தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10252 topics in this forum
-
``சிறை விதிகளின்படி பேரறிவாளன் விடுதலை பெற வேண்டியவர்!" ``ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை மாநில அரசே முடிவு செய்துகொள்ளலாம்" என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கூறியிருந்தது. அதையடுத்து, கடந்த 9-ம் தேதி கூடிய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், ஏழு பேரின் விடுதலைக்கான தீர்மானத்தை நிறைவேற்றி, அதைத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்குப் பரிந்துரை செய்து அனுப்பிவைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அந்தப் பரிந்துரைக் கடிதம் அனுப்பப்பட்டு இரண்டு வாரங்களுக்கு மேல் ஆன நிலையில், அதன்மீது எந்த முடிவும் எடுக்காமல் அமைதிகாத்து வருகிறார் தமிழக ஆளுநர். …
-
- 0 replies
- 870 views
-
-
நடிகர் ராஜ்குமார் கடத்தல்: வீரப்பன் கூட்டாளிகள் என சந்தேகிக்கப்பட்ட 9 பேரும் விடுதலை செய்யப்பட்டது ஏன்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 18 ஆண்டுகளுக்கு முன்பாக கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 9 பேரையும் ஈரோடு மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES கன்னட திரையுலகின் மிகப் பிரபலமான நடிகராக …
-
- 1 reply
- 1.3k views
-
-
திருமுருகன் காந்தியின் உடல்நிலை பாதிப்பு: வைத்தியசாலையில் அனுமதி! மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சுகவீனம் காரணமாக இன்று (திங்கட்கிழமை) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேலூர் அருகில் உள்ள அடுக்கம்பாறை மருத்துவமனையிலேயே அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தான் கைது செய்யப்பட்ட நாளில் இருந்து தன்னை மருத்துவ சிகிச்சைகளுக்கு அழைத்துச் செல்லுமாறு தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அவருக்கு கடும் வயிற்றுப்போக்கு ஏற்பட்ட நிலையில் அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில்…
-
- 0 replies
- 624 views
-
-
தமிழக அரசியல் 2018 ரஜனியின் அரசியல்! BJP யின் அவசரமா?... JV Breaks
-
- 22 replies
- 2.1k views
-
-
இலங்கை அகதிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படாததால் பெரும் திண்டாட்டம் இலங்கையில் கடந்த 1983 இல் உள்நாட்டுப் போர் ஆரம்பித்த காலக்கட்டத்திலிருந்தே தமிழகத்துக்கு அகதிகளாக இலங்கைத் தமிழர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் 119 அகதிகள் இடைத்தங்கல் முகாம்கள் உள்ளன. தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் ஒரு இலட்சத்தி இரண்டாயிரம் பேர் வசித்து வருகின்றனர். ஆனால் மண்டபம் முகாமில் மட்டும் தற்போது 533 குடும்பங்களில் மொத்தம் 1,673 பேர் வசித்து வருகின்றனர். மண்டபம் முகாமில் வசித்து வரும் இலங்கை அகதிகளுக்கு கடந்த 20 நாட்களுக்கு மேலாக உதவித்தொகை வழங்கப்படாததால் குழந்தைகள் முதியவர்கள் உணவு மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கு கடும் அவதியுற்று வருகி…
-
- 2 replies
- 1.1k views
-
-
பியூட்டி பார்லரில் இளம்பெண்ணை கடுமையாகத் தாக்கிய திமுக முன்னாள் கவுன்சிலர்: கட்சியிலிருந்து இடைநீக்கம் பெரம்பலூரில் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணை தாக்கி எட்டி உதைத்து கொடுமைப்படுத்திய திமுக முன்னாள் கவுன்சிலர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். பொதுவாக பெண்களை தாக்கும் அரசியல்வாதிகள் வடமாநிலங்களில் அதிகம் காணலாம். வீக்கர் செக்ஸ் என்று பெண்களை அழைப்பார்கள். பெண்களை தாக்குவது தரக்குறைவாக பேசுவதை சட்டம் கடுமையாக பார்க்கிறது. சாதாரண ஆண்கள் அவ்வாறு நடப்பதையே கடுமையாக விமர்சிக்கப்படும் காலகட்டத்தில் பொதுவாழ்வில் இருப்பவர்கள் பெண்களை கடுமையாக தாக்குவதும், எட்டி உதைப்பதும் கடுமையாக கண்டிக்கப்படவேண்டிய ஒன்று. திமுக போன்ற…
