Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழகத்தில் 7 நாட்களில் ஒரு இலட்சத்து 25ஆயிரம் பேர் கைது! கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு அமுலில் உள்ளது. இந்நிலையில், தற்போது வரை தமிழகம் முழுவதும் விதிமீறல்களில் ஈடுபட்ட ஒரு இலட்சத்து 25 ஆயிரம் பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு 7 நாட்கள் முடிந்துள்ள நிலையில், அவசர தேவைக்களுக்காக அல்லாமல் அநாவசியாமாக வெளியே சுற்றித் திரிபவர்கள் மீது தமிழக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் 7 நாட்களில், ஒரு இலட்சத்து 8 ஆயிரத்து 922 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், 85 ஆயிரத்து 850 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் வழக்குப் பதிவுச…

  2. தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா.. 50 பேர் டெல்லி வழிபாட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்! தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 57 பேரில் 50 பேர் டெல்லியில் நடந்த வழிபாட்டு கூட்டத்தில் கலந்து கொண்டது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் 124 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுள் நேற்று ஒரே நாளில் மட்டும் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, சென்னை, நாமக்கல் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறுகையில் 1,131 பேர் டெல்லியில் நிஜாமுதீனில் நடந்…

    • 1 reply
    • 1k views
  3. கொரோனாவால் ஊரடங்கு, தொழில்கள், கல்வி நிறுவனங்கள் மூடல் காரணமாக, தமிழகம் உள்ளிட்ட வெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்களிடம், மார்ச் மாதத்திற்கான ஒரு மாத வாடகையை வசூலிக்க வேண்டாம் என தமிழக அரசு, வீட்டு உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. வீட்டு வாடகை கேட்டு யாரும் தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனாவால் தமிழகத்தில் 74பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நாடு முழுவதும் ஊரடங்கு, தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. வருமானம் இன்றி தவிக்கும் தொழிலாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு , அரசு உத்தரவிட்டடுள்ள விபரம்: தமிழகம் உள்ளிட்ட வெளிமாநில தொழிலாளர்களிடம் மார்ச் மாதத்திற்கான வாடகையை வசூல் செய்ய வேண்டாம் என வீட்டு உரிமையாளர்களுக்கு இன்று(மார்ச்-31) உத்தரவிட்டுள்ளது. இதனை …

  4. ராஸ்மாக் கடை சுவரில் ஓட்டை போட்டு திருடிய கும்பல்: போலீசார் அதிரடி நடவடிக்கை.! தற்போது ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமலில் இருப்பதை அடுத்து அனைத்து மதுபான கடைகளும் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. தமிழகத்திலும் அனைத்து ராஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு உள்ளதால் குடிமகன்கள் பெரும் திண்டாட்டத்தில் உள்ளனர் ஏற்கனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் ராஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து லட்சக்கணக்கான மதிப்புள்ள மது பாட்டில்களை ஒரு மர்ம கும்பல் திருடி சென்று விட்டது என்பதும் இதுகுறித்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் திருத்துறைப்பூண்டியில் உள்ள ராஸ்மாக் கடை ஒன்றில் சுவரில் ஓட்டை போட்டு ரூபாய் 45 ஆயிரம் …

    • 2 replies
    • 691 views
  5. பாவனையற்ற ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்றும் தமிழகம் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க பாவனைக்கு உதவாத ரயில் பெட்டிகளை பயன்படுத்த தமிழக அரசு தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் முதல்கட்டமாக 674 பழைய ரயில் பெட்டிகள்அடுத்த ஒரு வாரத்தில் தனி வார்டுகளாக மாற்றப்படவுள்ளது. இதன்மூலம் குறைந்த செலவில் சுமார் 1,300 படுக்கைகள் அமைக்க முடியும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பழமையான ரயில் பெட்டிகளை தேர்வுசெய்து, கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான வார்டுகளாக மாற்றும் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென ரயில்வே வாரியம் அனைத்து மண்டல முகாமை…

  6. சென்னை : டில்லியில் நடந்த இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்ற, தமிழகத்தைச் சேர்ந்த, 1, 500 பேரில், 16 பேருக்கு, 'கொரோனா' வைரஸ் தாக்கியிருப்பது உறுதியாகி உள்ளது. அதனால், மாநாட்டில் பங்கேற்க, டில்லி சென்று வந்தவர்களும், அவர்களின் குடும்பத்தினரும், அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பதிவு செய்து, தங்களை சுய தனிமைப்படுத்தும்படி, அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் திடீரென கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கு, டில்லியில் நடந்த இஸ்லாமிய மாநாட்டுக்கு சென்று வந்தவர்களும் காரணமாக இருப்பது தெரிய வந்துள்ளது. 'தப்லீக் ஜமாத்' என்ற, இஸ்லா…

