தமிழும் நயமும்
இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்
தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
694 topics in this forum
-
"கடலில் விடம்என அமுதுஎன மதனவேள் கருதி வழிபடு படையோடு கருதுவோர் உடலின் உயிரையும் உணர்வையும் நடுவு போய் உருவும் மதர்விழி உடையவர்! திறமினோ! " - கலிங்கத்துப் பரணி பாற்கடலின் நஞ்சு போலவும் அமுதுபோலவும் இருக்கின்றன மங்கையின் விழிப் பார்வைகள். காமனின் கணைகள் நினைப்பவரின் உயிரையும் உணர்வையும் ஊடுருவி அழிக்கும். அதுபோல பார்ப்போரின் உயிரையும், உணர்வையும் உருவிச் செல்லும் செருக்குடைய விழிப் பார்வைகளைக் கொண்டவர்களே கதவை திறவுங்கள்!! ஒரு பார்வை நோய் செய்கின்றது அக்கணமே மற்றொரு பார்வை மருந்தாக அமைகிறது.. கண நேரத்தில் வீசப்பட்ட ஓர் விழி வீச்சில் சாய்க்கப்பட்ட கோட்டைகள் எத்தனையோ??!!
-
- 0 replies
- 870 views
-
-
"வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில் பட்டு உருவுங்கோல் பஞ்சில் பாயாது-நெட்டிருப்புப் பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின் வேருக்கு நெக்கு விடும்" - நல்வழி யானையின்(வேழத்தில்) மீது பட்டு துளைத்துச் செல்லும் அம்பானது, பஞ்சின் மேல் வீசுங்கால் அதைப் பாய்ந்து செல்லாது. இரும்பை வைத்து அடித்தாலும் பிளக்க முடியாத கரும்பாறையானது பசுமையான மரத்தின் வேருக்கு நெகிழ்வதைப் போல வன்சொற்களால் யாரையும் வெல்ல முடியாது. மென்சொற்களே மேன்மையாகும்... இன்றைய பொழுது இனிதாக அமைய என் வாழ்த்துகள் !!
-
- 6 replies
- 13.7k views
-
-
"தெள்ளிய ஆலின் சிறுபழத்து ஒருவிதை தெள்நீர்க் கயத்துச் சிறுமீன் சினையிலும் நுண்ணிதே ஆயினும், அண்ணல் யானை அணிதேர், புரவி, ஆள் பெரும்படையொடு மன்னர்க்கு இருக்க நிழல் ஆகும்மே" - வெற்றிவேற்கை நன்கு வளர்ந்த ஆலமரத்தில் உள்ள கனிந்த ஆலம்பழத்தின் உள்ள ஒரு சிறு விதையானது சிறிய மீனின் முட்டையை விடவும் சிறிதாக இருப்பினும் கூட, அந்த விதையால் உருவான ஆலமர நிழலில் யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட் படை என்னும் நால்வகைப் படையைக் கொண்ட மன்னனும் தங்க முடியும். அதைப்போல,நீங்கள் பிறர்க்குதவும் செல்வம் குறைந்த அளவே இருப்பினும்கூட அது அவர்களுக்கு மிகப் பெரிய உதவியாகக் கூடும். இன்றைய பொழுது இனிதாக அமைய என் வாழ்த்துகள் !!
-
- 3 replies
- 19.8k views
-
-
"இன்சொலால் அன்றி இருநீர் வியன் உலகம் வன்சொலால் என்றும் மகிழாதே - பொன்செய் அதிர் வளையாய் பொங்காது அழல் கதிரால் தண்என் கதிர் வரவால் பொங்கும் கடல ( நன்னெறி- 18)" குளிர்ச்சியான திங்களின் கதிர்கண்டு பொங்கும் கடல், வெம்மையான கதிரவனின் கதிர்களுக்கு பொங்காது. அதுபோல்தான் மானுடமும்.. வன்சொல்லை தவிருங்கள் ..உங்கள் வாழ்க்கை வளமாகும்!! இன்றைய பொழுது இனிதாக அமைய என் வாழ்த்துகள் !!
