தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
சென்னை: 'நீங்கள் யூகிக்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும்' என, மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளார். ம.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம் சென்னை தாயகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் வைகோ பேசியது குறித்து அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: மதிமுக உயர்நிலைக்குழு, ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில்,"லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுக்க எனக்கு முழு அதிகாரம் அளிக்கப்படுகிறது' என, அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தெரிவித்தார். மதிமுகவுக்கு பரிட்சை தேர்தல் கூட்டணி குறித்து, நீங்கள் யூகிக்கும் கட்சிளுடன் தான் அமையும். இந்த லோக்சபா தேர்தல் ம.தி.மு.க.,வுக்கு ஒரு பரீட்சை தான். 2016ல் ஆட்சி நமது இலக்கு, 2016ல் ஆட்சியை பிடிப்பது தான். அதில் நாம் வெற்றி பெறுவோம்…
-
- 0 replies
- 428 views
-
-
ஒருவரையொருவர் மாறி மாறி விமர்சனம்: அதிமுகவில் வலுக்கும் மோதலால் குழப்பம் கோப்புப் படம் அதிமுகவின் 3 அணிகளை சார்ந் தவர்களும் ஒருவரை ஒருவர் மாறி, மாறி விமர்சித்து வருவதால் கட்சிக்குள் மோதல் முற்றி யுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெய லலிதா மறைவுக்குப்பின் அதிமுக 2 அணிகளாக பிரிந்தது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தற்போதைய முதல்வர் கே.பழனி சாமி ஆகியோரின் தலைமையில் எம்எல்ஏக்களும், கட்சி நிர்வாகி களும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அதிமுக (அம்மா) கட்சி துணைப் பொதுச் செயலாளரான டிடிவி தினகரன், டெல்லி திஹார் சிறையில் இருந்து வந்தபிறகு தனியாக செயல்படத் தொடங்கியுள்ளார். அவருக்கும் சில எம்.பி., எம…
-
- 0 replies
- 441 views
-
-
நீட் தேர்வு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநரிடம் முக்கிய கோரிக்கை நீட் தேர்வு தொடர்பான சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் கோரியுள்ளார். சென்னை- கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தபோதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு கோரியுள்ளார். இந்த நீட் தேர்வு, ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதா என்பதை ஆராய அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு, பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டு தனது பரிந்துரைகளை தமிழக அரசிற்கு வழங்கியது. அதனடிப்படையில் கடந்த செப்டெம்பரில் தமிழக சட்டப்பேரவையில் ‘தமிழ்நாடு இளநிலை மருத்து…
-
- 0 replies
- 467 views
-
-
அணிகள் இணைப்பு குறித்து ரகசிய பேச்சு: தினகரனை ஒதுக்கிவிட்டு அதிமுகவை கைப்பற்ற தீவிரம் - முதல்வர் பழனிசாமி, ஓபிஎஸ் 2 நாளில் முக்கிய முடிவு தினகரனை கட்சிக்குள் வரவிடாமல் தடுத்து கட்சியைக் கைப்பற்றும் முயற்சியில் அதிமுகவின் இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்காக ஓபிஎஸ் அணியுடன் முதல்வர் பழனிசாமி அணியினர் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதிமுகவில் தற்போது ஓபிஎஸ், முதல்வர் பழனிசாமி, டிடிவி தினகரன் ஆகியோர் தலைமையில் 3 அணிகள் செயல்பட்டு வருகின்றன. இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதான தினகரன், கடந்த ஜூன் 2-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். அவரை தங்க தமிழ்ச்செல்வன்,…
-
- 0 replies
- 205 views
-
-
