மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
944 topics in this forum
-
லெப்டினன்ட் சங்கர் நவம்பர் 27, 2020/தேசக்காற்று/விழுதின் வேர்கள்/0 கருத்து ஒரு வேங்கையின் மரணம்: முதல் மாவீரர் லெப்டினன்ட் சங்கர் / சுரேஸ். சங்கர், சுரேஸ், ஆயுதப்படைகள் வலைவிரித்துத் தேடும் செ.சத்தியநாதன். இருபது வயதிலேயே தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்ட கொரில்லா வீரன், தமிழீழ விடுதலைப்புலிகளின் தாக்குதற் பிரிவுத் தலைவன். கண் திறக்காத பூனைக்குட்டியாக நெஞ்சில் கனலும் புரட்சிகர உணர்வோடு சின்ன வயதிலேயே இயக்கத்திற்குத் தன்னைத் தானே அர்பணிக்கக் காத்திருந்த வீரமறவன். அரசபடையின் திடீர் முற்றுகையிலிருந்து தப்பிச் செல்லுகையில் சுற்றி நின்று கமாண்டோக்கள் சரமாரியாக வெடிகளைத் தீர்த்த போது காயமுற்று, எங்கள் இயக்கத்தின் முதலாவது களப்பலியாகு…
-
-
- 2 replies
- 2k views
-
-
மாவீரர்கள் விடுதலைக்கு உயிர்தந்த உத்தமர்கள் நவம்பர் 27, 2020/தேசக்காற்று/அன்னை பூமியில், வழித்தடங்கள்/0 கருத்து மாவீரர்கள் – விடுதலைக்கு உயிர்தந்த உத்தமர்கள்; மாவீரர் நாள் – தமிழீழத் தேசியத் திருநாள். எமது தேசம் விடுதலைபெற வேண்டும். எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, தன்னாட்சி உரிமைபெற்று தன்மானத்துடன் வாழவேண்டும் என்ற உயரிய இலட்சியத்திற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்த எம்முயிர்ப் போராளிகளை, நாம் எமது இதயக்கோவிலில் பூசிக்கும் புனித நாள் இன்று. உலக வரலாற்றில் எங்குமே, எப்பொழுதுமே நிகழ்ந்திராத அற்புதமான தியாகங்கள் இந்த மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. மனித ஈகத்தின் உச்சங்களை எமது போராட்ட வரலாறு தொட்டு நிற்கிறது. இந்த மNhகன்னதமான தியாக வரலாற…
-
- 0 replies
- 2.2k views
-
-
எங்களுக்காக உங்களை உதிர்த்து எம்மினம் காத்திடத் தம்மைத் தந்து உயிர் என்னும் கொடை தந்து உங்கள் உணர்வுகள் துறந்து நின்றீர் தாய் மண்ணின் தடையகற்றிட தணியா மனதின் துணிவு கொண்டு மகிழ்வாய் மனதின் ஆசை அடக்கி அத்தனை ஓசையும் தாண்டி வந்தீர் பதின்ம வயதில் பாசம் அடக்கினீர் பருவவயதில் புலன்கள் அடக்கினீர் பசியது கொண்டும் புசிப்பது நிறுத்தி எதிரி அடக்கும் ஆசைதான் கொண்டீர் எங்கள் நிலத்தை எமதேயாக்க உங்கள் நிலங்கள் தான் துறந்தீர் சுற்றம் துறந்து சுகங்களும் துறந்து காடுமேடெல்லாம் கால் பதித்தீர் ஏறுபோல் எழுந்து எதிகளை வீழ்த்தி வீறுநடை போட்டு வெற்றிகள் கொய்தீர் தமி…
-
- 3 replies
- 955 views
-
-
