தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10260 topics in this forum
-
இன்று காண்போம் நரி பரியாகும் விந்தை...! - கமல் ஹாஸன் தமிழக அரசியல் நிலவரம் குறித்து தொடர்ந்து ட்விட்டரில் எழுதி வரும் கமல் ஹாஸன், இன்றும் ஒரு கமெண்டைப் பதிவு செய்துள்ளார். விஸ்வரூபம் ரிலீசுக்குப் பிறகு அதிமுக ஆட்சியை நேரடியாகவும், மறைமுகமாகவும் அவ்வப்போது விமர்சித்து வருகிறார் கமல் ஹாஸன். தமிழ் சினிமா நடிகர்களில் ஓரளவு துணிச்சலாக இந்த வேலையைச் செய்தவர், செய்து கொண்டிருப்பவர் இப்போதைக்கு கமல் ஹாஸன்தான். அவரது கருத்துகள் பல சமயங்களில் புரிவதில்லை என்று குற்றம்சாட்டப்பட்டாலும், ஆட்சிக்கு எதிரான குரல் அது என்பது மட்டும் எல்லோருக்கும் புரிகிறது. சசிகலா முதல்வராக முயன்றபோது, நேரடியாக, ஓ பன்னீர் செல்வமே முதல்வராகத் தொடரட்டும் என்று கூறினார் கமல். …
-
- 7 replies
- 862 views
-
-
ஜெயலலிதா தோழி சசிகலா போயஸ் கார்டனில் குடியேறுகிறார்; சுதாகரனையும் வெளியில் கொண்டுவர முயற்சி படக்குறிப்பு, பெங்களூருவில் இருந்து சசிகலா தமிழ்நாடு திரும்பிய நாளில் அவரை வரவேற்று வைக்கப்பட்ட பதாகை. (கோப்புப்படம்) முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்கு எதிரே இளவரசி குடும்பத்தினரால் கட்டப்பட்டு வரும் புதிய வீட்டில் அடுத்த மாதம் சசிகலா குடியேற இருக்கிறார். போயஸ் கார்டனில் வி.கே.சசிகலா குடியேற விரும்புவது ஏன்? பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் வி.கே.சசிகலா இருந்த காலகட்டத்திலேயே போயஸ் கார்டனில் அவருக்கான புதிய வீடு ஒன்று தயாராகிக் கொண்டிருந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அரசு, ஜெயலலிதா வாழ்ந்த இல்ல…
-
- 0 replies
- 470 views
-
-
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான மனு: வீடியோ ஆதாரங்களை சமர்ப்பிக்க ஸ்டாலின் தரப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப் படம். தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்கக் கோரி திமுக செயல்தலைவர் ஸ்டாலின் செய்திருந்த மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் இம்மாதம் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. ஸ்டாலின் தன் மனுவில், கடந்த 18-ம் தேதி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அவைத்தலைவரின் அறிவிப்பு சட்ட விரோதமானது; நம்பிக்கை தீர்மானத்தின் மீதான அவைத்தலைவரின் முடிவு செல்லாது. ஆளுநரின் செயலர், தலைமைச் செயலர், தேர்தல் ஆணைய அதிகாரி ஆகியோர் …
-
- 0 replies
- 237 views
-
-
-
விஜயபாஸ்கர் உறவினர்கள் தங்கியுள்ள விடுதியிலும் ரெய்டு! ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதையடுத்து இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சரத்குமார் ஆகியோர் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆகினர். விஜயபாஸ்கரிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. சரத்குமாரிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்டவர்கள் இடங்களில் வருமான வரித்துறையின் சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. ஏற்கெனவே புதுக்கோட்டை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அவரின் உதவியாளர்கள், உறவினர்கள் ஆகியோர் தங்கியிருந்த இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை பூக்கடையில் உள்ள ஒரு விடுதியில் வ…
-
- 0 replies
- 480 views
-
-
சிறை சித்ரவதை - யாரும் அறியாத சவுக்கு சங்கரின் மறுபக்கம்
-
- 0 replies
- 637 views
-
-
