தமிழும் நயமும்
இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்
தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
694 topics in this forum
-
நூலகம் பற்றி உங்களுக்குப் புதிதாக அறிமுகப் படுத்த வேண்டியதில்லை. www.noolaham.org இணைய நூலகத்தினையும் அதனுடனிணைந்த பல ஆவணப்படுத்தல் வேலைகளையும் செய்துவரும் நூலக நிறுவனம் எமது சமூகத்தின் நிதியுதவில் தங்கியிருக்கும் அமைப்பு என்பது நீங்கள் அறிந்ததே. அவ்வகையில் நீங்கள் தொடர்ச்சியாகப் பங்களிக்க வேண்டும் என்று கோரியே இந்த மடல்...... இலங்கைத் தமிழ்ச் சமூகங்கள் ஆவணப்படுத்தத் தவறியதால் இழந்த அறிவுச் செல்வங்கள் ஏராளம். எஞ்சியவற்றை ஆவணப்படுத்தவும் அனைவருக்கும் கிடைக்கச் செய்யவும் நூலக நிறுவனம் கடந்த 11 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. * நூலக வலைத்தளத்தில் இப்பொழுது 16,500 க்கும் அதிக ஆவணங்கள் உள்ளன. இவை சர்வதேச நியமங்களின் அடிப்படையில் ஸ்கான் செய்யப்பட்…
-
- 0 replies
- 894 views
-
-
கக்கத்தில் இடுக்கடி, பாயைச் சுருட்டடி, அரங்கத்திற்கு ஏகடி! காளமேகப் புலவர் வீட்டுத் திண்ணையில் நண்பர்களோடு அமர்ந்திருந்தார். அப்போது வெளியூர்க்காரர் ஒருவர் வந்து அவர்களோடு சேர்ந்து கொண்டார். புலவர் சிலேடைப் பாடல்களைப் பாடி விளக்கம் கூறியதைக் கேட்ட அவர், புலவரின் புலமையைக் கண்டு வியப்படைந்தார். ""ஐயா, தங்கள் பாடல்கள் தேனும் தினைமாவும் சேர்த்து உண்டதைப்போல சுவையாக உள்ளன. தங்களிடத்து எனது வேண்டுகோள் ஒன்றுண்டு. என்னை இடுக்கடி, பாயைச் சுருட்டடி, ஏகடி அம்பலத்தே என்னும் சொற்கள் பயின்றுவர ஒரு பாடல் தர வேண்டும்'' என்றார். அதை ஏற்றுக்கொண்ட புலவர், சில வினாடிகள் கண்களை மூடித் தலையை அசைத்தார். அடுத்த நொடியில், ""வெளியூர் நண்பரே, நீங்கள் கேட்ட பாடல் வருகிறது…
-
- 0 replies
- 525 views
-
-
"தூக்கணமும் குரங்கும்" / விவேகசிந்தாமணி எல்லோரும் படிக்கும் வண்ணம் எளிய தமிழில், நீதிக் கருத்துகளை பாடலாக எழுதப்பட்ட, ஒரு பழைமையான நூல் விவேக சிந்தாமணி ஆகும். இந்த நூலின் ஆசிரியர் யார் என்பது தெரியாது. எந்த காலத்தில் இயற்றப்பட்ட நூல் என்பதும் தெரியாது. நாயக்கர் காலத்தில் இந்த நூல் உருவாகியிருக்கலாம் என்று ஒரு சிலர் கூறுகின்றனர். பொதுவாகவே நீதி நூல்கள் அதை செய், இதை செய்யாதே என்று நேரடியாக அறிவுறுத்தும். விவேக சிந்தாமணி அப்படி பட்ட நூல் அல்ல. இது கதை மூலம், நடைமுறையாக, எடுத்துக் கூறும் நூலாகும். இனி தூக்கணமும் குரங்கும் என்ற நாலு வரிப் பாடலைப் பார்ப்போம். "வானரம் மழைதனில் நனையத் தூக்கணம் தானொரு நெறிசொலத் தாண்டிப் பிய்த்திடு…
-
- 0 replies
- 909 views
-
-
