தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10261 topics in this forum
-
போதுமான குடிநீர் இருப்பு: ரயில் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்ட குடிநீர் நிறுத்தம் சென்னையில் போதுமான குடிநீர் இருப்பு இருப்பதால் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் வேகன்கள் மூலம் சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்ட காவிரி கூட்டுக் குடிநீர் இன்றுடன் நிறுத்தப்பட்டது. சென்னையில் ஏற்பட்ட குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ஜோலார்பேட்டையில் இருந்து ரயில்வே வேகன்கள் மூலம் சென்னைக்கு காவிரி கூட்டுக் குடிநீரைக் கொண்டு வர தமிழக முதல்வர் கடந்த ஜூன் மாதம் 21 ஆம் திகதி உத்தரவிட்டார். இதையடுத்து, இத்திட்டத்துக்காக 65 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. இந்நிலையில், சென்னை நகர மக்களுக்குப் பருவமழை கைகொடுத்து வருவதால் சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கி வந்த …
-
- 0 replies
- 433 views
-
-
தமிழக பாஜக தலைவர் பதவி... அமித்ஷா பாணியில் பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு யாகம்? தமிழக பாஜக தலைவர் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக கும்பகோணம் அருகே அய்யாவடி பிரத்யங்கிராதேவி கோவிலில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் யாகம் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அய்யாவடி பிரத்யங்கிராதேவி கோவிலில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தற்போதைய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்காக சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. அதனை அடுத்துதான் அவர் பாஜகவின் தேசிய தலைவரானார் என்பது நம்பிக்கை.தற்போது முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அதே கோவிலில் சிறப்பு யாகத்தை நடத்தியதாக கூறப்படுகிறது. தமிழக பாஜக தலைவர் பதவி காலியாக உள்ள நிலையில் யாருக்கு அப்பதவி கிடைக்கும் என நாள்தோறும் விவா…
-
- 0 replies
- 444 views
-
-
இவர்களை பச்சை மட்டையை... எடுத்து அடித்து முதுகு தோலை உரிக்க வேண்டும்.. சீமான் ஆவேசம் 10 வருடமாக கத்தி உன் பேச்சை கேட்கிறீர்கள், ஏன் வாக்கு வரலை..ஏன் என்றால் அவர்கள் தமிழர்கள் இல்லை. 18 லட்சம் பேர் எனக்கு வாக்களித்துள்ளார்கள் அல்லவா.. அவர்கள் தான் தமிழர்கள் என்று சீமான் ஆவேசமாக பேசினார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது அவர் பேசுகையில், "10 வருடமாக கத்தி உன் பேச்சை கேட்கிறீர்கள், ஏன் வாக்கு வரலை..ஏன் என்றால் அவர்கள் தமிழர்கள் இல்லை. 18 லட்சம் பேர் எனக்கு வாக்களித்துள்ளார்கள் அல்லவா அவர்கள் தான் தமிழர்கள்.ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுபவர்கள் தமிங்கிலர்கள். இவ…
-
- 9 replies
- 1.4k views
-
-
இந்திய பிரதமர் மோடி- சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் மாமல்லபுரம் வருகையையொட்டி 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் செல்லவும், இறங்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி சீனாவிற்கு சமீபத்தில் சென்று இருந்தபோது இந்தியாவிற்கு வருமாறு சீனா அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்ற சீன அதிபர் ஜின்பிங் வரும் 11ம் தேதி இந்தியா வருகிறார்.இவர்களின் சந்திப்பு தமிழகத்தில் புராதன நகரமான மாமல்லபுரத்தில் வரும் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடக்கிறது. இதில் வர்த்தகம், எல்லை பிரச்னை, இரு நாட்டின் பாதுகாப்பு, சர்வதேச தீவிரவாதம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இரண்டு தலைவர்களும் பேசுகின்றனர். இதற்காக பி…
