Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் நினைவு

மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.

  1. லெப்டினன்ட் ராஜா தமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய லெப்டினன்ட் ராஜா (பரமதேவா) மட்டு நகர் மண்ணின் முதல் மாவீரன்! 1984 ம் ஆண்டு யூலை மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத் தாக்குதல் தளபதியாக ராஜா என்னும் பெயருடன் பரமதேவா தாய் மண்ணில் கால் பதித்தார். 1983 ம் ஆண்டு யூலை இலங்கைத் தீவில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்பைத் தொடர்ந்து தமிழ் இளையோர்களின் எழுச்சி, புரட்சிவாத உணர்வாக மாறியதன் விளைவில் பரமதேவா என்ற விடுதலை வீரனின் பயணம் ஒரு தளபதியாக, சிங்களப் படைகளை எதிர்த்துத்தாக்கும் களவீரனாக எம்மைக் காண வைத்தது. சிங்களப் படைகளுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தும் நோக்க…

  2. 03.09.2000 அன்று யாழ். நகரின் தென்கிழக்கு மற்றும் தென்மராட்சிப் பகுதியில் பலமுனைகளில் முன்னகர்ந்த சிறிலங்கா படையினருக்கு எதிரான சமரில் காவியமான லெப்.கேணல் இரும்பொறை உட்பட்ட 120 மாவீரர்களினதும், அம்பாறை மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் காவியமான மூன்று மாவீரர்களினதும் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஓயாத அலைகள் - 3 நடவடிக்கை மூலம் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்ட யாழ். நகரின் தென்கிழக்கு மற்றும் தென்மராட்சி பகுதிகளை மீள வல்வளைக்கும் நோக்குடன் ரிவிகரண என்ற குறியீட்டுப் பெயருடன் சிறிலங்கா படையினரால் பல முனைகளினூடாக பாரிய முன்னகர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த முன்னகர்வு முயற்சிக்கு எதிராக விடுதலைப் புலிகளின் படையணிகள் மேற்கொண்ட முறியடிப்புத் தாக்குதலில் சிறி…

    • 12 replies
    • 1.2k views
  3. லெப். கேணல் வீரன் தமிழீழ விடுதலையில் உறுதியான பற்றுக் கொண்ட லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தாக்குதல் தளபதி லெப். கேணல் வீரன் / கோபிதன். கிளிநொச்சி மாவட்டம் கந்தபுரம் தான் வீரனினசொந்த ஊர். க.பொ.த.சாதாரண தர கல்வியை 1995ல் முடித்த சோமசுந்தரம் மோகனசுந்தரம் என்ற பதினாறு வயது மாணவன் விடுதலைப் போராட்டத்தின்பால் கவரப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டான். “சரத்பாபு – 10” பயிற்சித் தளங்களில் அடிப்படை பயிற்சியை முடித்த வீரன் யாழ். மாவட்ட படையணியில் இணைக்கப்பட்டான். யாழ் குடா நாட்டின் பல்வேறு பகுதிகளில் தனது களச் செயற்பாடுகளைத் துவங்கிய இளம் போராளி வீரன் தொடர்ந்து வன்னிக் காடுகளில் கடமையாற்றினான். 1996ம் ஆணடு லெப். சாள்ஸ் அ…

  4. லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் வீரவணக்க நாள்.! 1987 செப்ரெம்பர் 26ம் நாள் தமிழீழம் எங்கும் ஒரு துயரம் தோய்ந்த சோகநாளாகவே அமைந்தது. திலீபனின் இழப்பு அனைத்து தமிழர் மனங்களையும் வாட்டிவதைத்தது. சிறீலங்கா – இந்தியா ஒப்பந்தம் மூலம் தமிழீழத்தை ஆக்கிரமித்த இந்திய அரசின் வஞ்சகச்சதியால் மக்களுக்காக வாழ்ந்த அந்த ஒளிவிளக்கு ஓய்ந்தது. இத்தோடு முடிந்துவிட்டது என்று மக்களின் மனத்தில் எண்ணங்கள் ஓட, தமிழீழக் கடற்பரப்பிலே பயணித்துக் கொண்டிருந்த லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளைக் கைதுசெய்து அவர்களின் சாவுகளுக்கு சிறீலங்கா – இந்திய அரசுகள் காரணமாகின. அது அனைத்து மக்களையும் இன்னுமோர் சோகத்தில் ஆழ்த்த…

