Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைக் களம்

கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. "யாரடா மனிதன்? எங்கே இருக்கிறான்??" "உலக வாழ்க்கையின் மகத்தான மேடையில் வரலாறு படைக்கும் இதயங்களின் மத்தியில் மானிடப் பிறவி எடுத்தவன் மனிதனா? மனிதம் கொண்ட ஒருவன் மனிதனா??" "வெறும் சதையும் எலும்பும் மனிதனல்லா வெறும் பலமும் செல்வமும் மனிதனல்லா வெறும் புகழும் பதவியும் மனிதனல்லா யாரடா மனிதன்? எங்கே இருக்கிறான்??" "கண்கள் விழித்து கருணை காட்டும் கொடுமையைக் கண்டு மனது குமுறும் அறிவுடன் அறிந்து உதவும் கரமும் எங்கே இருக்குதோ? அவனே மனிதன்!!" "துயரம் கண்டு அக்கறை காட்டி ஆறுதல் கொடுக்கும் புன்னகை உதிர்ந்து தனக்கென வாழாது உலகத்துக்கும் வாழும் அவனே மனிதன்! அவளே மனிதன்[மனித…

  2. "கசக்கும் உண்மைகள்" "பொய்களை பூசி பெருமை பேசுகிறான் மற்றவனை தாழ்த்த புராணம் படைக்கிறான்! மகாவம்சம் ராமாயணம் இனிக்கும் பொய்கள் உண்மையான வரலாறு கசக்கும் உண்மைகள்!" "கல்வெட்டு தொல்பொருள் சான்றுகள் வர கன்னத்தில் கைவைத்து தடைகள் செய்கிறான்! மாயைத்திரைகள் கிழிந்து உண்மை கட்டிட அரச படையுடன் அட்டகாசம் புரிகிறான்!" "தைரியம் கொண்டு கசப்பை ஒப்புக்கொள் ஆழங்களில் உள்ள ஞானம் வெளிவரும்! வளர்ச்சிக்கான வாய்ப்பு, கட்டாயம் உயரும் உண்மைகள் விழித்து விடுதலை ஓங்கும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  3. "மூன்று கவிதைகள் / 09" முன்னழகும் பின்னழகும் கண்ணிலே நிற்குதே முடியழகும் இடையழகும் மனதைக் கலக்குதே உன்னழகு ஈடில்லா தனியழகு அல்லவா மன்னவனின் சன்னிதியில் என்னையே மறந்தேனே! சிங்கார புன்முறுவல் சிரிப்பை உதிர்த்தவளே சிவப்புநிற பட்டாடை தக்கபடி உடுத்தவளே பூமாலை சூடிய அலங்காரக் காந்தையே கண்திறந்து பார்க்காயோ அன்பு காட்டாயோ !! ........................................... தீ குச்சிகளை தேடிக்கொண்டிருக்காதீர்கள் அவளிடம் கேளுங்கள் சிரிப்பில் இருந்து நெருப்பை உண்டாக்குவது எப்படி என்று? என் கல்லறைக்கு வரும் போதாவது அவளை பார்த்து யாராவது கேளுங்கள் அந்த புன்னகைக்கு என்ன அர்த்தம் என்று? ......................................................... மஞ்சள் வெயில் பூத்த வானமு…

  4. என்னவளே! *********** காதலுக்கு கண்ணில்லை என்பார்கள் பலர் நானோ உன் கண்ணுக்குள் தானே முதலில் விழுந்தேன். இதயத்தை பூட்டிவைத்து திரிந்தாய்-ஏனோ என்னிடத்தில் உன் சாவியை தந்து மகிழ்ந்தாய். என்னை காணவில்லை என்று நானே தேடினேன் பின்புதான் அறிந்தேன் உன்னுக்குள் நான் இருந்ததை. திருட்டு எனக்கு பிடிக்காது என்று தெரிந்தும்-கள்ளி எப்படி நீ என்னை திருடி வைத்தாய். காதல் தோல்வியில் தாடி வளத்தார்கள் அன்று தாடி வளர்க்கச்சொல்லியே காதலித்தாயே இன்று. உன் கன்னக் குழிக்குள் விழுந்த பின் என்னால் எழ முடியவில்லையே-நீ என்ன மாயம் ச…

