Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. `என்னை மகிழ்விப்பதாக எண்ணி எனது நூல்களை விநியோகிக்க வேண்டாம்! ’ - தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு ரா. அரவிந்த்ராஜ் வெ.இறையன்பு ``இப்போதுள்ள பொறுப்பின் காரணமாக, பள்ளிக் கல்வித்துறைக்கு நான் ஒரு மடல் எழுதியுள்ளேன். நான் எழுதியுள்ள நூல்களை எக்காரணம் கொண்டும் எந்த அழுத்தம் வரப்பெற்றாலும், தலைமைச் செயலாளராகப் பணியாற்றும் வரை எந்தத் திட்டத்தின் கீழும் வாங்கக் கூடாது என்கிற உத்தரவே அது” தமிழக அரசின் புதிய தலைமைச்செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் இறையன்பு ஐஏஎஸ், பொது வெளியில் அதிக கவனம் ஈர்த்த ஐ.ஏ.எஸ் அதிகாரி. நிர்வாக செயல்பாடுகள் மட்டுமல்லாது, பொதுத்தளத்தில் சிறந்த எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் அறியப்படுகிறார். குறிப்பாக, உள்ளொளிப் …

  2. ஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும் வரை திமுக வெற்றி பெறாது: மு.க. அழகிரி கடும் விமர்சனம் சென்னை: ஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும் வரை திமுக வெற்றி பெறாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கூறியுள்ளார். செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மு.க. அழகிரி இவ்வாறு கூறினார். மேலும் அவர் பேசுகையில், ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் டெபாசிட் இழக்கும் அளவுக்கு திமுக தோல்வி அடைந்தது ஏன்? இதில் இருந்தே ஸ்டாலின் எவ்வாறு செயல்படுகிறார் என்பது தெரிய வருகிறது. ஸ்டாலின் உடன் இருப்பவர்களின் செயல்பாடுகள் சரியில்லை. திமுகவினரின் வாக்குகளை பணம் சாப்பிட்டுவிட்ட…

    • 3 replies
    • 529 views
  3. இலங்கைக்கு எதிரான போராட்டம் தமிழக சிறைகளுக்கும் பரவியது! [saturday, 2013-03-16 09:06:54] இலங்கைக்கு எதிராக, ஐ.நா., வில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டி, கோவை மத்திய சிறையில், நேற்று கைதிகள், ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இலங்கையில் நடந்த போரில், இனப் படுகொலையில் ஈடுபட்ட ராஜபக்ஷேவை, சர்வதேச குற்றவாளியாக அறிவித்து, தண்டிக்க வேண்டும்; இலங்கைக்கு எதிராக, ஐ.நா.,வில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க வேண்டும். இலங்கை மீது, இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் உண்ணாவிரதம், மறியல், முற்றுகை, பேரணி, மனிதசங்கிலி உட்பட, பல போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில…

  4. எம்.ஜி.ஆர்., பிறந்த நாளில் முடிவு * தீபா அறிவிப்பு ''எம்.ஜி.ஆர்., பிறந்த நாளில், என் முடிவை அறிவிப்பேன்,'' என, ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தெரிவித்தார். அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா நியமிக் கப்பட்டதற்கு, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் எல்லாம், 'கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும்' என, ஜெ., அண்ணன் மகள் தீபாவை வலியுறுத்தி வருகின்றனர். தி.நகரில் உள்ள அவரது வீட்டின் முன், தினமும் ஏராளமான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். நேற்று மாலை, தொண்டர்களிடம் தீபா பேசுகை யில், ''வரும், 17ல், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழாவை, அனைவரும் கொண்டாட வேண்ட…

  5. கடந்த பல வருடங்களாக நீடித்து வரும் இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்சனைக்கு, இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஏழாவது ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோட்டாபய ராஜபஷ நிரந்தர தீர்வு காண வேண்டும் என தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை அரசின் தொடர் கைது நடவடிக்கையால் மீனவர்கள் மீன்பிடி தொழிலை விட்டு விட்டு மாற்று தொழில் தேடி வெளிமாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்து வருவதால் மீன் பிடிக்க செல்வதற்கு மீனவ தொழிலாளர்கள் இல்லாமல் விசைப்படகு உரிமையாளர்கள் தங்களது படகுகளை இயக்க முடியாமல் அவதியுற்று வருகின்றனர். இதனால் எதிர்வரும் காலங்களில் மீன்பிடி தொழிலாளர்கள் இல்லாமல் பாரம்பரிய மீன்பிடி தொழில் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்திய பிரதமர் நரேந்திர மோதி, புதிதாக…

