துளித் துளியாய்
தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்
துளித் துளியாய் பகுதியில் தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தாயக மக்களின் மறுவாழ்வுக்கு உதவும் தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல் வேண்டும்.
தொண்டு, பரோபகாரம் என்பவை பற்றிய பொதுவான செய்திகள், கட்டுரைகள் தவிர்க்கப்படல் வேண்டும். அவை சமூகச் சாளரம் பகுதியில் இணைக்கப்படலாம்.
351 topics in this forum
-
எளிதில் நோய் தொற்றக்கூடிய ஆபத்தில் உள்ள எமக்கு உதவுங்கள் – வன்னி விழிப்புலனற்றோர் சங்கம் 91 Views வன்னி விழிப்புலனற்றோர் சங்கம் கொரோனாப் பெருந் தொற்று தொடர்பான ஒரு பொது வேண்டுகோளை புலம்பெயர் மக்களிடம் வைத்திருந்தார்கள். அது தொடர்பாக அதன் செயலாளர் மகிந்தகுமார் அவர்கள் ‘இலக்கு’ ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலை இங்கு தருகிறோம். வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் தோற்றம். அதன் அங்கத்தவர்கள், செயற்பாடுகள் தொடர்பாக, எமது வாசகர்களுக்கு சுருக்கமாக அறியத் தருவீர்களா? பதில் – எமது வன்னி விழிப்புலனற்றோர் சங்கமானது 22.07.2013ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அன்றைய கால கட்டத்தில் எமது மக்களின் அரசியல் உரிமைகளுக்காகப் போரா…
-
- 1 reply
- 1.6k views
-
-
இன்று எனது பெரியக்காவின் அதாவது எனது இரண்டாவது அம்மாவின் 75 வது பிறந்தநாள். அவர் கர்ணனைப்போன்றவர் எவர் இரங்கி எதைக்கேட்டாலும் கொடுத்து உதவும் மனம் கொண்டவர். இப்படியான மனம் கொண்டவர்களை இன்று பார்ப்பதே அருகிவரும் நிலையில்..... எமது அம்மாவின் துவசத்தன்று நாம் கோழிப்பண்ணை ஒன்றை உருவாக்கி கொடுத்தவரின் மகன் தனது மனைவியை இழந்து தாயாரில்லாத 6 பிள்ளைகளுடன் (4 பெண் பிள்ளைகள் 2 ஆண்பிள்ளைகள்) வாழ்வாதாரத்துக்கு சிரமப்படுவதாக கூறி அவர்களது வீட்டிலேயே கோழிப்பண்ணை ஒன்றை உருவாக்கி தாருங்கள் என்று ஒருமித்த குரலில் உதவி கேட்டதை அக்காவுடன் நான் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது தம்பி எனது 75வது பிறந்தநாள் வருகி…
-
- 30 replies
- 4.7k views
- 1 follower
-
-
நிவாரண பணிக்கு உதவுங்கள்; உள்நாடு, புலம்பெயர் மக்களிடம் விக்னேஸ்வரன் கோரிக்கை 56 Views தொடரும் பயண தடை மற்றும் முடக்கம் காரணமாக பசியில் வாடும் ஏழை, எளிய மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக முடிந்தளவு நிதி உதவியைச் செய்யுமாறு வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் உள்ளூர் மற்றும் புலம்பெயர் தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். “நம்பிக்கைப் பொறுப்பு” என்ற நன்கொடை அமைப்பின் வங்கிக் கணக்குக்கு விரும்பியவர்கள் முடிந்தளவு நிதியை அனுப்புமாறும் கிடைக்கும் நிதி மற்றும் செலவழிக்கும் பணம் ஆகியவற்றுக்கான கணக்கு அறிக்கை ஊடகங்களில் வெளியிடப்படும் என்றும், வழங்கப்படும் நிதிக்கான பற்றுச…