-
- 4 replies
- 1.8k views
-
-
இலங்கையின் இறுதி யுத்தத்தை இந்தியாவே நடத்தியது: மூத்த ஊடகவியலாளர் அய்யநாதன் இலங்கையின் இறுதியுத்தத்திற்கு இந்தியா உதவியது என்பதைவிட இந்தியா நடத்தியது என்பதே உண்மை என்றும், அதனால் அப்போதைய ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கூட்டணி தண்டிக்கப்பட வேண்டும் என்றும், தமிழக ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமான அய்யநாதன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர் படுகொலையில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கூட்டணி உடந்தையாக இருந்தது என்பது தமிழகத்தில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற தனியார் தொலைக்காட்சி ஒன்றின் பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியிருந்த, குறித்த ஊடகவியலாளர் மேற்படி தெரிவ…
-
- 1 reply
- 1.5k views
-
-
சிரமமான சிறை வாழ்க்கையை சிதறடிக்க உதவுங்கள் : ராஜீவ் கொலை வழக்கு : சாந்தன் கடிதம் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 27 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சாந்தன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு 27 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினி உள்ளிட்ட எழுவரும் விடுதலைக்காக போராடி வருகின்றனர். இந் நிலையிலேயே சாந்தன் தன்னை விடுதலை செய்ய கோரி தனது வழக்கறிஞர் ராஜகுரு மூலமாக மத்திய உள்துறை அமைச்சருக்கு 4 பக்கங்கள் அடங்கிய கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். சாந்தன் கடிதத்தில், “நான் சுதேந்திரராஜா என…
-
- 0 replies
- 438 views
-
-
ராஜீவ்காந்தி கொலை வழக்கு: 4 இலங்கையர்களின் நிலை என்ன? பகிர்க படத்தின் காப்புரிமைSHARAD SAXENA/THE INDIA TODAY GROUP/GETTY IMAGES முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்க தமிழக அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது. ஆனால், இவர்களில் நான்கு பேர் இலங்கை குடிமக்களாக இருக்கும் நிலையில் விடுதலைக்குப் பிறகு அவர்கள் எங்கு செல்வார்கள்? ராஜீவ் காந்தி கொலையில் தண்டிக்கப்பட்டு கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுவிக்க தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்தத் தீர்மானம் தற்போது ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் …
-
- 0 replies
- 742 views
-
-
போலீசையும், நீதிமன்றத்தையும் மிக கேவலமாக பேசிய ஹெச்.ராஜா - வைரல் காணொளி.! பாஜக தேசிய செயலாளரான ஹெச்.ராஜா அவ்வப்போது பகீர் கருத்துக்கள் பலவற்றை தெரிவித்துவிட்டு அது சர்ச்சையான பின்பு குறிப்பிட்ட கருத்தினை நான் தெரிவிக்கவில்லை என பின்வாங்குவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம், மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க பாஜகவினர் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால், போலீஸ் இதற்கு அனுமதி அளிக்கவில்லை. அது மசூதி இருக்கும் இடம் என்பதால், உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி பாஜகவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அழைக்கப்பட்டிருந்தார்.…
-
- 11 replies
- 2.7k views
-
-