  6. 'உங்களால் வெயிலில் 10 நிமிடம் உட்கார முடியாதா?' தொண்டர்களிடம் சிடுசிடுத்த வைகோ! தேனி: 'நீங்கள் ஒரு கட்சிக்கு தொண்டர், உங்களால் வெயிலில் 10 நிமிடங்கள் உட்கார முடியாதா?' என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் தொண்டர்களிடம் வைகோ சிடுசிடுத்தார். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில், தே.மு.தி.க.-மக்கள் நலக் கூட்டணி தேர்தல் பிரசார கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், ஆண்டிபட்டி தே.மு.தி.க. வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போடி தொகுதி வேட்பாளர் வீரபத்ரன் ஆகியோரை ஆதரித்து, தே.மு.தி.க.-மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளருமான வைகோ பிரசாரம் செய்தார். அங்கு நடைபெற்ற பிரசார கூட்டத்தில் வைகோ பேசும்போது, ''டாஸ்மாக் கட…

  7. தினகரன் வீட்டில் டெல்லி போலீஸ்! தீக்குளிக்கு முயன்ற தொண்டர்! சென்னை அடையாறில் இருக்கும் டி.டி.வி.தினகரன் வீட்டுக்கு டெல்லி போலீஸ் வந்தனர். தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் சம்மன் கொடுக்க அவர்கள் தினகரனை நேரில் சந்திக்க வந்துள்ளனர். இரட்டை இலைச் சின்னத்தை பெறுவதற்காக தினகரன் இடைத்தரகர் சுகேஷ் சந்தர் மூலம் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மீது குற்றச்சாட்டு உள்ளது. மேலும், டி.டி.வி.தினகரனிடம் இருந்து பணம் வாங்கியதாக சுகேஷ் சந்தர் ஒப்புக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. டெல்லி போலீஸ் வந்ததை அடுத்து, தினகரன் வீட்டின் முன்னர் தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றுள்ளார். தீக்குளிக்க முயன்றவர் பெயர் ரவிச்ச…

  8. மழையால் தத்தளிக்கும் தமிழ்நாடு: மூழ்கிய பயிர்கள் முதல் கரை புரண்டோடும் வைகை வரை 4 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, வைகை கனமழையால் தலைநகரம் சென்னை மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதுமே பரவலாக தத்தளித்து வருகிறது. மதுரை வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து தரைப் பாலங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வருஷநாடு மற்றும் மூலவைகை ஆற்றுப் பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வைகை ஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் 66.83 அடியாக உள்ளது. வைகை அணையில் இருந்து 569 …

  9. சிறப்புக் கட்டுரை: பாவம் பழனிச்சாமி! மின்னம்பலம் ராஜன் குறை தோல்வியில் பல சமயம் கெளரவம் இருக்கும். புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள், பல களம் கண்ட படைத்தலைவர்கள் தோல்வியடைவார்கள். ஆனால் அது மிகவும் கெளரவமான தோல்வியாக இருக்கும்; அவர்கள் புகழ் அதனால் என்றும் மங்காது. இதற்கு மாறாக வெற்றியில் அவமானகரமான வெற்றி என்பது ரசிக்கத்தக்கதாக இருக்காது. அது அந்த வெற்றியின் தருணத்திலேயே கூசிக் குறுகச்செய்யும். எடப்பாடி பழனிச்சாமி ஓ.பி.எஸ்-ஸை கட்சிக்குள் ஓரம் கட்டி பெரும்பான்மை ஆதரவைக்காட்டி ஓ.பி.எஸ்-ஸை வைத்தே தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வைத்த தருணம் ஒரு விதத்தில் வெற்றிதான். ஆனால் தொடர்ந்து பாரதீய ஜனதா விசுவாசத்தில் ஓ.பி.எஸ்-ஸுடன் போட்டி போட முடியாமல் த…