அன்புத் தம்பி கும்பகர்ணன் இராமனைப் போலவே இராவணனும் நல்ல தம்பிகளைப் பெற்றிருந்தவன். இரு தம்பியருமே அண்ணன் நலனில் அக்கறை கொண்டவர்கள். இருவருமே அவன் மீது பாசம் கொண்டவர்கள். ஆனால் அறிவுரை சொல்லி அவன் கேட்காத போது இருவரும் தேர்ந்தெடுத்த வழிகள் வேறு வேறாக இருந்தது. விபீஷணன் இராமன் பக்கம் போய் சேர்ந்தான். கும்பகர்ணனோ தன் அண்ணன் பக்கமே இருந்து போரிட்டு உயிரை விட்டான். கும்பகர்ணன் கதாபாத்திரம் இராமாயணத்தில் மிக உயர்ந்த கதாபாத்திரம். அந்தக் கதாபாத்திரம் கம்பன் கைவண்ணத்தில் மேலும் மெருகு பெறுகிறது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து எழுந்த கும்பகர்ணன் நடந்ததை எல்லாம் கேள்விப்பட்டு வருந்துவதில் அவன் பண்பும், யதார்த்த அறிவும் வெளிப்படுகிறது. “சீதையின் துக்கம் இன்னும் தீ…
-
- 0 replies
- 1.5k views
-
-
தமிழர் கலைகள் எனப்படுபவை தமிழர் வாழ்க்கையைச் சிறப்பித்த கலைகள் ஆகும் சிலம்பம் கோலாட்டம் பட்டிமன்றம் வில்லுப்பாட்டு ஆட்டங்கள் கும்மி மயிலாட்டம் காவடியாட்டம் பொய்கால் குதிரை ஆட்டம் தெருக்கூத்து ஒயிலாட்டம் பாம்பாட்டம் உருமி ஆட்டம் புலி ஆட்டம் பறை ஆட்டம் கரகாட்டம் மாடு ஆட்டம் உறியடி ஆட்டம் கொல்லிக் கட்டை ஆட்டம் புலி ஆட்டம் சிலம்பாட்டம் குறவன் குறத்தி ஆட்டம் கைச்சிலம்பாட்டம் தேவராட்டம் தப்பாட்டம் காளியாட்டம் சேவையாட்டம் பேயாட்டம் சாமியாட்டம் கூத்துக்கள் சாந்திக் கூத்து சாக்கம் மெய்க் கூத்து அபிநயக் கூத்து நாட்டுக்கூத்து விநோதக் கூத்து குரவைக் கூத்து கலிநடனம் என்னும் 'கழாய்க் கூத்து' கரகம் என்னும…
-
- 0 replies
- 2k views
-
-
தமிழ் இலக்கியத்தில் இயற்றப்பட்ட பேரிலக்கியங்களில் நந்திக் கலம்பகமும் ஒன்று. தொட்ட இடமெல்லாம் கவிச்சுவை சொட்டும் தேன்தமிழ் நூல். கலம்பகம் என்பது, பல பூக்களைக் கலந்து மாலை தொடுப்பது போல் பலவகையான செய்யுள் உறுப்புகளைக் கொண்டு அக, புறச் செய்திகளைக் கொண்டு திகழும் அரிய நூல். கலம்பக நூல்கள் கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் தொடங்கி இதுவரை பல தோன்றியுள்ளன. நந்திக் கலம்பகம் ஏனைய கலம்பக இலக்கண வரம்பிற்கு உள்படாது, பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டதாகும். அவ்வாறு மன்னனை வைத்துப் பாடப்பட்ட முதல் கலம்பகம் மட்டுமல்ல, கலம்பக நூல் வரிசையில் முதலாவதாக வைத்து எண்ணப்படுவதும் இந்த "நந்திக் கலம்பகம்'தான். இதற்குப் பிறகு மன்னர் மீது பாடப்பட்ட கலம்பக நூல் எதுவு…
-
- 0 replies
- 1.2k views
-
-
பண்டை தமிழ் இலக்கியங்கள் நமது பண்பாட்டையும் வாழ்வுமுறையையும் காட்டும் கண்ணாடி என்பர். ஒருசமூகத்தின் அறிவு செழுமைக்கு அது ஓர் உரைகல்...... குறிஞ்சிப்பாட்டு தமிழர் கண்ட பூக்கள் பட்டியலை தருகிறது. அது போல் தமிழ் இலக்கியங்களில் தெரித்து கிடக்கிற நம்மவர் கண்ட பறவைகளின் பட்டியலின் ஒரு சிறு தொகுப்பு. இதில் இன்று புழக்கத்தில் உள்ள பெயர்கள் வேறுபட்டிருக்கலாம். விடுபட்டிருக்கவும் கூடும். 1.அகத்தாரா, 2.அன்றில் 3.அன்னம் 4.ஆந்தை 5.ஆரா 6.ஆலா 7.ஆனைக்கால்உள்ளான் 8.…
