Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அயலகத் தமிழர்களுக்கு ஸ்டாலின் அறிவித்த புதிய திட்டம்! christopherJan 12, 2025 12:51PM அயலகத் தமிழக தின விழாவில், அயலகத் தமிழர்களுக்காக ரூ. 10 கோடியில் புதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 12) அறிவித்தார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அயலகத் தமிழர் தின விழாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இரண்டாவது நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு அயலகத் தமிழர்களுக்கான விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் “நான் முதல்வர் ஆன பிறகு , சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றபோது, தாயகத்தில் வாழுகிற உணர்வை அங்குள்ள தமிழர்கள் எனக்கு ஏற்படுத்தினார்கள். அமெரிக்க பயணத்தில்…

  2. ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு இல்லை – விஜய். நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தீவிரமாக தயாராகி வருகின்றது. இந்நிலையில் அக் கட்சித் தலைவர் விஜய் அவரது எக்ஸ் தளத்தில் , தேர்தலுக்கு முன்பு போலியான வாக்குறுதிகளை மக்களைக் கொடுத்து தேர்தலின் பின் மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தற்போது தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம். அதற்கு நீட் தேர்வு விவகாரம் ஒரு சான்று. 2021 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை கண்டிப்பாக ரத்து செய்வோம் என்று ஆட்சியாளர்கள் மக்களை நம்ப வைத்தனர். ஆனால், தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் அரசுக்குத்தான் உள்ளது மாநில அரசால் அதனை ரத்து ச…

      • Thanks
      • Haha
    • 8 replies
    • 520 views
  3. அங்கீகரிக்கப்பட்ட கட்சியானது நாம் தமிழர் கட்சி: சின்னம் கிடைப்பதில் இழுபறி! சென்னை: நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் வழங்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் அக்கட்சிக்கு சின்னம் கிடைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மக்களவைத் தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளை பெற்றதால், நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதனை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக தலைமை…

      • Haha
    • 2 replies
    • 398 views
  4. இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தற்சமயம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மீனவர்களை சுட்டிக்காட்டி இந்த கடிதத்தை அவர் எழுதியுள்ளார். மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு மீன்பிடித் தொழிலை மட்டுமே பெரிதும் நம்பியுள்ளதாகவும் அவர்களை, இலங்கைக் கடற்படையினர் சிறைபிடிப்பதால், அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் குறித்த கடிதத்தில் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். உரிய இராஜதந்திர வழிமுறைகளை முன்னெடுத்து, அனைத…

  5. பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர் Jan 09, 2025 11:36AM IST ஷேர் செய்ய : தந்தை பெரியார் குறித்து அவதூறு பரப்பியதாக சீமானை கண்டித்து அவரது வீட்டை முற்றுகையிட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று (ஜனவரி 9) முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டனர். கடலூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளார் சீமான், “பெரியார் கொள்கை வழிகாட்டியா? உனக்கு உடல் இச்சை வந்தால், பெற்ற தாயோ, மகளோ, அக்காவோ, தங்கையோ, அவர்களுடன் உறவை வைத்துக்கொண்டு சந்தோஷமாக இரு என்று பெரியார் சொன்னது பெண்ணிய உரிமையா?” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இராமகிருஷ்ணன் கண்டனம்! இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிடர்…

  6. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ், சென்னை "என்னுடைய அப்பாவுக்கு 54 வயது. டீக்கடை வைத்து நடத்தி வந்தார். ஜூலை மாதம் அவருடைய டூவீலரில், ஆலங்குளத்தில் இருந்து வீட்டுக்கு வந்த போது விபத்தில் சிக்கிக் கொண்டார். காயமடைந்த அவரை நாங்கள் திருநெல்வேலி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால், அவருடைய மூளை செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். என்ன செய்வதென்றே எங்களுக்குத் தெரியவில்லை.," என்று விவரிக்கிறார் மகேஷ். "அவர் வாழ்நாள் முழுவதும் படுக்கையிலேயே தான் இருக்கும் நிலைமை வரும் என்று மருத்துவர்கள் கூறினார்கள். அவருடைய உடல் உறுப்புகளை தானமாக தந்தால் மற்றவர்கள் வடிவில் அப…

  7. பட மூலாதாரம்,AFP கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 6 ஜனவரி 2025 எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். சென்னையில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 43 வயதான நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 31) போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றவாளிக்கு தண்டனை கிடைப்பதில் சிறுமியின் பாட்டிக்கு பிரதான பங்கு உள்ளதாகக் கூறுகிறார், அரசு சிறப்பு வழக்கறிஞர் அனிதா. வழக்குப் பதிவான ஓராண்டில் நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது. போக்சோ வழக்குகளில் முன்னுதாரண வழக்காக இது இருப்பதாகக் கூறுகின்றனர், குழந்…

