செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
வீட்டுக்குள் இருங்கள் இல்லாவிட்டால் சுட்டுத் தள்ளுவோம்- தெலுங்கானா முதலமைச்சர் ஊரடங்கு உத்தரவை மதித்து அனைவரும் வீட்டில் இருங்கள். இல்லாவிடின் சுட்டுத் தள்ளுவோம் என தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பெரும்பாலானோர் இதன் தீவிரம் புரியாமல் வழக்கமான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக கூறுப்படுகின்றது. இதையடுத்தே பொலிஸாருக்கு கடுமையாக நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார். மேலும் தேவை ஏற்படுமெனின் இராணுவத்தை அழைப்பதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். http://athavannews.com/வீட்டுக்குள்-இருங்கள்-இல/
-
- 0 replies
- 209 views
-
-
-
- 0 replies
- 346 views
-
-
-
- 0 replies
- 337 views
-
-
தனது மனைவி கொடுக்கும் தொல்லைகள் கொரோனா வைரஸால் ஏற்பட்ட பிரச்சினைகளை விட பெரியது என்றும் இதனால் தனக்கு வீட்டினுள் இருக்க முடியாது எனவும் இத்தாலிய ஆணொருவர் அந்நாட்டு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸால் பல ஆயிரம் உயிரிழப்புகளை சந்தித்துள்ள இத்தாலியில் தற்போது அனைவரும வீட்டினுள் இருக்க வேண்டும் என்ற சட்டம் அமுல்படுததப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நபர் இத்தாலிய அதிகாரிகளிடம், அவர் தனிமைப்படுத்தப்படவோ அல்லது வீட்டுக்குள்ளேயே இருக்கவோ தயாராக இல்லை, ஏனெனில் அவரது மனைவி மற்றொரு பெரிய பிரச்சினை என தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸை விட அவரது மனைவி மிகப் பெரிய பிரச்சினை என்றும், தனிமைப்படுத்தப்பட வேண்டியதை விட வைரஸுடன் தொடர்பு கொள்வதை அவர் விரும்புகிறார் எனவும்…
-
- 14 replies
- 1.8k views
- 1 follower
-
-
உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா, இலங்கையில் மாத்திரமின்றி சீனாவிற்கு அடுத்தபடியாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், இத்தாலியே காணப்படுகின்றது. இந்நிலையில், மொத்தமாக முடங்கியுள்ள இத்தாலி மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வலம் வர ஆரம்பித்துள்ளது. மிலன் நகரில் உள்ள வைத்தியசாலையொன்றில் குழந்தையொன்று பிறந்துள்ளது. பிறந்த குழந்தை அணிந்திருந்த டயபரின் பின் புறத்தில் "எல்லாம் சரியாகிவிடும்(Andrà tutto bene )" என பொருள்படும் என்ற வாசகம் இத்தாலி மொழியில் எழுதப்பட்டிருந்தது. இந்தப் புகைப்படத்தை மார்ச் 16 ஆம் திகதி வெளியிட்ட வைத்தியசாலை நிர்வாகம் அதில் "வேறு எதையும் விட வாழ்க்கை வலிமையானது ! நாங்கள் …
-
- 0 replies
- 353 views
-
-
கொரோனா வைரஸ் எதிரொலியாக தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யும்மாறு ஐ.டி. நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. இந்நிலையில் 'கொரோனா முன்னெச்சரிக்கை' நடவடிக்கையாக பெங்களூருவை சேர்ந்த இன்ஸ்டா கிளீன் என்ற நிறுவனம் தேனி மாவட்ட மலை அடிவாரத்தில், இயற்கை எழில் கொஞ்சும் கிராமம் ஒன்றில் 8 பணியாளர்களுடன் செயல்பட்டு வருகிறது. தேனி மாவட்டம் தேவாரம் டி.ரெங்கநாதபுரத்தை சேர்ந்த அரவிந் ராஜு 'இன்ஸ்டாகிளீன்' என்ற செயலி உருவாக்கும் 'ஸ்டார்ட் அப்' நிறுவனத்தை பெங்களூருவில் நடத்தி வருகிறார். இதில் இந்தியர்கள், வெளிநாட்டினர் என 20 பேர் பணி புரிந்து வருகின்றனர். கிராமத்தில் ஐ.டி நிறுவனம் 'கொரோனா'வின் பாதிப்பால் ஊழியர்கள் அலுவலகம் வர அஞ்சியதால் தேனி மாவட்டம் தேவாரம், அனுமந்தன்…
-
- 3 replies
- 587 views
-
-