-
- 0 replies
- 542 views
-
-
நான் கல்லூரியில், பட்டிமன்றத்தில் கேட்டு ரசித்த கவிதை. இப்போது ஏனோ நினைவுக்கு வருகிறது: ஒருவன் பாரதியிடம் அவர் யாரென்று தெரியாமல் பீடி பற்றவைக்க தீப்பெட்டி இருக்கறதா என்று கேட்பதும், அதற்கு பாரதியின் பதிலுமே கவிதை : "தீப்பெட்டி உண்டா பீடி பற்ற வைக்க?" "தீப்பெட்டியில்லை, ஆனால் தீ உண்டு நெஞ்சில், உலகின் தீமைகளை பற்றவைக்க"
-
- 0 replies
- 844 views
-
-
மிக எளிது.. குறு விளக்கம்:- போர்(war) என்பது பல சமர்களின் தொகுப்பு ஆகும். இந்தப் போரானது பல மாதங்களுக்கோ அல்லது பல ஆண்டுகளிற்கோ நீடிக்கலாம். இந்த மாதங்கள் அல்லது ஆண்டுகளில் இரு தரப்பிற்கு இடையில் நடக்கும் மோதல்கள்(clash)(வாளாலோ, கத்தியாலோ, தருக்கத்தாலோ) சமர்(battle) எனப்படும். இந்த சமர்களில் பங்கேற்கும் ஒவ்வொருவரும் எதிராளிகளுடன் மோதுவதைக் குறிக்க சண்டை(fight) என்னுஞ் சொல் கையாளப்படுகிறது. நெடிய விளக்கம்:- போர்(war) - போர் என்பது சண்டைகளுக்கெல்லாம் அடிப்படையான ஒரு அரசியற் செயல்பாட்டு வடிவமாகும். ஒரு குறிப்பிட்ட அ வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் நடைபெறும் பல சமர்களின் தொகுப்பு. இதன் தாக்கம் பல ஆண்டுகளிற்கு இருக்கும். இந்தப் போரானது, குறிப்பிட்ட கா…
-
- 0 replies
- 801 views
- 1 follower
-
-
கலித்தொகையில் நகைச்சுவைக் காட்சிகள் -முனைவர். மா. தியாகராசன். முன்னுரை சங்ககால அக இலக்கிய நூல்களில் கலித்தொகை தனிச்சிறப்பு மிக்க நூலாக விளங்குகிறது. இந்நூல் சொற்சுவையால் பொருட்சுவையால் உயர்ந்து நிற்கின்றது. பண்டைத் தமிழர் கண்ட ஐந்தினைப் பாகுபாட்டின் மேன்மையும் அவர்தம் ஒழுக்கமும் விழுப்பமும் இந்நூலைக் கற்பார்க்குத் தெள்ளிதின் பிலனாகும். கலிப் பாவகையுள் சிறந்த ஒத்தாழிசையாலியன்ற நூற்றைம்பது பாக்களைக் கொண்ட இந்நூல் தேன் சிந்தும், இனிய சொற்களாலும் வானார்ந்த கற்பனைகளாலும், தெளிந்த உவமைகளாலும் சீர்சால் உருவகங்களாலும் உயந்தோங்கி நிற்கின்றது. சொல்வதைச் சுவைபடச் சொல்லும் பாங்கில் இந்நூல் வெல்லும் நூலாக விளங்குகின்றது. அதனால் தான் சுவைகளுள் மிகச் சிறந்த சுவ…
-
- 0 replies
- 710 views
-
-
ஆங்கிலம்+ஆரியத்துடன் ஒரு அக்கப்போர்! மொழிகளின் இயற்கை புரிந்துவிடு! மனிதர்க்குத் தமிழே ஆதிமொழி!-3 பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் "என்னப்பா! ஆளையே காணோம்! ஆங்கில - ஐரோப்பிய மொழிகளில் ஒலி எழுத்துக்கள் உருவான கதைய எப்பத்தான் முழுசாச் சொல்லப் போற? தெளிவாச் சொல்லு!", என்று படபடத்தவாறே உள்ளே நுழைந்தார் நண்பர். "கண்டிப்பா சொல்லிர்றேன்பா! நூற்றாண்டுகளாகவே இலக்கியம் மற்றும் உரைநடைகளில் vowels தனியாகவும் Consonants தனியாகவும் எழுதியே பழகிய ஆங்கிலேய, ஐரோப்பிய முறையை அடியோடு