துளித் துளியாய்
தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்
துளித் துளியாய் பகுதியில் தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தாயக மக்களின் மறுவாழ்வுக்கு உதவும் தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல் வேண்டும்.
தொண்டு, பரோபகாரம் என்பவை பற்றிய பொதுவான செய்திகள், கட்டுரைகள் தவிர்க்கப்படல் வேண்டும். அவை சமூகச் சாளரம் பகுதியில் இணைக்கப்படலாம்.
351 topics in this forum
-
பிரிட்டன் தொண்டு நிறுவனத்தால் 543 பேருக்கு சைக்கிள் அன்பளிப்பு லண்டன் – இலங்கை மீள்குடியேற்றம் மற்றும் மறுமலர்ச்சி நிதியத்தின் ஏற்பாட்டில் லண்டனைச் சேர்ந்த தொண்டு நிறுவனத்தால் யாழ்ப்பாணத்தில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்களுக்கு 543 சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன. இந்தத் திட்டத்தில் முதற்கட்டமாக 143 சைக்கிள்கள் இன்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலரிடம் கையளிக்கப்பட்டன. “பிரிட்டன் மக்களால் பாவிக்காது கைவிடப்பட்ட சைக்கிள்கள் சேகரிக்கப்படுகின்றன. அவை பிரிட்டன் சிறைகளில் இருக்கும் தொழில்திறன் கொண்ட கைதிகளிடம் வழங்கப்பட்டு சீரமைக்கப்படுகின்றன. அந்தச் சைக்கிள்களே யாழ்ப்பாணத்தில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படுக…
-
- 0 replies
- 397 views
-
-
நேற்று தாயகத்திலிருந்து (மட்டக்கிளப்பு) வைபரில் ஒரு படம் வந்தது படத்தில் ஒரு தாய் ஒரு மகள் இவர் யெயந்தன் படையணியின் தளபதிகளில் ஒருவரின் மனைவி மற்றும் பிள்ளை அண்ணை என்று எழுதியிருந்தது தொலைபேசி எடுத்தேன் அந்த பிள்ளைக்கு பாடசாலைக்கு போக ஒரு சைக்கிள் கேட்கினமண்ணை என்றார் சரி சைக்கிள் என்னவிலை? என்பதற்கு 12 500 ரூபாக்கள் என்றார் உங்களிடம் 12 500 ரூபா இருந்தால் வாங்கிக்கொடுக்கமுடியுமா இந்த மாசம் ஏலாது வாற மாசம் அனுப்புகின்றேன் என்றேன் சரியண்ணை வாங்கிக்கொடுத்துவிட்டு தொடர்பு கொள்கின்றேன் என்றார் என்னை அவர்களுடன் கதைக்கும்படி தொலைபேசி இலக்கம் அனுப்பியிருந்தார் அவர்களுக்கான தேவையை பூர்த்தி செய்கின்றேன் …
-
- 12 replies
- 2.2k views
-
-
அம்பாறையில் தமிழ்க் கிராமத்தை தத்தெடுத்த ஜெர்மனியைச் சேர்ந்த யாழ். இளைஞன் அம்பாறை மாவட்டத்தில் 1990 ஆம் ஆண்டில் 52 தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்ட இடமான திராய்க்கேணி தமிழ்க் கிராமத்தை ஜெர்மனியைச் சேர்ந்த இலங்கையர் ஒருவர் தத்தெடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் பிறந்த மகான்கோடீஸ்வரன் என்பவரே திராய்க்கேணி கிராமத்தை தத்தெடுத்துள்ளார். இவர் யாழ். மானிப்பாய் இந்துக் கல்லூரியின் ஜெர்மனியக் கிளையின் உறுப்பினராவார். மகான்கோடீஸ்வரன் மற்றும் ஜெர்மனியக் கிளைத்தலைவர் கிளாரன்ஸ் செல்லத்துரை ஆகியோர், அம்பாறை மாவட்ட சமூகசேவையாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் விடுத்த அழைப்பை ஏற்று கடந்த மாதம் திராய்க்கேணி கிராமத்திற்கு சென்று பார்வையிட்டிருந்தார்கள். …
-
- 25 replies
- 2.2k views
-
-
IBC தமிழ் தொலைக்காட்சியில் பிரதி ஞாயிற்று கிழமைகளில் மத்திய ஐரோப்பிய நேரம் மாலை 7:30 மணிக்கு ( 19h 30 ) ஒளிபரப்பாகும் "லகர தொடு கரம் கொடு " நிகழ்ச்சியில் பங்குபற்ற இன்றே தொடர்பு கொள்ளுங்கள்..... இது கடந்த வரம் ஒளிபரப்பானது...