மாவீரர் நாள்மரபாகி வந்த கதை November 25, 2020 வைமன் வீதியில் அமைந்திருந்த ஈழநாதம் நாளிதழின் பணிமனைக்கு ஒருமுறை பொ.பாலசுந்தரம் பிள்ளை (பின்னாளில் யாழ்.பல்கலைக்கழக துணை வேந்தராக விளங்கியவர்), வந்திருந்தார். இந்நாளிதழின் ஆசிரியர் பொ.ஜெயராஜைச் சந்தித்த அவர் நாள்தோறும் வெளிவந்த நினைவுகூருகின்றோம்` என்ற தலைப்பிலான விளம்பரம் பற்றிக் குறிப்பிட்டார். முன்னைய ஆண்டுகளில் இதே நாளில் வீரச்சாவெய் திய மாவீரர்களின் பெயர்,முகவரி, சம்பவம் முதலான விடயங்கள் அந்தந்த நாளிதழில் வெளிவந்துகொண்டிருந்தன. அத்துடன் இலங்கைத்தீவில் தமிழராகப் பிறந்ததனால் சிங்களக்காடையர், படையினர் முதலானோரால் கொல்லப்பட்டோர் பற்றிய விபரங்களும் வெளியாகின. இதில் இரண்டாவது விடயம் குறித்தே பேராசிரியர…
-
- 0 replies
- 931 views
-
-
பதுங்குகுழி நீ உறங்குமிடம்… நவம்பர் 25, 2020/தேசக்காற்று/வழித்தடங்கள்/0 கருத்து பதுங்குகுழி நீ உறங்குமிடம்… தலை நிமிரமுடியாமல் எதிரி ஏவிய எறிகணைகளால் காடு அதிர்ந்து குலுங்கிக் கொண்டிருந்தது. ஒன்று வெடித்த நொடிப் பொழுதுக்குள் அடுத்தது, அடுத்தது என இடைவிடாதபடி சில ஒரே இடத்திலும் சில தூரப்போயும் வெடித்துச் சிதறின. பச்சைமரங்கள் வெம்மையுடன் அவிந்து கருகிய மணம் அப்பிரதேசமெங்கும் நிறைந்தது. பசுமையாகப் படர்;ந்திருந்த புற்கள் கருகியும், கருகிய புற்களின் மேல் சுழலாய் எழுந்த புகை மண்டலத்தின் கரிபடர்ந்தும் அவ்விடம் சுடுகாடுபோலக் கிடந்தது. முறிந்த மரங்கள் ஒரு புறம். எறிகணைத் துண்டுகளாற் குத்திக் கிழிக்கப்பட்ட பச்சை மரங்கள் இன்னொரு புறமாக அவ்விடம் கொடூர…
-
- 0 replies
- 575 views
-
-
மாவீரர் நாள். கார்த்திகை27 ************************ தென்றலாய்,தேமாங்காய் ஈழ தேசத்தின் சுவாசமதாய் உயிர் விதைத்து,உணர்வளித்து உலக முகப் பரப்பில் தமிழீழம் எனப் பொட்டுவைத்த உங்கள் தியாகத்தின் உயிர்நட்ட கோயில்களை என்றும் மறப்போமா? கார்த்திகை மலர் நடுவே கல்லறை தொட்டிலாகும் நீங்கள்.. கண்களைத் திறக்கும் போது தமிழ் ஈழ.. தாயவள் கையணைக்கும் அவளுயிர் காக்க நீங்கள் ஆகுதியானவர்கள்-மீண்டும் அவள் மடி பிறக்கையிலே ஆனந்தமாயிரங்கள். “வீர வணக்கம்” -பசுவூர்க்கோபி-
-
- 0 replies
- 627 views
-
-
தீரமுடன் போராடிய எல்லைப்படை மாவீரர்கள் நினைவில்.... எல்லைப்படை மாவீரர்கள் எல்லைத் திசையெங்கும் நிலையாகினர்- எங்கள் உரிமைக்கு பலம் தேடி வித்தாகினீர் மகிழ்வோடு ஈழம் காணப் படையது சேர்ந்தீர்- வேங்கை வீரரென விடுதலைக்கு உயிர் கொடுத்தீர் -அன்பரசு ஒரு விடுதலைப் போராட்டம் வெற்றி பெற வேண்டுமானால் அது மக்கள் இயக்கமாக இடம் பெற வேண்டும். போராடுவோர் வேறாகவும் மக்கள் வேறாகவும் பிரிந்து நிற்கும் போது வெற்றி வாய்ப்புக்கள் அரிதாகக் கிடைக்கின்றன. உலக விடுதலை வரலாற்றில் மக்கள் பங்களிப்பின் சிறப்பை எம்மால் உணர முடியும். மக்களும் போராடுவோரும் ஒரேயணியாக நிற்கும் போது எந்த சக…
