கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
772 topics in this forum
-
என் அன்பு இதயங்களுக்கு.. பணம் பற்றிய எனது 15 (குறும்)வரிகள்..! ******************************** பணக்கார மனிதனும் ஏழை மனிதனும் உலகத்தில் வாழ்ந்தோம்-இன்று ஒன்றாகவே போகிறோம்-கையில் ஒன்றுமில்லாமல். ************************************** பணமெனும் கடுதாசிக்காகவே காலத்தை வீணடித்தேன் ஏழைபோல் உலகத்தை ரசிக்கமுடியல்லையே என்னால். *************************************** நான் பிறந்த காலம் தொட்டு எல்லாம் அறிந்து விட்டேன் பார்க்காமலே போகப் போகிறேன் சில்றையை விட பெரிய காசுகளை. ***************************************** உழைத்து சாப்பிடும் மற்ற உயிரினம் போல் என்னால் எழும்பமு…
-
- 0 replies
- 997 views
-
-
"காதல் என்பது மாய வலையோ..?", "சிறுவர்களே" & "ஆசைவார்த்தை பேசிப்பேசி அயித்தானை மசக்குறியே!" "காதல் என்பது மாய வலையோ..?" "காதல் என்பது மாய வலையோ காமம் சேரும் அன்பு பொறியோ காலம் போக்கும் களி ஆட்டமோ கானல் நீரின் ஒரு வடிவமோ காரணம் புரியா நட்பின் பிணைப்போ?" "கண்ணும் கண்ணும் சேர்ந்த பின் மண்ணும் மழையும் கலந்தது போல எண்ணமும் கனவும் பின்னிப் பிணைந்து உண்மை ஆசைகள் நெஞ்சில் சுமந்து பெண் பேசும் கண்ணீர் கதையோ?" "சிறுவர்களே" "கைபேசியில் விளையாடி மகிழும் சிறுவர்களே! கைகால் ஓய்ந்து உடலெடையை ஏற்றதே! உலகம் சுருங்கி கையில் இருக்குது உண்மையைத் தேடி உயரப் பாரு!" "இளமை உன்னை சுண்டி இழுக்கும் இதயத்தை என்றும் …
-
-
- 2 replies
- 564 views
-
-
"ஆலமரக் கிளியே ! அத்தானப் பாரடியே!" [எசப்பாட்டாக நாட்டுப்புறப் பாடல்] "ஆலமரக் கிளியே ! அத்தானப் பாரடியே! நீலக் கருங்குயிலே! அருகில் வாராயோ காலம் கடத்தாமல் நெற்றியிலே பொட்டுவைக்கவா?" "வேகாத வெயிலுக்குள்ளே குந்தி இருப்பவனே தகாத உன்னுறவு எனக்கு வேண்டாம் ஆகாச கோட்டை பொடிப்பொடியாகப் போகட்டும்!" "மண்டை பெருத்தவளே வீறாப்புநீ பேசாதேடி கண்டகண்ட பயல்கள்தான் உனக்குத் தேவையோ வண்ணக்குயிலே நெருங்கிநிண்ணு நான் பேசவாடி" "கால்ரூபாய்க்கு விறகுவிற்று காலம் கழிப்பவனே அல்லும்பகலும் திண்ணை திண்ணையாத் தாண்டுபவனே கல்லுநெஞ்சம் எனக்கில்லை கண்டவனுக்கும் தலைகொடுக்க!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 355 views
-
-
காலச்சக்கரம் சித்திரையில் கொட்டித் தீர்த்த பெருமழையில் சிந்திய விதைகள் வளர்ந்து பெருவிருட்ஷமாகி கோடையில் நல் நிழல் தந்து பச்சை பசேலென்ற வண்ணங்க்காட்டி மலர்தல் காய்த்து கனி தரும் என மக்கள் மனம் குளிர்ந்த வேளை "சட்டென மாறுது வானிலை "என அயலூரில் சுழன்று அடித்த சூறாவளியுடன் எங்கள் மண்ணிலும் மெல்ல குளிர் எட்டிப்பார்க்கிறது ."நேற்று போல் இன்று இல்லை என்றுமே மாற்றம்" தான் இனி மரம் கிளைகள் அனைத்து தாவரங்களும் அணையப் போகும் விளக்கு சுடர் விட்டு ஒளிர்வது போல பல வண்ணம் காட்டி நிற்கும்,மெல்லிய …