-
- 0 replies
- 833 views
-
-
எமது ஊரில் பலருக்கும் தெரிந்த எல்லோருக்கும் உதவியாக இருந்த அதிலும் எமது பெற்றோருக்கு நற்பணிகள் பலவும் செய்த ஒருவரும் அவரது குடும்பத்தினரும் கடைசி காலத்தில் சாப்பாட்டுக்கு கஷ்டப்படாமல் வாழட்டும் என்பதற்காக அவர்களுக்கு செலவுக்கு பணத்தை அனுப்புவதை விடுத்து அவர்களின் நிலை அறிந்து அவர்களின் விருப்பு முயற்சி ஆளுமையை கேட்டு கண்டறிந்து உதவுவோம் என்ற நிலைப்பாட்டுக்கு ஏற்ப அங்குள்ள எங்கள் பெரியப்பாவின் பேரன் நேரில் சென்று அவர்கள் அனைவரையும் ஒன்று கூடி பேசி அவர்கள் தமது கடைசி மகளின் வீட்டில் தான் (வன்னியில்) இன்று வரை வாழ்ந்து வருகின்றனர். எனவே அவர்களது ஒருமித்த வேண்டுகோளுக்கு இணங்க அவர்களது கடைசி மகளது வீட்டிலேயே அவர்களது நீண்ட நாள் கனவான கோழிப்பண்ணை ஒன்றை உருவாக்கி தாருங்கள்…
-
- 19 replies
- 1.6k views
-
-
புங்குடுதீவு சிறீ சுப்ரமணிய மகளிர் வித்தியாலய அதிபர் அவர்கள் எமது பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்திடம் ஓர் வேண்டுகோள் ஒன்றினை விடுத்திருந்தார். அதாவது தங்கள் பாடசாலையில் பாவிக்கப்பட்டு வந்த போட்டோக்கொப்பி இயந்திரம் 9 வருடங்களாக சேவையில் இருந்து திருத்தமுடியாத அளவு பழுதடைந்து விட்டதாகவும் அதற்கு பதிலாக புதிதாக ஒன்று வாங்குவதற்கு உதவி செய்யும் படி கேட்டிருந்தார். அத்துடன் நாம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஓர் புதிய இயந்திரத்திற்கான மதிப்பீடும் எடுத்துத் தந்துள்ளார். இது விடயமாக இணைய வழியில் ஒன்று கூடிய பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றிய நிர்வாக உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் உடனடியாகவே அவ்வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டு போட்டோக்கொப்பி இயந்…
-
- 5 replies
- 749 views
-
-
சாதாரண தர( O/L) மாணவர்களை பரீட்சைக்கு தயார் படுத்துவதுக்கான மதிய உணவு வழங்கல் புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் இந்த வருடம் சாதாரண தர (O/L) பரீட்சை எழுத இருக்கும் மாணவர்கள் கொரோனா வைரஸின் தொற்று காரணமாக தமது பாடத்திட்டத்தை முடிக்க முடியாததால் அவர்களுக்கான வகுப்புகளை பாடசாலை நேரத்தின் பின்னரும் தொடர்ந்து நடாத்த அந்த குறிப்பிட்ட மாணவர்களுக்கு மதிய உணவை வழங்கி உதவுமாறு புங்குடுதீவு மகா வித்தியாலயத்தின் அதிபர் அவர்களால் விடுக்கப்பட்ட அவசர வேண்டுகோளை உடனடியாக பரிசோதனை செய்த பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் நிர்வாக குழு அதனை உடனடியாக செய்வது என்று முடிவு செய்து உடனடியாகவே 1லட்சம் ரூபாய்களை அனுப்பி இருந்தோம். பரீட்சைக்கு தோன்றும் வரை 3 மாதங்கள் நடைபெற்ற மதிய உணவு…
-
- 1 reply
- 527 views
-
-