-
- 0 replies
- 725 views
-
-
அவசர உதவி. கனடிய உறவுகள் கவனத்திற்கு. கீழ் வரும் இணைப்பில் அழுத்தி செய்தியை படியுங்கள்.உறுப்பினர்கள் மட்டுமே இச்செய்தியை படிக்க முடியும். 2013 ஒரு போராளிக்கான உதவி கோரயிருந்தேன். தற்போது குறித்த போராளி உடல்நலமின்றி இருப்பதால் மீண்டு உதவியை வேண்டுகிறேன். அங்கத்தவர்கள் செய்தியை வாசியுங்கள். உதவ முடிந்தோர் உதவுங்கள். https://www.yarl.com/forum3/topic/133094-யாழ்கள-கனடிய-உறவுகளே-உங்களிடமிருந்து-அவசர-உதவி-தேவை/?page=3#comment-1265521
-
- 1 reply
- 676 views
-
-
க.பொ.த உயர்தரக் கல்வியை தொடரக் கஷ்டப்படும் 350 வறிய ஆனால் திறமையான மாணவர்களுக்கு மாதாந்தம் கல்வி கற்பதற்காக 1500 ரூபா வீதம் வழங்கப்பட்டது. நாமும் கேட்டுக் கொண்டதற்கு அமைய இப்பெரிய முயற்சியை மேற்கொண்ட வலன்ரீனா மனித நேய அமைப்பு மிகவும் பாராட்டுக்குரியது.
-
- 0 replies
- 748 views
-
-
புலம் பெயர் சமூகம் எப்படி ஈழ தமிழ் மக்களுக்கு உதவலாம்??
-
- 0 replies
- 587 views
-
-
புங்குடுதீவில் அம்பலவாணர் கலையரங்கம் திறப்புவிழா அழைப்பிதழ்
-
- 6 replies
- 1.1k views
-
-
செய்யத் துணிக கருமம் - கருணாகரன் இவளுக்கு இரண்டு கால்களுமில்லை. வயது 29. இன்னும் திருமணமும் ஆகவில்லை. முன்பு போராளியாக இருந்தாள். யுத்தம் அவளுடைய கால்களைத் தின்றுவிட்டது. புனர்வாழ்வு முகாம்வரை சென்று மீண்டவளின் முன்னே, புதிய வாழ்க்கைச் சவால்கள் நிற்கின்றன. அவற்றையெல்லாம் எப்படி எதிர்கொள்வதென்று அவளுக்குப் புரியவில்லை. கால்களும் கைகளும் உருப்படியாக இருப்பவர்களாலேயே வாழ்க்கையை எதிர்கொள்ளக் கடினமாக இருக்கும்போது கால்களில்லாதவளால் ஓரடி நகர முடியுமா? அப்படியென்றால், அவளின் கதி என்ன? இதுதான் பெரிய கேள்வியே. இப்படிப் பலர் இந்த மாதிரியான நிலைமையில், இந்த மாதிரியான கேள்விகளின் முன்னே நிறுத்தப்பட்டிருக்கிற…
-
- 0 replies
- 486 views
-
-
ஐந்நூறு கிளிநொச்சி முல்லைத்தீவு மாணவா்களுக்கு உதவி கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட ஐந்நூறு மாணவா்களுக்கு மூன்று வருடங்களுக்கு ஆயிரம் ரூபா வீதம் உதவி வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று இடம்பெற்றது. பிரதமர் அலுவலகம். சிறுவா் பெண்கள் விவகார அமைச்சு, சிறுவா் நன்னடத்தை திணைக்களம்,கிளிநொச்சி மாவட்டச் செயலகம் ஆகியவற்றின் அனுசரணையில் கொழும்பு மயூரபதி அம்மன் நலன்புரிச் சங்கத்தினால் மேற்படி உதவித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவா்களுக்கு மூனறு வருடங்களுக்கு தலா ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்படவுள்ளது. இதற்காக வங்கி கணக்கு ஆரம்பிக்கப்பட…
-
- 0 replies
- 794 views
-
-
