தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10260 topics in this forum
-
தமிழ்நாட்டு திருவிழாவில் பிரபாகரன் படம் தமிழ்நாடு தேனி மாவட்டத்தில் ஜெயமங்கலம் கோயில் திருவிழா மின் காணொளி பதாகையில் தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்தை காண்பித்து மக்கள் திருவிழாவை கொண்டாடியுள்ளனர். தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை கண்டு வணங்கி மக்கள் தமது அன்பையும் ஆதரவையும் வெளிபடுத்திய நிகழ்வு அங்கு நெகிழ்வை ஏற்படுத்தியது. https://vanakkamlondon.com/world/india/2023/02/185753/
-
- 0 replies
- 447 views
-
-
சசிகலாவுக்கு ஆதரவு பேனர்: தொண்டர்கள் வேதனை தஞ்சாவூர் : 'மேலிடத்தில் இருந்து வரும் உத்தரவிற்கு பயந்து தான், விருப்பம் இல்லாமல், சசிகலாவுக்கு ஆதரவாக பிளக்ஸ் வைத்து வருகிறோம்' என, அடிமட்ட தொண்டர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சசிகலா பொதுச் செயலராக பதவி ஏற்றதிலிருந்து, வாழ்த்துகள் தெரிவித்து, தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பிளக்ஸ்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பெயரில் தான், அதிகளவில் பிளக்ஸ் பேனர்கள் முளைத்துள்ளன. இருப்பினும், பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ்களில் உள்ள, சசிகலாவின் படத்தின் மீது, அதிருப்தியாளர்கள் சாணம் வீசியும், கிழித்தும் வர…
-
- 0 replies
- 447 views
-
-
கனடாவுக்கு அனுப்புவதாக கூறி நபரொருவர் தம்மிடம் 10 இலட்சம் இந்திய ரூபாய் மோசடி செய்துவிட்டதாக, இலங்கை அகதி ஒருவர் குடும்பத்துடன் சென்று பொலிஸாரிடம் முறையிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வவுனியாவை சேர்ந்த செல்வராஜா என்பவரே தனது மனைவி மகேஸ்வரி மற்றும் மகள் தர்சிகா மற்றும் தனது 2 மகன்களும் வந்து இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். இவர்கள் கடந்த 2007ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு அகதிகளாக சென்று, பவானிசாகர் அகதிகள் முகாமில் தங்கியுள்ளனர். நாம் தமிழர் கட்சியினர் சிலருடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு திங்கட்கிழமை(02) காலையில் சென்ற செல்வராஜா, முறைப்பாடொன்றை வழங்கியுள்ளார். 2009ஆம் ஆண்டில் ராஜ்கபூர் என்பவர் எனக்கு அறிமுகமானார். அவர் சென்…
-
- 0 replies
- 447 views
-
-
தே.மு.தி.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதற்கு மூர்த்தி என்பவரின் மனைவி ஜெயந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. தேர்தல் விதிகளை மீறி தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது என்றும் விஜயகாந்த் வெற்றி பெற்றதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயந்தி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.வெங்கட்ராமன், வ…
-
- 1 reply
- 447 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் செயற்கை நுண்ணறிவின் யுகமான இந்த காலத்தில் செயற்கை மழை ஒன்றும் புதிய சொல்லல்ல. வெள்ளம், வறட்சி, அதிக வெப்பம், புயல், மற்றும் காட்டுத்தீ போன்ற காலங்களில் அவற்றைக் கட்டுப்படுத்த ஒரு தீர்வாக விவாதிக்கப்பட்டது தான் இந்த செயற்கை மழை. தற்போது, இதைக் கொண்டே டெல்லியில் நிலவி வரும் சுற்றுசூழல் மாசுபாட்டால் ஏற்பட்டுள்ள மோசமான நிலையைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விவாதங்கள் நடந்து வருகின்றன. கடந்த சில தினங்களாகவே டெல்லியில் சுற்றுசூழல் மாசுபாடு மோசமான நிலையிலேயே நீடித்து வருகிறது. அது எந்தளவுக்குத் தீவிரம் என்றால் டெல்லியில் காற்றின் தரக் குறியீடு மதிப்பெண் 401 மற்றும் 500க்கு இடையியே நிலவி வருகிறது. …
-
- 0 replies
- 447 views
- 1 follower
-
-
