துளித் துளியாய்
தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்
துளித் துளியாய் பகுதியில் தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தாயக மக்களின் மறுவாழ்வுக்கு உதவும் தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல் வேண்டும்.
தொண்டு, பரோபகாரம் என்பவை பற்றிய பொதுவான செய்திகள், கட்டுரைகள் தவிர்க்கப்படல் வேண்டும். அவை சமூகச் சாளரம் பகுதியில் இணைக்கப்படலாம்.
350 topics in this forum
-
200ஏக்கர் நிலத்தில் உருவாகும் மாதிரிக்கிராமம். மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலக பிரிவக்கு உட்பட்ட காரமுனை பகுதியில் நேசக்கரம் கைவினைப் படைப்பாளிகள் அமைப்பினால் 99வருட குத்தகைக்கு 200ஏக்கர் காணி பெறப்பட்டுள்ளது. போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாடு சுயதொழில் ஊக்குவிப்புகளை உயர்த்தும் வகையில் மேற்படி காணி பெறப்பட்டுள்ளது. இந் நிலத்தினை மாதிரிக் கிராமமாக உருவாக்கும் எமது முயற்சிக்கு ஆதரவுகளை வேண்டி நிற்கிறோம். பாற்பண்ணை, மீன் வளர்ப்பு, சேனைப்பயிர்ச்செய்கை ,கால்நடை வளர்ப்பு போன்றவைகள் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேலதிக விபரங்கள் பெற்றுக் கொள்வோர் கீழ்வரும் விபரங்களில் பெற்றுக் கொள்ளலாம். Shanthy +49 (0)678…
-
- 1 reply
- 1.4k views
-
-
தாயக ஏதிலிகள் நலன் பேணும் அமைப்பின் புதுத் திட்டம் அறிமுகம் திகதி: 03.02.2010 // தமிழீழம் உலகெங்கும் வாழும் எம் இனிய தேசத்து உறவுகளே! கோண்டாவில், யாழ்ப்பாணம், (பெப்ரவரி 01, 2010) - தாயக ஏதிலிகள் நலன் பேணும் அமைப்பு, இன்றைய கால சூழலுக்கு தகுந்தவாறு மீள் உருவாக்கம் பெற்று, "உதவி" எனும் பெயரில் ஒரு புதிய திட்டத்துடன் மீண்டும் எம்மவர் மத்தியில் எமது உறவுகளுக்கான பணியினை ஆரம்பித்துள்ளது. நாலாங்கட்ட ஈழ யுத்தத்தின் கொடூரங்களும் அதனால் ஏற்பட்ட பின் விளைவுகளும் அனைவரும் அறிந்த விடயமே. சொல்லவெண்ணா துயரங்களுக்குள் ஆழ்த்தப்பட்ட எம் இனிய உறவுகளுக்கு ஏழு மாத காலங்கள் ஆன பின்பும் கூட நாளாந்த வாழ்க்கையே ஒரு பெரும் கேள்விக்குறியாக உள்ளது. தமது இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ளா …
-
- 0 replies
- 941 views
-
-
தாயக உறவுகளுக்கு உதவும் பிரென்சு மனிதநேய அமைப்பு ! தாயக உறவுகளுக்கு உதவும் பிரென்சு மனிதநேய அமைப்பு ! பிரான்சை தளமாக கொண்டு இயங்கும் அதிசயம் Chiromission அமைப்பு தாயகத்தில் மனிதநேயப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது தமிழர் தாயகத்தில் முகாமிட்டுள்ள இந்த அமைப்பினர், நரம்பு மற்றும் தசை பிரச்சனைகளுக்கு உள்ளாகியுள்ள உறவுகளுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கி வருகின்றனர். தாயகத்தின் வேலணை, உரும்பிராய், கைதடி, முல்லைத்தீவு, வல்லிபுரம் ஆகிய பகுதிகளில் நடமாடும் சேவையினை இந்த அமைப்பினர் சமீபத்தில் நடாத்தியிருந்தனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது. https://news.ibctamil.com/ta/internal-affai…
