மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
944 topics in this forum
-
[size=4]29.10.1995 அன்று அளவெட்டியில் அமைந்திருந்த சிறிலங்கா படை நிலைகளிற்குள் ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 11 கரும்புலி வீரர்களின் 15ம் ஆண்டு வீரவணக்க நாளும் [/size][size=1] [/size][size=1] கரும்புலி 2ம் லெப்டினன்ட் இசைச்செல்வன் நாகராசா சண்முகசீலன் யாழ்ப்பாணம் கரும்புலி கப்டன் அகத்தி இராமநாதன் நடராசா அம்பாறை கரும்புலி கப்டன் ஈழவன் திருச்செல்வம் ரொபேட்சன் யாழ்ப்பாணம் கரும்புலி கப்டன் ஜீவன் (தினகரன்) கணபதிப்பிள்ளை இராமணேஸ்வரன் மட்டக்களப்பு கரும்புலி கப்டன் சிறைவாசன் (திலீப்) நாராயணப்பிள்ளை விக்கினேஸ்வரன் மட்டக்களப்பு கரும்புலி லெப்டினன்ட் கலைச்செல்வன் ஆறுமுகம் சந்திரகுமார…
-
- 7 replies
- 1.6k views
-
-
கப்டன் பண்டிதர் எமது விடுதலை அமைப்பின் மூத்த உறுப்பினரும் அவரது ஆழுமையும் வழிகாட்டலும் 31 Views எமது விடுதலை அமைப்பின் அத்திவாரம் போடப்பட்ட போது ரவீந்திரன் என்ற இயற் பெயரைக் கொண்டவரின் ஆழுமையும் அறிவும் பண்பும் ஒருங்கே அமைந்திருந்ததால் எல்லா மூத்த உறுப்பினர்களும் அவரைப் பண்டிதர் என்றே அழைத்தனர். முதல் மாவீரரான சங்கரின் அயல் வீட்டினரும் நெருங்கிய நண்பருமான பண்டிதர் வசதி படைத்த குடும்பத்தில் பிறக்காவிடினும் தமிழ் மக்களின் விடுதலைக்காக நேர்மையுடனும் கடமை கண்ணியத்துடனும் செயற்பட்ட ஒரு சிந்தனையாளர். நான் பண்டிதர் என்ற உயர் சிந்தனை கொண்டவரை 1981 ஆரம்ப காலங்களில் சந்தித்த போது மிகவும் பயத்துடனேயே சந்தித்தேன். அந்த முதல் சந்தி…
-
- 0 replies
- 440 views
-
-
ஆண்டாண்டு காலமாய் அடிமைப்பட்டு கிடந்த தமிழ் இனத்தின் வீரத்தை வரலாற்றில் பதிந்த நாள் விடுதலைக்கு உயிர் கொடுத்து உரமாகிப்போன உத்தமர்களின் நாள் அடக்கு முறைக்கும் அடிமைத்தனத்திற்கும் எதிராக அலையென எழுந்த ஆத்மாத்த வீரர்களின் நினைவு நாள் தாயக மண்ணை தாயாக கருதி அவள் மடியில் உறங்குகின்ற வேங்கைகளின் நாள் தமிழர் தலைநிமிர்ந்து வாழ தங்களை ஆகுதி ஆக்கிய எங்கள் மறவர்களின் நாள் தாயக மண்ணில் மீண்டும் பெரும் விருட்சமாக எழுந்திட விதையாகிப்போன எங்கள் கண்மணிகளின் நாள் வரிப்புலியாகி விடுதலை வேண்டி வீரத்தின் சாதனைகளை தலைவன் வழியில் நிலைநாட்டிய வீரப்புதல்வர்களின் நாள் உங்களிற்காக குனிந்த எம் தலைகள் மீண்டும் தாயக பயணம் நோக்கி நிமிர்கின்றன தாயக விடுதலைக்கு எங்களால் முடிந்த வரை உழை…
-
- 2 replies
- 1.2k views
-
-