  8. பெண்கள் பாதுகாப்பு குறித்து ரஜினிகாந்த் அபத்தமான பதில்! சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் 19 வயது மாணவி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதையடுத்து, தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்விகளை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புறக்கணித்துள்ளார். கடந்த டிசம்பர் 23 ஆம் திகதி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 19 வயது பொறியியல் மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார். புகழ்பெற்ற பல்கலைக்கழகம் ஒன்றில் நடந்த இந்தச் சம்பவம், தமிழகத்தில் பரவலான சீற்றத்தைத் தூண்டி, பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியது. இந்த நிலையில் கூலி படத்தின் படப்பிடிப்பிற்காக தாய்லாந்து சென்று நாடு திரும்பிய ரஜினிகாந்திடம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்வி…

    • 3 replies
    • 474 views
  9. பட மூலாதாரம்,SOCIAL MEDIA கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் அவ்வப்போது எழும் பிரச்னைகள் குறித்து போராட்டங்கள் நடத்தவோ, ஆர்ப்பாட்டங்கள் நடத்தவோ சமீப காலமாக அனுமதி கொடுக்கப்படுவதில்லை என பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் குற்றம் சாட்டுகின்றன. எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் ஆளும் தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகளே இத்தகைய குற்றச்சாட்டுகளை சுமத்துவதுதான் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. என்ன நடக்கிறது? போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பு தமிழ்நாட்டில் கடந்த நான்கைந்து மாதங்களாகவே, அரசியல் கட்சிகளும் இயக்கங்க…

  10. 05 JAN, 2025 | 03:53 PM இலங்கையில் நீண்டகாலமாக நடத்தப்படாமல் இருக்கும் மாகாண சபை தேர்தல்களை மிக விரைவாக நடத்தி தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் தமிழ்நாடு மாநில பிரிவு இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்திக் கேட்டிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில மகாநாட்டில் இது தொடர்பில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அந்த மகாநாடு ஜனவரி 3ஆம் திகதி தொடக்கம் 5ஆம் திகதி வரை விழுப்புரத்தில் கட்சியின் தேசிய மத்தியகுழு உறுப்பினர் பெ. சண்முகம் தலைமையில் நடைபெற்றது. மகாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக்க…

  11. சிந்துவெளியில் மறைந்திருக்கும் புதிரை விடுவிக்க… மூன்று மெகா பரிசை அறிவித்த ஸ்டாலின் christopherJan 05, 2025 14:28PM சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு தொடக்க விழா சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் இன்று (ஜனவரி 5) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கருத்தரங்கை தொடங்கி வைத்து உரையாற்றினார். கட்சியின் அரசல்ல, இனத்தின் அரசு! அவர், “2021-ஆம் ஆண்டு நம்முடைய அரசு அமைந்ததும், ‘திராவிட மாடல் அரசு’ என்று நாங்கள் அதற்கு பெயர் சூட்டினோம். “இது ஒரு கட்சியின் அரசல்ல, இனத்தின் அரசு” என்று குறிப்பிட்டேன். அதற்கு அடையாளமாக இந்த விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன வரலா…

  12. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வக்குமார் பதவி, பிபிசி தமிழ் 4 ஜனவரி 2025 தமிழகத்தில் தேங்காய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது; கடந்த கோடையில் நிலவிய கடும் வெப்பத்தால் தேங்காய் உற்பத்தி குறைந்ததே இதற்குக் காரணம் என்று விவசாயிகள் கூறுகின்றனர். தற்போது விலை உயர்ந்தாலும் தங்களுக்கு எந்த வகையிலும் பயன் இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர். பதுக்கலும் மற்றொரு முக்கியக் காரணமென்று இவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் அதுபோன்ற எந்தப் புகாரும் தங்களுக்கு வரவில்லை என்று தமிழக அரசின் வேளாண் துறை செயலர் அபூர்வா மறுத்துள்ளார். உற்பத்தி குறைவா? பது…

  13. பட மூலாதாரம்,TN DIPR படக்குறிப்பு, தி.மு.கவின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் திருவள்ளுவர் தொடர்பான இரண்டு கட்டுமானங்களுக்கு முடிவுசெய்யப்பட்டது. கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையிலிருந்து திருவள்ளுவர் சிலைக்குச் செல்வதற்கு 77 மீட்டர் நீளத்தில் கண்ணாடி இழைப் பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது. எதற்காக இந்தப் பாலம் கட்டப்பட்டது? அதன் முக்கியத்துவம் என்ன? எப்படிக் கட்டப்பட்டது? கண்ணாடி இழைப்பாலம் திறப்பு கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவிடத்தையும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள இடத்தையும் இணைக்கும் வகையிலான கண்ணாடி இழைப் பாலம் சமீபத்தில் தமிழ…