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் Whatsapp /Viber +94767776363/+94212030600
-
- 0 replies
- 939 views
-
-
மறக்கப்படும் புற்று நோயாளரும் மாற்று வழிகளும் – வடக்கு கிழக்கு புற்றுநோய் சங்கம் (CANE) 4 Views புற்றுநோயானது, உலகில் ஏற்படும் அதிகமான இறப்புகளுக்கான காரணிகளில் 2ஆம் இடத்தை வகிக்கும் அதே நேரம், இலங்கையில் வைத்தியசாலைகளில் இடம்பெறம் இறப்புக்கான காரணிகளிலும் 2ஆம் இடத்தை வகிக்கின்றது. உலகளாவிய ரீதியில் 2018ஆம் ஆண்டு 9.6 மில்லியன் இறப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை 2008ஆம் ஆண்டு 20,246 ஆகவும் 2014இல் 23,105 ஆகவும் அதிகரித்துள்ளது. இதேவேளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திலும் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. வட மாகாணத்தில் 2010ஆம் ஆண்டு 445 ஆக இருந்த புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை 2011ஆம…
-
- 0 replies
- 781 views
-
-
யாழ் கட்டப்பிராய் வறிய குடும்பத்திற்கு முதற்கட்டமாக உதவிய ஜப்னா மின்னல்
-
- 0 replies
- 684 views
-
-
வறிய மாணவர்களுக்கு பேருதவி! - ரொரன்ரோ மனித நேயக் குரலுக்கு நன்றி தெரிவித்த பள்ளி அதிபர் மிகவும் பின் தங்கிய பிரதேசத்தை சேர்ந்த தமது பாடசாலைக்கு கனடா நாட்டின் ரொரன்ரோ மனித நேயக் குரல் அமைப்பு வழங்கிய உதவி பேருதவியாக அமைந்துள்ளதாக கிளிநொச்சி மாயவனூர் அதிபர் திருமதி ல. கோபாலராசா தெரிவித்தார். கிளிநொச்சி மாயவனூர் வித்தியாலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பேசிய பாடசாலை அதிபர் திருமதி ல. கோபாலராசா தமது பாடசாலை மிகவும் பின்தங்கிய பாடசாலை என்றும் அங்கு கல்வி பயிலும் மாணவர்கள் பல்வேறு நிலையிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்…
-
- 1 reply
- 711 views
-
-
கொடிது கொடிது வறுமை கொடிது அதனிலும் கொடிது இளமையில் வறுமை. - ஔவையார் https://www.facebook.com/vara.mahadevan.1/videos/10164968333845724 அருந்ததி- 0772151592 மலையாளபுரம் கிளிநொச்சி. நன்றி. முடிந்தளவு share செய்து உதவுங்கள்
-
- 11 replies
- 2.6k views
-
-
யாழில் பால் விற்பனையில் சாதிக்கும் பட்டதாரி இளைஞர்.! பால்மாவில் பன்றி, புரொயிலர் போன்றவற்றின் கொழுப்பும், பாம் எண்ணையும் சேர்க்கப்படுவதால் புற்றுநோய் தாக்கும் வாய்ப்புக்கள் அதிகம் என்பது தொடர்பில் இலங்கையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்து வருகின்றது. இந்நிலையில் பசும் பாலுக்கான கேள்வி பொதுமக்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது. ஆனால், உள்ளூரில் உற்பத்தியாகும் பசும் பால் உள்ளூர் நுகர்வுக்கே போதாத நிலைமை காணப்படுகிறது. யாழ். மாவட்ட அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தினால் நிர்வகிக்கப்படும் யாழ்கோ பாற்பொருட்கள் உற்பத்தி விற்பனை நிலையம் யாழ்.மாவட்ட கால்நடை உற்பத்தியாளர்களிடமிருந்து ஆயிரக்கணக்கான லீற்றா்கள் பாலைகொள்வனவு செய்கிறது. அதன் பெரும…