அ.தி.மு.க. வின் 50ஆவது ஆண்டு பொன்விழா இன்று! அ.தி.மு.க. வின் 50ஆவது ஆண்டு பொன்விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. 1972ஆம் ஆண்டு தி.மு.க.வில் இருந்து விலகிய எம்.ஜி.ஆர். அதே ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் திகதி அ.தி.மு.க.வை தொடங்கினார். கட்சி தொடங்கி இன்றோடு 49ஆண்டுகள் நிறைவடைந்து, 50வது ஆண்டு பொன்விழா தொடங்குகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் கட்சியின் பொன்விழாவை பிரமாண்டமாக கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எம்.ஜ…
-
- 1 reply
- 740 views
-
-
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு புதிய வீடுகள்-மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார் November 2, 2021 தமிழகம்:வேலூரில், 3510 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு குடியிருப்பு வீடுகள் கட்டும் திட்டத்தை வேலூரில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். தமிழகம் முழுவதும் உள்ள 106 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டும் திட்ட தொடக்க விழா மற்றும் வேலூரை அடுத்த மேல்மொணவூரில் வசிக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ளவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை வேலூரை அடுத்த அப்துல்லாபுரம் தொழிற்பயிற்சி நிலைய மைதானத்தில் இன்று ந…
-
- 12 replies
- 762 views
- 1 follower
-
-
சென்னை: சென்னையில் நடைபெற்ற உயிர்வலி ஆவணத் திரைப்பட திரையீட்டு விழாவில் பங்கேற்ற அற்புதம்மாளிடம் சரமாரியான கேள்விகளை மாணவர்கள் கேட்டனர். சென்னை லயோலாக் கல்லூரி மாணவர் விடுதி அரங்கத்தில் கடந்த 05.12.2013 வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் "உயிர்வலி" ஆவணத் திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த விழாவிற்கு, மரண தண்டனை எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்தவரும் உயிர்வலி ஆவணப்படத்தின் இயக்குனருமான செல்வராஜ் முருகையன், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், சேஷு சபையின் சென்னை மிஷனைச் சேர்ந்த அருட்தந்தை ஜெபமாலை, ஸ்டூடன்ஸ் ஜெராக்ஸ் உரிமையாளர் சௌரிராஜன் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் பங்கேற்றனர். உயிர்வலி ஆவணப்படம், விழாவில் பங்கேற்ற சுமார் 900க்கும் மேற்பட்ட மாணவர்களையும் அமைதியாக கட்டிப்…
-
- 0 replies
- 476 views
-
-
’எங்களின் எண்ணிக்கை விரைவில் 80-ஐ தாண்டும்!’ - தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் அதிரடி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும், முன்னால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைந்தது தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்த டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், முதல்வர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்க வேண்டும் என்றும், அவருக்கு அளித்துவந்த ஆதரவைத் தாங்கள் விலக்கிக் கொள்வதாகவும் மனு அளித்தனர். இந்நிலையில் டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேரையும் எதிரணியினர் வளைத்துவிடக் கூடாது என்பதற்காகக் கூவத்தூர் பாணியில் புதுச்சேரியில் தனியார் 'பீச் ரிசார்ட்டில்' தங்க வைக்கப்ப…
-
- 0 replies
- 1k views
-
-
