Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கோவை: யானைகள் ரயில் விபத்தில் சிக்காமல் தடுக்கும் அதிநவீன AI கேமரா - பிபிசி தமிழின் நேரடி விசிட் படக்குறிப்பு, கடந்த 15 ஆண்டுகளில் கோவை - பாலக்காடு வழித்தடத்தில் 11 யானைகள் இறந்துள்ளன - வனத்துறை தரவுகள் கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 9 மார்ச் 2024 தமிழ்நாடு முழுவதும் யானைகள் ரயில்களில் அடிபட்டு இறக்கும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறுகிறது. வனத்துறையின் அதிகாரப்பூர்வ தகவலின்படி தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டுமே, ரயில்களில் மோதி 36 யானைகள் மரணித்துள்ளன. இதில், குறிப்பாக கோவை மாவட்டம் மதுக்கரை அருகே, கோவை – பாலக்காடு வழித்தடத்திலுள்ள இரண்டு ரயி…

  2. புதுடெல்லி: கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி விஜய் நாளை (மார்ச் 10) டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. கரூரில் கடந்த் ஆண்டு செப்டம்பர் 27 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் கடந்த 12-ம் தேதி ஆஜரானார். அப்போது அவரிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் 19-ம் தேதி ஆஜாரக சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து அன்றைய தினம் மீண்டும் அவர் ஆஜரானார். அன்…

  3. எது worth இல்லை தலைவா? உங்கள் மனைவியா? விஜய்யை கிழித்தெறிந்த தவெக பெண் நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் Mani Singh SUpdated: Sunday, March 8, 2026, 21:33 [IST] சென்னை: பெண்ணியம் பேசும் உங்களிடம் கண்ணியம் உள்ளதா? என தவெக உறுப்பினர் ரஞ்சனா நாச்சியார் விஜய்க்கு சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். தனது விவாகரத்து வழக்கு வொர்த்தே இல்லை என விஜய் பேசியதற்கு கண்டனமும் தெரிவித்துள்ளார். எது வொர்த் இல்லை?, உங்கள் மனைவியா அல்லது உங்கள் திருமண வாழ்க்கையா? எனவும் ரஞ்சனா நாச்சியார் கேள்வி எழுப்பியிருக்கிறார். Also Read மனம் திறந்த விஜய் அப்போது அவர், "அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக்கொள்கிறேன். அது worth ஏ இல்லை.. தேவையின்றி நீங்க கஷ்டப்படாதீங்க.. நீங்க கஷ்டப்படுறத பார்த்த…

    • 0 replies
    • 330 views
  4. இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் கொலை; உறவினர்கள் சாலை போராட்டம்.! கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் அகதி முகாமில் வசித்து வந்த சிவக்குமார் என்ற இலங்கை தமிழர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையை செய்துவிட்டு தப்பியோடிய நபர்களின் வீட்டை கொளுத்திய உயிரிழந்த சிவக்குமாரின் உறவினர்கள். அதனைத் தொடர்ந்து கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் முகாமில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுளளதுடன் பலத்த பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்குள்ள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த கொலைச் சம்பவத்தினை கண்டித்து கும்மிட்டிப்பூண்டி இலங்கை தமிழ் முகாம் மக்கள் தேசிய நெஞ்சாலையினை மறித்து சாலை மறியல் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர். https://akkinikkunchu.com/363341/

  5. கோவை மாணவி பாலியல் வன்கொடுமை - 125 நாட்களில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை கட்டுரை தகவல் சுதாகர் பிபிசி தமிழுக்காக 7 மார்ச் 2026 வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி சுந்தரராஜன் தீர்ப்பு வழங்கினார். குற்றம் நடந்த சுமார் 125 நாட்களில் விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கோவையில் கடந்த நவம்பர் மாதம் 2ம் தேதி, 3 பேர் கொண்ட கும்பல் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் குணா ஆகியோரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர் இவ்வழக்கில் குற்றபத்…

