மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
944 topics in this forum
-
ஒயாத அலைகள் -1 முல்லைத்தள வெற்றிச்சமருக்கான கடினமான கடற்பயிற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது, அதேவேளை உயரக்கடல் ஆயுத வினியோக நடவடிக்கையும் நடைபெற்றுக்கொண்டிருந்தது. வினியோக நடவடிக்கைகளில் கொலின்ஸ், வினோத், தர்மன், தீபன் போன்ற அதிவேகப்படகுகள் ஈடுபடுத்தப்பட்டு நடுச்சாம வேளைகளில் இரகசியக் கடற்பயணங்கள் நடைபெற்றுவந்தது. முதன்முதலாக எமது இயக்கத்துக்கு இரட்டைக்குழல் கனொன் பீரங்கிகள் இறக்கப்பட்டு சமவேளையில் அதற்கான பயிற்சிகளும் பிரமந்தனாறு காட்டுப்பகுதியில் லெப் கேணல் இரும்பொறை தலைமையினான பயிற்சியாசிரியர்களால் கடற்புலிகளின் விசேட அணியினருக்கு வழங்கப்பட்டுவந்தது. முல்லைச்சமருக்கான விமான எதிர்ப்பு நடவடிக்கையில்கூட கடற்புலிகள் விசேட அணியினரே ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இ…
-
- 0 replies
- 791 views
-
-
தமிழீழப் போர் மருத்துவ வரலாற்றில் அசாத்திய ஆற்றல் மேஜர் இறைகுமரன் (திவாகர்) 1990ம் ஆண்டு யாழ் நகரை இரும்பரக்கனாக அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது ஒல்லாந்தர் உருவாக்கிய கோட்டை. இதனை சிறிலங்கா படைகள் பலமான தளமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றது. பல நூறு ஆண்டுகளின் பின்னர், பகைவன் கோட்டையொன்றைக் கைப்பற்றுவதற்கான முற்றுகையைத் தமிழர் வீரவரலாறு சார்பாகப் புலிகள் நடாத்திக்கொண்டிருக்கின்றார்கள். ஒரு லட்சம் தீவுப்பகுதி மக்கள் ஏதிலிகளாயினர். பல இலட்சம் தீபகற்ப மக்கள் அல்லலுறுகின்றனர். இதற்கு நேரடிக் காரணமான படை முகாம் வீழ்த்தப்பட்டேயாக வேண்டும். இம்முகாமிற்குப் முதன்மை வழங்கற் பாதையாக விளங்கும் பண்ணைப் பாலம் தகர்க்கப்படல் வேண்டும். ஐம்பது மீற்றர் முன்னால் பகைவனின் ப…
-
- 1 reply
- 788 views
-
-
தமிழீழ போராட்ட வரலாற்றில் ஒருபுரட்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி தமிழீழ தேசிய ஆன்மாவை தட்டிஎழுப்பிய நிகழ்ச்சி பாரத நாட்டை தலைகுனிய வைத்த நிகழ்ச்சி உலகத்தின் மனட்சாட்சியை தீண்டிவிட்ட நிகழ்ச்சி என்று தீர்க்க தரிசனமாக தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் அன்று தெரிவித்துள்ளார். ஈகைச்சுடர் லெப்ரினன் கேணல் திலீபனின் 26ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் இந்திய அமைதிப்படைக்கு எதிராக ஜந்தம்ச கோரிக்கையினை முன்வைத்து சாகும்வரை உண்ணா நோன்பிருந்து காந்திதேசத்தின் முகத்தில் கரியை பூசிய இராசையா பார்த்தீபன் என்று அழைக்கப்படும் லெப்பரினன் கேணல் திலீபனின் 26ஆம் ஆண்டு நீங்கா நினைவுகளை எங்கள் மனதில் நிறுத்தி விடுதலை பயணத்தினை தொடர்வோம்.. அதேவேளை தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் வான்…
-
- 0 replies
- 786 views
-
-