திருவனந்தபுரம்: பாலக்காடு அருகே வயல்வெளியில் தூங்கிய வெளிநாட்டுக்காரரை போலீசார் கைது செய்தனர். பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் யுவான் ஜாக்விஸ். சைக்கிளில் பல்வேறு நாடுகளை சுற்றி வருகிறார். கடந்த ஜனவரியில் திருவனந்தபுரம் வந்தார். பல இடங்களையும் சைக்கிளில் சுற்றுப்பார்த்தார். பின்னர் இலங்கை சென்றார். இதையடுத்து சென்னை திரும்பியவர் மீண்டும் கேரளாவுக்கு வந்தார். கோவை வழியாக நேற்று முன்தினம் பாலக்காடு வந்தவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கொடுவாயூர் பகுதியில் சென்றபோது மிகவும் களைப்படைந்தார். அப்போது வயல் பகுதியை பார்த்தவர் சிறிது ஓய்வெடுக்க விரும்பினார். இதமான காற்று வீசியதால் வயலில் படுத்து தூங்கி விட்டார். இரவு முழுவதும் எழும்பவில்லை. நேற்று காலை வயலுக்கு வந்த தொழிலாளர்…
-
- 1 reply
- 338 views
-
-
கொரோனா அச்சுறுத்தல் – 1500 கைதிகள் தப்பியோட்டம்! கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பிரேசில் சிறையில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சா பாலோ நகரில் நான்கு திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு அதிகளவான சிறைக்காவலர்கள் விடுமுறையில் சென்றுள்ளனர். இதையறிந்த கைதிகள் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களைக் கட்டுப்படுத்த போதியளவு சிறைக்காவலர்கள் இல்லாததால் கைதிகள் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. தப்பிச் சென்ற கைதிகளில் 40 பேர் மாத்திரமே பிடிபட்டுள்ள நிலையில் எஞ்சியவர்களைத் தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. http://athavannews.com/கொரோனா-அச்சுறுத்தல்-1…
-
- 0 replies
- 218 views
-
-
கொரோனாவை விட கொள்ளையர்களிடமிருந்து தங்களை பாதுகாக்க அதிக கவனம் செலுத்த வேண்டிய சூழல் அமெரிக்க மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் 12 மாகணங்களில் கொரோனா வைரசால், 3,774 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 69 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பெரும் பீதி அடைந்துள்ள, அமெரிக்க மக்கள், வெளியில் நடமாட அஞ்சுகின்றனர். அதனால், கழிவறைக்குப் பயன்படுத்தப்படும் பேப்பரைக் கூட, அதிகளவில் வாங்கி சேமித்து வைத்துள்ளனர். இதனால் அதற்கு அங்கு மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோக்கள் சமீபத்தில் வைரல் ஆனது. இந்நிலையில் தற்போது அமெரிக்காவில், ஆள்நடமாட்டமில்லாத பகுதிகளில் கொள்…
-
- 5 replies
- 964 views
-
-
-
- 2 replies
- 631 views
-
-
உலகின் மிகவும் பழங்கால மரம் மாறிவரும் பருவநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவின் சிடர்பெர்க் மலைப்பகுதியில் கிளான்வில்லியம் சிடார் என்ற மரம் உள்ளது. சுமார் 22 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாகக் கருதப்படும் இந்த மரம்தான் உலகிலேயே மிகவும் வயதான மரம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் காலநிலை மாற்றம், உலகம் முழுவதும் அதிக வெப்பநிலை, குறைந்த மழைப்பொழிவு ஆகிய காரணிகளால் இந்த மரத்தின் விதைகள் பலமிழந்து காணப்படுவதாகவும், இதனால் இந்த மரம் மேலும் பரவும் முறை தடுக்கப்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உறைபனிக்காலத்தில் தோன்றியதாகக் கருதப்படும் இந்த மரத்தின் பின் வந்த சந்ததி மரங்கள் சுமார் 13 …
-
- 0 replies
- 340 views
-
-
உலக முழுதும் பரவி வரும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த கொரோனா நோய்த் தொற்றால் பல தொழில்களும் முடங்கிப்போய் உள்ளது. கடந்த சில நாட்களாக வெளிநாடுகளில் படமாக்கப்பட வேண்டிய பல படங்களின் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பல ஹாலிவுட் படங்களில் ரிலீஸ் தேதிகள் தள்ளிப்போய் இருக்கின்றன. இதன் உச்சமாக கொரோனா வைரஸ் அச்சம் காரணமாகக் கேரளாவில் திரைப்படங்களின் ரிலீஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் வாரங்களில் திரைப்படங்கள் எதுவும் வெளியாகாது எனவும் மேலும் மார்ச் 31ம் தேதி வரை திரையரங்குகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க இந்திய …
