தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10261 topics in this forum
-
பள்ளியறை எங்கும் பாலியல் கறைகள்; வேடிக்கை பார்க்கும் தி.மு.க. அரசு – சீமான் கண்டனம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் நால்வர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியும், ஆத்திரத்தையும் ஏற்படுத்திய நிலையில், அந்த வேதனை செய்தி மறைவதற்குள் மணப்பாறை மணப்பாரப்பட்டியில் தனியார் பள்ளி சிறுமிக்கு தாளாளர் உள்ளிட்டோர் பாலியல் துன்புறுத்தல் எனும் செய்தி இதயத்தை நொறுங்கச் செய்கிறது. நாள்தோறும் நடைபெறும் பாலியல் வன்கொடு…
-
-
- 6 replies
- 1.1k views
-
-
‘கைலாசா’ நாடு பெயர் மாறியது- நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ள நித்யானந்தா ‘கைலாசா’ என்ற பெயரில் சாமியார் நித்யானந்தா உருவாக்கியுள்ள நாட்டின் பெயரை ‘ஸ்ரீகைலாசா’ என மாற்றியுள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை நேரலையில் சத்சங்கம் மூலம் சீடர்களைத் தொடர்பு கொண்ட நித்யானாந்தா இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். அத்துடன் கைலாசா என்ற இணையத் தளத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 8 இலட்சம் பேர் என்ற நிலையில் அதன் சேர்வர் தடைப்பட்டதாகவும் இதனால் வேறு சேர்வர் மாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது வரை கைலாசா நாட்டின் குடியுரிமையைப் பெறுவதற்கு 12 இலட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கார்த்தி…
-
- 0 replies
- 473 views
-
-
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இன்று ஒரே நாளில் மாடு முட்டியதில் மாணவர் ஒருவரும், பார்வையாளர் ஒருவரும் உயிரிழப்பு Puvi Moorthy மதுரை: அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதலுதவி அளித்து மேல்சிகிச்சைக்காக கொண்டு செல்லும் போது செல்லப்பாண்டி என்பவர் உயிரிழந்தார். அலங்காநல்லூரில் இன்று ஒரே நாளில் மாடு முட்டியதில் மாணவர் ஒருவரும், பார்வையாளர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மாடு முட்டி அதன் உரிமையாளர் ஸ்ரீதரன் என்பவர் உயிரிழந்தார். மாடு முட்டி உயிரிழந்த காளை உரி…
-
- 28 replies
- 2.4k views
- 1 follower
-
-
சென்னையில் இருவருக்கு கொரோனா அறிகுறி சென்னை வந்த கப்பலில் சீனர்கள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கத்திற்கான அறிகுறி இருந்ததால் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை துறைமுக கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 18ஆம் திகதி வந்த எம்.வி. மேக்னட் கப்பலில் 19 சீனர்கள் இருந்ததாகவும் அவர்களிடம் துறைமுக மருத்துவ குழுவினர் நடத்திய சோதனையில் 2 பேருக்கு லேசான காய்ச்சல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் கப்பலிலேயே 2 பேரும் தனிமைபடுத்தப்பட்டு, கடற்பகுதியில் இருந்து சிறிது தொலைவில் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று காலை குறித்த இருவரிடமும் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு கிண…
-
- 2 replies
- 818 views
-
-
தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 41 தொகுதிகள்- இழுபறி முடிவுக்கு வந்தது! சென்னை: தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீண்ட பேச்சுவார்த்தை இழுபறிக்கு பின்னர் இன்று சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளது. சென்னையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் சந்திப்பில் இந்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் என்று தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகளின் தொகுதி பங்கீட்டு குழுக்கள் இன்று மாலை முதல் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். http://www.vikatan.com/news/tamilnadu/61753-in-dmk-coalition-41-seats-allocated-for-con…
-
- 0 replies
- 453 views
-
-
