Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலக்கியமும் இசையும்

இலக்கிய கட்டுரைகள் | நேர்காணல்கள் | கர்நாடக இசை | நவீன இசை

பதிவாளர் கவனத்திற்கு!

இலக்கியமும் இசையும் பகுதியில் இலக்கிய கட்டுரைகள், நேர்காணல்கள், கர்நாடக இசை, நவீன இசை சம்பந்தமான தரமானதும் அவசியமானதுமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இலக்கியக் கட்டுரைகள், படைப்பாளிகளின் நேர்காணல்கள், கர்நாடக இசை, நவீன இசை பற்றிய தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஷோபாசக்தியின் சமகாலச் சிறுகதைகளை முன்வைத்து – அனோஜன் பாலகிருஷ்ணன் July 12, 2019 நான் எப்போதுமே நேரடியாக அரசியல் பேசுபவன். சிறுவயதிலிருந்தே அரசியல் இயக்கங்களோடு என்னைப் பிணைத்து வைத்திருந்தவன். இப்போது இயக்கங்கள் சார்ந்து இயங்காத போதும் தோழர்கள் குழாமோடு தொடர்ந்து அரசியலில் தீவிர அக்கறை செலுத்துகிறவன். அது குறித்து சதா சிந்திக்கிறவன், விவாதிக்கிறவன். அதிலிருந்து தான் கலை, இலக்கியம் மீதான எனது பார்வையை நான் உருவாக்கிக் கொள்கிறேன். “என்னுடைய கதைகள் சற்றே பெரிய அரசியல் துண்டுப் பிரசுரங்கள்” – ஷோபாசக்தி ஈழ இலக்கியம் என்று ஆரம்பித்தாலே இரண்டு பெயர்களைத் தவிர்க்கவே இயலாது. முதன்மைப் படைப்பாளிகள் வரிசையில் அவர்களுக்கான இடம் எப்போதும் உண்டு. ஒருவர்…

  2. எனதில்லாத எனது ஊர் - ‍ யாழ்ப்பாணம் இளங்கோ-டிசே கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் போகும்போது காலை ரெயினை எடுத்திருந்தேன். நேரத்தை சிக்கனமாகப் பாவிக்கவேண்டுமாயின் இரவு பஸ்ஸெடுக்கலாம். ஆனால் இலங்கைக்கு எப்போதாவது செல்லும் எனக்கு பயணக்காட்சிகளைத் தவறவிடுவதில் விருப்பமில்லை என்பதால் சற்று நீண்டதாயினும் ரெயினைத் தேர்ந்தெடுத்தேன். கொழும்பின் நெரிசல்களைக் கொஞ்சம் தாண்டிவிட்டால் அது ஒரு அழகான காட்சியாக விரியத்தொடங்கும். சூரியன் இன்னும் உதிக்காக விடிகாலையில் பனிப்புகார் மூடிய பசும் வெளிகளுக்குள்ளால் இரெயின் ஊடறுத்துப் பாயும்போது நாமும் புத்துணர்ச்சி அடைவோம். என்ன வளம் இந்த நாட்டில் இல்லை என்கின்றமாதிரியாக சிறுகுளங்களையும், பெருமரங்களையும்,விவசாய நிலங்களையும், மகிழ்ச்சியான கிராம…

  3. தமிழக அரசின் இலக்கியவிருதுகள் - ஜெயமோகன் June 5, 2021 புதிய திமுக அரசின் இலக்கியத்துறை சார்ந்த அறிவிப்புகள் பற்றி பல கேள்விகள் வந்தன. ஊடகத்தினரின் கேள்விகளை தவிர்த்துவிட்டேன். அவர்கள் நான் சொல்வதைப் போடமாட்டார்கள். சமூக ஊடகங்களுக்கு வசைபாடுவதற்கு உகந்தவகையில் எதையும் வெட்டி எடுத்துக்கொள்ள தெரியும். இதில் விவாதிப்பவர்கள் ’திமுக அரசு எழுத்தாளர்களை கொண்டாடவில்லை’ என்ற ஒற்றைவரியை வைத்துக்கொண்டு பொத்தாம்பொதுவாகத் தடவித்தடவிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே இவை சார்ந்து மிகத்தெளிவாக பேசப்பட்டவற்றை படிப்பதில்லை. மீண்டும் அதே ஒற்றைவரி உழப்பல்கள். சவடால்கள். தேவதேவன் திமுக அரசு எழுத்தாளர்களைக் கொண்டாடவில்லை என்று எவரும் சொல்லவில்லை. கொண்டாடியிருக்கிறார்…