கண்காணிப்பில் தி.மு.க, அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள்! -ஆடுபுலி அரசியல்!? அப்போலோ மருத்துவமனையில் தமிழக முதல்வர் அனுமதிக்கப்பட்டு 19 நாட்கள் கடந்துவிட்டன. ' தலைமைச் செயலாளரை மட்டுமே நம்புகிறார் சசிகலா. அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அனைவரும் தீவிர கண்காணிப்பு வளையத்தில் உள்ளனர்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலன் குறித்து விசாரிக்க வரும் தலைவர்களால், கிரீம்ஸ் சாலை நிரம்பி வழிகிறது. அகில இந்திய தலைவர்கள் மற்றும் தமிழக அரசியல் தலைவர்களின் தொடர் வருகையும் முதல்வர் உடல்நலன் குறித்தான பாசிட்டிவ் பேச்சுக்களும் தொண்டர்களுக்கு ஆறுதலை அளித்து வருகின்றன. அப்போலோ வெளியிடும் அறிக்கைகளை மட்டுமே நம்ப வேண்டிய சூழலில் அ.தி.மு.க தொண்டர்கள் …
-
- 0 replies
- 447 views
-
-
`நாட்டையே ஆளத் துடிப்பவனுக்கு, சொந்த வீடு இல்லாதது எவ்வளவு பெரிய வரலாற்றுத் துயரம்' என பொதுக்கூட்ட மேடையிலேயே சென்டிமென்ட் டச் கொடுப்பதாகட்டும், 'தி.மு.கதான்டா உண்மையான சங்கி' என்று செருப்பைத் தூக்கிப் பிடித்து விமர்சிப்பதாகட்டும்... எப்போதுமே தமிழக அரசியலின் ஹாட் டாபிக் சீமான்! பரபரப்பான இந்த நேரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை நேரில் சந்தித்தேன்... ``மாரிதாஸின் பதிவு கருத்துரிமைக்கு ஆதரவாக நீங்கள் குரல் கொடுக்கிறீர்கள். ஆனால், கருத்தைப் பதிவிட்ட மாரிதாஸே சிறிது நேரத்தில் அந்தப் பதிவை நீக்கிவிட்டார் என்றால் என்ன அர்த்தம்?'' ``கல்புர்கி, நரேந்திர தபோல்கர், கௌரி லங்கேஷ், ஸ்டேன் லூர்து சாமி போன்றோரை பா.ஜ.க-வின…
-
- 0 replies
- 447 views
-
-
இசை கலைஞர் ஜாகிர் உசேன் காலமானார் ADDED : டிச 16, 2024 12:19 AM புதுடில்லி: அமெரிக்காவில் வசித்து வந்த பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன், 73, உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன், சிறு வயது முதலே பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இந்திய இசை உலகில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் புகழ்பெற்றவர். வெளிநாடுகளிலும் பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். கடந்த, 40 ஆண்டுகளாக அமெரிக்காவில் வச…
-
- 4 replies
- 446 views
- 1 follower
-
-
பரோலுக்கு துணைநின்ற ஸ்டாலினுக்கு நன்றி: நெகிழும் அற்புதம்மாள் பேரறிவாளனுக்குப் பரோல் கிடைக்க துணை நின்ற தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதற்காக அவரை பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சந்தித்தார். ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, பேரறிவாளன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தையைக் காண பரோல் கோரியிருந்தார். இதையடுத்து, 26 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு ஒரு மாத காலம் பரோலில் விடுவிக்க கடந்த மாதம் 24-ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தனது தந்தை மற்றும் தாயாருடன் நேரத்தை கழித்து வரும் பேரறிவாளனை, ஸ்ட…
-
- 0 replies
- 446 views
-
-
தூத்துக்குடியை சீர்மிகு நகரமாக மாற்றும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு தேவைப்படும் வசதிகள் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் சீர்மிகு நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள தூத்துக்குடி மாநகராட்சியில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மழைநீர் வடிகால் வசதி, பூங்காக்கள், மின்விளக்கு வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இதில் அடங்கும். நகரின் வாழ்க்கைத்தரம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படுகிறது. இந்த கருத்தாய்வு குறித்த கணக்கெடுப்பு கடந்த 1-ந்தேதி முதல் வருகிற 29ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ஜெயசீல…
-
- 0 replies
- 446 views
-
-