-
- 0 replies
- 471 views
-
-
தமிழ் மெல்ல சாகடிக்கப்படுகிறதா?: ஒவ்வொரு தேர்வுகளிலும் புறக்கணிப்பு......தாய்மொழிக்கு உரிய அங்கீகாரம் மறுக்கப்படுவது தொடர்கதையாகிறது எங்கும் தமிழ்; எதிலும் தமிழ் என்ற தமிழர்களின் முழக்கம், அதன் தொன்மையை பறைசாற்றிக்கொண்டிருக்கிறது. ஆனால், சமீபகாலமாக தமிழுக்கு ஆபத்து வந்து விட்டது. ஏதோ தெரியாமல் செய்த பிழை என்பதெல்லாம் போய், மத்தியில் உள்ள பாஜ அரசு, ‘பிள்ளையை கிள்ளி தொட்டிலை ஆட்டும்’ கலையை செய்ததெல்லாம் போய், இப்போது பகிரங்கமாகவே தமிழை புறக்கணிக்கும் போக்கை கடைபிடிக்க தயாராகி விட்டது என்று தமிழ் ஆர்வலர்கள் வேதனைப்படுகின்றனர். நீட் தேர்வில் ஆரம்பித்தது தமிழ் புறக்கணிப்பு; போராடி பின்னர் தமிழில் எழுதும் உரிமை மீட்கப்பட்டது. ஆனால், ரயில்வே தேர்வில் ஆரம்பித்து…
-
- 0 replies
- 444 views
-
-
கருணாநிதிக்கு அருங்காட்சியம்... சர்வதேச தரத்தில் கட்டத் திட்டம். ! சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் காட்டூரில் அருங்காட்சியகம் அமைக்க திட்டமிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின்.திமுக தலைவராகவும், முதுபெரும் அரசியல் தலைவராகவும் வாழ்ந்து மறைந்த கருணாநிதிக்கு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்பது அவரது மகள் செல்வியின் எண்ணமாகும். இதையடுத்து தனது அண்ணனும், திமுக தலைவருமான ஸ்டாலினிடம் இது தொடர்பாக பேசிய அவர், அருங்காட்சியகத்தை எங்கு அமைக்கலாம் என்பது குறித்து ஆலோசித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கருணாநிதிக்கு அருங்காட்சியகம் அமைக்கலாம் என அவர்கள் இருவரும் முடிவு செய்ததை அடுத்து, அருங்காட்சியகம் அமைப்பதற்காக மு.க.ஸ்ட…
-
- 3 replies
- 942 views
-
-
லலிதா ஜுவல்லரி கொள்ளையன் சிக்கினான்.. இன்னொருவன் தப்பி ஓட்டம்.. திருவாரூரில் நள்ளிரவில் அதிரடி! ஒரு வழியாக திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக் கடை கொள்ளைச் சம்பவத்தில் துப்பு துலங்கி விட்டது. திருச்சி போலீஸாரின் அதிரடி விசாரணை மேற்றும் தேடுதல் வேட்டையில் கொள்ளையர்களில் ஒருவன் சிக்கி விட்டான். துரதிர்ஷ்டவசமாக இன்னொருவன் தப்பி விட்டான். பிடிபட்ட நபரிடமிருந்து 2 மூட்டைகளில் நகைகள் மீட்கப்பட்டன. இவை அனைத்தும் லலிதா ஜுவல்லரி நகைக் கடையிலிருந்து திருடப்பட்டவை என்பது பார் கோடு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.லலிதா ஜுவல்லரி நகைக் கடையின் திருச்சி கிளையில், 30 கிலோ தங்கம் மற்றும் ஏராளமான வைர நகைகளை முகமூடி அணிந்து, மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இரவு நேரத்தில், நக…
-
- 17 replies
- 3k views
- 1 follower
-
-
கன்னியாகுமரி: பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன், கன்னியாகுமரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் இந்தி மொழிக்கு ஆதரவாக போராட்டம் நடத்தும் சூழல் விரைவில் உருவாகும். ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி கட்டணம் உயர்ந்துள்ள நிலையில் குறைந்த கட்டணத்தில் கல்வி வழங்கும் நவோதயா பள்ளிகள் திறப்பதற்கு தமிழ்நாட்டில் அனுமதி மறுக்கப்படுகிறது. நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜ ஆதரவு அளிக்கும் என்றார். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=530965 பிரதமர் மோடி தமிழை தொடர்ந்து உயர்த்தி பேசுவது, தமிழ்நாட்டில் பாஜகவை வளர்ப்பதற்காக கூட இருக்கலாம்: கமல்ஹாசன் சென்னை: பிரதமர் மோடி தமிழை தொடர்ந்து உயர்த்தி…