எழுவார் உயிரை காப்பாற்றியவருக்கு எழுவார் உயிரை காப்பாற்றியவருக்கு இதயம் நிறைந்த நன்றி சொல்வோம் மணித்துளிக்கும் ஆயிர கணக்கில் கட்டணம் பெரும் இந்தியாவின் மிக மூத்த வழக்கறிங்கரும் சட்ட வல்லுநருமான ராம் ஜெத்மலானி ஒவ்வொரு வகுப்பிலும் double promotion பெற்று தனது 13 வயதில் பள்ளி படிப்பை நிறைவு செய்து 17 வயதில் சட்டம் பயின்று முடித்தார் ,18 வயதில் நீதிமன்றத்தில் வழக்காடிய முதல் மனிதர் ,தனது முழு திறைமையையும் வைகோ என்ற ஒற்றை மனிதனின் நட்புக்காக 25 அமர்களில் ஒரு பைசா கூட வாங்காமல் நீதிமன்றத்தில் வாதாடி மூன்று தமிழர்களின் தூக்கை ரத்து செய்ய மிக முக்கிய பங்காற்றினார் ,அதே போல மக்கள் தலைவர் வைகோ அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி வீரப்பன் கூட்டாளிகள் என்று குற்றம் சாட்டப்பட்ட நான்க…
-
- 0 replies
- 542 views
-
-
யூட்யூபர் கார்த்திக் கோபிநாத் கைது - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் 30 மே 2022, 06:47 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,KARTHIK GOPINATH-ILAYA BHARATHAM கோயில் புனரமைப்பு என்ற பெயரில் நிதி வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டதாக யூட்யூபர் கார்த்திக் கோபிநாத் என்பவரை காவல்துறை கைது செய்துள்ளது. இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ' கார்த்திக் கோபிநாத்துக்கு ஆதரவாக பா.ஜ.கவின் சட்டக் குழு இருக்கும்' என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவாச்சூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு மதுரகாளியம்மன் என்ற கோயிலில் நடக்கும் சித்தி…
-
- 0 replies
- 362 views
- 1 follower
-
-
ஏன்? தமிழக கவர்னர் டில்லி வந்தது அதிகாரிகள் ரகசியம் காத்ததால் பரபரப்பு தமிழக கவர்னர், டில்லியில் முகாமிட்டுள்ள நிலையில், அவர் வருகை குறித்து அதிகாரிகள் ரகசியம் காத்ததும், அவரது பயணத்திட்டம் குறித்தும், தமிழ் ஊடகங்களுக்கு ஒருவார்த்தை கூட சொல்ல யாரும் முன்வராததும், ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித், நேற்று முன்தினம் இரவு, டில்லி வந்தார். அவரது வருகை குறித்த, எந்த தகவலும், டில்லி ஊடகங்களுக்கு தெரியாது. ஆலோசனை தமிழ்நாடு இல்லத்தில், திடீரென காலையில், போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதை வைத்தே, கவர்னரின் வருகை குறி…
-
- 0 replies
- 399 views
-
-
http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=122213
-
- 31 replies
- 2.5k views
-
-
ரஜினி + அரசியல் + நேர்மை + கொள்கை = 2.0 பிளாக் டிக்கெட் T3 Lifeஜனவரி 4, 2018 கார்த்திக் ரஜினி தனிக்கட்சி தொடங்கப்போகிறார், ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அது அவர் விருப்பம். சீமான் சொல்வதைப்போல தமிழ் நாட்டை தமிழன் தான் ஆள வேண்டுமென்றால், எடப்பாடி கூட தமிழன் தான், வைகுண்டராஜன் கூட தமிழன் தான், சின்னம்மா கூட தமிழச்சி தான் அந்த இனவாதத்திற்குள் இருந்து ரஜினியை எதிர்க்க முடியாது.காவிரி விடயத்தில் கர்நாடத்திடம் மன்னிப்பு கேட்டார் ரஜினி, அது அங்கு பிறந்ததால் அல்ல அவர் படம் அங்கும் ஓட வேண்டும் என்பதால் மட்டுமே. இங்கு இனவாதத்தை வைத்துக்கொண்டு ஒன்றும் பண்ண முடியாது. அதன் அரசியல் செல்வாக்கு ஓரளவு தான். ரஜினி பேசிய இரண்டு விடயங்கள் இங்கு முக்கியம…
-
- 3 replies
- 601 views
-
-
சென்னையில் ஃப்ளூ காய்ச்சல்: ஒரே நாளில் 100க்கு மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் சேர்ப்பு 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இன்ஃப்ளுயன்சா சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சலுக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் காய்ய்சல் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பருவகால நோய்கள் வருவது இயல்பு என்றாலும் பெருமளவில் வருவது என்பது கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தகூடியதாக உள்ளது. இந்த நிலையில் பரவி வரும் ஃப்ளு காய்ச்சல் குறித்து நாம் தெரிந்து தெரிந்து கொள்ள வேண்டியது…