  4. புதிய குரல்கள்: எழுத்தாளர் அகரமுதல்வனுடன் ஒரு நேர்முகம் – நரோபா பதாகைJuly 10, 2018 நரோபா பிறப்பு /படிப்பு/ குடும்பம் பற்றி ? என்னுடைய மிகச்சிறிய வயதுகள் இடப்பெயர்விலேயே வளர்ந்தன.எறிகணைகள் வீழ்ந்து வெடிப்பதும், உலங்குவானூர்திகள் மேலிருந்து சுடுவதும்தான் எனது சிறியவயதின் நினைவுகளாக அடர்ந்து நிற்கிறது. நான் முதன்முறையாக ஒரு தொகையான சனங்களின் பிணங்களை இடப்பெயர்வு ஒன்றில் நடந்துகொண்டே பார்த்தேன். அந்த இடத்தைவிட்டு அம்மா என்னை மிகவேகமாக இழுத்துக்கொண்டு ஓடினாள். அம்மா முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக் களத்தில் என்னை எந்த திசைக்கு இழுத்துக் கொண்டு ஓடினாலும் எங்கும் பிணங்களே நிறைந்திருந்தன. இந்த இரண்டு சம்பவங்களுக்கு இடையேதான் என்னுடைய பள்ளிக்கூட வாழ்வும் இருக்கிறது.…

  5. மஹாகவியின் கிராமம் ஜூன் 27, 2021 –எம்.ஏ.நுஃமான் இக்கட்டுரை செங்கதிரோனை ஆசிரியராக் கொண்டு கொழும்பு தமிழ் சங்க மாதாந்த ஏடாக வெளிவந்த ‘ஓலை’ சஞ்சிகையின் 17வது இதழில் (2003) வெளிவந்தது. மஹாகவியின் 50 வது நினைவு தினத்தையொட்டி (ஜுன் 20) இக்கட்டுரை வெளியிடப்படுகின்றது. மஹாகவியின் பெரும்பாலான கவிதைகள் யாழ்ப்பாணக் கிராமிய வாழ்வைக் கருப்பொருளாகக் கொண்டவை. கிராமியத்தை மஹாகவிபோல் தமிழ்க் கவிதையில் கொண்டுவந்த பிறிதொரு கவிஞன் இல்லை எனலாம். இந்த வகையில் இவருக்கு அண்மையில் நிற்கக்கூடியவர் நீலாவணன் ஒருவர்தான். ஆனால், கிராமியத்தைப் பொறுத்தவரை அளவிலும் தன்மையிலும் மஹாகவி அவரை மிஞ்சி நிற்கிறார். மஹாகவியின் முக்கியமான பெரும்பாலான கவிதைகளில் யாழ்ப்பாணக் கிராமப்புற வாழ…

  6. நெருங்கின பொருள் : வெற்றிராஜா ‘வேண்டுவன’ என தலைப்பிட்டு, பாரதியின் கையெழுத்தில், ‘மனதில் உறுதி வேண்டும்’ என்று துவங்கும் பாடல், கைபேசியில் ஒரு செய்தியாக வந்து இருளில் ஒளிர்ந்தது. மகாகவியின் கையெழுத்தும், சொற்களை பிரித்து பிரித்து அவர் எழுதியிருந்த விதமும் வசீகரிக்க, வரிகளை உச்சரித்து வாசிக்கையில் அது ஒரு கானமாகவே மனதுள் ரீங்கரித்தது. கவிதைக்குள் சறுக்கி சுழன்று ஊஞ்சலாடிய மனம், ”நெருங்கின பொருள்” என்ற வாக்கியத்தில் மீண்டும் மீண்டும் சென்றமர்ந்தது. ”நெருங்கின பொருள் கைப் பட வேண்டும்”. இந்த வாக்கியம் ஒரு ஆப்த வாக்கியமோ? என்ன சொல்ல வருகிறார் பாரதி? பொம்மையை விரும்பும் குழந்தையாய், பணத்தை விழைகின்ற வியாபாரியாய், உன்னதத்தை தேடும் கலைஞர்களாய், நாம் விரும்பும் பொருள் ஒன்…