ஐ.நா., சபையில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை, இந்தியா கொண்டு வர வேண்டும். அப்படியொரு நிலையை இந்தியா எடுக்குமானால், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், மீண்டும் தி.மு.க., இணைவதற்கான வாய்ப்பு உருவாகும்; தமிழகத்தில், தி.மு.க., கூட்டணியில் காங்கிரசுக்கு இடம் கிடைக்கும் என, காங்கிரஸ் தலைமைக்கு, தி.மு.க., திடீர் நிபந்தனை விதித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. தி.மு.க., தலைவர் கருணாநிதியின் தூதராக, டில்லியில், காங்கிரஸ் துணை தலைவர் ராகுலை சந்தித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தி.மு.க., நிலை குறித்து, சில விஷயங்களை தெளிவுபடுத்தி உள்ளார். நெருக்கடிகள்: அப்போது, 'இலங்கைக்கு எதிரான தீர்மானம் போன்ற நடவடிக்கைகள் தான், கூட்டணி வாய்ப்பை உருவாக்கும் எனவும், இதை விடுத்து, …
-
- 0 replies
- 724 views
-
-
மிஸ்டர் கழுகு - டாக்டருக்கு நெருக்கம்... அரசருக்குப் பதக்கம்... அணி மாறுகின்றனவா கட்சிகள்? கழுகார் நுழைந்ததும், ‘‘அரசியல் கூட்டணிகள் மாறுகின்றனவா?” என்ற கேள்வியை மையமாகக்் கேட்டு வைத்தோம். நாம் எதைக் கேட்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டவராக, ‘‘ஓ! அதை வைத்துக் கேட்கிறீரா?” என்று கேட்டார். எதை வைத்து என்று கேட்பதற்குள், கழுகாரே தொடங்கிவிட்டார். ‘‘சென்னையில் நடந்த வணிகர் சங்க மாநாட்டில் ஸ்டாலினும் ராமதாஸும் ஒரே மேடையில் உட்கார்ந்து இருந்ததை வைத்துத்தான் அரசியல் கூட்டணிகள் மாறுகின்றனவா என்று கேட்கிறீரா? கூட்டணிகள் மாறுகின்றனவா, கூட்டணிகள் சேர்கின்றனவா என்பது போகப் போகத்தான் தெரியும். ‘இந்திய வணிகர் சங்க உரிமை மீட்பு மாநாடு’ என்ற பெயரில், சென்னை வ…
-
- 0 replies
- 978 views
-
-
கடந்த 26-11-2014,அன்று சென்னை மயிலாப்பூரில் தமிழீழ விடுதலைப்போரில் இன்னுயிர் ஈர்ந்த தமிழர்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சியை ஒழுங்கமைப்பதற்க்கான முயற்ச்சிகளை இன உணர்வோடு முன்னெடுத்த திராவிடர் விடுதலை கழகத்த சேர்ந்த நிர்வாகிகளில் ஒருவரான முழக்கம் உமாபதியை சென்னை அமிராமிபுரம் காவல்துறை உதவி ஆய்வாளர்களான இளையராஜா,கலைசெல்வி,மற்றும் கவலர் வடிவேலு,ஆகியோர் கொண்ட குழுவினர் மிகக்கொடூரமாக நாகரிகமற்ற முறையில் தாக்கி இருந்தனர். படுகாயமடந்த உமாபதி சென்னை ராஜிவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். இத்தாக்குதலை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் நேற்றைய தினம் கண்டன அறிக்கை வெளியிட்டதோடு இன்றைய தினம் உமாபதியை நேரில் சென்…
-
- 0 replies
- 566 views
-
-
சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவின் சீடர் மர்மமான முறையில் உயிரிழப்பு! சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவின் குஜராத் ஆசிரமத்தைச் சேர்ந்த சீடர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவை இண்டர்போல் உதவியுடன் அகமதாபாத் மற்றும் பெங்களூர் பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். நித்தியானந்தாவுக்குச் சொந்தமான குஜராத்தில் உள்ள யோகினி சர்வஜன பீடம் ஆசிரமத்தைச் சேர்ந்த சதீஷ் செல்வகுமார் என்கிற ஸ்ரீநித்திய ஈஷ்வர பிரியானந்தா என்பவர் கடந்த சில நாட்களாக மாயமானார். இந்நிலையில் அவரது உடல் இந்திய – நேபாள எல்லையில் கண்டெடுக்கப்பட்டு வாரணாசியில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் தகனம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந…
-
- 0 replies
- 440 views
-
-