-
- 5 replies
- 1.9k views
-
-
-
அம்மா அப்பாவின் திதி 02/09/20 என்று ஐயர் கூறியதாக இங்கு நினைவு கூற சொன்னார். அப்பாவின் நினைவு தினம் 16-09-20. நேற்று அப்பாவின் திதியை மகளிர் இல்ல பிள்ளைகளுடன் நினைவு கூர்ந்தேன் அப்பாவின் ஆத்ம சந்திக்கு🙏 How our Sponsor Program Works ஒரு பிள்ளையை தத்து எடுத்து படிப்பிக்க மாதம் - AUD 40/- விசேட தினங்களில் சாப்பாடு கொடுக்க விசேட உணவு - AUD 150/- மரக்கறி உணவு - AUD 120/- DONATION DETAILS Donations can be made by Direct Deposit, cheque or PayPal. Contribution forms are available for download via the links below. PayPal donation can be made online using the Donate button. Postal address: The…
-
- 21 replies
- 3.2k views
- 2 followers
-
-
பிள்ளையை தத்தெடுத்தல் நான் இங்குள்ள நிறுவனத்திற்கு வருடத்தில் இருமுறை உதவிசெய்வேன் (https://www.cbm.org.au/). அவர்கள் அதை மூன்றாம் உலக நாடுகளில் உள்ள வறிய மக்களுக்கு உதவி செய்வார்கள், இன்றைக்கு எனக்கு வந்த கடிதத்தை பார்த்துவிட்டு, தான் வைத்திருந்த AUD20/- தந்தார் அவர்களுக்கு சேர்த்து அனுப்ப சொல்லி. நான் கேட்கவில்லை, அவராக தந் து மிகவும் சந்தோஷமாக இருந்திச்சு (மூன்று பிள்ளைகளுக்கும் உதவி செய்ய விருப்பம், ஊருக்கு போகும் போது வொள்ளவத்தை யாழ்பாணத்தில் நிற்கும் வறியவர்களுக்கு பணம் அவர்களை கொண்டுதான் கொடுப்பேன்). வந்த கடித்ததில் இருந்த படம் : பிறகு கேட்டார் தான் ஒரு பிள்ளையை தத்தெடுத்து படிப்பிக்கப் போகின்றேன் என்று, அந்த பிள்ளை சின்ன பிள்…
-
- 53 replies
- 8.6k views
- 1 follower
-
-
யோகர் சுவாமிகள் திருவடி நிலைய முதியோர் இல்லம் யோகர் சுவாமிகள் திருவடி நிலைய முதியோர் இல்லம் வன்னேரிக்குளம் ஜயனார்புரம் எனும் இடத்தில் 1998 இல் இருந்து இயங்கி வந்த இல்லம் இடப்பெயர்வின் பின் 2015ம் தொடக்கம் மீள இயங்கி வருகிறது. 22 ஏக்கர் பரப்பளவுள்ள மரங்கள் சுழவுள்ள இவ்வில்லத்தில் தற்போது 22 ஆண்களும் 13 பெண்களும் இங்கு தங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளை தங்களது உறைவிடங்களாக கொண்டவர்களாயினும் தற்போது பராமரிப்பார் இல்லாத காரணத்தினால் கிராமசேவகரது அத்தாட்ச்சியுடன் இங்கு அனுமதிக்கப்பட்டடுள்ளனர். இவர்களை பராமரிக்க மற்றும் இல்ல நிர்வாகத்திற்கென 11 பணியாளர்களும் , தோட்டம் மாடுகள் பராமரிக்க 3 பணியாளர்களும் இங்குள்ளனர். கிழமைய…
-
- 2 replies
- 2.2k views
-
-
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் Whatsapp /Viber +94767776363/+94212030600
-
- 0 replies
- 770 views
-
-