கருணாநிதிக்கு என் இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்! -சொல்றது திருமாவளவன் கடலூர்: தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு தொல்.திருமாவளவன் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன் அக்கூட்டணியில் இருந்து விலகியது. அதன்பின், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், தே.மு.தி.க., த.மா.கா. இணைந்து கூட்டணியாக தேர்தலை சந்தித்தன. இந்த தேர்தலில் இக்கூட்டணி தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சிதம்பரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''தமிழக சட்டசபை தேர்தலில் பல்லாயிர கோ…
-
- 0 replies
- 673 views
-
-
ராஜீவ் கொலை வழக்கில் 7பேர் விடுதலை முடிவை எடுக்க அரசு கால தாமதம் – அற்புதம்மாள் குற்றச்சாட்டு ஏழுபேர் விடுதலை தொடர்பாக மாநில அரசே முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றமே உறுதி செய்து 2 ஆண்டுகள் கடந்தும், தமிழக அரசு முடிவெடுக்காமல் தாமதிப்பதாக பேரறிவாளனின் தாயாரான அற்புதம்மாள் குற்றம் சாட்டியுள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரின் விடுதலை தொடர்பாக அரசியலமைப்புச் சட்டம் 161இன்படி ஆளுநரே முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு நேற்று இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனாலும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் குற்றம் சாட்டியுள்ளார். இவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக முன்னாள் முதல்வர் ஜ…
-
- 0 replies
- 633 views
-
-
தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து அவதூறு பரப்பியதாக இருவர் கைது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து அவதூறான செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்பியதாக இரண்டு நபர்களை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து அவதூறு பரப்பியதாக இருவர் கைது கடந்த மாதம் (செப்டம்பர்) 22-ம் தேதியன்று முதல் தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக திடீரென சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் கண்காணிப்பில் முதல்வர் உள்ளார் என்றும், நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் க…
-
- 4 replies
- 596 views
-
-
நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது நேற்று ஒரே நாளில் மூன்று இடங்களில் இலங்கை கடற்படையினர் திடீர் தாக்குதல் நடத்தினர். காரைக்கால் கிளிஞ்சல்மேடு பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவருக்கு சொந்தமான 2 விசைப்படகுகளில், அதே பகுதியை சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த 1ம் தேதி மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் 5 நாட்களாக கடலில் தங்கி மீன்பிடித்து கொண்டு நேற்று முன்தினம் காரைக்காலுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 12.10க்கு நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரைக்கு தென்கிழக்கே வந்தபோது, இலங்கை கடற்படையினர் 10 பேர் ஒரு படகில் வந்தனர்.அவர்கள் துப்பாக்கியை காட்டி, படகில் இருக்கும் மீன்கள், மீன்பிடி உபகரணங்கள் அனைத்தையும் கடலில் போடுமாறு மிரட்டினர். மீனவ…
-
- 0 replies
- 787 views
-
-
"இலங்கை பிரச்னை தொடர்பாக, தமிழக மாணவர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம், கடும் விளைவுகளை ஏற்படுத்தும் முன், உருப்படியான பதிலை மத்திய அரசு தர வேண்டும்' என, ராஜ்யசபாவில், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் வலியுறுத்தினர். இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஐ.நா., மனித உரிமை கமிஷனில், அந்நாட்டுக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்டுள்ள தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாணவர்கள் போராட்ட பிரச்னையை, ராஜ்யசபாவில் நேற்று, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., - எம்.பி.,க்கள் எழுப்பினர். தி.மு.க., - எம்.பி., சிவா பேசியதாவது: மாநிலம் முழுவதும், ஆங்காங்கே கல்லூ…