-
- 1 reply
- 773 views
-
-
ஒட்டகச்சிவிங்கி ( Credit: Hirola Conservation ) கடந்த 30 ஆண்டுகளில், கிட்டத்தட்ட 40 சதவிகித ஒட்டகச்சிவிங்கிகள் வேட்டைக்காரர்களாலும் கடத்தல்காரர்களாலும் அழிக்கப்பட்டிருக்கின்றன என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. உலகிலேயே அரிய வகை உயிரினமான வெள்ளை ஒட்டகச்சிவிங்கிகள், கென்யா நாட்டில் மட்டுமே இருக்கின்றன. இந்நிலையில், கென்யா வனவிலங்கு சரணாலயத்தில் வசித்து வந்த ஒரு தாய் ஒட்டகச்சிவிங்கியும் அதன் குட்டியும், நேற்று எலும்புக்கூடுகளாகக் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்ட இந்த ஒட்டகச்சிவிங்கிகள், இறந்து நான்கு மாத காலம் ஆகியிருக்கலாம் என அதிகாரிகள் கணித்திருக்கிறார்கள். …
-
- 0 replies
- 368 views
-
-
சிறைச்சாலை அத்திட்சகரின் 25 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிக் கொண்டு கைதி தப்பி ஓட்டம் தண்டனை வழங்கப்பட்ட சிறைக் கைதி ஒருவர் சிறைச்சாலை அத்திட்சகரின் 25 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிக் கொண்டு தப்பி ஓடிய சம்பவம் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த சிறிமால் என்ற சிறைக் கைதி கொள்ளை சம்பவம் தொடர்பாக கண்டியில் கைது செய்யப்பட்டு ஒருவருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் குறித்த கைதியை மட்டக்களப்பு சிறைச்சாலையில் 4 மாதங்;களாக அடைக்கப்பட்டு தண்டனை பெற்றுவரும் நிலையில் சிறைச்சாலைக்கு முன்னாள் உள்ள அத்தியட்சகரின் காரியாலயத்தை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். இ…
-
- 1 reply
- 282 views
-
-
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை குணப்படுத்த மது அருந்தலாம் என்ற வதந்தி: 27பேர் உயிரிழப்பு கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை குணப்படுத்த மது அருந்தலாம் என்ற வதந்திகளுக்குப் பின்னர் ஈரானில் மெத்தனால் அருந்திய இருபத்தேழு பேர் உயிரிழந்துள்ளனர். உயிர்களை காவு கொண்டுவரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள மது அருந்தலாம் என்ற வதந்தி கடந்த சில நாட்களாக வைரலாக பரவிவருகின்றது. இந்தநிலையில் இந்த வதந்திகளை நம்பி மெத்தனால் அருந்திய 218 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குஜெஸ்தானின் தலைநகரான அஹ்வாஸில் உள்ள ஜுண்டிஷாபூர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் அலி எஹ்சான்பூர் தெரிவித்துள்ளார். மது அருந்துவது கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிப்பதில் பய…
-
- 0 replies
- 182 views
-
-
வாரணாசி: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், வாரணாசி பிரகலதேஸ்வரர் கோவிலில் உள்ள விஸ்வநாதர் சிலைக்கு முகக்கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது. சாமி சிலையை பக்தர்கள் யாரும் தொட வேண்டாம் என அர்ச்சகர் கேட்டுக்கொண்டுள்ளார். சீனாவில் உருவான, 'கொரோனா' வைரஸ், இன்று சர்வதேச நோயாகி இருக்கிறது. இந்தியா உட்பட, 100க்கும் மேற்பட்ட நாடுகளை ஆட்டம் காண செய்துள்ளது. இந்நிலையில், வாரணாசி பிரகலதேஸ்வரர் கோவிலில் அர்ச்சகர் ஒருவர் சாமி சிலைகளுக்கு முகக்கவசம் அணிவித்துள்ளார். பக்தர்கள் யாரும் சாமி சிலையை தொடவேண்டாம் எனவும் கூறியுள்ளார். இதுகுறித்து அர்ச்சகர் கிருஷ்ண ஆனந்த் பாண்டே கூறுகையில், கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த விஸ்வநாதர் சிலைக்கு ம…
-
- 0 replies
- 374 views
-
-
"சாகும்வரை ஒரு ரூபாய்க்குதான் இட்லி விற்பேன். என்னை நம்பி என் கடைக்கு வருகிறார்கள். அவர்களை ஏமாற்ற மாட்டேன்” - 80 வயது பாட்டி கமலாத்தாளின் நெகிழ்ச்சி கதை இது!