  7. பிரிட்டிஷ் முத்த அதிர்ச்சியிலிருந்தே தமிழனால் இன்னும் மீள முடியவில்லை - இளைய அப்துல்லாஹ் பேட்டி பிரிட்டனில் தமிழர் வாழ்க்கை என்னவாக இருக்கிறது? பலருடன் உரையாடினேன் என்றாலும், ஒரு பேட்டி விசேஷமாக எனக்குத் தோன்றியது. கவிஞர், சிறுகதையாசிரியர், ஊடகவியலாளர் எனப் பன்முக ஆளுமையான இளைய அப்துல்லாஹ்வுடனான உரையாடல்தான் அது. முல்லைத்தீவில் பிறந்த ஸ்ரீபாலமுருகன் பின்னாளில் எப்படி இளைய அப்துல்லாஹ் ஆனார் என்ற அவருடைய இளமைக் கால இலங்கைக் கதையே ஒரு நாவலுக்கான களம். அவர் ஐரோப்பா வந்து சேர்ந்தது, பிரிட்டனைத் தன்னுடைய நாடாக்கிக்கொண்டது, இங்கு தன்னை நிலைநிறுத்திக்கொள்ள இன்றளவும் அவர் பட்டுக்கொண்டிருக்கும் பாடுகள் யாவையும் அவர் வாய்வழி கேட்கும்போது சுவாரஸ்யமாக்கிவிடுவது அவருடைய கதையாட…

  8. பிரமிள் இளங்கோ-டிசே 1. ஈழத்திலக்கியம் என வரும்போது தொடர்ந்து வாசிக்கவும் உரையாடவும் வேண்டியவர்களென நான் மு.தளையசிங்கத்தையும் (மு.த), எஸ்.பொன்னுத்துரையையும் (எஸ்.பொ) முன்மொழிந்து வருகின்றவன் . இவர்கள் இருவரையும் விட இன்னொருவரையும் இதில் சேர்க்கலாமோ, விடலாமோ என்கின்ற தயக்கங்கள் எப்போதும் எனக்குண்டு. அது தருமு சிவராம் என்கின்ற பிரமிள். 57 வயதுகள் வரை வாழ்ந்த பிரமிளின் 30 வருடங்கள் இலங்கையிலே கழிந்திருக்கின்றன என வரும்போது அவரை நம்மவராகவே கொள்ளமுடியும். ஒருவகையில் பார்த்தால் அவருடைய மேதமை அவருடைய 20களிலேயே - நிகழ்ந்துமிருக்கின்றது. பிறகான காலங்களில் அவர் அதை விரித்து எடுத்துச் சென்றதையே நாம் எளிதாகப் பார்க்கமுடியும். பிரமிள், அவரின் 20களின் தொடக்கத்…

  9. படத்தின் காப்புரிமை எஸ்.ராமகிருஷ்ணன் /Facebook இந்த ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது எஸ். ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் எழுதி 2015ல் வெளியான ‘சஞ்சாரம்’ நாவலுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. பக்கிரி என்ற பாத்திரத்தின் மூலம் நகரும் இந்த நாவல் நாதஸ்வர இசை, நாதஸ்வர இசைக் கலைஞர்களை அடிப்படையாகக் கொண்டது. பெரிதும் அவர்களது துயரம் குறித்துப் பேசுகிறது. "நாதஸ்வர இசைக் கலைஞ்களில் தஞ்சை மண்டலத்தைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர்கள் பேசப்படும் அளவுக்கு கோவில்பட்டி போன்ற கரிசல் பகுதியைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர்கள் பேசப்படவில்லை. …