-
- 0 replies
- 493 views
-
-
தூய்மையான தமிழகம்: மோடியிடமிருந்து விருது பெற்றார் வேலுமணி தூய்மையில் இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை அமைச்சகத்தினால் அண்மையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி இந்த மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியிடம் இருந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விருதினைப் பெற்றார் நாட்டின் பல பகுதிகளில் ஓகஸ்ட் 17 முதல் செப்டெம்பர் ஐந்தாம் திகதி வரை 690 மாவட்டங்கள் மற்றும் 17 ஆயிரத்து 400 கிராம பஞ்சாயத்துகளில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், தமிழ்நாட்டிலுள்ள 31 மாவட்டங்கள் உட்பட்ட 800 கிராமங்களில் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பின் படி தூய்மையில் இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தெரிவாகியது.…
-
- 0 replies
- 862 views
-
-
தமிழை ஆட்சி மொழியாக்கி பெருமைப்படுத்துங்கள்: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் வேண்டுகோள் தமிழை, இந்தியாவின் ஆட்சி மொழியாக்கி அதனை பெருமைப்படுத்துங்கள் என பிரதமர் நரேந்திரமோடிக்கு தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாவின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தி.மு.க.வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மு.க.ஸ்டாலின் மேலும் கூறியுள்ளதாவது, “தொன்மைமிக்கதும், பழம்பெரும் இலக்கிய, இலக்கண வளங்கள் செறிந்ததும், மூத்த நாகரிகமும் பண்பாடும் உடையதும், 8 கோடிக்கும் அதிகமான மக்களால் பேசப்படுவதுமான தமிழ் மொழிக்குரிய அங்கீகாரத்தை அளிக்க வேண்டிய பொறுப்பு, பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு உள்ளது. ஆகையால் மூத்த மொழியான தமிழை, இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆக்க வேண்டும். அந்தவகையில் சென்ன…
-
- 1 reply
- 501 views
-
-
விஸ்வரூபம் எடுக்கும் நீட் ஆள்மாறாட்டம் விவகாரம்.. வெளிநாடு தப்பியுள்ள இர்பானின் தந்தை வேலூரில் கைதுநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் இர்பானின் தந்தை முகமது சஃபி கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவ சேர்க்கைக்கு நீட் எனும் தகுதி தேர்வு எழுதுவது இந்தியா முழுவதும் கட்டாயமாகும். இந்த தேர்வு கட்டாயமாக்கப்படுவதற்கு முன்னர் பிளஸ் 2 வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடைபெற்று வந்தது.இந்த நிலையில் தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வு தமிழகம் உள்ளிட்ட மாநில மாணவர்களுக்கு குதிரை கொம்பாக உள்ளது. வினாத்தாள் கடினமாக இருக்கிறது. அதிலும் மாநில பாடப்பிரிவில் படித்தவர்களுக்கு மிகவும் கடினமாக இருந்து வருகிறது. இதனால் தங்கள் பிள்ளைகளின் விருப்பத்தை நிற…
-
- 2 replies
- 681 views
-
-
ஜெயலலிதா பேரவை -அம்மா சாரிடிபிள் டிரஸ்ட் மூலமாக மதுரை மாவட்டத்தில் பல்வேறு தரப்பினருக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடர்ந்து நடத்தி வரப்படுகிறது. இன்று ப்ளஸ்டூ மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியை மதுரை வேலம்மாள் கல்லூரியில் தொடங்கி வைத்தார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``மாணவர்கள் மன தைரியம், நம்பிக்கையோடு பொதுத்தேர்வை, போட்டித் தேர்வை எதிர்கொள்வதற்கும், வேலை வாய்ப்பை பெறுவதற்கும் பயிற்சிகள் வழங்கப்படும். இதுபோன்ற திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அவர்களுக்கு உதவும். விவசாயியாக பிறந்து முதல்வராக உயர்ந்த எடப்பாடியார், மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு பல திட்டங்க…