-
- 0 replies
- 210 views
- 1 follower
-
-
மிஸ்டர் கழுகு: 80 சீட் ஜெயிப்போம்! - எடப்பாடி தடாலடி கழுகார் வந்தபோது, நம் கையில் ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழ் இருந்தது. ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் நாடெங்கும் உற்சாகக் கொண்டாட்டம்’, ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் ஆர்வமுடன் இணையும் மாற்றுக் கட்சியினர்’ என்ற தலைப்புச் செய்திகளைப் பார்த்துச் சிரித்த கழுகார், ‘‘தங்களைத் தாங்களே உற்சாக வார்த்தைகளைச் சொல்லி மெச்சிக் கொள்கிறார்கள் போல!” என்றார். தொடர்ந்து பேசிய கழுகார், ‘‘ஆர்.கே.நகர் அசத்தல் வெற்றி மூலம் அமித் ஷாவுக்கே அதிர்ச்சி வைத்தியம் அளித்த டி.டி.வி. தினகரன், தனது சொந்தக் கட்சிக்குள் எழுந்திருக்கும் கலகக் குரல்களைக் கட்டுப்படுத்த வழிதெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார் என்பதுதான…
-
- 0 replies
- 960 views
-
-
கத்தி படம் தொடர்பாக பொய்களைப் பரப்புவது யார்? -புகழேந்தி தங்கராஜ் 'இளைய தளபதி' என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் தம்பி விஜயின் கத்தி திரைப்பட விவகாரத்தில் நான் வெளிப்படையாகப் பேச நேர்ந்தது, விரும்பி எதிர்கொண்ட ஒரு சூழலில் அல்ல! உண்மையைப் பேச மற்றவர்கள் தயங்கிய நிலையில், நானாவது அதைப் பேசியாக வேண்டுமே என்கிற கட்டாயத்தில், ஒரு தர்மசங்கடத்துடன்தான் அதைப் பேசினேன். என் நண்பர்கள் அனைவருக்கும் இது தெரியும். ராஜபக்சேவின் குடும்பத்தினருடன் நெருக்கமான வர்த்தக உறவுகளை வைத்திருக்கும் லைக்கா மொபைல் நிறுவனம் கத்தி திரைப்படத்தை எடுத்திருக்கிறது என்பதுதான் பிரச்சினையின் அடிப்படை. இனப்படுகொலை செய்த இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும் - என்று தமிழக அரசு வெளிப்படையாக…
-
- 0 replies
- 1.3k views
-
-
நாமக்கல் மாவட்டத்தில் இளவயதுத் திருமணம்! - கைக்குழந்தையுடன் சிறுமி மீட்பு [saturday 2014-12-13 09:00] நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகிலுள்ள செங்கோடம் பாளையத்தை சேர்ந்த வாசுகி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 16,வயது சிறுமிக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அச்சிறுமிக்குப் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தை திருமணம் குறித்து தகவல் நாமக்கல் சைல்டு லைனுக்கு வியாழக்கிழமை கிடைத்தது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை சிறுமியின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்திய வருவாய்த் துறையினர், சைல்டு லைன் குழுவினர் மற்றும் காவல் துறையினர் அடங்கிய குழுவினர் சிறுமிக்கு திருமணத்தின்போது 16 வயது மட்டுமே நிறைவடைந்திருந்ததை …
-
- 0 replies
- 485 views
-
-
தி.மு.க., தலைவர் கருணாநிதி காலமானார் மாலை 6.10 மணிக்கு கருணாநிதி உயிர் பிரிந்தது http://www.dinamalar.com/ கருணாநிதி மறைந்தார் - கண்ணீரில் தமிழகம்! #Karunanidhi கருணாநிதி காலமானார் : தி.மு.க. தலைவர் கருணாநிதி மிகவும் கவலைக்கிடமாக கடந்த சில தினங்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. இந்நிலையில், இன்று மாலை 6.10 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். https://www.vikatan.com/news/tamilnadu/133308-live-updates-on-karunanidhi-health-condition.html
-
- 124 replies
- 21.8k views
- 1 follower
-
-