ராதா வான்காப்புப் படையணியின் கட்டளையாளர்களில் ஒருவரும் அண்ணியின் மெய்க்காப்பாளர்களில் ஒருவருமான லெப்.கேணல் அர்ச்சுணன். இவருக்கு இரட்டைக் குழந்தைகள் உண்டு. --> FB
-
- 1 reply
- 783 views
-
-
பொத்துவில் மண்ணில் விடுதலை நெருப்பாய், விடியலுக்காய் எழுந்தவன் லெப். சைமன் (ரஞ்சன்). தென் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் தலைநகரமான பெங்களுரின் தொடரூந்து நிலையத்தில் சுமார் நூறுவரையிலான விடுதலைப்புலிப் போராளிகள் இராணுவப் பயிற்சிபெறும் நோக்கோடு செல்வதற்கு தயாரான நிலையில் இருந்தனர். அப்போது ரஞ்சன் தனது போராளி நண்பர்களை நோக்கி இந்த பெங்களூர் நகருக்கு நான் அப்போதே வரவிருந்தேன். வானூர்தி ஓட்டியாக பயிற்சி பெறுவதற்கு இங்குள்ள நிறுவனத்தில் அனுமதியும் பெற்றிருந்தேன். ஆனால் வரவில்லை. இன்று, இங்கு நிற்கின்றபோது அதையும் எண்ணிப்பார்க்கின்றேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஏனெனில் எமது மக்களின் விடுதலைக்கான ஓர் பயணத்தில் நாம் இருப்பதுதான் அந்த மகிழ்ச்சிக்குரிய காரணமாகும்…
-
- 0 replies
- 781 views
-
-
1991ம் ஆண்டு இயக்கத்தில் இணைந்த ஒஸ்காா் மணியந்தோட்டத்தில் லெப் கேணல் சாரா அவர்களின் தலைமையில் பயிற்சிபெற்றுக்கொண்டிருந்த வேளையில் (இவர் மன்னாா் மாவட்டத் தளபதியான லெப் கேணல் விக்ரர் அண்ணையின் தமையனது மகனென அறிந்த சரா அண்ணை விக்ரர் அண்ணையின் சங்கேதப் பெயரானா ஒஸ்காரை இவனுக்கு வைத்தார்.அத்தோடு விக்ரர் அண்ணையைப் பற்றி சில அறிவுரைகளையும் வழங்கினாா்.) 'ஆகாயக் கடல் வெளிச்' சமருக்கான பின்களப்பணிகளுக்கான சென்றாா். ஆகாய கடல் வெளி சமருக்குப் பின் கடற்புறாவாக இருந்த அணி கடற்புலிகளாக உருவாக்கப்பட்டபோது அங்கு சென்று ஐப்பான் 01 இல் பயிற்சிபெற்று கடற்புலியானான். 29.08.1993 ம் ஆண்டு பருத்தித்தித்துறைக் கடற்பரப்பில் கரும்புலித்தாக்குதலில் அழிக்கப்பட்ட டோறா பீரங்கிப் படகில் கைப்பற்றப்பட்ட …
-
- 0 replies
- 776 views
-
-
இன்று செப்டம்பர் 26. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய போராளிகளில் ஒருவரான தியாகி திலீபனின் நினைவுநாள். ஒவ்வொரு ஆண்டும் திலீபன் தியாகச் சாவடைந்த நாளை நினைவுகூர்ந்து கொண்டே இருக்கிறேன். சின்ன வயதில் இடம்பெயர்ந்து வீடுகளே இல்லாத நாட்களில்கூட திலீபனின் தியாகத்தை நினைவுகூர்ந்தோம். 1995இற்கு முன்பாக ஒரு வருடத்தில், அதுவும் ஒரு நாவற்பழக்காலம் வீட்டின் முன்பாக உள்ள நாவல் மரத்தின் கீழ் எங்கேயோ வாங்கி வந்த திலீபனின் படத்தை கொண்டு வந்து தீபம் ஏற்றிய நினைவு இப்பொழுதும் அந்த நாவல்மரத்தின் கீழிருக்கிறது. இடம்பெயர்ந்து ஸ்கந்தபுரத்தில் இருந்த பொழுது எங்களுக்கு வசிக்க வீடே இருக்கவில்லை. ஒரு மர நிழலில் வாழ்ந்துகொண்டிருந்தோம். அப்பொழுதும் திலீபனின் நினைவுநாள் வந்தது. ஒரு துணியால் ச…
-
- 0 replies
- 774 views
-
-