  10. ஈழத்தமிழர் விவகாரத்தால் மூடப்பட்ட கல்லூரிகள் நாளை திறப்பு இலங்கையில், தமிழர்கள் படு கொலை செய்யப்பட்டதைக் கண்டிக்காத மத்திய அரசு மற்றும் அரசியல் கட்சிகளை எதிர்த்து, தமிழகத்தில், கல்லூரி மாணவர்கள், தொடர் போராட்டத்தில், ஈடுபட்டுள்ளனர். சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க, அனைத்து கல்லூரிகளுக்கும், விடுமுறை அறிவிக்கப்பட்டது. நிலைமை சீராகி உள்ளதை அடுத்து, நாளை, கல்லூரிகள் திறக்கப்படும் என, உயர் கல்வித் துறை அறிவித்துள்ளது. பொறியியல் கல்லூரிகள் திறப்பு தேதி குறித்து, பின்னர் அறிவிக்கப்படும் என்று, தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில், தேர்வு திகதிகளும், விரைவில் அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. http://www.adaderana.lk/tamil/news.php?ni…

    • 0 replies
    • 528 views
  11. தமிழ் நாட்டில் காங்கிரஸ் தனிமை ஆக்கப்பட்டது எமக்கு கிடைத்த வெற்றி - சீமான் [Tuesday, 2014-03-18 12:47:55] தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தனித்து விடப்பட்டது எங்களுக்கு கிடைத்த வெற்றி என்று சீமான் நிருபர்களிடம் கூறினார். பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் நாம் தம¤ழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தனித்து விடப்பட்டது எங்களுக்கு கிடைத்த வெற்றி என்று சீமான் நிருபர்களிடம் கூறினார். பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்ட…

  12. சகிகலா புஷ்பாவின் புதிய சடுகுடு: நகைச்சுவையாகும் தமிழக முதல்வர் நாற்காலி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் தமிழகம் அல்லோகலப் பட்டுக்கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஆளும் கட்சியினரிடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கினால் அரசு இயந்திரம் இயங்குகிறதா என்ற கேள்வி எதிர்க்கட்சியினர் இடையே மட்டுமல்லாமல் மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. தொட்டதெற்கெல்லாம் தெருவில் வந்து போராடவேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அரசு திட்டங்கள் வெறும் திட்டங்களாகவே மட்டும் உள்ளன. ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதிலும் கட்சியை கைப்பற்றவும் மட்டுமே திட்டம் போட்டு அதிக நேரத்தை செலவிட்டுக் கொண்டிருக்கும் இந்த ஆளும் த…

  13. ஊட்டி: ஊட்டியில், உறைபனி விழத் துவங்கியதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது; குறைந்தபட்ச வெப்ப நிலை, 3 டிகிரி செல்சியஸ் ஆனதால், குளிர் வாட்டுகிறது. நீலகிரி மாவட்டம், ஊட்டியில் இரு நாட்களாக வழக்கத்தை விட கடுங்குளிர் நிலவுகிறது; தாழ்வான பகுதிகள் உட்பட புல்வெளிகள், மைதானங்கள், தேயிலை தோட்டங்களின் மீது, நேற்று முன் தினம் இரவு, வெள்ளை கம்பளம் விரித்தது போன்று, உறைபனி விழுந்தது.அதிகபட்ச வெப்பநிலை, 16 டிகிரி செல்சியசாக இருந்த போதும், குறைந்தபட்ச வெப்பநிலை, 3 டிகிரி செல்சியசாக குறைந்தது; குளிர், உடலை நடுங்க செய்கிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. செடிகளுக்கு பாதுகாப்பு : ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குன்னுார் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்…

  14. குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி சென்னை வருகிறார். சென்னை புறநகர் பகுதியில் நடைபெறும் பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்க இருப்பதாக தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி சென்னை வருகிறார். புறநகர் பகுதியில் பிரம்மாண்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசுகிறார். இதற்கான இடம் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்’’என்று தெரிவித்தார். http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=114361

  15. தமிழக மந்திரிகளின் மோசடிகள், தொடர்ந்து அம்பலமாகி வரும் அவல நிலை ஏற்பட்டுள் ளது. மந்திரிகள் விஜயபாஸ்கர், காமராஜை தொடர்ந்து, பெண் மந்திரி சரோஜா, 30 லட்சம் ரூபாய் கேட்டு, பெண் அதிகாரியை அடாவடி யாக மிரட்டி உள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி, பாதுகாப்பு கோரி, சென்னை போலீஸ் கமிஷனரிடம் தஞ்சம் அடைந்துள்ளார். முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின், அமைச்சர்கள் கட்டுப்பாடின்றி, தன்னிச் சையாக செயல்படுகின்றனர். ஊழியர்கள் நியமனம், பணி இடமாற்றம், 'டெண்டர்' என, அனைத்திற்கும் லஞ்சம் பெறுவதாக, புகார் எழுந்துள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், ஏராளமான ஆவணங்கள் சிக் கின. சென்னை, ஆர்.கே.நகர் தேர…