சசிகலா புஷ்பா.. தொடர்பான அவதூறு பதிவுகளை நீக்க... பேஸ்புக், கூகுளுக்கு டெல்லி கோர்ட் உத்தரவு. சசிகலா புஷ்பா தொடர்பான அவதூறு பதிவுகளை நீக்க வேண்டும் என பேஸ்புக் மற்றும் கூகுளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சசிகலா புஷ்பா குறித்த அவதூறு புகைப்படங்கள் கடந்த 2016-ஆம் ஆண்டு சமூக வலைதளங்களில் வெளியாகின. இது முற்றிலும் மார்பிங் செய்யப்பட்டது என சசிகலா புஷ்பா மறுத்தார். எனினும் அவர் அதிமுகவில் நீக்கப்பட்டு அதிமுக மூத்த தலைவராக தாக்கப்பட்டு கொலை மிரட்டல்கள் எழுந்ததாகவும் நாடாளுமன்றத்தில் கண்ணீர் மல்க புகார் தெரிவித்தார். மேலும் கடந்த 2011-ஆம் ஆண்டு அவரது வீட்டில் பணிபுரிந்த வேலையாட்களை அவரது குடும்பத்தினர் பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகவும் …
-
- 0 replies
- 454 views
-
-
திருமுருகன் காந்தி மீதான ஊபா சட்டம் இரத்து - நீதிமன்றம் அதிரடி.! கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னையில் பாலஸ்தீன விடுதலை குறித்து பேசியதற்காக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது ஊபா சட்டம் பாய்ச்சப்பட்டிருந்தது. தீவிரவாதிகள் மீது பயன்படுத்தப்படும் ஊபா சட்டத்தினை திருமுருகன் காந்தி மீதி பயன்படுத்தியதை தமிழக அரசியல் கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் கடுமையாக கண்டித்திருந்தன. இந்த நிலையில், இன்று திருமுருகன் காந்தி மீதான ஊபா சட்டத்தினை நீக்கியுள்ளது எழும்பூர் நீதிமன்றம். கடந்த 2017இல் சென்னையில் பிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் பேசியதாக திருமுருகன் காந்தி மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதியப்பட்ட நிலையில் UAPA பிரிவை மட்டும் ரத்து செய்து…
-
- 0 replies
- 510 views
-
-
பாஜகவுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தவர் கருணாநிதி: சென்னையில் நடந்த நினைவேந்தலில் மத்திய அமைச்சர் கட்கரி பெருமிதம்; சமூகநீதியை காக்க வாழ்வை அர்ப்பணித்தவர் என குலாம்நபி ஆசாத் புகழாரம் தெற்கில் உதித்தெழுந்த சூரியன்’ எனும் தலைப்பில் கருணாநிதி புகழ் வணக்கக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. படம்: க.ஸ்ரீபரத் சமூகநீதி, மதச்சார்பின்மையை காக்க தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் கருணாநிதி என தேசியத் தலைவர்கள் புகழாரம் சூட்டினர். திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த 7-ம் தேதி காலமானார். அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் ‘தெற்கில் உதித்தெழுந்த சூரியன்' என்ற தலைப்பில் தேசிய தலைவர் கள் பங்கேற்ற பு…
-
- 1 reply
- 871 views
-
-
தி.மு.க. ஒரு வார்த்தை மத்திய அரசிடம் கூறியிருந்தால் தமிழர்களை காப்பாற்றியிருக்கலாம் தி.மு.க. ஒரு வார்த்தை மத்திய அரசிடம் கூறியிருந்தால் தமிழர்களை காப்பாற்றியிருக்கலாம் என அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்தார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் விஷயத்தில் தமிழக அரசுக்கு அதிகாரம் இருப்பதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அந்த பரிந்துரை மீது ஆளுநர் காலம் தாழ்த்தாமல் முடிவெடுக்க வேண்டும் என பல்வேறு கட்சியினரும் தெரி…
-
- 1 reply
- 459 views
-
-
சென்னை சிறைக்குள் இருந்தபடி சர்வதேச கடத்தல் கும்பலுடன் உரையாடிய இலங்கை கைதி தமிழ் நாட்டின் புழல் சிறைக்குள் இருந்தவாறு நவீன தொலைபேசிகளை பயன்படுத்தி சிறைக்கைதிகள் வெளிநாடுகள் உள்ளவர்களுடன் உரையாடியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை புழல் சிறையில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புழல் சிறையில் உள்ள கைதிகள் விலை உயர்ந்த தொலைபேசிகள், ஆடைகள், உணவு வகைகள் போன்றவற்றுடன் வாழ்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. புழல்சிறை குறித்த இந்த குற்றச்சாட்டை நிருபிக்கும் வகையில் அவர்கள் எடுத்துக்கொண்ட செல்பி படங்களும் வெளியாகி…
-
- 0 replies
- 562 views
-
-
பிராமணர்கள்’ தான் நாட்டையே கட்டுப்படுத்துகிறார்களா??