[size=4]தமிழர்கள் வாழும் இடமெங்கும் தமிழீழ விடுதலைக்காகப் போராடி மடிந்த மாவீரர்களை நினைவுகொள்ளும் மாவீரர்நாள் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தமிழீழத் தாயகத்தில் மாவீரர் நாளை வெளிப்படையாக நினைவுகொள்ள முடியாவிட்டாலும், தங்கள் ஆழ்மனத்திற்குள்ளே பூசிக்கின்ற நாளாக இருக்கும்.[/size] [size=4]தமிழர்கள் வாழும் ஏனைய நாடுகளில் மிகவும் எழுச்சியுடன் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெறவிருக்கின்றன. அதற்கான ஏற்பாடுகளை அந்தந்த நாடுகளிலுள்ள தமிழ்த் தேசியத்திற்கான செயற்பாட்டாளர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள்.[/size] [size=4]தமிழீழ விடுதலைக்கான ஆயுதவழிப் போராட்டம் மௌனிக்கப்படுகின்ற நிலைக்கு வந்தபோதும், தமிழீழத் தேசிய விடுதலைக்கான போராட்டத்தை வெவ்வேறு முனைகளில் நகர்த்துவதற்கான உத்வேகத்…
-
- 1 reply
- 774 views
-
-
கப்டன் றெஜி டிசம்பர் 2, 2020/தேசக்காற்று/விழுதின் வேர்கள்/0 கருத்து விதைத்த விதைகளில் விருட்சமாக எழுந்தவர் கப்டன் றெஜி. 21.04.87 காலை, ஈழமுரசு பத்திரிகையில் ஒட்டிசுட்டான் படைமுகாம் தாக்குதலில் படையினர் பலர் பலி. 4 மணிநேரத் தாக்குதல். நாற்பதுக்கு மேற்பட்ட மோட்டார்களை போராளிகள் பயன்படுத்தினர். என்ற செய்தியை வாசித்தேன். ஒரு ஏ.கே கூட இல்லாமல் நாங்கள் இதே கட்டத்தை எமது சொந்த ஆயுதங்களுடன் தாக்கி வெற்றி பெற்ற அந்த நினைவுகள் என்னுள் எழுந்தன. ஒட்டிசுட்டான் படைமுகாம் தாக்குதல் வெற்றியில் றெஜியின் பங்களிப்பு பெரிது. அவர் வன்னியில் செயற்பட வந்த காலங்களில் ஏதாவது தாக்குதல் நடத்தவேண்டும் என்த் துடியாகத் துடித்தார். அவர் ஒட்டிசுட்டானில் கண்…
-
- 3 replies
- 774 views
-
-
மாவீரனே! மாவீரனே! -நீ மண்ணின் மைந்தனே! சாவேயுனைக் கரையாதடா-எங்கள் சந்ததிக்கே நீ உரைகல்லடா! வாழ்வுக் காகவே நீ வாழ்ந்த தில்லையே!-அன்னை தாழ்வை நிமிர்த்தவே-உயிர் தந்த பிள்ளையே! இந்தப் பொழுதிலே உன் இறக்கை முளைக்குதே! கந்தக் கோட்டத்தில் உன் கதைகள் கேட்குதே! விழிகள் உகுத்தநீர் வீழ்ச்சி காண்குதே! ஒளிகள் பொருந்திய உன் உயிரும் அழைக்குதே! சந்நிதி மருங்கில் உன்றன் சார்சிதை அழித்தும் விட்டார்! எம்மனச் சிறையில் உன்னை எவரடா அழிக்கக் கூடும்! இராட்சதர் வந்து எங்கள் இனத்தையே அழித்தும் விட்டார்! பிராட்டியும் கோனும் நின்ற பெருநிலம் மடக்கி விட்டார்! அரக்கர்கள் வருவார்! வந்து அசுரர்கள் ஆக நிற்பார்! இரக்கமில் லாதராகி எங்கள் …
-
- 0 replies
- 774 views
-
-
கிளிநொச்சியில் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் மாதவன்(சுனித்) மற்றும் புளியங்குளத்தில் சிறிலங்கா வான்படையின் குண்டு வீச்சில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் தாட்சாயினி, கப்டன் பாஞ்சாலி ஆகியோரின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். கிளிநொச்சி பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட எதிர்பாராத மோதலின்போது….. வவுனியா மாவட்டம் புளியங்குளம் பகுதியில் 03.08.1997 அன்று சிறிலங்கா வான்படை நடாத்திய குண்டு வீச்சின்போது…. இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! || புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ||