திருமதி.நாகேந்திரர் செல்லம்மா அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட நிதி: மனிதநேயக்கரங்கள் நிறுவனம்:- 1 நிதி உதவி : இலங்கையின் முதலாவது கிராம சேவைத் தலைவி திருமதி.நாகேந்திரர் செல்லம்மா அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட நிதி திட்ட அமுலாக்கம் : மனிதநேயக்கரங்கள் நிறுவனம் 2 01. அறிமுகம் : அனர்த்தங்கள் வந்து சென்றாலும் அது தந்து விட்டுப்போன அழிவுகளின் வடுக்கள் இலகுவில் மறைந்து போவதில்லை. அத்தகைய நிலையே இன்று இலங்கையில் காணப்படுகின்றது. கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களை முழுமையாக மூழ்கடித்த கொடிய யுத்தத்தால் பல உயிர்களையும், உடமைகளையும், உடல் அங்கங்களையும் இழந்து அவற்றின் வலிகளில் இருந்து மீண்டு வர மு…
-
- 2 replies
- 839 views
-
-
புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் நிர்வாகக்கூட்டத்தில் தாயகத்துக்கும் ஊருக்குமாக இந்த வருடம் (2016) செய்வதற்காக எடுக்கப்பட்ட முடிவுகள். 2016ம் ஆண்டிற்கான திட்டங்களின் செயற்பாட்டு முடிவுகள் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் நிர்வாகக்கூட்டத்தில் தாயகத்துக்கும் ஊருக்குமாக இந்த வருடம் (2016) செய்வதற்காக எடுக்கப்பட்ட முடிவுகள். 1. புங்குடுதீவு ஸ்ரீ சுப்பிரமணியம் மகளீர் வித்தியாலய மாணவர்களுக்கான சீருடைகள் வித்தியாலய அதிபர் அவர்களால் பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அப்பாடசாலைக்கு எமது ஒன்றிய ஆதரவில் இயங்கும் ஆடைத் தொழிற்சாலையின் பணிப்பாளரால் நேரடி…
-
- 6 replies
- 446 views
-
-
பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் நிதியுதவியுடன் வன்னியில் ஆடைத்தொழில்சாலை பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் வருடம் தோறும் எமது தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் திட்டத்தின்கீழ் இவ்வருடம் ஒன்றியம் வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதார உதவித்திட்டத்திற்காக ஓர் மாதிரி ஆடைத்தொழில்சாலை ஒன்றினை தேசிய அரச சார்பு நிறுவனமான« சமூக பொருளாதார சிறுவர் அபிவிருத்தி நிறுவனம் »த்துடன்இணைந்து அவர்களின் மேற்பார்வையுடன் அதனை செயற்படுத்துவதற்கு நிதியுதவி அளித்துள்ளோம். இத்திட்டத்தின் மூலம் முதலில் 5 குடும்பங்களுக்கு அவர்களின் குடும்பத்தலைவிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்குவதுடன் 6மாதத்தில் அதன் எண்ணிக்கையினை 10…
-
- 34 replies
- 5.1k views
-
-
“அக விழி திறப்போம்” இது ஒரு மாணவ சமூகத்தை நல்வழிபப்டுத்தும் செயற்திட்டமாகும் மது பாவனை, போதை வஸ்து, புகைத்தல், பாலியல்து துர்நடத்தை ஆகியவற்றில் இருந்து மாணவ சமூகத்தை நல்வழிபப்டுத்தும் செயற்திட்டம்” அண்மையில் (2016.11.07) திகதி கிளிநொச்சி மாவட்ட கல்வி கலாசார அமையத்தின் ஏற்பாட்டில் கனடா வாழ் தேசத்து உறவான செந்தில் குமரனின் நிதி பங்களிப்பு ஊடாக அகவிழி திறப்போம் என்னும் கருப்பொருளில் கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான தலைமைத்துவ கருத்தரங்கு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் முதற்கட்ட்மாக கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த 150 க்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர் தாயக மாவட்ட்ங்…
-
- 0 replies