  6. 'அடிமனை அரங்கநாதனுக்கே': ஸ்ரீரங்கம் கோவில் வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு ஒரு லட்சம் பேரை பாதிக்கும் என்ற அச்சம் ஏன்? கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 7 மார்ச் 2026, 06:59 GMT வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள் காவிரி ஆற்றின் கரையோரமுள்ள ஸ்ரீரங்கம், கடந்த சில வாரங்களாக பேசுபொருளாக மாறியுள்ளது. இதற்கு காரணம், ஸ்ரீரங்கம் கோவில் அடிமனை விவகாரம். 'அடிமனைகள் அனைத்தும் அரங்கநாத சுவாமிக்கு சொந்தம்' என, பிப்ரவரி 20 ஆம் தேதி திருச்சி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் சுமார் ஒரு லட்சம் பேர் வெளியேற்றப்படும் நிலை வரும் என்று அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். "பூர்வீகமாக வாழ்ந்து வருவதால் இடம் தங்களுக்கே சொந்தம்" என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். "கோவில் நிலத்துக்…

  7. "ரொம்ப நாள் ஆசைய்யா... ஆனா யார்கிட்ட கேட்டாலும் யாராவது சொந்தக்காரங்க சாட்சிக் கையெழுத்துப் போடணும்னு சொன்னாங்க. யாரைக் கூட்டிட்டிப் போறதுன்னு தெரியாம இருந்தேன். இப்போ அறிவு இருக்கான்ல... நல்லகண்ணு அய்யாவே தன்னோட உடலை தானம் செஞ்சுட்டாரு... இதுக்கு மேல காத்திருக்கக் கூடாதுன்னு போய் எழுதிக் கொடுத்துட்டு வந்துட்டேன்..." - அற்புதம் அம்மாளின் வார்த்தைகளில் அத்தனை திருப்தி. அற்புதம் அம்மாளும் பேரறிவாளனும் இன்று (மார்ச் 4) சென்னை ஓமாந்தூரார் மருத்துவமனையில் உடல் தானம் செய்வதற்கான ஒப்புதலை வழங்கியிருக்கிறார்கள். தமிழகத்தின் முதுபெரும் தலைவர் தோழர் நல்லகண்ணு தன் உடலைத் தானம் செய்த பிறகு உடல் தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. "எப்படியிருந்தாலும் மண்ணுக்குப் போற உடம்ப…

      • Thanks
      • Like
    • 3 replies
    • 371 views
  8. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவு Published By: Digital Desk 3 25 Feb, 2026 | 04:06 PM இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு (101) இன்று மதியம் காலமானார். இன்று மதியம் 1.55 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக சென்னை ராஜிவ் காந்தி அரச மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நீண்டகாலமாக அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்த நல்லகண்ணு, இந்திய இடதுசாரி அரசியலில் முக்கியமான குரலாக விளங்கியவர். தொழிலாளர் உரிமைகள், விவசாயிகள் பிரச்சினைகள் மற்றும் சமூக நீதி தொடர்பான பல்வேறு போராட்டங்களில் அவர் முன்னணியில் செயல்பட்டுள்ளார். அவரது மறைவு செய்தி அரசியல் வட்டாரங்களிலும், சமூக செயற்பாட்டாளர்களி…

  9. சக ஆசிரியைகள் பாலியல் புகார் - 9 ஆண்டுக்கு பிறகு நிரபராதி என நிரூபித்த ஆசிரியர் படக்குறிப்பு,ஆசிரியர் கோகில பாண்டியன் கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 28 பிப்ரவரி 2026, 08:13 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் 'தவறான பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஓர் ஆசிரியர், மாணவர்களையும் சமூகத்தையும் எதிர்கொள்வது என்பது கற்பனை செய்ய முடியாத ஒன்று' என, பிப்ரவரி 19-ஆம் தேதியன்று ஆண்டிப்பட்டி நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றில் கூறியுள்ளது. முன்விரோதம் காரணமாக தன் மீது சக ஆசிரியைகள் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியதாக அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கில், இரு ஆசிரியைகள் உள்பட 5 கல்வி அதிகாரிகளுக்கு …