-
- 0 replies
- 647 views
-
-
சென்னையில் சிறப்பு நீதிமன்றம்.... 'கிலி'யில் 75 குற்றப் பின்னணி எம்.எல்.ஏ-க்கள்! சென்னையில் சிறப்பு நீதிமன்றம் ஸ்டார்ட். கிலியில் 75 குற்றப் பின்னணி எம்.எல்.ஏ-கள் `தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகளுக்குத் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும்’ என வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யா பொதுநல வழக்கு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில் போட்டார். நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, `குற்றப் பின்னணி கொண்ட எம்.பி., எம்.எல்.ஏ-களை விசாரிக்கச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும்’ எனக் கடந்த ஆண்டு நவம்பரில் உத்தரவிட்டது. இதன்பிறகு இந்த வழக்கு கடந்த ஆண்டு …
-
- 0 replies
- 1.5k views
-
-
டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் மனு நிராகரிப்பு! ஆட்டம் காணும் அதிமுக? பொதுச் செயலாளரை கட்சி தேர்தல் மூலம் தேர்வு செய்ய வேண்டும். இதுகுறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் அ.தி.மு.க-வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்துசெய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் மனுக்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதனால் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி குறித்து உடனே முடிவெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி, 'அ.தி.மு.க-வின் அடிப…
-
- 0 replies
- 567 views
-
-
ஈரோடு அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு, ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ள அதிசய சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. ஈரோடு மாவட்டம், அறச்சலூர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள், கலானி - விஜயகுமார் தம்பதியர். திருமணமாகி மூன்றரை ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாமல் இந்த தம்பதி வருத்தத்தில் இருந்திருக்கின்றனர். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற கலானியை பரிசோதித்த மருத்துவர்கள், ‘நீங்க கர்பமாக இருக்கீங்க’ என்ற இன்ப அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல்,‘ஸ்கேன் செஞ்சு பார்த்ததில்,'' உங்களுக்கு வயிற்றுல 3 குழந்தைகள் இருக்கு’ என மருத்துவர்கள் சொல்ல, தம்பதியர் துள்ளிக்குதித்து மகிழ்…
-
- 5 replies
- 1.5k views
-
-
குட்கா ஊழல் விவகாரம்: அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீடுகளில் சிபிஐ ரெய்டு முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் - கோப்புப் படம் குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோரின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 40 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனை தங்கு தடையின்றி நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 8-ம் தேதி வருமானவரித் …
-
- 4 replies
- 940 views
-
-
``அன்று பெரியார், மகாத்மா காந்தி... இன்று திருமுருகன் காந்தி" தடுப்புக்காவல் சட்டத்தில் அடுத்து யார்? "என்றென்றும் மக்கள் புரட்சிக்காக மே 17 இயக்கம் காலத்தில் நிற்கும். நாங்கள் உழைத்து சிறுகச்சிறுக வங்கியில் சேர்த்த மொத்த நிதியும் சென்ற வாரம் முடக்கப்பட்டிருக்கிறது. எங்கள் நண்பரின் நகையை வைத்து இந்தக் கூட்டத்தை நடத்துகிறோம். ஆனால், என்றுமே உங்கள் அடக்குமுறைகளுக்கு அடிபணிய மாட்டோம்." மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் கைதைக் கண்டித்தும் அவரை விடுதலை செய்யக்கோரியும், ''உபா' எனும் கறுப்புச்சட்டத்தினை நீக்கிடு' என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி மே 17 இயக்கம் சார்பில் பொதுக்கூட்டம் செப்டம்பர் 8, 2018 அன்று சென்னை…