  5. 13.10.1997 அன்று வவுனியா மாவட்டம் பெரியமடுப்பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சந்திரகாந்தன் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 13.10.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் அன்பரசன் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். தாயக விடுதலைக்காய் தனது இன்னுயிரை ஈகம் செய்த இந்த மானமாவீரனுக்கு எமது வீரவணக்கங்கள். http://meenakam.com/news/flashnews/2011/10/13/13 தாயக விடுதலைக்காக தம்மையே அர்ப்பணித்த இம்மாவீரர்களுக்கு வீரவணக்கம்.

  6. 2ம் லெப்டினன்ட் இறைவாணன் 02-01-2007 அன்று மன்னார் இலுப்பைக்கடவைப் பகுதியில் தவறுதலான வெடிவிபத்தின் போது வீரச்சாவைத் தழுவி கொண்டார் . கப்டன் அகரமல்லன் 02-01-2007 அன்று வீரச்சாவைத் தழுவி கொண்டார் . லெப் முததுமாறன் 02-01-2008 அன்று வீரச்சாவைத் தழுவி கொண்டார் . லெப் ஆடழகன் 02-01-2008 அன்று வீரச்சாவைத் தழுவி கொண்டார் . 02.01.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக் மாவீரர்களின் 3ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடியலுக்காய் தன்னை ஆகுதியாக்கிய இந்த வீரமறவனுக்கு எமது வீரவணக்கங்கள். http://meenakam.com/...ical/2012/01/02 தமிழீழ தாயக விடியலுக்காய் த…

  7. தேசத்தின் விடிவிற்காய் தன் உயிரை ஆயுதமாக்கி புறப்பட்ட மேஜர் விடுதலை.! “தேசத்தின் விடிவிற்காய் தன் உயிரை ஆயுதமாக்கி ஆழியவளை மண்ணிலிருந்து விடுதலைக்குப் போராடப் புறப்பட்ட கரும்புலி மேஜர் விடுதலை” கந்தையா இந்திராணி என்ற இயற்பெயரைக் கொண்ட இவள் வடமராட்சி கிழக்கு ஆழியவளை மண்ணில் பிறந்து வளர்ந்தவள். இந்த மண்ணும் தேசவிடுதலைக்குப் போராட பல போராளிகளை உகந்தளித்த மண். அந்த வகையில் இவளும் போராட்டத்தின் தேவையை உணர்ந்து இனவாத அடக்குமுறைக்கு எதிராக 1992ம் ஆண்டு பிற்பகுதியில் தன்னை விடுதலைப் புலிகளில் முழுமையாக இணைத்துக் கொண்டாள். கடற்புலிகள் மகளிர் படையணியின் முதலாவது பயிற்சி முகாமில் தனது அடிப்படைப் பயிற்சிகளை முடித்துக்கொண்டு தொடர்ந்து ஏனைய பயிற்சிகளையும் முடித…

  8. 03.12.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் வரதன் (றொனி/சாமி) அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடியலுக்காய் தன்னை ஆகுதியாக்கிய இந்த வீரமறவனுக்கு எமது வீரவணக்கங்கள் http://meenakam.com/...ical/2011/12/03 தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்துக்காக தம்மை இந்நாளில் ஆகுதியாக்கிய வீரமறவர்களுக்கு வீரவணக்கம் .

  9. தென்தமிழீழம் தந்த இன்னுமோர் முத்து - அக்பர்! நன்றி "விடுதலைப்புலிகள்" விடுதலை வீரியம் விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்டினன்ட் கேணல் அக்பர் / வழுதி.................. வட போர்முனையின் கட்டளைப் பணியகம். தொலைத்தொடர்புக் கருவி அக்பரைத் தேடுகிறது. தொடர்பு இல்லை. காலையில்தான் முன்னணி நிலைகளைப் பார்த்துவிட்டு, அணித் தலைவர்களைத் தயார்படுத்துவதற்காக பின் தளத்திற்குப் போய் வருவதாகத் தளபதி தீபனிடம் கூறிச்சென்றவன். இன்னமும் வரவில்லை. மாலை 3.00 மணி அக்பரின் தொடர்பில்லை. மாலை 5.00 மணி தொடர்பில்லை. இரவு 8.00 மணி தொடர்பில்லை. தளபதியின் மனதில் ஐயம் தோன்றுகின்றது. நாளை விடிந்தால் எதிரி முன்னேறக்கூடிய நிலையில் அக்பர் ஒருபோதும் இத்தனை மணிநேரம் தொடர்பில…