கடற்கரும்புலி கப்டன் வினோத் கடற்கரும்புலி கப்டன் வினோத் வேலுப்பிள்ளை திலகராசா காட்டுவளவு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:19.08.1970 வீரச்சாவு:10.07.1990 நிகழ்வு:யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கடலில் வைத்து சிறிலங்கா கடற்படை எடித்தாரா கட்டளைக் கப்பல் மீதான கரும்புலித்தாக்குதலின்போது வீரச்சாவு அடுத்தநாள் தான் தம்பி தெரிஞ்சது. அதில நான் பெத்த குஞ்சுவும் ஒண்டெண்டு அண்டைக்கு ஊரெல்லாம் ஒரே பரபரப்பாய் இருந்தது. அண்ணைமார் கடற்கரைக்கு வாறதும் போறதுமாய் இருந்தினம். “இன்றைக்குப் பெடியள் கரும்புலியாய்ப் போய் நேவிக் கப்பலை அடிக்கப்போறாங்களாம்.” என்று, ஜனங்கள் பரவலாய்க் கதைக்கினம். “அப்படியெண்டா நாளைக்குக் காலமை நேவி அடிப்…
-
- 1 reply
- 454 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற தளபதி கேணல் ராயூ அவர்கள் புற்றுநோயின் காரணமாக 25-08-2002 அன்று வீரச்சாவடைந்தார். ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அம்பலவாணர் நேமிநாதன் என்ற இயற்பெயருடைய ராயு அண்ணை, புலிகளின் இந்தியா-03 பயிற்சிப் பாசறையில் தனது அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றிருந்தார். நேரிய பார்வை, எதையும் தீர்க்கமாக ஆராய்ந்தறியும் தன்மை, ஓயாத உழைப்பு, இவைகள் ராயு அண்ணையின் அடையாளங்கள். போராளிகளோ பணியாளர்களோ யாரையும் சாதுரியமாக வேலை செய்விப்பதில் அவருக்கு நிகர் அவரேதான். கொடுக்கப்பட்ட பணிகள் உரிய நேரத்தில் செய்துமுடிக்கப்படாத பட்சத்தில் அவருடைய கோபங்களையும் பார்க்க முடியும். ஆனாலும் அதிலொரு நிதானமிருக்கும். கொடுக்கப்படும…
-
- 13 replies
- 1.4k views
-
-
அண்ணன் அப்துல்லா வழியில் ஆகுதியான தங்கை திலகா நிதித்துறை மகளிரிலிருந்து போர்முன்னரங்குகளுக்கான மேலதிக ஆட்கள் தேவை கருதி அணி ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டது. முத்தையன்கட்டு சோதியா படையணியின் பயிற்சிப் பாசறை நோக்கி மேஜர் ஜெயந்தி களப்பயிற்சிக்காக அவ் அணியை அழைத்துச் சென்றார். நீண்டகாலம் வெளிக்களப்பணிகளில் இருக்கும் போராளிகளுக்கு இப்பயிற்சி மிகவும் இன்றியமையாததாகும். அது 1999 ஆம் ஆண்டின் முற்பகுதி, “நான் ஆர்.பி.ஜி (RPG) பயிற்சி எடுக்க விரும்புறன்” என்று பயிற்சியின் போது பொறுப்பாளரைக் கேட்டது வேறு யாருமல்ல. உயரமான நிமிர்ந்த உருவமும், தீர்க்கமான பார்வையும் கொண்ட திலகா அக்கா தான். திலகா அக்காவின் குடும்பத்தின் போராட்டப் பங்களிப்பானது மிகவும் முதன்மையானது. “அப்துல்லா குடும்ப…
-
- 0 replies
- 170 views
-
-
16.07.1995 அன்று காங்கேசன்துறை துறைமுகத்தில் வைத்து சிறிலங்கா கடற்படையின் “எடித்தாரா” கட்டளைக் கப்பலைத் தகர்த்து மூழ்கடித்து வீரகாவியமான மூன்று கடற்கரும்புலிகள் உட்பட்ட 14 மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 16.07.1995 அன்று காங்கேசன்துறை துறைமுகத்தினுள் ஊடுருவிய கடற்கரும்புலிகளை உள்ளடக்கிய கடற்புலிகளின் தாக்குதல் அணி கடுமையான கடற்சமரின் நடுவே சிறிலங்கா கடற்படையின் “எத்தாரா” கட்டளைக் கப்பலை தகர்த்து மூழ்கடித்தது. இந்த வெற்றிகர கடற்சமரில் மூன்று கடற்கரும்புலிகளும், கடற்சமரை வழிநடாத்திய கடற்புலிகளின் தாக்குதல் தளபதி லெப்.கேணல் நரேஸ், கடற்புலிகளின் மகளீர் படையணித் தளபதி லெப்.கேணல் மாதவி ஆகியோர் உட்பட 14 கடற்புலிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். அவர…