நான் யாரிடமும் விலைபோகவில்லை- விஜயகாந்த் பரபரப்பு பேச்சு பணத்தாசையில் அங்கே போய்விட்டார், இந்த பக்கம் விலைபோய் விட்டார் என்று சொன்றார்கள். நான் யாரு பக்கமும் விலைபோகவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் முன்னிலையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி- தேமுதிக கூட்டணி தொகுதி உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து தேமுதிக அலுவலகத்தில் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார்கள். அப்போது, விஜயகாந்த் பேசுகையில், அனைவருக்கும் வணக்கம், நான் பொதுவா வந்து இந்த மிட்டிங்கில் நிறைய பேசுவேன் என்று நினைத்தேன். ஆனால் எனக்கு …
-
- 0 replies
- 446 views
-
-
10 வயசு சிறுமி.. மிரட்டி மிரட்டியே பாலியல் தொல்லை.. சப் இன்ஸ்பெக்டர் போக்சோவில் கைது. யூனிபார்மில் கையில் துப்பாக்கியுடன் விறைப்பாக நிற்கும் இவர்தான் 10 பெண் குழந்தையை நாசம் செய்தவர். சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் வாசு. மாதவரம் பால் பண்ணை போலீஸ் ஸ்டேஷனில் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். வில்லிவாக்கம் ஜகநாதபுரம் பகுதியில்தான் குடியிருக்கிறார். இவர், நேற்று முன்தினம் தன் வீட்டு பக்கத்தில் தெருவில் 10 வயது சிறுமி விளையாடி கொண்டிருந்தார்.உடனே அருகில் சென்று அந்த குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை செய்ய ஆரம்பித்துள்ளார். அந்த குழந்தையோ கத்தி அலறி உள்ளது. இதனால் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் ஓடிவந்தார்கள். ஆனால் அதற்குள் வாசு எஸ்…
-
- 0 replies
- 446 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கழிப்பறைகளில் கைகளால் மலம் அள்ளும் நிலை உள்ளதாக ஒப்பந்த தூய்மை பணியாளர் மகேஸ்வரி பிபிசி தமிழிடம் தெரிவித்தார். கட்டுரை தகவல் எழுதியவர்,பிரபுராவ் ஆனந்தன் பதவி,பிபிசி தமிழுக்காக 29 ஜூன் 2023, 04:19 GMT மதுரை ரயில்வே நிலையத்தில் ரயில்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மனித மலத்தை கைகளால் அள்ளுவதாக தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவரிடம் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரை கோட்ட ரயில்வேயில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுடனான ஆய்வு கூட்டம் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் தலைமையில் மது…
-
- 6 replies
- 446 views
- 1 follower
-
-
சுர்ஜித்துடன் இணைந்து இவ்வுலகைவிட்டுப் பிரிந்த மற்றுமொரு குழந்தை! திருச்சியில் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி உயிரிழந்த சிறுவன் சுர்ஜித்தின் மீட்புப் பணிகளை தொலைக்காட்சியில் குடும்பத்துடன் பார்த்துக்கொண்டிருந்தபோது, 2 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த லிங்கேஸ்வரன் நிஷா தம்பதிகளின் மகள் ரேவதி சஞ்சனா (2 வயது ) எனும் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. தந்தை லிங்கேஷ்வரன், தாய் நிஷாவுடன் சிறுவன் சுர்ஜித்தின் மீட்புப் பணிகளை தொலைக்காட்சிப் பார்த்து கொண்டிருந்தனர். இதன்போது குழந்தையை காணவில்லை என உணர்ந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார். …
-
- 0 replies
- 446 views
-
-
தமிழகத்திற்கு மஞ்சல் எச்சரிக்கை -சென்னையில் கனமழை! 27 Views தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் இந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரம் சென்னையில் அடுத்த 2 முதல் 3 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது. அதைத் தொடர்ந்து த…
-
- 0 replies
- 446 views
-
-
