Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சென்னையில் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை August 27, 2019 சென்னை பல்லாவரத்தில் ராணுவ அதிகாரி ஒருவரை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். சென்னை பல்லாவரத்தில் உள்ள ராணுவ குடியிருப்பில் ஹவில்தார் பிரவீன் குமார் என்பவருக்கும் அவருக்கு கீழ் பணியாற்றிய ஜெக்ஷீர் தான் என்பவுக்குமிடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இதன்போது ஆத்திரம் அடைந்த ஜெக்ஷீர் தான்; இன்று அதிகாலை 3 மணிக்கு ஹவில்தாரின் அறைக்கு சென்று அங்கு தூங்கிக் கொண்டு இருந்த ஹவில்தாரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு பின்னர் தானும் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துள்ளார். சென்னையில் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை#சென்னை #ராணுவ அதிகாரி #சுட்டுக்கொலை http://globalt…

  2. இலங்கைக்கு கடத்தப்படவிருந்த துப்பாக்கிகளுடன் கைதான தமிழக பெண்ணுக்கு விளக்கமறியல்! இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்ட தமிழக பெண் உள்ளிட்ட நால்வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்கள் நால்வரையும் நேற்று (திங்கட்கிழமை) ராமநாதபுரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ராமநாதபுரம் – உச்சிப்புளி அருகே உள்ள கிராமத்தில் வள்ளி (42) என்ற பெண் நேற்…

  3. அம்பேத்கர் சிலை உடைப்பு ஆதிக்க வெறியின் கோர தாண்டவம் – கமல்ஹாசன் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு ஆதிக்க வெறியின் கோர தாண்டவம் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். வேதாரண்யத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் சட்டமேதை அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனை அடுத்து உடைக்கப்பட்ட சிலைக்கு பதிலாக அரசு சார்பில் புதிய சிலை வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) இந்த விடயம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள கமல்ஹாசன், வேதாரண்யத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது ஆதிக்க வெறியின் கோர தாண்டவம் தான் என கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன், ஒடுக்கப…

  4. வேலூர் மாவட்டம் நாராயணபுரம் கிராமத்தில் தலித் ஒருவரின் சடலத்தை பட்டா நிலத்தின் வழியாகக் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தனி சுடுகாடு அமைத்துக் கொடுத்திருப்பது அரசே ஜாதியை ஊக்குவிப்பதுபோல இருக்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது. வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள நாராயணபுரம் கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த 55 வயதான குப்பன் என்பவர் சாலை விபத்தில் மரணமடைந்தார். அவரது உடலை அங்குள்ள மண்ணாற்றங்கரையில் தகனம் செய்யச் செல்லும்போது, தங்களது நிலத்தின் வழியாக எடுத்துச் செல்வதற்கு நிலத்தின் உரிமையாளர் தரப்பு …

  5. சென்னையில் மின்சாரப் பேருந்து சோதனை ஓட்டம் ஆரம்பித்து வைப்பு! சென்னையில் மின்சாரப் பேருந்து சோதனை ஓட்டம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட மக்கள் நெரிசல் நிறைந்த மாநகங்களில் 500 மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கமைய பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. முதல் கட்டமாக 100 மின்சார பேருந்துகள் ஜேர்மனியின் கே.எப்.டபிள்யூ நிறுவனத்தின் நிதி உதவியுடன் கொள்வனவு செய்யப்படவுள்ளன. இதில் 80 பேருந்துகள் சென்னையிலும், 10 பேருந்துகள் மதுரையிலும், 10 பேருந்துகள் கோவையிலும் இயக்கப்படவுள்ளன. இந்நிலையில், சென்னையில் இன்று(திங்கட்…

  6. ப.சிதம்பரம் கைது: அரசியல் பழிவாங்கலா, ஊழலில் புரட்சியா? எம். காசிநாதன் / 2019 ஓகஸ்ட் 26 திங்கட்கிழமை, மு.ப. 10:41 Comments - 0 இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் “ஐ.என்.எக்ஸ்” மீடியா வழக்கில் கைதுசெய்யப்பட்டு, தற்போது மத்திய புலனாய்வு அமைப்பான சி.பீ.ஐ வசம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார். 2004 முதல் 2008ஆம் ஆண்டு வரை, நாட்டின் நிதியமைச்சராக இருந்தவர் ப சிதம்பரம். இந்த “ஐ.என்.எக்ஸ்” மீடியா நிறுவனம், 2007 மார்ச் மாதத்தில், அந்நிய முதலீட்டைப் பெறுவதற்கான அனுமதியைக் கேட்க, அந்த அனுமதி, 2007 மே மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்டது. இந்த அந்நிய முதலீடு வழங்குவது தொடர்பான ஊழல் வழக்கை, 15.5.2017 அன்று பதிவு செய்த சி.பீ.ஐ, அதற்கான அடுத்த…