-
- 0 replies
- 1.8k views
-
-
முன்னோர்கள் உரைத்த பல சித்தரெல்லாம் முடிந்திட்டார், மடிந்திட்டார், மண்ணாய்விட்டார் நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்; சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்; தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்; பலர் புகழும் இராமனுமே ஆற்றில் வீழ்ந்தான் நாணத்தை, கவலையை, சினத்தை, பொய்யை அச்சத்தை, வேட்கைதனை அழித்துவிட்டால் அப்போது சாவும் அங்கே அழிந்து போகும். மிச்சத்தைப் பின் சொல்வேன் சினத்தை முன்னே வென்றிடுவீர் பூமியில் மரணமில்லை - பாரதி நாணம், கவலை, சினம் பொய் அச்சம் வேட்கை போன்ற அழுக்குகள் எல்லாம் போய் விட்டால் எஞ்சியிருக்கப்போவது என்ன? சுத்தமான மனது ஒன்றுதானே. சுததமான இதயத்தால் இந்த பூமியில் மரணத்தை வென்றிடலாம்...!! இன்றைய பொழுது இனிதாக அமைய என் வாழ்த…
-
- 5 replies
- 2.2k views
-
-
எப்போது வேப்பங்காய் இனிக்கும்? "இவளோடு படும் பாடு பெரும்பாடு ஆகிவிட்டது. “ஏதோ ஒன்று, `பின்னே போனால் உதைக்கிறது; முன்னே போனால் கடிக்கிறது' என்பார்கள். "இவளுக்கும் அதற்கும் ஒரு வேறுபாடும் இல்லாமல் போயிற்று. "என்ன சொன்னாலும் என்ன செய்தாலும் தவறு கண்டுபிடிக்கிறாள்; குற்றம் சொல்கிறாள்; முரண்டு பிடிக்கிறாள்; பிணங்கிக்கொள்கிறாள். “ஏதும் சொல்லாவிட்டாலும் ஏதும் செய்யாவிட்டாலும் வம்பாகிப் போகிறது. “இவளைத் திருமணம் செய்துகொண்டேனே, என்னை எதனால் அடித்துக்கொள்வது?” என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை; எப்படி அவளைச் சரிசெய்வது, எப்படி அமைதிப்படுத்துவது என்று நெடுநேரம் சிந்தித்தான்; ஒரு வழி புலப்பட்டது. மனைவியின் தோழியைத் …
-
- 2 replies
- 2.5k views
-
-
கண்ணதாசன் காப்பியடித்தானா? அப்துல் கையூம் அன்று நானும் என் நண்பர்களும் அரட்டை அடித்துக் கொண்டிருக்கையில் கண்ணதாசன் பற்றிய பேச்சு எழுந்தது. புதிதாக அறிமுகமான ஒரு அன்பர் எங்களை எரிச்சலூட்டும் வகையில் “Kannadasan is a Copy-cat” என்ற அவதூறை எடுத்துப் போட்டுச் சென்றார். அவருடைய ‘மேதாவித்தனம்’ எனக்கு எரிச்சலை ஊட்டியது. யாரோ புரிந்த வாதத்தை அரைகுறையாகக் கேட்டுவிட்டு இப்படி ஒரு தப்பான ஒரு முடிவுக்கு அவர் வந்திருக்கலாம். ஒன்று, இவர் கண்ணதாசனை முற்றிலும் அறியாதவராக இருக்க வேண்டும் அல்லது ‘காப்பி’ என்பதன் பொருள் என்னவென்று தெரியாதவராக இருக்க வேண்டும். சொல்ல வந்த கருத்தை தமிழில் கூட சொல்லத் தெரியாத ஒருத்தரிடம் போய் நான் என்ன தர்க்கம் செய்ய முடியும்? அந்த இடத்த…
-
- 11 replies
- 9.1k views
-
-
அக்கு வேறு ஆணி வேறு என்று சொல்கிறோமே, அதில் ஆணி என்றால் நாம் அன்றாடம் பயன்படுத்துவது. ஆனால் அக்கு என்றால் என்ன? ஆணி என்று வருவதால் அக்கு என்றால் ஆணியை அடிக்கும் முன் சுவர் பாழாகாமல் இருக்க சுவற்றில் முதலில் அடிக்கும் மரத்தக்கை என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அகராதியைப் புரட்டினால் அக்கு என்பதற்கு அப்படி ஒரு அர்த்தம் தரப்பட்டு இருக்கவில்லை. இணையத்தில் மேய்கையில் அக்கு அக்காகப் பிரிப்பது என்பதால் அக்கு என்றால் பாகம் என்று சிலர் விளக்கம் தந்திருந்தனர். ஆனால் அகராதியில் அது போன்ற பொருளும் தந்திருக்கப்படவில்லை. அக்கு [ akku ] , s. little shells, cowries, பலகறை; 2. beads of conch shells, சங்குமணி; 3. beads of seeds of the elœocarpus worn by religious mendicants,…