மாத்தி, புதிய உயிர்மெய் ஒலிஎழுத்துக்களை உருவாக்குவது…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஆயிரம் இராமரும் இவனுக்கு இணையில்லை உலகில் இருவகை நபர்கள் அடுத்தவரைப் பாராட்டுவது மிகவும் அபூர்வம். ஒன்று தாய். இன்னொன்று பக்தன். தாயிற்குத் தன் பிள்ளையை விட அதிகமாக இன்னொருவரை மெச்சும் மனம் வராது. அதே போல் பக்தனும் தன் கடவுளை விட அதிகமாக இன்னொருவரைப் புகழ்வது மிக மிக அபூர்வம். ஆனால் கம்ப இராமாயணத்தில் இந்த இரண்டு வகையினரும் அதைச் செய்திருக்கிறார்கள். இராமனைக் காட்டிலும் பரதன் சிறந்தவன் என்று மெச்சி இருக்கிறார்கள். பரதனைப் போல் ஒரு உத்தமனை இலக்கியத்தில் காண்பது கூடக் கடினம். கைகேயி அவனுக்காக வரம் பெற்ற பிறகு அவன் படும் பாடு கொஞச நஞ்சமல்ல. முடிசூட்டிக் கொள்ள குலகுரு விசிட்டர் சொன்ன போது அவன் விஷம் சாப்பிடச் சொன்னது போல நடுங்கினான், பயந்தான், அயர்ந்தான், அருவி போலக் க…
-
- 0 replies
- 785 views
-
-
தமிழில் வெளியான முதல் புத்தகத்தின் நகலைக் காணலாமா? நூல்களின் கால இயந்திரத்தில் பயணிக்க ஆசைப்படுபவர்கள், கன்னிமாரா நூலகத்தில் நடந்து வரும் '500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அரிய நூல்கள் கண்காட்சி'யில் கலந்துகொள்ளலாம். நம் வரலாற்றுடன், நூல்களின் பரிணாம வளர்ச்சியையும் காணும் வண்ணம், நூல்களை மலையாக அடுக்கி வைத்திருந்தார்கள். தமிழ், ஆங்கிலம், இந்தி எனப் பல்வேறு மொழிகளைச் சார்ந்த நூல்கள் இந்த அரிய வகை நூல்கள் கண்காட்சியில் உள்ளன. தமிழில் வெளியான முதல் புத்தகத்தின் நகல் நம்மை வரவேற்கிறது. காந்தி பிறப்பதற்கு முன்பே இந்தியாவைப் பற்றி எழுதப்பட்ட புத்தகங்கள் கண்ணாடிப் பெட்டிகளில் இருந்துகொண்டு கதை சொல்கின்றன. பிரிட்டிஷ் மாணவர்கள் தமிழகத்தில் நடத்திய ஆய்வ…
-
- 0 replies
- 794 views
-
-
மறைக்கப்பட்ட மெய் முகங்கள்- கோபிகா நடராசா. written by admin August 3, 2025 மனிதகுலம் தோன்றிய காலம் தொட்டே, அழகைப் பேணுவது என்பது மனித வாழ்வின் ஓர் அங்கமாக இருந்துவருகிறது. கற்காலத்தில் குகைச் சுவர்களில் வரையப்பட்ட ஓவியங்களில் இருந்து, இக்காலத்து சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செல்ஃபிக்கள் வரை, மனிதர்கள் தங்கள் உருவத்தைப் பற்றியும். அதை அழகாகக் காட்ட வேண்டும் என்பதைப் பற்றியும் எப்போதும் அக்கறை கொண்டிருந்துள்ளனர். நாகரிகத்தின் வளர்ச்சிக்கேற்ப, அழகு குறித்த வரையறைகளும், அதை அடையும் வழிமுறைகளும் தொடர்ந்து மாறிக்கொண்டே வந்துள்ளன. இந்த நீண்ட பயணத்தில், இயற்கையோடு ஒன்றிய பாரம்பரிய அழகு முறைகளிலிருந்து, இன்றைய நவீன தொழில்நுட்பம் சார்ந்த அழகு சாதனங்கள் மற்றும் மருத்துவ அணுகும…
-
- 0 replies
- 476 views
-
-