  7. கல்வி தொலைக்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர்.. மாணவர்களின் திறமைக்கு சூப்பர் கௌரவம் தர முடிவுதமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார். பள்ளி மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தின் 8வது தளத்தில் தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்திற்கு இன்று வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , தொலைக்காட்சி சேவையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், கல்வி அமைச்சர் செங்கோடடையன், உள்பட பல்வேறு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற…

  8. கடந்தகால அரசாங்கதை விட, ஆட்சிக்கு வந்துள்ள எங்களது அரசாங்கமே சிறுபான்மை மக்களின் விடயத்தில் அதிக அக்கறை காட்டுகிறது. சிறுபான்மை மக்களுக்கு எவ்வளவு தூரம் உரிமைகளையும் சலுகைகளையும் வழங்க முடியுமோ அவ்வளவு தூரம் வழங்குவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். தனிப்பட்ட விடயமாக இந்தியா சென்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று (24) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலினை சினேகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது பாராளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர். பாலு, தயாநிதிமாறன், ஆலந்தூர் பாரதி ஆகியோர் உடனிருந்தனர். இதன்பின்னர்…

    • 0 replies
    • 309 views
  9. போர்க்குற்றவாளியை இராணுவத் தளபதியாக நியமித்த இலங்கையை இந்தியா கண்டிக்க வேண்டுமென, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், யுத்தக்குற்றவாளியான ஷவேந்திர சில்வாவை இலங்கை அரசாங்கம் இராணுவத்தளபதியாக நியமித்துள்ளது.இது தமிழர்களைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 2009-ஆம் ஆண்டு நடந்த போரில் அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்வதில் முக்கியப் பங்கு வகித்தவர் ஷவேந்திர சில்வா.இவ்வாறான ஒருவரை இராணுவத் தளபதியாக நியமித்தமை கடுமையாக கண்டிக்கத்தக்கது. இவரது தலைமையிலான 58-ஆவது படையணியே போரின் இறுதிக் கட்டத்தில் அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்தது. தமிழர்களுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்த வேண்டும் என…

  10. 2019-08-23@ 08:49:39 பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்குள் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இவர்கள் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்றும், இலங்கை வழியாக தமிழகத்திற்குள் நுழைந்துள்ளதாகவும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இவர்கள் இலங்கையில் தீவிரவாத தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் என்றும் தகவல்கள் வெளியானது.இதனையடுத்து கண்காணிப்பை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட எஸ்.பி.க்களுக்கும் டிஜிபி அதிரடி உத்தரவை பிறப்பித்தார். நேற்று நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள…

    • 5 replies
    • 961 views
  11. அப்துல்கலாம் விருதினை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்க இஸ்ரோ தலைவர் சிவன் பெற்றுக் கொண்டார். விண்வெளித்துறையில் சாதனை படைப்போருக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் பெயரில் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுகிறது. இந்த விருந்து சுதந்திர தினத்தன்று வழங்கப்படவிருந்தது. சிவன் அன்றைய நாளில் விருதினைப் பெறவில்லை. இந்நிலையில் தலைமை செயலகத்தில் சிவனுக்கு டாக்டர் அப்துல் கலாம் விருதினை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வியாழக்கிழமை வழங்கினார். இந்த விருதானது ரூ. 5 லட்சம் காசோலை 8 கிராம் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியன வழங்கப்பட்டன. நிலவினை ஆராய சந்திரயான் 2 விண்கலத்தை அனுப்பி சிவன் தலைமையிலான இஸ்ரோ குழு மிகப்பெரிய ச…