  10. 18.10.2000 அன்று ஓயாத அலைகள் 4 படை நடவடிக்கையில் நாகர்கோவில் களமுனையில் விழுப்புண்ணடைந்து 23.10.2000 அன்று வீரச்சாவை அணைத்துக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர் அவர்களினதும், இதே நாள் திருகோணமலைத் துறைமுகத்தில் வைத்து சிறிலங்கா கடற்படையின் மூன்று கடற்கலங்களை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் ரெஜி, மேஜர்கள் திருமாறன், மயூரன், நித்தி, நிதர்சன், றோஸ்மன் ஆகியோரின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீர மறவர்களிற்கும், இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள். …

  11. சர்வதேசக் கடற்பரப்பில் எம்.ரி சொய்சின் எண்ணைக் கப்பலில் காவியமான வீரமறவர்கள்! 14.06.2003 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் எம்.ரி சொய்சின் (M.T. CHOSHIN) எண்ணைக் கப்பலை சிறிலங்கா கடற்படையினர் வழிமறித்து தாக்கி மூழ்கடிப்பின் போது வீரச்சாவைத் தழுவிய கப்பல் கப்டன் நிர்மலன், சீவ் ஒவிசர் கதிர், 2ம் ஒவிசர் வீரமணி, 3ம் ஒவிசர் கன்னியநாடன், றேடியோ ஓவிசர் கஜேந்திரன், சீவ் எஞ்சினியர் அன்புக்குமரன், 2ம் எஞ்சினியர் கடற்கரும்புலி வள்ளுவன், 3ம் எஞ்சினியர் கடற்கரும்புலி நிமால், எலக்ரிக் எஞ்சினியர் வீரநாதன், போஸன் கடற்கரும்புலி மணியரசன், ஏபிள் சீமன் செழியன், நாட்டுப்பற்றாளர் மோகன் ஆகிய ஆழக் கடலோடிகளின் 18 ம் ஆண்டு வீரவணக்க நாள் .! எம்.ரி சொய்சின் கப்ப…

  12. ஆளுமையின் வடிவம் லெப். கேணல் நிலவன் டிசம்பர் 15, 2020/தேசக்காற்று/வழித்தடங்கள்/0 கருத்து ஆளுமையின் வடிவம் கடற்புலி லெப். கேணல் நிலவன். ஆறடி உயரம், ஒருமுறை பார்த்தால் மறுமுறை பேசத் தூண்டும் எடுப்பான தோற்றம். கள்ளம் கபடமற்ற அவன் சிரிப்பு, அரசியல் தெளிவு மிக்க அவன் பேச்சு, படையியல் காய் நகர்த்தலில் அவனுக்கிருந்த திறன், மக்களுக்குள் இறங்கி அவர்களின் வாழ்வியலை உயர்த்த அவன் உழைத்த உழைப்பு என எல்லாவற்றிலும் என்றும் மறக்க முடியாத ஒருவன்தான் நிலவன். இம்ரான் பாண்டியன் படையணியிலிருந்து கடற்புலிகள் அணிக்கு வந்திருந்த நிவவனது கையில் இருந்தது சுஊடு ஆயுதம். இந்த ஆயுதத்துடன் தான் படகுகளில் ஏறிச் சண்டை செய்தான். படகில் ஆயத இயக்குனராகச் சண்டைக…

  13. ஒரு வீரனின் ஆசை நவம்பர் 23, 2020/தேசக்காற்று/கரும்புலிகள் காவியங்கள்/0 கருத்து கரும்புலி லெப். கேணல் போர்க் மாப்பாணப்பிள்ளை அரசரத்தினம் ஆறுமுகத்தான் புதுக்குளம், வவுனியா பிறப்பு: 11.11.1959 வீரச்சாவு: 23.11.1990 வன்னிப் பிராந்தியத்தின் மையத்தில் – அதன் இருதயத்தில் மாங்குளம் சிங்களப் படைமுகாம் இருந்தது. அது அங்கு பல அட்டூழியங்களைச் செய்து வந்தது. இரண்டாவது ஈழப்போர் தொடங்கிய நாட்களிலிருந்து இம் முகாம் புலிகளால் முற்றுகையிடப்பட்டிருந்தது. எமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அமைந்துள்ள இப்படைமுகாம் மீது தாக்குவதற்கான திட்டம் தயாரிக்கப்படுகிறது. அப்படை முகாம்மீது கரும்புலித் தாக்குதல் நடாத்தி அதைக் கைப்பற்றுவது என்று தீர்மானிக்கப்பட…