-
- 13 replies
- 1.9k views
- 1 follower
-
-
திருமலை மாவட்டத்தில் காவியமான கரும்புலி கப்டன் தமிழ்க்குமரன் உட்பட்ட ஆறு மாவீரர்களினதும், யாழ். மாவட்டத்தில் காவியமான லெப்.கேணல் சிவம் உட்பட்ட 21 மாவீரர்களினதும் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 10.09.2000 அன்று திருகோணமலை மாவட்டம் 13ம் கட்டைப்பகுதியில் சிறிலங்கா படையினர் சுற்றிவளைக்க முற்பட்டபோது ஏற்பட்ட மோதலில் கரும்புலி கப்டன் தமிழ்க்குமரன் (சின்னக்குட்டி சதீஸ்வரராஜா - யாழ்ப்பாணம்) தென்னமரவாடிப் பகுதியில் இடம்பெற்ற மோதலில் கப்டன் கலையரசன் (வேலாயுதம் பிரபாகர் - கிளிநொச்சி) புல்மோட்டைப் பகுதியில் பகுதியில் இடம்பெற்ற மோதலில் லெப்டினன்ட் அரவிந்தன் (கனகராசா விவேகா - யாழ்ப்பாணம்) மொறவேவ சிறிலங்கா படையினர் மற்றும் காவல்துறையினரின் கூட்டு ம…
-
- 10 replies
- 1.3k views
-
-
அன்பரசன் (லோறன்ஸ்) அவர்கள் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சிறிலங்கா அரசு தமிழர்கள் மீதும், தமிழர் தாயகத்தின் மீதும் காலத்திற்குக் காலம் மேற்கொண்டு வந்த ஆக்கிரமிப்புகளாலும், இராணுவத்தின் தாக்குதல்களாலும் மக்கள் அனுபவித்த அவலங்களையும் வலிகளையும் கண்டு 1989 இன் பிற்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். மணியந்தோட்டம் 03 பயிற்சி முகாமில் பயிற்சி பெற்று அன்பரசன் என்னும் பெயருடன் யாழ். மாவட்டப் படையணியில் சேர்க்கப்பட்டார். யாழ். மாவட்டத்தில் நடைபெற்ற சிறிலங்கா இராணுவத்திற்கு எதிரான தாக்குதல்களில் இவரும் பங்கு கொண்டார். தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதித்துறை ஆரம்பிக்கப்பட்டு. துறை சார்ந்த சார்ந்த பணிகளைச் செய்வதற்காகத் தமிழீழத்தின் அனை…
-
- 0 replies
- 65 views
-
-
கடந்த மூன்று தசாப்த காலத்திற்கு மேலாக தமிழீழப் போராட்ட வளர்ச்சிக்கும் அரசியல் இராசதந்திர நகர்வுக்கும் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்றதோடு, ஒரு மூத்த அரசியல் போராளியாக, ஒரு மதியுரைஞராக, ஒரு தத்துவாசிரியராகவும் திகழ்ந்துள்ளார். ஈழத்தமிழன் பெருமைகொள்ளும் வகையில் அரசியல் உலகிலும், இராசதந்திர உலகிலும் அளப்பெரும் சாதனைகள் புரிந்து, தேசசுதந்திரப் போராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்தியவர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள். 14.12.2006 அன்று சுகவீனம் காரணமாக இங்கிலாந்தில் இறுதியெய்தினார். அன்ரன் பாலசிங்கம் அவர்களுடைய சரித்திரம், http://www.tubetamil.com/watch-daily-tamil-news-online/tamil-eelam/history-of-bala-anna-3.html
-
- 6 replies
- 2.3k views
-
-
