மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
957 topics in this forum
-
-
- 0 replies
- 721 views
-
-
கடற்புலி லெப். கேணல் முகுந்தன் / டேவிட் டிசம்பர் 16, 2020/தேசக்காற்று/அலைகடல் நாயகர்கள்/0 கருத்து உருக்கின் உறுதியவன்: கடற்புலி லெப். கேணல் டேவிட் / முகுந்தன். இந்திய ராணுவம் எம் மண்ணை விட்டு போன போது, தேச விரோத சக்திகளுக்கு நவீன ஆயுதங்களை அள்ளி கொடுத்து விட்டு கப்பலேறியது; அவர்களுக்கு ஒரு நம்பிக்கை தங்கள் “வளப்புகள்” புலிகளை அழித்து விடுவார்கள் என்று? அதையும் இங்கே தங்கிய துரோகிகளும் நம்பினது தான் ஆச்சரியம்?? எதோ ஒரு குருட்டு தைரியத்திலும், வேறு வழியில்லாமலும் தமிழர் பிரதேசங்களில் முகாமிட்டிருந்தார்கள். அதில் PLOTE அமைப்பை சேர்ந்த துரோகிகள் மாணிக்கதாசன் (மாணிக்கதாசன் வவுனியாவில்,அவனது முகாமின் வீட்டு கூரையில் பொருத்தி வைத்திருந்த …
-
- 1 reply
- 720 views
-
-
தீரமுடன் போராடிய எல்லைப்படை மாவீரர்கள் நினைவில்.... எல்லைப்படை மாவீரர்கள் எல்லைத் திசையெங்கும் நிலையாகினர்- எங்கள் உரிமைக்கு பலம் தேடி வித்தாகினீர் மகிழ்வோடு ஈழம் காணப் படையது சேர்ந்தீர்- வேங்கை வீரரென விடுதலைக்கு உயிர் கொடுத்தீர் -அன்பரசு ஒரு விடுதலைப் போராட்டம் வெற்றி பெற வேண்டுமானால் அது மக்கள் இயக்கமாக இடம் பெற வேண்டும். போராடுவோர் வேறாகவும் மக்கள் வேறாகவும் பிரிந்து நிற்கும் போது வெற்றி வாய்ப்புக்கள் அரிதாகக் கிடைக்கின்றன. உலக விடுதலை வரலாற்றில் மக்கள் பங்களிப்பின் சிறப்பை எம்மால் உணர முடியும். மக்களும் போராடுவோரும் ஒரேயணியாக நிற்கும் போது எந்த சக…
-
- 0 replies
- 720 views
-
-
தமிழீழப் போராட்ட வளர்ச்சிக்கும் அரசியல் இராசதந்திர நகர்வுக்கும் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் ஆறாம் ஆண்டு வணக்க நிகழ்வு இன்று. தேசத்தின் குரல் அன்ரன்பாலசிங்கம் அவர்கள் இளவயதில் தமிழ் – ஆங்கில எழுத்தாளராகவும் உயர்மட்ட மொழி பெயர்ப்பாளராகவும் தனது பொது வாழ்வைத் தொடங்கிய அன்ரன் பாலசிங்கம் அவர்கள் சாவிற்கு முந்திய முப்பது வருட காலம் தமிழீழ விடுதலைப் போரின் மூத்த அரசியல் போராளியாக விளங்கினார். ஆர்வம் அனுபவம் அங்கீகாரம் என்பன அவரை முன்நிலைக்கு இட்டுச் சென்றன. தமிழீழ விடுதலைக்காக அவர் அனைத்து நாடுகளுக்கும் சென்று அரசியற்பயணங்களை மேற்கொண்டு தமிழர்களின் விடுதலைப்போரட்டத்தின் உண்மைநிலையினை உலகற…
-
- 1 reply
- 716 views
-
-
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் இறுதிக்களம் முள்ளிவாய்க்கால் சமர்க்களத்திலும் எமது தேசியத்தலைவருடனே களத்தில் நின்றவர் தலைவருக்கு எப்போதும் உண்மையாகவும் விசுவாசமாகவும் செயல்படவேண்டும் என்பதையே இலக்கணமாக கொண்டு வாழ்ந்தவர். அவர்தான் கேணல் சுயாகி 23வருடங்கள் இவரின் பணி வெளியில் அறியப்படாத, ஏன் போராளிகளுக்குக் கூட பெரியளவில் அறிமுகமில்லாதவன். ஆனால் எமது ஆயுதபோராட்டத்தை தாங்கி நிற்கும் ஆணிவேர் போன்றவர். எமது தலைவரால் பாராட்டப்பட்டவர் தமிழீழவிடுதலைப்புலிகளின் படைக்கல பாதுகாப்பு அணியின் பொறுப்பாளர் இவரே, ஆரம்ப காலத்தில் மணலாற்றுக் காடுகளில் எமது தேசியத்தலைவருடன் இருந்த காலந்தொட்டு இறுதி முள்ளிவாய்க்கால் வரை தலைவரோடு நின்று ஒரே பணியை செய்தவன். அண்ணனின் நம்பிக்கைக்குரி…
