மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
956 topics in this forum
-
26.06.2000 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா படையினரின் “உகண” ஆயுதக் கப்பலை மூழ்கடித்து காவியமான கடற்கரும்புலிகளின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ். குடாவில் நிலை கொண்டிருக்கும் படையினருக்குத் தேவையான ஆயுதங்கள் வெடிபொருட்களுடன் காங்கேசன்துறைத் துறைமுகம் நோக்கி டோறா பீரங்கிப் படகுகளின் வழித்துணையுடன் சென்ற “உகண” கப்பல் 26.06.2000ம் அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து கடற்புலிகளால் வழிமறிக்கப்பட்டு தாக்குதல் தொடுக்கப்பட்டது. சுமார் எட்டு மணிநேரம் இடம்பெற்ற கடும் சமரின் நடுவே தமது வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட படகுகளால் குறித்த கப்பலை கடற்கரும்புலிகள் தகர்த்து மூழ்கடித்தனர். இதன்போது சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகு ஒன்றும் கடு…
-
- 10 replies
- 1.3k views
- 1 follower
-
-
எறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் முகுந்தா.! 19.06.1997 நெடுங்கேணிப் பகுதியில் நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினர் மேற்கொண்ட எறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் முகுந்தா அவர்களின் 24ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும்.இம்மாவீரருக்கு வீரவணக்கத்தை தெரிவித்து கொள்ளுகின்றோம். எங்கள் விடுதலைக்கான பயணத்தில் அவளது இழப்பு எவராலும் ஈடுசெய்ய முடியாத ஒன்று. ஒரு தனி மனிதப்பிறவி. போராளி என்பதை மீறி, தன்னை அர்ப்பணித்து அவள் ஆற்றிய பணி அதிகம். எத்தனையோ போராளிகள் கூட்டிணைந்து நடத்தும் தாக்கு தல்களின் வெற்றிக்கு மூலவேர்களைத் தாங்கி நின்றவள் முகுந்தா. சாதாரண சம்பவங்களை அல்லாமல் தான் வாழ்ந்த கடைசி நிமிடம்வரை மறக்க முடியாத எத்தனையோ மெய்சிலிர்க்க வைக்கும…
-
- 0 replies
- 360 views
-
-
தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ, தலைசாய்ந்து தாய்மண்ணில் வீழ்ந்த மேஜர் டேவிட். ஒரு போராளியின் புனிதப்பயணம். தமிழர் வரலாற்றை நிலைநிறுத்தும் வரலாற்றுப்போரில், வரலாறாகிப்போன மேஜர் டேவிட், உண்மையில் ஓர் புரட்சி வீரன். தென்தமிழீழ எல்லையில், சிங்களத்தின் நிலப்பறிப்பில் 1963ம் ஆண்டு காலப்பகுதியில் உருவான அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் என்ற பழந்தமிழ் ஊரில் இன்ஸ்பெக்டர் ஏற்றம் என அடையாளப் படுத்தப்பட்ட இடத்தில் வாழ்ந்த தமிழ்க்குடும்பத்திலிருந்து எழுந்த விடுதலைப் போராளிபற்றிய நினைவுப்பதிவில் தொடக்கத்தின் முதல் அத்தியாயமாக நாம் கண்ட போராளிகளில் ஒருவராக டேவிட் அவர்களின் போராளி வாழ்க்கை அமைந்திருந்தது. அமைதியாக, ஆர்ப்பாட்டமில்லாது எல்லைத் தமிழ் ஊர்களி…
-
- 0 replies
- 664 views
-
-