-
- 0 replies
- 697 views
-
-
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே… நவம்பர் 24, 2020/தேசக்காற்று/வழித்தடங்கள்/0 கருத்து 1981ம் ஆண்டு பங்குனி மாசக் கடைசியில் நீர்வேலியில் இடம்பெற்ற வங்கிப் பணப்பறிப்பு நடவடிக்கையினைத் தொடர்ந்து சிறிலங்காவின் சி.ஐ.டி. பொலிசார் எப்படியும் அதில் சம்பந்தப்பட்டவர்களைத் தேடிக் கண்டுபிடித்து விடவேண்டும் என்ற நோக்கில் அலைந்து கொண்டிருந்தார்கள். இந்தச் சம்பவத்தினைத் தொடர்ந்து தங்கத்துரை, குட்டிமணி, தேவன் என்கின்ற மூவர் இச் சம்பவத்தோடு தொடர்புடையவர்கள் ( அப்போது நாங்களும் அவர்களும் ஒன்றாக இணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்த காலம்). தமிழகத்திற்குச் செல்வதற்காக படகேறச் சென்ற சமயம், வல்லிபுரக் கோயிலுக்கு கிழக்குப் புறமாக உள்ள கடற்கரைப் பகுதியில், கள்ளக் கடத்தல் இடம்…
-
- 0 replies
- 458 views
-
-
ஒரு வீரனின் ஆசை நவம்பர் 23, 2020/தேசக்காற்று/கரும்புலிகள் காவியங்கள்/0 கருத்து கரும்புலி லெப். கேணல் போர்க் மாப்பாணப்பிள்ளை அரசரத்தினம் ஆறுமுகத்தான் புதுக்குளம், வவுனியா பிறப்பு: 11.11.1959 வீரச்சாவு: 23.11.1990 வன்னிப் பிராந்தியத்தின் மையத்தில் – அதன் இருதயத்தில் மாங்குளம் சிங்களப் படைமுகாம் இருந்தது. அது அங்கு பல அட்டூழியங்களைச் செய்து வந்தது. இரண்டாவது ஈழப்போர் தொடங்கிய நாட்களிலிருந்து இம் முகாம் புலிகளால் முற்றுகையிடப்பட்டிருந்தது. எமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அமைந்துள்ள இப்படைமுகாம் மீது தாக்குவதற்கான திட்டம் தயாரிக்கப்படுகிறது. அப்படை முகாம்மீது கரும்புலித் தாக்குதல் நடாத்தி அதைக் கைப்பற்றுவது என்று தீர்மானிக்கப்பட…
-
- 1 reply
- 1.1k views
-
-
மேஜர் தமிழரசன் நவம்பர் 23, 2020/தேசக்காற்று/சரித்திர நாயகர்கள்/0 கருத்து புன்னாலைக்கட்டுவன் பெற்ற புலிவீரன் மேஜர் தமிழரசன் / டொச்சன். வடக்குப்புன்னாலைக்கட்டுவன் 80களில் விடுதலைப்புலிகளை ஆதரித்த ஊர்களில் ஒன்று. இங்கு பல ஆரம்பகால விடுதலைப்புலிகளின் வரலாறும் பலரது வரலாற்றின் வேர்களும் பரவியிருக்கிறது. தலைவர் பிரபாகரன் வந்து தங்கி வாழ்ந்து அவரைப் பாதுகாத்த ஊர்களில் வடக்குப்புன்னாலைக்கட்டுவனும் ஒன்று. தலைவருடன் வாழ்ந்த போராளிகளில் ஒருவர் தலைவர் நன்றியுடன் ஞாபகம் கொள்ளும் ஒருவர் பற்றி ஒருமுறை உரையாடிய போது சொன்னவை :- புன்னாலைக்கட்டுவனில் தலைவரை பாதுகாத்த குடும்பங்களில் ஒன்று சுவிஸ் குலம் (குலம்மாமா) அவர்களது. 80களில் இராணுவ கெடுப…