-
- 0 replies
- 763 views
-
-
க.பொ.சாதாரணதர மாணவர்களுக்கான பயிற்சிப்பாசறை எமது நேசக்கரம் அமைப்பின் உப அமைப்பான மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியமானது 2013 கா.பொ.த.சாதாரண தர பரீட்சையில் தோற்றும் போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் மாணவர்களுக்கான 02 நாள் பயிற்சிப் பாசறைகளை மேற்கொள்ளவிருக்கின்றனர். 6நிலையங்களில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பயிற்சிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கான பயிற்சிகளை வழங்கி அவர்களது அடைவு மட்டத்தினை அதிகரிக்கச் செய்வதோடு தேவைப்படும் பாடங்களுக்கான மேலதிக விளக்க வகுப்புகளையும் நடாத்தவுள்ளோம். கணிதம் , விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் சிறப்பு சித்தியடையும் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் மேற்படி பாடங்களுக்கான சிறப்பு பயிற்சிகளையும் மாணவர்களுக்கு வழங்கவுள்ளோம். விஞ்ஞான , கணித ப…
-
- 0 replies
- 500 views
-
-
நிவாரண உதவிப் பொருட்களை பொதுமக்கள் வழங்குவதற்காக யாழ். மருத்துவ பீடத்தில் பொருட்கள் சேகரிப்பு மையம் ஒன்றை ஆரம்பித்து உள்ளோம். இன்றைய தினம் காலை 7.00மணியிலிருந்து பிரதான வாயில் அமைந்துள்ள பகுதியில் (ஆடியபாதம் வீதி) அமைக்கப்பட்ட இடத்தில் சேகரிப்பு மையம் உள்ளது. உதவி செய்ய விரும்பும் மக்கள் உடனடித் தேவையான பொருட்களான - குழந்தையுணவுகள் (பிஸ்கட், பால்மா, ரஸ்க்) - அணையாடைகள் ( Sanitary pads & Diaper) (பெண்களுக்கு & குழந்தைகளுக்கு) - குழந்தைகளுக்கான சோப் - தொற்றுநீக்கிகள் - நுளம்புவலை - பிளாஸ்டிக் பாய் - படுக்கை விரிப்புகள் - தேயிலை - பால்மா - சீனி - நுளம்புத் திரி - பிஸ்கெட் வகைகள் - பொதி செய்யப்பட்ட உணவுகள் - தண்ணீர் போத்தல்கள் - தறப்பாள் - Towels போன்றவற்றை…
-
-
- 1 reply
- 126 views
- 1 follower
-
-
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் Whatsapp /Viber +94767776363/+94212030600
-
- 0 replies
- 768 views
-
-
யோகர் சுவாமிகள் திருவடி நிலைய முதியோர் இல்லம் யோகர் சுவாமிகள் திருவடி நிலைய முதியோர் இல்லம் வன்னேரிக்குளம் ஜயனார்புரம் எனும் இடத்தில் 1998 இல் இருந்து இயங்கி வந்த இல்லம் இடப்பெயர்வின் பின் 2015ம் தொடக்கம் மீள இயங்கி வருகிறது. 22 ஏக்கர் பரப்பளவுள்ள மரங்கள் சுழவுள்ள இவ்வில்லத்தில் தற்போது 22 ஆண்களும் 13 பெண்களும் இங்கு தங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளை தங்களது உறைவிடங்களாக கொண்டவர்களாயினும் தற்போது பராமரிப்பார் இல்லாத காரணத்தினால் கிராமசேவகரது அத்தாட்ச்சியுடன் இங்கு அனுமதிக்கப்பட்டடுள்ளனர். இவர்களை பராமரிக்க மற்றும் இல்ல நிர்வாகத்திற்கென 11 பணியாளர்களும் , தோட்டம் மாடுகள் பராமரிக்க 3 பணியாளர்களும் இங்குள்ளனர். கிழமைய…