தொலைபேசி தொடர்பை ஊக்கு விக்கும் வகையில் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் லேண்ட்லைன் வாயிலாக செய்யப்படும் உள்நாட்டு அழைப்புகளுக்கு கட்டணம் கிடையாது என்று பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, டெல்லியில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: லேன்ட்லைன் வாயிலாக மற்ற தொலைத்தொடர்பு இணைப்புகளுக்கு இரவு 9 மணியில் இருந்து மறுநாள் காலை 7 மணிவரை செய்யும் அனைத்து அழைப்புகளுக்கு கட்டணமில்லா சேவையை வழங்கி வருகிறது. தற்போது மேலும் வாடிக்கை யாளர்களுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் சுதந்திர தினமான வரும் 15-ம் தேதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் லேன்ட்லைன் இணைப்பு வாயிலாக செய்யப்படும் அனைத்து அழைப்புகளும் இலவச அழைப்புகளாக கருதப…
-
- 0 replies
- 455 views
-
-
ஜெயலலிதாவின் பெயரிலுள்ள சொத்துக்கள் யார் யாருக்கு செல்லும்..? சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு காலமானார். இதையடுத்து அவரது இறுதி ஊர்வலம் இன்று நடக்கிறது. இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரிலுள்ள சொத்துக்கள் யார் யாருக்கு செல்லும் என்பது குறித்து, ஆங்கில செய்தி ஊடகம் ஒன்று பரபரப்பு டிவிட்டை வெளியிட்டுள்ளது. ஜெயலலிதா பொது வாழ்க்கைக்கு வரும் முன்பே, சினிமா மூலம் கணிசமாக வருவாய் ஈட்டியவர். அவருக்கு ரூ.113.73 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. இதில் அசையக்கூடிய சொத்துக்கள் மதிப்பு ரூ.41.63 கோடியாகும். அசையாத சொத்துக்கள் மதிப்பு ரூ.72.09 கோடியாகும். ரூ.2.04 …
-
- 0 replies
- 489 views
-
-
கவிஞர் இன்குலாப் அவர்களுடன் இச்சந்திப்பை ஒரு மதியப்பொழுதில் அவரது ஊரப்பாக்கம் வீட்டில் நிகழ்த்தினோம். எளிமையான உருவம். மிகவும் பணிவோடு வரவேற்றார். அவருடைய கம்பீரத்தை மேடைகளில் பார்த்திருக்கிறேன். இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் மிகத்தீவிரமாகப் பங்கெடுத்த மாணவர் தலைவர்களில் அவரும் ஒருவர். ஈழப்பிரச்னை சம்பந்தமாக இப்போது தமிழ்நாட்டில் மாணவர்களின் போராட்டங்கள் தீவிரமடைந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் போராடிக்கொண்டிருக்கும் புதுக்கல்லூரி மாணவர்களைச் சென்று பார்த்து வந்திருக்கிறார். போராடும் மாணவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருப்பதாக மனம்திறந்து கூறுகிறார். ஈழத்தமிழர் பிரச்னை குறித்து அக்கறையோடு பேசுகிறார். ஈழத்தமிழ்மக்களின் வேதனை அவருக்கு சித்திரவதையைக் கொடுக்கிறது என்பதை…
-
- 0 replies
- 617 views
-
-
ஈழம் ஒரு இனத்தின் வரலாறு தொடர் - மக்கள் தொலைக்காட்சியின் ஒரு சிறந்த முயற்சி. தமிழினத்தலைவர் என்று சொல்லிக்கொண்டாலும் கருணாநிதி குடும்ப தொலைக்காட்சிகளில் கடுகளவு கூட ஈழம் பற்றிய செய்திகள் வந்துவிடாமல் மறைத்த கட்டங்களிலு கூட 2009 காலத்தில் மக்கள் தொலைக்காட்சியில் ஈழம் பற்றிய செய்திகள் வெளியாகின. தற்போது தினமும் ஈழம் ஒரு இனத்தின் வரலாறு என்ற காட்சித்தொடர் திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 8:30க்கு வெளியாக உள்ளது. மக்கள் தொலைக்காட்சிக்கு வாழ்த்துகள். (முகநூல்)
-
- 0 replies
- 575 views
-
-