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் 3-வது நீதிபதி நீதிபதி சத்யநாராயணா, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள்- கோப்புப் படம் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் 3 வது நீதிபதி முன் கடந்த மாதம் 23-ல் தொடங்கிய இறுதி வாதம் இன்றுடன் முடிவடைந்த நிலையில் இறுதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் மூன்றாவது நீதிபதி. தினகரன் ஆதரவாளர்களான 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்றாவது நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. 18 எம்எல்ஏக்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ‘‘அரசுக்கு எதிராக 18 எம்எல்ஏக்களும் செயல…
-
- 0 replies
- 343 views
-
-
உணவும் உழவும் தமிழகத்தின் நிலத்தடி நீரை உறிஞ்சி தமிழகத்தை பாலைவனமாக மாற்றப்போகும் சீமைக் கருவேல மரங்களை கூண்டோடு வேரறுத்து தமிழகத்தை வளமான விவசாய பூமியாக மாற்ற போராடுகிறார் வேலூர் அணைக்கும் கரங்கள் ப. சரவணன்.இவரின் களப்பணிகள் குறித்து சமீபத்தில் வேலூர் சதுப்பேரி என்கின்ற ஒரு கிராமத்தில் 100 நாள் விவசாயப் பணியிலிருந்த அவரை ஒரு இனிய காலை வேளையில் சந்தித்துப் பேசினோம்.
-
- 0 replies
- 1.2k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, திருநெல்வேலி மாவட்டத்தில் ஆதிக்க சாதி மாணவர்களால் வீடு புகுந்து வெட்டப்பட்ட 17 வயது பட்டியல் சாதி மாணவர் மற்றும் அவரது 14 வயது தங்கை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கட்டுரை தகவல் எழுதியவர், பிரபாகர் தமிழரசு பதவி, பிபிசி தமிழ் 11 ஆகஸ்ட் 2023, 12:05 GMT புதுப்பிக்கப்பட்டது 32 நிமிடங்களுக்கு முன்னர் தீண்டாமை ஒரு பாவச்செயல் என்று பாடநூல்கள் கூறுகின்றன. ஆனால், கல்வி பயிலச் சென்ற பள்ளியில்தான் ஒரு பட்டியலின மாணவர் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அதையும் மீறி பள்…
-
- 4 replies
- 402 views
- 1 follower
-
-
18 NOV, 2023 | 12:45 PM ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி. அகற்றப்பட வேண்டிய பதவியாக இருந்தாலும், அது இருக்கும் வரை மக்களாட்சிக்கு உட்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் " என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக, தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று (நவ.18) காலை கூடியது. அவை கூடியவுடன் சபாநாயகர் அப்பாவு மறைந்த முக்கியப் பிரமுகர்கள், முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானங்களை வாசிக்க அவை உறுப்பினர்கள் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் முதல்வர் ஸ்டாலின் அரசினர் தனித் தீர்மானத்தை முன்ம…
-
- 1 reply
- 336 views
- 1 follower
-
-
கோவையில் ஏழு இடங்களில் தேசிய புலனாய்வுத் துறையினர், அதிகாலையில் இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். இங்குள்ள சில நபர்கள் இலங்கை குண்டு வெடிப்பு குற்றவாளியோடு தொடர்பில் இருந்துள்ளனர் எனவும், தமிழகம் ,கேரளாவில் குண்டுவெடிப்புகள் நிகழ்த்த திட்டங்கள் இருப்பதாகவும் புலனாய்வுத் துறை விசாரணையில் தெரிய வந்ததால் இந்த சோதனைகள் நடைபெற்றுள்ளது. உக்கடத்தை சேர்ந்த முகமது அசாருதீன், சேக் இதயத்துல்லா, இப்ராகிம், போத்தனூரை சேர்ந்த அக்ரம் சிந்தா, சதாம் உசைன், குனியமுத்தூரை சேர்ந்த அபுபக்கர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முகமது அசாருதீன், ‘khilafah GFX’ என்னும் முகநூல் பக்கத்தின் வழியாக ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கருத்துக்களை பரப்பியுள்ளார். மே…
-
- 1 reply
- 1.1k views
-