-
- 1 reply
- 503 views
-
-
பயமுறுத்தும் கொரோனா.. டாய்லெட் பேப்பர் தட்டுப்பாடு.. ஆஸ்திரேலியா செய்திதாள் நிறுவனம் செய்த காரியம் பிரபல ஆஸ்திரேலிய செய்தித்தாள் நிறுவனம் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வாடிக்கையாளர்களிடையே பீதி ஏற்பட்டதால், எங்கே கிடைக்காமல் போய்விடுமா என்ற அச்சத்தில் அனைவரும் கழிப்பறை காகிதத்தை தேடி அலைகிறார்கள். இதற்கு ஆஸ்திரேலியாவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் மக்கள் கழிப்பறி காகிதத்தை பயன்படுத்த கூடுதல் பக்கங்களை தனது செய்திதாளில் இரண்டு பக்கங்களை ஒன்றும் இல்லாமல் அச்சிட்டுள்ளது. சீனாவில் தொடங்கி கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு பரவி விட்டது. சீனாவில் மட்டும் கொரோன வைரஸ் தாக்கி 3200 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளார்கள். இத்தாலி, தென்கொரியா, ஈரான் உள்ளிட்ட நாட…
-
- 2 replies
- 399 views
-
-
பெண்களின் உள்ளாடைகளில் ஒட்டுவதற்கான வைத்திருந்த சந்தேகத்தில் தர்மசக்கரம் 1180 உடன் சந்தேகநபர் ஒருவரை நேற்று முன்தினம் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். குறிப்பிட்ட நபர தங்கொட்டுவ பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார். பொலிஸ் புலனாய்வு துறைக்கு கிடைத்த தகவல்களின்படி மொஹட்டு முல்ல பிரதேச ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் சோதனை செய்யும்போது குறிப்பிட்ட தர்ம சக்கரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பின்னர் குறிப்பிட்ட ஆடை தொழிற்சாலை உரிமையாளரை கைது செய்து விசாரித்தபோது அந்த தர்மச் சக்கரங்கள் அப்பிரதேசத்தில் உள்ள பிரபல ஆடைத் தொழிற்சாலை ஒன்றுக்கு வழங்குவதற்காக வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார். கைப்பற்றப்பட்ட தர்ம சக்கரங்கள் பெண்களின் உள்ளாடைகளில ஒட்டி தைத்து …
-
- 3 replies
- 1.2k views
-
-
கொரோனா வைரஸ் பரவல் குறித்த செய்திகள் வெளிவரத் தொடங்கியதிலிருந்து, ஒருவருக்கொருவர் கைகுலுக்காமல், வேறு எந்தெந்த வழிகளில் வரவேற்கவும், வணக்கம் சொல்லவும் முடியும் என பலரும் பேசி வருகிறார்கள். கைகுலுக்கும்போது, கிருமிகள் ஒருவரிடமிருந்து, மற்றொருவருக்கு பரவ வாய்ப்புள்ளதால் வேறு வழிகளை கையாளுமாறு மருத்துவ நிபுணர்களும் கூறுகிறார்கள். சீனாவில் கைகளை குலுக்க வேண்டாம் என்று எல்லா இடங்களிலும், விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. பிரான்ஸில், அதற்கு உள்ள மாற்று வழிகள் குறித்த விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஜெர்மனி, போலாந்து என பல உலக நாடுகளிலும் இதே கதைதான். இந்த மாதம், இலங்கைக்கு செல்லும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் கைகுலுக்க மாட்டோம் என்று ஏற்கனவே தெரிவித்த…
-
- 6 replies
- 569 views
-
-
இந்த அல்பினோ மனிதக் குரங்கை, தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் கிராமவாசிகள் தாக்குவதுண்டு. காரணம், அவை பயிர்களை சேதம் செய்துவிடும் என்னும் அச்சத்தால். உலகில் ஒன்றேயொன்றுள்ள அரியவகை மனிதக் குரங்கு; பல மாதங்கள் கழித்துத் தென்பட்ட அதிசயம்! இந்த அல்பினோ மனிதக் குரங்கை, தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் கிராமவாசிகள் தாக்குவதுண்டு. காரணம், அவை பயிர்களை சேதம் செய்துவிடும் என்னும் அச்சத்தால். போர்னியாவில் உள்ள மழைக் காடுகளில் சுமார் ஓராண்டுக்கு முன்னர் விடபட்டது ‘அல்பா' என்னும் அல்பினோ மனிதக்குரங்கு. மனிதர்களுக்குத் தெரிந்து இந்த வகை குரங்கில் இது ஒன்றுதான் தற்போது உலகில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட அரிய உயிரினம் தற்போது மீண்டும் கண்ணில் பட்டுள்ளது. இது பலரை …