-
- 2 replies
- 2.2k views
-
-
நேசக்கரம் கணணிப்பயிற்சி முன்னேற்றம் எவ்வாறுள்ளது ? நேசக்கரம் இலவச கணணிப்பயிற்சி நிலையமொன்றினை 15.12.2012நடராஜா ஆனந்தா வீதி நாவற்குடா கிழக்கு மட்டக்களப்பில் ஆரம்பித்திருந்தோம். நேசக்கரம் கணணிப்பயிற்சி நெறியினை நடாத்துவதற்கான கணணிகளுக்கான உதவியை அமெரிக்காவிலிருந்து தவேந்திரராஜா ஐயா அவர்கள் முன்வந்து வழங்கியிருந்தார். இம்மாதத்தோடு எமது கணணிப்பயிற்சி வகுப்புகள் ஆரம்பமாகி 4மாதங்களாகின்றது. எமது இலவச கணணிப்பயிற்சியை யுத்தத்தாலும் சுனாமியாலும் பாதிப்புற்ற குடும்பங்களிலிருந்து 75 மாணவர்களும் வேலை வாய்ப்புத் தேடும் 40 இளைஞர் யுவதிகளும் , தொழில் செய்து கொண்டிருக்கும் பெரியவர்கள் 10 பேரும் பயிற்சியைப் பெற்று வருகின்றனர். நிலையத்திற்கான பராமரிப்பு , மின்கட்டணம் போன்றவற்ற…
-
- 0 replies
- 649 views
-
-
வன்னியில் ஓர் தனித்துவ இசைத்தேர்வு கிளிநொச்சி மாவட்ட மாகாண தேன்சிட்டு இசைவிருது 2014 முன்னோடி குரல் தேர்வு 13.12.2014 அன்று கிளிநொச்சி ப்ரண்ட்ஸ் ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது. யோ.புரட்சி நிகழ்ச்சியை தொகுக்க, பரந்தாமன் கவின்கலைக் கல்லூரி இயக்குனர் சவுந்தரராஜா நிகழ்ச்சியை நெறியாள்கை செய்தார். திறன்மிகு கிளிநொச்சி மாவட்ட பாடகர்கள் நிகழ்வை கலந்து சிறப்பித்தனர். வசந்தம் பண்பலை நிகழ்ச்சி முகாமையாளர் திரு கிருபா, அறிவிப்பாளர் பிரதாப் ஆகியோரும் கலந்துகொண்டனர். நடுவர்கள் :- காலாவித்தகர் இரா. சிவராமன் , இசையமைப்பாளர் இ.தேவகுமார் , சங்கீத ஆசிரியை ஜெயந்தி ஆகியோரின் பங்களிப்பானது நிகழ்வை மேலும் சிறப்பித்திருந்தது. போட்டி மூன்று சுற்றுக்களாக நடைபெற்றது. மூன்றாம் சுற்றில் பக்க வாத…
-
- 0 replies
- 616 views
-
-
போரினால் பாதிக்கப்பட்டு வவுனியா மாவட்டம் ஆனந்த குமாரசுவாமி முகாமில் தங்கியிருந்து புளியங்குளம் அ.த.க.பாடசாலையில் கல்வி கற்கும் 59 மணவ மாணவியர்களுக்கான பாதணிகளை வழங்கும் திட்டத்திற்காக நேசக்கரம் அமைப்பானது உதவும் மனம்படைத்த புலம்பெயர் தமிழ் உறவுகளிடம் உதவிகள் கோரியிருந்தது. மேற்படி மாணவர்களுக்கான உதவிகளை பல நல்லுள்ளங்கள் முன்வந்து உதவியிருக்கிறார்கள். 28.06.2011அன்று மேற்படி மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கப்பட்டுள்ளது. உதவிகளை முன்வந்து வழங்கிய நல்லிதயங்களுக்கு அம் மாணவர்களின் சார்பாக நேசக்கரம் அமைப்பு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது. இத்திட்டத்திற்கான பங்களிப்பு வழங்கியோரின் பெயர் விபரங்கள் கிடைத்த தொகை ஆகிய விபரங்கள் PDFவடிவில் இணைக்கப்பட்டுள்ளது. கீழ் உள்ள…
-