16.07.1990 அன்று மட்டக்களப்பு மாவட்டம் பலையடிவெட்டைப் பகுதியில் சிறலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிய மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப்.கேணல் றீகன் அவர்களின் 22ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களில் சிறிலங்கா, இந்தியப் படைகளிற்கு எதிராக பல்வேறு வெற்றிகரத் தாக்குதல்களை வழி நடாத்தியவர் தளபதி லெப்.கேணல் றீகன் அவர்கள். இவரின் தாக்குதல்களினால் பல நூறு சிறிலங்கா, இந்தியப் படையினர் உயிரிழந்தும், காயமடைந்தும் களமுனைகளிலிருந்து அகற்றப்பட்டிருந்தனர். தென் தமிழீழத்தின் புகழ் புத்த தளபதிகளான கேணல் ரமேஸ், கேணல் ரமணன், கேணல் ராம் ஆகியோர் லெப்.கேணல் றீகன் அவர்களின் படையணியில் இருந்து அவரினால் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள் என்பது குற…
-
- 10 replies
- 1.7k views
-
-
வவுனியா மாவட்டத்தில் ஜெயசிக்குறு படையினருக்கு எதிரான சமரில் காவியமான லெப்.கேணல் பாவரசன் உட்பட்ட 26 மாவீரர்களினதும், கிளாலிக் கடலில் காவியமான கப்டன் தீசன் என்ற மாவீரரினதும் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 01.09.1997 அன்று வவுனியா புதூர் பகுதியை வல்வளைக்கும் நோக்குடன் முன்னகர்ந்த சிறிலங்கா படையினருக்கு எதிரான முறியடிப்புச் சமரில் கப்டன் தேவகலா (ஆறுமுகம் பவானி - ஜெயந்திநகர், கிளிநொச்சி) கப்டன் ஆந்திரா (இராமன் பரமேஸ்வரி - கட்டுடை, யாழ்ப்பாணம்) கப்டன் பிரதீபா (ஆறுமுகம உமாவதி - முள்ளியவளை, முல்லைத்தீவு) கப்டன் கானகப்பிரியா (நடராசா சசிகலா - ஒலுமடு, முல்லைத்தீவு) லெப்டினன்ட் கோகுலராஜன் (கோபுராஜ்) (கோபாலப்பிள்ளை பாஸ்கரன் - குருமன்வெளி,…
-
- 8 replies
- 831 views
-
-
மே 18 2016 நினைவுகளும் நிகழ்வுகளும் சுவிஸ் பெல்ஜியம் நோர்வே ஸ்கொட்லண்ட் ஹொலண்ட் பிரான்ஸ் கனடா டென்மார்க்
-
- 2 replies
- 2.6k views
-
-
எமது நீண்டபெரும் விடுதலைப் போராட்டத்தின் இறுதிக் களமான முள்ளிவாய்க்கால் வராலாற்றுப் பூமியில் உறுதியோடு போராடி தம் இன்னுயிர்களைத் தமிழீழ விடுதலைக்காய் அர்ப்பணித்துக் கொண்ட எண்ணற்ற மாவீரர்களுள் ஒருவராக மாவீரர் வீரவேங்கை அறிவும் வித்துடலாய் சாய்ந்தார். இவர் முல்லைத்தீவு மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு செல்லையா சிவகுமார் என்னும் இயற்பெயரோடு துடிப்புள்ள இளஞராக வளர்ந்து வந்தார். 1995 ஆம் ஆண்டு ஏற்பட்ட யாழ். இடப்பெயர்வின் மூலம் அதிகமான மக்கள் இவர் வாழ்ந்து வந்த தொட்டியடி. விசுவமடு பகுதியிலும் குடியேறவே அவரது கண்முன்னே தம் இருப்பிடங்களை இழந்து எம் மக்கள் படும் இன்னல்களையும் அவர்கள் சந்தித்த இழப்புகளையும் கேட்டுத் தெரிந்து கொண்டும் தேச விடியலின் அவசியம் பற்றிச் சிந்தித்தவரா…
-
- 0 replies
- 82 views
-
-