-
- 0 replies
- 526 views
-
-
இலங்கை தூதரை உடனடியாக கைது செய்ய வேண்டும்: வைகோ பிரிவு: தமிழ் நாடு இந்தியாவுக்கு உள்ளே இனபேதத்தைக் தூண்டும் சிங்களத் தூதர் பிரசாத் கரியவாஸத்தை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில், "இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாஸம், தொடர்ந்து அத்துமீறிச் செயல்பட்டு வருகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, இப்போது, இந்தியாவுக்கு உள்ளே, தமிழர்களுக்கு எதிராக, இனபோதத்தைத் தூண்டும் வகையில், ஒரு கடிதத்தை எழுதி, மின் அஞ்சல் வழியாக, இந்திய ஊடகங்களுக்கு அனுப்பி உள்ளார். சிங்களர்கள், வட இந்தியர்களின் வழித் …
-
- 0 replies
- 969 views
-
-
உண்மையில் இறந்த நேரம் என்ன? - காட்சி -1 - அப்போலோ தனித்திருந்து பொதுவாழ்க்கை வாழ்ந்த பெண்களின் வாழ்வு பெரும்பாலும் கேள்விக்குறியில் தான் நிறைவுபெறுகிறது. ஜெயலலிதாவின் இறுதி நிமிடங்களும் அதற்கு விதிவிலக்கு அல்ல. செப்டம்பர் 22-ம் தேதி அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. அவரது உடல்நிலை சீராகி வருவதாக அப்போலோ நிர்வாகமும், அ.தி.மு.க. பிரமுகர்களும் சொல்லி வந்த நிலையில், டிசம்பர் 4-ம் தேதி மாலை திடீரென அவருக்கு இதய முடக்கம் ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து அவசர தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டார். ‘எக்மோ’ உள்ளிட்ட இதய இயக்கவியல் கருவிகள் அவருக்குப் பொருத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டதாக அப்போலோ அறிக்கை வெளியிட்டது. அதேச…
-
- 8 replies
- 2.9k views
-
-
'பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கும் வரை போராட்டம் ஓயாது' சசிகலா புஷ்பா ஆவேசம் ''அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பதவியி லிருந்து சசிகலாவை நீக்கும் வரை என் போராட்டம் ஓயாது,'' என, அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி., ஆவேசமுற்றார். தினமலர் நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி: *அ.தி.மு.க., பொது செயலாளராக சசிகலா பொறுப்பு ஏற்றுள்ளாரே? அவர் பொது செயலாளராக பொறுப்பு ஏற்றது, கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் உணர்வு களுக்கு எதிரானது. அவர் தற்காலிகமாக பொது செயலாளர் பொறுப்பு ஏற்றது சட்டப்படியான செயல்பாடு இல்லை. *எப்படி கூறுகிறீர்கள்? பொது செயலாளராக வர…
-
- 0 replies
- 431 views
-
-
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கேள்வி:- இந்தோனேசியாவில் சிக்கியுள்ள தன் மகனை மீட்க உதவி கோரி, அவருடைய தாயார் குசலகுமாரி என்பவர் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வந்திருப்பதாகச் செய்தி ஒன்று வந்துள்ளதே? பதில்:- 2009ஆம் ஆண்டு இலங்கையில் உச்சக்கட்ட போர் நடந்தபோது, தன் மகன் துஷ்யந்தனை (வயது 26) இந்தோனேசியாவிற்கு அவருடைய தாய் குசல குமாரி அனுப்பி வைத்திருக் கிறார். அங்கிருந்த அவருடைய மகன் பத்திரமாக இந்தோனேசியாவிற்கு வந்துவிட்டதாகவும், அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகில் கூடவந்த ஒன்பது தமிழர்களுடன் செல்லவிருப்பதாகவும் தொலைபேசியில் தெரிவித்திருக்கிறார். அதற்குப் பிறகு நான்காண்டுகளாக எந்தச் செய்தியும் மகனிடமிருந்து கிடைக்கவி…
-
- 0 replies
- 399 views
-
-
ஜெயலலிதா சிகிச்சை விஷயத்தில் அப்போலோ சொன்னது உண்மையா? வெடிக்கும் சர்ச்சை! #Jayalalithaa #Apollo தமிழ்நாட்டில் கடந்த மூன்று மாதத்தில் நடந்த பரபரப்பான நிகழ்வுகளைப் போன்று இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் நடந்தேயில்லை. இந்தியாவே மிரண்டு போகும் அளவுக்கு தமிழ்நாட்டில் எழுச்சிகளும், மர்மங்களும், அரசியல் சண்டைகளும் நடந்தேறி வருகின்றன. இவற்றில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த சர்ச்சை என்பதுதான் மிகப்பெரிய மர்மமாக இன்றுவரை தொடர்கிறது. "ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அவ்வப்போது புகைப்படம் அல்லது வீடியோ வெளியிட்டு இருக்கலாமே" என்ற மக்களின் கேள்விக்கு, "அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட ஐ.சி.யு பிரிவில் சி.சி.டி.வி. கேமாரா இல்லை" என அப்போலோ ந…