-
- 0 replies
- 702 views
- 1 follower
-
-
"கடவுள் கேட்கிறார்" "பாலை ஊற்றி என்னை குளிப்பாட்டுகிறாய் காலை மாலை எனக்கு படைக்கிறாய் சாலை ஓரத்தில் என் மகன் மாலை வரை இருக்க தவிக்கிறான் !" "பட்டும் பகட்டும் எனக்கு எதற்கடா? தட்டும் படையலும் எனக்கு எதற்கடா? கொட்டும் பாலை அவன் குடிக்கட்டும் சொட்டும் தேன் வயிற்றை நிரப்பட்டும்!" "தடல் புடலாக என்னை பூசிக்கிறாய் கடல் கடந்து யாத்திரை போகிறாய் குடல் வற்றி அவன் சாகிறான் உடல் சிதறி அவன் வாடுகிறான்!" "எங்கும் என்னை தேடி அலையாதே இங்கு கொட்டும் கறந்த பாலை அங்கு வறியவன் வாயில் கொட்டு அங்கு அவன் சிரிப்பில் நானே !" [க…
-
- 0 replies
- 483 views
-
-
"எழுதுகோல் கொண்டு பா தொடுக்கிறேன்" "எழுதுகோல் கொண்டு பா தொடுக்கிறேன் எக்களிப்பு இல்லை ஏற்றத்தாழ்வு இல்லை எள்ளளவு வெறுப்பு எவரிடமும் இல்லை என்றாலும் என்னை நானே வெறுக்கிறேன் !" "நேரம் போகாத சில நாட்கள் நேசம் கிடைக்காத சில உறவுகள் நேரார் தூற்றும் சில வசைகள் நேசகன் துவைக்கும் துணி ஆனேன் !" "வெறுப்பு மனதில் குடி கொள்ள வெளிச்சம் மெல்ல விலகிப் போக வெறுமை தனிமை என்னை வாட்ட வெண்மணல் தரையில் கருவாடு ஆனேன் !" "அல்லும் பகலும் என்னை சுற்றி அக்கம் பக்கம் நடப்பதைப் பார்த்து …
-
- 0 replies
- 1.1k views
-
-
"நேரிய பாதையில்" "நேரிய பாதையில் மனிதா நட நேர்மை கொண்ட தீர்மானம் எடு! நேசம் உள்ள நண்பர்களை அணைத்து நேரார் தரும் தொல்லைகளை அகற்று! ஆர்வம் வேண்டும் ஆராவாரம் வேண்டாம் ஆசை வைத்து செயலில் ஈடுபாடு! இன்பம் துன்பம் யாரும் தருவதில்லை இருப்பதை அறிந்து நடையைக் கட்டு! கொள்கை ஒன்றைத் தரமாக வகுத்து கொடுத்து எடுத்து சமாதானம் காணு! தெரிந்ததும் தெரியாததும் அறிந்து உணர்ந்தால் தெளிவான முடிவு தருமே வெற்றி!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 243 views
-
-
14.01.1986 தைப் பொங்கல் தினத்தன்று வெளியாகி இருந்த இந்தக் கவிதையை எனது பழய பொக்கிஷங்களிலிருந்து கண்டேன். அதை 14.01.2025 நடந்த பொங்கலோடு சேர்த்துக் கொள்ளுவோம். பஞ்சத்திற்கு சிறகு வைப்போம்! ************************************* ஏட்டைப் படித்த நாங்களனைவரும் சேட்டைக் கோட்டை வெறுத்திடுவோம் காட்டையழித்து மாட்டைப் பூட்டி நாட்டை ஏரால் உயர்த்திடுவோம் சூட்டையடித்து நெல்லைக் கொட்டி மூட்டையிலிட்டுச் சேர்த்துதிடுவோம் ஆட்டை மாட்டை பண்ணையில் வளர்த்து சோட்டையுணவை உண்டிடுவோம் வீட்டையாளும் பஞ்சப் பாட்டை ஓட்டை வழியால் துரத்திடுவோம். அன்புடன் -பசுவூர்க்கோபி.