-
- 4 replies
- 771 views
-
-
லெப்டினன்ட் அபிநயா துள்ளித் திரிந்த சின்னப்புலி லெப்டினன்ட் அபிநயா. அபிநயாவின் நெட்டையான, சற்றுக் குண்டான தோற்றம் அவ்வணியிலேயே அவளைத் தனியாக இனங்காட்டும. முகம் நிறையச் சிரிப்புடன் எந்நேரமும் துள்ளித்திரியும் இவள் பயிற்சியிலும் இதே ஆர்வத்துடன் செயற்படுவாள். அந்த அணியிலேயே சிறியவள் என்பதால் எல்லோருக்கும் விருப்பமுள்ளவளாக இருந்ததுடன், தனது குழந்தைத்தமான பேச்சினால் அனைவரையும் கவர்ந்து விடுவாள் 1998 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட அபிநயா சிறுவயதிலேயே சிங்கள மொழியில் கதைக்கத் தெரிந்திருந்தாள். சிலவேளைகளில் தனக்குத் தெரிந்த சிங்களப் பாடல்களைப் பாடி எல்லோரையும் சிரிக்க வைப்பாள். இவளுக்குக் கோபம் வந்தால் சிங்களத்தில்தான் ஏசுவா…
-
- 3 replies
- 767 views
-
-
தன்னிகரில்லா ஒர் வீரசரித்திரத்தை தங்கள் ரத்தத்தால் எழுதிச் சென்ற நம் சொந்தங்களை நினைத்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் இந்நேரத்தில் சாதாரண தமிழ்மகனா எனக்கு இருக்கும் ஆதங்கங்களை மட்டும் நீண்ட மனப்போராட்டத்தின் பின் இங்கு பதிவாக எழுதுகிறேன்! தலைவன் வழியில் போராடி மடிந்த செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுக்கும் மாவீரர் நாளை பல பிரிவுகளாக பிரிந்து அனுஷ்டிக்கிறது எந்த கொள்கைகளுக்காக போராடி அவங்கள் வீரமரணம் அடைந்தாங்களோ அந்த நோக்கத்தை கொச்சைப்படுத்திறதாகவே அமையும்.மேலும் எதிரி கைகொட்டி சிரிக்கவும் போராட்டத்தை சிதைக்கவும் வாய்ப்பை நாமே உருவாக்கியிருக்கிறோம்! 'அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு'னு ச…
-
- 1 reply
- 767 views
-
-
கரும்புலி மேஜர் ரட்ணாதரனின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று. || இரைகின்ற கடலில் விரைகின்ற … மட்டக்களப்பில் 1990களில் சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு படுகொலைகளுடன் நேரடியாகத் தொடர்பு பட்ட வாகரைப் படை முகாமின் இரண்டாவது கட்டளை அதிகாரி மேஜர் சங்கிலியன் மீது 09.08.1999 அன்று மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். || உயிராயுதம் பாகம் : 07ல் இவ் தேசத்தின்புயல்களின் உயிரோட்டம் 1.29:45 – 1.35:25 வரை நீள்கிறது…. இதே நாளில் தமிழீழ தாயகத்தின் விடியலுக்காய் கடலிலும் – தரையிலும் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்… || புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் || தேசக்கா…
-
- 6 replies