  12. நாகை மாவட்டம், கோடியக்கரை கோயிலில் கொள்ளை போன சிலைகள் மீட்கப்பட்டு, மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட மற்றவர்களைப் பிடிக்க தனிப்படை போலீஸார் விரைந்துள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரை கோடி முத்துமாரியம்மன் கோயிலிலிருந்த முருகன், வள்ளி , தெய்வானை, மாரியம்மன் ஆகிய நான்கு சிலைகள் கடந்த 16 - ம் தேதி இரவு மர்ம நபர்களால் களவாடப்பட்டன. இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே உள்ளூர் பெண் சாமியாடி ஒருவர், ``களவுபோன சிலைகள் இந்த எல்லைக்குள் பூமியில் புதைத்து வைக்கப்பட்டுள்ளன" என்று அருள்வாக்கு கூறியதை நம்பி நான்கு நாள்களாக கிராமத்தினர் வேலைக்கும் போகாமல் பல்வேறு கு…

    • 0 replies
    • 476 views
  13. நளினியின் பிணைக்காலம் நீடிப்பு! முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினியின் பிணைக்காலம் மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. மகளின் திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக பிணைக்காலத்தை நீடிக்ககோரி நளினி மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். குறித்த மனு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி தன் மகளின் திருமணத்திற்காக கடந்த மாதம் 25ஆம் திகதி பிணையில் விடுதலையானார். இந்நிலையில், நளினியின் மகள் ஹரித்ரா தமிழகம் வருவதில் தாமதம் ஏற்படுவதால், பிணைக்காலத்தை காலத்தை …

  14. வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் அனைவருக்கும் வீடு: முதல்வர் பழனிசாமி மத்திய அரசுடன் இணைந்து வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் வீடில்லாத மக்கள் அனைவருக்கும் வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். சேலம் மாவட்டம், தலைவாசலில் முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை நேற்று (செவ்வாய்க்கிழமை) தமிழக முதல்வர் தொடக்கி வைத்தார். இதன்பின்னர் அங்கு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தில் பெறப்படும் தகுதியான மனுக்களுக்கு நிவர்த்தி காணப்படும். பெரும்பாலான மனுக்கள் முதியோர் ஓய்வூதிய கோரிக்கை மனுக்களாக உள்ளன. வயது முதிர்ச்சியால் உழைக்க முடியாத முதியோரு…

  15. நிபந்தனையின்றி அ.தி.மு.க.வில் இணைகின்றார், தீபா எந்தவித நிபந்தனையும் இல்லாமல் அ.தி.மு.க.வில் இணைவதாக மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அறிவித்துள்ளார். இந்த விடயம் குறித்த கோரிக்கை மனுவை, தீபாவின் கணவரும், எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவையின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளருமான மாதவன் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் வழங்கியுள்ளார். குறித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, “ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அவரது ஆதரவாளர்களின் ஆதரவுடன் இரண்டரை ஆண்டுகளாக எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை செயற்பட்டு வந்தது. ஆனால், கடந்த ஜனவரியில் நடந்த அமைப்பின் பொதுக்குழுக் கூட்டத்தில் அ.தி.மு.க.வுடன் அமைப்பை இணைக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. மறைந்த ஜெயலலிதாவைப் பின்பற்றி செயற்ப…

  16. ரஜினியின் குரல்: மௌனம் காக்கும் தி.மு.க, அ.தி.மு.க எம். காசிநாதன் / 2019 ஓகஸ்ட் 19 திங்கட்கிழமை, பி.ப. 12:56 “பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கிருஷ்ணர், அர்ஜூணன் போன்றவர்கள்” என்று, ரஜினிகாந்த் பேசியது, தமிழக அரசியலில் பரபரப்பாகி இருக்கிறது. துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடுவின் ‘கேட்டல், கற்றல், வழி நடத்துதல்’ (Listening, Learning, Leading) என்ற நூலின் வெளியீட்டு விழா, சென்னையில் நடத்தப்பட்டதே பலரது புருவங்களை உயர்த்தியது. துணைக் குடியரசுத் தலைவர் எழுதியுள்ள இந்த புத்தகம் இளம் நாடாளுமன்ற, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாக இருக்கும். அப்படிப்பட்ட நூலை எழுதியுள்ள பா.ஜ.கவின் மூத்த தலைவர்கள…