  16. தமிழ் மக்களின் பிரச்சினைக்கான உள்நாட்டுத் தீர்வை நாம் ஏற்கப்போவதில்லை – சம்பந்தன் வெளிநாட்டுப் பொறிமுறையொன்று அவசியம் “தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு உள்நாட்டில் உருவாக்கப்படும் எத் தீர்வையும் தமித் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளாது. சர்வதேசங்களின் பங்களிப்புடனான ஒரு தீர்வே அவசியம். புதிய அரசியலமைப்பிற்கான எமது முன்மொழிவு இதுவாகவே இருக்கும்” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பிற்கான வரைவு பற்றி விவாதிப்பதற்காகத் திங்களன்று கொழும்பில் கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்தில் திரு சம்பந்தன் இக் கருத்தைத் தெரிவித்தார். இக் கூட்டத்தில் தமிழரசுக்கட்சி, ரெலோ, புளோட் ஆகிய கட்சிகளின் பிரதிநி…

  17. பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பாராளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து விவாதிக்க தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் 15–ந் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும், பொதுச்செயலாளர் அன்பழகனுக்கும் வழங்கப்பட்டது. இந்த பொதுக்குழுவில் தென்மண்டல தி.மு.க. செயலாளர் மு.க.அழகிரி கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் தி.மு.க. நிர்வாகிகள் பெயருடன் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. தி.மு.க. பொதுக்குழு மீண்டும் நடக்க இருப்பதாக மு.க.அழகிரி படத்துடன் அந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதற்கு தி.மு.…

  18. தேர்தல் திருவிழா இன்று நிறைவு: கடைசி நேரம் வரை தொடர்ந்த நாடகங்கள்! மின்னம்பலம் இவ்வளவு பரபரப்பான, கடுமையான, சவால்கள் நிறைந்த தேர்தலை என்று சொல்வதை விட, இவ்வளவு கேவலமான நாடகங்கள் நடந்த தேர்தலை தமிழகம் இதுவரை சந்தித்ததேயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அண்ணா–காமராசர், கருணாநிதி–எம்.ஜி.ஆர், கருணாநிதி–ஜெயலலிதா என்று துருவ அரசியலில் ஊறித்திளைத்த திராவிட பூமி தமிழகம். இந்தத் தேர்தலில் ஸ்டாலின்–எடப்பாடி பழனிசாமி என்ற இரண்டு புதுமுகங்களுக்கு எதிரான துருவ அரசியல் அறிமுகம் செய்யப்பட்டது. இருவருமே அரசியலிலும், அதிகாரத்திலும் அனுபவங்களைப் பெற்றவர்களாயினும், தனியாக தேர்தலை எதிர்கொண்டது முதல்முறையாக இப்போதுதான். இருவருக்குமான வேற்றுமைகளை விட பொது ஒற்றுமைகளும் பல உண்டு. …

  19. மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த தங்கையை மீட்ட அக்காவுக்கு குவியும் பாராட்டு 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,UGC தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை அதன் அக்காவே காப்பாற்றிய சம்பவம் பலருக்கும் நிம்மதியைக் கொடுத்துள்ளதோடு, அந்த அக்காவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து இறக்கும் சோகம் அவ்வப்போது நடக்கிறது. விழுந்த குழந்தைகளை மீட்பதற்கு அரசு நிர்வாகம் மேற்கொள்ளும் பல மணி நேர பெரு முயற்சிகள் பெரும்பாலும் வெற்றி பெறுவதில்லை. ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டுவோர் அதனை உரிய முறையில் மூடாமல் செல்வதற்கு தண்டனை விதிக்கவே…

  20. சென்னை: பிரபல ரவுடி பினு சினிமா பாணியில் ஆட்டுக்கறி, மது விருந்துகளுடன் சக ரவுடிகளை அழைத்து பிறந்த நாள் கொண்டாடிய போது போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர். அதில் 75 ரவுடிகள் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழா கொண்டாடியவன் உட்பட 50 பேர் தப்பிச் சென்றனர். சென்னையில் குற்றப்பின்னணியில் உள்ள ரவுடிகள் குறித்து ரவுடிகள் ஒழிப்பு பிரிவு போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2012ம் ஆண்டு முதல் தற்போது வரை சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறு சிறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் முதல் மொத்தம் 14,551 ரவுடிகள் உள்ளனர். அதில், சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 11,303 பேர் ஆகும்…