  7. நாடு முழுவதும் ஊரடங்கு அமலுக்கு வந்து 7 நாட்களை கடப்பதற்கு முன்னதாகவே, சென்னையில் அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்து கொள்ளை லாபத்துக்கு விற்றுவருவதாக மளிகை மொத்த மற்றும் சில்லரைவியாபரிகள் மீது மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். நெருக்கடியான காலக்கட்டத்திலும் மக்கள் கையில் இருக்கும் கொஞ்ச பணத்தையும் பறிக்கும் வியாபார கொள்ளை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் அத்தியாவசிய பொருட்களான மளிகை மற்று காய்கறி கடைகளுக்கு அரசு விலக்கு அளித்திருந்த நிலையில், ஞாயிற்று கிழமை முதல் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே விற்பனை செய்ய அரசு உத்தரவிட்டுள்ள…

    • 0 replies
    • 843 views
  8. சென்னை: கொரோனா தொற்று பரவல் உள்ளதா என வீடுதோறும் சென்று ஆய்வு செய்யப்படும் என சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பீலா ராஜேஷ் கூறியதாவது:கொரோனாவால் பாதித்தவர்களின் அருகில் அதாவது 5 லிருந்து 7 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ள 50 வீடுகளில் பரிசோதனை செய்ய இருக்கிறோம். இதற்காக, ஒரு டாக்டர் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் ஒவ்வொரு வீடாக சென்று, வீட்டில் யாருக்காவது காய்ச்சல் இருமல் பிரச்சனையுடன் யாரும் இருக்கிறார்களா என்றும் அந்த வீட்டில் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இருந்தால் அவர்களுக்கு சர்ஜரி, டயாலிசஸ் செய்பவர்கள் இருக்கிறார்களா என்பது கண்டறியப்பட்டு உடனடியாக மாஸ்க் வழங்குவோம். கொரோனா தொற்று ஏதும் இருப்பது அறியப்பட்டால் அ…

  9. தமிழகத்தை மீட்டெடுக்க மத்திய அரசிடம் 9 ஆயிரம் கோடி கோரும் முதல்வர் கொரோனா தடுப்புக்காகவும், பொருளாதாரத்தைப் புதுப்பிக்கவும் சிறப்பு நிதியுதவித் திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதலவர் எடப்பாடி பழநிசாமி கோரியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்தியப் பொது நிதிமுறையின் கீழ் மத்திய அரசு மட்டுமே ரிசேர்வ் வங்கியிடமிருந்து தங்கு தடையின்றி கடன்பெற முடியும் எனவும் மாநில அரசுகள் வேறு பல கடன் ஆதாரங்களைச் சார்ந்திருந்தாலும் தங்கு தடையின்றி நிதி திரட்டுவது சாத்தியம் அல்ல என்றும் முதல்வர் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். ஊரடங்கின் மூலம் நாடு முடக்கப்பட…

  10. எங்க ஊரைச் சேர்ந்தவர்கள் வெளியே சென்று வந்தாலும் அல்லது வெளியூரிலிருந்து எங்க ஊருக்கு வருபவர்களாக இருந்தாலும் அந்தத் தண்ணீரில் கைகளைச் சுத்தமாகக் கழுவிய பிறகு மாஸ்க் அணிந்து கொண்டுதான் உள்ளே செல்ல அனுமதித்து வருகிறோம். கொரோனா பரவாமல் தடுப்பதற்காக தஞ்சாவூர் அருகே உள்ள கிராமம் ஒன்றில் உள்ள நுழைவாயில்களில் செக் போஸ்ட் அமைத்து அதில் இரண்டு பேர் வீதம் கண்காணிப்பில் ஈடுபடுவதுடன், யார் ஊருக்குள் வந்தாலும் மஞ்சள், வேப்பிலை, டெட்டால் கலந்து வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் கைகளைச் சுத்தமாகக் கழுவிய பிறகே ஊருக்குள் செல்ல அனுமதிக்கின்றனர். தஞ்சாவூர் அருகே உள்ளது காசவளநாடு புதூர் என்ற கிராமம். இங்கு சுமார் 600-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. விவசாயிகள் நிறைந்த இந்தக் கிரா…