இது 'தமிழ்த் தந்தி' நாளிதழில் ஊடகவியலாளர் மின்னல் ரங்கா அவர்களால் மே 2018 அன்று எழுதப்பட்ட கட்டுரையாகும். மூலம்: Tamilnet ----------------------------------- தமிழ்மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காகத் தமது உயிரையே அர்ப்பணித்த பல்லாயிரக் கணக்கான மாவீரர்களில், தலைமைத்துவப் பண்பினாலும் போரியல் நுட்பங்களாலும் போராட்டத்தைத் தோள்கொடுத்து முன்னெடுத்துச் சென்ற வெற்றித் தளபதிகள் பலர். அவர்களில் முதன்மையான ஒருவர் தான் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள். தலைவரின் போரியல் சிந்தனைக்கு அமைவாக, பல புதிய இராணுவத் தந்திரோபாயங்களையும் மூலோபாயங்களையும் வகுத்து, பல போரியல் வெற்றிகளை பெற்றுக்கொடுத்ததுடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் போரிடும் ஆற்றலை மேன்மைப்படுத்தியவ…
-
- 0 replies
- 2.1k views
- 1 follower
-
-
சர்வதேசக் கடற்பரப்பில் எம்.ரி சொய்சின் எண்ணைக் கப்பலில் காவியமான வீரமறவர்கள்! 14.06.2003 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் எம்.ரி சொய்சின் (M.T. CHOSHIN) எண்ணைக் கப்பலை சிறிலங்கா கடற்படையினர் வழிமறித்து தாக்கி மூழ்கடிப்பின் போது வீரச்சாவைத் தழுவிய கப்பல் கப்டன் நிர்மலன், சீவ் ஒவிசர் கதிர், 2ம் ஒவிசர் வீரமணி, 3ம் ஒவிசர் கன்னியநாடன், றேடியோ ஓவிசர் கஜேந்திரன், சீவ் எஞ்சினியர் அன்புக்குமரன், 2ம் எஞ்சினியர் கடற்கரும்புலி வள்ளுவன், 3ம் எஞ்சினியர் கடற்கரும்புலி நிமால், எலக்ரிக் எஞ்சினியர் வீரநாதன், போஸன் கடற்கரும்புலி மணியரசன், ஏபிள் சீமன் செழியன், நாட்டுப்பற்றாளர் மோகன் ஆகிய ஆழக் கடலோடிகளின் 18 ம் ஆண்டு வீரவணக்க நாள் .! எம்.ரி சொய்சின் கப்ப…
-
- 2 replies
- 1.2k views
-
-
நாகர்கோவில் பதுங்கித் தாக்குதலும்! – லெப்.கேணல் றெஜித்தனும்! லெப்.கேணல் றெஜித்தன் 2008 ஜூன் மாதம் 11ஆம் திகதி வன்னிச் சமரில் வீரச்சாவடைந்தார். எல்லோரும் பரபரப்பாக தொலைத்தொடர்புக் கருவிக்கு அருகில் காத்திருந்தோம். ‘எல்லாம்சரி, படுங்கோ’ என்றொரு செய்தி றெஜித்தன் அண்ணனிடம் இருந்து வரவேண்டும். நேரம் நள்ளிரவையும் தாண்டி நீண்டுகொண்டிருந்தது. எதிர்பார்த்த நேரத்துள் அந்தச் செய்தி வரவில்லையாதலால் ஏதாவது சிக்கலாகியிருக்க வேண்டுமென்று உள்மனம் சொல்லிக்கொண்டாலும், அப்படியேதும் இருக்கக்கூடாது என்று விரும்பினோம். சிலவேளை றெஜித்தன் அண்ணா எங்களை மறந்திருக்கலாமென்று ஒருவன் சொன்னான். ஆனால் அவர் அப்படிப்பட்டவரில்லை. செய்திக்காக நாம் காத்திருப்போமென்பது அவருக்கு நன்றாகத் தெ…
-
- 2 replies
- 961 views
-
-
தமிழீழத்தின் திசைகளில் மோதும் காற்றில் கலந்து விட்ட தென்றல். லெப். கேணல் டேவிட் கடலில் கலந்த கவிதை…… தமிழீழத்தின் திசைகளில் மோதும் காற்றில் கலந்து விட்ட தென்றல். விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு பரிமாணங்களையும் தன் காலத்திலேயே நேரடியாகக் கண்ட மிகச் சில போராளிகளில் ஒருவன். தமிழீழத்தின் விடுதலைப் போராட்டம், எல்லாக் காலங்களிலும், கடல் பிரயாணங்களை முதன்மைப்படுத்துவதாகவே அமைந்தது. எத்திசையும் கடலால் சூழப்பட்ட எம் தாயகத்தின், தாக்கமுள்ள நகர்வுகள் கடல் மூலமே மேற்கொள்ளப்பட்டன. எமது விடுதலைப் போராட்டத்தில், கடல் பயணங்கள் பிடித்திருந்த இடத்தின், அதே அளவு இடத்தை, எமது கடல் சரித்திரத்தில் டேவிட் பிடித்திருந்தான். அவனது இளமையிலேயே கடல் அவனை அழ…