  10. 1.Treat your men as you would your own beloved sons. And they will follow you into the deepest valley. உனது வீரர்களையும் மகனாக நேசி அவர்கள் மிக பெரிய வெற்றியை பெற்று தருவார்கள் 2.who wishes to fight must first count the cost யார் போரில் பங்கேற்கறார்களா அதன் விளைவுகளையும் தெரிந்து கொள்ள வேண்டும் 3. When the enemy is relaxed, make them toil. When full, starve them. When settled, make them move எப்போது எதிரிகள் நிதானமாக பதற்றமடையாமல் இருக்கிறார்களா அப்போது நாம் எதிரிகளை அதிகம் வேலை வாங்க வேண்டும். எப்போது எதிரிகள் நிம்மதியாக இருக்கிறார்களா அப்போது அவர்களின் நிம்மதியை கெடுக்க வேண்டும். எப்போது எதிரிகள் வலிமையோடு ஒர் இடத்தில் இருக்கிறார்களோ …

    • 7 replies
    • 1.1k views
  11. சுய கண்டடைதல் : கல்பற்றா நாராயணன் தமிழில் : அழகிய மணவாளன் “கண்ணாடி மிக அதிகமான பதிப்புகள் வெளிவந்த பெஸ்ட் செல்லர் ஒவ்வொரு வீட்டிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரதிகள் கொண்ட என்றென்றைக்குமாக வாசிக்கப்படும் நூல் பைபிளைவிட அதிகமாக ஸ்தோத்திரம் செய்யப்பட்ட புனிதமான நூல்.“ (நிழலை கைப்பற்றுதல் – கல்பற்றா நாராயணன்) கண்ணாடிக்கு பச்சைத்தண்ணீரின் நிறம். பிரதிபலித்தல் என்ற ஒரே ஒரு நோக்கத்திற்காக மீண்டும் மீண்டும் உருவாக்கப்படும் நீலநிற நீர்த்தேக்கம் (Now I am a lake mirror- Sylvia Plath). நார்ஸிஸஸ் தன் நீர்ப்பிம்பத்தால் ஈர்க்கப்பட்டு மூழ்கி மறைந்த தடாகம் ஒவ்வொருமுறை நான் கண்ணாடி பார்க்கும்போதும் எழுந்துவருகிறது. மனிதர்கள் அதில் நீந்த…

  12. ஜெயமோகனின் “பத்துலட்சம் காலடிகள்” சிறுகதையை வாசிப்பது எப்படி?- ராஜன் குறை April 30, 2020 - ராஜன் குறை · இலக்கியம் ஓளசேப்பச்சன் கதாபாத்திரம் ரொம்ப குடிக்கிறது. தொடர்ந்து ஏப்பம் விடுகிறது. பலரையும் ஏசுகிறது. யாரையும் பேசவிடாமல் அதுவே பேசிக்கொண்டிருக்கிறது. இதுபோன்ற பாத்திரங்களை ஜெயமோகன் கொஞ்சம் கட்டுக்குள் வைக்க வேண்டும். கதை சொல்லியையும் அந்த பாத்திரத்திற்கு எதிரே உட்கார வைத்த பிறகு சும்மா ஏப்பம் விடுவதை எண்ணிக்கொண்டிருந்தால் சரியாக வராது. ஒளசேப்பச்சனின் அபத்தமான கருத்துக்களை மறுத்து ரெண்டு வார்த்தை பேச வேண்டும். ஒளசேப்பச்சன் உளறுவதையெல்லாம் குறிப்பெடுத்து பதிவுசெய்வதற்கா கதைசொல்லி மற்ற பாத்திரங்களுடன் உட்கார்ந்திருக்கிறான்.…

  13. புனைவு வாசிப்பு அடிமைப்படுத்துமா? ஜெயமோகன் September 21, 2021 Vincent Van Gogh “The Novel Reader” அன்புள்ள ஜெ, நலம்தானே? என் நண்பர்களில் புத்தகம் வாசிப்பவர்கள் மிகக்குறைவு. அவர்களிலேயேகூட பலர் புனைவுகளை வாசிப்பதில்லை. “இருபத்தஞ்சு வயசு வரை கதை படிக்கிறது ஓக்கே. அதுக்குமேலே வாசிச்சா அவன் தத்தி”என்று என் நண்பன் ஒருவன் சொன்னான், கற்பனைக்கதைகள் வாசிப்பது வெட்டிவேலை என்ற எண்ணம் பலரிடமும் உள்ளது. பொதுஅறிவை அளிக்கும் கட்டுரைநூல்களை வாசிக்கிறோம் என்று சொல்வார்கள். அவர்கள் கட்டுரைநூல்கள் என்று சொல்வது பெரும்பாலும் அரசியல்நூல்கள். இடதுசாரி அரசியல்நூல்கள்தான் அதிகமும். சிலர் சேப்பியன்ஸ் போன்ற நூல்களைப் படிப்பார்கள். ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை வரலாறு போன்…