-
- 0 replies
- 566 views
-
-
மாவீரர் நினைவுகள் - சந்தோசம் மாஸ்டர் | லெப் கேணல் ராதா | எழுதியவர்: ஜூட் பிரகாஷ் பரி யோவான் கல்லூரியின் பழைய மாணவன், அபாரமான தமிழ் மொழி ஆற்றல் படைத்தவர். அரியாலையில் இருந்து வந்து, பரி யோவானில் படித்து, உயர்தரத்தில் சித்தியெய்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், பெளதீக விஞ்ஞானப் பிரிவில் (Physical Science), பட்டம் பெற்று, திருகோணமலையில் ஆசிரியராக கடமையாற்றிக் கொண்டிருக்கும் போது, இயக்கத்திற்குப் போனவர். எண்பதுகளில் புலிகள் இயக்க உறுப்பினர்களிடம் தனித்துவமாக மிளிர்ந்த குணங்குறிகளிற்கு இவரும் ஒரு அடையாளம். திருகோணமலை மாவட்டத் தளபதியாக இருந்தவர். இந்திய இராணுவத்துடன் சண்டை தொடங்கிய போது, 21 ஒக்டோபர் 1987 அன்று, கோண்டாவிலில் இடம்பெற்ற ஒரு தீரமிகு சண்டைய…
-
- 0 replies
- 559 views
-
-
எங்கள் கண்மணிகள் கண்திறக்கின்ற காலம் மாவீரர் வாரம் நவம்பர் 21....27 தமிழ்மக்களின் விடுதலைக்காகவும் சுதந்திரமான வாழ்விற்காகவும் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நவம்பர் 27 ஆம் திகதி தமிழ் மக்கள் நினைவிற்கொள்வது தொன்று தொட்டு வந்துள்ள நிலையில் 2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் தாயகத்தில் இன அழிப்பினை மேற்கொண்ட பேரினவாத சிறீலங்கா அரசு அதன் பின்னர் தமிழர்களின் சுதந்திரங்ளை பறிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்போரின் போது முதற்க களச்சவாவடைந்த லெப்ரினன் சங்கர் அவர்களின் நினைவாக நவம்பர் 27 ஆம் நாள் ஆண்டு தோறும் மாவீரர் நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. 1990 ஆம் ஆண்டு மாவீரர் வாரமாக 21-27 வரை கடைப்பிடிக்கப்பட்டு பின்னர் மாவீரர்…
-
- 1 reply
- 952 views
-
-
எங்கள் தேசம் நிமிர்வுற நிமிர்ந்தவன் லெப். கேணல் மல்லி.! எங்கள் தேசம் நிமிர்வுற நிமிர்ந்தவன் மல்லி.! லெப். கேணல் மல்லி, விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவன். இவன் விடுதலைப்போராட்ட காலத்தில் பல களங்களில் தன் முத்திரையைப் பதித்தவன்.இரு தேசங்களின் ஆக்கிரமிப்பு இராணுவங்களுடன் இவன் போராடினான். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு என்னும் இடத்தில் பிறந்தான். நீண்ட போராட்ட வாழ்வில் ஒயாது கடுமையாக உழைத்தவன். தனைவருத்தி தன்னொளி பார்த்தவன். அமைதிப் போர்வையுடன் வந்த இந்தியப் படைகள் முள்ளியவளையில் முகாம் இட்டிருந்தன. 1990ம் ஆண்டில் இம்முகாம் மீதான தாக்குதலில் பங்கேற்று நின்றான். இந்தக் காலப்பகுதியிலேயே அவர்களோடு கூட்டாக நின்ற கும்பல்கள், கிளிநொச்சி 18ம் போர் எனும் இடத்…