-
-
- 3 replies
- 902 views
-
-
தமிழீழ விடுதலைப் போரில்... முதல் முதலாக, சயனைடு உட்கொண்டு.. சாவினை தழுவிய, வீரத் தமிழ்மகன் சிவகுமாருக்கு வீரவணக்கம்....🙏🙏
-
- 3 replies
- 560 views
-
-
இம்ரான் பாண்டியன் படையணியில் பயிற்சி ஆசிரியராகவும் உந்துருளி படையணியிலும் பின்பு தகரி(tank) இயக்குனராகவும் செயற்பட்ட மேஐர் மருதவாணன் அண்ணா
-
- 0 replies
- 411 views
-
-
யாழ்ப்பாணம் அரியாலை ஆனந்தன் வடலி வீதியில் மயில்வாகனம் திலகவதி தம்பதிகளுக்கு 1975 ஆம் ஆண்டு யூன் மாதம் 29; அன்று ஆறாவது புதல்வனாக பிறந்தவன் தான் லெப் கேணல் சிந்து. இவனது இயற்பெயர் தயாளன். இவன் ஆரம்பக் கல்வியை அரியாலை ஸ்ரீபார்வதி வித்தியாசாலையில் பயின்று வந்தவன், இளமைக்காலத்தில் கல்வியில் கணிசமாகவும், விளையாட்டில் மிகச்சிறந்தும் விளங்கினான். இவன் பாடசாலை இல்ல விளையாட்டுகளிலும் சரி, கழக விளையாட்டுக்களிலும் சரி தனது தனித்திறமையை வெளிக்காட்டினான். தாச்சிப்போட்டி, கரப்பந்தாட்டம் போன்றவற்றில் தன் திறமையை பெரிதும் வெளிப்படுத்தினான். தயா இறங்கி தாச்சி மறித்தால் யாரும் கோடுதாண்டி போகமாட்டார்கள் என்பார்கள் அவனது நண்பர்களும் அயலவர்களும் அறிந்ததொன்று. எல்லோரது கரவொலியும் அவன…
-
- 13 replies
- 2.5k views
-
-
26-06-2008 அன்று வவுனிகுளம் பகுதியில் எதிரியின் சுற்றிவளைப்பை தகர்க்க மேற்கொண்ட கடுஞ்சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப். கேணல். வாணன் , மேஜர் ஜெயசீலன், மேஜர் தணிகைமாறன், கப்டன் உயிரவன் , கப்டன் கார்வண்ணன், கப்டன் அரசகீதன் , கப்டன் சீராளன் , கப்டன் பாமகன் , லெப். சின்னவன், லெப். மணிமாறன், லெப். அருண்மொழி, 2ம் லெப். இளங்கதிர் வீரவேங்கை வெள்ளைத்தேவன், வீரவேங்கை கலைச்செழியன், வீரவேங்கை அடலூரான், வீரவேங்கை கலைவடிவேல் , வீரவேங்கை ஆற்றலழகன் முதலான அனைத்து மாவீரர்களையும் நினைவு கூர்ந்து வீரவணக்கம் செலுத்துகின்றோம் . --> திருவுருவப்படங்கள் video: https://eelam.…
-
- 2 replies
- 577 views
-
-
ராதா வான்காப்புப் படையணியின் கட்டளையாளர்களில் ஒருவரும் அண்ணியின் மெய்க்காப்பாளர்களில் ஒருவருமான லெப்.கேணல் அர்ச்சுணன். இவருக்கு இரட்டைக் குழந்தைகள் உண்டு. --> FB
-
- 1 reply
- 789 views
-
-
சாவு தயங்கிய ஒரு வீரனின் சாவு சிங்கள படைகளின் போர்முனைத் தளங்களில் அதிகம் உயரமில்லாத மிகமிக மெலிந்த ஓரல்முகமும் மினுங்கும் கண்ணும் கொண்ட சிற்றுருவம் ஒன்று நடுநிசியில் உலாவித் திரியும். கழுத்தில் ஒரு நீள வெள்ளைப் பல்லிருக்கும். ஒருமுறை கண்டுவிட்டு மறுவேளை பார்த்தால் மறைந்துவிடும். சுட்டால் சூடுபிடிக்காது. வருவதுபோல் தெரிந்தால் பின் எப்படிப் போனதென்று தெரியாது. ஆயிரம்பேர் வைத்துத் தேடினாலும் கண்ணுக்குள் புலனாகாது. இப்படியொரு பிசாசு சிங்கள இராணுவத் தளத்தில் உலவுவதாகக் கதையிருந்தால் அதுதான் வீரமணி. வீரமணியிடம் தலைமுறை தலைமுறையாக சலிக்காது கேட்கக்கூடிய வீரக்கதையிருந்தது. கற்பனைக் கதையல்ல. அவனே நாயகனாயிருந்த கதைகள். விகடம் தொனிக்க அவன் அவிட்டுவிடும் கதைகள். பச்சைப் புளு…