[size=4]கடற்கரும்புலி கப்டன் புலிமகள்[/size] [size=4]முத்துலிங்கம் யசோதா[/size] [size=4]முல்லைத்தீவு[/size] [size=4]பிரிவு: கடற்கரும்புலி[/size] [size=4]நிலை: கப்டன்[/size] [size=4]இயக்கப் பெயர்: புலிமகள்[/size] [size=4]இயற்பெயர்: முத்துலிங்கம் யசோதா[/size] [size=4]பால்: பெண்[/size] [size=4] ஊர்: முல்லைத்தீவு மாவட்டம்: முல்லைத்தீவு வீரப்பிறப்பு: 13.04.1982 வீரச்சாவு: 23.09.2001 நிகழ்வு: 23.09.2001 அன்று முல்லைக்கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையின் கடற்கலங்கள் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரசவைத் தழுவிக்கொண்டார் துயிலுமில்லம்: விசுவமடு மேலதிக விபரம்: மேற்படி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது[/size][size=…
-
- 13 replies
- 1.6k views
-
-
விதைக்கப்பட்டது வீரமும்தான் நவம்பர் 15, 2020/தேசக்காற்று/வழித்தடங்கள்/0 கருத்து மேஜர் ரவிசங்கர் யூலியஸ் வின்சன் கெனடி சாவற்காடு, மன்னார். பிறப்பு: 08.09.1970 வீரச்சாவு: 09.06.1992 சிறுநாவற்குளம் படை முகாமிலிருந்து 300யார் தூரத்திலுள்ள பிரதான வீதிச் சந்தி. எப்போதும் இராணுவத்தினரின் அணி ஒன்று அங்கு காவலுக்காகப் பதுங்கி இருப்பது வழமை. முன்னிலையில் ஒரு ஏ.கே.எல்.எம்.ஜி யைக் கொண்டதாக, எந்த நேரமும் இரைதேடியபடி அந்த அணி காத்திருக்கும். இந்த இராணுவ அணியை வளைத்துத் தாக்கி அழித்துவிடுவதற்கு முடிவுசெய்யப்பட்டது. வேவு பார்த்து – திட்டமும் தயாரிக்கப்பட்டது. ரவிசங்கர் இந்த முயற்சியில் ஓய்வின்றிச் செயற்பட்டுக்கொண்டிருந்தான். …
-
- 0 replies
- 665 views
-
-
போராளிகளை வளர்த்து விடும் ஆசான் லெப். கேணல் சேரமான். லெப்.கேணல் சேரமான் கதிர்காமத்தம்பி சஞ்சயன் இளவாலை வடக்கு, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு: 27.12.1972 வீரச்சாவு: 21.04.2001 முல்லைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் வலிந்த தாக்குதலில் வீரச்சாவு கடற்சிறுத்தை படையணி தளபதி லெப். கேணல் சேரமான் 1991 ஆண்டு பிற்பகுதியில் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட சேரமான் கடற்புலிகளின் இரண்டாவது பயிற்சிப் பாசறையில் தனது அடிப்படை பயிற்சியை நிறைவு செய்து பின்னர் தலைவரின் சிந்தனைக்கு அமைவாகவும் கடற்புலிகளின் பலத்தை அதிகரிக்கும் நோக்கோடும் பலகரையோரப் பிரதேசங்கள். கடற்புலிகளுக்கு அரசியல் பணிகளுக்காக வழங்கப்படுகிறது. அந்தவகையில் இவரும் அந்த அர…
-
- 1 reply
- 892 views
-
-
ஹிருத்திக் நிஹாலே விடுதலைப்புலிகள் அமைப்பென்றதும் அதன் தலைவரை தவிர்த்து, சட்டென நினைவில் வரும் பெயர்கள்- இயக்கத்தை உரிமை கோரவல்லவையாக இருந்த தனி மனிதர்கள் என்றால் மிகச்சிலதான். குறிப்பிட்ட காலங்களில் சில பெயர்கள் அடிபட்டு பின்னர் காணாமல் போன கதைகள் நிறைய இருந்தன. நீண்டகாலத்திற்கு இந்த அந்தஸ்துடன் இருந்த பெயர்கள் மிகஅரிதானவை. பொட்டம்மான், பால்ராஜ், சொர்ணம் என மிகச்சிறிய பட்டியல் அது. சொர்ணம் எப்படி இந்த பட்டியலில் வந்தார் என்பது சற்று வியப்பிற்குரியது. சிந்தனைக்குரியது. ஏனெனில் இந்த பட்டியலில் உள்ளவர்கள் அளவில் அவர் எந்த காலத்திலும் பிரகாசித்து கொண்டிருந்தவர் அல்ல. அந்த அமைப்பில் இருந்து மிகமோசமான வீழ்ச்சியை சந்தித்த ஒரு தளபதியாகவும் அவர்தான் இருந்தார். எனினும் ஈழத்தம…