  14. ஜெயமோகனின் பிதற்றல்கள் 1. ஒருமுறை ரஞ்சகுமார் ஜெயமோகனின் புத்தகம் எழுதும் வேகத்தை கண்டு “இதன்ன நாங்கள் காலையில் எழுந்து மலங்கழிப்பதுபோல் இந்தாள் புத்தகங்கள் எழுதிக்கொண்டிருக்கு!” என்று சொன்னதாக எனக்கொரு நண்பர் கூறினார். ரஞ்சகுமார் என்ன கருத்தில் அதைச் சொன்னாரோ தெரியாது, ஆனால் ஜெயமோகன் ஆரம்பத்தில் எழுதிய ‘விஷ்ணுபுரம்’, ‘காடு’, ‘கொற்றவை’ என்பவை போன்ற சிலதைத்தவிர ஏனையவை எல்லாம் மலங்களாய் வெளித்தள்ளப்படும் கழிவுப்பொருட்களே! (உதாரணம்: பாரதம் இரண்டு பாகம்) விந்து கதித்தவன் விலைமாதரிடம் செல்லும் தொழிலே அவர் எழுத்தாகிவிட்டது. 2. இத்தகைய இவருடைய புத்தகங்களை வாசித்து எவரும் விமர்சனம் செய்யாததாலும் அதன் மூலம் இவருக்கு publicity கிடைக்காததாலும், தன்னை ஏதோ விதத்தில் ஒரு…

    • 2 replies
    • 1.5k views
  15. சிங்கப்பூர் - மலேசியா பயணம் தமிழ் முரசு நாளிதழ் மற்றும் சிங்கப்பூர் கலை மன்றம் இணைந்து நடத்தும் ஒருநாள் அறிவியல் புனைவு - வரலாற்று புனைவு பயிலரங்கிற்காக என்னை அழைத்திருந்தார்கள். சிங்கப்பூரோ தஞ்சாவூரோ எங்கு சென்றாலும் உரிய தயாரிப்புடன் செல்ல வேண்டும் என்பது என் நிலைப்பாடு. அறிவியல் புனைவு, வரலாற்று புனைவு தொடர்பாக இரண்டு மாதங்கள் தொடர்ந்து வாசித்து என்னை தயார் செய்து கொண்டேன். வழக்கமாக செல்லும் ஊட்டி கூட்டத்திற்கு கூட இந்தமுறை செல்லவில்லை. வெளிநாட்டிற்கு தனியாக பயணிப்பது இதுவே முதல்முறை எனும் பதட்டம் வேறு லேசாக பட்டாம்பூச்சிகளை பறக்கவிட்டது. மே எட்டாம் தேதி நள்ளிரவு திருச்சியில் இருந்து புறப்பட்டு ஒன்பதாம் தேதி காலை சிங்கப்பூர் செ…

    • 0 replies
    • 1.6k views
  16. “சிங்கப்பெண்ணே” சிறுகதைப் போட்டியில் ஜெயஸ்ரீ சதானந்தன் முதலிடம்.! தமிழகத்தில் தமிழ் பட்டறை இலக்கிய பேரவை நடாத்திய “சிங்கப்பெண்ணே” சிறுகதைப் போட்டியில் பிரித்தானியாவில் வாழும் இலங்கை பெண் எழுத்தாளர் ஜெயஸ்ரீ சதானந்தனுக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. இவர் பிரித்தானியாவில் இயங்கும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் முன்னணி செயல்பாட்டாளர் ஆவார். கடந்த 07.06.2020 அன்று நடைபெற்ற “சிங்கப்பெண்ணே” சிறுகதைப் போட்டியின் முடிவுகள். #முதல் இடம் எழு. Jeyasree sathananthan #இரண்டாம் இடம் எழு. Viji mahesh எழு. Raisa farwin #மூன்றாம் இடம் எழு. Ssm Rafeek எழு. Raghunath Krishnaswamy வெற்றியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். https://www.…