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு 'ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடத்தப்படும்' எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு காலியான சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு, கடந்த ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல்நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே, வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து, இடைத்தேர்தலை ரத்துசெய்வதாகக் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஏழு மாதங்கள் முடிந்த நிலையில், டிசம்பர் இறுதிக்குள் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார். டிசம்பர் 31-ம் தேதிக்குள் இடைத்த…
-
- 1 reply
- 446 views
-
-
தூத்துக்குடி: நான் அமைதியாக போய்க் கொண்டிருக்கிறேன். என்னை சோதிக்காதீர்கள் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ காட்டமாக கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில், வீரபாண்டிய கட்டபொம்மனின் 214வது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி மதிமுக சார்பில் நினைவு தின பொதுக்கூட்டம் நடந்தது. கட்சி பொதுச் செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், இங்கு போலீசாரின் கெடுபிடியை மீறி, ஏராளமானோர் திரண்டுள்ளீர்கள். இங்கு வந்தவர்களுக்கு, போலீசார் தடைகளை ஏற்படுத்தினர். கட்டபொம்மன் ஜாதி தலைவரா, கட்சி தலைவரா... சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர். அவரது நினைவு தினத்தில் கூட்டம் நடத்த, போலீசார் கட்டுப்பாடு விதித்துள்ளனர். கிராமங்களில் உளவுத்துறையினர் சென்று, கட்டப…
-
- 0 replies
- 446 views
-
-
தமிழக எதிர்ப்பு எதிரொலி: இந்தியை முதன்மை மொழியாக கற்பிக்கும், யுஜிசி அறிவிப்பு வாபஸ். டெல்லி: இந்தியை முதன்மை மொழியாக கற்பிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) வெளியிட்ட அறிவிப்பை வாபஸ் பெற்றுள்ளது. பல்கலைக்கழகங்களில் ஆங்கிலத்துடன் இந்தியை முதன்மை மொழியாக்க கற்பிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது. தமிழ்நாட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு பல்கலைக்கழக மானிய குழு (யு.ஜி.சி.) அனுப்பிய சுற்றறிக்கையில், இளங்கலை பட்டப்படிப்புகளில் ஆங்கிலத்துடன் இந்தி மொழியையும் முதன்மை பாடமாக அறிமுகப்படுத்தும் படியும், சட்டம் மற்றும் வணிகவியல் படிப்புகளில் இந்தி கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டும் எ…
-
- 0 replies
- 446 views
-
-
“தி வேர்ல்ட் பெஸ்ட்” சம்பியன் சென்னைச் சிறுவன் லிடியன் : 1 மில்லியன் டொலர் பரிசு “தி வேர்ல்ட்’ஸ் பெஸ்ட்” நிகழ்ச்சியின் சம்பியன் பட்டதைச் சுவீகரித்த சென்னையைச் சேர்ந்த சிறுவன் லிடியன் நாதஸ்வரதத்துக்கு 1 மில்லியன் டொலர் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்றுவரும் “தி வேர்ல்ட்’ஸ் பெஸ்ட்” என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சியிலேயே 13 வயதான சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம் சம்பியனாகி உலகப்புகழைப் பெற்றுள்ளார். கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளிலிருந்து கலைஞர்கள் குழுவாகவும், தனி நபராகவும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த இசையமைப்பாளர் வர்சனின் மகனான பியானோ கலைஞன் லிடியன் நாதஸ்வரமும் கலந்து கொண்ட…
-
- 2 replies
- 446 views
-
-
ஒளிப்பதிவு சட்டமூலத்தை திரும்பப் பெற வேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்து! மத்திய அரசின் ஒளிப்பதிவு சட்டத் திருத்தமூலத்தை திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுத்தியுள்ளார். இது குறித்து மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். குறித்த கடிதத்தில், ‘புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள ஒளிப்பதிவு சட்ட திருத்தங்கள், மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் மற்றும் மாநில அரசுகளின் அதிகாரங்களை குறைக்கும் வகையிலும், கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் வகையிலும் உள்ளதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். ஒளிப்பதிவு சட்டத் திருத்தமூலம் படைப்பாளிகளின் கருத்து சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக மாறிவிடும் என திரைபிரபலங்கள…
