனெனில் எதிர்மறை கதாபாத்திரங்கள் ஐபோன் பயன்படுத்த அனுமதி இல்லை என்றும் ஜான்சன் குறிப்பிட்டார். மேலும், செல்போனை மையப்படுத்தி தற்போது மர்ம படம் எடுக்கும் இயக்குநர்கள் அனைவரும் இந்த தகவலால் தன்னை கடிந்துக்கொள்வார்கள் என நக…
-
- 0 replies
- 405 views
-
-
தலைமறைவாக இருந்த குற்றவாளி 28 ஆண்டுகளின் பின்னர் கைது கென்ற், மெய்ட்ஸ்ரன் சிறையில் இருந்து 1992 ஆம் ஆண்டு தப்பி ஓடிய குற்றவாளி மீண்டும் கைதாகியுள்ளார். சார்ள்ஸ் லின்ச் (Charles Lynch) என்ற நபர், தனது மோட்டர் படகில் ஆங்கிலக் கால்வாயினூடாக சட்டவிரோதக் குடியேறியவர்களை ஏற்றிவந்த நிலையில் எல்லைப் படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போர்ட்ஸ்மவுத் கிரவுன் நீதிமன்றுக்குக் கொண்டுவரப்பட்ட சார்ள்ஸ் லின்சுக்கு 44 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நொவெம்பர் 6 ஆம் திகதி இரண்டு எல்லை படைக் கப்பல்களும் கடலோரக் காவல்படையின் ஹெலிகொப்ரரும் இணைத்து விரட்டிப்பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டன. இறுதியில் ஆங்கிலக் கால்வாயின் சில மைல்…
-
- 0 replies
- 298 views
-
-
கடந்த வெள்ளிக்கிழமை 21.02.2020 இரவு யேர்மனி Bielefeld நகரத்தில் திருட வந்த ஒருவர் கொஞ்சம் அவதானம் இல்லாமல் நடந்திருக்கிறார் . Bielefeld நகரில் Ummelner வீதியில் இருந்த அலுவலகக் கட்டிடத்தில் திருட வந்த இளைஞன் தனது சைக்கிளை அலுவலகத்துக்கு முன்னால் நிறுத்தி, அதன்மேல் தனது ஜக்கெற்றைக் கழட்டிப் போட்டு விட்டு அலுவலகத்தின் வாசல் கதவின் கண்ணாடியை உடைத்து உள் நுளைந்திருக்கிறான். வாசற்கதவின் கண்ணாடி உடைந்திருப்பதையும் சைக்கிள் ஒன்று அங்கே நிற்பதையும் அவதானித்த ஒரு பாதுகாவலர் உடனடியாக பொலீஸுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார். ஆனால் பொலீஸார் வருவதற்கு முன்னால் திருட வந்தவன் தப்பி ஓடி விட்டான். ஆனால் திருடுவதற்காக அங்கே இருந்து எடுத்த பொருட்களை அவன் ஒரு இடத்தில் ஒன்…
-
- 3 replies
- 961 views
-
-
பூமியில் ஆக்சிஜனின்றி உயிர்வாழும் முதல் உயிரினத்தை கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அனைத்து பலசெல் உயிரினங்களிலும் காற்றுசுவாசம் நடைபெறுவதாக நம்பப்படும் நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் ஆக்சிஜனின்றி உயிர்வாழும் ஒட்டுயிரியை கண்டுபிடித்துள்ளனர். சால்மோன் மீனின் தசைசெல்களில் உயிர்வாழும் ஜெல்லிமீன் போன்ற அந்த ஒட்டுயிரிக்கு, ஹெனிகுவா சால்மினிகோலா எனப் பெயரிடப்பட்டுள்ளது. அதில் செல்களின் ஆற்றல் நிலையமான மைட்டோகாண்ட்ரியா இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மைட்டோகாண்ட்ரியா பலசெல் உயிரிகளில் ஆக்சிஜனை வேதி ஆற்றலாக மாற்றும் தலையாய பணியை செய்வதால், காற்றுசுவாசத்திற்கு முக்கியமானதாகும். இந்நிலையில் அவ்வமைப்பில்லாத உய…