- 766 views
-
-
விடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம் விடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம் இந்தியர்களும், இந்தியக்கூலிகளும் அம்மாவின் வீட்டிற்குள் அடிக்கடி பாய்வார்கள் நெடுமாறனையும், அவன் சனோதரர்களையும் தேடி…… நெடுமாறன் அம்மாவின் ஏழாவது பிள்ளை; அவன் தான் கடைசி. “நெடுமாறன் இங்க வாறதில்லையா… நேற்று வந்து எங்கட ஒரு ஆளையும் போட்டிட்டான்……” “அம்மாவில் அன்பிருந்தா மோன் அடிக்கடி வீட்டை வருவான் தானே……” அம்மாவையும், அக்காவையும் அவர்கள் அடிக்கடி வந்து உறுக்கிப் பார்ப்பார்கள். அப்போதெல்லாம் அக்கா அவர்களுக்குச் சூடாகவே பதில் சொல்லி அனுப்புவாள். இது அம்மா கொடுத்து வளர்த்த உறுதி – துணிவு. ஆனால், அம்மா அமைதியானவள் – எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு பேசாமலி…
-
- 2 replies
- 763 views
-
-
எதிரியின் பல முன்னேற்றங்களை தடுத்து நிறுத்தி கடுஞ்சமர் புரிந்த லெப். கேணல் வீரமைந்தன் On Feb 13, 2020 லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தாக்குதல் தளபதி லெப்டினன்ட் கேணல் வீரமைந்தன். கிளிநொச்சி மாவட்டம் கோணாவில் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி மங்களேஸ்வரன் என்ற இளம் மாணவன் தாயக விடுதலையில் வேட்கை கொண்டு, 1998 ம் ஆண்டு துவக்கத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தான். அடிப்படைப் பயிற்சிகளை முடித்துக் கொண்டு வீரமைந்தன் என்ற இளம் போராளியாக கடற்புலிகளில் இணைக்கப்பட்டான். விசேட பயிற்சிகளை பெற்றுக் கொண்ட வீரமைந்தன் , புங்குடுதீவு சிறிலங்கா கடற்படை மீதான தாக்குதலில் தனது கன்னிச் சமரை தொடங்கி திறமுடன் செயற்பட்டான். தொடர்ந்து எமது கடற்பரப்பில் பாதுகாப்பு…
-
- 1 reply
- 761 views
-
-
முள்ளிவாய்க்கால் வரை எதிர்நின்று சமராடிய லெப்.கேணல் தமிழ்மாறன்….! 22.10.2007 அன்றைய நாளை தமிழ் மக்கள் மட்டுமல்ல, சிங்கள மக்களும் ஏன் உலக இராணுவ வல்லுனர்களும் இலகுவில் மறந்து விடமாட்டார்கள். எல்லாளனைத் தோற்கடித்ததாகப் பெருமைகொண்ட சிங்கள இனத்திற்கு, யார் எல்லாளன் என்பதை தமிழீழ தேசியத் தலைவர் காண்பித்த நாள் அது. ஏன் இந்த உலகமும் எல்லாளனை அறிந்துகொண்டது அந்த நாளில்தான். இந்த எல்லாளன் நடவடிக்கை ஒரு சில மணி நேரங்களுக்குள் நடந்து முடிந்துவிட்டபோதும், இதற்கான திட்டமிடல்களும், பயிற்சிகளும், வேவுகளும் மிக நீண்ட காலமாக இடம்பெற்றன. இந்த வெற்றிக்காக கொடுக்கப்பட்ட விலையும் மிகவும் அதிகம். இந்த வெற்றிக்காக 21 அற்புதமான போராளிகள் தங்கள் உயிர்களை விலையாகக் …
-
- 2 replies
- 760 views
-
-