-
- 0 replies
- 288 views
-
-
பிப்.15-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய சசிகலா | படம்: எல்.சீனிவாசன். அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என நிரூபணமாகிவிட்டது. அவர் இன்று நீதிமன்றத்தில் சரணடைவார் எனத் தெரிகிறது. ஆனாலும், அதிமுகவில் அதிர்வலைகளை சற்றும் குறையவில்லை. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்னமும் கூவத்தூர் சொகுசு விடுதியில்தான் இருக்கிறார்கள். ஆளுநர் இன்னும் தனது மவுனத்தை கலைக்கவில்லை. இத்தகைய சூழலில் அதிமுகவில் ஏற்பட்டுவரும் முக்கிய மாற்றங்களில் தொகுப்பு: இப்பக்கத்தை அவ்வப்போது ரெப்ரெஷ் செய்க. 1.10 pm: சொத்துக் குவிப்…
-
- 13 replies
- 1k views
-
-
சசிகலாவுக்கு சிறப்பு வசதி இல்லை கர்நாடக சிறை துறை தகவல் பெங்களூரு:'பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு, சிறப்பு வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை' என, சிறைத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்ற, அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர், கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந் நிலையில், சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக, ஊடகங் களில் செய்திகள் வெளியாகின. இதையடுத்து, சிறையில…
-
- 0 replies
- 325 views
-
-
சொத்துக் குவிப்பு வழக்கு: கர்நாடக அரசு சீராய்வு மனு! சொத்துக் குவிப்பு வழக்கில், கர்நாடக சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதனால் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீது சுமத்தப்பட்டு இருந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவர் சிறை தண்டனை அனுபவிக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. இந்த வழக்கில், ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஜெயலலிதா சிறை தண்டனை அனுபிக்கவில்லை என்றாலும், அபராதத் தொகையை வசூலிப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பில், அபராதத் தொகையை எப்படி வசூலிப்பது என்பது பற்றி தெளிவாக கூறப்பட்டு இர…
-
- 2 replies
- 462 views
-
-
மீண்டும்... அரசியலுக்கு, வருகிறாரா சசிகலா! கடந்த சில நாட்களாக சசிகலா குறித்த செய்திகள் இணையத்தில் வலம் வருகின்றன. ஊழல் குற்றச்சாட்டில் சிறைவாசம் அனுபவித்த சசிகலா தற்போது விடுதலையாகி உள்ளார். நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் இவரின் ஆதிக்கம் இருக்கும் என்றே பல விமர்சனங்கள் எழுந்திருந்தன. பரபரப்பாக பேசப்பட்ட இந்த விடயங்களுக்கு அரசியலில் இருந்து விலகபோவதாகவும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியே மலர வேண்டும் எனவும் கூறி முற்றுப்புள்ளி வைத்தார். இதனையடுத்து அவரது அரசியல் வாழ்க்கை நிறைவுக்கு வந்ததாகவே கருதப்பட்டது. இருப்பினும் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க ஆட்சி தோல்வியை தழுவவே சசிகலா மீண்டும் அரசியலுக்கு வரபோகிறார் என்ற கருத்…
-
- 0 replies
- 408 views
-
-
இழுபறியாகும் இணைப்பு - சுற்றுப்பயணத்துக்குத் தயாராகும் ஓ.பி.எஸ்.! அ.தி.மு.க இரு அணிகளின் இணைப்புப் பேச்சுவார்த்தை ஏப்ரல் 25-ம் தேதியே தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், இன்னும் நடக்கவில்லை. இணைப்புப் பேச்சுவார்த்தைக்கு இடையே, இந்தியத் தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க அம்மா அணி சார்பில் தாக்கல் செய்ய வேண்டிய பிரமாணப் பத்திரத்தைத் தயார் செய்யும் வேலைகளில் இப்போது அந்த அணி ஈடுபட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டை கட்சித் தலைமை அலுவலகத்தில் நடந்த மூன்று நாள் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்திலும் அந்த விஷயம்தான் முன்னிறுத்தப்பட்டு இருந்தது. இருந்தாலும் இரு அணிகளின் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று இரு அணிகளும் சொன்னாலும் முக்கியத் தல…