-
-
- 5 replies
- 1.1k views
-
-
கேணல் ரமணன் வீரவணக்கம் மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல். ரமணன் (கந்தையா உலகநாதன்) திருப்பளுகாமம் மட்டக்களப்பு பிறப்பு - 14.10.1965 வீரச்சாவு - 21.05.2006 பாடசாலைக் கட்டிடத்திற்குள் இருந்த புழுக்கத்தை ஆற்றங்கரைக் காற்று கழுவிக் கொண்டிருந்தது. அது வகுப்புக்களுக்கான நேரம் அல்ல. வகுப்பறைகள் வெறிச்சோடிப் போய்க் கிடந்தன. காவலாளியும் காணப் படவில்லை. முற்றிலும் ஆளரவமற்றிருந்தது அந்தப் பாடசாலைஇ மதிலோரமும் தொருவோரக் கட்டிடத்திற்குள்ளும் பதுங்கியிருந்த சிலரைத் தவிர. பச்சைக்கரைப் பாவாடையைப் போல வயலும் நீலத் தாவணி போல வாவியும் கதிரவன் எழும்போதும் விழும் போதும் சிவக்கும் வானமுமாக கண்களுக்கு எப்போதுமே விருந்து வைக்கும் பழுகாமம்இ நாட்டுக் கலைகளுக்கும் நாவன்மை மிக்க …
-
- 14 replies
- 3.7k views
-
-
சிக்கலாகிவிட்ட களங்களில் தனிவீரம் காட்டி வெற்றிகளை எம்பக்கம் திருப்பிவிட்ட புலி வீரர்களை நான் கண்டுள்ளேன். நாங்கள் எதிர்பார்த்தபடி சண்டையின் போக்கு அமையாமல் எங்களுக்கு எதிராக எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்ட வேளைகளில், கட்டளைப்பீடத்தில் இருந்தபடி, சூழ்நிலைக்கேற்றவாறு சண்டை வியூகங்கள் அமைத்து தன்னம்பிக்கை தெறிக்கும் கட்டளைகளால் போராளிகளை வழிநடாத்திச் சண்டைகளை வென்ற தளபதிகளை நான் கண்டிருக்கின்றேன். ஒரு தாக்குதலுக்கு முன், சண்டைக்கான தயார்ப்படுத்தல்களை இரவு – பகல் பாராது ஓடியோடி உழைத்து – வெற்றிகளுக்கு அத்திவாரமாகத் திகழ்ந்த தளபதிகளை நான் கண்டிருக்கின்றேன். ஆனால் இந்த வீரதீர பண்புகள் அனைத்தையும் ஒருங்கே கொண்டிருந்த புலிவீரர்களில் ஒருவரை நான் கண்டிருக்கின்றேன். அது பால…
-
-
- 20 replies
- 4.1k views
-
-
-
மண்ணின் மைந்தர்களான மாவீரர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்களை நான் போற்றுகின்றேன். உங்கள் குழந்தைகள் தமது தாய்நாட்டின் சுதந்திரத்தை நேசித்தவர்கள். இந்த உன்னதமானவர்களை ஒரு புனித இலட்சியத்திற்காக உவந்தளித்த பெற்றோராகிய நீங்கள் நிச்சயம் பெருமைகொள்ளவேண்டும். உங்கள் குழந்தைகள் சாகவில்லை சரித்திரமாகிவிட்டார்கள். என்ற தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் உள்ளத்துச் சிந்தனைக்கு அமைவாக மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்த்தப்பட்டது. இந்த நிகழ்வின் நீட்சியாக யாழ்கள உறவுகளும் மாவீரர்களைப் பெற்றெடுத்த அந்தப் பெற்றவர்களை அறிந்து தெரிந்திருந்தால், அவர்கள் இருக்கும் போதே போற்றி மதிப்பளிப்பது போற்றுதற்குரியது. மொறிசம்மா என்று செல்லமாக அழைக்கப்படும் தியாகராசா…
-
- 0 replies
- 439 views
-
-