வணக்கம் யாழ் உறவுகளே புலம் பெயர் நாட்டில் எனக்கு தெரிந்த அண்ணா 2009ம் ஆண்டு இறுதி கட்ட போரில் பாதிக்க பட்ட 10 குடும்பத்துக்கு ( மாதம் ஒரு குடும்பத்துக்கு 10000 ஆயிரம் ரூபாய் படி பத்து குடும்பத்துக்கு தன் சொந்த பணத்தில் உதவி செய்திட்டு இருக்கிறார் / 10 குடும்பத்துக்கும் இலங்கை காசுக்கு மாசம் ஒரு லச்சம் படி / அண்ணாவை 2000ம் ஆண்டில் இருந்து எனக்கு தெரியும் , அண்ணாவின் மனைவி டாக்டர் , அண்ணாவுக்கு மூன்று வீடுகள் இருக்கு , அதில் இரண்டு வீட்டை வாடகைக்கு விட்டு இருக்கிறார் / அவரின் மனைவியின் வருமானம் மாசம் 4500 இயுரோ 😘👏/ தங்களின் சொந்த காசில் போரால் பாதிக்க பட்ட 10 குடும்பத்துக்கு உதவினம் 👏/ இப்படி…
-
- 8 replies
- 2k views
- 2 followers
-
-
நோர்வே தமிழரின் நிதியுதவியில் மட்டக்களப்பு வாகனேரியில் புதிய மருத்துவமனை! மருத்துவ வசதிகள் இன்றி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் மட்டக்களப்பின் வாகனேரி கிராம மக்களின் அடிப்படை மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்குடன் மருத்துவநிலையம் ஒன்று பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்டுள்ளது. நோர்வே தமிழரான ‘ஏஞ்சல்’ மண்டபசேவை நிறுவனத்தின் உரிமையாளர் திரு.சுதர்சன் பத்மநாதன் அவர்களின் நிதியுதவியுடன் தமிழ் நோர்வே வள ஒன்றியம் (TNRA), மற்றும் தாயகத்திலுள்ள அஹிம்சா சமூக நிறுவனத்தின் கூட்டு அனுசரணையுடன் இந்த மருத்துவநிலையக் கட்டடம் நிறுவப்பட்டுள்ளது. புதன்கிழமை 20.03.19 இலங்கைக்கான நோர்வே தூதுவர் Thorbjørn Gaustedsæter அவர்களினால் வைபவ ரீதியாகத் …
-
- 2 replies
- 840 views
-
-
கொரொணா மனிதநேய உதவிகளை மோகண்ணா விரும்பினால் யாழ்களத்தினுடாக செய்யலாம் உங்களுக்கு தெரிந்த மனித நேய காப்பகங்கள் நிறுவனங்களின் தரவிகளை இதில் பதிந்தால் யாழ் தளத்தை பார்க்கும் பலர் உதவலாம் பார்க்கும் Nilmini: திருப்பழுகாமத்தில் இருக்கும் மகளிர் இல்லம் என்ற அமைப்பு சுற்றியுள்ள கிராமங்களுக்கு அரிசி பருப்பு பிற அத்தியாவசியமான உணவுகளை வழங்கினார்கள். Fund for Mahalirillam,Commonwealth Bank of Australia, Haymarket Sydney 2000. BSB: 062 006 , Account No: 1103 3596. Quote your name and 'Covid' with your donations pl. Mahalir Illam. www.mahalirillam.org மற்றது https://theimho.org/ ( அமெரிக்கா வாழ் தமிழ் வைத்தியர்கள் குழு ) இரண்டு அமைப்புகளையும் எனக்கு நேரட…
-
- 0 replies
- 874 views
-
-
மனிதநேயப்பணியை வாழ்த்துகின்றோம் பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றிய மத்தியகுழு உறுப்பினர் திரு தர்மலிங்கம் பாஸ்கரன் அவர்களும், ஒன்றிய உறுப்பினர் திரு சதாசிவம் வைகுந்தவாசன் அவர்களும் அவர்களின் அன்புக்குரியவர்களின் நினைவாக புங்குடுதீவில் தற்போதைய கொடிய கொரோனா நோய்ப்பரவல் காரணமாக வீடுகளில் வாரக்கணக்கில் தங்கியிருக்கும் மக்களுக்கு பாரிய நிதியுதவியுடன், உள்ளுார் அமைப்புக்களுடன் சேர்ந்து அம்மக்களுக்கு தேவையான உணவுப் பொதிகளை வழங்கி வருகின்றார்கள் இவர்களின் இம்மனித நேயப்பணியானது சரியான நேரத்தில் அங்கு வாழ்வியல் கஷ்டங்களை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு கிடைக்கச் செய்ததனையிட்டு அவர்கள…