-
- 0 replies
- 715 views
-
-
முதல் பெண் தரைகரும்புலி மேஜர் யாழினி மற்றும் கரும்புலி மேஜர் நிதன் , கரும்புலி கப்டன் சாதுரியன் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று. புளியங்குளம் பற்றிய இராணுவ அபிலாசைகளுடன் படைத்தலைமை இருந்த வேளை , படையினருக்கு ஒரு பேரிடி தாண்டிக்குளத்தில் விழுந்தது. 10.06.1997 அன்று தாண்டிக்குளம் – நொச்சிமோட்டைப் பகுதிகள் மீது உள்நுழைந்து தாக்கும் ஒரு அதிரடித்தாக்குதலை புலிவீரர்கள் நிகழ்த்தினர். ஆக்கிரமிக்கப்பட்ட பாதிப்பகுதி மீது புலிகள் தாக்குவர் என்பதை படையினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தாக்குதலுக்காக புலிகள் தெரு செய்த இடங்களை சிங்களத் தளபதிகள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஓமந்தையையும் அதற்க்கு வடக்காகவும் புலிகள் தாக்குதலை எதிர்பார்த்திருந்த படையினருக்கு வவுனியாவின் வாசலிலேயே …
-
- 2 replies
- 715 views
-
-
கரும்புலி கப்டன் நாகராணி டிசம்பர் 25, 2020/தேசக்காற்று/தேசத்தின் புயல்கள்/0 கருத்து கரும்புலி கப்டன் நாகராணி: “பாதுகாப்பு” அந்தக் காப்பரண் வரிசை மிகவும் விழிப்பாக இருந்தது. இராணுவம் எந்தக் கணத்திலும் முன்னேறக்கூடும். அப்படி ஒரு முன்னேற்றத்திற்கு அவர்கள் முற்பட்டால் அதை முன்னணியிலேயே வைத்து முடக்க வேண்டும். ஜெயசிக்குறு சண்டையின் புளியங்குளக் களமுனை அது. புளியங்குளமென்பது சாதாரண ஒரு குளத்தின் பெயராகவோ அன்றி, ஒரு ஊரின் பெயராகவோ இல்லாமல் சிங்களப்படைகளின் அடி நரம்புகளையே அதிரவைக்கும் களமாக மாறியிருந்தது. முன்னேறுவதற்காக புறப்படும் ஒவ்வொரு சிங்களச் சிப்பாயும் பயப்பீதியால் நடுங்கிய களமுனை அது. புளியங்குளமென்பது புலிகளின் புரட்சிக்…
-
- 0 replies
- 711 views
-
-
விதைக்கப்பட்டது வீரமும்தான் நவம்பர் 15, 2020/தேசக்காற்று/வழித்தடங்கள்/0 கருத்து மேஜர் ரவிசங்கர் யூலியஸ் வின்சன் கெனடி சாவற்காடு, மன்னார். பிறப்பு: 08.09.1970 வீரச்சாவு: 09.06.1992 சிறுநாவற்குளம் படை முகாமிலிருந்து 300யார் தூரத்திலுள்ள பிரதான வீதிச் சந்தி. எப்போதும் இராணுவத்தினரின் அணி ஒன்று அங்கு காவலுக்காகப் பதுங்கி இருப்பது வழமை. முன்னிலையில் ஒரு ஏ.கே.எல்.எம்.ஜி யைக் கொண்டதாக, எந்த நேரமும் இரைதேடியபடி அந்த அணி காத்திருக்கும். இந்த இராணுவ அணியை வளைத்துத் தாக்கி அழித்துவிடுவதற்கு முடிவுசெய்யப்பட்டது. வேவு பார்த்து – திட்டமும் தயாரிக்கப்பட்டது. ரவிசங்கர் இந்த முயற்சியில் ஓய்வின்றிச் செயற்பட்டுக்கொண்டிருந்தான். …
-
- 0 replies
- 710 views
-
-