  14. கப்டன் ரஞ்சன் (லாலா) நீங்காத நினைவில் …… Last updated Jul 13, 2020 கப்டன் லாலா ரஞ்சன் கனகநாயகம் ஞானேந்திரமோகன் ஓடக்கரை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:02.09.1960 வீரச்சாவு:13.07.1984 நிகழ்வு:யாழ்ப்பாணம் தொண்டமானாற்றுப் பகுதியில் சிறிலங்கா அதிரடிப்படையின் சுற்றிவளைப்பின்போது வீரச்சாவு ” மக்கள் போராட்டம்’ என்ற தமக்கே புரியாத சில தத்துவங்களைப் பேசுபவர்கள் தாங்கள் பேசுவது நடைமுறைக்கு சாத்தியமாகுமா என்பதைப் பற்றி யோசிக்காமல் அதை புலிகள் செய்கிறார்கள். ஆகவே கட்டாயம் அதைப் பிழை என்று தான் சொல்லவேண்டும். அப்படிச் சொன்னால் தான் நான் சிறந்த முறையில் அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்கிறேன் என தங்கள் இயக்கம் நற்சான்றிதழ் வழங்கும் எ…

    • 6 replies
    • 1.1k views
  15. கேணல் வீரத்தேவன் மகத்தான மாவீரன் கேணல் வீரத்தேவன்! தாயை விட தாய்நாடுதான் முக்கியம் என்பதை சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன் அந்த வார்த்தைகளின் உயிருள்ள உருவத்தை அவனில் நான் கண்டேன். வீரத்தேவனின் துணிகரமான சாதனைகளை என்னால் எழுத்தில் வர்னிக்க முடியாதவை இருந்தாலும் எனது மனதைத்தொட்ட ஒரு நிகழ்வை மட்டும் அவனது மன உறுதியை எழுத உந்தியது.1996ஆம் ஆண்டு 9ஆம் மாதம் ஆரம்பத்தில் மட்டு அம்பாறை மாவட்ட புலனாய்வுப்பகுதிக்குப் பொறுப்பாளராக இருந்த திரு நிக்சன் அவர்கள் வவுனியா மாவட்ட புலனாய்வுப்பொறுப்பை ஏற்றிருந்த காலம் நிக்சன் அவர்களின் பணிகளை செவ்வனே செய்வதற்காக வவுனியாவுக்கான புலனாய்வு வேலைகளைஎற்கனவே செய்த அனுபவம் இருந்ததால் பொட்டு அம்மான் அவர்களால் நியுட்டன் அவர்களின் நிர்வாகத்தில் இ…

  16. " லெப். செல்லக்கிளி அம்மானின் 30ம் ஆண்டு வீரவணக்க நாள் " 23.07.1983 அன்று யாழ் திருநெல்வேலிப் பகுதியில் வைத்து சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது வரலாறாகிய லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மானின் 30ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தளபதி லெப்.சீலன் அவர்கள் மீதான தாக்குதலுக்கான பதில் நடவடிக்கையாக 23.07.1983 அன்று இரு படை ஊர்திகளில் சுற்றுக்காவல் வந்த சிறிலங்கா படையினர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. கண்ணிவெடித் தாக்குதலுடன் தொடங்கிய விடுதலைப் புலிகளின் கரந்தடித் தாக்குதலில் சுற்றுக்காவல் வந்த படையினரில் 13 பேர் கொல்லப்பட இரு படுகாயத்துடன் தப்பியோடினர். [ லெப் செல்லக்கிளி அம்மான் நினைவூட்டல் ‘ ] தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் உட்பட விடுதலைப் புலிகளின…

  17. 03.07.2000ம் அன்று தமிழீழக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையினர் மீதான தாக்குதல் முயற்சி ஒன்றில் வீரச்சவைத் தழுவிய கடற்கரும்புலி கப்டன் ஜெயாஞ்சலியின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தாய் மண்ணின் விடியலுக்காய் தன்னை ஆகுதியாக்கிய இந்த வீரவேங்கையை இன்றைய நாளில் நினைவு கூருகிறோம்.