-
- 2 replies
- 5.8k views
-
-
தமிழின் வியத்தகு மாண்புகளும், அதன் வளர்ச்சித் திசைவழியும் முனைவர்.வே. பாண்டியன் சற்றேறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்புவரை, தமிழில் புழக்கத்தில் இருந்த சொற்களில் 50 சதவிகிதத்திற்கு மேல் சமற்கிருத சொற்களாகவே இருந்தன. ஆயிரம் ஆண்டுகளான பார்ப்பன மேலாதிக்கத்தின் விளைவு இது. தங்களது மேலாண்மையை நிலைப்படுத்து வதற்காக திட்டமிட்டே செய்யப்பட்ட சமற்கிருத மயமாக்கல், ஆரியமயமாக்கலின் விளைவு இது. தமிழனின் தனித்த அடையாளங்களை அழித்தொழித்து, மொழியைச் சிதைத்து அதன்வழி தமிழின் மூலத்தை சமற்கிருதம் சார்ந்ததாகக் கொச்சைப் படுத்தி, தமிழன் என்றென்றும் அடிமைப்பட்ட, அனாதை குமூகமாக நிறுவுவதே ஆரியர்களின் பிழைப்பு உத்தி. இந்த உத்தியில் பெருமளவும் வெற்றியும் கண்டனர். அதோடல்லாமல், தமிழின் உண்மை…
-
- 1 reply
- 1.4k views
-
-
கலித்தொகையில் நகைச்சுவைக் காட்சிகள் -முனைவர். மா. தியாகராசன். முன்னுரை சங்ககால அக இலக்கிய நூல்களில் கலித்தொகை தனிச்சிறப்பு மிக்க நூலாக விளங்குகிறது. இந்நூல் சொற்சுவையால் பொருட்சுவையால் உயர்ந்து நிற்கின்றது. பண்டைத் தமிழர் கண்ட ஐந்தினைப் பாகுபாட்டின் மேன்மையும் அவர்தம் ஒழுக்கமும் விழுப்பமும் இந்நூலைக் கற்பார்க்குத் தெள்ளிதின் பிலனாகும். கலிப் பாவகையுள் சிறந்த ஒத்தாழிசையாலியன்ற நூற்றைம்பது பாக்களைக் கொண்ட இந்நூல் தேன் சிந்தும், இனிய சொற்களாலும் வானார்ந்த கற்பனைகளாலும், தெளிந்த உவமைகளாலும் சீர்சால் உருவகங்களாலும் உயந்தோங்கி நிற்கின்றது. சொல்வதைச் சுவைபடச் சொல்லும் பாங்கில் இந்நூல் வெல்லும் நூலாக விளங்குகின்றது. அதனால் தான் சுவைகளுள் மிகச் சிறந்த சுவ…
-
- 0 replies
- 710 views
-
-
முசுப்பாத்தி ... இது எம்மிடையே(ஈழத்தில்) பேச்சு வழக்கில் பரவலான பாவனையிலிருக்கும் சொல். பம்பல் என்பதன் ஒத்த கருத்தாகப் பாவிக்கிறோம். பம்பல் என்பதும் புரியாதவர்களுக்கு: நகைச்சுவையாகப் பேசுதல் அல்லது நகைச்சுவை எனும் பொருளில் பாவிக்கப்படுகிறது. 'இது நல்ல முசுப்பாத்தி' என்றால் 'நல்ல நகைச்சுவை' என்று கருத்து. 'முசுப்பாத்தியான ஆள்' என்றால் 'நகைச்சுவையான மனிதன்'. 'முசுப்பாத்தியாகப் பேசக்கூடியவர்' என்றால் 'நகைச்சுவையாகப் பேசக்கூடியவர்'. இச்சொல்லை நானும் இன்னும் ஈழத்தைச் சேந்த சிலரும் வலைப்பதிவிற் பாவித்துள்ளோம். இந்தச் சொல் எப்படி வந்தது என்று சிந்தித்ததுண்டு. அனேகமாய் ஏதாவது ஐரோப்பிய மொழியிலிருந்து தான் வந்திருக்கும் என்று நினைத்திருந்தேன். இன்றுதான் ஒரு இச்சொல் ப…
-
- 2 replies
- 2.7k views
-
-