-
- 0 replies
- 417 views
-
-
திட்டமிட்டே பூனையை இந்தியாவுக்கு அனுப்பியது அம்பலம்..!! மீண்டும் சீனாவுக்கே பூனையை திருப்பி அனுப்ப திட்டம்.! சீனாவிலிருந்து வந்த கப்பலில் திட்டமிட்டே பூனையை கூண்டுக்குள் அடைத்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது . இந்நிலையில் பூனையை மீண்டும் சீனாவுக்கு அனுப்பும் முயற்சியில் துறைமுக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் . கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது . இதில் கடந்த மாதம் சீனாவில் இருந்து வந்த கப்பலில் பூனை ஒன்று கூண்டில் அடைக்கப்பட்டு வந்திருந்தது தெரியவந்தது . சென்னை துறைமுகத்தில் கப்பலில் உள்ள சரக்குகளை இறக்கும்போது பூனை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . இதனால் அதிர்ச்சி அடைந்த துறைமுக அதிகாரிகள் உட…
-
- 0 replies
- 367 views
-
-
குழந்தையின் தலையில் தாக்கிய நபரை பொலிஸார் தேடுகின்றனர் அழுத குழந்தையின் தலையில் நபர் ஒருவர் தாக்கிய சம்பவம் லூற்றனில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 19 மாதக் குழந்தையொன்று தள்ளுவண்டியில் தனது தாயுடன் பஸ்ஸில் பயணம் செய்தபோது அந்தக் குழந்தை அழுதுள்ளது. இந்நிலையில் அந்த பஸ்ஸில் பயணித்த நபர் ஒருவர் குழந்தையின் தலையில் தாக்கியுள்ளார். தாக்குதல் மேற்கொண்ட நபரின் சி.சி.ரி.வி படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2:50 அளவில் லூற்றனின் 29வது இலக்க பஸ்சில் நடந்துள்ளது. பொலிஸ் கொன்ஸ்ரபிள் கரோலின் ஹோர் கூறுகையில்; எங்களது மாவட்டத்தில் இந்த வகையான நடத்தையை நாம் பொறுத்துக்கொள்ள மாட்டோம். பகல் நேரத்தில் ப…
-
- 0 replies
- 232 views
-
-
ஏ.எச்.ஏ. ஹுஸைன் மட்டக்களப்பு நகரில் பியர் மதுபானங்களை ஏற்றி வந்த வாகனத்தின் தட்டி தானாகத் திறந்து கொண்டதால் அவ்வாகனத்திலிருந்த பெருமளவிலான பியர் போத்தல்கள் தெருவில் விழுந்து உடைந்து நொருங்கி பியர் வெள்ளமாகப் பரவியது. இச்சம்பவம் வியாழக்கிழமை 05.03.2020 பகல் மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றது. இச்சம்பவத்தில் பெருந் தொகையான பியர் போத்தல்கள் உடைந்து தெருவில் பியர் ஓடியது. அப்பகுதியில் தொடர்ச்சியாக பியர் வாசம் வீசத் தொடங்கியதால் பியர் பிரியர்கள் ஸ்தலத்திற்கு ஓடி வந்து பியர் வெள்ளம் வீதியில் ஓடுவதை கவலையோடு அவதானித்துக் கொண்டு நின்றனர் http://www.jaffnamuslim.com/2020/03/blog-post_360.html
-
- 0 replies
- 458 views
-
-
கொரோனா வைரஸ் : சிங்கப்பூர் மாணவர் மீது லண்டனில் தாக்குதல் என் நாட்டில் உங்கள் கொரோனா வைரஸ் தேவையில்லை என்று கூறி சிங்கப்பூரைச் சேர்ந்த மாணவர் மீது லண்டனில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 23 வயதான ஜோனதன் மொக் என்ற மாணவர் கடந்த திங்கட்கிழமை ஓக்ஸ்பேர்ட் ஸ்ட்ரீட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவரை நோக்கி “கொரோனா வைரஸ்” என்று ஒலி எழுப்பப்பட்டது. நான்கு பேர் கொண்ட கும்பல் அவரைச் சூழ்ந்து கொண்டு தாக்குதல் நடத்தியதனால் அவரது முகத்தில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலை இனரீதியான மிகவும் மோசமான தாக்குதல் என்றும் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் மெற்றோ பொலிற்றன் பொலிஸார் தெரிவித்தனர். ரொட்னம் கோர்ட் ரோட் (Tottenham Court road…
-
- 1 reply
- 296 views
-