- 8 replies
- 1.6k views
-
-
ஆனந்தபுரம் நிலத்திற்கு மரங்கள் தேவை. மட்டக்களப்பு ஆனந்தபுரம் கிராமத்தின் குடியேறியுள்ள பாதிக்கப்பட்ட மக்களின் மீள வாழ்வுக்கான பணிகளை நேசக்கரம் அமைப்பின் உப அமைப்பான தேன்சிட்டு அமைப்பானது முன்னெடுத்து வருகிறது. இக்கிராமத்திற்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் குளாய்கிணறுகள் அமைக்கப்பட்டு மக்களின் தண்ணீர் தேவையானது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் தேவையை நிறைவு செய்ய புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் அமைப்பின் நிதியுதவியில்12 குளாய்கிணறுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இக்கிராமத்தின் புவியில் அமைவுக்கேற்ற வகையிலான பயன்தரு மரங்கள் நாட்டுவதற்கான உதவிகளை வேண்டுகிறோம். முதலில் குடும்பமொன்றுக்கு 10 தென்னைமரங்களை வழங்க விரும்புகிறோம். ஒரு தென்னங்கன்ற…
-
- 1 reply
- 996 views
-
-
ஒக்ரோபர்மாதம் 2011 கணக்கறிக்கை ஒக்ரோபர் 2011 கணக்கறிக்கை கணக்கறிக்கையினை PDF Fileவடிவில் இணைத்துள்ளோம். கீழ் வரும் இணைப்பில் அழுத்தி கணக்கறிக்கையினைப் பாருங்கள். ஒக்ரோபர்மாதம் 2011 கணக்கறிக்கை வளமையாக ஒவ்வொரு 5ம் திகதிக்குள்ளும் வெளியிடப்படும் கணக்கறிக்கை இம்மாதம் 8ம் திகதி வரை தாமதமானதற்காக உறவுகள் மன்னிக்கவும். ஜெகதீஸ்வரனின் மருத்துவத்திற்காக உங்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதியின் கணக்கறிக்கையை அவரது அக்காவிடமிருந்து பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது. இன்றுதான் ஜெகதீஸ்வரனின் அக்காவின் கடிதம் கணக்கறிக்கை கிடைக்கப்பெற்றது. அதனையும் இம்மாத அறிக்கையுடன் இணைத்துள்ளோம். *உதவிய அனைவருக்கும் இதயம் நிறைந்த நன்றிகள்*
-
- 0 replies
- 761 views
-
-
அவசர உதவி. கனடிய உறவுகள் கவனத்திற்கு. கீழ் வரும் இணைப்பில் அழுத்தி செய்தியை படியுங்கள்.உறுப்பினர்கள் மட்டுமே இச்செய்தியை படிக்க முடியும். 2013 ஒரு போராளிக்கான உதவி கோரயிருந்தேன். தற்போது குறித்த போராளி உடல்நலமின்றி இருப்பதால் மீண்டு உதவியை வேண்டுகிறேன். அங்கத்தவர்கள் செய்தியை வாசியுங்கள். உதவ முடிந்தோர் உதவுங்கள். https://www.yarl.com/forum3/topic/133094-யாழ்கள-கனடிய-உறவுகளே-உங்களிடமிருந்து-அவசர-உதவி-தேவை/?page=3#comment-1265521
-
- 1 reply
- 671 views
-
-
சிறுநீரகங்களை இழந்த ஜெகதீஸ்வரனுக்கான மருத்துவ உதவிக் கணக்கறிக்கை இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளி ஜெகதீஸ்வரனின் மருத்துவ உதவியினை அவரது குடும்பத்தினர் புலம்பெயர் உறவுகளிடம் வேண்டியிருந்தனர். அவர்களது வேண்டுதலை ஏற்று உதவிய உறவுகளுக்கு எங்கள் இதயம் நிறைந்த நன்றிகள். ஜெகதீஸ்வரனுக்கு மருத்துவ உதவி கணக்கறிக்கை ஜெகதீஸ்வரனின் அக்கா எழுதிய நன்றிக்கடிதம் வருமாறு :-
-
- 0 replies