-
- 3 replies
- 532 views
-
-
அமெரிக்காவைச் சேர்ந்த 62 வயதான ஜோர்ஜ் ஹூட்என்பவர் 8 மணித்தியாலங்கள் பிளேன்ங் நிலையில் (plank position) நின்று கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார். 62 வயதான ஜோர்ஜ் ஹூட் விசித்திரமான சாதனை ஒன்றைப் படைக்க முற்பட்டுள்துடன் அவர் பிளேன்ங் நிலையில் நின்றபடி குறித்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். பிளேன்ங் நிலை என்பது நுனி காலையும் முழங்கையையும் தரையில் ஊன்றியவாறு தரையிலிருந்து உயர்ந்து தரைக்கு சமாந்தரமாக நிற்பதாகும். இந்த நிலையயில் 8 மணித்தியாலம், 15 நிமிடங்கள், 15 நொடிகள் நின்றவாறு ஜோர்ஜ் ஹூட் குறித்த சாதனையைப் படைத்த ஆண் சாதனையாளராக தெரிவு செய்யப்பட்டார். இந்நிலையில் இவரது சாதனைக்கு முன் கனடாவைச் சேர்ந்த டானா க்ளோவாக்கா என்ற பெண் இந்த சாதனையை நிகழ்த்தியருந்தார்.…
-
- 5 replies
- 565 views
- 1 follower
-
-
9 வயது மகனுக்கு மின்னளுத்தியால் சூடு வைத்த தாய் – காத்தான்குடியில் பதறவைக்கும் சம்பவம்! காத்தான்குடி இரண்டாம் குறிச்சி ஊர் வீதியில் வசித்து வரும் சிறுவனொருவன் சிறுவனின் தாய் சூடு வைத்த காயங்களுடன் காத்தான்குடி ஆதார வைத்திய சாலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை சென்ற அப்பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அப்பாடசாலையின் அதிபரை சந்தித்து இங்கு தரம் 4ல் கல்வி கற்கும் 9 வதுடைய குறித்த சிறுவன் ஒருவனுக்கு அச்சிறுவனின் தாய் மின்னளுத்தியால் சூடு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து குறித்த பாடசாலை அதிபரும் அங்கு கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரும் மாணவனின் வீட்டுக்கு சென்று சிறுவனை பார்க்க முற்பட்டபோது முதலில் மறுத்த தாய் பின்னர் மகனை …
-
- 1 reply
- 2.4k views
-
-
கண்கள் இல்லாத, பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாக இருக்கும் வினோத உயிரினம் என்று மெக்ஸிக்கோ கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது. மெக்ஸிக்கோ - புவேர்ட்டோ வல்லார்டா கடற்கரையில் டொல்பின் போன்ற தலை அமைப்புடைய குறித்த உயிரினத்துக்கு கண்கள் இல்லாமல், கொடிய பற்களுடன் வினோதமான உயிரினம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இதைக்கண்ட மக்கள் இதுபோன்ற ஒரு உயிரினத்தை கண்டதில்லை எனவும் அத்தோடு குறித்த உயிரினம் உயிரிழந்து கிடந்தது என நினைத்துள்ளார்கள். அதன் பின்னர் வினோத உயிரினம் குறித்து கடல் மற்றும் வன உயிரின அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் அந்த உயிரினம் குறித்து ஆராய்ந்து வருகின்றனர். இதுகுறித்து பேசிய ஆராய்ச்சியாளர்கள், பசுபிக் கடலின் சூரிய ஒளி புகமுடியாத மிக ஆழ…
-
- 0 replies
- 776 views
-
-