-
- 1 reply
- 399 views
-
-
கோடநாடு கொலையில் அறிவியல் ஆதாரம் சேகரிப்பு spaceplay / pause qunload | stop ffullscreen shift + ←→slower / faster ↑↓volume mmute ←→seek . seek to previous 12… 6 seek to 10%, 20% … 60% கோவை:''கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு விசாரணைக்கு தேவையான அறிவியல் பூர்வமான ஆதாரங்களைச் சேகரித்துள்…
-
- 1 reply
- 495 views
-
-
வாய்ப்பில்லை? ஜூலையில் உள்ளாட்சி தேர்தல் நடப்பதற்கு... அ.தி.மு.க.,வின் 3 அணிகள் மோதலால் குளறுபடி அ.தி.மு.க., அணிகளுக்குள் ஏற்பட்டுள்ள மோதலால், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதில், தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது. அதனால், உள்ளாட்சி தேர்தல் பணிகளில் அக்கட்சியினர் ஆர்வமாக இல்லை. எனவே, ஜூலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற, உயர் நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த, வாய்ப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், ஊரகம், நகர்ப்புறம் என, இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகளில், 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட பதவிகள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான தேர்தல், 2016 அக்டோபரில்,…
-
- 0 replies
- 261 views
-
-
முதல்வருக்கு எதிராக எம்எல்ஏக்கள் போர்க்கொடி: சட்டப்பேரவை முடக்கப்படுகிறதா? முதல்வர் பழனிசாமிக்கு எதிராக எம்எல்ஏக்கள் போர்க்கொடி, ஆதரவு எம்எல்ஏக்களின் ஆட்சி கலைப்பு கோஷம் என தமிழக அரசில் சிக்கல்கள் உருவாகியுள்ளதால், சட்டப்பேரவையை முடக்கும் முடிவை ஆளுநர் எடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதிமுகவில் கடந்த பிப்ரவரி மாதம் பிளவு ஏற்பட்டது. பிரிந்திருந்த முதல்வர் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிகள் கடந்த 21-ம் தேதி இணைந்தன. அதைத் தொடர்ந்து துணை முதல்வராக ஓபிஎஸ் பொறுப்பேற்றார். அணிகள் இணைப்பு முடிந்ததும், சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க பொதுக்குழு கூட…
-
- 0 replies
- 432 views
-
-
11, ஜனவரி 2014 திருச்சியில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஆர்.சி.பாபு தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், கட்சியில் வட்டார மற்றும் வட்ட கமிட்டியை அமைக்க வேண்டும். கட்சிப் பற்றுள்ள இளைஞர்களுக்கு பிரதிநிதித்துவம் தர வேண்டும். இளைஞர்களை நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் 23 லட்சம் புதிய வாக்காளர்கள் உள்ளனர். ஒவ்வொரு தொகுதிக்கும் சராசரியாக 70,000 வாக்காளர்கள் புதியவர்கள். அவர்கள் 18 முதல் 22 வயதுக்குள்பட்டவர்கள். காங்கிரஸ் கட்சிக்கு நீண்ட வரலாறும், பாரம்பரியமும் உண்டு. ஆனால் இதை இளைஞர்கள் தெரிந்திருக்…
-
- 0 replies
- 424 views
-
-
விசயகாந்த் எனும் திரைப்புலி.. ஜமாலன் திமுக கருணாநிதி பேரியக்கம் குடும்ப சூழலில் சிக்கிவிட்டது என்கிற ஆதங்கத்தில் பல கட்டுரைகள் எழுதப்பட்டு உள்ளன. சமஸ் என்பவர் தி ஹிந்து-வில் ஒரு கட்டுரை எழுதி உள்ளார். அவற்றிற்குள் ஒருவித திமுக அழிவை எதிர்பார்க்கும் ஆதங்க மனநிலைதான் உள்ளது. அதாவது திமுக சரிந்துவிட்டதான தோற்றத்தை உருவாக்க விரும்பும் மனநிலைதான். அழகிரி கட்சியில் இருந்தபோது கடுமையாக விமர்சித்தவர்கள், அவர் நீக்கப்பட்ட பின்னும் விமர்சிப்பதும் முழுவதுமாக புலம்பவதும், திமுக உறுதி பெறுவதையே காட்டுகிறது. திமுக-வில் அழகிரியின் வருகை என்பது அதன் தொடர் தோல்விக்கே வழிவகுத்து உள்ளது. இந்நடவடிக்கை அடிப்படை திமுக தொண்டனை பாதிப்பதாக தெரியவில்லை. திமுக ஆதரவாளர்களையும் இது பாதிப்பதாகத்…
-
- 0 replies
- 758 views
-