-
- 0 replies
- 461 views
-
-
கீழடியை கண்டேன், கிளர்ச்சி மிகக் கொண்டேன்...! -மு.க.ஸ்டாலின் மடல் .! சென்னை: கீழடியை நேற்று நேரில் பார்வையிட்ட நிலையில் தனது அனுபவத்தை திமுக தொண்டர்களுக்கு மடலாக எழுதியிருக்கிறார் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின். கீழடியை கண்டேன், கிளர்ச்சி மிகக் கொண்டேன் என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள மடலில் கீழடியின் பெருமைகளை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், அவருக்கு அங்கிருந்த தொல்லியல் அறிஞர்கள் ஆய்வு குறித்து விவரமாக விளக்கியதாகவும், அதனை தொண்டர்களிடம் பகிர்ந்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதிய மடலில், கீழடியில் தான் நின்றிருந்தேன். மனதோ வியப்பிலும் பெருமிதத்திலும் புவியீர்ப்பு விசை கடந்த சந்திரயான் விண்கலம் போலே வான் வரை பறந்து உயர்ந்த…
-
- 3 replies
- 1.3k views
-
-
கீழடி பற்றிய ஸ்டாலின் ட்விட்டால் சர்ச்சை.. எப்படி இவ்வாறு சொல்லலாம்.. நெட்டிசன்கள் கடும் விமர்சனம். கீழடியில் நடைபெற்ற தொல்லியல் துறை ஆய்வு முடிவுகளை, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சமீபத்தில் அறிக்கையாக வெளியிட்டார். ஆய்வுகளின் முடிவில், கீழடியில் வாழ்ந்தவர்கள் கி.மு 6ம் நூற்றாண்டிலேயே கல்வியறிவு கொண்டவர்களாக விளங்கினார்கள் என்ற தகவல் வெளியானது. கங்கைக் கரையில் இரண்டாம் நகர நாகரீகம் நிலவிய அதே காலகட்டத்தில் கீழடியிலும் தமிழர்களின் நகர நாகரீகம் இருந்துள்ளது இதன் மூலம் உறுதியானது. பிராமி எழுத்துக்களும் கண்டெடுக்கப்பட்டன.தமிழினத்தின் பொற்காலம் என அறியப்படும், சங்க காலம் என்பது மேலும் 3 நூற்றாண்டுகள் பழமையானது என்பதை கீழடி அறுதியிட்டு கூறியது. சிந்து சமவெளி நாகரீகத்த…
-
- 3 replies
- 863 views
-
-
மகனுக்குத் திருமணம் – ரொபர்ட் பயஸ் பரோல் மனு தாக்கல் September 26, 2019 இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள ரொபர்ட் பயஸ், தன் மகன் தமிழ்கோ-வின் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்தற்காக 30 நாட்கள் பரோல் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இலங்கை அகதியான தான், ராஜிவ் கொலை வழக்கில் 1991ல் முதல் 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருவதாகவும், கைதுக்கு பின், தன் மனைவியும், மகனும் இலங்கை சென்று விட்டதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் தற்போது நெதர்லாந்தில் வசிக்கும் தன் மகன் திருமண வயதை எட்டி விட்டதால், தந்தை என்ற முறையில் அவருக்கு திருமண ஏற்பாடு செய்ய 30 நாட்கள் பரோல் வழங்க கோரி சிறைத்து…
-
- 0 replies
- 601 views
-
-
குதிரையை வைத்து அச்சுறுத்தியதாக கனடா பெண் முறைப்பாடு – குதிரையோட்டி கைது! சுற்றுலா நோக்கில் இந்தியாவுக்கு சென்றிருந்த கனடா பெண்ணொருவர் குதிரையில் சவாரி செய்த போது கீழே வீழ்ந்து காயங்களுக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் குதிரையில் சவாரி செய்து கொண்டிருந்த போது பிறிதொரு குதிரையோட்டி தன்னை அச்சுறுத்தியதாகவும், இதனை தான் பயணித்த குதிரை மிரண்டு போய் தன்னை கீழ் தள்ளிவிட்டு ஓடியதாக அவர் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார். இந்த குதிரையை வைத்து கனடா பெண்ணை அச்சுறுத்தியதாக கூறப்படும் குதிரை ஓட்டியான செந்தில் என்பர் கைது செய்யப்பட்டுள்ளார். கனடா நாட்டை சேர்ந்த டொய்னா கட்டான என்ற பெண் நேற்று இரவு (செவ்வாய்க்கிழமை) குதிரை சவாரி செய்து கொண்டிருந்தப…