-
-
- 8 replies
- 728 views
-
-
"நொட்டி நொடிய விடாதே பெண்ணே?" "ஒட்டி உடையில் பெண்மை காட்டி எட்டி நடையில் வேகம் காட்டி சுட்டி விடையில் புத்தி காட்டி வெட்டி பேச்சில் வெகுளி காட்டி தட்டி கழித்து நாணம் காட்டி முட்டி மோதி போகும் பெண்ணே!" "பட்டி தொட்டி எங்கும் சொல்லி கட்டி தங்கம் வெட்டி எடுத்து செட்டி செய்த மோதிரம் மாற்றி மெட்டி காலில் கண் சிமிட்ட தட்டி கேட்கத் துணை சேர ஒட்டி உரசிப் போகலாம் பெண்ணே!" "மூட்டி அடுப்பில் சமைக்க வேண்டும் கூட்டி பெருக்கித் துடைக்க வேண்டும் ஊட்டி பிள்ளை வளர்க்க வேண்டும் லூட்டி அடித்து குழப்ப வேண்டும் போட்டி போட்டு கொஞ்ச வேண்டு…
-
- 0 replies
- 1.5k views
-
-
"சயனகோலம் அவளின் அழகு கோலம்" "சயனகோலம் அவளின் அழகு கோலம் சரிந்த படுக்கையில் தேவதை கோலம் சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து சங்கடம் தருகிறது அவளின் பார்வை" "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில் சற்று நானும் என்னை மறந்தேன்" "சக்கர தோடு கழுத்தை தொட சடை பின்னல் அவிழ்ந்து விழ சலங்கை கால் இசை எழுப்ப சங்காரம் செய்யுது இள நகை" "சகுனம் பார்த்தே வெளியே வருவாள் சஞ்சலம் தந்து பலரை வருத்துவாள் சகிதமாய் தோழிகள் சூழ உலாவுவாள் சந்தோசம் பொங்க நானும் ரசிப்பேன்" "ச…
-
- 0 replies
- 834 views
-
-
"நாம் ஆணா பெண்ணா.. ?" [வித்தியாசமாக இருக்கட்டும் என இப்படி வசன கவிதையில் ஒரு முயற்சி.] "மழலையாய் பிறந்தோம் தாய் தந்தை மகிழ்வில் விளக்கம் இல்லை நாம் வேறா வேறா.." "குழந்தையாய் வளர்ந்தோம் ஒன்றாய் கட்டி உருண்டோம் குழப்பம் இல்லை நாம் ஆணா பெண்ணா.." "சிறு…
-
- 0 replies
- 158 views
-
-
"வானம்" "மேகங்கள் நகரும் வீதி கொண்டு மோகங்கள் தரும் வண்ணம் நீயே! தாகங்கள் தீர்க்கும் மழையைப் பொழிந்து சோகங்கள் துடைக்கும் கருணை வள்ளலே! போகங்கள் போக்கும் நிலவைத் தாங்கி தேகங்கள் வெப்பம் குறைக்கும் வானே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 370 views
-
-
ஒரு முறை பிறந்து பல முறை இறந்து பட்டப் பகலில் பார்வை இழந்து பசியோடு அலைகிறோம் பார்பவன் யாரும் இல்லை போர் ஒன்று வந்து புயல் போல் வீச அங்கும் இங்குமாக அலைகிறோம் ஆற்றில் கிடக்கும் ஆல இலைபோல மனிதப் பிறவியை மதிக்காத இந் நாட்டில் மனிதப் பிறவியே வேண்டாமையா என்று மனது உறுத்துகிறது மறுயென்மம் இருந்தால் பிறப்போம் நல்ல மனிதர்களாக …
-
- 32 replies
- 5.2k views
-
-
பொங்கல் 2022 எங்கிருந்தோ தோன்றி எம்மை உயிர்ப்பித்த செங்கதிரே உன்றன் திருவருளைப் போற்றுகிறேன் நீயின்றி நானில்லை நீயே எனை இயக்கும் நேயப் பெருஞ்சக்தி நித்தியமாம் பொற்சோதி தாயாய் இஞ்ஞாலத்தைத் தன்மகவாய் ஏற்று ஓளிப் பாயத்தை எங்கும் பரவவிட்ட பேரருளால் மாய வெளியினிலோர் மண்துகளாம் பூமிதனில் காயமெனும் எமது காற்றடைத்த பையினிலே உள்ளம், உணர்வு, உயிர்ப்பெல்லாம் பெற்றுவிட்டோம் வெள்ளமெனப் பொலியும் நின்னருளைக் கண்டுருகி அன்பால் மகிழ்ந்து ஆரமுதப் பொங்கலிட்டு நின்பால் எம் நன்றியினால் நேர்த்திக் கடன்செலுத்தி உடலால் வயலுழுது உண்ணவும் பாலளிக்கும் விடையையும் ஆவினையும் மேன்மையுறப் போற்றும் நற்றமிழர் பண்பாட்டை நம்முன்னோர…