    • 1 reply
    • 689 views
  11. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில், வெளிநாடுகளில் இருந்து வந்தோர் வீடுகளை கண்டறிந்து, அந்த பகுதி பாதுகாப்பு மண்டலமாக மாற்றப்படும் என சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் கூறியதாவது: தற்போது நம் மாநிலத்தில் வெளிநாடு சென்று வந்த 43,537 வெளிநாட்டு நபர்களை கண்டறிந்துள்ளோம். வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்த பயணிகளின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. ஆகையால் தனிமைப்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். பாதிக்கப்பட்டுள்ள 10 மாவட்டங்களில் ஆட்சியர்கள், சுகாதார துறையினர் காணொலி மூலமாக சந்திப்பு நடைபெறவுள்ளது. இச்சந்திப்பில் வெளிநாடு சென்று வ…

    • 0 replies
    • 354 views
  12. நடிகர் சேதுராமன் மரணம் - "நீ திரும்பி வர மாட்டாயா..." - திரைப்பட நடிகர் சேது மாரடைப்பில் மரணம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தமிழ்த் திரைப்பட நடிகரும், மருத்துவருமான சேதுராமன் நேற்று (வியாழக்கிழமை) இரவு மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இவருக்கு வயது 36. இவர் 2013ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா…

  13. தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 23 ஆக உயர்வு தமிழகத்தில் கொரோனா வைரஸினால், பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவில் இருந்து சேலத்துக்கு வந்த இஸ்லாமிய மதபோதகர்கள் 11 பேர், அவர்களுக்கு வழிகாட்டியாக வந்த சென்னையைச் சேர்ந்த ஒருவர், சேலத்தைச் சேர்ந்த 4 பேர் என மொத்தம் 16 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. இதில் இந்தோனேசியர்கள் 4 பேர், சென்னையைச் சேர்ந்த வழிகாட்டி ஒருவர் என 5 பேருக்குக் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் கொரோ…

  14. கொரோனா வைரஸ்: தமிழகத்தில் முதல் நபர் உயிரிழப்பு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் முதல் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மதுரையை சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்கவரே குறித்த வைரஸ் பாதிப்பு காரணமாக நேற்று (செவ்வாய்க்கிழமை) உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் (கொவைட்-19) நோய் தொற்று பாதிப்பு காரணமாக ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார். இந்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். http://athavannews.com/கொரோனா-வைரஸ்-தமிழகத்தில-4/

    • 1 reply
    • 617 views
  15. கொரோனா தொற்றினை தவிர்ப்பதற்காக இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், அனைத்து இந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் மாமன்றம் உட்பட அனைத்து அமைப்புகளும் திரைப்படப் பணிகளைக் கடந்த 19ஆம் தேதி முதல் நிறுத்தி வைப்பது என முடிவெடுத்துள்ளதாகவும், மேலும் திரைப்படம், தொலைக்காட்சி, விளம்பரப் படங்கள் போன்ற அனைத்துப் பிரிவு திரைப்படப் பணிகளையும் நிறுத்து வைப்பது எனவும் முடிவு செய்துள்ளதாகவும் ஃபெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்திருந்தார். படத்தின் காப்புரிமை Getty Images வேண்டுகோள் இந்த அறிவிப்பு குறித்து தமிழ்நாடு திரைப்பட மற்றும் டிவி வெளிப்புற லைட்மேன் சங்கத்தின் தலைவர் செந்தில் குமாரிடம் பிபிசி தமிழுக்காக அளித்த பேட்டியில், 'பத்து நாட்கள் ஷூட்டிங் நடைபெறாது என்றாலும் ஓரளவ…

  16. தமிழகம் முழுவதும் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்த உள்ள காரணத்தால் காய்கறிகளை வாங்க கிருஷ்ணகிரி சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நாடு முழுவதும் கரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. அதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் இன்று (மார்ச் 24) மாலை 6 மணி முதல் ஏப்ரல் ஒன்றாம் தேதி வரை 144 தடை உத்தரவை அமல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதேசமயம், மக்களின் அத்தியாவசியத் தேவைகளான காய்கறிகள், மளிகைப் பொருட்கள், மருந்துகள் உள்ளிட்டவை கிடைக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அரசின் இந்த 144 தடை உத்தரவை அறிந்த மக்கள் உடனடியாக ஒரு வாரத்திற்குத் தே…

  17. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, தமிழகத்தில் 144 தடை உத்தரவு மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. மாவட்ட எல்லைகள் சீல் வைக்கப்பட்டு, பேருந்துகள், ஆட்டோக்கள், கால் டாக்சி வாகனங்கள் அனைத்தும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு உள்ளன. பிரதமர் மோடி அறிவித்த " மக்கள் ஊரடங்கு " மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவுதை தடுக்க, தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு, செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. மாவட்ட எல்லைகளை சீல் வைத்த அதிகாரிகள், அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் இயக்கங்களை, ஆங்காங்கே முடக்கினர். ஆட்டோக்கள், கால் டாக்சிகள் என எந்த வொரு வாகனமும் ஓடவில்லை. மாநிலங்களுக்கு இடையேயும்,…