  17. ஈரோட்டை தலைநகராக கொண்டு கொங்கு நாடு தனி மாநிலம்... பொங்கலூர் மணிகண்டன் கோரிக்கை.! சென்னை: கொங்கு நாடு என்ற பெயரில் 12 மாவட்டங்களை உள்ளடக்கி ஈரோட்டை தலைநகராகக் கொண்டு தனி மாநிலத்தை உருவாக்க வேண்டும் என அமமுக நிர்வாகி பொங்கலூர் மணிகண்டன் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக பொங்கலூர் மணிகண்டன் வெளியிட்ட அறிக்கை: நீ லகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல்,, கரூர், திருச்சி,சேலம், விழுப்புரம், நாமக்கல், தருமபுரி கிருஷ்ணகிரி ஆகிய 12 மாவட்டங்களை இணைத்து கொங்கு நாடு என்ற பெயரில் தனி மாநிலம் உருவாக்க வேண்டும். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்த மண்ணும் கொங்கு நாடே. கொங்கு நாட்டின் ஒரு பகுதியான மலபார் ஜில்லா, பாலக்காடு கேரளாவுடன் மொழிவாரியாக மாநிலப் பிரிவி…

  18. அமெரிக்கால போயி வெற்றிக் கொடி நாட்டப் போறாரு நம்ம ஆளு !! எடப்பாடியைக் கொண்டாடிய ராஜேந்தி பாலாஜி !! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 28 ஆம் தேதி அமெரிக்கா , இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு 10 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அவர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறார். அதே நேரத்தில் தமிழகத்தில் ஏற்கனவே உலக மூதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றதே. அதில் முதலீடுகள் ஈர்க்கப்படவில்லையா என திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இதனிடையே வெளிநாடு செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது பொறுப்புகளை, துணை முதலமைச்சர் ஓபிஎஸ்சிடம் கொடுக்காமல் அமைச்சர் தங்கமணியிடம் கொடுத்துச் செல்லப் போவதாக தகவ்லகள் வெளியாகி…

    • 1 reply
    • 672 views
  19. பாலியல் வழக்குகளை விசாரிக்க தனியான நீதிமன்றம்- முதல்வர் தமிழகத்தில் பாலியல் வழக்குகளை விசாரிப்பதற்கு தனியான நீதிமன்றம் அமைக்க மத்திய அரசுக்கு செய்யவுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் எடப்பாடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவிக்கையில், “நீதியரசர்களும், ஆசிரியர்களும் இறைவனுக்கு சமமானவர்கள். சேலம் மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றங்கள் மூலம் அதிக வழக்குகள் விசாரிக்கப்பட்டு நீதி வழங்கப்பட்டு வருகிறன. தற்போது எடப்பாடியில் புதிய நீதிமன்றம் திறக்கப்பட்டதன் மூலம் விரைவில் நீதி கிடைக்க வழிவகை ஏற்படும். …

    • 2 replies
    • 508 views
  20. சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் டோக்கன் இயந்திரங்கள் பழுது.. பயணிகள் இலவசமாக செல்ல அனுமதி! சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் டோக்கன் இயந்திரங்களில் ஏற்பட்டுள்ளதால் டிக்கெட் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் பல தடங்களுக்கு மெட்ரோ ரயில் சேவை வழங்கப்படுகிறது. சென்னை கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது.இதேபோல் வண்ணாரப்பேட்டை - மண்ணடி - சென்னை கோட்டை - சென்னை சென்ட்ரல் - அரசு வளாகம் - எல்.ஐ.சி - ஆயிரம் விளக்கு - அண்ணா மேம்பாலம் - தேனாம்பேட்டை - நந்தனம் - சைதாப்பேட்டை - கிண்டி - ஆலந்தூர் - மீனம்பாக்கம் - சென்னை விமான நிலையம் வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்…

  21. தமிழக பாஜக தலைவர் பதவியைப் பிடிக்க போட்டா போட்டி... தலைவர் ரேஸில் முந்தும் ஹெச். ராஜா..? தமிழக பாஜக தலைவர் பதவியைப் பிடிக்க கடும் போட்டி நிலவி வரும் நிலையில் ஹெச். ராஜாக்கு அந்த வாய்ப்பு அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜகவின் தேசிய தலைவராக அமித் ஷா செயல்பட்டுவருகிறார். செயல் தலைவராக ஜே.பி.நட்டாவும் இருந்துவருகிறார். இந்நிலையில் அகில இந்திய பாஜக உட்கட்சித் தேர்தல் செப்டம்பர் 11 முதல் நாடு முழுவதும் தொடங்க உள்ளது. முதல் கட்டமாக மாவட்ட, மாநில வாரியாகத் தலைவர்கள் தேர்வு முடிந்த பிறகு தேசிய கவுன்சில் அமைக்கப்பட்டு, பிறகு பாஜகவின் புதிய தேசிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அக்கட்சியின் தேர்தல் அதிகாரி ராதாமோகன் சிங் அறிவித்துள்ளார். மேல…