- 980 views
-
-
புலமைப்பரிசில் சித்தியடைந்த 88மாணவர்களுக்கான நேசக்கரம் கௌவிப்பு நிகழ்வு. மண்முனை மேற்கு கல்வி வலய பாடசாலைகளின் அதிபர் சங்கமும் நேசக்கரம்பிறைட் புpயூச்சர் அமைப்பின் உப அமைப்பான அரவணைப்பு அமைப்பும் இணைந்து 88 புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு மட்டகளப்பு கரடியானாறு மகாவித்தியாலய மண்டபத்தில் 29.10.2013 அன்று கோட்டக்கல்விப் பணிப்பாளர் முருகேசுப்பிள்ளை (ஏறாவூர்பற்று மேற்கு) தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் பிறைட் பியுச்சர் நேசக்கரம் அமைப்பின் அமைப்பாளர் திரு.ஜனனன் , சமூக ஒருங்கிணைப்பாளர் திரு. ரஜிகாந்த் ,அரவணைப்பு அமைப்பின் தலைவர் திரு.றொஷான் , செயலாளர் திரு.அருணா , முன்னாள் மாகாண கல்விப்பணிப்பாளர் திரு.எ.எம்.இ.போல் , பிரதேச செயலாளர் ஏறாவூர்பற…
-
- 2 replies
- 613 views
-
-
கனடாவிலிருந்து யாழில் தொழிற்சாலை அமைத்த ஒருவர்
-
- 12 replies
- 1.5k views
-
-
புங்குடுதீவு மகாவித்தியாலயத்திற்கான சுற்றுமதிலுக்கான திருத்த வேலைகளும் வர்ணம் பூசுதலும் புங்குடுதீவு மகா வித்தியாலயத்தின் 75ஆவது நிறைவை கொண்டாடும் விதமாக நடைபெற இருக்கும் பவளவிழாவை (26/04/2021) முன்னிட்டு 2015ம் ஆண்டு பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் 6.66 மில்லியன் ரூபா செலவில் புங்/மகாவித்தியாலயத்திற்கு பாடசாலையையும் மைதானத்தையும் இணைத்து நிர்மானிக்கப்பட்ட 620மீட்டர் நீளமும் 1.8மீட்டர் உயரமுமான சுற்றுமதிலுக்கு திருத்த வேலைகளும் வர்ணம் பூசுதலும் தேவைப்படுவதாக பாடசாலை பவளவிழாக் குழுவினரூடாக பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலனை செய்த ஒன்றிய நிர்வாகம் கொரோனா காலப் பகுதி என்றாலும் கூட இணைய வழியில் ஒன்று கூடி உடனடிய…
-
- 3 replies
- 1.2k views
-
-
சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய ஆலோசனை சபை உறுப்பினர்களுள் ஒருவரான திரு.கைலாசநாதன் (குழந்தை) அவர்கள், தான் பணிபுரியும் பேர்ன் நகரிலுள்ள சிலோவா வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் (Stifftung Klinik SILOAH Worb Str-316 3073GUMLIGEN) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” சார்பில் விடுத்த வேண்டுகோளுக்கமைய, சிலோவா வைத்தியசாலை நிர்வாகத்தினரால் திரு. கைலாசநாதன் அவர்களிடம் கையளிக்கப்பட்ட வைத்தியசாலை தேவைக்கான ஒரு தொகை பொருட்கள், புங்குடுதீவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது நீங்கள் அறிந்ததே. பேர்ன், சிலோவா வைத்தியசாலை நிர்வாகத்தினரால் கையளிக்கப்பட்ட வைத்தியர்கள் பயன்படுத்தும் உடைகள், சத்திர சிகிச்சைக்குப் பயன்படும் உடைகள், மற்றும் நோயாளிகள் பயன…
-
- 1 reply
- 577 views
-
-