-
- 0 replies
- 446 views
-
-
ஈரோடு தேர்தல்: நோட்டா 326%, சீமான் 123%, திமுக 5% - ஆனாலும் பெரியார் மண்ணில் பலிக்காத சீமானின் கனவு! ஈரோடு தேர்தலில்... 'நாம் தமிழர் கட்சி படுதோல்வி... நூலிழையில் டெபாசிட்டையும் இழந்தது', 'தி.மு.க அபார வெற்றி' என்று பரபரப்பான பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால், விழுந்திருக்கும் வாக்குகளைப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அலசினால்... சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு கடந்த தேர்தலைவிட, சுமார் ஒன்றரை மடங்கு வாக்குகள் அதிகமாகக் கிடைத்துள்ளன. ஆனால், அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் களத்தில் இல்லாத நிலையில், அந்த வாக்குகளை மொத்தமாக 'சீமான் அள்ளுவார்' என்றே எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படி எந்த ஆச்சர்யமும் நிகழ்ந்துவிட வில்லை. ஈரோடு கி…
-
- 0 replies
- 446 views
-
-
புதுடெல்லி: 2ஜி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம், அதற்கு கைமாறாக கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாயை லஞ்சமாக வழங்கியதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது. சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக ஆ.ராசா, கனிமொழி, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்ளிட்ட 10 பேர் மற்றும் 9 நிறுவனங்கள் மீது குற்றம்சாட்டி அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு…
-
- 0 replies
- 446 views
-
-
சிறையில் சசிகலா - விதிமுறை மீறல்களின் முழுவிவரம் #RTI சசிகலா சிறைக்குச் சென்ற நாளான 15.2.2017-லிருந்து 12.06.2017 வரை சிறையிலிருந்த போது யார் யாரெல்லாம் வந்து பார்த்தார்கள். எத்தனை முறை பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. என்னென்ன விதிமுறை மீறல்கள் நடந்துள்ளன என்ற தகவல்கள் ஆர்டிஐ மூலம் வெளிவந்துள்ளன. ஆர்டிஐ ஆர்வலரான நரசிம்ம மூர்த்தி பெற்ற ஆர்டிஐ தகவல்கள் இதோ... ஆர்டிஐ தகவல்கள் பெறப்பட்ட நாள்களின் அளவு 117 நாள்கள். கர்நாடக உயர்நீதி மன்ற விதிகளின் படி இந்தக் காலத்தில் 15 நாள்களுக்கு ஒரு சந்திப்பு என்ற அடிப்படையில் 8 முறை மட்டுமே நபர்கள் பார்க்க அனுமதி வழங்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் 32 பார்வையாளர் அனுமதி வ…
-
- 0 replies
- 445 views
-
-
ரூ. 50 கோடி லஞ்சம் வழக்கு: தினகரனின் 5 வங்கி கணக்குகள் முடக்கம் இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரனை கைது செய்த போலீசார் அவரது 5 வங்கி கணக்குகளை முடக்கியுள்ளனர். புதுடெல்லி: இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனிடம் டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் புரோக்கராக செயல்பட்ட சுகேஷ…
-
- 0 replies
- 445 views
-
-
கோவை: கோவையில் ரூ.100 கோடி ரூபாய் நகைகளை மோசடி செய்து விட்டு, தலைமறைவாக இருந்த நகைக்கடை அதிபரை, போலீசார் கைது செய்துள்ளனர். கோவை, புரூக்பீல்டு அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த சகோதரர்கள் பாலாஜி, 45, மற்றும் அசோக்குமார், 42. இருவரும் கூட்டாக, கோவை வைசியாள் வீதி, பெரிய கடைவீதி, கிராஸ்கட் ரோடுகளில் ஜிஷா, ஸ்வர்ண லட்சுமி என்ற பெயர்களில் நகைக்கடைகளை நடத்தினர். பொதுமக்கள், நகை வியாபாரிகள், வங்கிகள் என, பலரிடமும் நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்துவிட்டு கடந்த மே மாதம் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டனர். தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் கடந்த வாரம் சகோதரர்களில் ஒருவரான பாலாஜி, சென்னை கோர்ட்டில் சரணடைந்தார். திங்களன்று இரவு அமராவதி நகர் செக்போஸ்ட்டில், அசோக்கு…
-
- 0 replies
- 445 views
-