  5. அனந்தியே.... அன்புக்குரிய... அரசியே.... அகிலத்தையும்.... அண்டதையும்.... அதிரவைக்கும்.... அழகியே..... அன்னமே....... அன்பும்... அடக்கமும்.... அங்கங்களாய் .... அமைந்த....... அதீத.... அற்புதமான.... அபூர்வ..... அமுதே..... அன்னையின்..... அனுமதியோடும்... அயலவரின்.... அரவணைப்போடும்... அம்மனின்.... அலங்காரமாய்.... அவையில்.... அமர்ந்திருப்பவளே.... அன்னையானாய்.. அப்பனானேன்.... அருமையான.... அரவிந்தனை.... அவதரித்தாய்... அவனியில்.... அரண்மனை..... அரசரானோம்..... அன்பானவளின் அங்கம்.... அவதியாகி.... அசையாது.... அடங்கிட.... அல்லல்பட்டு... அமைதியானது.... அடிமடியில்.... அவ்வுயிர்..... …

  6. "குடையின் கீழ் தாயும் மகனும்" [படக் கவிதை] "குடையின் கீழ் தாயும் மகனும் எடுபிடி வேலையில் சிறு ஓய்வு! குட்டிச் சிறுவன் பசி தீர்க்கிறான் நனைந்த ஆடை வலியைக் காட்டுது வருடித் தாய் கருணை பொழிகிறாள்!" "செங்கல்லும் சுத்தியலும் அருகில் கிடக்குது அங்கங்கள் படும் பாட்டைக் குறிக்குது! தங்கமான மனசு வேதனைப் படுகுது குங்குமப் பொட்டு அழிந்து போயிட்டு மங்கலான வாழ்வை ஒளியேற்றத் துடிக்குது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  7. "தர்மம் வகுத்த வழியில் நின்று" "தர்மம் வகுத்த வழியில் நின்று கர்வம் மறந்து ஆசை துறந்து ஆர்வம் கொண்டு முனைப்புக் காட்டி அர்த்தம் உள்ள உதவி செய்யின் ஊர் வாழ்த்தும் உலகம் போற்றும்!" "தாய் தந்தை இருவரையும் மதித்து வாய்மை என்னும் பண்பு கொண்டு ஆய்ந்து அறிந்து நிதானம் தவறாமல் மெய்யாக மனிதம் போற்றி வாழ்ந்தால் செய்த நன்மை தலை காக்கும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  8. விதியின் சிக்கலான கோடுகளுக்கிடையே இணைந்த சுதந்திரத்துடன், மென்மையாக்கப்பட்ட சொற்கள் இன்னும் உச்சரிக்கப்படுகின்றன. முந்தைய வாழ்க்கை மற்றும் சந்தோசமான நாட்கள் இன்னும் அழைக்கின்றன. மாத்திரைக் குடுவைகள் மட்டுமே நிவாரணமளிக்குமாதலால், மரியாதைக்குரிய தலைகள் குனிந்து, முதுகுத் தண்டுகள் வளையத் தொடங்கின. ஒருபோதும் திருப்பிச் செலுத்தப்படாத சபிக்கப்பட்ட வாழ்வு கிடைத்தபின், எம் பரிபூரண ஆத்மாவின் சபதங்களின் குரல் அடங்கிப் போனது. ஆழ்மனதில் நேசித்த பூமி நினைவுகளுடன் கலந்தது. ஒரு சிறகு காற்றில் மிதந்து வருவதைப் போல, …

    • 0 replies
    • 537 views
  9. "மேல் தாவணி காற்றில் பறக்க புல் தரைகள் வெட்கிக் குனிய கால்கள் சொருகியதை கேட்டுப் பாரு நெல்லுமணி சொல்லுமடி எங்க காதல்!" "நெற்றி உடன் நெற்றி மோதி நெஞ்சு இரண்டும் கலந்து துடித்து நெருப்பாய் எரிந்ததை கேட்டுப் பாரு நெல்லுமணி சொல்லுமடி எங்க காதல்!" …

  10. Started by kandiah Thillaivinayagalingam,

    "விதை" "விதை விதைத்தவன் வினை அறுப்பான் விளைச்சல் தந்தால் பொருள் ஈட்டுவான் வித்து மடிந்தால் விம்மி அழுவான்!" "வாழ்வும் சாவும் மனித வயலில் தாழ்வும் உயர்வும் வளரும் பக்குவத்தில் விதைப்பு சரியாகட்டும் இதயம் செழிக்கட்டும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  11. "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது. உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன். "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!" "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானி…

  12. தமிழீழ மூச்சே எதுக்கம்மா போனாய் முள்ளி வாய்க்கால். ஊரின் பெயரே உன்னை எச்சரிக்கவில்லையோ... இல்லை.. முள்முடி தரித்த தூதரின் நிலை போல் முள்ளி மேல் நடக்கப் பிரியப்பட்டனையோ..?! சத்திய சோதனைக்கு சுய பரிசோதனைக்கு அதுவா வேளை..??! நாலாம் இராணுவ வல்லரசையே வன்னிக் காட்டுக்குள் கட்டிப் போட்டு கால் பறித்து கதறி ஓட வைத்த அனுபவம் இருந்தும்.. ஆழ ஊடுருவல் அங்கொன்றும் இங்கொன்றும் இருந்ததுக்காய் எதுக்கம்மா காலி செய்தாய் காட்டை..! இன்று வன்னிக்காடுகள் கண்ணீர் விடுகின்றன காவல் தெய்வங்கள் இல்லா நிலையில் தம் கால் தறிபடும் தறிகெட்ட தனம் தலைவிரித்தாடுவதால்.…