-
- 0 replies
- 532 views
-
-
15 ஆண்டுகளுக்குப் பின்னர் கேரள – தமிழக முதல்வர்கள் சந்திப்பு September 25, 2019 கேரள முதல்வர் பினராயி விஜயனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையேயான முல்லைப் பெரியாறு, பரம்பிகுளம் – ஆழியாறு நதிநீரைப் பங்கிட்டுக்கொள்வது தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இதுதொடர்பாக கேரள முதல்வரும் தமிழக முதல்வரும இன்று (செப்டம்பர் 25) நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். திருவனந்தபுரத்தில் உள்ள கேரள அரசின் விருந்தினர் மாளிகையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், நதிநீர் தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள ஒப்பந்தங்கள் மற்றும் அதன் தற்…
-
- 0 replies
- 542 views
-
-
அடுத்தகட்ட அகழாய்வு பணிக்கு அனுமதிக்க வேண்டும் – மத்திய அமைச்சரிடம் பாண்டியராஜன் கோரிக்கை தமிழகத்தில் அடுத்தகட்ட அகழாய்வு பணிக்கு அனுமதிக்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் கே.பாண்டியராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். புதுடெல்லியில் உள்ள யுனெஸ்கோ அரங்கில் நடைபெற்று வரும் 3-வது பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கிவைத்தார். இதன்பின்னர், மத்திய கலாசாரத்துறை மந்திரி பிரகலாத்சிங் படேலை அவருடைய அலுவலகத்தில் நேரில் சந்தித்தார். அப்போது கீழடி அகழாய்வின் 4-ம் கட்ட அறிக்கையினை மத்திய அமைச்சரிடம், அமைச்சர் கே.பாண்டியராஜன் வழங்கினார். மேலும், கீழடியின் தமிழர் பெருமைகளை உலகிற்கு எடுத்துச்சொல்லும் வகை…
-
- 0 replies
- 389 views
-
-
ஹிந்தி மொழி எதிர்ப்புப் போராட்டம்: முடியுமா, தொடருமா? எம். காசிநாதன் / 2019 செப்டெம்பர் 23 திங்கட்கிழமை, பி.ப. 06:10 Comments - 0 ஹிந்தித் திணிப்பு என்பது, மீண்டும் வலுவாகத் தமிழகத்தில் மட்டுமின்றி தென் மாநிலங்கள், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும் கேட்கத் தொடங்கியிருக்கிறது. ஹிந்தி தினத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “நாட்டின் பொது மொழியாக, ஹிந்தி வர வேண்டும். ஹிந்திதான் நாட்டுக்கு ஓர் அடையாளத்தை உலக அரங்கில் கொடுக்க முடியும்” என்றார். இந்தப் பேச்சைக் கேட்ட மாத்திரத்தில், தமிழகத்திலிருந்து முதலில் எதிர்ப்புக் குரல் கிளம்பியது. தி.மு.க தலைவர் ஸ்டாலின், “ஹிந்தித் திணிப்பை எதிர்ப்போம். மீண்டும் எங்களைக் களம் காண வைக்காதீர்கள். ஹிந்திதான் …
-
- 0 replies
- 839 views
-
-
தமிழக தேர்தல் : விக்கிரவாண்டி தொகுதியில் உதயநிதி போட்டி? தமிழகத்தில் காலியாகவுள்ள சட்டசபைக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க இளைஞர் அணியின் செயலாளரான உதயநிதி ஸ்டாலின் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த விருப்ப மனுவை தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கவுதம சிகாமணி இன்று (திங்கட்கிழமை) தாக்கல் செய்துள்ளார். நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றிபெறுவதற்காக பிரதான கட்சிகள் தீவிரமாக செயற்பட்டு வருகின்றன. அந்தவகையில் இன்று அ.தி.மு.க சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான நேர்காணல் நடைபெற்றுவருகின்றது. இந்நிலையில…
-
- 1 reply