உங்களை இழந்த இந்நாளில்(30.10.2021) உங்களை நினைவு கூருகின்றோம்😢😢😢🙏வீரவணக்கங்கள் வரதா அக்கா🙏 லெப். கேணல் வரதா / ஆதி...! தமிழீழத்தின் முக்கிய துறைமுகப் பட்டணங்களில் ஒன்றான வல்வெட்டித்துறை தனியானதொரு பண்பாட்டின் உறைவிடம்.வல்லவர்களின் துறை வல்வெட்டித்துறை என்பது சாலவும் பொருந்தும்.திரைகடல் ஓடியும் திரவியம் தேடுவதில் வல்லவர்கள் மட்டுமல்ல,வரலாற்றில் பல தசாப்தங்களுக்கு முன்னரே கப்பல் கட்டும் தொழில் நுட்பத்தில் தலை சிறந்தோரையும் கொண்டது தான் வல்வைபூமி.எவருக்குமே கிடைத்தற்கரிய கலியுகக் கடவுளான எமது ஒப்பற்ற பெருந் தலைவன் தமிழீழத் தேசியத் தலைவர் பிறந்த ஊராகவும் இது திகழ்வதால் தமிழீழச் சரித்திரத்தில் இவ்வூர் அழியாப் புகழைப் பெறுகின்றது. இத்தகைய வரலாற்றுப் பெருமை மிக்க இந…
-
-
- 5 replies
- 710 views
- 1 follower
-
-
[size=4]30.10.2001 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் துன்கிந்த என்ற எரிபொருள் வழங்கல் கப்பலை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் கடலரசன், மேஜர் கஸ்தூரி, கப்டன் கனியின்பன், கப்டன் அன்புமலர் ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.[/size] [size=4]தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.[/size] கரும்புலிகள் உயிராயுதம் [size=6]http://www.facebook.com/karumpulimaveerarkal[/size]
-
- 7 replies
- 709 views
-
-
13ம் ஆண்டு நினைவு லெப்.கேணல் வரதா (ஆதி) பாலசேகரம் சந்திரகுமாரி வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.10.2006
-
- 0 replies
- 705 views
-
-
தமிழீழக் கடற்படையின் சிறப்பு தளபதி கேணல் சூசை அவர்களுடனான நீண்ட உரையாடல்.! By திரு வேந்தன் On Oct 16, 2019 இன்று தமிழீழ கடற்படைத் தளபதி சூசை அவர்களின் அகவை நாள் (16 .10.1963 – 16.10.2019) .இந்நாளில் அவர்களுடனான நீண்ட உரையாடல் பகுதியை இணைக்கின்றோம் .! தமிழீழக் கடற்படையின் சிறப்பு தளபதி கேணல் சூசை அவர்களுடனான நீண்ட உரையாடல்: கே: உலக விடுதலைப் போராட்டங் களில் எங்குமே கடற்படையொன்று கட்டியெழுப்பப் பட்டிருந்ததாக நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்தான் சக்திவாய்ந்த அதி நவீனமான ஒரு கடற்படை கட்டியெழுப்பப் பட்டிருக்கிறது. இந்த சிந்தனை, பலம், எங்கிருந்து பிறந்தது? ப: உ…
-
- 0 replies
- 705 views
-
-
உயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கி அடி ஆழங்கொண்ட நீர்ப்பரப்பில் நிலைகொண்டிருந்த வடபகுதித் தலைமையகக் கப்பலை தகர்த்தெறிந்த முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 19 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் ( 16-08-2013கடலன்னையின் பெண் குழந்தை முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி . உயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெண்மணல் பிரதேசம். சாதாரணமாக எந்த ஒரு இளம் பெண்ணுக்கும் இந்த வெண்மணற் பரப்பைப் பார்த்தால் தோழியருடன் ஓடிப்பிடித்து விளையாடத் தோன்றும். நீச்சல் பயிற்சியில் ஈடுபடவென கரைக்கு வந்த பெண் புலிகளின் மனம் ஏழைகளின் கண்ணீரில் இளகியது. அனுதாபத்துடன் அந்த மக்களின் நிலையைப் பற்றித் தமக்குள் பேசிக்கொண்…
-
- 2 replies
- 702 views
-
-