தொழில் நிறுவனம் மூலம் நீங்களும் உதவலாம் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டினை உயர்த்தும் முகமாக இவ்வருடம் 3ம் மாதம் இலங்கையின் நிறுவனங்களுக்கான சட்ட வரைபுக்கு அமைய HAND MADE CREATORS (PVT) Ltd என்ற பெயரில் நிறுவனமொன்றை ஆரம்பித்துள்ளோம். இந்த நிறுவனத்தின் நோக்கம் :- 1) போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கானதும் வறுமையால் வாடும் தமிழர்களுக்குமான வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல். 2) சிறு சிறு முதலீடுகள் மூலம் தொழில் முயற்சிகளை முன்னெடுத்தல். 3) சிறு சிறு வியாபாரங்களை ஆரம்பித்தல். 4) கிடைக்கும் வருமானத்தின் மூலம் ஏழை மாணவர்களுக்கான கல்விக்கு உதவுதல். எமது நிறுவனத்தின் பதிவுச் சான்றிதழ் :- இத்திட்டத்தில் இணைந்து கொள்ள விரும்புவோர் எ…
-
- 7 replies
- 1k views
-
-
புலம்யெர் வாழ் தமிழர்களே ஒரு குழந்தைக்கு கல்வி கொடுங்கள். 25.08.2013 அன்று 5ம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெற்றுள்ளது. எமது அமைப்பானது ‘நேசம்’ இலவச கல்வித்திட்டத்தின்கீழ் இந்த ஆண்டு (2013) 5ம் தர புலமைப்பரிசில் மாணவர்களுக்கென வடகிழக்கு பகுதிகளில் 15000 மாணவர்களை உள்வாங்கி இலவச வழிகாட்டடிகளையுத் தயாரித்து வழங்கியும் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் பயிற்சிப் பாசறைகளையும் நடாத்தியுள்ளோம். இவ்வாண்டு 03 வழிகாட்டிகள் வருமாண்டு 06 வழிகாட்டிகள் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளோம். வழிகாட்டி கையேடுகள் பயிற்சிப்பாசறைகள் நடாத்த ஆதரவு தந்த அனைத்து உறவுகளுக்கும் மாணவர்கள் பெற்றோர் சார்பாக நன்றிகளைத் தெரிவிக்கிறோம். நேசம் இலவச கல்வித் இத்திட்டத்தை எம்மால் உருவா…
-
- 0 replies
- 605 views
-
-
“அக விழி திறப்போம்” இது ஒரு மாணவ சமூகத்தை நல்வழிபப்டுத்தும் செயற்திட்டமாகும் மது பாவனை, போதை வஸ்து, புகைத்தல், பாலியல்து துர்நடத்தை ஆகியவற்றில் இருந்து மாணவ சமூகத்தை நல்வழிபப்டுத்தும் செயற்திட்டம்” அண்மையில் (2016.11.07) திகதி கிளிநொச்சி மாவட்ட கல்வி கலாசார அமையத்தின் ஏற்பாட்டில் கனடா வாழ் தேசத்து உறவான செந்தில் குமரனின் நிதி பங்களிப்பு ஊடாக அகவிழி திறப்போம் என்னும் கருப்பொருளில் கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான தலைமைத்துவ கருத்தரங்கு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் முதற்கட்ட்மாக கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த 150 க்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர் தாயக மாவட்ட்ங்…
-
- 0 replies
- 422 views
-
-