எனக்கு மிகவும் பிடித்த ஒரு மேடைநாடகத்தைப் பற்றியது இந்தக்கட்டுரை. கூடவே எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களும் இந்த நாடகத்தில் நடித்திருப்பதால் இந்த கட்டுரையை எழுதுவது சந்தோசமான அனுபவமாகவிருக்கிறது. இந்த நாடகம் எங்கே ஆரம்பித்தது? பாரதக்கதையின் ஒரு கிளைக்கதைதான் இது என்றாலும் வியாசரின் மகாபாரதத்தில் தொட்டதைவிட வில்லிபுத்தூராழ்வார் தமிழில் இயற்றிய 'வில்லிபாரதம்' என்ற நூலையே அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. பி.எஸ்.ராமையா இந்தநாடகத்தை எழுதியவர், மணிக்கொடி எழுத்தாளர் பி.எஸ்.ராமையா. அக்காலத்தின் பிரபல நாடகநடிகரான எஸ்.வி.சகஸ்ரநாமம் (பின்னாளில் குணசித்திரபாத்திரங்களில் திரைப்படங்களில் நடித்தவர்) நடத்திவந்த சேவாஸ்டேஜ் நாடகக்குழுவிற்காக பி.எஸ்.ராமையா எழுதிய…
-
- 2 replies
- 3.4k views
-
-
திருக்குறள் உலகப்பொதுமறையா? - சில சொல்லாடல்கள் - ந. முருகேச பாண்டியன் தமிழ்க் கவிஞர்கள் யாருக்கும் இல்லாத பெருமை திருவள்ளுவருக்கு மட்டும் உண்டு. குமரிமுனையில் 133 அடி உயரத்தில் பிரம்மாண்டமான சிலையாக வள்ளுவர் நிற்பதற்குக் காரணம், அவர் திருக்குறள் என்ற அறநூலைப் படைத்ததுதான். சங்க காலத்திற்குப் பிந்தைய நூலாக திருக்குறள் ஏதோ ஒரு வகையில் தமிழில் தொடர்ந்து செல்வாக்குப் பெற்றிருக்கிறது. பக்தி இயக்கக் காலகட்டத்தில் முக்கியத்துவம் இல்லாமலிருந்த திருக்குறள், இருபதாம் நூற்றாண்டில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. வள்ளுவத்தின் எழுச்சி தேவாரம், நாலாயிரத் திவ்விய பிரபந்தம், புராணங்கள் போன்றவற்றை இலக்கியமாகக் கருதிய சூழலில், அதற்கு மாற்றாகத் திராவிட இயக்கத்தின…
-
- 3 replies
- 6.9k views
-
-
தமிழில் பாளி மொழிச் சொற்கள் வாணிகம், மதம், அரசாட்சி முதலிய தொடர்புகளினாலே ஒரு தேசத்தாரோடு இன்னொரு தேசத்தார் கலந்து உறவாடும்போது அந்தந்தத் தேசத்து மொழிகளில் அயல்நாட்டுச் சொற்கள் கலந்துவிடுவது இயற்கை. வழக்காற்றிலுள்ள எல்லா மொழிகளிலும் வெவ்வேறு மொழிச் சொற்கள் கலந்திருப்பதைக் காணலாம். இந்த இயற்கைப்படியே தமிழிலும் வேவ்வேறு மொழிச் சொற்கள் சில கலந்து வழங்குகின்றன. இவ்வாறு கலந்து வழங்கும் வேறுமொழிச் சொற்களைத் திசைச்சொற்கள் என்பர் இலக்கண ஆசிரியர். தமிழில் போர்ச்சுகீசு, ஆங்கிலம், உருது, அரபி முதலிய அயல்மொழிச் சொற்கள் அண்மைக்காலத்தில் கலந்துவிட்டது போலவே, பாகத (பிராகிருத) மொழிகளில் ஒன்றான பாலி மொழியிலிருந்தும் சில சொற்கள் முற்காலத்தில் கலந்து காணப்படுகின்றன. பா…
-
- 2 replies
- 4.1k views
-
-
பொருட்குற்றம் தவிர்ப்போம் கா.மு.சிதம்பரம்First Published : 12 Jul 2009 01:27:00 AM IST Last Updated : அருந்தமிழில் உள்ள சொற்கள் அனைத்தும் ஆழமான பொருள் உடையவை. அத்தகைய சொற்களுள் ஒன்று "அல்குல்' என்பது. இச்சொல் பெண்ணின் உறுப்புகளுள் ஒன்றைக் குறிக்கிறது. ஐந்து தமிழ் அகரமுதலிகளில் அல்குல் என்னும் சொல்லுக்கு "பெண்குறி' என்று பொருள் தரப்பட்டுள்ளன. இப்பொருள் மிகவும் தவறானது.உரைவேந்தர் ஒüவை.சு.துரைசாமிப்பிள்ளை, புறநானூறு 344-ஆம் பாடலுக்கு எழுதியுள்ள உரையில், ""அல்குல் என்பது இடைக்கும் முழந்தாளுக்கும் இடைப்பகுதி ஆகும்'' என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள "சங்க இலக்கியப் பொருட் களஞ்சியம்' என்னும் நூலிலும் இச்சொல்லுக்கு "இடுப்பு உறுப்பு' என…