2011-ம் ஆண்டின் சட்டசபை தேர்தலில், தி.மு.க. தலைமையில் அமைந்த கூட்டணியில் இடம் பெற்றிருந்த, பா.ம.க. படுதோல்வி அடைந்தது. சட்டசபை தேர்தலில் வன்னியர், ஆதிதிராவிடர் ஆகிய இரு சமுதாயத்திலிருந்தும், சுமார் 50 சதவீதம் ஓட்டுகள் அ.தி.மு.க.வுக்கு கிடைத்தன. அதையடுத்து நடந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., தனித்துப் போட்டியிட்டது. வட மாவட்டங்களில் பெருவாரியான வெற்றியை பெற்றது. தனித்துப் போட்டியிட்ட பா.ம.க. 3.5 சதவீதம் வோட்டுகளை தான் பெற முடிந்தது. இந்தக் கணக்கை பார்த்த அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளுமே பா.ம.க.வின் செல்வாக்கு சரிந்துள்ளதை உறுதி செய்து கொண்டன. அக்கட்சியுடன் இனிமேல் கூட்டணி அமைக்க தேவையில்லை என, இரு கட்சிகளும் முடிவெடுத்து உள்ளன. இந்த மெசேஜ் ராமதாஸூக்கு போக அவர், ஏதோ…
-
- 0 replies
- 372 views
-
-
'உங்கள் அதிகாரம் மொத்தமும் பறிபோய்விடும்!' - கார்டன் தூதுவரிடம் மனம் திறந்த ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்குப் போட்டியாக தொடர் கடிதங்களை எழுதி வந்த சசிகலா, தற்போது நிதானமாகச் செயல்பட்டு வருகிறார். 'கட்சி மற்றும் ஆட்சி அதிகாரத்துக்குள் நூறு சதவீத அதிகாரத்தைக் கைப்பற்றும் வேலையில் நீங்கள் இறங்கினால், இருக்கும் அதிகாரங்களும் பறிபோய்விடும்' என சசிகலா தூதுவரிடம் மனம் திறந்து பேசியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அ.தி.மு.க பொதுச் செயலாளராக பதவியேற்ற பிறகு, கோட்டையை நோக்கிப் பார்வையை திருப்பினார் சசிகலா. அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்பட கட்சியின் சீனியர்கள் அனைவரும் ஒரே …
-
- 0 replies
- 719 views
-
-
ராமாவரம் தோட்டத்திற்குள் நாளை நுழைகிறார் சசிகலா எம்.ஜி.ஆரின் குடும்ப உறுப்பினர்களையும் வளைக்க திட்டம் போயஸ் தோட்டத்தை கைப்பற்றிய சசிகலா, நாளை, எம்.ஜி.ஆர்., தோட்டத்தில் நுழைந்து, பாரம்பரியமான அவரது சிலையை திறந்து வைத்து, எம்.ஜி.ஆரின் குடும்ப உறுப்பினர்களையும் வளைக்க திட்டமிட்டுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின், அவரது பொதுச்செயலர் செயலர் பதவியை, சசிகலாவுக்கு வழங்கியதை, எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா, அவரது தம்பி தீபன் குடும்ப உறுப்பினர்கள் விரும்பவில்லை. அவர்கள் அனைவரும், முதல்வர், பொதுச் செயலர் பதவியில் ஓ.பன்னீர்செல்வம் நீடிக்க வேண்டும் என, விரும்பினர். இதனால், சுதா குடும்பத்தினர் மீது சசிகலா தரப்பினர் அதிருப்தி அடைந்தனர். சுதாவிற்கு போட்டியாக, அவரது சகோத…
-
- 0 replies
- 415 views
-
-
மெரினா போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் இவர்கள்தான்! உளவுத்துறையின் ரிப்போர்ட் என்ன சொல்கிறது? மெரினா போராட்டம் உலகத் தமிழர்களைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ள நிலையில் அதை ஒருங்கிணைத்தவர்களின் பட்டியலை உளவுத்துறை போலீஸார் சேகரித்து வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மக்கள் போராட்டம் நடத்தினர். இதன்விளைவு தமிழக அரசு, ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டத்தை கொண்டு வந்தது. தொடர்ந்து சில இடங்களில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்தப்பட்டது. இருப்பினும் மெரினாவில் திரண்ட ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் முழுவதுமாக போராட்டத்தைக் கைவிடவில்லை. இது போலீஸாருக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்தது. மெரினாவில் நடக்கும் போராட்டக்குழுவினரை வெளியேற்ற வேண்டும…
-
- 0 replies
- 469 views
-
-