  21. முக்கிய செய்திகள் : இந்தியா : நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நரேந்திர மோடி மறந்துவிட்டார்: மக்களவையில் விலைவாசி உயர்வு குறித்த விவாதத்தில் ராகுல்காந்தி குற்றச்சாட்டு. தமிழகம் : சென்னை கோடம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களிடையே மோதல்: மாணவரின் கழுத்து கத்தியால் கிழிக்கப்பட்டதால் அதிர்ச்சி. தமிழகம் : செங்கத்தில் காவல்துறையினரால் ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்துடன் தாக்கப்பட்ட சம்பவம்: தேசிய ஆதிதிராவிடர் நல ஆணைய அலுவலர்கள் நேரில் விசாரணை. …

    • 0 replies
    • 528 views
  22. கோயில் நகைகள்: மோடி வழியில் ஸ்டாலின் மின்னம்பலம்2021-10-03 தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “தமிழகத்தில் இருக்கும் அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் இருக்கும் நகைகளை உருக்கி அவற்றை வங்கிகளில் டெபாசிட் செய்து அந்த வட்டிப் பணத்தை கோயில்கள் திருப்பணிக்கு செலவு செய்யும் திட்டத்தை அறிவித்தார். இதை பாஜக கடுமையாக எதிர்த்து வருகிறது. இதில் ஊழல் நடக்கும் என்றும் பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறி வருகிறார். இதுகுறித்து இந்து சமய அறநிலைய அமைச்சர் சேகர்பாபு மீண்டும் மீண்டும் விளக்கம் அளித்துக் கொண்டிருக்கிறார். “சமயபுரம் கோயிலில் நாங்கள் ஆய்வு நடத்தியபோது பெருமதிப்பிலான தங்க நகைகள் அப்படியே கட்டி வைக்கப்பட்டி…

  23. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் காலநிலை மாற்றத்தால் இந்தியாவில் அதிகம் பாதிக்கப்படும் பெருநகரங்களில் ஒன்றாக தொடர்ந்து பேரிடரைச் சந்திக்கும் நகரமாக சென்னை அடையாளம் காணப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் நிலை என்னவாகும்? கடந்த 2019ஆம் ஆண்டில் ஏற்பட்ட தண்ணீர்த் தட்டுப்பாட்டை தமிழ்நாட்டில் யாரும் அவ்வளவு சீக்கரம் மறந்திருக்க முடியாது. அந்த ஆண்டு, தமிழ்நாடு முழுவதுமே தண்ணீர்ப் பற்றாக்குறை இருந்தது என்றாலும் மாநிலத்தின் தலைநகரான சென்னை மிக மிக மோசமான தண்ணீர் நெருக்கடியை எதிர்கொண்டது. சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து ரயில் மூலம் தண்ணீரைக் கொண்டுவந்து நிலைமையைச் சமாளிக்க வேண்டியிருந்தது. கழிவுநீரைச் சுத்திகரித்துப் பயன்படுத்துதல், க…

  24. புதிதாக உருவான கட்சிக்கு இது பெரிய சாதனைதான் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: "14 மாதங்களே ஆன குழந்தையை எழுந்து மக்கள் ஓட விடுவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்களை நம்பி நேர்மையாக மக்கள் வாக்களித்துள்ளார்கள். வாக்காளர்களுக்கும், எங்கள் கட்சியின் வேட்பாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களை நான் வெற்றி வேட்பாளர்களாகவே பார்க்கிறேன். இவர்களுக்கு அற்புதமான ஒத்திகையையும், வரவேற்பையும் தமிழக மக்கள் கொடுத்திருக்கிறார்கள். மக்களுக்கு கடமைப்பட்டுள்ளோம், தொடர்ந்து செயலாற்றுவோம் . எல்லோரும் எங்களை கொக்க…

  25. தமிழகத்தில் இலங்கையை சேர்ந்த மூன்று இளைஞர்கள் விபத்தில் பலி! kugenMay 23, 2023 தமிழகத்தில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையை சேர்ந்த மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 19, 20 மற்றும் 21 வயதுடைய தயாளன், ஜோன் மற்றும் சார்லஸ் ஆகிய மூன்று இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். இவர்கள் மூவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது துரதிஷ்டவசமாக விபத்தில் சிக்கியுள்ளனர். எதிர் திசையில் இருந்து வந்த லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. படுகாயமடைந்த மூன்று இளைஞர்களையும் வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்திருந்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.