-
- 1 reply
- 1.2k views
-
-
சென்னை : ""இந்த ஆண்டு முதல் துவக்கப்பட்டுள்ள தமிழ்வழி பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களில் பெரும்பான்மையினர் நல்ல மதிப்பெண்களை பெறுகின்றனர்,'' என, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் இந்த ஆண்டு முதல் தமிழ்வழி பொறியியல் படிப்புகள் துவக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு சிவில், மெக்கானிக்கல் படிப்புகள் தமிழ் பயிற்று மொழியில் வழங்கப்படுகின்றன. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில், தமிழ்வழி பொறியியல் படிப்புகளுக்கான புத்தகங்களை வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் புத்தகங்களை வெளியிட்டார். பொறியியல் இயற்பியல், பொறியியல் வேதியியல், கணி…
-
- 0 replies
- 844 views
-
-
-
அனைவருக்கும் வணக்கம்.. மருத்துவமும் சிங்கைநாடும் என்னும் காணொளியை பார்த்தேன். மிகவும் பிரயோசனமாக இருந்தது. பேரறிஞர் டாக்டர்.கே. பாலசுப்ரமணியம் அவர்கள் சில விடயங்களைக் கூறியிருக்கிறார்.. அகத்தியர் இலங்கையில் பிறந்தவர். பழைமையான தமிழர் பிரதேசமான மகேந்திரமலையே தற்கால மிகிந்தலை.. இது போல பல.. நீங்களும் பாருங்கள்..
-
- 0 replies
- 996 views
-
-
-
- 2 replies
- 1.6k views
-
-
மிகத்தொன்மையான பாரம்பரியத்தைக்கொண்ட தமிழ் முன்னோர்கள் மருத்துவ பயன்பாடு மற்றும் நீண்ட ஆழமான சிந்தனையின் வெளிப்பாடாக பல ஆபரணங்களை தங்கத்தில் உருவாக்கி அவற்றை அணிவதற்கு எம்மை வழி நடத்தினார்கள் என்றால் அது மிகையாகாது. இதனால் தமிழர் சமுதாயம் தமது வளமான வாழ்விற்கு மேலும் வளம் சேர்க்கும் முகமாக தங்க ஆபரணங்களை அணிந்து மகிழ்ந்தது. மூக்குத்தி ஆபரணத்தைப் பெரும்பாலும் இந்துப் பெண்கள் மற்றும் இஸ்லாமியப் பெண்கள் ஆகியோர் அதிகமாக அணிந்தார்கள் என்பதை பழைய இலக்கியங்களில் இருந்து நாம் அறிந்து கொள்ளமுடியும். மேலும் பழைய இலக்கியங்களில் இருந்து பெண்கள் மூக்கின் நடுவில் அணிந்த ஆபரணமாக 'முல்லாக்கு' எனப்படும் ஆபரணம் தொடர்பான செய்தியும் எமக்குக் கிடைக்கிறது. பொதுவாக அக்காலத்துப் பெ…
-
- 2 replies
- 1.4k views
-
-
தமிழர் சமுதாயம் பல கலாசார, பண்பாட்டு விழுமியங்களைத் தன்னகத்தே கொண்ட சமுதாயமாகும். நம் முன்னோர்கள் பல நம்பிக்கைகளையும் சடங்குகளையும் எமக்கு விட்டுச் சென்றுள்ளார்கள். அவற்றை நாம் பின்பற்றும் காரணத்தால் தலைமுறைகள் பலவற்றைக் கடந்தாலும் எமது சமுதாயம் உயிர்ப்புடன் வாழ்கிறது என்றால் அது மிகை இல்லை. விரல்களில் மோதிரங்களை அணிவதால் மருத்துவப்பயன்பாடு கிடைப்பதாக பலர் கருதுகிறார்கள். பலருக்கு தங்கள் கை விரல்களை மடக்குவதற்கு அல்லது நீட்டுவதற்கு இலகுவாக இருப்பதில்லை. அதிலும் பெண்களுக்கு இவ்வாறான பிரச்சனைகள் அதிகமாக உள்ளன. பெண்களுக்கு அதிகளவான இரத்த இழப்பு ஏற்படுவதோடு அவர்களின் எலும்புகள் விரைவில் பலவீனமடைவதே இதற்கு காரணம் என தற்கால வைத்தியர்கள் விதந்துரைக்கிறார்கள். எது எப்படி என…