  18. தமிழர் விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலில் காயமடைந்த சீலன், குமரப்பா, புலேந்திரன் போன்றவர்களுக்கு சிகிச்சையளித்ததற்காக கைது செய்யப்பட்டு (1983) வெலிகடை சிறையில் குட்டிமணி, தங்கத்துரை, வண பிதா சிங்கராசா, மற்றும் விரிவுரையாளர் நித்தியானந்தன் போன்றவர்களுடன் இருந்து பின் மட்டக்களப்பு சிறையுடைப்பில் தப்பி இந்தியா சென்று விடுதலைப் புலிகளின் TRO அமைப்பின் தலைமைப் பொறுப்பை வகித்தவரும், தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம், அடேல் பாலசிங்கம், யோகி போன்றவர்களுடன் உடனிருந்து பணியாற்றியவரும், விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவுக்கு ஆரம்ப காலங்களில் பயிற்சியளித்தவரும், முல்லைத்தீவு மாவட்ட வைத்திய ப…

  19. லெப். கேணல் தேவன்.! Last updated Mar 28, 2020 இரவின் இருள் சூழ்ந்த நேரம். படைக் காப்பரணில் வெளிச்சம் தெரிகின்றது. அணி நகர்ந்துகொண்டிருந்தது. அந்த அணிக்குள் தேவன் மட்டுமல்ல அவனது ஒன்றரை அகவை நிரம்பிய குழந்தை, அவனது மனைவியென அவனது குடும்பமே நகர்ந்துகொண்டிருந்தது. வவுனியா படை வல்வளைப்புப் பகுதியிலிருந்து படைக் காவலரணை ஊடறுத்து வன்னி நோக்கி இரகசியமாக அவர்கள் வந்துகொண்டிருந்தார்கள். படையினரின் காப்பரண் வரிசையைக் கடக்கும்போது சத்தமில்லாமல் கடக்கவேண்டும் அப்போது ஏதும் அறியாக் குழந்தை சத்தமிட்டால் நிலைமை விபரீதமாகிவிடும். அதனால் ஏற்கனவே குழந்தையை ஆழ்ந்து உறங்கச் செய்திருந்தார்கள். ஆனாலும் இராணுவ வேலியைக் கடக்கவிருந்த வேளையில் வெளிச்சத்தைக் கண்டவுடன் குழந்தை விழித்துக்கொள்க…

    • 2 replies
    • 1.1k views
  20. காங்கேசன்துறை மற்றும் மாதகல் கடற்பரப்பில் காவியமான நான்கு கடற்கரும்புலிகளினதும் மட்டக்களப்பில் காவியமான மூன்று மாவீரர்களினதும் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 20.09.1995 அன்று காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிக் கலம் மீதான தாக்குதலில் கடற்கரும்புலி மேஜர் கீர்த்தி (வல்லிபுரம் நகுலேஸ்வரன் - பளை, யாழ்ப்பாணம்) கடற்கரும்புலி கப்டன் சிவன் (சிவா) (கிருஸ்ணபிள்ளை மோகனதாஸ் - மண்டைதீவு, யாழ்ப்பாணம்) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். மாதகல் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் வழங்கல் கப்பல் மீதான தாக்குலில் கடற்புலிகளின் முல்லை மாவட்டத் சிறப்புத் தளபதி கடற்கரும்புலி மேஜர் அன்பு (அந்தமான்) (இராமசாமி …