-
- 2 replies
- 900 views
-
-
விதைக்கப்பட்டது வீரமும்தான் நவம்பர் 15, 2020/தேசக்காற்று/வழித்தடங்கள்/0 கருத்து மேஜர் ரவிசங்கர் யூலியஸ் வின்சன் கெனடி சாவற்காடு, மன்னார். பிறப்பு: 08.09.1970 வீரச்சாவு: 09.06.1992 சிறுநாவற்குளம் படை முகாமிலிருந்து 300யார் தூரத்திலுள்ள பிரதான வீதிச் சந்தி. எப்போதும் இராணுவத்தினரின் அணி ஒன்று அங்கு காவலுக்காகப் பதுங்கி இருப்பது வழமை. முன்னிலையில் ஒரு ஏ.கே.எல்.எம்.ஜி யைக் கொண்டதாக, எந்த நேரமும் இரைதேடியபடி அந்த அணி காத்திருக்கும். இந்த இராணுவ அணியை வளைத்துத் தாக்கி அழித்துவிடுவதற்கு முடிவுசெய்யப்பட்டது. வேவு பார்த்து – திட்டமும் தயாரிக்கப்பட்டது. ரவிசங்கர் இந்த முயற்சியில் ஓய்வின்றிச் செயற்பட்டுக்கொண்டிருந்தான். …
-
- 0 replies
- 666 views
-
-
கடற்கரும்புலி கப்டன் இன்னிசை நவம்பர் 11, 2020/தேசக்காற்று/கடற் கரும்புலிகள்/0 கருத்து என்னினிய தமிழீழ மக்களுக்கு, நான் இறுதியாக எழுதும் உறுதிமொழி, தமிழீழ மக்களாகிய நீங்கள் எமது தலைவனின் காலத்தில் தமிழீழம் கிடைப்பது உறுதி என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். தமிழீழத்தில் எமது தலைவன் ஒரு கொடை. மக்களாகிய நீங்கள் கிளர்ந்தெழுந்து எமது தலைவனுடன் தோளோடு தோள் நின்று போராடுங்கள். நிச்சயம் தமிழீழம் கிடைக்கும். எமக்கென்று ஒரு நாட்டை உருவாக்க வெகு விரைவாக உங்கள் பணிகளைச் செய்யுங்கள். இப்படிக்கு போராளி இன்னிசை 1996.05.16 ஆனையிறவு இராணுவத்தினரின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புக்களால் இன்னிசையின் குடும்பம் வெற்றிலைக்கேணியிலிருந்து பருத்தித்துறைக்கு இடம்…
-
- 1 reply
- 589 views
-
-
கடற்கரும்புலி மேஜர் பாரதி நவம்பர் 11, 2020/தேசக்காற்று/கடற் கரும்புலிகள்/0 கருத்து பெண்களதும் ஆண்களதும் கலகலவென்ற கதம்ப ஒலியால் அந்தச் சிறிய ஒன்றுகூடல் மண்டபம் அதிர்ந்து கொண்டிருந்தது. அங்கிருந்த அனைவரும் கரிய உடைகள் அணிந்தவர்களாக இருந்தாலும், முகங்களெல்லாம் ஆயிரம் வோல்ற் மின்விளக்குகளைப் போல் ஒளிர்ந்து கொண்டிருந்தன. மண்டபத்தில் இருந்த ஒலி – ஒளிப்பதிவுக் கருவிகள், புகைப்படக் கருவிகளெல்லாம் அவர்களை விழுங்கிக் கொண்டிருந்தன. கலகலப்பை மீறி, இடையிடையே வாசலைப் பார்ப்பதும் பின்னர் கதைப்பதும் சிரிப்பதுமாக இருந்தனர். அவர்கள் கரும்புலிகள்.தமக்கு எல்லாமுமாக இருந்து நெறிப்படுத்தி அன்பு காட்டி அரவணைத்த அந்தப் பெரும் தலைவனை இறுதியாகச் சந்த…