-
-
- 11 replies
- 8.5k views
- 1 follower
-
-
ஒரு இனத்தின் அடையாளம் ஊடகம் என்பார்கள். அந்த ஊடகத்தை நிர்வகிக்கின்ற அல்லது அதனைப் பிரதிபலிக்கின்ற ஒப்பற்ற பணிதான் இனத்தினைப் பிரதிபலிக்கும். இந்த இலக்கணத்திற்கு வடிவம் கொடுக்க முனைந்து தன்னாலான பணியினை ஒப்பேற்றி இடை நடுவே பிரிந்த ஊடகர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தி உலகில் இருந்து பிரிக்கப்பட்டு 12-02-2015 உடன் ஆறு ஆண்டு பூர்த்தி கொள்கின்றது. தனக்கான பாதை எது தனக்குப் பொருத்தமான பணி என்ன என்பதை நன்கு பகுத்துணர்ந்தே சத்தியமூர்த்தி ஊடகம் என்னும் கருவியைத் தனதாக்கிக் கொண்டார். ஆரம்பத்தில் எழுத்தின் மீதான உந்துதலால் அல்லது ஈர்ப்பினால் அவர் தனது ஊடகப் பணியினை தொடங்கினார். மட்டக்களப்பினை பூர்வீகமாகக் கொண்ட அவர் தந்தையின் பணி நிமிர்த்தம் யாழ்ப்பாணம் மண்டதீவில் வசித்து தன…
-
- 0 replies
- 998 views
-
-
சிறுத்தைகளைப் போன்று பதுங்கிப் பாயும் அணியொன்றின் நிர்வாக வேலையில் சிலகாலம் பங்கேற்ற பின் விடுதலைப்புலிகள் மகளிர் படையணிக்கு வந்திருந்தார் நித்தியா. எப்போதும் சிரித்த முகம். மனம் சிரிப்பது விழிகளில் வெளிப் படையாகத் தெரியும் படியான சிரிப்பு. சளைக்காமல்இ களைக்காமல் எத்தனை கடின பயிற்சியையும் செய்தார். விடுதலைப்புலிகள் மகளிர் படையணிக்கு வந்த நாளிலிருந்து தொடர்ந்து சண்டைதான். தொடர்ந்து காயங்கள்தான். பயிற்சி செய்வார். களம் செல்வார். காயத்தோடு வந்து ஓய்வெடுப்பார். மறுபடி பயிற்சி சண்டை காயம் ……. ……. என்று ஒரு தொடர் சங்கிலி. அமைதியான இயல்பைக் கொண்ட அவர் கண்டிப்பான அணி முதல்வியாக அல்லாமல் அன்பான அணி முதல்வியாகவே தனது ; முதற் களமான…. 1992 ஆம் ஆண்டில் தொண்டைமானாற்றில…
-
- 0 replies
- 186 views
-
-
வரலாற்றினுள் வெடித்தெழுந்தவர் அன்ரன் பாலசிங்கம் http://www.eelamview.com/2011/12/12/anton-balasinga/
-
- 0 replies
- 830 views
-
-
தமிழீழ விடுதலை போரின் போது சிங்கள படைகளுக்கு எதிராக களமாடி 09.09 அன்று வீரகாவியமாகிவிட்ட மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும். தானைத் தலைவனின் வழியில் நின்று மண் மீட்பு போரில் இந்த நாளில் வீரமரணமடைந்துவிட்ட மாவீரர்களுக்கு ஈழதேசம் தனது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது. http://www.eeladhesam.com/index.php?option=com_joomgallery&func=watermark&catid=14&id=4338&Itemid=53 http://www.eeladhesa...=4337&Itemid=53 http://www.eeladhesa...=4339&Itemid=53 http://www.eeladhesa...=4340&Itemid=53 http://www.eeladhesa...=4341&Itemid=53 http://www.eeladhesa...=4343&Itemid=53 http://www.eeladhe…