'தீபா அணியை நோக்கித் தள்ளுகிறாரா சசிகலா?!' -புதிய பதவி கடுப்பில் அ.தி.மு.க சீனியர்கள் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கோகுல இந்திரா உள்பட 23 பேருக்கு புதிய பொறுப்புகளை வழங்கியிருக்கிறார் சசிகலா. ' இப்படியொரு பதவியை வழங்காமலேயே இருந்திருக்கலாம். கட்சிக்காக நீண்டகாலம் உழைத்தவர்களுக்குப் பொதுச் செயலாளர் கொடுக்கும் மரியாதை இதுதானா?' எனக் கொந்தளிக்கின்றனர் கொங்கு மண்டல அ.தி.மு.கவினர். அண்ணா தி.மு.க-வின் புதிய நிர்வாகிகள் பட்டியலை நேற்று வெளியிட்டார் பொதுச் செயலாளர் சசிகலா. இதில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்பட 14 பேருக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் இளைஞரணிச் செயலாளராக சிவபதியும் மீனவர் அணிச் செயலாளர…
-
- 0 replies
- 452 views
-
-
நான் சொல்லாத 90%-ஐ என்னுள் புதைத்துவிட்டேன்: ஓபிஎஸ் சிறப்புப் பேட்டி முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப் படம்: எஸ்.ஆர்.ரகுநாதன் நான் சொல்லாத 90% உண்மையை என்னுள்ளேயே புதைத்துவிட்டேன் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். கடந்த 7-ம் தேதி சென்னை மெரினாவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் திடீர் தியானப் புரட்சியில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் அதன்பின்னர் அளித்த பேட்டி தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்திருக்கிறார். அதன் சாராம்சம்: கட்சித் தலைமைக்கு எதிராக உங்களைப் பேசத…
-
- 0 replies
- 276 views
-
-
பன்னீர் செல்வத்தின் ‛ஆபரேஷன் கூவத்தூர்' சென்னை: சசிகலாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில், தனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களின் பலத்தை அதிகரிக்க பன்னீர் தரப்பில் அதிரடி திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பொங்கிய பன்னீர்: கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற, சசிகலா செய்த சதியை, கடந்த 7ம் தேதி ஜெயலலிதா சமாதி முன், முதல்வர் பன்னீர்செல்வம் போட்டுடைத்தார். அவரிடம் இருந்து, முதல்வர் பதவியை பறிக்க, கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் வாங்கியதையும், அவர் அம்பலப்படுத்தினார். அவருக்கு ஆதரவாக அ.தி.முக., தொண்டர்களும், தமிழக மக்களும் அணி வகுத்துள்ளனர். இதுவரை ஓ.பி.எஸ்., அணியில…
-
- 0 replies
- 270 views
-
-
தற்போது சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த நீதிபதி அல்டமாஸ் கபீர் இருந்து வருகிறார். வருகிற ஜூலை மாதம் 18-ந் தேதியுடன் அவர் ஓய்வு பெறுகிறார். அவருக்கு பதில் புதிய தலைமை நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி பி.சதாசிவம் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை மத்திய சட்ட அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி பிராணப் முகர்ஜி நியமனம் செய்துள்ளார். தற்போது இவர் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பணிபுரிகிறார். நீதிபதி பி.சதாசிவம் சுப்ரீம் கோர்ட்டின் 40-வது தலைமை நீதிபதியாவார். வருகிற 19-ந் தேதி அவர் பதவி ஏற்கிறார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் எளிய நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். நீதிபதி பி.சதாசிவம் 1949-ம் ஆண்டு …
-
- 0 replies
- 406 views
-
-
முதல்வர் மாவட்டத்தில் எதிர்ப்பு அதிகரிப்பு அரசு விழா நடத்த எம்.எல்.ஏ.,க்களுக்கு தடை தமிழக முதல்வரின் சொந்த மாவட்டத்தில், எம்.எல்.ஏ.,க்கள் மீது தாக்குதல் முயற்சி தொடர்வதால், முதல்வர் ஆதரவு எம்.எல்.ஏ.,க் கள், பொதுக்கூட்டங்களை நடத்தவும், நலத் திட்ட உதவிகளை வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறைக் கைதி சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்த வர், முதல்வர் பழனிசாமி. அவரது ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களுக்கு, பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க., தொண்டர்கள் மத்தியில் எதிர்ப்பு வலுத்தது. முதல்வரின்மாவட்டத்தில், எம்.எல்.ஏ.,க்கள் மீது செருப்பு மாலை வீச்சு, முற்றுகை போராட்டம் நடத்தி, பொதுமக்கள் விரட்டி அடித்தனர்.…