- 931 views
- 1 follower
-
-
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர வாட்ஸ்அப் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் பகிர்க இதை பகிர இந்த வெளிய…
-
- 0 replies
- 558 views
-
-
தெலுங்கு மக்கள் இல்லைன்னா தமிழ்நாடு இல்ல.. வெறுப்பை கக்கும் ராதாரவி!! தமிழக தெலுங்கு மக்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை வடபழனியில் நடிகவேள் எம்.ஆர் ராதாவின் 40 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் அமைச்சரவை அமைப்பதற்கு பெரும்பங்கு வகிப்பது தெலுங்கு இனம் தான். தேனி, திண்டுக்கல், சிவகாசி, விருதுநகர் போன்ற பகுதிகளில் தெலுங்கு மக்கள் தான் போட்டி போடுகிறார்கள். தெலுங்கு இனத்தை ஆதரிப்பவர்கள் தான் தமிழ்நாட்டில் வென்றிருக்கிறார்கள். கிருஷ்ண தேவராயர் இல்லை என்றால் மதுரை வளர்ந்திருக்காது. நாங்கள் திராவிடம் என்கிறோம். நீங்கள் எங்களை வேறு இனம் என்று கூறுகிறீர்கள். நான் …
-
- 0 replies
- 924 views
-
-
சட்டசபை தேர்தல் : நாம் தமிழர் கட்சியின் முக்கிய அறிவிப்பு! நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடவுள்ளதாக அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இந்த தேர்தல் குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) தாம்பரத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் குறித்த ஆலோசனையின் பின்னர் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். இதன்படி நாங்குநேரி தொகுதியில் பெண் வேட்பாளரும், விக்கிரவாண்டி தொகுதியில் ஆண் வேட்பாளரும் களமிறக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வெற்றிடமாகவுள்ள நாங்குநேரி, விக்ரவாண்டி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள…
-
- 1 reply
- 1.2k views
-
-
நிதி ஆயோக் அமைப்பின் தரவுகளின்படி ஊழலில் தமிழகம் முதலிடத்திலும், குஜராத் மூன்றாம் இடத்திலும் உள்ளதாக பகீர் தகவல் வெளியாகி உள்ளது. நிதி ஆயோக் அமைப்பின் தரவுகளின் அடிப்படையில், நாடு முழுவதும் ஊழல், லஞ்சம் தொடர்பான புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன. எஸ்டிஜி - 2018 தரவுகளை ெகாண்டு, நிதி ஆயோக் புள்ளி விவரங்களின்படி, பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத் லஞ்சம், ஊழல் முறைகேட்டில் மூன்றாமிடம் இடத்தில் உள்ளது. இம்மாநிலம் 1,677.34 குறியீடுகள் பெற்றுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஊழல் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் ஒடிசாவும், அடுத்தடுத்த இடங்களில் சட்டீஸ்கர், சண்டிகர் ஆகிய மாநிலங்களும் உள்ளன. தமிழகத்தின் ஊழல் குறியீடு ஒரு கோடி மக்கள் என்ற அடிப்படையில், 2,492.45 ஆகவ…
-
- 0 replies
- 442 views
-
-
தமிழகத்தில் பணியாற்றும் வடமாநிலத்தவரை கணக்கெடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் நிலோபர் கபீல் அறிவுறுத்தல் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், தேசிய பாதுகாப்பு குழுமம் சார்பில் தொழிற்சாலைகள் பாதுகாப்பு விருதுகள், உயர்ந்த உழைப்பாளர் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் விருதுகளை வழங்கினார். உடன், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக இயக்குநர் கா.மனோகரன், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார். படம்: ம.பிரபு சென்னை தமிழகத்தில் பணியாற்றும் வட மாநிலத்தவர்களை கணக்கெடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தொழிலாளர் …
-
- 0 replies
- 517 views
-