-
- 0 replies
- 612 views
-
-
கடற்கரும்புலிகள் காவியத்தில் கடற்கரும்புலி மேஜர் புகழரசன் கடற்கரும்புலிகள் அணிக்குள் இவனது வீரச்சாவு சற்றும் வித்தியாசமானதே. விடுதலை போராட்டம் தமிழீழத் தேசியத் தலைவர் காலத்தில் விருட்சமாக வளர்ந்து விடிவை நோக்கி நகர்கிறது; பல வரலாறுகள் பதிந்தும் – தொடர்ந்தும் பல இடைவெளிக்கு பின்பு விடுதலை சேனையில் இணைந்து எமக்கு முன்னர் விதையாக விழ்ந்தவர்கள் வழித்தடங்கள் விடிவை நோக்கிய நெஞ்சங்களின் பாதையாக, கிட்டண்ணா முதல் பல மூத்த தளபதிகள் கடலில் உலாவந்து மேற்கொண்ட ஈழத்தின் விடியலுக்காக திரவியங்கள் சேர்த்திட சுற்றும் பூமியை சூற்றுகின்றேன் ஈழக் கனவுடன்………….. இது இயல்வளவன் உதிர்க்கும் வார்த்தைகள், வார்த்தைகள் போன்று விடுதலை உரம் இவன் மனதில் நிறைந்திருந்தது ஆனால் அப்படியே அவன…
-
- 0 replies
- 303 views
-
-
முதல் வித்து 2ம் லெப். மாலதி 1987.10.10 தமிழீழ வரலாற்றில் புதிய சரிதம் ஒன்றைப் படைக்கப்போகும் அந்;த இரவு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. ஆணிவேர் ஆளப்பதிந்து கொண்டிருந்த எமது போராட்டத்தை அழித்துவிடும் நோக்குடன் தமிழீழத்திற்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் போராளிகளைத் தேடி, இருள் கிழித்து உலாவத் தொடங்கியது. எல்லா இடங்களிலும் எம்மவரின் விழிகள் பகை வரவை எதிர்பார்த்தபடி காத்திருந்தன. அப்போது நேரம் 1.15. கோப்பாய் கிறேசரடியில் நின்ற மகளிர் அணி வீதியில் போய்வரும் ஊர்திகள் யாருடையவை என அவதானித்தவாறு தாக்குதலுக்குத் தயாராக நிற்க, அதில் ஒருவராக தனது ஆ16 ஐ அணைத்துப்பிடித்தபடி மாலதியும் நிற்கின்றார். வானம் கரிய இருளைச் சொரிந்து…
-
- 6 replies
- 3.6k views
- 1 follower
-
-
உலகத் தமிழ் மக்களிடையே குறிப்பாக புலம் பெயர் இளையோர்களிடையே பெரும் தாக்கத்தையும், வீரத்தையும், போராட்ட குணத்தையும் விததுச்சென்ர ஈகப்பேரொளி முருகதாசன், சுவிஸ்லாந்தில் ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித அவையின் முன்றலில் முன்பாக 2009 மாசி 12ம் தேதி அன்று இரவு இன அழிப்பிலிருந்து ஈழத்தமிழ் மக்களைக் காப்பற்றக்கோரி 7பக்கங்களுக்கு’உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்’ என்ற தலைப்பில் ஒரு மரண சாசனம் எழுதி வைத்து தமிழீழத்தின் விடியளுக்காகா தீயில் வீரகாவியமான ஈகப்பேரொளி வர்ணகுலசிங்கம் முருகதாசன் அவர்களின் 6ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். ஈகைப்பேரொளி முருகதாசன் உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள் என் இனத்தின் அழிவைத் தடுத்து நிறு…
-
- 0 replies
- 1.7k views
-