மேஜர் தங்கேஸ் நவம்பர் 10, 2020/தேசக்காற்று/சரித்திர நாயகர்கள்/0 கருத்து 41971 பங்குனித் திங்கள் 21ம் திகதி நம்பியார் இராமச்சந்திரன் தம்பதிகளின் செல்வப் புதல்வனாய் மறத்தமிழ் மகனாய் முத்துக்கள் விளையும் பூமி முருங்கனில் ராஜேந்திரம் என்னும் பெயருடன் இம்மண்ணில் உதித்தான். இவன் மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்தும் இவனது தந்தை இவனின் ஆரம்பக்கல்வியை மன்னார் முருங்கன் மகாவித்தியாலயத்தில்; பயிற்றுவித்தார். இவன் ஆசிரியர்கள் மத்தியில் நற்பெயருடனும் திறமையானவனாகவும் செயற்பட்டு வந்தான். இவனது திறமைகளைக் கண்டு ஆசிரியர்கள் இவனை மகாவித்தியாலயத்தின் மாணவர் தலைவனாக நியமித்தனர். இக்காலப் பகுதியில் எமது கிராமம் இந்திய ஆக்கிரமிப்பாளர்களால் சுற்றி வளக்கப்பட்டு தேசவிரோதி…
-
- 1 reply
- 759 views
-
-
வீரியமுள்ள வித்து லெப். கேணல் கில்மன்.! On Jun 28, 2020 தாக்குதல்கள் செய்வதற்காக அவர்களைப் பாதுகாக்க வேண்டிய தாகவும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்குத் தாக்குதல் செய்ய வேண்டியதாகவும் இருந்த களச்சூழலை அப்போது அவர்கள் எதிர் கொண்டனர். ஒவ்வொரு கணமும் அவர்கள் எதிர்கொள்ளவேண்டியிருந்த சிரமங்கள் ஏராளம். அவர்கள் சந்தித்த எந்தத் துயர்மலையாலும் துளிகூட அவர்களை நிலைகுலையச் செய்யமுடியவில்லை. ஒவ்வொரு வீரனின் உள்ளமும் உறுதியால் இழைக்கப்பட்டு தேசப்பற்றினால் உரம் பெற்றிருந்தது. எவ்வளவு கடினத்திற்குள்ளும் விடுதலைக்காக உழைக்கும் அவர்களின் உழைப்பு வீச்சுள்ளதாய் இருந்தது. அத்தனை வீரத்தையும் விடுதலைப்பற்றையும் தலைமுறைப் பற்றையும் ஊட்டியிருந்தான் அவன். காட்டு மரங்களும் மேட்…
-
- 1 reply
- 758 views
-
-
வீரவேங்கை அப்பன் புதிய சகாப்தம்: முதல் எல்லைப்படை மாவீரர் வீரவேங்கை அப்பன். “உதெல்லாம் உங்கட கனவு. துயிலும் இல்லத்தில உங்களையோ?” “என் எல்லைப்படை எண்டாலும் சண்டைக்குதானே போறன். சண்டையில செத்தா துயிலுமில்லம்தான்?” உங்கட உந்த எல்லைப்படையை நம்பி சண்டையில் அதுவும் முன்பொயின்ரில விடுவாங்களே?” நீ என்ன வேணுமெண்டாலும் சொல்லு. போயிட்டு திரும்பி வருவன் அல்லது துயிலுமில்லத்தில புதைகிற மாதிரி மாவீரனா வருவான்.” “சரி சரி உந்தக் கதைகளை விடுவம். வெளிநாட்டுக்குப் போறதக்குக் தேவையான அலுவல்கள் இன்னமிருக்கு ஞாபமிருந்தா சரி” “நான் சுவிக்குப் போனாலும் சரி ஜேர்மனிக்குப் போனாலும் சரி, ஐஞ்சு வருசமோ ஆறுவருசமோ நிண்டு உழசை;சுக்கொண்டு வந்திடுவன். பிள்ளையளை விட்டி…
-
- 1 reply
- 753 views
-
-
நாட்டுப்பற்றாளர் ஊடகர் பு. சத்தியமூர்த்தி வீரவணக்கம் ஒரு இனத்தின் அடையாளம் ஊடகம் என்பார்கள். அந்த ஊடகத்தை நிர்வகிக்கின்ற அல்லது அதனைப் பிரதிபலிக்கின்ற ஒப்பற்ற பணிதான் இனத்தினைப் பிரதிபலிக்கும். இந்த இலக்கணத்திற்கு வடிவம் கொடுக்க முனைந்து தன்னாலான பணியினை ஒப்பேற்றி இடை நடுவே பிரிந்த ஊடகர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தி உலகில் இருந்து பிரிக்கப்பட்டு 12-02-2010 உடன் ஓராண்டு பூர்த்தி கொள்கின்றது. தனக்கான பாதை எது தனக்குப் பொருத்தமான பணி என்ன என்பதை நன்கு பகுத்துணர்ந்தே சத்தியமூர்த்தி ஊடகம் என்னும் கருவியைத் தனதாக்கிக் கொண்டார். ஆரம்பத்தில் எழுத்தின் மீதான உந்துதலால் அல்லது ஈர்ப்பினால் அவர் தனது ஊடகப் பணியினை தொடங்கினார். மட்டக்களப்ப…