-
- 5 replies
- 1.5k views
-
-
பேசாமல் நகர்வதும் பேசிவிட்டு செல்வதும் பாசத்தின் வெளிப்பாடு அன்பிற்கு இல்லை எந்நாளும் பாகுபாடு சரவிபி ரோசிசந்திரா
-
- 0 replies
- 598 views
-
-
"இதயமே பேசு" "இதயமே பேசு ஆறுதல் கொடு இனிய காதலை மீண்டும் தந்திடு! இன்பம் காட்டி ஏமாற்றியது போதும் இரட்டை வேடம் இனிமேலும் வேண்டாம் இணக்கம் கொண்டு திரும்பி வந்திடு!" "அன்பு பொழிந்து ஆசை தெளித்து அழகு மொழியில் கொஞ்சிக் குலாவினியே! அகன்ற கண்ணும் சிறுத்த இடையும் அளவான மார்பும் கனவில் தோன்றி அக்கினியாய் இன்று என்னை எரிக்கிறியே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 378 views
-
-
இலக்கில்லா சிறுகுருவி ------------------------------------- இந்த குருவியை எழுத எழுத என்று நினைத்து எழுதாமலேயே போய்க் கொண்டிருக்கின்றேன் இது ஒரு சின்ன சிட்டுக் குருவி தான் கொய்யா மரத்தின் கீழ் கொப்பில் நின்று அப்படியே பறந்து முருங்கையின் ஒரு கொப்பிற்கு அது போகின்றது அங்கிருந்து கண்ணாடி யன்னலில் பாய்ந்து அப்படியே அது சறுக்கி கீழே விழுகின்றது எழும்பி அது மீண்டும் பறந்து கொய்யா மரம் போகின்றது இப்படியே செய்து கொண்டு இடையிடையே நின்று செட்டைகளை விரித்து நீவி விடுகின்றது தன் வாலையும் அப்பப்ப ஆட்டிக் கொள…
-
-
- 3 replies
- 585 views
-
-
அழகெனப்படுவது யாது...? அழகெனப்படுவது நல் அகத்தினின் முகிழ்ப்பு! அழகெனப்படுவது நல் எண்ணத்தினின் முனைப்பு! அழகெனப்படுவது நற்கல்வியின் செழிப்பு! அழகெனப்படுவது உள்ளுயிரின் இயக்கம்! அழகெனப்படுவது குணநலத்தின் முயக்கம்! அகத்தினில் அழகெழுந்தால் நல் அறம் பெருகும்... அகத் திறம் பெருகும்... அதன் உரம் பெருகும்... தீமைக் கெதிர் நிற்கும்... மறம் பெருகும்... மருள் விலகிப் போகும்! புறம் பெயரும் பொய்மையெலாம்! புதுமை பெறும் வாழ்வு! பாடிக் களைத்தோம் புற அழகின் பொய்மையினை! தேடிக் களைத்தோம் உண்மை அழகின் மெய்யுணர்வை! நாடிக் களைத்தோம் உரவோரின் மெய்யழகை! பாடியும் தேடியும் நாடியும் சலித்தோம் இத் தரணியிலே... தூய்மை அழகுடையோர் எவரும் காண்கிலமே! …
-
- 5 replies
- 1.4k views
-
-
எங்கே சென்றாய் நீ எங்கே சென்றாய் எங்கே சென்றாய் நீ எங்கே சென்றாய் என்னை நீ தொலைத்து எங்கே சென்றாய் என்னை நீ அழைத்து எங்கே சென்றாய் தினந்தோறும் பணந்தேடி எங்கே சென்றாய் திசைதோறும் புகழ்தேடி எங்கே சென்றாய் உடலுக்குள் உயிர் காணாமல் எங்கே சென்றாய் உடலை தினம் பேணாமல் எங்கே சென்றாய் எங்கே சென்றாய் நீ எங்கே சென்றாய் எங்கே சென்றாய் நீ எங்கே சென்றாய் எதிலும் நான் தெரிகின்றேன் எங்கே சென்றாய் எல்லாம் நான் அறிகின்றேன் எங்கே சென்றாய் பேதமின்றி அள்ளித் தந்தேன் எங்கே சென்றாய் பேரிடரிலும் துணை வந்தேன் எங்கே சென்றாய் மும்மலம் நீ அறியாமல் எங்கே சென்றாய் முற்பிறவி நீ தெரியாமல் எங்கே சென்றாய் எங்கே சென்றாய் நீ …