  10. ஓ.பன்னீர் செல்வம் ஸ்டாலினை சந்தித்த பின் திமுகவில் இணைவது பற்றி கூறியது என்ன? பட மூலாதாரம்,ANI 20 பிப்ரவரி 2026, 10:01 GMT புதுப்பிக்கப்பட்டது 36 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தை நடத்தி வரும் ஓ.பன்னீர்செல்வம், இன்று (பிப்ரவரி 20) தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். அந்தச் சந்திப்பிற்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், "வரவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது" எனக் கூறினார். அதற்கு முன்னதாக, இன்று சட்டப்பேரவையில் பேசிய உசிலம்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளருமான ஐயப்பன், "எம்…

  11. புலிகள் மீதான தடையினை நீக்குமாறு வைகோ தொடர்ந்த வழக்கு தள்ளுபடி இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கக் கோரி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991 இல் ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. மேலும், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. 2014 இல் நீதிபதி ஜி.பி.மிட்டல் தலைமையிலான தீர்ப்பாயம் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதித்த தடையை நீட்டிக்க பிறப்பித்த …

  12. இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 620 கிலோ உயர் ரக முந்திரிப் பருப்பு மூடைகள் இந்தியாவில் பறிமுதல் ; ஒருவர் கைது 26 Feb, 2026 | 03:42 PM இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபத்தை அடுத்துள்ள மரைக்காயர்பட்டிணம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக படகில் ஏற்றிக்கொண்டிருந்த 620 கிலோ உயர் ரக முந்திரிப் பருப்பு மூடைகளும் இன்று (26) குறித்த கடற்கரைப் பகுதியில் வைத்து அப்பிராந்திய பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட படகு, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுடன் மரைக்காயர் பட்டினத்தைச் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸார் பறிமுதல் செய்த முந்திரிப் பருப்பு மூடைகளின் பெறுமதி இந்திய மதிப்பில் 15 லட்சம் ரூபாய் எனத் த…

  13. உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்படைந்து வருகிறது. ஆளும் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் தி.மு.க. – காங்கிரஸ் தொகுதி உடன்பாடு இன்னும் எட்டப்படவில்லை. அதற்கான பேச்சுவார்த்தையே இன்னும் நடைபெறவில்லை. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கான அழைப்பு இன்னும் தி.மு.க. சார்பில் விடுக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சி அந்த அழைப்புக்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், முன்னதாக கடந்த 22-ந் திகதி அகில இந…

  14. தொகுதிப் பங்கீட்டில் இரட்டை சவாலை எதிர்கொண்டுள்ள திமுக எவ்வாறு சமாளிக்கப் போகிறது? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப் படபடம் கட்டுரை தகவல் மோகன் பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் "புதிய கட்சிகளுக்கு திமுக போட்டியிட்ட இடங்களை தானமாக வழங்க வேண்டிய சூழல் உள்ளது. கூட்டணி நலன் கருதி கூட்டணி கட்சிகளும் சில இடங்களை விட்டுத் தர வேண்டும்," திமுக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழு தங்களிடம் இவ்வாறு கூறியதாக இந்திய யூனியன் முஸ்லிம் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக-முஸ்லிம் லீக் இடையேயான பேச்சுவார்த்தைக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்…

  15. ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள்: "மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர்" - இந்தியப் பிரதமர் மோடி புகழாரம்! 24 Feb, 2026 | 10:39 AM தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து இந்தியப் பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' தளபக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, "ஜெயலலிதா அவர்களை அவரது பிறந்த நாளில் நினைவுகூர்கிறேன். அவர் ஒரு மனம் கவர்ந்த தலைவராகவும், தலைசிறந்த நிர்வாகியாகவும் எண்ணற்ற மக்களின் இதயங்களிலும், மனங்களிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார். அவரது வாழ்க்கைப் பயணம் அசாத்தியமான மன உறுதி மற்றும் தீர்மானத்துடன் அமைந்திருந்தது." "தமிழக முதலமைச்சர் என்ற மு…

  16. இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம் 21 Feb, 2026 | 02:50 PM இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 22 மீனவர்களை படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் சனிக்கிழமை (21) காலை மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன் பிடி துறைமுகங்களில் இருந்து கடந்த புதன்கிழமை மீன்பிடிக்க சென்ற நான்கு படகுகளையும் அதிலிருந்த 22 மீனவர்களையும் வியாழக்கிழமை அதிகாலை இலங்கை கடற்படையினர் நெடுந்தீவு மற்றும் மன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 22 மீனவர்களும் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைகளில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையை கண்டித்தும், இல…