முள்ளிவாய்க்கால் வரை எதிர்நின்று சமராடிய லெப்.கேணல் தமிழ்மாறன்….! 22.10.2007 அன்றைய நாளை தமிழ் மக்கள் மட்டுமல்ல, சிங்கள மக்களும் ஏன் உலக இராணுவ வல்லுனர்களும் இலகுவில் மறந்து விடமாட்டார்கள். எல்லாளனைத் தோற்கடித்ததாகப் பெருமைகொண்ட சிங்கள இனத்திற்கு, யார் எல்லாளன் என்பதை தமிழீழ தேசியத் தலைவர் காண்பித்த நாள் அது. ஏன் இந்த உலகமும் எல்லாளனை அறிந்துகொண்டது அந்த நாளில்தான். இந்த எல்லாளன் நடவடிக்கை ஒரு சில மணி நேரங்களுக்குள் நடந்து முடிந்துவிட்டபோதும், இதற்கான திட்டமிடல்களும், பயிற்சிகளும், வேவுகளும் மிக நீண்ட காலமாக இடம்பெற்றன. இந்த வெற்றிக்காக கொடுக்கப்பட்ட விலையும் மிகவும் அதிகம். இந்த வெற்றிக்காக 21 அற்புதமான போராளிகள் தங்கள் உயிர்களை விலையாகக் …
-
- 2 replies
- 771 views
-
-
லெப். கேணல் நவம் வீழ்ந்தாலும் வித்துக்களாக மடிந்தாலும் மக்களுக்காக………..! Last updated May 14, 2020 முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்திருந்த இந்திய இராணுவ முகாம் மீதான தாக்குதலில் விழுப்புண்பட்டு தமிழகத்தில் சிகிச்சை பெற்றுவந்த வேளை 15.05.1989 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் லெப். கேணல் நவம் (டடி) ஆகிய மாவீரரின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். படைய ஆய்வு முயற்சி ஒன்றின் போது கையை இழந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றான் ஒரு போராளி. வருவோர் போவோர் எல்லாம் அவனுக்கு ஆறுதலும், இரக்கமும் தெரிவிக்கின்றனர். அது அவனுக்கு சினத்தை மூட்டுகின்றது. இறுதியாக அவனது தாய் வருகின்றாள். நீ போராடியது போதும். இனி உனக்கு ஒரு கையி…
-
- 1 reply
- 1.2k views
-
-
படைத்துறை வரைபடத் தளபதி பிரிகேடியர் சசிக்குமார்! பன்னாட்டு சதிகளும் – சிறிலங்கா இராணுவமும் இணைந்து மேற்கொண்ட தமிழின அழிப்பிற்கு எதிராக களமாடி நின்றவேளை…., சிறிலங்க இரானுவத்தின் எறிகணைத் தாக்குதலில் விழுப்புண்ணடைந்தும், முறியடிப்புத் தாக்குதல் சம்பவத்திலும் 15.05.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் படைத்துறை வரைபடத் தளபதி பிரிகேடியர் சசிக்குமார் ஆகிய மாவீரரின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப்புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவராக விளங்கிய சசிக்குமார் “சசி மாஸ்டர் “என்று அழைக்கப்படும் பிரிகேடியர் சசிக்குமார் அவர்கள், 15.05.2009 …
-
- 2 replies
- 876 views
-
-
இறுதிமூச்சுவரை எதிரியோடு சண்டைபிடித்துக் காட்டிய வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம்! Last updated May 14, 2020 பன்னாட்டு சதிகளும் – சிறிலங்கா இராணுவமும் இணைந்து மேற்கொண்ட தமிழின அழிப்பிற்கு எதிராக களமாடி நின்றவேளை…., சிறிலங்க இரானுவத்தின் எறிகணைத் தாக்குதலில் விழுப்புண்ணடைந்தும், முறியடிப்புத் தாக்குதல் சம்பவத்திலும் 15.05.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்களும், முதுநிலைத் நிலை கட்டளைத் தளபதிகளுமான பிரிகேடியர் சொர்ணம், ஆகிய மாவீரரின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். திருகோணமலை எப்பொழுதும் அலை எழுந்து ஆர்ப்பரிக்கும் ஒரு அழகிய நகரம். தமிழினத்தின் தலை நகரம் என்னும் சிறப்பை பெற்று நிமிர்ந்து நிற்கிறது. இந்தத் தலை நகரந்…