-
- 0 replies
- 765 views
-
-
அன்னையர் தினத்தைக் கொண்டாடி அம்மாவை அடுத்த வேளை உணவுக்குத் திண்டாட வைக்கும் பிள்ளைகளும் உள்ளனர் இந்தப் பூவுலகில்... சரவிபி ரோசிசந்திரா
-
- 0 replies
- 695 views
-
-
நம்பி வாங்கிய நாய்..! ******************* பஞ்சாயத்து தலைவர் பதிவிலிருந்து.. சாந்தமில்லாத சப்பை முகம் கொண்ட வெளிநாட்டு நாயொன்றை விரும்பி வாங்கினேன். கடனாக.. அயல் வீட்டுத் தொந்தரவை அடக்கலாமென்று.. வாசலில் காவலுக்கு வைத்தால் வரும் எதிரி அனைத்தையும் வரவிடாமல் தடுக்குமென்று.. ஆனால் நாயிப்போ எனது நடு வீட்டுக்குள் கிடந்து.. நான் வளர்க்கும் பிராணிகளை நடு நடுங்க வைக்கிறது. நாளைக்கு என் வீட்டில் நான் இல்லை என்றாலும் நான் பட்ட கடன் சொல்லி நாய் மட்டும் …
-
- 8 replies
- 1.2k views
-
-
மறைந்த ஈழத்துப் பெருங்கவிஞர் மகாகவியவர்கள் நானறிந்தவரை குறும்பாக்களை தமிழில் முதன்முதல் அறிமுகம் செய்தவர். அவரைப்பின்பற்றிப் பலரும் பின்னர் குறும்பாக்களையெழுதத் தொடங்கினார்கள். குறும்பா என்பது குறுகியா பாவாகவும் அதேவேளை குறும்பு கலந்ததாகவும் இருந்தாலேயே குறும்பா இலக்கணத்துக்கு உட்படும். எமது ஈழக்கவிஞர் மகாகவியைப் பின்பற்றி நானெழுதிய தற்போதைய யுகே காலநிலைக்கேற்ற குறும்பாவை இங்கு தருகிறேன். நண்பர்களும் இதை முயற்சித்துப்பார்க்கலாம். நாற்படையுங் கொண்டுயர்ந்த நாடு -யுகே நாணா நவமாதர் வீடு காற்தொடையின் கவடுவரை காரிகையர் கவுணுயரும் காலமிங்கு சம்மர் கடுஞ் சூடு
-
- 12 replies
- 1.7k views
- 1 follower
-
-
கொரோனாவுக்கு முன் 🤍🤍🤍 வீடுவரை உறவு.... வீதி வரை மனைவி... காடு வரை பிள்ளை.... கடைசி வரை யாரோ...? ( கவியரசு கண்ணதாசன் ஐயா) கொரோனாவுக்கு பின் 🤍🤍🤍 வீடுவரை உறவு.... வீடு வரை மனைவி..... வீடு வரை பிள்ளை.... கடைசி வரை யாரோ...? ( சிரிப்போம் சிந்திப்போம்) இலக்கியக் கவிப்பேரரசு இனியவன் இன்று ஒருவர் இறந்தால் அது கொரோனா எனப்படுகிறது யாருமே அவரை பார்க்க முடியாது எல்லோரும் வீட்டுக்குள்ளே அழுகை அரசு உடல் கூட கொடுக்காது
-
- 2 replies
- 713 views
-
-
-
- 2 replies
- 987 views
-
-
எடுக்கவோ.....கோர்க்கவோ. அரவக்கொடியோனின் அரண்மனைதனில் பரவித் தொடுத்த முத்தாடை அணிந்து இரவியின் பெயருடை பானுமதியாள் புரவித் தேருடை மன்னனுடன் கரத்தில் தாயக் கட்டைகளோடு உருட்டி ஆடுகின்றாள் சதுரங்கம். அங்கதேசத்து மன்னனாம் கர்ணன் தங்கக் கவச குண்டலத்துடன் பிறந்தோன் இங்கு மாமன்னன் துரியனைக் காணவந்தவன் தங்கையனைய மங்கை வேண்ட --- சதுர் அங்கம் ஆட மஞ்சத்தில் எழுந்தருளி சிங்கம் போலவும் வீற்றிருந்தனன். ஆட்ட சுவாரசியத்தில் மலர்ந்திருந்தவள் இட்ட இலக்கங்கள் இல்லாமலாகி வாட்டமுடன் கட்டைகளை க…
-
- 11 replies
- 4k views
-