  17. '10 ஆண்டு கழித்து' - தேமுதிக வருகையால் காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பா? பட மூலாதாரம்,PremallathaDmdk/X கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் செய்தியாளர், பிபிசி தமிழ் 19 பிப்ரவரி 2026 வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் "தி.மு.க உடன் எத்தனையோ முறை கூட்டணி பேசப்பட்டாலும் அது நிறைவேறவில்லை. 2016 ஆம் ஆண்டில் 'பழம் நழுவி பாலில் விழப் போகிறது' என கருணாநிதி கூறினார். பத்து ஆண்டுகள் கழித்து தேன் கலந்த பாலில் அது விழுந்துள்ளது" தி.மு.க உடன் கூட்டணி அமைத்தது குறித்து தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா செய்தியாளர் சந்திப்பின்போது இவ்வாறு கூறினார். சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.கவை காரணம் காட்டி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்களை தி.மு.க குறைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக, அரசியல் விமர்…

  18. பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வான பழங்குடி ஓவியரின் மனைவிக்கு அரசுப்பணி பட மூலாதாரம்,Getty Images நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த குறும்பர் பழங்குடி ஓவியர் கிருஷ்ணன் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ள நிலையில், அவரது மனைவிக்கு அரசுப்பணி வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகள் கல்வியைத் தொடரவும் அரசு வழிவகை செய்துள்ளது. கடந்த ஆண்டில் கிருஷ்ணன் மறைந்துவிட்ட நிலையில், அவரின் குடும்பம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. கிருஷ்ணனின் மனைவி சுசீலா, ஒரு மகன், 3 மகள்களுடன், கிருஷ்ணனின் வெள்ளரிக்கோம்பையில் வசித்து வந்தார். கிருஷ்ணன் மறைவுக்குப் பின், பாதுகாப்பு கருதி, கல்லாறு அருகேயுள்ள புளியமரத்தூர் என்ற கிராமத்திற்கு அவரின் குடும்பம் குடிபெயர்ந்தது. சுசீலாவின் தாய…

  19. தமிழக இடைக்கால பட்ஜெட் 2026: முக்கிய அறிவிப்புகள் என்னென்ன? சென்னை: தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை இன்று (பிப்.17) காலை 9.30 மணியளவில் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் அவர், மகளிர் உரிமைத் தொகையோடு, ரூ.2000 கோடை கால சிறப்புத் தொகை வழங்கப்பட்டதால் ‘தமிழகமே இன்ப அதிர்ச்சியில் உள்ளது’ என்று பெருமிதத்தை வெளிப்படுத்தினார். இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து தங்கம் தென்னரசு ஆற்றிய உரை: பெண்களின் வளர்ச்சியை மையப்படுத்தி தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. விடியல் பேருந்து பயணத்தின் மூலம் பெண்கள் மாதத்துக்கு சராசரியாக ரூ.888 சேமிக்கிறார்கள். மகளிர் உரிமைத் தொகை திட்டம் இந்தியாவுக்கே முன்னோடியாக உள்ளது. ரூ.5000 வழங்கப்பட்டதால் தமிழகமே இன்…

  20. 'தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது' - ஆட்சியில் பங்கு குறித்த ஸ்டாலின் கருத்துக்கு காங்கிரஸ் எதிர்வினை என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப் படம் கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 11 பிப்ரவரி 2026 வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் 'ஆட்சியில் பங்கு' என காங்கிரஸ் கட்சியில் ஒரு சிலர் தொடர்ந்து கோரிவரும் நிலையில் கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் எனக் கூறி அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். காங்கிரஸ் கட்சியின் ஒரு பகுதியினர் 'ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு' என தொடர்ந்து கோரிவரும் நிலையில், சென்னையில் ஊடகம் ஒன்று நடத்திய மாநாட்டில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 'கூட்டணி …