-
- 1 reply
- 1.3k views
-
-
தமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்... “வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில் இருந்தவர்களின் முகத்தில் ஏதோ ஒரு வித மாற்றம் வரும். அவர் போராளிகளுக்குக் கொடுக்கின்ற பயிற்சி அவ்வளவு கடினம் மட்டுமல்லாது பயிற்சியை முறையாகச் செய்யாதவர்களுக்கு அடிப்பதும் காரணமாக இருந்தது. அவரிடம் பயிர்ச்சி பெற்றவர்களுக்கு அவர் மீது எவ்வளவு கோவம் இருந்ததோ அதை விட மேலாக பாசமும் இருந்தது. “கடும் பயிற்சி; இலகுவான சண்டை” என்ற அண்ணையின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்தவர் எங்கள் வசந்தன் மாஸ்…
-
- 0 replies
- 2.1k views
-
-
'படிமப்புரவு: NTT' இம்மறத்தியைப் பற்றி எனக்கு ஏதும் தெரியாது. வேசுபுக்கில் மேய்ந்து கொண்டு போகும்போது இவர்தொடர்பாய் கிடைத்த வைரத்திற்குச் சமனான சிறு தகவலை விரித்து எழுதியிருக்கிறேன். இவர் முதலில் மாலதி படையணி போராளியாய் இருந்து பல களங்கள் கண்டவர். அப் படையணியில் '2ம் லெப்டினன்' (துய தமிழில் 'அரையர்') தர நிலையில் இருந்தார். சிங்களத்தை எதிர்த்து சுடுகலனால் களத்திலும், தூவலால்(பேனா) கவிதையாலும் ஆடினார். ஓம், நன்றாக கவிதை எழுதுவார். தான் எழுதிய கவிதையை தானே கவிமொழிவார். நான்காம் ஈழப்போர் காலத்தில் இவர் எழுதி, இவரே கவிமொழிந்த ஒரு கவிதை த.தே.தொ. இன் 'கவிப்பயணம்' என்னும் நிகழ்ச்சியில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்நிகழ்ச்சி: kavippayanam-poem-travel …
-
- 0 replies
- 1.4k views
-
-
இம்மறவனைப் பற்றி எனக்கு ஏதும் தெரியாது.. வேசுபுக்கில் மேய்ந்து கொண்டு போகும்போது இவந்தொடர்பாய் கிடைத்த வைரத்திற்குச் சமனான ஒரு தகவலை இங்கே பதிந்து செல்கிறேன். இவர் கரும்புலிகளைப் பற்றி எடுக்கப்பட்ட திரைப்படமான 'உயிரம்புகள்' இல் ஒரு கரும்புலியாய் வேடம் ஏற்று நடித்தவர் ஆவார்.. ஆனால், பின்னாளில் உண்மையிலேயே ஒரு மறைமுகக் கரும்புலியாகி காற்றோடு கலந்துவிட்டான். என்றென்றும் வாழ்வாய், தமிழர் மனங்களில்!
-
- 2 replies
- 883 views
-
-
கடலிலே களம் அமைத்துத் துணிகரமாக போராடி வெற்றியினைத்தந்து வீரகாவியமானோர். ஜெயசிக்குறு இராணுவநடவடிக்கைக்கு எதிரான மறிப்புச் சமரை படையணிகள் நடாத்திக்கொண்டிருந்த அதேவேளை அந் நடவடிக்கைக்குத் தேவையான பொருட்களை தலைவர் அவர்களின்எதிர்கால திட்டத்திற்கு அமைவாக அவரது ஆலோசனையின் அடிப்படையில் கடற்புலிகளின் வழங்கல் அணிகள் செயற்பட்டுக் கொண்டிருந்தவேளையில், 01.05.1999 அன்று முல்லைத்தீவுக் கரையிலிருந்து லெப் கேணல் தர்சன் அவர்கள் தலைமையிலான படகுத் தொகுதி 110கடல்மைல்களுக்குச் சென்று கப்பலில் பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தவேளையில் 55 கடல்மைல் தூரத்தில் இலங்கைக் கடற்படையின் டோறாப் பீரங்கிப் படகுகள் வழிமறிக்கமுற்பட்ட வேளையில் அக்கடற்படையினருடன் சண்டையிட்டு வந்து கொண்டி…
-
- 0 replies
- 442 views
-