-
- 1 reply
- 950 views
-
-
கரும்புலி லெப்டினன்ட் கண்ணன் நவம்பர் 12, 2020/தேசக்காற்று/தேசத்தின் புயல்கள்/0 கருத்து கனவை நனவாக்கியவன் கரும்புலி லெப்டினன்ட் கண்ணன் / சத்துருக்கன். 1991ம் ஆண்டு 9ம் மாதம் மணலாற்றில் ‘மின்னல்’ இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. அப்போது அனைத்துப் போராளிகளும் சண்டைக்கத் தங்களை தயார்ப்படுத்திக்கொண்டு இருந்தார்கள. சத்துருக்கன் சின்னவன் என்ற காரணத்தால் பொறுப்பாளர் அவனைச் சண்டைக்கு அனுப்பவில்லை. உடனே அவரிடம் சென்ற, “நீங்கள் ஏன் என்னைக் கழித்துவிட்டீர்கள்? ஏன் நான் சண்டை பிடிக்காமாட்டேனோ? இப்படித்தான் நீங்கள் என்னைப் பலமுறை ஏமாற்றி விட்டுச் சண்டைக்கு சென்றீர்கள் ஆனால் இந்த முறை என்னையும் கூட்டிக்கொண்டு போகவேணும்” என்று அடம் பிடித்து சண்டைக்குச்…
-
-
- 2 replies
- 1.1k views
-
-
கப்டன் ஈழமாறன் நவம்பர் 11, 2020/தேசக்காற்று/சரித்திர நாயகர்கள்/0 கருத்து “டேய் மச்சான் என்னைக் கொண்டுபோய் விடுறா…. என்ர பொடியள் என்ன மாதிரியோ…. விடடா மச்சான்….” வைத்தியசாலையின் கட்டிலில் இருந்தபடி, காலில்குத்திய திருக்கைமுள்ளைப் பற்றிப் பெரிதும் கவலைப்படாதவனாய், வேதனைகளை மறைத்தபடி, தன் அருகில் இருந்த போராளியிடம் கூறிக்கொண்டிருந்தான் ஈழமாறன். அவனின் நச்சரிப்பினைத் தாங்காது வைத்தியரிடம் சொல்லும் அவர்களுக்கு, அவரின் வார்த்தைகள் ஏமாற்றத்தையே கொடுக்கும். “விசம் உடனே இறங்காது தம்பி, இதால ஆக்கள் செத்துப்போய் இருக்கினம்: ஒரு இரண்டு நாள் பொறும், பிறகு போகலாம்” எனப் புன்னகைதனை முகத்தில் தவழவிட்டவாறு சொல்வதை, ஏமாற்றத்துடன் பார்ப்பான் அவன். அதனை…
-
- 2 replies
- 817 views
-
-
கப்டன் துளசிராம் நவம்பர் 11, 2020/தேசக்காற்று/வெஞ்சமரின் நாயகிகள்/0 கருத்து கப்டன் துளசிரா! மீண்டும் உன்னுடன் பகிர்வதற்காய் நிறைய… இருள் மௌனமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தது. ஆனால் அவர்களுக்கு அது ஒரு பொருட்டல்ல. நுளம்புச் சனியன் கை, கால் மூஞ்சி…… ஆ… ச்சீ குத்திக்குத்தி மனுசற்றை உயிரை எடுக்கும். கை அடிக்க…… பற்கள் குளிரில் கிட்டிக் கொள்ளும். வயிற்றுக்குள் குளிர் பந்தாகச் சுருட்டி உள்ளுறுப்புகள் நடுங்கும் குளிர். ஆனால்……? ஆ……ச்…… ஐயோ தும்மல் வாய்பிளந்து மூக்குளைஞ்சு…… ஆ… ச்… தும்மக்கூடாது; இல்லை நிச்சயம் அடிக்கியபடி…… பாம்பு ஒன்று நொளுநொளெண்டு வளுவளுத்தபடி முதுகாலை வழிய…… ஆட்டி விழுத்தலாம்……? உடல்கூசி…… ஐயோ அசையக்கூடாதே! அசைஞ்ச…