“தயவு செய்து என்னை எரிக்காதீங்கோ. என் அண்ணாக்குப் பக்கத்தில கொண்டு போய் தாட்டு விடுங்கோ அது மட்டும் எனக்குப் போதும். “ என்று தனது மருமகனுக்கு சொல்லி விட்டு தன் மூச்சை நிறுத்திவிட்டார் அந்த உயரமான பருமனான உடலமைப்புக் கொண்ட அந்த விடுதலை விரும்பி. அவரை கோமகன் என்று அறிந்தவர்களை விட சிங்கண்ண என்று அறிமுகம் கண்டவர்கள் தான் அதிகம். சாதாரண போராளிகள் முதல் மூத்த தளபதிகள் வரை சிங்கண்ண என்றால் அறிமுகம் அற்றவர்கள் இருக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர் அவ்வாறான புனிதமான பணியில் இருந்தார். மாவீரர்கள் தமிழ்த் தேசத்துக்காக தமது இன்னுயிர்களை ஆகுதி ஆக்கி விசுவமடு துயிலும் இல்லம் வரும்போது இந்த மனிதனை சந்திக்காமல் குழிக்குள் போவதில்லை. விசுவமடு துயிலும் இல்லத்தில் தனது இறுதிக்கால பணியைச்…
-
- 7 replies
- 700 views
-
-
யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத, நெஞ்சையுருக்கும் உண்மைச் சம்பவமாகி போனது இந்த பதிவு . எதிரியிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற கொள்கையை இயக்கம் தொடங்கப்பட்ட காலம் முதலே மிக இறுக்கமாகக் கடைப்பிடித்து வருபவர்கள் புலிகள். ஒவ்வொரு போராளியின் கழுத்திலும் சயனைட் வில்லைகள் இருப்பதன் காரணம் கூட இது தான். அப்படியாக இருந்தும் எதிரியிடம் சரணடைந்தும் பிடிபட்ட சம்பவங்களும் இருக்கத்தான் செய்கின்றன். அவற்றில் சில தவிர்க்கமுடியாத களசூழலில் எடுக்கப்படுவதுடன். சில இராஜதந்திர நகர்வுகளுக்காகவும் எடுக்கப்படுவதுண்டு. இச்சம்பவமும் எதிரியிடம் பிடிபடும் சந்தர்ப்பமொன்றின்போது நடந்ததுதான். 1997 ஆணி மாதம் மட்டக்களப்பிலிருந்து வன்னி நோக்கி இருபடகுகளில் சில போராளிகள் வருகிறார்கள்.கடமை நிமித்தம…
-
- 1 reply
- 697 views
-
-
லெப். கேணல் பொன்னம்மான் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். லெப். கேணல் பொன்னம்மான் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். யாழ். மாவட்டம் கைதடிப் பகுதியில் எதிர்பாராமல் ஏற்பட்ட வெடிவிபத்தின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மூத்த தளபதி லெப். கேணல் பொன்னமான், தென்மராட்சி பொறுப்பாளர் மேஜர் கேடில்ஸ், விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு, லெப்.சித்தார்த்தன், 2ம் லெப். பரன், வீரவேங்கை ஜோகேஸ், வீரவேங்கை குமணன், வீரவேங்கை அக்பர், வீரவேங்கை கவர், வீரவேங்கை தேவன் ஆகிய மாவீரர்களின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். யாழ். மாவட்டம் நாவற்குழி படைமுகாம் மீதான தாக்குதலுக்கு 14.02.1987 அன்று வெடிமருந்து நிரப்பப்பட்ட ஊர்தி ஒ…
-
- 2 replies
- 695 views
-
-
லெப். கேணல் மாருதியன் அம்பாறை மாவட்ட தளபதி லெப்.கேணல் மாருதியன் / றஞ்சன் நாம றஞ்சனை பார்க்கவேணும் அது தமிழீழத்தின் எல்லை மாவட்டம். மிக அழகான பச்சைப்பசேல் என்ற வயல் வெளிகளையும் அதன் எல்லையில் எம் வீரமறவர்களை வளர்க்கும் அடர்த்தியான பெரும் கானகத்தையும் பல புலிவீரர்களை ஈன்றெடுத்த அழகிய தமிழ் கிராமங்களையும் கொண்டதுதான் அம்பாறை மாவட்டம். அந்தக் கானகம் எமக்கு பரிச்சயமானதாக இருந்தாலும் புதிதாகச் செல்பவர்களுக்குப் பயம் நிறைந்திருக்கும். அக்காட்டினுள் இருக்கும் புலிகளின் பாசறையில் பகல் வேளைகளில்கூட சூரியனைக் காண முடியாது. எத்திசையில் இருக்கின்றோம் என்பது தெரியாது. அத்தோடு பல மிருகங்களின் வெவ்வேறுபட்ட மிகப் பயங்கரமான சத்தங்கள். மொத்தத்தில் தனியா…