    • 14 replies
    • 1.1k views
  21. [size=4]தமிழீழக் கடற்பரப்பில் காவியமான லெப்.கேணல் அண்ணாச்சி உட்பட்ட 9 மாவீரர்களினதும், மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் காவியமான இரு மாவீரர்களினதும் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.[/size] [size=4]01.10.1999ம் அன்று நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை ஏற்பட்ட விபத்தில் லெப்.கேணல் அண்ணாச்சி (சிறி) (காங்கேயமூர்த்தி கருணாநிதி - வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்) மேஜர் குகராஜ் (சிலம்பரசன்) (ஜோன்பீற்றர் தார்ற்றியாஸ் - குடத்தனை, யாழ்ப்பாணம்) மேஜர் ராகினி (பாலசிங்கம் பிரபா - தாளையடி, யாழ்ப்பாணம்) கப்டன் கோபி (நகையன்) (கோபாலராசா ரமேஸ்கண்ணா - கரவெட்டி, யாழ்ப்பாணம்) கப்டன் செந்தமிழ்நம்பி (இராசையா பிரபாகரன் - நீர்வேலி, யாழ்ப…

  22. லெப். கேணல் மறவன் மாஸ்ரர் டிசம்பர் 11, 2020/தேசக்காற்று/அலைகடல் நாயகர்கள்/0 கருத்து காலத்தின் உயிர் மூச்சாக ஓயாத புயலாக என்றும் கடற்புலி லெப். கேணல் மறவன் மாஸ்ரர். காலத்தின் உயிர் மூச்சாக ஓயாத புயலாக என்றும் கடற்புலி லெப். கேணல் மறவன் மாஸ்ரர்.தமிழீழத் தேசத்தின் விடுதலை வேள்வியில் விதையாகிப்போன ஆயிரமாயிரம் மாவீரர்களின் வரலாற்றுத் தடங்களில் கடற்புலிகளின் மூத்த உறுப்பினர் லெப். கேணல் மறவன்மாஸ்ரர் அவர்களின் வரலாற்றுப்பதிவும் தனித்துவமான அத்தியாயமாகப் பதிவாகியுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சியில் கடற்புலிகள் படையணி எத்தகைய முக்கியத்துவம் வகித்ததோ அதே போல் கடற்புலிகளின் வளர்ச்சியிலும் கடற்புலிகளின் அரசியல்த்துறையின் விரிவாக்கத்திலும்…

  23. || முல்லைக் கடற்பரப்பில் பயிற்சியின் போது எதிர்பாராமல் ஏற்பட்ட படகு விபத்தில் காவியமான கடற்கரும்புலி மேஜர் திசையரசி உட்பட்ட கடற்புலி கட்டளை அதிகாரி லெப்.கேணல் பழனி மற்றும் கடற்புலி மேஜர் தூயவள் ஆகியோரின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். முல்லைக் கடற்பரப்பில் 15.08.2000 அன்று பயிற்சியின் போது எதிர்பாராமல் ஏற்பட்ட படகு விபத்தில் காற்றில் கலந்தவர்கள்… இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் கடலிலும் - தரையிலும் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! || புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் || தேசக்காற்று இணையம் செல்ல இங்கே அழுத்துங்கள்

  24. [size=3][size=4]17.11.1994 அன்று நெடுங்கேணிப் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து நடத்திய தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் மல்லி(அமுதன்) அவர்களின் நினைவு வணக்க நாள் இன்றாகும். சிறிலங்காவில் சந்திரிகா தலைமையில் புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி தமிழீழ விடுதலைப் புலிகள் நல்லெண்ண நடவடிக்கையாக அறிவித்த தன்னிச்சையான போர்நிறுத்த காலப்பகுதியிலேயே சிறிலங்கா படையினரால் லெப்.கேணல் மல்லி மீதான தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.[/size][/size] [size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். [/size] [size=5]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்…

  25. 10.07.1990 அன்று வல்வெட்டித்துறைக் கடலில் காவியமான முதற் கடற்கரும்புலிகள் மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகியோரின் 22ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். வல்வெட்டித்துறைக் கடற்பரப்பில் நின்றவாறு கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் எடித்தாரா கட்டளைக் கப்பல் மீது 10.07.1990 அன்று கடற்கரும்புலிகள் மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகியோர் வெடிமருந்து நிரப்பப்பட்ட தமது படகினை மோதி வெடிக்க வைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் புதியதொரு வரலாற்றைப் படைத்தனர். இக்கடற்கரும்புலி மாவீரர்கள் தொடங்கி வைத்த வழியினில் தமிழீழக் கடற்பரப்பிலும், அதற்கு அப்பாலும் சிறிலங்கா கடற்படையின் பல கடற்கலங்களை மூழ்கடித்தும், ஆயிரக்கணக்கான ச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.