  13. இழப்பும் நினைப்பும்… நீலத் திரைக் கடலில் நீராடி வந்த பகலவன்; மஞ்சள் பூசி எழுந்து மனதுக்கு மகிழ்ச்சி தந்தான். கோழிகள் குருவிகள் இரை தேட கொண்டைச் சேவல்கள் பின்தொடர ஆடுகளை மாடுகளை வெளியேற்றி அப்பா சென்றார் கோடிப்; பக்கம் இவற்றைப் பார்த்து இரசித்தபடி எனது பணியைத் தொடர்வதற்கு வேப்ப மரத்தில் குச்சி பிடுங்கி – அதன் வேரில் இருந்து பல் தேச்சேன். செம்பில் கொஞ்சம் நீரெடுத்து தெளித்து மெதுவா முகம் கழுவி காய்ந்த சேலை யொன்றினைக் கையிலெடுத்து முகம் துடைத்தேன் அடுப்பில் காச்சிய ஆட்டுப் பாலை ஆவி பறக்க ஆற்றி எடுத்து மூக்குப் பேணியில் முழுதாய் நிரப்பி முற்றத்தில் தந்தார் அப்பாச்சி. முண்டி முண்டிக் …

    • 0 replies
    • 1.3k views
  14. ஆதியும் அந்தமும் கவிதை [துன்பம் / பிரிவில்லையே] "துன்பம் ஒன்றும் புதிது எனக்கல்ல இன்பம் என்றும் நிலைத்ததும் அல்ல! விண்ணில் பறந்தது நிலத்துக்கு விழும் மண்ணில் முளைத்தது மேகம் நோக்கும்!" "காதல் கொண்டேன் அவளை நம்பி மோதல் தந்து பிரிந்து போனாள் சாதல் தேடி குதித்தும் பார்த்தேன் நோதல் தந்தும் உயிர் பிரிவில்லையே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  15. தையில் பிறப்பாய் மாசியில் குளிர்வாய் பங்குனியில் உலர்வாய் சித்திரையில் புலர்வாய் வைகாசியில் மிளிர்வாய் ஆனியில் அடிப்பாய் ஆடியில் கூழல்வாய் ஆவணியில் மங்குவாய் புரட்டாதியில் நனைவாய் ஐப்பசியில் பொழிவாய் கார்த்திகையில் சுடர்வாய் மார்கழியில் வீழ்வாய்..! ஆண்டே இது தான் ஆண்டவர் வரலாறு.

  16. பேரன் 'இசை'யின் இரண்டாம் பிறந்த நாள்! / It's Grandson's ISAI's second birthday! [13 / 03 / 2025] "பேரனின் இரண்டாம் பிறந்த நாள் பேரொலி முழங்க 'இசை'யுடன் கொண்டாடுவோம்! பேசாமல் ஆடாமல் இருக்க முடியாது பேரறிவுடன் 'இசை' என்றும் வாழட்டும்!" "காலம் ஓடியதை நம்பவே முடியல காற்றாய் வேகமாய் அது பறந்திட்டு? காளன் மாதிரி குட்டையாய் இருந்தாய் கார்த்திகை மீனாய் உயர்ந்து ஒளிர்கிறாய்!" "உடம்பு பிரண்டு எழுந்து உட்கார்ந்து உறுதி கொண்டு விரைந்து தவழ்ந்து உயர்ந்து நின்று பாதத்தால் நடந்து உற்சாகம் கொண்டு வென்று விட்டாய்!" "முழுஆண்டு இரண்டு முடிந்து விட்டது மும்முரமாக கதைகத் தொடங்கி விட்டாய் ! முக்கனி சுவை முழுதாய் கொண்ட முந்திரிகை கேக்கை சுற்றி கூடுவோம்!" "பிறந்த நாள…