-
- 2 replies
- 693 views
-
-
லெப்டினன்ட் கேணல் அகிலா அக்டோபர் 30, 2020/தேசக்காற்று/வெஞ்சமரின் நாயகிகள்/0 கருத்து லெப்டினன்ட் கேணல் அகிலா: தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் அவர் ஓர் தனி அத்தியாயம். எங்கள் தலைவரின் சேனைக்குள் உருவான ‘அக்கினிக் குழந்தை’ மெல்ல உயிர்ப்புக்காக உழைத்தவர்களில் லெப்.கேணல் அகிலாவின் பங்கும் அளப்பரியது. அவருள் இருந்த அந்த ஆளுமை, பல்துறை விற்பன்மை, எமது தேசத்தைக் கடந்து பறந்து போன பெருமை….. அவரது தனித்துவமான இடம் நிரப்பப்பட முடியாததுதான். எப்போதுமே காற்சப்பாத்துக்களைக் கழற்றியறியாத கால்கள், நடந்துவரும் போது தனியானதொரு கம்பீரம் நடையிற் தெரியும். அந்த மெல்லிய உருவத்தின் வல்லமை, அதைவிட உறுதியின் வலிமை, எல்லாவற்றிலுமே முன்னுதாரணமான …
-
- 2 replies
- 692 views
-
-
கடற்சமரை வழிநடத்தும் கடற்புலித் துணைத்தளபதி லெப் கேணல் இரும்பொறை மாஸ்ரர் .... உம் வீரம் அலையெறி பகை வென்றிட எம்மண்ணில் பிறப்பாயா எம் கடற்சேனைத் துணைத்தளபதியே ...?
-
- 1 reply
- 692 views
-
-
உயிராயுதம் கரும்புலிகளின் வீரம் [size=4]பாகம் 1[/size] https://www.facebook.com/photo.php?v=355682331175917 உயிராயுதம் கரும்புலிகளின் வீரம் [size=4]பாகம் 2[/size] https://www.facebook.com/photo.php?v=356077774469706 உயிராயுதம் கரும்புலிகளின் வீரம் [size=4]பாகம் 3[/size] https://www.facebook.com/photo.php?v=356548037756013 [size=1]அன்பான நண்பர்களே தயவுசெய்து முகப்புத்தாக லிங்கை கிளிக் செய்து லைக் செய்யவும் நன்றி [/size] https://www.facebook.com/karumpulimaveerarkal [size=5]அன்பான நண்பர்களே தயவுசெய்து முகப்புத்தாக லிங்கை கிளிக் செய்து லைக் செய்யவும் நன்றி [/size] https://www.facebook...pulimaveerarkal
-
- 0 replies
- 691 views
-
-
கேணல் வாகீசன் (சீலன்/துரோணர்) தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் வெளியகப் புலனாய் நடவடிக்கையின் “தாயக விடுதலைக்காய் தன்னையே மறைத்து எதிரியின் சாம்ராஜ்யத்தில் சாதனைகள் பல படைத்து விடுதலை அமைப்பின் நகர்வுக்கு வித்திட்ட போராளி” புலனாய்வுக் கட்டமைப்பே ஒரு இராணுவ அமைப்பை சீராக வழிநடத்த ஊன்றுகோலான ஒன்றாகும். போராட்டத்தில் இணைந்த ஆரம்பத்திலேயே புலனாய்வு சம்பந்தமான துறையில் இணைந்து விடுதலைப் பணியாற்றிய தளபதி துரோணர். இவரின் பணியில் விடுதலை தீ வீச்சாக தென்பட்டது. காலம் உருண்டோட பொறுப்பாளர்களின் அதி நம்பிக்கைக்குரியவனாக திகழ்ந்தான். விடுதலையை வேண்டி போராடும் ஒரு இராணுவ அமைப்பு கட்டுக் கோப்பாக சீர்குலைவின்றி வளர புலனாய்வுத் துறையே முக்கியம் என்பதை உ…
-
- 1 reply
- 687 views
-
-