  21. 89,000 இலங்கைத் தமிழர்களின் குடியுரிமைப் பிரச்சினைகளைத் தீர்க்க பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்! தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக மாநிலத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களின் நீண்டகால குடியுரிமைப் பிரச்சினை மற்றும் சட்டப்பூர்வ அந்தஸ்து குறித்து “மனிதாபிமான மற்றும் நடைமுறைக்கு ஏற்ற” தீர்வைக் கோரி முதல்வர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து நேற்று இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் ஸ்டாலின், இந்த பிரச்சினை “ஆழ்ந்த மனிதாபிமான, அரசியலமைப்பு மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது” என்றும் விவரித்தார். அத்துடன், சுமார் 89,000 இலங்கைத் தமிழர்…

  22. என்ன ஆச்சு இவருக்கு? சீமானின் மர்ம அமைதி.. குழம்பிப்போன தம்பிகள்.. பதற்றத்தில் நாம் தமிழர்? Shyamsundar IUpdated: Tuesday, February 10, 2026, 15:40 [IST] கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி (NTK) தமிழ்நாட்டு அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத 'மூன்றாவது சக்தியாக' உருவெடுத்திருந்தது. தீவிரமான தமிழ்த் தேசியப் பேச்சுகள் மற்றும் சீரான வாக்கு வங்கி வளர்ச்சியால் கவனத்தை ஈர்த்த இந்த கட்சி, 2026 சட்டமன்றத் தேர்தலை நெருங்கும் வேளையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு மௌனமான நிலையை எட்டியுள்ளது. Also Read களத்தில் குறைந்த வேகம்? வழக்கமாக தேர்தல் நெருங்கும் நேரங்களில் சீமானின் மேடைப் பேச்சுகளும், தொடர் பொதுக்கூட்டங்களும் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லா…

  23. சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்குள் விசில் கொண்டு செல்ல தடை. சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்குள் இரசிகர்கள் விசில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நிலையில் இந்த தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. மைதானத்துக்குள் பல்வேறு பொருட்களை எடுத்துச் செல்ல வழக்கம் போல தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக குடிநீர் போத்தல்கள்இபவர் பேங்க் உள்ளிட்டவைகளை எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்படுவது வழக்கம். தற்போது முதல் முறையாக விசில்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. சட்டப்பேரவை தேர்தலில் தவெகவுக்கு, விசில் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் சேப்பாக்கம் மைதானத்துக்குள் விசில் கொண்டு செல்ல தடை விதிக்கப்ப…

  24. 'மகளிருக்கு ரூ.5000' - பிகார் போல திமுகவுக்கு தேர்தலில் பலன் தருமா? பட மூலாதாரம்,MKSTALIN/X கட்டுரை தகவல் க. சுபகுணம் பிபிசி தமிழ் 13 பிப்ரவரி 2026, 10:16 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் தமிழ்நாட்டிலுள்ள 1.31 கோடி மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் இன்று காலையில், ரூ.5000 மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தேர்தலை காரணம் காட்டி அடுத்த மூன்று மாதங்களுக்கு மகளிர் உரிமைத் தொகையை நிறுத்தி வைப்பதற்கான முயற்சிகள் நடப்பதாகக் கூறியுள்ள அவர், அதைத் தவிர்க்கவே இவ்வாறு வழங்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார். ஆனால், இது தோல்வி பயத்தையே காட்டுவதாகவும் வாக்குகளைப் …

  25. 'நான் படிக்க முடியுமா என கேட்பார்கள்' - நீதிபதியாகும் கேரளாவின் முதல் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் பட மூலாதாரம்,Thanya Nathan படக்குறிப்பு,24 வயது தான்யா பிறவியிலிருந்தே பார்வை சவால் உடையவர் ஆவார். கட்டுரை தகவல் நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் 12 பிப்ரவரி 2026, 05:59 GMT வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் "சவால்களை கடப்பதை தவிர எனக்கு வேறு எந்த வாய்ப்புகளும் இல்லை. கடின உழைப்பும் நிலையான பயிற்சியும் இருந்தால் நினைத்ததை சாதிக்க முடியும்." 24 வயது தான்யா நாதனின் பேச்சில் உறுதியும் தெளிவும் வெளிப்படுகிறது. இவர், பிறவியிலிருந்தே பார்வை சவால் உடையவர் ஆவார். கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த தான்யா, கடந்தாண்டு உச்ச நீதிமன்றம் அளித்த வரலாற்றுபூர்வ தீர்ப்பை தொடர்ந்து, அதே…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.