  22. திண்டிவனம் அருகே வீடுகளில் மீண்டும் ரகசிய குறியீடு வரையப்பட்டுள்ளது. இதுகுறித்து 3 வடமாநில வாலிபர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்- மரக்காணம் சாலையில் மானூர் அருகே கோபாலபுரம் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 12ம் தேதி காலை இங்கு வடமாநில இளைஞர்கள் சிலர் வீடு வீடாகச்சென்று பழைய துணிமணிகள் வாங்கி சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் வீடுகளின் மதில் சுவர்களில் கலர் பென்சிலால் ரகசிய குறியீடுகள் வரையப்பட்டிருந்ததைக்கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பழைய துணி வாங்க வந்த வடமாநில இளைஞர்கள்தான் இந்த ரகசிய குறியீட்டை வரைந்திருப்பார்கள் என கிராம மக்கள் தெரிவித்தனர்.இதையடுத்து மிகப்பெரிய அள…

    • 0 replies
    • 662 views
  23. வேலூரை 3ஆக பிரித்து.... திருப்பத்தூர், ராணிப்பேட்டை புதிய மாவட்டங்கள் உதயம்.. முதல்வர் அறிவிப்பு. வேலூர் மாவட்டத்தை 3-ஆக பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய இரு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். 73-ஆவது சுதந்திர தினம் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.அவர் அப்போது சுதந்திர தின விழா உரையில், வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்படுகிறது. திருப்பத்தூர், ராணிப்பேட்டையை தலைமையிடங்களாக கொண்டு வேலூர் மாவட்டம் 3-ஆக பிரிக்கப்படுகிறது என அறிவித்தார். தமிழகத்தில் இதுவரை மொத்தம் 32 மாவட்டங்கள் உள்ளன. அரியலூர், பெரம்பலூர் ஆகியவை தனிமாவட்ட…

  24. சீமானும் கிராமப்பொருளாதாரமும் ஜெயமோகன் அன்புள்ள ஜெ, சமீபமாக நான் மிகவும் கவனிப்பது சீமானின் பரப்புரைகளைத்தான்.தமிழ் அரசியல் மேடைகளில் முதன்முறையாக ஜெ.சி.குமரப்பாவின் கிராமப்புற காந்திய பொருளாதாரத்தை வலிய, உரக்க பேசும் ஒரே அரசியல்வாதி சீமான் தான். இது எனக்கு மிக வியப்பாக இருக்கிறது. காந்தியத்தை அதிகம் எழுதிய நீங்கள் இதைக்கவனித்திருக்கிறார்களா? அன்புடன், வா.ப.ஜெய்கணேஷ். அன்புள்ள ஜெய்கணேஷ் கிராமியப்பொருளியல், விவசாயத்தின் அழிவு ஆகியவற்றை பேசும் ஏராளமான தன்னார்வ அமைப்புக்கள் இங்கே உள்ளன. அவற்றிலிருந்து சில வரிகள் சீமான் போன்றவர்களின் நாவுகளில் சென்றமைகின்றன. அவற்றை ஸ்டாலின் பேசமுடியாது, ஏனென்றால் அவர் உடனடியாக அரசாட்சிக்கு வ…

  25. அமித் ஷாவும் நரேந்திர மோதியும், கிருஷ்ணன் அர்ஜுனனை போன்றவர்கள். இதில் யார் கிருஷ்ணன் யார் அர்ஜுனன் என்பது நமக்குத் தெரியாது. இது அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரியும். காஷ்மீர் விவகாரத்திற்காக அமித்ஷாவுக்கு வாழ்த்துகள் காஷ்மீரை இரண்டாக பிரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது என்று ரஜினி வெங்கையா நாயுடு புத்தக வெளியீட்டு விழாவில் பேசினார். இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. நாடு முழுவதும் குடியரசுத் துணைத் தலைவர் கலந்துகொண்ட 330 பொது நிகழ்ச்சிகளின் விவரங்களை 'லிசனிங், லேர்னிங் அண்ட் லீடிங்' எனும் அந்த நூல் விவரிக்கிறது. வெங்கையா நாயுடு 19 நாடுகளில் மேற்கொண்ட வெளிநாட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.