மனித வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு சடங்குகள் வளமும் நலமும் வேண்டி மக்களால் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகையச் சடங்குகள் வாழ்வியல் சடங்குகள் எனப்படுகின்றன. பிறப்புச் சடங்கு, பூப்புச் சடங்கு, திருமணச் சடங்கு, போன்றவை மங்கலச் சடங்குகள் என்றும் இறப்புச் சடங்கை அமங்கலச் சடங்கு என்றும் பகுத்துள்ளனர். சமுதாயத்தில் இறப்பு என்பது ஒரு துக்க நிகழ்ச்சியாகவும், இறப்பு நடந்த வீட்டார் தீட்டுப்பட்டவர்களாகவும் கருதப்படுகின்றனர். இத்தீட்டினைச் சடங்குகளால் மட்டுமே போக்க முடியும் என்ற நம்பிக்கையில் பல்வேறு செயல்பாடுகள் நிகழ்த்தப்படுகின்றன. இச்சடங்குகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் புனிதத் தன்மை வாய்ந்தவையாகவும் தனித்த அர்த்தமுடையவையாகவும் கருதப்படுகின்றன. இக் கட்டுரை மள்ளர் இன மக்க…
-
- 0 replies
- 1.4k views
-
-
"தேடிச் சோறு நிதந் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து - நரை கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?" என்ற பாரதியாரின் கவிதை வரிகள் தனி ஒரு கவிதையாக உள்ளதா அல்லது கவிதையொன்றின் பகுதியாக உள்ளதா? தெரிந்தவர்கள் அறியத் தாருங்கள்.. பி.கு. இக் கவிதை வரிகள் கமல் நடித்த "மகாநதி" படத்திலும் வந்ததாக ஞாபகம்.
-
- 0 replies
- 1.8k views
-
-
நானும் என் துணைவியும் சில காலம் சென்னையில் வாழும்படி நேர்ந்தது. நான் எனது தூய தமிழில் பேசுவதற்கு கொஞ்சம் தயங்கிய காலப்பகுதி அது. அதையும் மீறிச் சிலவேளை என் இயல்பு மொழியில் நான் பேசினால் “என்ன நீங்கள் மலையாளம் பேசுறிங்களா?” எனச் சிலரும் “நீங்கள் ரொம்ப அழகாய் சிங்களத் தமிழ் பேசுறிங்க” என வேறு சிலரும் பேசுவதைக் கேட்டு அவர்களுக்கு விளக்கம் சொல்லி அலுத்துப்போய் ஒருவாறாக சென்னைத் தமிழைப் பேசக் கற்றுக் கொண்டேன். சென்னைத் தமிழ் ரொம்ப அழகானதுதான் அதற்காக என் தாய்த்தமிழை ‘’சிங்களத் தமிழ்’’ என்று சொல்லும் அவர்களை என்னால் எப்படி ஏற்க முடியும்? இது நடந்து ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன, அமெரிக்காவுக்கு வந்ததற்கு பின் தமிழரைக் காணும்போதெல்லாம் என் தூய தமிழில் உரையாடுவதற்கு நா…
-
- 0 replies
- 783 views
-
-
இராவணன் இயற்றிய நூல்கள் என அறியப்பட்டுள்ள நூல்கள் விபரம் 1. உடற்கூறு நூல் 2. மலை வாகடம் 3. மாதர் மருத்துவம் 4. இராவணன் – 12000 5. நாடி, எண்வகை பரிசோதனை நூல் 6. இராவணன் வைத்திய சிந்தாமணி 7. இராவணன் மருந்துகள் - 12000 8. இராவணன் நோய் நிதானம் - 72 000 9. இராவணன் – கியாழங்கள் – 7000 10. இராவணன் வாலை வாகடம் – 40000 11. இராவணன் வர்ம ஆதி நூல் 12. வர்ம திறவுகோல் நூல்கள் 13. யாழ்பாணம் – மூலிகை அகராதி 14. யாழ்பாணன் – பொது அகராதி 15. பெரிய மாட்டு வாகடம் 16. நச்சு மருத்துவம் 17. அகால மரண நூல் 18. உடல் தொழில் நூல் 19. தத்துவ விளக்க நூல் 20. இராவணன் பொது மருத்துவம் 21. இராவணன் சுகாதார மருத்துவம் 22. இராவணன் திராவக தீநீர் நூல் – அர்க்க பிரகாசம் 23. இராவணன் அறுவை ம…