- 428 views
-
-
தாயக உறவுகளுக்கு உதவிய கனடா வாழ் உறவுகள் இலங்கையில் தமிழர் தாயக விடுதலைப் பயணத்தின்போதும் அதன் அசம்பாவிதங்களிலும் பாதிப்புகுள்ளாகி மாற்றுத்திறனாளிகளாகி வாழ்க்கையில் பெரும் சவாலை எதிர்கொள்ளும் உறவுகளின் நலனை கவனிக்க அவர்களாலேயே உருவாக்கப்பட்டு இயங்கி வரும் உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்புற்றோர் அமைப்பு தன் பணிகளை மேலும் விரிவுபடுத்தவுள்ளது. இந் நிலையில் தன் பணிகளை விரிவாக்கி செயற்படவிருக்கும் கட்டடத் தொகுதி நிர்மாணத்திற்கான பொறுப்பை கனடா பிரம்டன் வாழ் உறவுகள் ஏற்றுள்ளதாக பிராம்டன் தமிழ் ஒன்றியத்தினர் தெரிவித்துள்ளனர். இதன் முதற்பகுதியாக 12 இலட்சத்து 54ஆயிரம் ரூபாய்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 420 views
-
-
வடமராட்சி கிழக்கில் மாணவர்கள் கௌரவிப்பு வடமராட்சி கிழக்குப் பிரதேச செயலாளர் பிரிவில் திறைமை உள்ள மாணவர்கள் இந்த ஆண்டு முதல் கௌரவிக்கப்படவுள்ளனர். அவுஸ்ரேலியாவில் வசித்து வரும் அன்பர் ஒருவருடைய நிதி உதவியினூடாக இக் கௌரவிப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது. வடமராட்சி பிரதேச செயலாளர் க.கனகேஸ்வரன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அப்பகுதி பிள்ளைகளின் கல்வியை மேம்ப டுத்துவதற்காக இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இதற்கமைய தரம் 5புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை, க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டவர்கள், இணை…
-
- 0 replies
- 649 views
-
-
வன்னியில் இருக்கும் உறவுகளோடு நம் குடும்பத்து நிகழ்வுகளை எப்படிக் கொண்டாடி மன நிறைவு கொள்ளலாம் என்று தனிப்பட்ட முறையில் எனக்குத் தனி மடலில் நண்பர்கள் பலர் இந்த இல்லங்கள் குறித்த விபரங்களைத் தனி மடலில் கேட்டிருந்தீர்கள். நம் வீட்டில் நிகழும் பிறந்த நாள், திருமணம், திருமண நாள் மற்றும் நினைவு நிகழ்வுகளை இவ்வண்ணம் நீங்கள் வன்னியில் இருக்கும் எம் குழந்தைகளோடு கொண்டாட விரும்பினால் இதோ செலவு மற்றும் மேலதிக தொடர்பு குறித்த விபரங்கள். நீங்கள் நேரடியாகக் கலந்து கொள்ள முடியாத சந்தர்ப்பத்திலும், இவர்களுக்குப் பணம் அனுப்புவதன் மூலம் குறித்த நாள் நிகழ்வை அவர்கள் கொண்டாடுவார்கள். செலவுக்கான ரசீதும் அனுப்பி வைக்கப்படும். இதை உங்கள் உறவினர் நண்பர்களுக்கும் பகிர்ந்திடுங்கள். கா…
-
- 0 replies
- 1.2k views
-
-
துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பு சுவிஸ்நாட்டில் வாழ்ந்து வரும் புலம்பெயர் தமிழர் ஒருவர் தனது மகளின் பிறந்த நாளை முன்னிட்டு வறுமை கோட்டிற்கு கீழ்வாழும் 11 மாணவர்களுக்கு இலவச துவிச்சக்கர வண்டிகளை வழங்கியுள்ளார். சுவிஸ் நாட்டில் வசித்து வரும் புலம்பெயர்ந்த தமிழர் ஒருவர் தனது மகள் கீர்த்திகாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்றையதினம் 11 துவிச்சக்கர வண்டிகளை வழங்கியுள்ளார். இந்நிகழ்வு வடமாகாண முதலமைச்சர் விக்னே ஸ்வரன் தலைமையில் கைதடியில் அமைந்துள்ள மாகாணசபையில் இடம்பெ ற்றது. யாழ் பல்கலைக்கழக சிரேஸ்ட போராசிரியர் புஸ்பரட்ணம் மூலம் குறித்த நிதியுதவி வழங்கப்பட்டது.. இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வ…