  14. பட மூலாதாரம்,SEEMAN/VARUNKUMARIPS/X படக்குறிப்பு, சீமானிடம் ரூ. 2 கோடி நஷ்டஈடு கேட்டு வருண்குமார் ஐபிஎஸ் அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் தன்னிடம் மன்னிப்புக் கேட்பதற்காக தொழிலதிபர் மூலமாக சீமான் தூது அனுப்பியதாக, திருச்சி சரக டிஐஜி வருண்குமார் திங்களன்று (டிசம்பர் 30) செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 'தன்னுடைய பரம்பரைக்கே மன்னிப்புக் கேட்கும் வழக்கம் இல்லை' என சீமான் கூறுகிறார். தன்னை அவதூறாகப் பேசியதற்காக சீமான், 2 கோடி ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும் எனக் கோரி அவதூறு வழக்கு ஒன்றையும் வருண்குமார் தொடர்ந்துள்ளார். நாம் தமிழர் கட்சியின…

  15. பட மூலாதாரம்,GK MANI TWITTER PAGE படக்குறிப்பு, பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் "இது என்னுடைய கட்சி. நான் சொல்வதைக் கேட்காவிட்டால் கட்சியை விட்டு வெளியேறலாம். அது யாராக இருந்தாலும்..." - பாமக தலைவர் அன்புமணிக்கு எதிராக சனி அன்று (டிசம்பர் 28) அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் கூறிய வார்த்தைகள் இவை. கட்சியின் இளைஞரணி தலைவராக தனது மகள்வழிப் பேரனை முன்னிறுத்தியதற்கு எதிராக அன்புமணி கோபப்பட்டதால், ராமதாஸ் இவ்வாறு கூறினார். பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுவில் என்ன நடந்தது? ராமதாஸ் உடன் அன்புமணி வார்த்தை மோதலி…

  16. பட மூலாதாரம்,HANDOUT கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இரா.நல்லகண்ணுவுக்கு இன்று (டிசம்பர் 26) நூறாவது பிறந்தநாள். அவர் சார்ந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இது நூற்றாண்டு தொடக்க விழா. 'இப்படியொரு பொருத்தம் யாருக்கும் கிடைக்காது' என்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். தன்னுடைய பிறந்தநாள் குறித்து எதுவும் பேசாமல் கட்சி மற்றும் அதன் எதிர்காலம் குறித்தே அவர் அதிகம் பேசியதாகக் கூறுகிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த லெனின். யார் இந்த நல்லகண்ணு? கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சி மற்றும் போராட்டங்களில் அவரின் பங்களிப்பு …

  17. பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு,முகமது ஷிஹாப் மற்றும் அவரது மனைவி பாத்திமா பர்சானா மார்க்கர் கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் திருச்சி இலங்கைத் தமிழர் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த தம்பதிக்கு எதிராக இலங்கையில் பல கோடி ரூபாய் நிதி மோசடி புகார் இருப்பதால், அவர்கள் மீண்டும் இன்று (டிச. 26) இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுடன் தம்பதியின் 13 வயது மகனும் அனுப்பி வைக்கப்பட்டார். திருச்சி விமான நிலையத்திலிருந்து அவர்கள் இலங்கை சென்றனர். இந்த விவகாரத்தில் தங்களை வலுக்கட்டாயமாக இலங்கைக்கு அனுப்புவதாக, பிபிசி தமிழிடம் பேசிய அப்பெண் தெரிவித்திருந்தார். முதலமைச்சரின் தனிப்பிரிவ…

  18. பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு, கீழ்வெண்மணி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னம் கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம் சுதந்திரத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் நடந்த மிகப் பெரிய வன்முறைச் சம்பவங்களில் ஒன்று கீழ்வெண்மணி படுகொலை. 1968ஆம் ஆண்டில் நடந்த சம்பவத்தில் 40க்கும் மேற்பட்ட பட்டியலினத்தோர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும் குழந்தைகளும். இந்தச் சம்பவத்தின் பின்னணி என்ன? 1968ஆம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி இரவு. அப்போதைய கீழ் தஞ்சை மாவட்…

  19. படக்குறிப்பு, இந்திய மாணவர் சங்கத்தினர் பல்கலைக் கழகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். 2 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை கண்டித்துள்ள தமிழக எதிர்க்கட்சிகள், சென்னையின் மையத்தில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்திலேயே மாணவிக்கு போதிய பாதுகாப்பு இல்லையா? என்று தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர். அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவிக்கு என்ன நடந்தது? தமிழ்நாடு அரசு என்ன சொல்கிறது? சென்னையில் பெண் உணவு டெலிவரி ஊழியருக்கு பாலியல் துன்…