-
- 1 reply
- 678 views
-
-
கடற்கரும்புலி மேஜர் கணேஸ் நவம்பர் 10, 2020/தேசக்காற்று/கடற் கரும்புலிகள்/0 கருத்து சாவுக்கு விலங்கிட்ட நெருப்பு மனிதர்கள் கடற்கரும்புலி மேஜர் கணேஸ் / குயிலன். கிளாலிக் கடலின் அலைகள் நனைத்துச் செல்லும் கால்களில், குருதிக் கறை பிசுபிசுத்த ஒவ்வொரு காலையின் போதும் பிணவாடையைக் காவிவரும் கடற்காற்றின், ஒவ்வொரு வீச்சின் போதும் – அவர்களுக்குள் இனம்புரியாத ஒரு ஆவேசம் கொதித்த எழும். கிளாலிக் களத்தில் தளபதி சாள்ஸ் வீழ்ந்த போது, அது அவர்களுக்குத் தாங்க முடியாத பேரிழப்பாக ஆகிவிட்டது. எல்லாவற்றுக்குமாகச் சேர்த்துப் பதிலடி கொடுக்க அவர்கள் துடித்துக்கொண்டிருந்தனர். வரதனுக்கும் மதனுக்கும் முந்திய 60 நாட்கள் – அவர்கள் …
-
- 1 reply
- 624 views
-
-
கடற்கரும்புலி மேஜர் கோபி நவம்பர் 10, 2020/தேசக்காற்று/கடற் கரும்புலிகள்/0 கருத்து சாவுக்கு விலங்கிட்ட நெருப்பு மனிதர்கள் கடற்கரும்புலி மேஜர் கோபி / குமணன். ‘ஒப்பறேசன் தவளை’க்கு இன்னும் பத்தே நாட்கள் தான் இருக்கின்றன. கோபி ஊருக்குப் போனான். தாயினதும், தனயனதும் மகிழ்ச்சிகரமான ஒரு சங்கமம். பாசம் கரைபுரண்ட அன்பு முத்தங்களின் பரிமாற்றம். எப்பவோ கேட்க வேணும்போல இருந்த தனது நீண்டகால மனஉளைச்சலை அம்மா, மகனிடம் இப்போது வெளிப்படுத்தினாள். “உனக்குக் காலும் இல்லைத்தானே தம்பி…… இனியும் இயக்கத்தில இருந்து என்னப்பன் செய்யப்போறாய்……? அந்தத் தாயுள்ளம் ஏக்கங்களோடு ஆதங்கப்பட்டது. “காலில்லாட்டியும் பரவாயில்லையம்மா…… இயக்…
-
- 1 reply
- 640 views
-
-
மேஜர் தங்கேஸ் நவம்பர் 10, 2020/தேசக்காற்று/சரித்திர நாயகர்கள்/0 கருத்து 41971 பங்குனித் திங்கள் 21ம் திகதி நம்பியார் இராமச்சந்திரன் தம்பதிகளின் செல்வப் புதல்வனாய் மறத்தமிழ் மகனாய் முத்துக்கள் விளையும் பூமி முருங்கனில் ராஜேந்திரம் என்னும் பெயருடன் இம்மண்ணில் உதித்தான். இவன் மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்தும் இவனது தந்தை இவனின் ஆரம்பக்கல்வியை மன்னார் முருங்கன் மகாவித்தியாலயத்தில்; பயிற்றுவித்தார். இவன் ஆசிரியர்கள் மத்தியில் நற்பெயருடனும் திறமையானவனாகவும் செயற்பட்டு வந்தான். இவனது திறமைகளைக் கண்டு ஆசிரியர்கள் இவனை மகாவித்தியாலயத்தின் மாணவர் தலைவனாக நியமித்தனர். இக்காலப் பகுதியில் எமது கிராமம் இந்திய ஆக்கிரமிப்பாளர்களால் சுற்றி வளக்கப்பட்டு தேசவிரோதி…