  17. போர்க்கால இலக்கியம் – ஈழப்போருக்கு முன்பும் பின்னரும் August 16, 2020 அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் கடந்த 15 ஆம் திகதி நடத்திய இணையவழி காணொளி அரங்கில் சமர்ப்பித்த உரை முருகபூபதி போர்க்கால இலக்கியம்பற்றி பேசுவதற்கும் நாம் மற்றும் ஒரு கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் போராடும் காலத்திலும் தயாராகியிருக்கின்றோம். இனி கொரோனா கால இலக்கியம் என்பதும் பேசுபொருளாகிவிடும். சமகால போராட்டத்தில் எம்மை பாதுகாத்துக்கொள்ள சமூக இடைவெளி தேவைப்பட்டிருந்தமை போன்று, ஈழவிடுதலைப்போரில் எமது மக்களின் பாதுகாப்பிற்கு பதுங்கு குழிகள்தான் தேவைப்பட்டன. அப்படியிருந்தும் பதுங்கு குழிகளை நோக்கியும் எறிகணை வீச்சுக்கள் நிகழ்ந்தன. குண்டுகள் பொழியப்பட்டன. …

  18. நேர்காணல் – கே.எஸ்.சுதாகர் | கண்டவர்: தி.ஞானசேகரன் (ஞானம் சஞ்சிகை ஆசிரியர்) - - ஞானம் சஞ்சிகையின் செப்டெம்பர் 2020 இதழில் வெளியான நேர்காணல். இணைய வாயிலாக நடைபெற்ற நேர்காணலிது. கண்டவர் ஞானம் சஞ்சிகை ஆசிரியர் தி.ஞானசேகரன். - 1) தங்களுக்குள் ஓர் இலக்கியவாதி தோன்றுவதற்கான தங்களது குடும்பப் பின்னணி, இளமைப்பருவம் போன்றவற்றை முதலில் கூறுங்கள் அம்மாவின் பிறப்பிடம் வீமன்காமம், அப்பா குரும்பசிட்டி. குரும்பசிட்டி கலை இலக்கியத்துடன் பின்னிப்பிணைந்த ஒரு கிராமம். எனக்கு எழு அண்ணன்மார்கள், இரண்டு அக்காமார்கள். நான் கடைசி. என்னுடைய சித்தப்பாவும், அத்தானுமாகச் சேர்ந்து `சக்தி அச்சகம்’ என்றொரு அச்சுக்கூடம் வைத்திருந்தார்கள். அங்கிருந்துதான் `வெற்றிமணி’ சிறுவர் …

  19. ராஜன் குறை என்பவர் யார்? | ஜெயமோகன் July 4, 2020 உங்கள் கடிதத்துக்கு நன்றி.நானே யோசித்த விஷயங்கள்தான் என்றாலும் அதை ஆணித்தரமாக ஒருவர் சொல்லும்போது ஒரு நிறைவு வருகிறது. இன்னொன்றையும் கேட்க விரும்புகிறேன். ராஜன் குறை என்பவர் தொடர்ச்சியாக உங்களைப்பற்றி எழுதிவருகிறார். ஒரு அப்செஷன் கொண்டவர் போல. அவரைப்பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன? ஏன் நீங்கள் அவரை பொருட்படுத்துவதே இல்லை? எம்.ராஜேந்திரன் *** அன்புள்ள ராஜேந்திரன், எழுதவேகூடாது என நினைத்திருந்தேன், ஆனால் எழுதியாகவேண்டும் என்ற நிலை. 1988 என நினைக்கிறேன், கோணங்கியின் கல்குதிரையில் நான் நக்சலைட் கவிதைகள் என்ற தொகுதியிலிருந்து சில கவிதைகளை மொழியாக்கம் செய்து பிரசுரித்தேன். அப்போதுதான் ராஜன்குற…