-
- 0 replies
- 750 views
-
-
லெப். கேணல் செந்தமிழ்ச்செல்வன் அவன் நிறைய சாதிக்க வேண்டியவன். யாழ்ப்பாணத்து மண்ணில் முருகைக் கற்களினும் ஊற்றெடுப்பது தண்ணீர் மட்டுமல்ல வீரமும் தான். இல்லாதுவிடின் வந்தேறி ஆக்கிரமிக்கும் அன்னியருக்கு தண்ணீர் பாய்ச்சி குளிரவைத்து குந்தியிருக்க இடம் கொடுத்திருக்கும் அல்லவா? இல்லையே? விதையை உடைத்து மண்ணைப் பிளந்து யாழ்மண்ணில் பலத்தையெல்லாம் திரட்டி காற்றைக் கிழித்து சூரியனைத் தொட்டுவிடத் துடிக்கும் பனைமரத்துடன் லெப். கேணல் செந்தமிழ்ச்செல்வனையும் பார்க்கிறேன். 1990 யாழ்ப்பாணம் இந்திய ஆக்கிரமிப்புப் படைகளிலிருந்து மீண்டும் தமிழர் படையாம் புலிகளின் கட்டுப்பாட்டினுள் வந்திருந்த நேரம். மாவட்ட புலனாய்வுப் பொறுப்பாளருக்கு முகவர்களாக …
-
- 2 replies
- 744 views
-
-
[size=4]கடற்கரும்புலிகள் மேஜர் நளினன் - கப்டன் ஜெயராஜ் நினைவு தொடர்பாக நாம் ஏற்கனவே அனுப்பிய செய்தி முழுமைப் படுத்தப்படவில்லை எனவே முழுமைப் படுத்பதப்ட்ட இச்செய்தியைப் பயன்படுத்தவும். திருகோணமலை துறைமுகத்தில் காவியமான கடற்கரும்புலிகள் மேஜர் நளினன், கப்டன் ஜெயராஜ் மற்றும் கடற்புலி 2ம் லெப்.மதன், வவுனியாவில் காவியமான மேஜர் திருமகன் ஆகியோரின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 25.10.1996 அன்று திருகோணமலை துறைமுக நுழைவாயிலில் வைத்து சிறிலங்கா கடற்படைக்குச் சொந்தமான “டோறா” அதிவேக பீரங்கிப் படகினைத் தகர்த்து மூழகடித்து கடற்கரும்புலி மேஜர் தில்லையன் (நளினன்) (தெய்வேந்திரன் யோகேஸ்வரன் - மூதூர், திருகோணமலை) கடற்கரும்புலி கப்டன் ஜெயராஜ் (பெரியதம்பி) (கந்தசாம…
-
- 9 replies
- 744 views
-
-
வீரவேங்கை - ராஜ்மோகன் வீரச்சாவு - 20 தை 1984
-
- 5 replies
- 742 views
-
-
மட்டக்களப்பு பெற்ற லெப்கேணல். சித்தா மாஸ்டர் 20ம்ஆண்டு நினைவு நாள் மட்டக்களப்பு மாவட்டத்தின் விடுதலைப்புலிகளின் தளப்பகுதி. அடிப்படைப் பயிற்சி முகாம் ஒன்று நிறைவடைந்து புதிய போராளிகள் பல்வேறு முகாம்களுக்கும் அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தனர். அத்தகைய வேளைகளில் இயல்பாகக் காணப்படும் புத்துணர்வும், கலகலப்பும் அவர்களின் முகங்களில் வெளிப்படையாகவே தெரிந்தது. ஆயினும் எமது முகாமிற்கு வரவிருந்த புதிய போராளிகள் அநேகரின் முகங்களில் ஒருவகையான கலக்கத்தை அவதானிக்க முடிந்தது. காரணத்தை ஊகிப்பது அவ்வளவு கடினமல்ல. படைத்துறைப் பயிற்சிப் பிரிவாக செயற்பட இம் முகாம் சற்று வேறுபாடானதுதான். மிகக் கடுமையான விதிமுறைகளுக்கும், விசித்திரமான தண்டனைகளுக்கும் பெயர் பெற்றது. அதேவேளை ஆற்றல்…
-
- 0 replies
- 737 views
-