-
- 0 replies
- 182 views
-
-
‘என்னை அழிக்க நீங்களே போதும்!’ - குடும்பத்தில் கொந்தளித்த தீபா தி.நகரில் உள்ள தீபாவின் வீட்டுக்கு வரும் அ.தி.மு.க தொண்டர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. பேரவையின் நடவடிக்கைகளும் தீபா குடும்பத்தினரின் தலையீடுகளும் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. 'எவ்வளவு சிரமங்கள் கொடுத்தாலும், ஜெயலலிதாவைப் போல மீண்டு எழுவேன்' என வேதனை கலந்த முகத்துடன் பேசுகிறார் தீபா. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 'தலைமையேற்க வாருங்கள்' என தீபாவின் பின்னால் ஒரு கூட்டம் கூடியது. அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுடன் பன்னீர்செல்வம் முரண்பட்ட பிறகு, அவர் பின்னால் அ.தி.மு.க நிர்வாகிகள் அணிவகுத்தனர். 'நானும் பன்னீர்செல்வமும் இரு கரங்களாக…
-
- 0 replies
- 334 views
-
-
அரசு அலுவலகங்களில் ஜெ., படத்தை அகற்றாதது ஏன்? பதில் அளிக்க தலைமை செயலர் மறுப்பு 'அரசு அலுவலகங்களில், முன்னாள் முதல்வர் ஜெ., படம் ஏன் அகற்றப்படவில்லை' என, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், கேட்கப்பட்ட கேள்விக்கு, தலைமை செயலர் பதில் அளிக்க மறுத்து விட்டார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த, ரவி என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சில தகவல்கள் அளிக்கக் கோரி, தலைமைச் செயலருக்கு விண்ணப்பித்தார். அவர் கேட்ட கேள்வி எதற்கும், பதில் தரப்படவில்லை. கேள்விகள் என்ன? * முதல்வர் பழனிசாமி, பிப்., 20ல், ஐந்து திட்டங்களுக்கு கையெழுத்திட்டார். இவை, எந்த நிதியில…
-
- 0 replies
- 269 views
-
-
புதுடெல்லி: 2ஜி வழக்கில் தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ரத்து செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் திமுக எம்.பி. கனிமொழி இன்று மனு தாக்கல் செய்துள்ளார். 2ஜி வழக்கில், கலைஞர் டிவிக்கு ரூ. 200 கோடி லஞ்சப் பணம் கைமாறியதாக சிபிஐ தரப்பில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து கலைஞர் டி.வி.யின் ஒரு பங்குதாரர் என்ற அடிப்படையில் கனிமொழி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையிலடைக்கப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் உள்ளார். இவ்வழக்கில் கனிமொழி, முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்ளிட்ட 3 பேர் மீதும் நம்பிக்கை மோசடி, கிரிமினல் சதி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுக்களை சிபிஐ பதிவு செய்துள்ளது. …
-
- 0 replies
- 307 views
-
-
'சசி' நிம்மதியை குலைத்த கோடநாடு கொலை! கோடநாடு எஸ்டேட் கொள்ளை விவகாரம் குறித்து தகவல் அறிந்ததும், பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கள நிலவர தகவல்களை சொல்லக் கூட, ஆளில்லாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட, ஜெ., தோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர், கர்நாடக மாநிலம், பெங்களூரு, பரப்பன அக்ர ஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களை, உறவினர்கள் சந்திக்கக்கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. எனினும், அள…
-
- 0 replies
- 291 views
-