  18. கிராமப்புற மக்களிடம் கொரோனா விழிப்புணர்வை வேகமாக கொண்டு சேர்க்கும் விதமாக எம்.ஜி.ஆரின் பாடல் ஒன்று பயன்பட்டு வருகின்றது. அதே நேரத்தில் நோயின் அச்சமின்றி பேருந்து பயணத்திற்கு முண்டியடிக்கும் நபர்கள் பின்பற்ற வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு... தமிழகத்தில் கொரோனா வைரஸ் கிருமி பரவுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், இத்தாலியின் நிலைமையை பார்த்தும் அஞ்சாத நம்மவர்கள் போதிய விழிப்புணர்வு இல்லாததால் மிகவும் மெத்தனமாக நடந்து கொள்கின்றனர் என்பதற்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்டமாக முண்டியடித்த பயணிகளின் இந்த காட்சிகளே சாட்சி..! பேருந்து பயணத்தில் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த பேருந்துகளின் எண்ணிக…

    • 0 replies
    • 899 views
  19. கொரோனா யுத்தம்: தலைமையின்றி தடுமாறும் தமிழக அரசு! மின்னம்பலம் ராஜன் குறை உலகையே அச்சுறுத்தி நிலைகுலைய வைத்திருக்கும் கொரோனா வைரஸ் தாக்குதலின்போது துரதிர்ஷ்டவசமாக தமிழகம் தலைமைப்பண்பற்ற பலவீனமான மனிதரால் ஆளப்படுவது பெரும் வருத்தத்திற்குரியது, விபரீதமானது. கடந்த சில தினங்களாக தமிழக அரசின் அறிக்கைகளும், நடவடிக்கைகளும் எந்த வித தெளிவும், தொலைநோக்கும் தலைமைப்பண்புமற்ற தடுமாற்றங்களையே காட்டுகின்றது. பிரச்சினைகளை சற்றே விரிவாகக் காண்போம். அதற்குமுன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்த சில அடிப்படைத் தகவல்களை நாம் கவனிக்க வேண்டும். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு தமிழக அரசியல் எந்த வித தலைமைப் பண்புமின்றி, அதற்கான ஒரு ஆற்றலோ அல்லது அருகதையோ இர…

  20. தமிழகம் முழுவதும் 144 தடை: மாவட்ட எல்லைகள் மூடப்படுகிறது! மின்னம்பலம் தமிழகம் முழுவதும் நாளை மாலை 6 மணியிலிருந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இதுவரை 9 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் சென்னை, ஈரோடு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை மற்ற மாவட்டங்களில் இருந்து தனிமைப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியது. கொரோனா மேலும் பரவாமல் தடுக்க தமிழக அரசு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு வருகிறது. இந்த நிலையில் சட்டமன்றத்தில் இன்று (மார்ச் 23) கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “மத்திய …

  21. கொரோனா – இந்தியாவில் 80 மாவட்டங்களை முடக்க அரசு உத்தரவிட்டுள்ளது… March 23, 2020 கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக, நாடு முழுவதும் 80 மாவட்டங்களை முடக்க வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை முடக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க மத்திய அரசின் அமைச்சரவைச் செயலர், பிரதமரின் முதன்மைச் செயலர் ஆகியோர் மாநிலங்களின் தலைமைச் செயலர்களுடன் காணொலி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினர். பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த சுய ஊரடங்கு அழைப்புக்கு மக்கள் தாங்களாக முன்வந்து பெருமளவில் ஆதரவு அளித்ததாக, அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களும் அப…

  22. கோவை: தினமும் ரூ. 100 மட்டுமே சம்பளம் வழங்கும் நிலையில், சம்பளத்தை உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூய்மைக் காவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2014 -15 ஆம் நிதியாண்டு திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்கீழ் ஊராட்சிகளில் வீடுதோறும் கழிவுகளைச் சேகரித்து அதனை மக்கும், மக்காத குப்பைகளாகத் தரம் பிரித்து, அதிலிருந்து இயற்கை உரம் தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வீடுகளில் இருந்து குப்பைகளை சேகரிக்க தூய்மைக் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 150 குடியிருப்புகளுக்கு ஒரு தூய்மைக் காவலர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, கோவை மாவட்டத்தில் 228 ஊராட்சிகளிலும் சேர்த்து 1,608 தூய்மைக் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.