-
- 0 replies
- 6.2k views
-
-
தேனினும் இனிய தெள்ளு தமிழில் வான் புகழ் வள்ளுவன் யாத்த 1330 குறட்பாக்களில் பல அதிசயச் செய்திகள் உள்ளன. இவைகளை அப்படியே நம்புவதா? அல்லது உவமைக்காகக் கூறப்படும் மரபுச் செய்திகளா? என்று தெரியவில்லை. இவைகள் குறித்து அறிவியல் முறையில் ஆராய்ந்தால் உண்மை புலப்படும். கவரி மானின் மயிர் நீங்கி விட்டால் அது இறந்து விடும் என்றும், முகர்ந்து பார்த்தாலே அனிச்சமலர் வாடி விடும் என்றும், பத்தினிப் பெண்கள் மழை பெய் என்றால் மழை பெய்யும் என்றும் பல அதிசயச் செய்திகளை அடுக்குகிறார் வள்ளுவர். தற்காலத்தில் திருக்குறளுக்குப் புதிய உரை எழுதி வருவோர் பழங்காலத்தில் உரை எழுதியோர் விஷயங்களைத் தள்ளி விட்டு வள்ளுவர்க்குப் புதிய "வியாக்கியானம்" செய்ய முனைந்துள்ளனர். இது தவறு. 1500 ஆண்டுகளுக்கு முன் வா…
-
- 0 replies
- 540 views
-
-
இது மண்ணும், மரமும், மனிதனும் தெடரில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டது பிள்ளையோ பிள்ளை எமது மக்கள் மண்ணை மட்டும் நேசிக்கவில்லை, மரங்களையும் நேசிக்கிறார்கள், பறவைகள், மிருகங்கள், பிராணிகள் என அத்தனையையும் நேசிக்கிறார்கள் என்பது நீங்களும் நானும் அறிந்த ஒரு விடயமே, ஆனால் சிறு வயது முதலே என்னை ஆச்சரியப் படவைத்த தமிழ் மக்களின் 'சொல்வழக்கு' பற்றி இந்த வாரம் சிறிது ஆராய இருக்கிறேன். முதலாவதாக எமது கற்பக தருவாம் பனை மரத்தை எடுத்துக் கொண்டால், அது பாண்டியர்களின் கொடியிலும், கம்போடியாவின் தேசியச் சின்னமாகவும், அதேவேளை உலகின் மிகப்பெரிய சிவன் கோவிலாகவும் விளங்கிய(தற்போது அது பௌத்த கோவிலாக மாற்றப்பட்டு விட்டது) கம்போடியாவின் 'அங்கோர் கோயில்'(ankor wat) அ…
-
- 0 replies
- 1k views
-
-
சங்க இலக்கியத்தில் விலங்கியல் - 8 - குரங்கு முன்னுரை: குரங்கு - என்று சொன்னவுடனே நாம் சாதாரணமாகப் பார்த்தாலும் நம்மை முறைத்துப் பார்த்தவாறு 'உர் உர்' என்று சத்தமிடுவதும் நம் கையில் இருக்கும் உணவுப் பொருட்களை எப்போது பிடுங்கிக் கொண்டு செல்லலாம் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஓரிடத்தில் இல்லாமல் அங்கும் இங்கும் தாவிக்கொண்டிருப்பதுமான குறும்பு நிறைந்த கூனிய உடலுடைய உருவம் தான் நம் அனைவருக்கும் நினைவுக்கு வரும். குரங்கு என்றாலே அதன் சேட்டைகளுக்குப் பஞ்சமில்லை. குழந்தைகளுக்குக் குரங்கைப் பார்த்துவிட்டால் போதும்; அதன் அருகில் செல்வதற்கு அஞ்சினாலும் அதன் செயல்பாடுகளைக் கண்டு சிரித்து மகிழ்வர். தமிழகத்தில் பரவலாகப…
-
- 0 replies
- 1.3k views
-
-
இதுபற்றிய யாழ் தமிழ் உறவுகளின் கருத்துக்கள் என்ன என்பதுபற்றி அறிவதற்கு ஆவல்....🙏
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
-