-
- 7 replies
- 943 views
-
-
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுயதொழில் செய்வதற்கு உதவி வழங்கும் திட்டம் அனர்த்தங்கள் வந்து சென்றாலும் அது தந்துவிட்டுப்போன அழிவுகளின் வடுக்கள் இலகுவில் மறைந்து போவதில்லை மூன்று தசாப்தங்களை முழுமையாக மூழ்கடித்த கொடிய யுத்தத்தால் பல உயிர்களையும், உடமைகளையும், உடல் அங்களையும் இழந்து அவற்றின் வலிகளில் இருந்து மீண்டு வரமுடியாமல் குறிப்பாக வடக்கு கிழக்கு மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். நடந்து முடிந்த யுத்தத்தில் பாதிப்புக்குள்ளானவர்களில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்களே. ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த மனித குலத்தில் உரிமைகள் மறுக்கப்பட்ட சமுதாயத்துக்காக போராட்டத்தை முன்னெடுக்கும் போது அந்த சமுதாயத்தின் பிரதி நிதியாக இருக்கின்ற மக்களே விடுதலையின் விடியலாக உருவெ…
-
- 0 replies
- 558 views
-
-
யாழ்.இந்துக் கல்லூரியின் 2005 உயர்தர மாணவர்களால் கடந்த 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 7 பாடசாலைகளுக்கு 45 சைக்கிள்கள் வழங்கப்பட்டன. கடந்த 3 வருடங்களாக யாழ் இந்துக் கல்லூரியின் 2005 உயர்தர மாணவர்கள் பல கல்விக்கான செய்ற்றிட்டங்களை குறிப்பாக வன்னிப் பகுதியில் யுத்ததினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மற்றும் பாடசாலைகளுக்கு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் 2016ஆம் ஆண்டுக்கான கல்விக்கான செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக கடந்த பெப்ரவரி 9ஆம் திகதி தெரிவு செய்யப்பட்ட உயர்தர மற்றும் சாதாரணதர மாணவர்களுக்கான கடந்த கால வினாத்தாள்கள் மொத்தமாக பத்தொன்பது பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டன. அதன் அடுத்த கட்டமாக மேமாதம் 13ஆம் திகதி அம்பலவன்பொக்கணை அ.த.க…
-
- 0 replies
- 731 views
-
-
புலம்பெயர் உறவான லண்டனைச் சேர்ந்த பரஞ்சோதி லோகஞானம் தனது பெற்றோரின் 29வது வருட திருமண நாள் நிறைவை முன்னிட்டு நேற்று (17.07.2016) வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக முல்லைத்தீவு மாவட்ட அமரா குடும்பத்தலைமை தாங்கும் பெண்களின் ஒன்றியத்திற்கு உலர்உணவுப்பொருட்களும் வள்ளுவபுரம் மாணவி ஒருவருக்கு புதிய துவிச்சக்கர வண்டி மற்றும் பாரதி இல்ல பிள்ளைகளுக்கு சிறப்பு மதிய உணவினையும் வழங்க, 56300 ரூபா நிதி அனுசரனையினை வழங்கியுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அமரா குடும்பத்தலைமை தாங்கும் பெண்களின் ஒன்றியத்தின் கோரிக்கைக்கு அமைய புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பத்து குடும்பங்களுக்கு தலா 2000 பெறுமதியான 20000ரூபா பெறுமதியில் உடையார்கட்டு தெற்க…
-
- 1 reply
- 574 views