-
- 0 replies
- 1.3k views
-
-
'பாசிச பாஜக ஒழிக' என கோஷம் எழுப்பிய பெண் கைது பகிர்க சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் மாநில பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தராஜன் முன்பாக பா.ஜ.கவுக்கு எதிராக கோஷமிட்ட பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரசியல் கட்சிகள் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளன. படத்தின் காப்புரிமைFACEBOOK Image captionசோஃபியா இன்று காலையில் சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பயணம் செய்தார். விமானத்தில் அவருக்கு சில இருக்கைகள் தள்ளி தூத்துக்குடி கந்தன் காலனியைச் சேர்ந்த சோஃபியா என்ற பெண்ணும் பயணம் செய்தார். அவருடன் அவருடைய பெற்றோரும் பயணம் செய்தனர். …
-
- 18 replies
- 2.4k views
-
-
தொழில் பெற்றுத் தருவதாக கூறி வெளிநாடு சென்ற தமிழர்களின் அவலம் நோர்வேயில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி தமிழர்கள் 54 பேரிடம் தலா இரண்டு இலட்சம் ரூபா வீதம் மொத்தம் ஒருகோடியே 62 இலட்சம் ரூபாவை பெற்று அவர்களை மோசடிக்காரர்கள் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இராமநாதபுரம், சிவகங்கை, நாகை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 54 பேருக்கு நோர்வே நாட்டில் இராணுவத்தில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி, விழுப்புரத்தைச் சேர்ந்த ஹரி, நாகர் கோயிலைச் சேர்ந்த முனியசாமி ஆகியோர் அவர்களிடம் தலா இரண்டு இலட்சம் ரூபா வீதம் 1 கோடியே 62 இலட்சம் ரூபா வாங்கியுள்ளனர். பணத்தை பெற்றுக் கொண்ட இவர்கள் குறித்த 54 பேரையும் நோர்வேக்கு அனுப்பி வைக…
-
- 1 reply
- 1k views
-
-
சென்னை: பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் தமிழகத்தில் தற்போது நடைபெற்றுவம் நிலையில் நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம். தமிழகமே தற்போது பரபரப்பாக காணப்பட்டு வருகிறது. இதில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவது 7 தமிழர்கள் விடுதலை, மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் ஊழல் சம்பவங்கள்.அவசியம் இல்லை ஆனால் இந்த விவகாரத்தில், அமைச்சர் பதவி விலக வேண்டும், அல்லது தமிழக அரசே அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி கண்டன எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. ஆனாலும், "தற்போது ரெய்டுதான் நடந்துள்ளது? நீதிமன்றம்தானே ஒருவரை குற்றவாளியா என்பதை முடிவு செய்யும். நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வரும்வரை அனைவரும் நிரபராதிகளே, அதுவரை அமைச்சரை ப…
-
- 0 replies
- 530 views
-
-
உணவும் உழவும் தமிழகத்தின் நிலத்தடி நீரை உறிஞ்சி தமிழகத்தை பாலைவனமாக மாற்றப்போகும் சீமைக் கருவேல மரங்களை கூண்டோடு வேரறுத்து தமிழகத்தை வளமான விவசாய பூமியாக மாற்ற போராடுகிறார் வேலூர் அணைக்கும் கரங்கள் ப. சரவணன்.இவரின் களப்பணிகள் குறித்து சமீபத்தில் வேலூர் சதுப்பேரி என்கின்ற ஒரு கிராமத்தில் 100 நாள் விவசாயப் பணியிலிருந்த அவரை ஒரு இனிய காலை வேளையில் சந்தித்துப் பேசினோம்.
-
- 0 replies
- 1.2k views
-