-
- 1 reply
- 759 views
-
-
மேஜர் பசிலன் நவம்பர் 8, 2020/தேசக்காற்று/சரித்திர நாயகர்கள், வீரத் தளபதிகள்/0 கருத்து சொந்த மண்ணிலேயே அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு திட்டமிட்ட முறையில் அழிக்கப்படுகின்ற தமிழ் மக்கள், தம் உரிமையைப் பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் தமிழ் மிதவாதிகளுக்கு வோட்டுக்களை அள்ளி வழங்கினார்கள். சிங்களப் பேரினவாத அரசு மாநில சயாட்சி, மாவட்டசபை, சமஸ்டி ஆட்சி என்று, உரிமைகளற்ற திட்டங்களைத் தீட்டி இதே மிதவாதிகள் மூலம் ஏமாற்றிய போதும் சாத்வீக முறையிலேயே தம் உரிமைகளைக் கேட்டு நம்பிக்கையுடன் போராடினார்கள் தமிழர்கள். ஆனால் இன ஒழிப்பின் உச்சத்தில், பாரம்பரியப் பிரதேசங்கள் படிப்படியாக அபகரிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்கள் ஆக்கப்படு…
-
- 2 replies
- 631 views
-
-
வெற்றிக்கு வித்திட்ட வேங்கைகள் நவம்பர் 7, 2020/தேசக்காற்று/சமர்க்களங்கள், வழித்தடங்கள்/0 கருத்து பூநகரி வெற்றி விடுதலைப் போரின் பரிமாணத்தை முற்றிலும் மாற்றியமைத்த வெற்றி. “தனது பூநகரி முகாமை நாம் தாக்க எண்ணியது எதிரிக்குத் தெரிந்து விட்டது.” “எமது எண்ணம் எதிரிக்குத் தெரிந்துவிட்டதென்பதும் எமக்குத் தெரியும்” “தனக்குத் தெரிந்தது தெரிந்ததும், நாம் ஏற்பாடுகளைத் தொடர்வதைக் கண்ட எதிரி, தனது நிலைகளை மேலும் பலப்படுத்திய போதும், நாம் எம் திட்டத்தில் சிறு மாற்றங்கள் செய்தோமே தவிர கைவிட்டுவிடவில்லை. எல்லாக் கவசமும் அணிந்த “கோலியாத்” ஆக பூநகரி முகாம் போர்க்கோலம் பூண்டு நின்ற போதும், இறுமாந்திருந்த அரக்கனும் சிறுவனும் போலான போது…
-
- 1 reply
- 1.1k views
-
-
2ம் லெப்டினன்ட் மயூரி, வீரவேங்கை வஞ்சி நவம்பர் 7, 2020/தேசக்காற்று/அணையாத தீபங்கள், வழித்தடங்கள்/0 கருத்து சுதந்திரத்தைத் தேடி 2ம் லெப்டினன்ட் மயூரி, வீரவேங்கை வஞ்சி இரண்டும் சரியான துடியாட்டம். பரபரவென வண்டுகள் போல சுழலும் கருவிழிகளில் எப்போதுமே எதையும் ஆராய்ந்து துருவும் இயல்பு தெரியும். மயூரி, வஞ்சி என்றால் எல்லோருக்கும் விருப்பம். இரண்டும் சரியான சின்னன். வஞ்சி கறுப்பு. உருண்டைக் கண்கள். மயூரி மாநிறம் நல்ல சொக்கு. பால்மணம் கொஞ்சம்கூட மாறவில்லை. ஆனால் பயிற்சியின் போது ‘பெரிய மனிதர்கள்’ போல் நடந்துகொள்வார்கள். இருவரும் 1993ம் ஆண்டின் முற்பகுதியில், மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த மகளிர் படையணிய…
-
- 1 reply
- 514 views
-