-
-
மத்திய - மாகாண கல்வி அமைச்சர்கள் - அதிகாரிகள் நித்திரையா? நெடுந்தீவு பாடசாலைகளுக்கு ஆங்கில ஆசிரியர் இல்லாத குறையை நெடுந்தீவு ஒன்றியம் (ஐக்கிய இராச்சியம்) நிபர்த்தி செய்துள்ளது. நெடுந்தீவுக் கோட்டக்கல்வி அதிகாரி திருமதி சாரதாதேவி கிருஷ்ணதாஸ் அவர்கள் நெடுந்தீவு ஒன்றிய பொருளாளர் மாலினி தர்மலிங்கம் அவர்களை தொடர்வு கொண்டு ஆங்கில ஆசிரியர் அவசியம் பற்றி எடுத்து கூறியதன் எடுத்துக் கூறியனை அடுத்து அல்பிறட் டேனிகிளாஸ் M,A(ind English) அவர்களை ஒன்றிய நிர்வாகசபையின் ஒப்புதலுடன் ஒன்றியத் தலைவர் கந்தையா புண்ணியமூர்த்தி நியமித்துள்ளார். இவ் ஆங்கில ஆசிரியர் வாரத்தின் மூன்று நாட்கள் நெடுந்தீவு மகா வித்தியாலயத்திலும் வாரம் இரு தினங்கள் நெடுந்தீவு சைவப்பிரகாசா வி…
-
- 5 replies
- 717 views
-
-
புலம்பெயர்ந்து வாழும் ஒருவரின் 1 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் மானிப்பாய், மருதடி விநாயகர் ஆலயத்தில் 10 மலசலகூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் மருதடி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த உற்சவ காலத்தில் பல இடங்களிலிருந்தும், பக்தர்கள் வருகை தருவார்கள். அத்துடன், ஆலய வளாகத்தில் தங்கியிருந்து வியாபார நடவடிக்கையிலும் சிலர் ஈடுபடுகின்றனர். இவர்களுக்காக திருவிழாக்காலங்களில் தற்காலிக மலசலகூடங்கள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் நிரந்தர மலசலகூடம் அமைப்பதற்கு தீர்மானித்த ஆலய தர்மகத்தா சபையினர் கனடா வாழ் புலம்பெயர் தமிழர் ஒருவரிடம் இருந்து நிதியைப் பெற்றனர். அந்நிதியைக் கொண்டு ஆலயத்தின் தெற்குப் பக்கமாகவுள்ள குளத்துக்கு அருகாமையில் இருபாலாருக…
-
- 18 replies
- 1.2k views
-
-
யுத்த களத்திலிருந்து ஒரு சமையல் புத்தகம் கீதா சுகுமாரன் https://www.facebook.com/palmeraprojects/ https://www.palmera.org/handmade/ அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட காழ்போ னல்விளர் நறுநெய் தீண்டாது அடைஇடைலக் கிடந்த கைபிழி பிண்டம் வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய் தட்ட வேளை வெந்தை வல்சி யாகப் பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும் உயவற் பெண்டிரேம் அல்லேம் போர்க்களத்தில் கணவனை இழந்தபின் விதவை வாழ்நிலையைப் பற்றிய இப் புறநாநூற்று வரிகள் (புறம் 246) பெரிதும் அறிந்ததுதான். இங்கே நெய் தீண்டாமல், நீரிலிருந்து பிழிந்தெடுத்த சோறும் எள்ளின் விழுதும் கலந்த உணவே அந்தப் பெண்ணின் நலிவுற்ற வாழ்முறையின் உடலாகச் செயல்படுகிறது. தனக்குக் கிடைக்கா…
-
- 0 replies
- 1.3k views
-
-
வணக்கம் உறவுகளே கணிணி, கைப்பேசி இணையம் மூலம் நடைபெறும் தொழில்களை கற்று தனது உழைப்பில் முன்னேற விரும்பும் தாயக உறவுகளுக்கு மட்டும் என்னால் இயன்ற அளவு கட்டணமில்லாமல் கற்றுக்கொடுத்து வருகிறேன்.. விருப்பமுள்ள தமிழீழ தாயக உறவுகள் எம்மை தொடர்புகொள்ளவும்.. பெரியார்தளம் அகரன் whatsapp: +918973979933
-
- 0 replies
- 534 views
-