  20. பிரபாகரன் என்ன சித்தனா? தெய்வமா? – நேர்காணல் -தமிழ்க்கவி இதுவரை படித்தவர்கள்: 351 நான்வந்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கான பஸ் பரந்தனைக் கடந்து கிளிநொச்சியை விரைவாக அண்மித்து நீதிமன்ற நிறுத்தத்தில் என்னை இறக்கி விட்டுத் தனது பயணத்தைக் தொடர்ந்தது. கிளிநொச்சிக்கும் எனக்கும் ஒரு பரமார்த்தமான தொடுகைகள் முன்பு இருந்தன. சிறுவயதில் இருந்தே எனது தந்தையார் இங்கு கடமையாற்றியதால் ஏற்பட்டதாலும் இங்கு நெற்செய்கை வயல் இருந்தகாரணத்தினாலும் அது ஏற்பட்டது. நான் கிளிநொச்சியில் இறங்கியபொழுது அந்தக்காலை வேளையிலும் வெய்யில் வெளுத்துக்கட்டியது. வியர்வையில் உடல் தெப்பமாக நனைந்து விட்டதாலும் குறித்த நேரத்திற்கு முதலே வந்து விட்ட காரணத்தினாலும் நீதிமன்ற வளாகத்தின் அருகே…

  21. கற்பனையே செய்யமுடியாத விஷயங்கள்தான் இலங்கையின் வரலாறாக இருக்கிறது December 19, 2024 ஷோபாசக்தி 18.12.2024 – ஆனந்த விகடன் இதழில் வெளியாகிய எனது நேர்காணல். நேர்கண்டவர்: நா.கதிர்வேலன் இன்றைக்கும் ஷோபாசக்தி, ஈழ இலக்கியத்தின் முக்கியமான முகம். அவரைத் தவிர்த்துவிட்டு நாம் இலக்கிய வகைமைகளை யோசிக்க முடியாது. புலம்பெயர் வாழ்வின் பிரச்னைகள், இன ஒடுக்குமுறைகள் என இதயத்தைப் பிசையும் மொழி இவருடையது. நவீனத் தமிழுக்கும் ஒளிரும் கலை நம்பிக்கை ஷோபா. இப்போது நடிகராக தமிழ் மட்டுமல்லாது, ஹாலிவுட்டிலும் களைகட்டுகிறார். எந்த அணியிலும் சேராத, கூச்சலிடாத அவரது போக்கு அரிதினும் அரிது. சிறந்த கலைஞனுக்கான புதுப்பித்துக்கொள்ளும் மொழியும் லாகவமும் மெல்லிய குரலில் வெளிப்பட… அவரிடம்…

  22. Polappu Thedi| மலையகத்தான் கதடா 2 Album New Official Video Song 2024 மலையக சமுதாயத்தில் மலையக மக்கள் வாழும் வாழ்க்கை கதையை ஒரு பாடலாக தயாரித்து உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம் ❤️.

  23. நான் எதையுமே தன்னியல்பாக எழுதுவதில்லை. – ஷோபாசக்தி (நேர்காணல்) May 2, 2020 நேர் கண்டவர் : அகர முதல்வன் எழுத்தாளர் ஷோபாசக்தி – தமிழ் இலக்கியத்தோடு பரிட்சயமானவர்கள் அனைவரும் அறிந்து வைத்திருக்கும் பெயர். தன்னுடைய படைப்புக்களின் மூலம் ஈழத்தமிழ் வாழ்வியலை எழுதி வருபவர். தனக்கான கதை சொல்லும் முறை, பகிடி, அரசியல் சாடல்கள் என நிறைய அம்சங்களால் தனது படைப்புலகை உண்டு பண்ணியிருக்கிறவர். அவரின் படைப்புக்கள் மீது கடுமையான விமர்சனம் கொண்டவர்களும் ஏராளம். அவருடைய மிகச் சமீபத்தில் வெளியான “இச்சா” நாவலை “கருப்பு பிரதிகள்“ பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. மாற்றுக் கருத்து உள்ளவர்களும் ஒரு மேசையில் அமர்ந்து ஒருவரையொருவர் வெறுக்காமலும் தமது கருத்துகளை விட்டுக் கொடுக்காமலும் …

    • 15 replies
    • 1.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.