  17. கடைசிப் பக்கத்தில் முடியாது தொடரும் கதைப்புத்தகம் வாழ்க்கை... மற்றவர்கள் சிபாரிசில் கிடைக்கும் உயர்வான வேலையை விட உன் திறமைக்குக் கிடைக்கும் கூலிவேலை மேன்மையானது... அனுசரித்து வாழ்வதே வாழ்க்கை எனினும் எப்போதும் அனுசரித்து வாழ்வது வாழ்க்கையே இல்லை.... தோல்விக்குத் தோள் கொடுங்கள் வெற்றிக்கு அதிகாலை விழித்திருங்கள் விமர்சனங்கள் எந்நாளும் வரவேற்றிடுங்கள் புகழுரை‌யை கேட்காமல் கடந்திடுங்கள் இதுதான் வாழ்க்கையென வாழ்ந்திடுங்கள்... சரவிபி ரோசிசந்திரா

  18. நீக்கமற்ற நினைவுகளில்......! ____________________________ பதின்மூன்று வயதில் காதலித்தாய். பதின்மக்காதல் உன் வாழ்வை பலிகொண்ட துயரை நானறியேன். ஆனால் உனக்காக அழுதிருக்கிறேன். நீயே ஒரு குழந்தை - உன் வயிற்றில் குழந்தை வந்த போது ஒளித்துத் திரிந்தாய். பிறகு நீ பெரிய மனிசிபோல என்னைத்தாண்டிப் போன தருணங்களில் உன்னோடான உறவு துண்டிக்கப்பட்டது. உன் காதல் உன்னைவிட்டு வேறோரு காதலில் உன்னை வஞ்சித்த போது நீ தனித்துப் போனாய். காலம் எழுதிய கதையில் நீ நான் மறந்தே போனது. அவரவர் வாழ்வு அவசரம் யாரும் யாரையும் தேடவில்லை. உனது ஞாபகமும் அரிதாய் நீ நினைவுகளிலிருந்து மெல்லத் தேய்ந்து மறைந்தே போனாய்.…

    • 0 replies
    • 1.7k views
  19. "காசேதான் கடவுளடா" & "தர்மம் தலை காக்கும்" "காசேதான் கடவுளடா" "காசேதான் கடவுளடா ஆலயமும் வணிகமடா காதல் வேண்டுமா பரிசு கொடடா காதலர் தினம் வணிக சூழ்ச்சியடா! காலம் தாழ்த்தாமல் கையூட்டு கொடுத்தால் காரியம் நிறைவேறும் வெற்றியும் வருமடா!" "ஆண்டவனை வணங்க அர்ச்சனை வேறு ஆரம்ப கல்விக்கும் நன்கொடை வேண்டுமடா! ஆராத்தி தட்டிலும் ஏதாவது போடணும் ஆலவட்டம் ஏந்தினால் நன்மை கிடைக்குமடா ஆராய்ந்து பார்த்தல் அழுவதா சிரிப்பதா!" "தர்மம் தலை காக்கும்" "தர்மம் வகுத்த வழியில் நின்று கர்வம் மறந்து ஆசை துறந்து ஆர்வம் கொண்டு முனைப்புக் காட்டி அர்த்தம் உள்ள உதவி செய்யின் ஊர் வாழ்த்தும் உலகம் போற்றும்!" "தாய் தந்தை இரு…

  20. Started by Kaviarasu,

    பிரிவுகள் வலியை கொடுத்தாலும் , அந்த பிரிவு மட்டுமே நம்மை தள்ளியும் வைக்கிறது நிரந்தர பிரிவிலிருந்து. தவிப்புகளை தாங்கி துடிக்கும் இதயங்களுக்கு மட்டுமே தெரியும் பிரிவுகளை தவிர்க்க பிரிந்து துடிப்பதில் இருக்கும் வலி ( பேச துடித்தும் பேசாமலே விலகிச் செல்கிறது இங்கு பல உறவுகள் நிரந்தர பிரிவை தவிர்க்க )

    • 0 replies
    • 1.2k views
  21. "மரியாதை" [அந்தாதிக் கவிதை] & ["சூடினாள் மல்லிகை" "மரியாதை கொடுத்து மரியாதை வாங்கு வாங்கும் புகழ் நிலைத்து நிற்கட்டும் நிற்கும் நிலையில் உறுதி மலரட்டும் மலரும் நட்பில் துலங்கட்டும் மரியாதை" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................................. "சூடினாள் மல்லிகை" "சூடினாள் மல்லிகை அழகு கொண்டையில் ஆடினாள் நிருத்தம் முத்திரைகள் காட்டினாள் கூடினாள் இதயத்தில் கவர்ச்சி வீசினாள் தேடினாள் நட்பை சேர்ந்து அனுபவிக்க!" "நாடினாள் அன்பை தனிமை போக்க பாடினாள் கவிதை இனிமை கொடுக்க ஓடினாள் கரையில் ஆனந்தம் பொங்க மூடினாள் நெஞ்சை ஒருவனை நிறுத்தி!" …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.