முதலாவது கடற்கரும்புலிகளின் தாக்குதல் 10.07.1990… எடித்தாராவை எட்டி உதைத்த கடற்கரும்புலிகள் 10.07.1990….! பலர் கருதுவது போல எமது வாழிடமான நிலப்பகுதி மட்டும்தான் தமிழீழத் தாயகம் அல்ல. பழமையும், பெருமையும், செழுமையும் கொண்ட தமிழீழக் கடலும் தமிழர் தாயகம் தான். எமது விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்த வரை எமது கடலிற்கும் முக்கிய பங்குண்டு. விநியோகங்களும், போக்குவரத்திற்கும், வெளி உலகத் தொடர்பிற்கும் இக்கடலே பிரதான பாதையாக இருந்துவருகின்றது. இதை நன்கு அறிந்த சிங்கள அரசு கடற்பயனங்களைத் தடுத்து விடுதலைப் போராட்டத்தை நசுக்கத் திட்டமிட்டது. அதன் பிரகாரம் 1984ம் ஆண்டு திரு.லலித் அத்துலத்முதலி பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்ற பின் , இந்தக் கடல் எமதும் எமது …
-
- 1 reply
- 687 views
-
-
கடற்கரும்புலி மேஜர் அன்பு கண்ணீரைக்கடந்து… ‘அம்மா…. இன்பருட்டி வானுக்க நிக்கிற சக்கை வண்டியில அண்ணா நிக்கிறானம்மா…..’ மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வேர்த்து விறுவிறுத்தபடி ஓடி வந்த அம்மாவின் சின்னமகன் சொன்னபோது, அம்மாவின் அடிவயிற்றில் தீமூண்டது. வீட்டில் நின்ற கோலத்தோடே செய்த வேலையைப் போட்டுவிட்டு அம்மா கடற்கரைக்கு ஓடினாள். கூடவே அன்புவின் அன்பு உறவுகளும்…… இன்பருட்டி ‘வான்” அன்புவின் உறவுகளால் முற்றுகை இடப்பட்டதோடு, ஒப்பாரியும், ஓலமுமாய் அந்த ‘வான்” அதிர்ந்து கொண்டிருந்தது. அன்புவின் அம்மாவையும், உறவுகளையும், கூட நின்ற போராளிகள் தேற்ற முயன்று தோற்றுப்போய் நின்றார்கள். நிலைமையைச் சமாளிக்க வேண்டிய பொறுப்பு பொறுப்பாளரின் தலை…
-
- 1 reply
- 686 views
-
-
ஆனந்தபுர மண்ணில் ஆட்லறி நிலைகளை உருவாக்கிய பிரிகேடியர் மணிவண்ணன்! Last updated Apr 3, 2020 தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட மணிவண்ணன். தொடக்க காலத்திலேயே கேணல் ராயு அவர்களுடன் இணைந்து தனது விடுதலையின் பணியை மேற்கொண்டிருந்தார். கேணல் ராயு அவர்களின் வீரச்சாவுக்கு பின்னர் கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதியாக தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டிருந்தார். கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதியாக நியமிக்கப்பட்ட பிரிகேடியர் மணிவண்ணன் அவர்களின் செயர்ப்பாட்டுக் காலப்பகுதியில் தான் சிறிலங்காப்படைகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்லறித் தாக்குதலில் பாரிய இழப்புக்களை …
-
- 1 reply
- 686 views
-
-
லெப். கேணல் பொற்கோ குறித்து பொட்டம்மான் கூறுகையில் … தளபதி லெப். கேணல் பொற்கோ பற்றி அம்மான் சொன்னது……….. லெப். கேணல் பொற்கோ சாதாரண போராளிகளை விட பல்வேறு விடயங்களில் மாறுபட்டவராக இருந்தார்” என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் தெரிவித்துள்ளார். லெப். கேணல் பொற்கோ அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவில் கருத்து பகிர்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்: “போராட்டத்தில் இணைவதற்கு முன்னர் கிறிஸ்தவ பாதிரியாருக்கான கற்கை நெறியில் பொற்கோ இணைந்திருந்தார். அநேகமாக அக்கற்கை நெறியின் நடுப்பகுதியை கடந்த நிலையில் சிங்கள அரசின் இனவெறி தாக்குதலும், 1983 ஆம் ஆண்டின் கொடூரமான இனக்கலவரமும் சேர்ந்து அவரை ஒரு தேசி…
-
- 1 reply
- 686 views
-