  20. படக்குறிப்பு, ''தி.மு.கவின் அழுத்தத்தால்தான் நான் புத்தக வெளியீட்டு விழாவிற்கு போகவில்லை என்ற கருத்து ஏற்புடையதல்ல.'' கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் சில வாரங்களுக்கு முன்பாக நடந்த, 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயுடன் கலந்துகொள்வதாக இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அதில் கலந்துகொள்ளாதது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த விழாவில் விஜயும் அப்போது வி.சி.கவில் இருந்த ஆதவ் அர்ஜுனாவும் பேசிய பல விஷயங்களும் அரசியல் களத்தை பரபரக்க வைத்தன. ஆனால், தொல். திருமாவளவன் பிபிசியுடனான நேர்காணலில் இத…

  21. பெண்கள் உடைமாற்றும் இடத்தில் ரகசிய கேமரா… ராமேஸ்வரத்தில் அதிர்ச்சி! KaviDec 24, 2024 20:36PM ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அருகே பெண் பக்தர்கள் உடை மாற்றும் தனியார் இடத்தில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவி ஒருவர், குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் சென்றுள்ளார். அங்கு தோஷங்களை கழிக்கக்கூடிய அக்னி தீர்த்த பகுதியில் கடலில் நீராடிவிட்டு, கோயில் அருகில் உள்ள தனியார் நபர்கள் நடத்தி வரும் தண்ணீர் தொட்டி (குளிக்கும் இடம்) மற்றும் ஆடை மாற்றும் இடத்திற்கு சென்று உடை மாற்றியிருக்கிறார். அப்போது அங்கு பொருத்தியிருந்த ரகசிய கேமராவை கண்டறிந்து அதிர்ச்சியான மாணவி, பதற்றத்துடன் சென்று கோயில் காவல்நிலையத்…

  22. இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக கச்சத்தீவை மீட்க வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்படுகின்றமை மற்றும் அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றமை என்பன அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. குறித்த மீனவர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுகின்றமையினால் இரு நாடுகளுக்கு இடையே நிலவும் நல்லுறவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு கவலை வெளியிட்டுள்ளது. இதேவேளை, தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு விரைவாகத்…

  23. இலங்கைக்குள் மீன் பிடித்துவிட்டு , நாங்க மீன் பிடிக்குற இடத்துல இலங்கை நேவி எங்களை துரத்தி வருது எண்டு விளக்கம் கொடுக்கிறார்கள். விளக்கம் கொடுத்தாலும் பொய் பொய்யா சொல்லும்போது அதை ஒரே நேர்கோட்டில் சொல்லிக்கொண்டே போவது கஷ்டம், அதனால அவர்கள வாயாலேயே எப்படி இலங்கை பகுதியில் மீன் பிடிக்கிறோம், எப்படி இலங்கை நேவியின் வருகை பற்றி நமக்குள் தொடர்பாடல் வைத்திருக்கிறோம், எப்படியெல்லாம் அடுத்த நாட்டு மீனவர் பிழைப்பில் மண்ணள்ளி போடுகிறோம் என்று உளறிவிடுகிறார்கள். உளறிட்டோம் என்று தெரிந்துதான்போல வீடியோவுக்கு பின்னூட்டமிடும் பகுதியை இழுத்து மூடிவிட்டார்கள்.

  24. பட மூலாதாரம்,A.R. VENKATACHALAPATHY/ FACEBOOK படக்குறிப்பு, "திருநெல்வேலி எழுச்சியும் வ.உ .சி.யும் 1908" என்ற நூலுக்காக ஆ.ரா. வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் தமிழ்நாட்டை சேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் ஆ.ரா. வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. "திருநெல்வேலி எழுச்சியும் வ.உ .சி.யும் 1908" என்று தமிழில் 2022-ஆம் ஆண்டு வெளிவந்த அவரது நூலுக்காக, ஆய்வுப் பிரிவின் கீழ் 2024-ஆம் ஆண்டுக்கான விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக இலக்கிய நூல்களுக்கே வழங்கப்படும் சாகித்ய அகாடமி விருது இந்த முறை வரலாற்று நிகழ்வு ஒ…

  25. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் இருந்து அக்கரை பேட்டையை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று (20) மதியம் 3 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே ராஜ்குமார், ராஜேந்திரன், நாகலிங்கம் ஆகிய 3 மீனவர்களும் இன்று (21) அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 2 படகில் வந்த 6 கடற்கொள்ளையர்கள் இவர்களது படகை வழி மறித்தது மீனவர்களை கத்தி மற்றும் கட்டையால் தாக்கி விட்டு படகில் இருந்த மீன்கள், மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். தாக்குதலில் இருந்து தப்பிய 3 மீனவர்களும் உடனடியாக அவசரம் அவசரமாக கோடியக்கரை கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர். அங்கிருந்து சக மீனவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.