-
- 0 replies
- 911 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேசக்கரம் அமைப்பினால் 2013ம் ஆண்டு சித்த ஆயள்வேத தோட்டம் நிறுவப்பட்டது. 2ஏக்கர் நிலத்தில் உருவான ஆயர்வேத நிலமானது செங்கலடி பிரதேசசெயலர் பிரிவில் பலாச்சோலை எனும் இடத்தில் அமைந்துள்ளது. அருகிவரும் தமிழ் பாரம்பரிய சித்த வைத்தியத்தை மேம்படுத்திப் பேணும் வகையிலும் ஆங்கில வைத்தியத்தால் குணப்படுத்த முடியாத நோய்களைக் குணப்படுத்தும் நோக்கிலும் தமிழ் மாணவர்களுக்கு சித்த வைத்தியப் பயற்சியை வழங்கவும் எம்மால் உருவாக்கப்பட்டதே சித்த ஆயர்வேத மூலிகைத் தோட்டமாகும். ஆயுர்வேத வைத்திய நிலையத்தை உருவாக்கிக் கொள்வதன் மூலம் எமது மருத்துவத்துறையை விருத்தி செய்யக்கூடிய வாய்ப்பினையும் உருவாக்க முடியும். முழுமையாக அழிந்து வரும் சித்த ஆயுர்வேத வைத்தியத்தினை எமது ம…
-
- 9 replies
- 1.1k views
- 1 follower
-
-
திருகோணமலை மாவட்டம் சந்தணவெட்டைக் கிராமத்தில் வசிக்கின்ற மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகள்
-
- 0 replies
- 1.1k views
-
-
இளம் தமிழ் பொறியியலாளரை ஆதரியுங்கள்! மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் இரு இளம் பொறியியலாளர்களது முயற்சிக்கு உலகின் முதல் நிலை பொறியியல் கல்லூரியான அமெரிக்காவின் MIT பல்கலைக் கழகத்தினால் அங்கீகாரம் கிடைத்திருக்கின்றது. இவர்களது நீர் நிலைகளை தன்னியக்கமாகச் சுத்திகரிக்கும் கருவி MIT பல்கலைக்கழகத்தின் Solve Challenge இல் இறுதி அறுபதில் ஒன்றாகத் தெரிவாகியிருக்கின்றது. உலகெங்கும் இருந்து கிடைக்கப் பெற்ற ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களில் இருந்து இவர்கள் தெரிவாகியிருக்கின்றார்கள். இவர்கள் இறுதிச் சுற்றுத் தெரிவிற்கு இம் மாதம் நியூயோர்க் நகரில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுக் கூட்டத்தொடரிற்கு செல்லவிருக்…
-
- 3 replies
- 2.6k views
-
-
France - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் நிதிப்பங்களிப்புடன் Sinnathamby Kumarathas அவர்களின் மேற்பார்வையில் எமது ஊரிலுள்ள மூலவளங்களை பாவனைக்குட்படுத்துவதனூடாகவும் அங்கு வாழும் மக்களுக்கு வேலை வாய்ப்புக்களை வளங்குவதனூடகவும் எமது மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு பசளை உற்பத்தி தொழிற்சாலை ஒன்றை நிறுவும் முயற்சியின் பரிட்சார்த்த ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சில படங்கள். …
-
- 25 replies
- 3.4k views
-