யுத்தத்தின் விளைவுகளால் தனது கால் ஒன்றினை இழந்து மற்றைய காலும் செயலிழந்து போகும் நிலையில் வாழ்வாதாரத்திற்காக துடிக்கும் முன்னால் பெண் போராளி. தந்தை நோய்வாய்பட்ட நிலையில் தாயும் ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டு உள்ளதால் தனது வாழ்வாதாரத்திற்காக வேலை தேடி அலைந்தும் கால்கள் இல்லை என்ற காரணத்தினால் வேலை ஏதும் கிடைக்காத நிலையில் போராடும் இளம் பெண். உதவும் நல் உள்ளம் கொண்டோரே உதவிக்கரங்கள் கொடுத்திடுங்கள். தொலைபேசி இலக்கம்; 0773256776 வங்கி கணக்கு இலக்கம் கிஸ்ணபிள்ளை துரைசிங்கம் 70580467 இலங்கை வங்கி கிளிநொச்சி இலங்கை - See more at: http://www.canadamirror.com/canada/30236.html#sthash.X2GQDnnv.dpuf
-
- 0 replies
- 675 views
-
-
வணக்கம் வடக்கு மாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்;ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அண்மைக்காலமாக இவரது நடவடிக்கைகள் மற்றும் தூரநோக்கம் கொண்ட திட்டங்கள் அவற்றை செயலாக்கும் திறன் போன்றவற்றை பார்த்து கேட்டு வருகின்றோம். ஏன் நாம் (புலம் பெயர் மக்கள் அமைப்புக்கள் கழகங்கள் சங்கங்கள்....) இவருடன் தொடர்புகளை ஏற்படுத்தி அபிவிருத்திக்கும் தாயக வளர்ச்சிக்கும் உதவ முன்வரக்கூடாது. முக்கியமாக புலிகளது போராட்டத்தை விமர்சித்துக்கொண்டு எதுவுமே இதுவரை செய்யாது வேடிக்கை பார்ப்போர் ஏன் இவருடனும் இணைந்து வேலை செய்ய பின்னிற்கின்றனர்....????????
-
- 11 replies
- 1k views
-
-
France புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் + SECDA NGO = சிறு கைத்தொழில் திட்டம் (கிளிநொச்சி) France புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால் தாயக மக்களுக்கான 2015க்கான நிதியாக பத்து லட்சம் ரூபாக்கள் ஒதுக்கப்பட்டு தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கமைய தைத்திருநாளில் போரினால் பாதிக்கப்பட் பெண்கள் தலமை தாங்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதாரச்செயற்திட்டமாக சிறு கைத்தொழில் மாதிரி ஆடை உற்பத்தி நிலைய செயற்திட்டம் ஒன்று செயற்பட இருக்கிறது... இதன் ஒப்பந்தம் மற்றும் மாதிரிகள் விரைவில் இங்கு பதியப்படும்...
-
- 6 replies
- 1.6k views
-
-
இரத்ததானம்: பொது நலமும் சுய நலமும் 80களில் (அப்பொழுது மட்டுமல்ல இன்றுவரை) குறிப்பாக வடக்கு கிழக்கில் பெரியளவிலும் தெற்கில் ஒரளவிலும் இரத்தம் மிகவும் தட்டுப்பாடாக இருந்த காலங்கள் அவை. ஏனெனில் அந்தளவிற்கு நாள்தோரும் செல் அடிகளும் குண்டு வெடிப்புகளும் துப்பாக்கி சுடுகளும் பொம்பர் அடிகளும் நடைபெற்ற நேரங்கள். இதனால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவதற்கு இரத்தம் தேவைப்பட்டது. ஆகவே தமது உறவினர் யாருக்காவது இரத்தம் தேவை எனின் பிற உறவினர்கள் இரத்த வங்கிக்கு இரத்தம் வழங்க வேண்டும் என்பது ஒரு நிபந்தனையாக இருந்தது. அப்பொழுதுதான் குறிப்பிட்ட உறவினருக்கு இரத்தம் வழங்கி அவரைப் பாதுகாப்பார்கள். இல்லாவிட்டாலும் பாதுகாப்பார்கள். ஆனால் இரத்ததானம் வழங்குவதை ஊக்குவிப்பதற்கு அ…
-
- 0 replies
- 570 views
-