-
- 2 replies
- 3.2k views
-
-
இலக்கங்கள் ஆச்சரியம் உலகம் முழுவதும் பயன்பாட்டிலுள்ள ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளிலும் எண்களும் அளவுகளும் குறிப்பிட்ட அளவுகளுக்கு மேல் பெயரில்லாத நிலையில்தான் இருக்கிறது. ஆனால் தமிழ் மொழியில் அதிக அளவாக எண்களும் அளவுகளும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது எந்த மொழிக்கும் இல்லாத ஒரு சிறப்பு என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஏறு முக இலக்கங்கள் ஒன்று -one 10 = பத்து -ten 100 = நூறு -hundred... மேலும் பார்க்க 1000 = ஆயிரம் -thousand 10000 = பத்தாயிரம் -ten thousand 100000 = நூறாயிரம் -hundred thousand 1000000 = பத்துநூறாயிரம் - one million 10000000 = கோடி -ten million 100000000 = அற்புதம் -hundred million 1000000000 = நிகர்புதம்…
-
- 5 replies
- 1.3k views
-
-
தொல்காப்பியம்-பொருளதிகாரம்-அகத்திணை இயல் பாடல்: ‘மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையான் சொல்லவும் படுமே. - தொல்காப்பியம்-பொருளதிகாரம்-அகத்திணை இயல்-பாடல் எண்:5 ‘மாயோன் ஆகிய திருமால் பொருந்திய காட்டு உலகமும் சேயோன் ஆகிய முருகன் பொருந்திய மேகங்களை எல்லையாகக் கொண்ட உலகமும் வேந்தன் ஆகிய இந்திரன் பொருந்திய இனிய புனலை உடைய உலகமும் வருணன் ஆகிய சூரியன் பொருந்திய பெருமணலைக் கொண்ட உலகமும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று சொல்லிய முறையால் சொல்லப் படும்.’ தவறுகள்: இப்பாடலின் முதல் வரியில் ‘காடுறை’ என்ற சொல்லில் ‘டு’ …
-
- 1 reply
- 11.5k views
-
-
தமிழ் மொழி ஒர் அறிவியல் ஆய்வும் .. எதிர்கால தேவையும் சற்றேறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்புவரை, தமிழில் புழக்கத்தில் இருந்த சொற்களில் 50 சதவிகிதத்திற்கு மேல் சமற்கிருத சொற்களாகவே இருந்தன. ஆயிரம் ஆண்டுகளான பார்ப்பன மேலாதிக்கத்தின் விளைவு இது. தங்களது மேலாண்மையை நிலைப்படுத்து வதற்காக திட்டமிட்டே செய்யப்பட்ட சமற்கிருத மயமாக்கல், ஆரியமயமாக்கலின் விளைவு இது. தமிழனின் தனித்த அடையாளங்களை அழித்தொழித்து, மொழியைச் சிதைத்து அதன்வழி தமிழின் மூலத்தை சமற்கிருதம் சார்ந்ததாகக் கொச்சைப் படுத்தி, தமிழன் என்றென்றும் அடிமைப்பட்ட, அனாதை குமூகமாக நிறுவுவதே ஆரியர்களின் பிழைப்பு உத்தி. இந்த உத்தியில் பெருமளவும் வெற்றியும் கண்டனர். அதோடல்லாமல், தமிழின் உண்மையான மேன்மையை உணர்ந…
-
- 3 replies
- 3.9k views
-
-
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவள் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும். மலர்மிசை ஏகினாள் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ்வார். கொல்லாள் புலாலை மறுத்தாளை கைகூப்பி எல்லா உயிரும் தொழும். +++ நீங்களும் மிச்சம் சொல்லுங்கோ.
-
- 11 replies
- 1.4k views
-